பயனர் பேச்சு:Shanmugamp7/தொகுப்பு 3
பதக்கம்
தொகுவிக்கிப்புயல் பதக்கம் | ||
கட்டுரை பின்னூட்டக் கருவியை அசத்தும் வேகத்தில் மொழிபெயர்த்தமைக்கு! ஸ்ரீகாந்த் (பேச்சு) 05:45, 19 சூலை 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
மேலுள்ள இணைப்பு ஆங்கில கட்டுரை பின்னூட்டக் கருவிக்கு கொண்டு செல்கிறது. மொழிமாற்றப்பட்ட தமிழிணைப்பெங்கே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:17, 25 சூலை 2012 (UTC)
- அதனை இன்னும் மொழிபெயர்க்க வில்லை தென்காசியாரே.. மொழி பெயர்க்க வேண்டும்.. அவர் கூறியது translatewiki தளத்தில் செய்த இடைமுகப்பு மொழிபெயர்ப்பு (interface translation).. பார்க்க [1]. விக்கிக்கு வருவதற்கு முன் அங்கு செய்த மொழிபெயர்ப்பில் இந்த குழுவிலும் (AFTV5) சில இருக்கிறது. அவற்றை தேடிக் கண்டுபிடித்து உரை திருத்த வேண்டும்.:)--சண்முகம்ப7 (பேச்சு) 11:26, 25 சூலை 2012 (UTC)
நன்றி
தொகுஎழுத்து பிழை ஏற்படுத்தியமைக்கு நான் மன்னிப்பு கோருகிறேன். இணைய இணைப்பில் ஏற்பட்ட கோளாறின் வினை. அதே போல் இப்பக்கத்தையும் நீக்கவும். தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றம் (வரையறுக்கப்பட்டது). நன்றி! --விக்கியில்பாபுவெல்க தமிழ்! 14:21, 20 சூலை 2012 (UTC)
- மன்னிப்பெல்லாம் எதற்கு விக்கியில்பாபு, தவறு ஏற்படுவது இயல்புதானே.. எனக்கும் எது சரியான தலைப்பு என குழம்பி விட்டது. இவ்வளவு நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன் :). நீக்க வேண்டிய பக்கங்களில் இனி {{delete}} வார்ப்புரு இணைத்து விடுங்கள்.--சண்முகம்ப7 (பேச்சு) 14:25, 20 சூலை 2012 (UTC)
- தலைப்பு, இப்பொழுது தான் தமிழக அரசின் இணையதளத்திலிலுள்ள மக்கள் சாசனத்திலிருந்து பெறப்பட்டது. சரியான பக்கம் தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (வரையறுக்கப்பட்டது) இதுவே. நன்றி. --(சதீஷ்பாபு)விக்கியில்பாபுவெல்க தமிழ்! 14:31, 20 சூலை 2012 (UTC)
- சரி சதீஷ்பாபு--சண்முகம்ப7 (பேச்சு) 14:36, 20 சூலை 2012 (UTC)
- பழைய வரலாறு வேண்டும் என்பதால் நீக்கிவிட்டு மீண்டும் ஒன்றிணைத்து உள்ளேன். சரி பார்த்துக் கொள்ளுங்கள் சதிஷ்பாபு. வரலாறு முக்கியம் நண்பரே :)--சண்முகம்ப7 (பேச்சு) 14:46, 20 சூலை 2012 (UTC)
அன்பர் சண்முகம்,
மேற்குறிப்பிடப்பட்ட தலைப்பில் உள்ள பக்கத்தை தாங்கள் ஆய்வு செய்ய வேண்டுகிறேன். --விக்கியில்பாபுவெல்க தமிழ்! 15:55, 21 சூலை 2012 (UTC)
- வணக்கம் சதீஷ்பாபு, கட்டுரையை அருமையாக வளர்த்துள்ளீர்கள், விக்கியில் நாம் எழுதிய கட்டுரைகளை ஆய்வெல்லாம் செய்வதில்லை, கட்டுரைகள் விக்கிநடைக்கேற்ப தகுந்த மேற்கோள்களுடன் உள்ளதா என்றே பார்க்கிறோம். ஆங்கில விக்கியில் உள்ளதை போல இப்பக்கத்தை ஆதாரமாக கொடுக்கலாம். தொடர்ந்து எழுத வாழ்த்துகள், நன்றி :)--சண்முகம்ப7 (பேச்சு) 16:09, 21 சூலை 2012 (UTC)
- நன்றி, இப்பக்க முதற்கட்ட வேலைகளாக நான் கருதிய தமிழாக்கம் முழுமை பெற்றுவிட்டதாக எண்ணுகிறேன். எனவே இப்பக்கம் நீக்கப்படாது! இரண்டாம் கட்ட பணிகள் சிறு இடைவேளைக்குப் பின்னர் தொடங்க உத்தேசித்துள்ளேன், வேறு எவரேனும் நாட்டம் கொண்டு பணிபுரிந்தாலும் சரி, பின்னர் சரி பார்த்துக்கொள்கிறேன். தேவையான பகுப்புகள் தாங்கள் அப்பக்கத்துக்கு சேர்க்க வேண்டும். --விக்கியில்பாபுவெல்க தமிழ்! 05:28, 22 சூலை 2012 (UTC)
- நல்லது சதீஷ்பாபு, அவ்வாறே செய்யுங்கள். ஏற்கனவே தேவையான பகுப்பு ( பகுப்பு:தமிழ்நாடு அரசு நிறுவனங்கள் ) இணைக்கப்பட்டுள்ளது, நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 06:08, 22 சூலை 2012 (UTC)
