மொழிபெயர்க்கப்பட்ட மௌனம் (நூல்)
மொழிபெயர்க்கப்பட்ட மௌனம், பத்திரிகையாளர் லதாவினால் எழுதப்பட்டு, இலங்கையின் படைப்பாக்க வரலாற்றில் முதல் தடவையாக இருபது இந்திய மற்றும் இலங்கை ஆளுமைகளுடனான காத்திரமான நேர்காணல்களை உள்ளடக்கிய வகையிலாக வெளியிடப்பட்ட நூலாகும். இந்நூல் காற்று பதிப்பகத்தினால் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது.
மொழிபெயர்க்கப்பட்ட மௌனம் | |
---|---|
நூல் பெயர்: | மொழிபெயர்க்கப்பட்ட மௌனம் |
ஆசிரியர்(கள்): | லதா |
துறை: | நேர்காணல்கள் |
காலம்: | 2006 |
இடம்: | கொழும்பு (பதிப்பகம்) |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 264 |
பதிப்பகர்: | காற்று பதிப்பகம் |
பதிப்பு: | ஓகஸ்டு 2006 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருடையது |
ஆசிரியர்
தொகுபத்திரிகையாளர் லதாவின் இயற்பெயர் டி. ஆர். பி. லதா என்பதாகும். இலங்கையிலுள்ள பல முன்னணி பத்திரிகை நிறுவனங்களில் பத்திரிகையாளராக கடமையாற்றிய இவர், ஒரு தமிழ் இலக்கியப் பட்டதாரியுமாவார்.
நூல் உள்ளடக்கம்
தொகுஇந்த நூல், பத்திரிகையாளர் லதாவின் முதலாவது நூலாகும். இந்த நூலிற்கு அணிந்துரைகளை, கவிக்கோ அப்துல் ரகுமான் மற்றும் பாடலாசிரியர் பழநிபாரதி ஆகியோர் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நூலில் கவிதை போன்ற அழகிய நேர்காணல்களாய் இடம்பெற்றிருந்த இருபது ஆளுமைகளின் விபரங்கள் வருமாறு:
- அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீட்
- யாத்ரா இதழ் ஆசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன்
- கவிஞர் காசி ஆனந்தன்
- பாடலாசிரியர் அறிவுமதி
- கவிக்கோ அப்துல் ரகுமான்
- எழுத்தாளர் ஜெயகாந்தன்
- பேராசிரியர் எம். ஏ. நுஃமான்
- பாடலாசிரியர் பழநிபாரதி
- எழுத்தாளர் சுஜாதா
- கவிப்பேரரசு வைரமுத்து
- பத்திரிகையாளர் நடராஜா
- கவிஞர் சோலைக்கிளி
- எழுத்தாளர் சுதாராஜ்
- நடிகை மனோரமா
- பாடகர் முத்தழகு
- இன்று ஒரு தகவல் புகழ் தென்கச்சி கோ. சுவாமிநாதன்
- பாடகி வாணி ஜெயராம்
- பாடகி பி. சுசீலா
- நடிகை குஷ்பூ
- பாடகர் கே. ஜே. யேசுதாஸ்