இராஜபாளையம் நாய்

இராஜபாளையம் நாய் ஆனது தமிழ்நாட்டை சார்ந்த வேட்டை நாய் வகையைச் சார்ந்தது ஆகும். முன்னைய நாட்களில் இந்நாய் ஆனது தென்தமிழகத்தில் வசதி படைத்தோரிடமும் ஆளும் வர்க்கத்திடமுமே இருந்து வந்தது. குறிப்பாக இராசபாளையம் பகுதியில் மட்டுமே இது அதிகம் காணப்பட்டதால், இந்நாய் இப்பெயர் பெற்றது.

இராசபாளையம்
இராசபாளையம் நாய்
தோன்றிய நாடு  இந்தியா
தனிக்கூறுகள்
குறிப்புகள் இந்திய நாய்ச் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்)

பெயராய்வு

தொகு

இவ்வகை நாய்கள் பாளையக்காரர்களால் ஆந்திர, கர்நாடகப் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். அங்கு இவ்வகை நாயினம் அழிந்துபோய் தமிழகத்தின் இராஜபாளையத்தில் மட்டும் எஞ்சியதால் இராஜபாளையம் நாய் என ஊர் பெயராலேயே அழைக்கப்பட்டது. இதை ஆங்கிலத்தில் பொலிகார் ஹவுண்ட் என்றும் அழைக்கப்படுகிறது. பாளையக்காரர்கள் (Poligar) பயன்படுத்தியதால், இந்த நாய்களின் மூதாதையர்களை துவக்கத்தில் பிரித்தானியர்களால் பொலிகார் ஹவுண்ட் என அழைக்கப்பட்டது.

வரலாறு

தொகு

விஜயநகரப் பேரரசின் வருகையின்போது ஆந்திர, கர்நாடகப் பகுதியில் இருந்து தமிழகம் வந்த பாளையக்காரர்கள் மூலமாக தமிழகம் வந்த நாயாகும்.

தோற்றம்

தொகு
 
 
இராஜபாளையம் நாய் குட்டிகள்

இது ஒரு பெரிய நாயாகும். இது வெள்ளை நிற உடலும், இளஞ்சிவப்பு மூக்கும், மடிந்த காதுகளும் கொண்டிருக்கும். இது வழக்கமாக 65 முதல் 75 செ.மீ. (25-30 இன்ச்சுகள்) வரை, கிட்டத்தட்ட வெளிநாட்டு கிரேடனை ஒத்த தோற்றத்துடன், அதைவிடச் சற்றே குறைந்த உயரத்துடன் இருக்கும். இது ஒரு வேட்டை நாய் என்பதால் இதனை உகந்த வேலைகளுக்கு மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். இது பிற வேட்டை நாய்களைக் காட்டிலும், மிகவும் வலுவான எலும்புகளைக் கொண்டிருப்பினும் பிற குணங்களில் அனைத்துடனும் ஒத்துப் போகிறது.

இதன் முக அமைப்பு காரவன் வேட்டை நாய்களிடமிருந்து முழுதும் வேறுபட்டுள்ளது. இதன் வால் சிறிய வளைவைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் அதிகம் வாழும் ராஜகம்பளம் நாயக்கர் சமுதாயத்தினர் வேட்டையாடுவதை விருப்பமாக கொண்டுள்ளனர். இவர்கள் அதிகம் சிப்பிப்பாறை போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்களே இந்தவகை நாய்களை அதிகம் வளர்த்து வருகின்றனர்.[1]

அஞ்சல் தலை வெளியீடு

தொகு

2005 ஆம் ஆண்டு இந்திய அஞ்சல்தலையில் இடம்பெற்று பெருமைப்படுத்தப்பட்ட ஒரே தமிழக நாய் இனம், இராஜபாளையம் நாயாகும்.[2]

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rajapalayam Hound
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Return of the Rajapalayam". Archived from the original on 2014-03-13. பார்க்கப்பட்ட நாள் 2011-02-07. THE HINDU (10 Jan, 2005)
  2. இரா.சிவசித்து (14 அக்டோபர் 2017). "ராஜபாளையத்தின் ராஜா". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 15 அக்டோபர் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜபாளையம்_நாய்&oldid=3999619" இலிருந்து மீள்விக்கப்பட்டது