விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)

 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
குறுக்கு வழிகள்:
WP:VPI
WP:VPIL
WP:VPD
புதிய கருத்துக்கள் எனும் ஆலமரத்தடிக் கிளையின் கீழ் புதிய கருத்துக்கள், ஆலோசனைகள் பற்றி உரையாடலாம்.
தயவுசெய்து, புதிதாகத் தொகுக்குமுன் பின்வருவனவற்றைக் கருத்திற் கொள்ளுங்கள்:
« பழைய உரையாடல்கள்


தொடர்ச்சியான ஐ.பி தடைதொகு

 • 112.134.74.54
 • 112.134.75.153
 • 112.134.72.29
 • 112.134.75.141
 • 112.134.5.58
 • 112.134.4.184
 • 112.134.72.91
 • 112.134.3.118
 • 112.134.1.151
 • 112.134.75.202

மேலே குறிப்பிட்ட ஐ.பிகள் விசமத் தொகுப்பினை தொடர்ந்தும் செய்து கொண்டிருப்பதால் மேற்குறித்த ஐ.பிகளின் தொடர்களுக்கு தொடர் தடை (Range blocks) விதிக்கலாம் என பரிந்துரைக்கிறேன். உங்கள் கருத்தினையும் தெரிவியுங்கள். @Neechalkaran மற்றும் Ravidreams: --AntanO (பேச்சு) 16:15, 7 ஏப்ரல் 2020 (UTC)

16 பிட் தடை செய்தால் (112.134.0.0 - 112.134.255.255) 65536 ஐ.பிகள் தடைக்குள்ளாகும். --AntanO (பேச்சு) 16:25, 7 ஏப்ரல் 2020 (UTC)
விசமத்தொகுப்பு எடுத்துக்காட்டு தர முடியுமா? விசமத் தொகுப்பு அனைத்தும் தமிழில் இருந்தால் இத்தனை ஆயிரம் IP க்களை முடக்குவது சரியாக இருக்குமா என்று எண்ண வேண்டும். @Shanmugamp7: - இரவி (பேச்சு) 19:46, 7 ஏப்ரல் 2020 (UTC)
எ.கா: 1, 2, 3 --AntanO (பேச்சு) 05:13, 8 ஏப்ரல் 2020 (UTC)
விசமத் தொகுப்பு நின்றபடில்லை. மேலே பட்டியலிடப்பட்டுள்ள ஐ.பிகளின் பங்களிப்பிலும் விசமத்தொகுப்புக்களைக் காணலாம். @Shanmugamp7 மற்றும் Ravidreams: --AntanO (பேச்சு) 19:34, 8 ஏப்ரல் 2020 (UTC)
மேலே பட்டியல் இட்டுள்ள IP மட்டும் (இதே போல் பிறகு வருவனவற்றை ஒவ்வொன்றாகவும்) தடை செய்தால் போதாதா? IP பற்றிய தொழில்நுட்ப விவரங்கள் தெரியாது என்பதால் இதனை என் ஐயமாக முன் வைக்கிறேன். 65536 IP என்பது 65536 potential வெவ்வேறு தனி நபர்களைக் குறிப்பது ஆகாதா? --இரவி (பேச்சு) 23:53, 11 ஏப்ரல் 2020 (UTC)
பார்கக mw:Help:Range_blocks, /16 ஐ தடை செய்தால் 65,536 ஐபி முகவரிகள் தடை செய்யப்படும். இதனை சிறிய வரம்பாக மாற்றி தடை செய்யலாம். 112.134.74.54/22 , 112.134.5.58/21 இந்த வரம்பைத் தடை செய்தால் 3000 ஐபி முகவரிகள் மட்டுமே தடை செய்யப்படும். இன்னும் சிறு வரம்புகளாகவும் மாற்றி தடை செய்யலாம். வரம்பைக் கணிக்க இது உதவும். இரவி பொதுவாக இப்படிப்பட்ட ஐபி முகவரிகள் மாறிக்கொண்டே (Dynamic) இருக்கும், ஒரு முகவரியை-தடை செய்தால் அவர்கள் Router ஐ மறுதொடக்கம் செய்தாலோ, தானாக ஒரிரு நாட்களிலோ அது மாறிவிடும்-சண்முகம்ப7 (பேச்சு) 03:37, 15 ஏப்ரல் 2020 (UTC)
விசமத் தொகுப்பு நிலை கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. ஐபி முகவரிகள் தொடர் தடையும் சிக்கல் உள்ளதுதான். நிர்வாகிகள் உடன் கவனம் செலுத்தினால் கட்டுப்படுத்தலாம். இந்த விசமத் தொகுப்பு தொடர்பில் கௌதம் சம்பத்துடன் மேலும் சில நிர்வாகிகள் கவனிப்பது சிறப்பாக இருக்கும். ஏன் பல நிர்வாகிகள் இணைப்பில் இருந்தும் விசமத் தொகுப்புகளை கண்டுகொள்வதில்லை என எனக்கு விளங்கவில்லை (?). @Shanmugamp7 மற்றும் Ravidreams: --AntanO (பேச்சு) 16:15, 19 ஏப்ரல் 2020 (UTC)
விசமத் தொகுப்புகள் கட்டுக்குள் வரவில்லை என்றால் User:shanmugamp7 கூறியபடி 3000 முகவரிகள் அல்லது எவ்வளவு குறைவாக முடியுமோ அவ்வளவு முகவரிகள் தடை செய்யலாம். இவற்றைக் கவனித்து நீக்குவதற்கு நன்றி. வேறு பல ஈடுபாடுகளால் விக்கிப்பணியில் கை கொடுக்க இயலாததற்கு வருந்துகிறேன். --இரவி (பேச்சு) 18:49, 19 ஏப்ரல் 2020 (UTC)
இந்த விசமத் தொகுப்புகளை செய்யும் நபர் இலங்கையை சேர்ந்தவர். இவர் உபயோகித்த அனைத்து Ip முகவரியும் Srilanka Telecomயை சேர்ந்த Broad band Ip முகவரி ஆகும். இந்த ip முகவரிகளை உபயோகப்படுத்திய இடம் கம்பகா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களை குறிக்கிறது. மேலே உள்ள தகவலில் இருந்து, தடை செய்ய முடியுமா என்று பாருங்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 19:41, 19 ஏப்ரல் 2020 (UTC)

