தி ஆல்கெமிஸ்ட் (நூல்)

தி ஆல்கெமிஸ்ட் (The Alchemist) என்பது எழுத்தாளர் பவுலோ கோய்லோவினால் 1988 இல் எழுதி வெளியிடப்பட்ட புதினம். இந்த நூலானது, ஆரம்பத்தில் போர்த்துக்கேய மொழியிலேயே எழுதி வெளியிடப்பட்டது. இன்றளவில் 150 இற்கும் அதிகமான நாடுகளில் 65 மில்லியனுக்கும் அதிகமான இந்நூலின் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. இதன்படி, வரலாற்றிலேயே அதிகளவு பிரதிகள் விற்பனையான புத்தகங்களின் பட்டியலில் இந்தப் புத்தகமும் ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.[1]

தி ஆல்கெமிஸ்ட்
முதலாவது ஆங்கில பதிப்பின் முகப்பு
நூலாசிரியர்பவுலோ கோய்லோ
உண்மையான தலைப்புஓ அல்குயிமிஸ்டா
நாடுபிரேசில்
மொழிபோர்த்துக்கேய மொழி
வெளியீட்டாளர்ஹாப்பர் டோர்ச் (Eng. trans)
வெளியிடப்பட்ட நாள்
1986
ஆங்கில வெளியீடு
1993
ஊடக வகைஅச்சு
பக்கங்கள்163 பக்கங்கள் (முதல் ஆங்கிலப் பதிப்பு )
ISBNபன்னாட்டுத் தரப்புத்தக எண் 0062502174 (first English edition, hardcover)
OCLC26857452

இந்த நூல் 70 இற்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதோடு, இதன் விளைவாக, வாழும் எழுத்தாளர் ஒருவரின் புத்தகமொன்று அதிகளவான மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டதற்கான கின்னஸ் சாதனையும் இந்த நூலையே சாரும்.[1]

இது, தனது கனவை நோக்கி தடைகளைத் தாண்டிச் செல்லும் ஒரு ஆடு மேய்க்கும் பையனைப் பற்றிய புனை கதை

உசாத்துணைகள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_ஆல்கெமிஸ்ட்_(நூல்)&oldid=3287416" இலிருந்து மீள்விக்கப்பட்டது