பகுப்பு:வளைவரை
தொகுவணக்கம். பகுப்பு:வளைவரை, இதில் வளைவரை என்பதை வளைவரைகள் என மாற்றித் தர வேண்டும்.அதிலுள்ள கட்டுரைகளை நான் புதுப் பகுப்புக்குள் சேர்த்து விடுகிறேன். நன்றி. --Booradleyp (பேச்சு) 03:51, 25 சூலை 2012 (UTC)
- ஆயிற்று.சரி பார்த்துக் கொள்ளுங்கள்--சண்முகம்ப7 (பேச்சு) 04:51, 25 சூலை 2012 (UTC)
- நன்றி, சண்முகம்.--Booradleyp (பேச்சு) 16:17, 25 சூலை 2012 (UTC)
அடைக்காப்பகம்
தொகுவிக்கி அடைக்காப்பகத்தை பார்த்தேன். 31 சதவிகிதம் மொழிபெயர்க்கப் பட்டது எனக் கூறுகிறது. என்னால் இயன்றவரை, தெரிந்தவற்றை மொழிபெயர்க்க விரும்புகிறேன். அது பற்றிய உதவி வழங்கவும். நன்றி!--தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:31, 25 சூலை 2012 (UTC)
- இவ்விணைப்பின் வழி சென்று மொழி பெயருங்கள் தமிழ்க்குரிசில். அங்கேயும் இதே பயனர் கணக்கு மூலம் புகுபதிகை செய்து கொள்ளுங்கள். சிறப்பு:Emailuser/shanmugamp7 மூலம் மின்னஞ்சல் அனுப்பினால் தங்களை gtalkல் சேர்க்க இயலும். நான் இணைப்பில் இருக்கும்போது உடனே பதிலளிப்பேன் :)..--சண்முகம்ப7 (பேச்சு) 13:42, 25 சூலை 2012 (UTC)
ஒர் இணைப்பைச் சொடுக்கினால் புதிய பக்கம் உருவாக்கம் என்று வருகிறது. அப்படியெனில் அதன் தமிழ்ப் பதிப்பு இல்லை என்று பொருளா? உதாரணமாக, இது ஆங்கில Main Page/Page display title பக்கம், இதன் தமிழ்ப் பதிப்பு Main Page/Page display title/ta என்று நினைக்கிறேன். சரிதானே? ஆங்கில பதிப்பை ஒரு தத்தலில் கொண்டு அதனை மொழியாக்கம் செய்து தமிழில் எழுத வேண்டும் என நினைக்கிறேன். அப்படித்தானே?--தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:58, 25 சூலை 2012 (UTC)
- எந்த இணைப்பு என்று கூறினால் தெளிவாக கூற இயலும். நீங்கள் நினைப்பது சரியே, அது போன்ற பன்மொழி விக்கித் திட்டங்களில் Main Page/Page display title/ta என்பதையே வேறுபடுத்த உபயோகிக்கிறார்கள். நான் மேலே கூறியுள்ள இணைப்பின் வழி சென்றால் தகவல் பட்டியல் வரும். அதில் எதை மொழிபெயர்க்க வேண்டுமோ அந்த தகவலை கிளிக் செய்து மொழிபெயர்க்கலாம்.--சண்முகம்ப7 (பேச்சு) 14:04, 25 சூலை 2012 (UTC)
இங்கு திருத்தம் செய்ய முயன்றேன். என்னால் இயலவில்லை. இணைப்பின் வழி சென்றேன். எதுவும் புரியாவில்லை. ஆகவே, தாங்கள் ஒரு ஆங்கில பக்கத்தின் இணைப்பையும், மொழிபெயர்க்கவேண்டிய தமிழ் பக்கத்தின் இணைப்பையும் கீழே தருமாறு வேண்டுகிறேன். உதாரணமாக, உதவிப் பக்கத்தின் இணைப்புகளைத் தாருங்கள். முயல்கிறேன். நன்றி!--தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:29, 25 சூலை 2012 (UTC)
- மேலுள்ள இணைப்பில் Message definition என்றுள்ளதல்லவா அதுதான் தகவல், அதைத்தான் தமிழில் மொழிபெயர்த்து கீழே உள்ள தொகுத்தல் பெட்டியில் உள்ளிட வேண்டும். நான் மேற்கூறிய இணைப்பு இது போன்ற தகவல்களின் பட்டியலே. அதில் ஏதாவது மொழிபெயர்க்கபபடாத (பச்சை நிற பின்னணியில் உள்ளது) ஒரு தகவலை இரட்டை கிளிக் செய்தால் ஒரு popup window திறக்கும். அதில் ஒரு உள்ளீடு பெட்டி இருக்கும், அதில் மொழிபெயர்த்த தகவலை உள்ளிடவும். --சண்முகம்ப7 (பேச்சு) 14:51, 25 சூலை 2012 (UTC)
முதற் பக்கம் 97 சதவிகிதம் முடிவுற்றது. அந்த மீதி 3 சதவிகிதத்தை அறிய முடியவில்லை. பிழையிருந்தால் திருத்திவிடவும். நன்றி--தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:05, 25 சூலை 2012 (UTC)
- ஆயிற்று. 100சதவீதம் முடிக்கப்பட்டு proofread செய்யப்பட்டது--சண்முகம்ப7 (பேச்சு) 16:43, 25 சூலை 2012 (UTC)