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்தொகு

வணக்கம். மயிலாடுதுறை மாவட்டம் அண்மையில் உருவாக்கப்பட்ட பின்னர் Suresh myd என்ற பயனர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் பற்றிய கட்டுரைகளில் சிலவற்றில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் என்ற வகையில் கட்டுரையின் உள்ளடக்கத்திலும், தகவற்பெட்டியிலும் மாற்றங்கள் செய்து வருகிறார். அதனடிப்படையில் அந்தந்த பகுப்பில் சேரும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் என்ற புதிய பகுப்பினை உண்டாக்கி அந்தந்த இடத்தில் மாற்றி அமைத்து வருகிறேன் என்பதைத் தகவலுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:42, 6 ஏப்ரல் 2020 (UTC)

நீக்கிய பதிவை முழுமை செய்தும் தவறாகுமா?தொகு

பாடலாக்கமும் இசையும் (https://ta.wikipedia.org/s/8j3q) என்ற பதிவு நீக்கப்பட்டிருப்பினும் "இசைப்பாவிற்கான இலக்கண அமைவாக..." மீள இணைத்திருக்கிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.

காஜீ (KasiJeeva)

மறைக்கப்பட்ட ஐபி – பயன்படுத்த வேண்டிய கருவிகள்தொகு

 
ஐபி முகவரித் தகவல். இது ஒரு வரைபடம் மட்டுமே
 
மற்ற திருத்தக் கருவிகள். இது வரைவு மட்டுமே
 
தொடர்ந்து தவறாக பயன்படுத்துவோரைப் பற்றிய தகவல் சேமிப்பு. இது வரைவு மட்டுமே

அனைவருக்கும் வணக்கம்

இந்த செய்தி மிகவும் முக்கியமானது. தவறான நோக்கத்துடான திருத்தங்களையும், மற்ற பயனர்கள் மீதான சீண்டல்களையும் தவிர்ப்பதற்கான கருவிகளைப் பற்றியது.

