புதுப் பயனர் தகவல்

தொகு

சூரியா, புதுப் பயனர் ஒருவர் தன்னைப் பற்றிய தகவல்களை தனது பயனர் பக்கத்தில் அல்லாமல் (அறியாமல்) கட்டுரை வெளியில் தந்திருந்தால் அதனை வழிமாற்றில்லாமல் அவரது பயனர் பக்கத்திற்கு நகர்த்துவதே சிறந்தது. பயனர் பக்கத்தை பயனரே தொடங்குவது நல்லது. தகவலுக்காக. நன்றி.--Kanags \உரையாடுக 21:11, 7 அக்டோபர் 2013 (UTC)Reply

இல்லை கனக்ஸ். செம்மல் தெரிந்தவர்தான். நான் அவருக்கு இன்றோ நாளையோ வீட்டிற்குச் சென்று பயிற்சியளிக்க வேண்டும். எனவேதான் அவ்வாறு செய்தேன். வேறெந்த காரணமோ புரிதலின்றியோ இல்லை :) இருப்பினும் உங்கள் கனிவான தகவலுக்கு நன்றி கனக்ஸ் :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 03:26, 8 அக்டோபர் 2013 (UTC)Reply

முன்பக்க இற்றைப்படுத்தல்

தொகு

முன்பக்க இற்றைப்படுத்தல் தொடர்பாக ஆலமரத்தடியில் கருத்திட்டுள்ளேன். ஆர்முள்ள பயனர்களை இதில் சேர்த்துக் கொள்ளப்படுவது ஏற்கெனவே இற்றைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள உங்களுக்கு உதவியாக அமையும். உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 03:16, 11 அக்டோபர் 2013 (UTC)Reply

2007 சீனாவின் செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனை

தொகு

நன்றி நண்பரே. நான் பொதுவாக மணற்தொட்டியைப் பயன்படுத்துவதில்லை. (பயன்படுத்திப் பழக்கமில்லை அல்லது தெரியாது) . இக்கடுரையை லிங்குடன் இணைக்கும் போது இயலாது ஏற்கனவே இணைக்கப்பட்டது எனச் செய்தி தோன்றியது. மேலும் அதே நேரத்தில் நீங்கள் இணைத்துவிட்டீர்கள் . நன்றி. ஆனால் இக்கட்டுரையின் அடுத்த பத்தியை எழுதி அதை சேமித்திருந்தேன், அதைக் காணவில்லை. :( இரண்டு முறை இப்படி ஆகிவிட்டது எப்படி மீட்டெடுப்பது எனத் தெரியவில்லை. உதவமுடியுமா? நன்றி. --ஆர்.பாலா (பேச்சு) 04:45, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

என் முன்மொழிவில் தெளிவாகக் குறிப்பிடாததால் தவறான தோற்றம் இருந்தது. எனது விளக்கத்தைப் பார்த்து இப்போது மறுப்பில்லையென்றால் விரைந்து மாற்றி விடுங்கள். இல்லையெனில் உரையாடல் திசைமாற வாய்ப்புண்டு. :) -- சுந்தர் \பேச்சு 19:05, 19 அக்டோபர் 2013 (UTC)Reply

 Y ஆயிற்று -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 15:36, 25 அக்டோபர் 2013 (UTC)Reply

பதக்கம் பற்றிய விளக்கம்

தொகு

எனக்கு சிறந்த பயனர் பக்கத்திற்கான பதக்கம் வழங்கியமைக்கு மிக்க நன்றிகள்.

விக்கிப்பீடியா:பள்ளி மாணவர்கள் திட்டத்தில் நானுமோர் அங்கத்தவன். விக்கிப்பீடியாவிற்குள் பல மாணவர்களை ஈர்க்கும் பொருட்டும், இத்திட்டத்தில் இணைந்து சிறப்பாகப் பங்களிக்கும் மாணவப் பயனர்களுக்கு ஊக்கம்மளிக்கும் பொருட்டும் ஒரு புதிய பதக்கத்தை உருவாக்கியுள்ளேன். இதனை விக்கிப்பீடியா பதக்க வார்ப்புருக்கள் என்ற பகுப்பினோடும் இணைத்துள்ளேன்.

