டேவிட் ஷெப்பர்ட் (நடுவர்)

கிரிக்கெட் நடுவர்

கடமை

டேவிட் ஷெப்பர்ட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டேவிட் ரொபர்ட் ஷெப்பர்ட்
பட்டப்பெயர்ஷெப்
உயரம்5 அடி 10 அங் (1.78 m)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை இடைநிலை வேகப்பந்து வீச்சு
பங்குதுடுப்பாட்ட நடுவர்
நடுவராக
தேர்வு நடுவராக92
ஒநாப நடுவராக172 (1983–2005)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் தர LA
ஆட்டங்கள் 282 183
ஓட்டங்கள் 10672 3330
மட்டையாட்ட சராசரி 24.47 21.34
100கள்/50கள் 12/55 1/13
அதியுயர் ஓட்டம் 153 100
வீசிய பந்துகள் 196 12
வீழ்த்தல்கள் 2 0
பந்துவீச்சு சராசரி 53.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/1
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
95/– 34/–
மூலம்: Cricinfo, 8 September 2007

டேவிட் ரொபர்ட் ஷெப்பர்ட் (David Shepherd MBE) (டிசம்பர் 27, 1955- அக்டோபர் 27, 2009) [1]) மிகவும் பிரபல்யமான சிறந்த துடுப்பாட்ட நடுவர்களில் ஒருவராவார். இவர் தேர்வு துடுப்பாட்ட நடுவர் நிலையிலிருந்து 2005 ஓய்வு பெறும் வரையில் 92 தேர்வு துடுப்பாட்டப் போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றினார். அத்தோடு, உலகக் கோப்பை துடுப்பாட்டப் போட்டிகளின் மூன்று இறுதி ஆட்டங்களில் நடுவராகவும் கடமையாற்றியிருக்கிறார்.

துடுப்பாட்ட வரலாறு தொகு

1965 இலிருந்து 1979 வரையான காலப்பகுதியில் குனோசெஸ்டர்செயர் பிராந்திய அணிக்காக முதற்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டார். இவர் திறமையாக விளையாடி, தனது அணிக்குள்ளும், பிராந்தியத்தின் ஆர்வலர்களிடையேயும் ஆரதவைப் பெற்றிருந்தாலும் கூட, தேசிய மட்டத்தின் தேர்வுகளுக்குள் தன்னை இருத்திக் கொள்ள அவகாசம் கிடைக்கவில்லை. அவரின் முதலாவது ஆட்டத்திலேயே, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக துடுப்பாட்ட அணிக்கெதிராக, 108 ஓட்டங்களை எடுத்ததோடு, தொடர்ந்து வந்த ஆண்டுகளில் 11 சதங்களை பெற்றுக் கொண்டார். இவரின் வாலிப காலத்திலும் பருந்த உடல்வாகுடேனே காணப்பட்டதால் இவரின் பந்து வீச்சு அவ்வளவில் சோபிக்கவில்லை. ஆடிய அத்தனை போட்டிகளிலிலும் இவரால் இரண்டு ஆட்டமிழப்புகளையே கைப்பற்ற முடிந்தது. ஒரு தடவை, ஷெப்பர்ட் வேகமாக அடித்த பந்து, பார்வையாளர்களுள் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தவரின் தலையில் பட்டு, பின்னர் அந்தப் பார்வையாளர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறிய காயங்களோடு, தேறிய சம்பவம் மிகவும் பிரபல்யமானதாகும்.

நடுவராக தொகு

டேவிட் ஷெப்பர்ட், 1981 ஆம் ஆண்டு, துடுப்பாட்டத்தில் தனது இரண்டாவது அத்தியாயத்தைத் தொடங்கினார். இதன் படி, முதற்தர நடுவராக நியமிக்கப்பட்டதன் விளைவாக, உலகின் பிரபல்யமான நடுவராகவும், உருவெடுத்தார். சிறந்த பக்கச்சார்பற்ற நடுவர் முடிவுகளுக்காக மிக வேகமாக இனங்காணப்பட்ட இவர், இரண்டு ஆண்டுகளில் 1983 ஆம் ஆண்டு இடம் பெற்ற உலகக் கோப்பை துடுப்பாட்ட போட்டிகளிற்கான நடுவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தோடு, நான்கு வருடங்களில், தனது முதலாவது தேர்வு துடுப்பாட்டப் போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றினார். 1985 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸஸ் தொடர் தேர்வுப் போட்டிகளின் நான்காவது போட்டியில், டிக்கி பேர்ட் என்ற நடுவருடன் இணைந்து நடுவர் கடமையில் ஈடுபட்டார்.