2001ஆம் ஆண்டில் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டதை அறிவீர்கள். அன்றில் இருந்து இன்று வரை, இணையப் பயனர்களின் தனியுரிமைத் தேவைகள் மாறுபட்டு வருவதை காண்கிறோம். எடுத்துக்காட்டாக, பக்கங்களின் திருத்த வரலாற்றிலும் அண்மைய மாற்றங்கள் பக்கத்திலும் உள்நுழையாத பயனர்களின் ஐபி முகவரிகள் காட்டப்படுகின்றன. விக்கிமீடிய நிறுவனம் இந்த ஐபி முகவரிகளை மறைப்பதற்கான திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஐபி முகவரிகளை ஏன் மறைக்க வேண்டும்? ஐபி முகவரிகளை கொண்டு ஒருவரைப் பற்றிய தகவல்களைப் பெற்றுவிட முடியும். நம்முடைய பங்களிப்புகளில் சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதற்காக இம்முடிவை எடுத்துள்ளோம்.

பயனர்களின் மீதான சீண்டல்களையும், தவறான நோக்கத்துடனான திருத்தங்களையும் தவிர்ப்பதற்காக சில யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுவரைக்கும் இதற்காக நாம் எடுத்த நடவடிக்கைகளை இனிமேல் எளிதாக்கவே இவை.

இந்த யோசனைகளை பரிசீலிக்க உங்கள் உதவி தேவை. இவற்றை செயல்படுத்துவதால் எந்த வகை சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும் என நினைக்கிறீர்கள்? இவற்றால் செலவினங்கள் கூடுமா? இவற்றால் ஏற்படும் பயனகள் என்னென்ன? இவற்றில் எவை உங்களுக்கு பயன்தரக் கூடியவை, எவை பயன் தராதவை என நினைக்கிறீர்கள்?

ஐபி தகவல்தொகு

இவற்றை செயல்படுத்துவதால் எந்த வகை சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும் என நினைக்கிறீர்கள்? இவற்றால் செலவினங்கள் கூடுமா? இவற்றை எவ்வாறு மேம்படுத்தலாம்? இவற்றில் எவை உங்களுக்கு பயன்தரக் கூடியவை, எவை பயன் தராதவை என நினைக்கிறீர்கள்?

பயனர் தொகுத்த போது இருந்த இடத்தை பற்றிய தகவல் ஆங்கிலத்தில் மட்டும் இருந்தால், உங்கள் மொழிச் சமூகத்திற்கு பயன் தருமா? இடங்களைப் பற்றிய விவரங்களை மொழிபெயர்த்துத் தரும் கருவிகளை பயன்படுத்துகிறீர்களா? இருப்பின், அவற்றை இங்கே குறிப்பிட முடியுமா?

தொடர்புடைய திருத்தக் கருவிகள்தொகு

இவற்றை செயல்படுத்துவதால் எந்த வகை சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும் என நினைக்கிறீர்கள்? இவற்றால் செலவினங்கள் கூடுமா? இவற்றை எவ்வாறு மேம்படுத்தலாம்? இவற்றில் எவை உங்களுக்கு பயன்தரக் கூடியவை, எவை பயன் தராதவை என நினைக்கிறீர்கள்?

தொடர்ந்து தவறாக நடக்கும் பயனர்களைப் பற்றிய தகவல் சேமிப்புதொகு

இவற்றை செயல்படுத்துவதால் எந்த வகை சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும் என நினைக்கிறீர்கள்? இவற்றால் செலவினங்கள் கூடுமா? இவற்றை எவ்வாறு மேம்படுத்தலாம்? இவற்றில் எவை உங்களுக்கு பயன்தரக் கூடியவை, எவை பயன் தராதவை என நினைக்கிறீர்கள்?

நாங்கள் குறிப்பிடாத எவ்விதத்திலாவது ஐபி தகவலை பயன்படுத்துகிறீர்களா?தொகு

m:IP Editing: Privacy Enhancement and Abuse Mitigation, m:IP Editing: Privacy Enhancement and Abuse Mitigation/Improving tools – உங்கள் மொழிச் சமூகம் நாங்கள் குறிப்பிடாத எவ்விதத்திலாவது ஐபி தகவலை பயன்படுத்துகிறதா? எவ்வகையில்? கருவிகளை மேமடுத்துவதற்காகவும், புதிய கருவிகளுக்காகவும் பரிந்துரைகளை வழங்குவீர்களா? /Johan (WMF) (பேச்சு) 16:59, 15 ஏப்ரல் 2020 (UTC)


கோவிட் 19தொகு

மலையாள விக்கியில் கொரோனோ தொடர்பான பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


