வண்ணநிலவன்

வண்ணநிலவன் (Vanna Nilavan, பிறப்பு: திசம்பர் 15, 1949) ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். தூத்துக்குடி மாவட்டம், தாதன்குளம் இவரது சொந்த ஊர்.திருநெல்வேலியில் பிறந்த இவரின் இயற்பெயர் உ. ராமச்சந்திரன் ஆகும். இவர் பாளையங்கோட்டை, திருநெல்வேலி , ஸ்ரீ வைகுண்டம் ஆகிய ஊர்களில் படித்தார1973-ல் சென்னைக்கு வேலை தேடி வந்தார். கண்ணதாசன்,கணையாழி,புதுவைக்குரல் போன்ற பத்திரிகைகளிலும், 1976-ல் துக்ளக் பத்திரிகையிலும் பின்னர் ‘சுபமங்களா’ பத்திரிகையிலும் ஆசிரியர் குழுவில் சிறிது காலம் வேலை பார்த்தார். தமிழில் குறிப்பிடத்தகுந்த திரைப்படமான ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.

வண்ணநிலவன்
பிறப்புஉ. ராமச்சந்திரன்
(1949-12-15)15 திசம்பர் 1949
தாதன்குளம், தூத்துக்குடி, தமிழ்நாடு இந்தியா
இருப்பிடம்கோடம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு
பணிஎழுத்தாளர்
பெற்றோர்உலகநாதபிள்ளை
இராமலட்சுமி அம்மாள்
வாழ்க்கைத்
துணை
சுப்புலட்சுமி (1977 - தற்போது வரை)
பிள்ளைகள்ஆனந்த் சங்கர்
சசி
உமா
விருதுகள்இலக்கியச் சிந்தனை
தமிழ் வளர்ச்சி கழக பரிசு
ராமகிருஷ்ண ஜெய்தயாள் விருது

குடும்பம்

தொகு

இவரின் தந்தை உலகநாதபிள்ளை, தாய் இராமலட்சுமி அம்மாள். இவரின் பெற்றோர் இவருக்கு வைத்த இயற்பெயர் ராமச்சந்திரன் ஆகும். இவர்களது சொந்த ஊர் திருநெல்வேலி. இவரின் பள்ளிப் பருவத்துக்குப் பிறகு பணி காரணமாகத் தாதன்குளம், திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், பாளையங்கோட்டை, பாண்டிச்சேரி, சென்னை உட்பட பல ஊர்களில் வண்ணநிலவன் வசித்துள்ளார். இவர் ஏப்ரல் 07, 1977 அன்று சுப்புலட்சுமி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆனந்த் சங்கர் என்ற மகனும் சசி, உமா என்ற இரு மகள்களும் உள்ளனர். தற்போது சென்னை, கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

படைப்புகள்

தொகு

இவர் எழுதிய புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள் போன்றவை நூல்களாக வெளி வந்திருக்கின்றன.

நாவல்கள்

தொகு
  1. நேசம் மறப்பதில்லை நெஞ்சம்.[1]
  2. கடல்புரத்தில்[2]
  3. கம்பா நதி ,
  4. ரெயினீஸ் ஐயர் தெரு
  5. உள்ளும் புறமும்
  6. காலம்
  7. எம். எல்

சிறுகதைத் தொகுதிகள்

தொகு
  1. எஸ்தர்[3]
  2. பாம்பும் பிடாரனும்[4]
  3. தர்மம்
  4. உள்ளும் புறமும்
  5. தாமிரவருணிக் கதைகள்
  6. வண்ணநிலவன் கதைகள்
  7. கரையும் உருவங்கள்

கவிதைத் தொகுதிகள்

தொகு
  1. மெய்ப்பொருள்
  2. காலம்

பிற படைப்புகள்

தொகு

விருதுகள்

தொகு
  1. இலக்கியச் சிந்தனை[5]
  2. தமிழ் வளர்ச்சி கழக பரிசு [சான்று தேவை]
  3. ராமகிருஷ்ண ஜெய்தயாள் விருது [சான்று தேவை]
  4. சாரல் விருது,
  5. எஸ். ஆர். வி. பள்ளி விருது,
  6. வாலி விருது,
  7. ஜெயகாந்தன் விருது,
  8. பெரியசாமி தூரன் விருது,
  9. கோவை கொடீசியா வாழ்நாள் சாதனையாளர் விருது,
  10. கண்ணதாசன் கழக விருது,
  11. விளக்கு விருது.

மேற்கோள்கள்

தொகு
  1. தில்லைநாயகம், வே (பதி), நூல்கள் அறிமுகவிழா 1976; மு.பதி 1976; கன்னிமாரா பொதுநூலக நூலகர், சென்னை. பக்கம் 36, 1975, கவிதா பதிப்பகம், சென்னை
  2. ப்ளாக், கிராபியென். "`` `கடல்புரத்தில்' பிலோமி பெரும் துயரத்தில் ஆழ்த்தினாள்..! - வண்ணநிலவன் #LetsRelieveStress". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-06-15.
  3. "வண்ண நிலவன் சிறுகதைகள்". தினமணி. https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&action=edit&section=4. பார்த்த நாள்: 15 June 2021. 
  4. "வண்ணநிலவன் சிறுகதைகள்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-06-15.
  5. ""மூன்றாம் உலகப்போர் நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது". Dinamalar. 2013-03-10. பார்க்கப்பட்ட நாள் 2021-06-15.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்ணநிலவன்&oldid=4063779" இலிருந்து மீள்விக்கப்பட்டது