இப்பக்கத்தை மொழிபெயர்த்துள்ளேன். பிழைகளைத் திருத்திவிடவும். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:09, 26 சூலை 2012 (UTC)
- ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 17:27, 26 சூலை 2012 (UTC)
பதக்கம்
தொகுசிறந்த வழிகாட்டுனர் பதக்கம் | ||
நீங்கள் பல பயனர்களுக்கு உதவியாக இருப்பதையும், செயல்திறத்துடனும் முனைப்புடனும் நிருவாகப் பொறுப்பு உள்ளிட்ட பல விக்கிப் பங்களிப்புகளைச் செய்து வருவதையும் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். இரவி (பேச்சு) 15:16, 25 சூலை 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- நன்றி இரவி :)--சண்முகம்ப7 (பேச்சு) 15:19, 25 சூலை 2012 (UTC)
- சண்முகம் என் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். தொடர்ந்து இயன்றவாறு நற்பங்கு ஆற்ற வாழ்த்துகின்றேன் --செல்வா (பேச்சு) 15:32, 25 சூலை 2012 (UTC)
- நன்றி செல்வா.--சண்முகம்ப7 (பேச்சு) 15:34, 25 சூலை 2012 (UTC)
Translation notification: Wikimedia Highlights, June 2012
தொகுYou are receiving this notification because you signed up as a translator to தமிழ் on Meta. A new page, Wikimedia Highlights, June 2012 is available for translation. Please translate it here:
The priority of this page is medium. The deadline for translating this page is 2012-09-15.
Thank you!
Meta translation administrators, 13:13, 26 சூலை 2012 (UTC)வண்ணநிலவன்
தொகுஉங்கள் கவனத்துக்கு:
வண்ணநிலவன் இரு கட்டுரைகள் உள்ளன.Booradleyp (பேச்சு) 17:49, 27 சூலை 2012 (UTC)
- மன்னிக்கவும் ஒன்றுதான் உள்ளது.
- சரி, நானும் இப்போதுதான் தேடிவிட்டு உங்களிடமே கேட்கலாம் என தட்டச்சிட்டுக்கொண்டிருந்தேன், சேமிப்பதற்குள் நீங்களே கூறிட்விடீர்கள் :)--சண்முகம்ப7 (பேச்சு) 17:56, 27 சூலை 2012 (UTC)
புதுப்பயனர் மேம்பாடு
தொகுபுதியவன் என்பதால் பல விடயங்கள் தெரியவில்லை. ஆர்வம் பொங்கிப் பெருக்கெடுக்கிறது. அவ்வப்போது ஏதாவது ஒரு பணியை செய்ய என்னைப் பழக்கப்படுத்துங்கள். இப்போதே தொட்ங்குங்களேன். ஏதேனும் ஒன்றை கற்றுக்கொடுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:46, 30 சூலை 2012 (UTC)
- உங்கள் ஆர்வத்திற்கு பாரட்டுகள் தமிழ்க்குரிசில், உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன், மின்னஞ்சல் கணக்கை பார்க்கவும், அங்கு தொடருவோம், நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 15:56, 30 சூலை 2012 (UTC)
படிமம்
தொகுவணக்கம். சிறுசில்லி கட்டுரையில் வரையறை என்ற தலைப்பில் ஒரு படிமத்தில் படம் தெரியவில்லை. அதைச் சரிசெய்து தாருங்கள். நன்றி.--Booradleyp (பேச்சு) 16:35, 1 ஆகத்து 2012 (UTC)
- ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 17:48, 1 ஆகத்து 2012 (UTC)
- உதவிக்கு நன்றி.--Booradleyp (பேச்சு) 05:46, 2 ஆகத்து 2012 (UTC)
- பெயர்மாற்றம் - படிமப் பேச்சு:Tamil-alphabet-ஃஃ.svg
--Anton (பேச்சு) 02:16, 3 ஆகத்து 2012 (UTC)
- ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 13:02, 3 ஆகத்து 2012 (UTC)
- நன்றி!--Anton (பேச்சு) 13:09, 3 ஆகத்து 2012 (UTC)
தகவற்ச்சட்டத்தில் திருத்தம்
தொகுமதுரை கட்டுரையில் தகவல் சட்டத்தில் திருத்தவேண்டும் எங்கு சென்று அதை திருத்துவது. மாவட்ட ஆட்சியர் பெயரை இற்றைப்படுத்தவேண்டியுள்ளது. நீங்களே கூட செய்து மாற்றிவிடவும். --எஸ்ஸார் (பேச்சு) 15:19, 4 ஆகத்து 2012 (UTC)