കോവിഡ്-19: ജാഗ്രതയാണ് ഏറ്റവും നല്ല പ്രതിരോധം


അനാവശ്യമായി കണ്ണിലും മൂക്കിലും വായിലും സ്പർശിക്കാതിരിക്കുക വ്യക്തികൾ തമ്മിൽ സുരക്ഷിത അകലം പാലിക്കുക, വൈറസ് ബാധ തടയാൻ മുഖാവരണം ഉപയോഗിക്കുക കൈകൾ സോപ്പ് ഉപയോഗിച്ച് വൃത്തിയായി കഴുകി സൂക്ഷിക്കുക കൈകൾ അണുവിമുക്തമാക്കാൻ ഹാൻഡ് സാനിറ്റൈസർ ഉപയോഗിക്കുക സാമൂഹികമാദ്ധ്യമങ്ങളിലെ സന്ദേശങ്ങൾ വിശ്വസിക്കുന്നതിന് മുമ്പ് അവയുടെ സ്രോതസ്സ് ഉറപ്പുവരുത്തുക.

இதன் தமிழாக்கம்,


கோவிட் -19 : எச்சரிக்கையே சிறந்த பாதுகாப்பு


கண்கள், மூக்கு மற்றும் வாயை தேவையில்லாமல் தொடுவதைத் தவிர்க்கவும். தனிநபர்களிடையே பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கவும், வைரஸ் பரவாமல் தடுக்க முகமூடியைப் பயன்படுத்தவும். சோப்பு மற்றும் தண்ணீரில் மூலம் கைகளை சுத்தமாக வைத்திருங்கள். உங்கள் கைகளை கிருமி நீக்கம் செய்ய கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்தவும் சமூக ஊடகங்களில் உள்ள செய்திகளை நீங்கள் நம்புவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


இதுபோலவே தமிழ் விக்கிப்பீடியாவிலும் பதாகையை அமைக்கலாம்.-இரா. பாலாபேச்சு 12:34, 27 ஏப்ரல் 2020 (UTC)

காளீஸ்வரர் காளையார்கோயில்தொகு

வணக்கம், காளீஸ்வரர் காளையார்கோயில் மற்றும் காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் என்ற இரு தலைப்புகளில் உள்ளவை ஒரே கோயிலைப் பற்றியதாகும். அடையாளம் தெரியாத பயனர் 2401:4900:4833:90d6::122b:e3ec இரண்டிலும் மாறி மாறி சில மாற்றங்களைச் செய்துள்ளார். சிலவற்றை மீளமைக்க முடிந்தது. சிலவற்றை மீளமைக்க முடியவில்லை. அவை உரிய மேற்கோளுடன் காணப்படவில்லை. உரிய மேற்கோள்களின்றி சில அடையாளம் தெரியாத பயனர் அவ்வப்போது இவ்வாறு பல பதிவுகளில் செய்து வருகின்றனர். (அவ்வப்போது திரு. பயனர்:Gowtham Sampath உள்ளிட்ட பலர் அதனை மீளமைத்து வருகின்றனர். அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.) இவ்விரு பதிவுகளில் இந்த அடையாளம் தெரியாத பயனர் செய்த மாற்றத்தை சரிசெய்ய ஆவன செய்ய வேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:41, 30 சூன் 2020 (UTC)

@பா.ஜம்புலிங்கம்:  Y ஆயிற்று ஐயா-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:57, 30 சூன் 2020 (UTC)

புதுப்பயனர்களைத் தொகுக்கத்தூண்டும் திட்டம்தொகு

அண்மையில் வியட்டுநாமிய விக்கியர் சிண்டி (இவர் விக்கிமீடியா வளர்ச்சித்திட்டத உறுப்பினர்) புதுப்பயனர் தொகுக்கத்தூண்டும் பணிகளைப் பற்றிக்குறிப்பிட்டார். நான் படித்துப் பார்த்தவரை இவ்வசதியினால் சிறிது பயன் கிடைக்கும்போலிருக்கிறது. இதை வெள்ளோட்டம் விட்ட விக்கிப்பீடியாக்களில் 1.7% கூடுதல் தொகுப்புகள் இதன்வழி வந்துள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பான எனது ஐயங்களை திட்டத்தின் பேச்சுப்பக்கத்தில் கேட்டு வருகிறேன். இதைத் தமிழ் விக்கியில் அறிமுகப்படுத்துவதைப் பற்றி அனைவரது கருத்துக்களையும் அறிய விரும்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 14:59, 6 ஆகத்து 2020 (UTC)

