விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (கொள்கை)

 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
தமிழ் விக்கிப்பீடியாவில் கொள்கைகள், வழிகாட்டல்கள் தொடர்பான உரையாடல்கள் இங்கு நடைபெறும். மேலும் பார்க்க: பகுப்பு:விக்கிப்பீடியா கொள்கை முன்மொழிவுகள்
« பழைய உரையாடல்கள்


மொழிபெயர்ப்பாளர் - பயனர் அணுக்கம்

தொகு

வணக்கம், நமது கோரிக்கையின் படி, மொழிபெயர்ப்பாளர் எனும் அணுக்கம் பெற்ற பின்னரே உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவியினைப் பயன்படுத்தும் வசதி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்தகட்டமாக பயனர் அணுக்கத்திற்கான கொள்கைகளை உருவாக்குவது நீண்டகால நோக்கத்திற்கு நல்லதாகும். மேற்கண்ட உரையாடலின் அடிப்படையில் சில கருத்துக்களை முன்வைக்கிறேன்.

கட்டுரை எண்ணிக்கை

தொகு

அனைத்துப் பயனர்களுக்கும் மூன்று கட்டுரைகளை குறைந்தபட்ச அளவாக வைப்பது. (புதிய பயனர்கள் எனில் மூன்று வரைவுக் கட்டுரைகள், ஏற்கனவே கருவியினைப் பயன்படுத்தியவர்கள் எனில் அவர்கள் அண்மையில் உருவாக்கிய 3 கட்டுரைகள்)

ஆதரவு
தொகு
எதிர்ப்பு
தொகு
நடுநிலை
தொகு
பரிந்துரை
தொகு

அணுக்கம் வழங்கல்

தொகு

நிருவாகிகள் மற்ற பயனர்களின் கட்டுரையின் தரத்தினைச் சரிபார்த்த பிறகு அணுக்கம் வழங்குவர். ஒரு நிருவாகியின் கட்டுரையினை மற்ற நிருவாகி சரிபார்த்து வழங்குவர்.

அணுக்கம் மீளப் பெறுதல்

தொகு

அணுக்கம் பெறப்பட்ட பிறகு பயனர்கள் உருவாக்கும் கட்டுரையானது விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு (விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை, விக்கிப்பீடியா:அடிப்படைக் கட்டுரை அமைப்பு ...) முரணாக இருக்கும் சமயத்தில், தொடர்ந்து இரு எச்சரிக்கைக்குப் பிறகும் அதே நிலை தொடருமானால் தகுந்த உரையாடலுக்குப் பிறகு அணுக்கம் மீளப் பெறப்படும்.

-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 18:27, 7 ஏப்ரல் 2025 (UTC) Reply

பொதுவாகவே, எந்த ஒரு கொள்கை எனினும் எடுத்த எடுப்பில் ஆதரவு, எதிர்ப்பு என்று வாக்கெடுப்பு நிலைக்குச் செல்லும் முன், இந்தக் கொள்கையை எப்படிச் செயற்படுத்தலாம் என்று அனைவர் கருத்தையும் கேட்டு, அவற்றை உள்வாங்கிக் கொள்கை உருவாக்கி வாக்கெடுப்பினை நோக்கி நகர்வது நல்லது. - இரவி (பேச்சு) 05:16, 8 ஏப்ரல் 2025 (UTC)Reply
புரிந்துகொண்டேன். நன்றி ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 08:08, 8 ஏப்ரல் 2025 (UTC)Reply
கொள்கை உருவாக்கத்திற்கு சற்று காலம் எடுக்கும் என்பதால், இரு வார காலத்திற்கு வழக்கமாக உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவினை பயன்படுத்தி கட்டுரை உருவாக்கபவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர் அணுக்கம் தற்காலிகமாக வழங்கப்படும்.( மாற்றுக் கருத்து இருந்தால் அறியத் தாருங்கள்) --ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 17:05, 8 ஏப்ரல் 2025 (UTC)Reply
மாற்றுக் கருத்து இல்லை. அணுக்கம் வழங்கும்போது இரண்டு வார காலம் அணுக்கம் தரும் தெரிவு இல்லை. ஆகவே, ஒரு மாதமாகவே தரலாம். ஒன்றும் அவசரம் இல்லை. பொறுமையாகவே இந்தக் கொள்கையை உரையாடி முடிவெடுப்போம். - இரவி (பேச்சு) 17:16, 8 ஏப்ரல் 2025 (UTC)Reply
நல்லது. -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 17:28, 8 ஏப்ரல் 2025 (UTC)Reply
அண்மைய காலங்களில் உள்ளடக்க மொழிபெயர்ப்பு கருவினை பயன்படுத்தி கட்டுரையினை உருவாக்கியவர்களுக்கு இரு வார காலம் அணுக்கம் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது. கொள்கை முடிவு தாமதமாகும் பட்சத்தில் இதனை நீட்டிக்கலாம். -- நன்றி ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 17:42, 8 ஏப்ரல் 2025 (UTC)Reply
கருத்து
தொகு

கொள்கை உருவாக்கத்தின் அடுத்தகட்டத்திற்காக பயனர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