- ஆயிற்று. இங்கு மாற்ற வேண்டும்--சண்முகம்ப7 (பேச்சு) 15:35, 4 ஆகத்து 2012 (UTC)
- நன்றி சண்முகம் --எஸ்ஸார் (பேச்சு) 15:45, 4 ஆகத்து 2012 (UTC)
ஆலமரத்தடி உரையாடல்
தொகு- ஆலமரத்தடியில் மேலும் உரையாடுவதைவிட வேறோர் இடத்தில் உரையாடலாம். கிரந்தம் கலந்து எழுதக் கூடாது என்பதை விட, தமிழ் எழுத்துகளில் எழுதுவதற்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதே நான் கூறவந்தது. தமிழைப் போல் வேறு எந்த மொழியிலும் எழுத்துகளுக்கும் சொற்களுக்கும் வரையறைகள் கிடையாது. இவை வரட்டுத்தனமான, அறிவற்ற முறையும் அல்ல. இவற்றை நாம் போற்றுவது தவறல்லவே! தமிழர்களில் பலர் போற்றாததற்குப் பல காரணங்கள் இருக்கலாம், நாம் அவற்றை அலச வேண்டியதில்லை, ஆனால் "சரியான" எளிமையான, சிக்கனமான (ஆங்கிலத்தில் parsomony என்பார்களே) முறையைப் பின்பற்றுவது நல்லதல்லவா? இந்த ஒலிப்புகள், அவை நெருக்கமாக இருக்க வேண்டும், மாற்றக்கூடாது என்பதில் பற்பல குழப்பமான எண்ணங்கள் உள்ளன. பொறுமையாகவும் நேர்மையாகவும் கலந்துரையாடினால் பயன் இருக்கும். யாருமே பொய் சொல்லாமல் இருக்கட்டும் பிறகு நான் பொய் சொல்லாமல் இருக்கின்றேன் என்பது போன்ற வாதங்கள் வழுக்குப் பாதைகள். --செல்வா (பேச்சு) 21:13, 14 ஆகத்து 2012 (UTC)
- கிரந்தத்தைவிட பிற விதிகளை முதலில் எடுத்துப் பேசலாம். --செல்வா (பேச்சு) 21:14, 14 ஆகத்து 2012 (UTC)
- கிரந்தம் தவிர்ப்பு பற்றி ஆலமரத்தடியில் ஒரு கருத்தை கூறியுள்ளேன். வழுக்குப் பாதைகளில் நாமிருவரும் மாறி மாறி உரையாடுவதைவிடுத்து கொள்கை முடிவாக கொண்டுவந்து அனைவரின் ஒப்புதலோடு நிறைவேற்றினால் பிறகு இது போன்ற உரையாடல்கள், பயனரிடையேயான மனக்கசப்புகள், விலகல்கள் போன்றவை நடக்காது அல்லவா?--சண்முகம்ப7 (பேச்சு) 05:00, 15 ஆகத்து 2012 (UTC)
- சண்முகம், பார்த்தேன். நான் கூறுவதில் வழுக்குப்பாதை இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்கின்றேன். புதுப்புது பயனர்கள் வரும்பொழுது கருத்தாடல்கள் நிகழ்வது ஓரளவுக்குத் தவிர்க்க முடியாதது. நீங்கள் கூறுவது போல கொள்கை முடிவு வந்தால் நல்லதே. ஆனால் அப்பொழுதும் புதுப்பயனர்கள் வந்து கேள்விகள் எழுப்பலாம்! கொள்கையாக இல்லாவிடினும் பரிந்துரையாக இருப்பதை ஒட்டியே இதுகாறும் நடந்து வந்திருக்கின்றோம். விக்கிப்பீடியாவுக்கும் புறத்தேயும் மொழி, மொழிநடை பற்றிய உரையாடல்கள் நிகழ்கின்றன (தமிழ் மொழியில் மட்டும் அன்று ஆங்கிலம் முதலான பிற மொழிகளிலும்). அறிந்தவர்கள் எடுத்துச் சொன்னாலும், நேர்மையான காரணங்களை எடுத்துச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது சண்முகம்?! மனக்கசப்புகளும் விலகல்களும் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் நிகழக்கூடியதே (வணிக நிறுவனங்கள் முதல் விக்கிப்பீடியா வரை (பலமொழி விக்கிகளிலும்) நிகழ்வதே). அறிவான காரணங்களை முன் வைத்து திறந்த மனத்துடன் உரையாடி கூட்டுழைப்பு செய்ய இயலுவது விக்கிப்பீடியா போன்ற திட்டங்களில் உள்ள நல்ல கூறுகளில் ஒன்று. --செல்வா (பேச்சு) 15:33, 15 ஆகத்து 2012 (UTC)
- என்னுடைய வாதம் அவ்வாறு உள்ளது என்பதையே கூறினேன். பரிந்துரையை ஏற்கலாம் எனினும் ஒரு ஒரு பக்கங்களிலும் உரையாடும் போது பழைய பயனர்களுக்கே அயர்ச்சியை ஏற்படுத்தும் போது புதுப்பயனர்களின் நிலையையும் சற்று எண்ணிப்பார்க்கவேண்டும். கொள்கை முடிவு எனில் பிரச்சினை இல்லை. இரவி கூறியது போல 10 ஆண்டு நிறைவுக்கு பின்னரோ அல்லது 50000 கட்டுரைகளுக்கு பின்னரோ இது பற்றி மீண்டும் உரையாடலாம். --சண்முகம்ப7 (பேச்சு) 15:43, 15 ஆகத்து 2012 (UTC) விருப்பம்--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 15:49, 15 ஆகத்து 2012 (UTC)