விக்கிப்பீடியா பயிற்சிதொகு

அனைவருக்கும் வணக்கம், நான் கடந்த ஒரு வாரமாக கோவை ச்றீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விக்கிப்பீடியா குறித்த பயிற்சியில் பங்கேற்ற புதிய பயனர். தினம் ஒரு பொருண்மையில் பயிற்சியளிக்கப்பட்டவிதம் சிறப்பாக அமைந்தது. விக்கிப்பீடிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடியதில் மிக்க மகிழ்ச்சி. பயிற்சியாளர்கள் பயில்பவர்களின் மட்டத்திற்கு இறங்கிவந்து பயிற்சியளித்தது சிறப்பு. குறிப்பாக தகவலுழவன் அறிமுகத்தினை குறிப்பிட விரும்புகிறேன். எங்களுடைய கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் தந்து விக்கீப்பீடியா பங்களிப்பில் எங்களைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றவிதம் பாராட்டுக்குரியது. எமது கல்லூரியின் (மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி) பெயரானது தவறாக பதிவாகி இருந்ததை நீக்க உதவியற்கு நன்றி. நன்றியுடன் --சத்திரத்தான் (பேச்சு) 01:13, 25 ஆகத்து 2020 (UTC)

மொழிபெயர்ப்புக் குறித்த ஐயங்கள்தொகு

 1. ஒரு கட்டுரையை மொழிபெயர்க்கும் பொழுது அங்கேயே வெளியிடுவதனால் என்ன பயன்?--முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ) (பேச்சு) 01:35, 28 ஆகத்து 2020 (UTC)
 2. ஒரு கட்டுரையை மொழிபெயர்க்கும் இடத்தில் வெளியிடுவதற்கும் அக்கட்டுரையை புதிய கட்டுரையாக உருவாக்குவதற்கும் என்ன வேறுபாடு?--முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ) (பேச்சு) 01:35, 28 ஆகத்து 2020 (UTC)
சிறப்பு:Content Translation இப்பக்கத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கும் தனியாக வெளியிடுவதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. இரண்டும் அடிப்படையில் இரண்டு வகையான யுக்தி. முதல் வகையானது எந்திர மொழி பெயர்ப்பின் துணை கொண்டு உருவாவது அடுத்த வகையானது அவ்வாறு இல்லாமல் தனியாக நாம் மொழிபெயர்ப்பது/புதிதாக எழுதி சேர்ப்பது. பகுப்பு, படங்கள், உள்ளிணைப்பு, விக்கித்தரவு போன்றவை முதல் வகையில் எளிதாக செய்ய முடியும் கூடுதலாக முழுமை அடையாத மொழிபெயர்ப்பை draftஆக சேமித்துக் கொள்ளமுடியும். எந்திர மொழிபெயர்ப்பைக் கொஞ்சம் பயன்படுத்தலாம் என எண்ணுவோருக்கும், விரைவாக ஒரு கட்டுரையை முடிக்கவேண்டும் என நினைபோருக்கும் முதல் வகை பயன்படும். கூடுதல் தகவல், கூடுதல் மேற்கோள், புதிய கட்டுரை அமைப்பு என மேம்படுத்த நினைப்போருக்கு இரண்டாம் வகை பயன்படும். -நீச்சல்காரன் (பேச்சு) 09:25, 28 ஆகத்து 2020 (UTC)
நன்றி நீச்சல்காரன்.--முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ) (பேச்சு) 00:16, 29 ஆகத்து 2020 (UTC)

கட்டுரை தொகுப்பாக்க ஐயங்கள்தொகு

 1. வழிமாற்றுதெலுங்கு இலக்கணம் இந்தக் கட்டுரையில் தொகுக்கும் பொழுது, சில வார்ப்புருக்கள் அவ்வாறே இடம் பெற்றுவிடுகின்றன. அவ்வாறு ஏன் இடம்பெறுகின்றன? சான்று - (தெலுங்கில் மூன்று பால்கள் உள்ளன. வார்ப்புரு:Gapஎ-டு. வார்ப்புரு:Gap#ஆண்பால் (புருஷ லிங்கமு), வார்ப்புரு:Gap#பெண்பால் (ஸிரீ லிங்கமு), வார்ப்புரு:Gap#அலிப்பால் (நபும்ஸக லிங்கமு).)

