பவுலோ கோய்லோ

பவுலோ கோய்லோ (Paulo coelho) (பிறப்பு: ஆகஸ்ட் 24, 1947) உலகப் புகழ்பெற்ற சமகால பிரேசில் நாட்டு எழுத்தாளர் ஆவார். இவரது படைப்புகளிலேயே தி ஆல்கெமிஸ்ட் ( தமிழில் ரசவாதி) புதினம் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இவரது படைப்புகள் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளை நினைவாக்கப் பாடுபட வேண்டும் என்பது இவரது புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகளில் காணப்படும் அடிப்படை கருத்தாகும். ஆனாலும் இலெவன் மினிட்ஸ் (Eleven Minutes) என்ற அவரது புதினத்தில், யதார்த்த நிலைமைக்கு நேருக்கு நேர் முகம் கொடுப்பதுபற்றி சொல்லியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார்[1]. இவரது தி ஆல்கெமிஸ்ட் புதினம் தமிழில் !ரசவாதி என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

பவுலோ கோய்லோ
Paulo Coelho Edit on Wikidata
பிறப்பு24 ஆகத்து 1947 (அகவை 77)
இரியோ டி செனீரோ
படித்த இடங்கள்
  • St. Ignatius College
பணிபுதின எழுத்தாளர், வலைப்பதிவர்
சிறப்புப் பணிகள்The Alchemist
பாணிmusic of Brazil
விருதுகள்Knight of the Legion of Honour, Officer of Arts and Letters, Chevalier des Arts et des Lettres
இணையம்http://paulocoelhoblog.com/

சாதனைகளும் விருதுகளும்

தொகு

விற்பனையில் உலகச் சாதனைகளைப் படைத்துள்ள பல நூல்களை பாவுலோ கோய்லோ எழுதியுள்ளார். இவருடைய நூல்கள் 82 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. 170க்கும் அதிகமான நாடுகளில் சுமார் 23 கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. 'பிரேசிலியன் அகாடமி ஆஃப் லெட்டர்ஸ்' அமைப்பின் உறுப்பினரான இவர் 'செவாலியே' விருது பெற்றவர். 2007ல் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதித் தூதராக நியமிக்கப்பட்டார்.[2]

படைப்புகள்

தொகு

பவுலோ கோய்லோ ஏராளமான நூல்களை படைத்துள்ளார். அவற்றுள் முக்கியமானவை:- பிரிடா, த வேல்கிரீஸ், மக்தூப், பை த ரிவர் ஐ சேட் டவுன் அன்ட் வெப்ட், த ஃபிஃப்த் மவுன்டன் போன்றவையாகும் .[3]

ரசவாதி கதைச்சுருக்கம்

தொகு

சந்தியாகு என்ற சிறுவனைப் பற்றிய மாயாஜால நூல் இது. அந்தலூசியாவில் ஆடுகள் மேய்க்கும் அவனுக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. ஒரு குழந்தை இவனை பிரமிடுகளுக்கு அழைத்துப் போவதாக கனவு காண்கிறான். அது குறித்து கனவுகளுக்கு பலன் சொல்லும் சூனியக்காரியிடம் கேட்கிறான். அவள் அறிவுறுத்த அதன்படி செல்லும் அவன் மெல்ஜிசெடக் எனும் பெரியவரை இடையில் சந்திக்கிறான். சேலம் ராஜாவான அவர் 'கனவுகளையும் குறியீட்டுச் சகுனங்களையும் நம்பு. பிரபஞ்சத்தின் மொழியை அறிந்து கொள். உன் இலக்கை நீ அடைவாய்' என்கிறார். அதனை ஏற்று பொக்கிஷத்தைத் தேடிச் செல்கிறான் சந்தியாகு. ஸ்பெயினில் இருந்து கிளம்பும் அவன் தனது ஆடுகளை விற்று பணம் பெற்று தன் இலக்கை நோக்கி விரைகிறான். டான்ஜியர்ஸ் சந்தைகளிலும் எகிப்துப் பாலைவனங்களுலும் அலைந்து திரியும் அவனை விதி ஒரு ரஸவாதியைச் சந்திக்க வைக்கிறது. அவரது வழிகாட்டுதலின்படி பிரமிடுகளை அடைகிறான். அங்கே அவன் தேடி வந்த பொக்கிஷம் கிடைத்ததா? இலக்கை அடைந்தானா என்பதே கதையின் முடிவாகும் [4]

செய்தி

தொகு
இதயம் கூறுவதை நாம் கவனமாகக் கேட்க வேண்டும். வாழ்க்கைப் பாதையில் விதி சுட்டிக்காட்டும் சகுனங்களையும் கவனிக்க வேண்டும், அனைத்துக்கும் மேலாக நம் கனவுகளை நாம் தொடர வேண்டும் என்று அறிவுறுத்தும் சில நூல்களில் இதுவும் ஒன்று.

படைப்புகள்

தொகு

புதினங்கள்

தொகு
ஆண்டு போர்த்துகீசியத் தலைப்பு ஆங்கிலத் தலைப்பு குறிப்பு
1974 O Manifesto de Krig-há The Manifest of Krig-há
Teatro da Educação Theater For Education
1982 Arquivos do Inferno Hell Archives
1986 O Manual Prático do Vampirismo Practical Manual of Vampirism
1987 O Diário de Um Mago The Pilgrimage
1988 O Alquimista The Alchemist நூல் முன்னுரை - இலவசப் பதிவிறக்கம் (.rtf)
1990 Brida Brida
1991 O Dom Supremo The Greatest Gift
1992 As Valkírias The Valkyries
1994 Maktub Maktub இலவசப் பதிவிறக்கம் (.zip/.rtf)
Na margem do rio Piedra eu sentei e chorei By the River Piedra I Sat Down and Wept
1996 O Monte Cinco The Fifth Mountain
1997 Letras do amor de um profeta Love Letters from a Prophet
Manual do guerreiro da luz The Manual of the Warrior of Light
1998 Veronika decide morrer Veronika Decides to Die
Palavras essenciais Essential Words
2000 O Demônio e a srta Prym The Devil and Miss Prym
2001 Histórias para pais, filhos e netos Fathers, Sons and Grandsons
2003 Onze Minutos Eleven Minutes
2004 E no sétimo dia And on the Seventh Day
O Gênio e as Rosas The Genie and the Rose
Viagens Journeys
2005 O Zahir The Zahir
Caminhos Recolhidos Revived Paths
2006 Ser como um rio que flui Like the Flowing River இலவசப் பதிவிறக்கம் (.pps)
A bruxa de Portobello The Witch of Portobello
2007 Vida: Citações selecionadas Life: Selected Quotations
2008 O Vencedor está Só The Winner Stands Alone
2010 O Aleph The Aleph (not yet published)

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Paulo Coelho, "Eleven Minutes", 2003
  2. ரசவாதி-தமிழில் மொழிபெயர்ப்பு நாகலட்சுமி சண்முகம்- பதிப்பு மஞ்சுள் பப்ளிஷிங்-2020
  3. ரசவாதி-தமிழில் மொழிபெயர்ப்பு நாகலட்சுமி சண்முகம்- பதிப்பு மஞ்சுள் பப்ளிஷிங்- second impression 2020
  4. ரசவாதி-தமிழில் மொழிபெயர்ப்பு நாகலட்சுமி சண்முகம்- பதிப்பு மஞ்சுள் பப்ளிஷிங்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுலோ_கோய்லோ&oldid=3462892" இலிருந்து மீள்விக்கப்பட்டது