- "என்னுடைய வாதம் அவ்வாறு உள்ளது என்பதையே கூறினேன்." - நானும் அப்படித்தான் கூறினேன்! "..அயர்ச்சியை ஏற்படுத்தும்.." - நான் விக்கியின் பங்களிக்கத்தொடங்கி 6 ஆண்டுகளும் 3 மாதங்களும் ஆகின்றன. ஒன்றைக் கூற விழைகின்றேன்: தனிக்கருத்துகள் (opinions) எனில், பலருக்கும் பலவும் இருக்கும். ஆனால் பொது என்று வரும்பொழுது முறைமை சார்ந்து, அறிவடிப்படையிலும், அறம் சார்ந்தும் இருக்க வேண்டும். --செல்வா (பேச்சு) 16:05, 15 ஆகத்து 2012 (UTC)
- உங்கள் கருத்திற்கு நன்றி. இங்கு உரையாடும் அனைவரின் கருத்துகளும் தனிக்கருத்துகளை விட முறைமை சார்ந்து, அறிவடிப்படையிலும், அறம் சார்ந்தும் இருக்க வேண்டும் என்றே நானும் எதிர்பார்க்கிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 16:50, 15 ஆகத்து 2012 (UTC)
உதவி
தொகுவணக்கம் சண்முகம், முழக்கோல், கோல் (கணிதம்) இரண்டும் வெவ்வேறு பெயர்களில் ஒரே கட்டுரையாக உள்ளன. இரண்டையும் இணைக்க வேண்டும் என நினைக்கிறேன். நீங்களும் ஒருமுறை சரிபார்த்து விட்டு இணைக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp (பேச்சு) 16:57, 17 ஆகத்து 2012 (UTC)
- ஆயிற்று, நீங்கள் கூறியது போல இரண்டும் ஒரே உள்ளடக்கத்தையே கொண்டுள்ளது, மேலும் இரண்டையும் இன்பம்குமாரே தொடங்கியுள்ளார்--சண்முகம்ப7 (பேச்சு) 17:28, 17 ஆகத்து 2012 (UTC)
- நன்றி.--Booradleyp (பேச்சு) 18:16, 17 ஆகத்து 2012 (UTC)
- மீண்டும் ஓர் உதவி வேண்டும். குலதெய்வம் (திரைப்படம்) கட்டுரை இருப்பது தெரியாமல் குல தெய்வம் (திரைப்படம்) என்று புதியதாக ஒரு கட்டுரை உருவாக்கி விட்டேன். இரண்டையும் இணைத்து விட வேண்டும்.--Booradleyp (பேச்சு) 18:36, 17 ஆகத்து 2012 (UTC)
- ஆயிற்று. இப்போதுள்ள தலைப்பு சரியா?. அல்லது நீங்கள் உருவாக்கிய தலைப்பிற்கு நகர்த்தவா?--சண்முகம்ப7 (பேச்சு) 18:49, 17 ஆகத்து 2012 (UTC)
- மிகவும் நன்றி, சண்முகம். நான் தொடங்கிய கட்டுரையில் தரப்பட்டுள்ள மேற்கோள்கள் இரண்டும் குல தெய்வம் என இடைவெளி விட்டு (ஆங்கிலத்தில்) உள்ளது. எனினும் தமிழில் இதை நான் பார்த்ததில்லையாதலால் எது சரி என்று எனக்கும் தெரியவில்லை. சரியான ஆதாரம் கிடைக்கும்வரை இப்படியே இருக்கட்டும்.--Booradleyp (பேச்சு) 01:31, 18 ஆகத்து 2012 (UTC)
- கூகிளில் தேடி திரைப்படத்தின் படத்தை சேர்த்துள்ளேன். அதில் குலதெய்வம் என்றே உள்ளது.--சண்முகம்ப7 (பேச்சு) 03:26, 18 ஆகத்து 2012 (UTC)
ஒன்றிணைப்பு
தொகுவணக்கம். வட்ட நாற்கரம், பிரம்மகுப்தர் நாற்கரம் இரண்டையும் ஒன்றிணைக்கலாம். வட்ட நாற்கரங்களில் ஒரு வகை பிரம்மகுப்தர் நாற்கரம். வட்ட நாற்கரக் கட்டுரைக்குள் பிரம்மகுப்தர் கட்டுரையை ஒரு தலைப்பாகக் கொண்டுவரலாம். வட்ட நாற்கரக் கட்டுரையை வளர்த்து விட்டு உங்களுக்குத் தெரிவிக்கிறேன். அதன்பின் இணைத்து விடுங்கள்.
- குலதெய்வம் படம் இணைத்ததற்கு நன்றி. படம் இல்லாத திரைப்படக் கட்டுரைகளுக்குப் படங்களைக் காணும் முறையைக் கூற முடியுமா? நான் முயற்சி செய்தேன் ஆனால் எனது இணையச் சிற்றறிவால் முடியவில்லை.--Booradleyp (பேச்சு) 17:09, 23 ஆகத்து 2012 (UTC)
- சரி..எல்லாம் கூகிளாரின் உதவியுடன்தான் :). கூகிள் படத் தேடலில் ஆங்கிலப் பெயரில் தேடினால் பெரும்பாலும் கிடைக்கும். சில நேரங்களில் நடித்த நடிகர், நடிகைகள், தமிழ்ப்பெயர் போன்றவற்றைக் கொண்டும் தேட வேண்டி வரும்--சண்முகம்ப7 (பேச்சு) 17:44, 23 ஆகத்து 2012 (UTC)
- நன்றி சண்முகம். நானும் தேட முயற்சிக்கிறேன்.