பயனர் பெயரை மாற்றுவது எப்படி?தொகு

 1. எனது பயனர் பெயர் தமிழில் உள்ளது. அதனை ஆங்கிலத்தில் மாற்றுவதற்கான வழிமுறை உள்ளதா?--முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ) (பேச்சு) 01:07, 29 ஆகத்து 2020 (UTC)
@முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ): en:Wikipedia:Changing username ஐப் பாருங்கள். Special:GlobalRenameRequest--Kanags \உரையாடுக 01:33, 29 ஆகத்து 2020 (UTC)
நன்றி--முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ) (பேச்சு) 13:00, 30 ஆகத்து 2020 (UTC)

மேல் விக்கியில் பயனர் பக்கத்தை உருவாக்குவது எப்படி?தொகு

 1. மேல் விக்கியில் பயனர் பக்கத்தை உருவாக்கும் வழிமுறையையும் அதனைப் பிற திட்டங்களில் இணைக்கும் வழிமுறையையும் கூறுங்கள்--முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ) (பேச்சு) 13:10, 30 ஆகத்து 2020 (UTC).

இவ்வாறான உதவிகளுக்கு விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் ஏற்புடையது. இங்கு புதிய கருத்துக்களை பதிவிடுவது ஏற்புடையது. நன்றி. --AntanO (பேச்சு) 02:25, 7 செப்டம்பர் 2020 (UTC)

தொகுத்தல் போர்தொகு

பிக் பாஸ் தமிழ் 4 கட்டுரையில் தேவையற்ற தொகுத்தல்கள் நடைபெறுகிறது. நிருவாகிகள் தற்காலிகமாக இக்கட்டுரையைப் பூட்டுமாறு கோருகிறேன்.-இரா. பாலாபேச்சு 14:00, 17 சனவரி 2021 (UTC)

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 16:03, 17 சனவரி 2021 (UTC)

பெருநகர் பகுதிதொகு

பெருநகர் பகுதி (metropolitan / metro) இங்கு அப்படியே மெட்ரோ எழுதப்படுகிறது. எ.கா: சென்னை மெட்ரோ. இதற்கு சரியான வழிகாட்டல் தேவை. காண்க: பேச்சு:சென்னை மெட்ரோ --AntanO (பேச்சு) 02:28, 15 பெப்ரவரி 2021 (UTC)

@AntanO: வணக்கம் அண்ணா. பொதுவாக (metropolitan / metro) என்றால் தமிழில் பெருநகர் பகுதியை குறிக்கும், (உ+தா:சென்னை பெருநகரம்) இது சென்னையின் மதிப்பீட்டை குறிக்கிறது.

ஆனால் metro railway station என்று வரும்போது பெருநகர் தொடருந்து நிலையம் அல்லது பெருநகர் பகுதி தொடருந்து நிலையம் எழுதலாமா என்றால் அது சந்தேகத்துக்குரியது தான். தமிழகத்தில் chennai metro என்பதை, அப்படியே தமிழில் சென்னை மெட்ரோ என்றே அனைத்து செய்திதாள்களிலும், இணையதளத்திலும் மற்றும் சென்னை மெட்ரோவின் அதிகாரபூர்வ இணையதளத்திலும் எழுதுகின்றனர், அப்படி இருக்கும் போது metro என்பதை தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. metro rail என்பதற்கு விரைவுப்போக்குவரத்து என்று மற்றொரு பெயரும் உள்ளது. -- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 03:49, 16 பெப்ரவரி 2021 (UTC)