அதன் பின்னர், சர்வதேச அளவில் தெரியப்பட்ட ஒரு நபராக அவர் உருவெடுத்தார். இலகுவாக அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடியதான அவரின் உருளையான உடல்வாகு, விளையாட்டு வீரர்களாலும் பார்வையாளர்களாலும் அவரை எளிதில் இனங்கண்டு கொள்ள வைத்தது. இவர் பிரியத்திற்குரிய ஒரு நபராக மைதானத்திற்குள்ளும் வெளியேயும் அவதானிக்கப்பட்டார். ஒருவேளை, துடுப்பாட்ட போட்டியின் போது, நெல்சன் ஓட்ட எண்ணிக்கை வரும் போது தனது காலை உயர்த்திக் கொள்கின்ற வழக்கம் அவரை இன்னும் அதிகளவில் இனங்காட்டியிருக்கலாம். தனது இளமைக்காலத்தில் துடுப்பாட்ட நிலைகளில் நெல்சன் ஓட்ட எண்ணிக்கை வரும் போது, அபசகுனமான விடயங்கள் நடந்தேறலாம் என்பதற்கான அப்படி எதுவும் நடக்காமல் இருக்க வேண்டு, தனது கால்களை மாறி மாறி உயர்த்திக் கொள்ளும் பழக்கத்தை தொடர்ந்தும் தொடர்பவராகக் காணப்பட்டார்.[2] அது மட்டுமல்லாது, நான்கு ஓட்டங்களை சைகை காட்டுகின்ற நேரத்தில் தனது கைகளை குலுக்கிக் கொள்கின்ற வழக்கத்தையும் இவர் கொண்டிருந்தார். இவரின் இந்த வழக்கத்தை பல துடுப்பாட்ட பார்வையாளர்கள் இன்று வரையும், பின்பற்றுவதாய் ஷெப்பர்ட் போன்றே நான்கு ஓட்டங்களை சைகை செய்து கொண்டாடி மகிழ்கின்றனர்.

சர்வதேச துடுப்பாட்ட அமைவின் 1990 களில் அமுல்ப்படுத்தப்பட்ட கொள்கையின் நிலையில், உருவாக்கப்பட்ட முதலாவது, நடுநிலைமையான நடுவர்கள் குழாமில்அங்கத்தவரான இவர், 2005 ஆம் ஆண்டு வரை தான் துடுப்பாட்ட நடுவர் நிலையிலிருந்து ஓய்வு பெறும் வரை தனது இடத்தை அக்குழாமில் எந்தப்பிழையுமில்லாமல் தக்க வைத்துக் கொண்டார்.

இவரின் ஓய்வு பெறுகின்ற காலத்தில், அவரின் சேவையைப் பாராட்டி அவர் சென்ற இடமெல்லாம் கௌரவிப்புகள் இடம்பெற்றன. 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையான போட்டியின் போது, இவர் கௌரவிக்கப்பட்டார். அவர் நடுவராகக் கடமை புரிந்த கடைசி தேர்வுத் துடுப்பாட்ட போட்டியான மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடையான போட்டியின் போது, மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர், ஷெப்பர்டிற்கு துடுப்புமட்டை வழங்கி கௌரவித்தார்.

துடுப்பாட்டத்திற்கான ஆற்றிய சேவைக்காக, 1987 இல், MBE பட்டமளித்து கௌரவிக்கப்பட்டார். அத்தோடு, 2006 ஆம் ஆண்டு தனது சொந்தநகரத்தின் துடுப்பாட்ட அணியான டெவோன் பிராந்திய துடுப்பாட்டக் கழகத்தின் தலைவராகத் தேர்வானார்.

குடும்ப வாழ்க்கை தொகு

ஷெப்பர்ட் டெவோனிலுள்ள பைட்போர்ட் என்கின்ற இடத்தில் பிறந்தார். வடக்கு டெவோன் துடுப்பாட்ட கழகத்தின் நடுவராகக் கடமையாற்றிய ஹெர்பெட் என்பவரே இவரின் தந்தையாவார். பில்லி என்ற சகோதரர் ஒருவர் இவருக்கு இருந்தார். இன்ஸ்டோ என்ற கரையோரப் பிரதேசத்திலேயே தனது கடைசி நாட்களைக் கழித்தார். இவரின் நீண்ட நாள் துணையான ஜெனி என்ற பெண்ணை 2008 இல் மணமுடித்துக் கொண்டார்.

டெவோனில், நுரையீரல் புற்றுநோயின் காரணமாக 2009 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி ஷெப்பர்ட் காலமானார்.[3][4][5]

உசாத்துணைகள் தொகு

வெளியிணைப்புகள் தொகு