- வட்ட நாற்கரம் கட்டுரைக்குள் பிரம்மகுப்தர் நாற்கரக் கட்டுரையின் உள்ளடக்கங்களைச் சேர்த்துவிட்டேன். இரண்டையும் ஒன்றிணைத்து விடலாம். ஒன்றிணைத்து விட்டுத் தெரிவித்தால் பிரம்மகுப்த நாற்கரப் பகுதியை மேலும் வளர்த்தலாம் என நினைக்கிறேன்.--Booradleyp (பேச்சு) 01:14, 24 ஆகத்து 2012 (UTC)
- ஆடும் கூத்து படிமம் தேடி பதிவேற்றி கட்டுரையில் சேர்த்திருக்கிறேன். பதிவேற்றியதை ஒருமுறை சரிபார்க்க வேண்டும். நன்றி.--Booradleyp (பேச்சு) 02:14, 24 ஆகத்து 2012 (UTC)
- படிமம் சரியாகவே பதிவேற்றப்பட்டுள்ளது. முடிந்தவரை watermark இல்லாத படங்களைப் பதிவேற்றவும். இந்த திரைப்படத்திற்கு அப்படி எதுவும் கிடைக்கவில்லை, ஆதலால் இதுவே இருக்கட்டும் :)--சண்முகம்ப7 (பேச்சு) 05:04, 24 ஆகத்து 2012 (UTC)
வேண்டுகோள்
தொகுநீங்கள் தொடர்ந்து தொழில்நுட்ப பகுதியில் பங்களித்து, இணையத்தமிழை, இணையற்றத்தமிழாக மாற்றி வருகிறீர்கள்.உங்களைப் போல ஒருசிலரே தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கின்றனர். மேலும், பிற மொழி விக்கித்திட்டங்களிலும் உங்கள் பங்களிப்பு குறிப்பிடத் தகுந்தது. நீண்ட நாட்களாக தமிழில் ஏற்படுத்தப் படாத பல எளிய தொழில்நுட்ப வசதிகளை, அனைத்து தமிழ் விக்கித்திட்டங்களிலும் பல உள்ளன. அவற்றில் உங்களின் கவனம் கூடுதலாக இருந்தால் நன்றாக இருக்கும்.
ஏனெனில், அவ்வப்போது, உங்களின் கலந்துரையாடல்களையும் கவனிக்கிறேன். அவையெல்லாம், பல நூல்களில் விரவிக்கிடக்கின்றன. அவற்றை இங்கு ஒப்புவிக்கும், கிளிப்பிள்ளைகளைப் பற்றி கவலைக் கொள்ளற்க. நீங்கள் கிணற்றத்தவளையல்ல என்பதைன உங்கள் செயலால் நீரூபிக்க வேண்டுகிறேன்.பல விக்கித்திட்டங்களையும், குறிப்பாக தமிழ்விக்சனரியையும் நோக்கவும்.
பல உயர்வான தமிழ் வளங்கள் அனைத்தினையும் சிறப்பாக பதிவதில், பல தொழில்நுட்பத்தடைகள் உள்ளன. எனவே, இவ்வேண்டுகோளுக்கு முன்னுரிமைத் தாருங்கள்.ஏற்கனவே, நமக்கு மின்சாரத்தடை, இணைய இணைப்பில் தடை. இதனை நாம் தவிர்க்க முடியாது. ஆனால், நேரமின்மைத் தடையை நாம் தவிர்க்கலாமே? நீங்கள் அடிக்குறிப்பு (<ref>) வசதியில் ஏற்படுத்திய, தொழில்நுட்பம் அற்புதம்.மீண்டும் பல பயனருக்கும் தேவைப்படும் மற்றொரு நுடப் வேண்டுகோளுடன் சந்திக்கிறேன்.விக்கிப்பொதுவகத்தில் உங்கள் பங்களிப்புகளும், தமிழ்விக்சனரியிலும், இங்கும் உங்கள் பங்களிப்பு வெகுவாக குறைந்துவிட்டது ஏன்? வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 18:54, 24 ஆகத்து 2012 (UTC)
- உந்துதலுக்கு நன்றி தகவலுழவன், சில உரையாடல்களில் கலந்து கொண்டதால் பங்களிக்க இயலவில்லை. விரைவில் பங்களிப்புகளை தொடர்கிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 01:26, 25 ஆகத்து 2012 (UTC)
ஆலமரத்தடி
தொகுஆலமரத்தடியில் தவறுதலாக நீக்கிய உரையை மீண்டும் இணைத்ததற்கு நன்றிகள்! இணைய இணைப்பிற்சிக்கலால் தொகுத்தற்பக்கம் முழுமையாக ஏற்றப்படும் முன்பே தொகுத்து விட்டுச் சேமித்ததாலேயே இச்சிக்கல் நிகழ்ந்தது. --மதனாகரன் (பேச்சு) 05:36, 25 ஆகத்து 2012 (UTC)
- சரி மதன். #cvn-swconnect ல் இருந்ததால் உடனே சரி செய்துவிட்டேன் :)--சண்முகம்ப7 (பேச்சு) 05:45, 25 ஆகத்து 2012 (UTC)
ஒன்றிணைப்பு
தொகுவணக்கம். ஒன்றிணைக்க வேண்டிய இரண்டில் ஒன்று இந்திய கணிதவியலாளர்களின் பட்டியல், மற்றொரு கட்டுரை எதுவெனக் குறிப்பிடவில்லையே?--Booradleyp (பேச்சு) 03:42, 26 ஆகத்து 2012 (UTC)