பார்வை மாற்றுத்திறன் பயனர்களுக்கான உதவி ஆவணம்தொகு

15 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முறையாக விக்கிப்பீடியா வருபவர்களுக்கு எழுத்துரு முதல் பல்வேறு அடிப்படைத் தகவல்களைக் கொண்டதாக நமது வழிகாட்டல் பக்கமிருந்தது. அது போல இன்றைக்குத் தேவையான தகவலைத் தொகுத்து, வளரும் தொழில்நுட்பத்திற்கேற்பவும், பரவலான பயனர்களை அடையும் பொருட்டும் விக்கிப்பீடிய இடைமுக அமைப்பையும், உதவிப் பக்கங்களையும் மேம்படுத்தும் தேவையுள்ளது. பல ஆண்டுகளாகவே கைப்பேசி இடைமுகத்தைப் பயன்படுத்தியும், அது சார்ந்த பயிற்சிகளையும் கொடுத்தும் வருகிறோம். ஆனால் அவைசார்ந்த உதவிப் பக்கங்கள் இல்லை. அவற்றை உருவாக்க வேண்டும், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் பயனர் கையேடும், அவர்களுக்கும் ஒத்திசைவான பக்கமாக https://www.w3.org/TR/WCAG20/ இந்தப் பரிந்துரைப்படி இயன்றவற்றை மேம்படுத்த வேண்டும். விக்கியைப் பயன்படுத்தும் போது பொதுவாகக் கைப்பேசியில் அணுகக்கூடிய சிக்கல்கள் என்னென்ன? அவற்றிற்கு மாற்றாக நீங்கள் கையாளும் முறை என்ன? பார்வை மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? அவர்களுக்கான சிறந்த திரைபடிப்பான் எவை? வேறு ஆலோசனைகளையும் வழங்கலாம். இவற்றைக் கொண்டு உதவிப் பக்கங்களை உருவாக்குவோம். -நீச்சல்காரன் (பேச்சு) 18:59, 24 மே 2021 (UTC)

 • தங்களது முயற்சிக்குப் பாராட்டு--Neyakkoo (பேச்சு) 10:11, 25 மே 2021 (UTC)
 • தமிழ் விக்சனரியில் பயனர் பேச்சு:Td.dinakar என்பவருக்கு 2013 ஆம் ஆண்டு முதல் விக்சனரி குறித்த பயிற்சி அளித்துள்ளேன். அவர் இந்தியாவின் முதல் (இந்த உடற்திறனுள்ள ) IRPS அதிகாரி. சென்னையில் தென்னக இரயில்வேயில் உள்ளார். அவர் வடபழனி வீட்டுக்குச் சென்றுள்ளேன். 2016 ஆம் ஆண்டு உறைவிட விக்கிப்பீடியராக இருந்த போது, நானும் சென்னை என்பதால், அவரிடம் அடிக்கடி உரையாடுவது உண்டு. எனது வாழிடம் இப்பொழுது சேலம். கடந்த 5வருடங்களாக தொடர்பு இல்லை. தொலைபேசி எண் மாற்றிவிட்டார். முதல் இந்திய விக்கிமாநாடு நடந்த போது, அறிமுகமான இந்தி பங்களிப்பாளர் ஒருவரை சந்தித்தேன். சேலம் KPN பேருந்து அமைப்பில் பயணச்சீட்டு தரும் ஒருவரும் இத்தகைய மாற்றுத்திறனாளி. இப்பொழுது அவர் அங்கு இல்லை. இத்தகையோரை உருவாக்கும் அமைப்பு உள்ளது. ஆய்ந்தால் தகவல்கள் கிடைக்கும். தினகர் மராத்தியர் என்றாலும், தமிழில் இவருக்கென தனி விசைப்பலகையை வடிவமைத்துள்ளார். பைத்தான் வழி இவரைப் போன்றோர் வடிவமைத்துள்ள மென்பொருளைப்(NVDA) பயன்படுத்தியிருந்தார். மாற்றம் வேண்டுமென்று கேட்டிருந்தார். அப்பொழுது பைத்தான் குறித்து ஒன்றும் தெரியாது. முன்னெடுப்பு எடுத்தமைக்கு நன்றி. அழையுங்கள் உடன் இணைகிறேன். உரிய தொடர்பு எண்களை பெற்று தங்களுக்குத் தெரிவிக்கிறேன்.


உழவன் (உரை) 02:12, 28 மே 2021 (UTC)

இடக்கரடக்கல்தொகு

விக்கிப்பீடியாவில் இடக்கரடக்கல் எதுவும் கிடையாதே? இடக்கரடக்கலால் தமிழிலுள்ள பல சொற்களைப் புறந்தள்ள வேண்டி ஏற்படுகிறதல்லவா.--பாஹிம் (பேச்சு) 05:22, 12 சூலை 2021 (UTC)


ஆசிய மாதம் போட்டிதொகு

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் ஆசிய மாதம் போட்டி நடத்தப்படும். இந்த முறை ஏன் அது நடத்தப்படவில்லை? --TNSE Mahalingam VNR (பேச்சு) 15:56, 23 நவம்பர் 2021 (UTC)