குடல்வாலழற்சி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குடல்வாலழற்சி (Appendicitis) அல்லது குடல்வால் அழற்சி என்பது மனித உடலில் பயனற்ற ஒரு உறுப்பான குடல்வாலின் வீக்கமாகும். குடல்வாலானது, பெருங்குடல் ஆரம்பிக்கின்ற இடத்தில் ஒரு சிறிய குழாய் போன்ற வடிவில் காணப்படுகிறது. நார்பொருள் குறைவாகவுள்ள உணவுப் பொருள்களை உண்ணுகின்ற நிலையிலேயே இந்த குடல்வாய் வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
குடல்வாலழற்சி | |
---|---|
![]() | |
நோய்த் தொற்றும் அழற்சியும் | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | general surgery |
ஐ.சி.டி.-10 | K35. - K37. |
ஐ.சி.டி.-9 | 540-543 |
நோய்களின் தரவுத்தளம் | 885 |
MedlinePlus | 000256 |
ஈமெடிசின் | med/3430 emerg/41 ped/127 ped/2925 |
Patient UK | குடல்வாலழற்சி |
MeSH | C06.405.205.099 |
இவ்வாறு குடல்வால் அழற்சி ஏற்படுகின்ற பட்சத்தில் குடல்வால், அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றப்படும். ஆனாலும், காலம் தாமதமானால், குடல்வால் வெடித்து, வயிற்றறைக்குள் நோய்த் தொற்றுகள் ஏற்பட வழிகோலும். இவ்வாறு குடல்வால் வெடித்து, வயிற்றறைக்குள் தொற்றுண்டாகும் பட்சத்தில், அது வயிற்றறையுரை அழற்சி (Peritonitis) என்று வழங்கப்படுகிறது.
புற இணைப்புகள்தொகு
- குடல்வாலழற்சி பரணிடப்பட்டது 2010-02-21 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)