- மன்னிக்கவும், அதிலேயே இருந்ததனால் குறிப்பிடவில்லை.. இன்னொன்று இந்திய கணித அறிஞர்கள் :) --சண்முகம்ப7 (பேச்சு) 03:58, 26 ஆகத்து 2012 (UTC)
- ஆயிற்று--Booradleyp (பேச்சு) 19:08, 27 ஆகத்து 2012 (UTC)
- மிக்க நன்றி, ஒன்றிணைத்துவிட்டேன்--சண்முகம்ப7 (பேச்சு) 19:15, 27 ஆகத்து 2012 (UTC)
நன்றி
தொகுமிக்க நன்றி. பல நேரங்களில் நான் பக்கத்தை நகர்த்திய பின், பேச்சுப்பக்கத்தை நீக்கும் முன்னரே அல்லது நீக்காமல் விட நேர்ந்ததையும் நீங்கள் நீக்கி விடுவதற்கு மிக்க நன்றி!!--செல்வா (பேச்சு) 12:51, 26 ஆகத்து 2012 (UTC)
- பரவாயில்லை செல்வா.. பேச்சுப் பக்கத்தையும் சேர்த்து நகர்த்தாமல் தனியாக வழிமாற்றின்றி நகர்த்துவது நீக்குவதற்கு எளிய வழி :). பல நேரங்களில் மேலே கூறியுள்ளபடி IRCல் இருப்பதால் உடனே நீக்கிவிடுகிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 13:00, 26 ஆகத்து 2012 (UTC)
அமைதியாக இருக்கும் திறமை - ஓஷோ
தொகுதிரு சண்முகம் அவர்களுக்கு இது ஓஷோ அவர்களின் அந்தர் கி கோஜ் என்ற சொற்பொழிவின் ஆரம்பம் மட்டுமே. முழு சொற்பொழிவு நேரம் 1 மணி 19 நிமிடங்கள் ஆரம்பத்தைத்தான் ஏற்றி இருக்கிறேன். அதனை நீங்கள் நீக்கிவிட்டீர்கள். அந்த சொற்பொழிவை கீழேயுள்ள இணைப்பில் கேட்கலாம்.
http://www.oshoworld.com/discourses/audio_hindi.asp?album_id=148
இந்த வரிசையில் உள்ள முதல் சொற்பொழிவின் மொழிபெயர்ப்பே அது. மேற்கொண்டு உங்கள் பதிலைக் கண்டு. நன்றி.−முன்நிற்கும் கருத்து Apthevan (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
உலகளாவிய முன்னிலையாக்கர்
தொகுஉலகளாவிய முன்னிலையாக்கராக ஒருவர் எவ்வாறு அடையாளங்காணப்படுகிறார்? அணுக்கர்களும் மீயணுக்கர்களும் அவ்வாறு அடையாளங்காணப்படுகின்றனரா? --மதனாகரன் (பேச்சு) 06:14, 29 ஆகத்து 2012 (UTC)
- இல்லை மதன்.சிறிய விக்கிகள் கண்காணிப்புக் குழுவினருக்காக சில உலகளவிய (அனைத்து விக்கிகளிலும்) அனுமதிகள் உள்ளன. உலகளவிய முன்னிலையாக்கர், உலகளவிய நிர்வாகி என்பது போல. இதில் உலகளவிய முன்னிலையாக்கர் மூலம் எந்தவொரு விக்கிமீடியா விக்கியிலும் எளிதாக முன்னிலையாக்கலாம். இதற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான luxo:shanmugamp7 உலகளவிய பங்களிப்புகளைச் செய்த பிறகு மேலாளரிடம் இங்கு கோர வேண்டும். ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு உரையாடல் நடக்கும். பிறகு அனுமதி வழங்கப்படும். [உலகளாவிய முன்னிலையாக்கர்கள்]--சண்முகம்ப7 (பேச்சு) 06:24, 29 ஆகத்து 2012 (UTC)
நீக்கல் தொடர்பில்
தொகுசண்முகம், அண்மையில் பேச்சு:இலங்கைத் தமிழில் பயன்பாட்டிலுள்ள சிங்களச் சொற்கள் பக்கத்தில் சில தேவையற்றதும் அவதூறாகக் கொள்ளக்கூடியதுமான உரையாடலை வரலாற்றோடு நீக்க வேண்டியதிருந்தது. இடையில் உங்களுடைய ஒரு தொகுப்பும் இருந்ததால் வேறு வழியில்லாமல் நீக்கியுள்ளேன். பொருட்படுத்த வேண்டாம். அந்தப் பக்கத்தையும் இடைக்காலத்துக்குப் பூட்டியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 09:50, 2 செப்டெம்பர் 2012 (UTC)