இருந்தும் பயனரின் பேச்சுப் பக்கத்தில் விக்கியன்பு பதக்கம் என்ற இணைப்பைச் சொடுக்கியவுடன் தோன்றும் பதக்கத்தை தெரிவுசெய்யவும் என்ற பட்டியலில் அசத்தும் பள்ளி மாணவர் பதக்கம் என்ற பெயரைக் காணவில்லை. அப் பட்டியலில் அசத்தும் பள்ளி மாணவர் பதக்கத்தையும் இணைத்து உதவமுடியுமா? (உங்களால் முடியாததா!!!)

இணைக்கும் முறையை அடியேனுக்கும் கற்றுத்தந்தால் பேருதவியாக அமையும்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 19:21, 23 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றி ஸ்ரீகர்சன். அந்தக் கருவியை உருவாக்கியது நான் தான். ஆனால், தற்போது அதில் என்னாலும் புதிய வார்ப்புருக்களை இணைக்க முடியவில்லை. ஏனென்று புரியவில்லை. நானும் தற்போது ஒரு நிரலாளரின் உதவியை எதிர்நோக்கியே உள்ளேன். சுந்தர் உதவக்கூடும். ஏனெனில் அவரே கடைசியாக ஒரு வார்ப்புருவை இணைத்திருக்கிறார். ஆனால், அவரைப் போன்றே நானும் இணைத்துப் பார்த்தேன், ஏமாற்றமே மிஞ்சியது :P ஓரிரு நாட்கள் பொறுங்கள். முயல்கிறேன். உங்கள் திட்டப் பங்களிப்பிற்கு நன்றி :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 10:45, 24 அக்டோபர் 2013 (UTC)Reply

 Y ஆயிற்று -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 15:26, 25 அக்டோபர் 2013 (UTC)Reply

 

மிக்க்க்க நன்றி அண்ணா. நீங்கள் எனக்கு மட்டுமல்ல விக்கியில் பங்களிக்கும் அனத்துப் பள்ளி மாணவர்களுக்கும் பேருதவி (உந்துதல்) அளித்துள்ளீர்கள்.

( முக்கிய குறிப்பு - மேற்கூறிய நன்றி எனக்குப் பதக்கமிட்டமைக்கும் சேர்த்தே ! ! ! ) --ஸ்ரீகர்சன் (பேச்சு) 07:48, 26 அக்டோபர் 2013 (UTC)Reply

தங்களைப் பற்றிய அவதூறுச் செய்திக்கு வருத்தம் தெரிவிக்கிறோம்

தொகு

சூரியா, அண்மையில் ஒரு தடை செய்யப்பட்ட போலிக் கணக்கில் இருந்து தங்களைப் பற்றிய அவதூறுச் செய்தி வந்திருந்தது. இது தொடர்பாக, தமிழ் விக்கிப்பீடியாவில் நெடுநாள் பங்களிக்கும் பயனர் என்ற முறையில், தமிழ் விக்கிப்பீடியர் சார்பாக நான் உங்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பிட்ட அவதூறுச் செய்தியை விக்கி வரலாற்றில் இருந்து நிலையாக நீக்குவதற்கான நடவடிக்கை எடுப்போம். மீண்டும் இவ்வாறான அவதூறுகள் வராமல் இருப்பதற்கான காப்பு நடவடிக்கைகளை எடுக்க முனைவோம். நன்றி.--இரவி (பேச்சு) 17:48, 24 அக்டோபர் 2013 (UTC)Reply

சரி. நன்றி. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 18:01, 24 அக்டோபர் 2013 (UTC)Reply

எதற்காக?

தொகு

எதற்காக?, என்னது ஆறாவதா? என்று குறிப்பிட்டிருந்தீர்கள், எனக்கு ஒன்றும் புரியவில்லை. அண்ணா, தயவு செய்து மறுமொழி கூறுக. L.Shriheeran பேச்சு

தம்பி, நீங்க ஆறாம் வகுப்பு படிக்கிறீர்கள் என்று அறிந்தேன்! அதனாலேயே அந்த வியப்பு மொழி :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 14:05, 26 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி

தொகு
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:05, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்

தொகு

வணக்கம், Surya Prakash.S.A./தொகுப்பு11!

 

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 12:16, 2 நவம்பர் 2013 (UTC)Reply

பள்ளி மாணவர்கள்

தொகு

அண்ணா இந்தப் பக்கத்தைப் பாருங்கள்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:26, 2 நவம்பர் 2013 (UTC)Reply

Return to the user page of "Surya Prakash.S.A./தொகுப்பு11".