புதின எழுத்தாளர்
புதினங்களை எழுதுபவர்
நாவலாசிரியர் என்பவர் பெரும்பாலும் புதினங்களை ஆக்கும் எழுத்தாளர் ஆவார். இவர் புனைக்கதை, புனைவிலி போன்ற பிறவகை ஆக்கங்களையும் படைக்கக்கூடும்.. சிலர் தொழில்முறை நாவலாசிரியர்களாக உள்ளனர்; இவர்களது வாழ்வாதாரமாக அவர்கள் எழுதும் புதினங்கள் அமைகின்றன. மற்றும் சிலர் இதனை துணை ஆதாரமாகவோ, பொழுதுபோக்காகவோ கொண்டுள்ளனர். தங்களது முதல் புதினத்தை அச்சிடுவதற்கு பெரும்பாலோர் மிகவும் போராட வேண்டியுள்ளது. ஆனால் ஒருமுறை அச்சேறி அங்கீகரிக்கப்பட்டால் தொடர்ந்து தமது படைப்புக்களை அச்சேற்றுவது எளிதாக உள்ளது. வெகுசிலர் குறிப்பிடத்தக்க இலக்கியவாதிகளாக ஏற்கப்பட்டு பணமும் புகழும் ஈட்டுகின்றனர். வாரப் பத்திரிகைகளிலும் மாதப் பத்திரிகைகளிலும் தங்கள் புதினத்தை அச்சிடுவோரும் உள்ளனர்.