- நன்றி சுந்தர், அந்த உரையாடல் அவதூறாக இருந்தனால் இருவருக்கும் வேண்டுகோள் விடுத்தேன், நீக்குவதும் நல்லதே, இது போன்ற உரையாடல்கள் விக்கிப்பீடியாவில் நடப்பது சற்று வருத்தம் தரக்கூடிய விசயம். பாஹிம் புரிந்து கொள்வார் என நம்புகிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 09:55, 2 செப்டெம்பர் 2012 (UTC)
தலைப்பை மாற்றுவது குறித்து
தொகுவணக்கம், சண்முகம். பேச்சு:பொது நுழைவு தேர்வு-பார்க்கவும். இத்தனை நாட்களாக வேறு எவரும் கருத்துத் தெரிவிக்காததால் உங்களுக்கும் சரியென்று தோன்றினால் தலைப்பை மாற்றி உதவவும். நன்றி.--Booradleyp (பேச்சு) 04:29, 5 செப்டெம்பர் 2012 (UTC)
- ஆயிற்று, பொது நுழைவு தேர்வு என்றொரு குறுங்கட்டுரையும் உருவாக்கியுள்ளேன் :)--சண்முகம்ப7 (பேச்சு) 07:23, 5 செப்டெம்பர் 2012 (UTC)
- நன்றி.--Booradleyp (பேச்சு) 14:53, 5 செப்டெம்பர் 2012 (UTC)
கூகுள் கட்டுரைகள்
தொகுவணக்கம் சண்முகம் திருத்தப்பட்ட கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளில் திருத்தப்பட்ட பின்பு அவ்வார்ப்புருவை நீக்கிவிடலாமா? சான்றாக சில்வியா பிளாத் கட்டுரையில் நீக்கப்பட்டுள்ளது. இவற்றில் இடுவதற்காக ஏதேனும் வார்ப்புருக்கள் உள்ளனவா?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:32, 9 செப்டெம்பர் 2012 (UTC)
- நீக்கிவிடலாம், பிறகு கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் பகுப்பு:திருத்தப்பட்ட கூகுள் கட்டுரைகள் பகுப்பை சேர்த்துவிட்டால் போதுமானது--சண்முகம்ப7 (பேச்சு) 00:23, 10 செப்டெம்பர் 2012 (UTC)
வணக்கம் சண்முகம் இந்திரா காந்தி கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் இருந்த கூகுள் மொழிபெயர்ப்புச் செய்திகளை உரைதிருத்திவிட்டு அதனை வெட்டி (அழித்துவிட்டு) கட்டுரைப்பக்கத்துடன் இணைத்துள்ளேன் இது சரியா? மேலும் இக்கட்டுரையில் அறுபட்ட கோப்பிணைப்புகள் இருப்பதாகக் காட்டுகின்றன. அதனை முடிந்தால் சரிசெய்யவும். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:31, 12 செப்டெம்பர் 2012 (UTC)
- நீங்கள் செய்தது சரியே. ஆனாலும், தொகுக்கும் போது அடியில் உள்ள சுருக்கம் பகுதியில் ஒரு குறிப்பு இடுவதும் நல்லது.--Kanags \உரையாடுக 21:04, 12 செப்டெம்பர் 2012 (UTC)
- ஆம், இவ்வாறு தொகுப்பு சுருக்கம் பயன்படுத்துவதன் மூலம் creative commons அளிப்புரிமையை சரியாகப் பயன்படுத்துவது உறுதியாகும் (இதற்கு முதலில் இருந்தே சரியான தொகுப்பு சுருக்கத்தை பயன்படுத்த வேண்டும், அதாவது பேச்சுப் பக்கத்திற்கு வெட்டி ஓட்டும் போது கட்டுரைப் பகுதியில் இருந்து எடுத்தது, பிறகு பேச்சுப் பகுதியில் இருந்து கட்டுரைப் பகுதிக்கு நகர்த்தப்படுகிறது என்பது போல :) ). மேலும் அறுபட்ட கோப்பு இணைப்பு சரிசெய்யப்பட்டது.--சண்முகம்ப7 (பேச்சு) 01:05, 13 செப்டெம்பர் 2012 (UTC)
புதிய கட்டுரைகள்
தொகுஇங்கு உருவாக்கப்பட்டுள்ள கட்டுரைகளைக் கவனிக்கவும்--Anton (பேச்சு) 12:37, 15 செப்டெம்பர் 2012 (UTC)
- தெரியாமல் செய்திருக்கலாம், வேண்டுகோள் விடுத்துள்ளேன், பார்க்கலாம். மீண்டும் இதுபோல செய்தால் தடை செய்யலாம் (அந்த சாதி பெயரை கேள்விப் பட்டுள்ளதால் ஒரு கட்டுரையை மட்டும் நீக்கவில்லை, தகவல்கள் சரியானவையா எனத் தெரியவில்லை, சரிபார்க்க வேண்டும்)--சண்முகம்ப7 (பேச்சு) 12:58, 15 செப்டெம்பர் 2012 (UTC)
- நல்லது சண்முகம். ஆங்கில விக்கியிணைப்பைக் கொடுத்துள்ளேன். --Anton (பேச்சு) 13:10, 15 செப்டெம்பர் 2012 (UTC)