  • இந்த அணுக்கத்திற்கு விண்ணப்பிப்பதற்காக குறைந்த பட்ச கட்டுரை உருவாக்க எண்ணிக்கையினை வரையறுக்க வேண்டும். எந்தப் பயனராக இருந்தாலும் குறைந்தபட்சமாக 3 கட்டுரைகளை உருவாக்க வேண்டும். ((புதிய பயனர்கள் எனில் மூன்று வரைவுக் கட்டுரைகள், ஏற்கனவே கருவியினைப் பயன்படுத்தியவர்கள் எனில் அவர்கள் அண்மையில் உருவாக்கிய 3 கட்டுரைகள்)
  • உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவியில் இந்த அணுக்கம் பெற விண்ணப்பிப்பதற்கான இணைப்பினைத் தர வேண்டும்.
  • விண்ணப்பித்த ஒரு வார காலத்திற்குள் அவர்களுக்கு அணுக்கம் தருதல் (அவர்களது தொகுப்பில் திருத்தம் தேவை எனில் 1 வார காலத்திற்குள் பதில் அளித்தல்)
  • நிருவாகிகள் மற்ற பயனர்களின் கட்டுரையின் தரத்தினைச் சரிபார்த்த பிறகு அணுக்கம் வழங்குவர். ஒரு நிருவாகியின் கட்டுரையினை மற்ற நிருவாகி சரிபார்த்து வழங்குவர்.
  • அணுக்கம் பெறப்பட்ட பிறகு பயனர்கள் உருவாக்கும் கட்டுரையானது விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு (விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை, விக்கிப்பீடியா:அடிப்படைக் கட்டுரை அமைப்பு ...) முரணாக இருக்கும் சமயத்தில், தொடர்ந்து இரு எச்சரிக்கைக்குப் பிறகும் அதே நிலை தொடருமானால் தகுந்த உரையாடலுக்குப் பிறகு அணுக்கம் மீளப் பெறப்படும்.

ஆகியன எனது பரிந்துரையாகும். நன்றி --ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 17:21, 9 ஏப்ரல் 2025 (UTC)Reply

அணுக்கம் பெறுவதற்கு நீங்கள் சுட்டியுள்ள வழிமுறைகள் போதுமானது. மூன்று கட்டுரைகள் என்பதுடன், அவை ஓரளவாவது முழுநீளக் கட்டுரையாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. குறைந்தது மூன்று துணைத்தலைப்புகளும் 15KB அளவும் இருந்தால் உதவும். ஏற்கனவே கருவி பயன்படுத்துகிறவர்கள் விண்ணப்பிக்கும்போது, அவர்கள் சுட்டிக் காட்டும் மூன்று கட்டுரைகள் தவிர, அவர்களுடைய பழைய கட்டுரைகள் எதிலிருந்தும் குறைபாடுகள் இருந்தால் பயனர்கள் தெரிவிக்கலாம். இக்கருவி மூலம் உருவாக்கப்படும் கட்டுரைகள் ஏற்கனவே ஆங்கிலவிக்கிப்பீடியாவில் உள்ளவை தாம் என்பதால் நீங்கள் சுட்டியுள்ள அடிப்படை கட்டுரை அமைப்பு, குறிப்பிடத்தக்கமை, கொள்கை முரண் போன்ற சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை. மொழிபெயர்ப்பின் தரம் மட்டுமே கண்காணிக்கப்பட வேண்டும். நாம் எல்லோருமே ஆங்கிலம் <-> தமிழ் தொழில்முறையாக மொழிபெயர்க்கக் கூடியவர்கள் அல்ல. அவரவர் ஆர்வத்திற்கும் திறனுக்கும் உட்பட்டு, முழுமையான ஈடுபாட்டுடன் மொழிபெயர்க்கிறார்களா என்பதை மட்டும் பார்க்க வேண்டும். அவர்கள் கவனத்தை மீறி ஒரு பிழை நேரும்போது, அதை மற்றவர்கள் சுட்டிக் காட்டினால் மாற்றுக் கருத்துகளை ஏற்றுக் கொண்டு, உடனே கட்டுரைகளைச் சீராக்குகிறார்களா, அதே போன்ற பிழைகள் மீண்டும் நேராமல் செயற்படுகிறார்களா என்பதையும் கவனிக்கலாம். ஆகவே, கட்டுரையைத் திருத்துமாறு சுட்டிக் காட்டுவதையே எச்சரிக்கையாக எண்ணத் தேவையில்லை. பல முறை பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டியும் திருத்திக் கொள்ளாமல், தொடர்ந்து புதிய கட்டுரைகள் உருவாக்குவதில் மட்டும் குறியாக இருந்தால் மட்டுமே, எச்சரிக்கை இடுவதற்கான முறையான வார்ப்புரு அறிவிப்பைப் பயன்படுத்தலாம். இரு முறை எச்சரிக்கை என்பதற்குப் பதில் மூன்று முறை எச்சரிக்கை தரலாம். நான்காவது முறையும் பிழை நேர்ந்தால், அணுக்கத்தை நீக்கலாம். ஒரு முறை எச்சரிக்கை பெறும்போது, புதிய கட்டுரைகளை உருவாக்குவதை நிறுத்தி விட்டு, சுட்டிக்காட்டப்பட்ட கட்டுரைகளில் உள்ள பிரச்சினையைக் களைய முனைய வேண்டும். இக்கருவி பயன்படுத்தி எழுதப்படும் கட்டுரைகளில் அடிக்கடி காணப்படும் பிழைகள், சிக்கல்கள் பட்டியலை கொள்கை வழிகாட்டல் பக்கத்தில் விரிவாக்க வேண்டும். அணுக்கத்தைப் பெற விண்ணப்பிக்கும்போது, இச்சிக்கல்களைப் படித்துப் புரிந்து கொள்வதாகவும் அவை நேராமல் பார்த்துக் கொள்வதாகவும் உறுதி மொழி அளிக்க வேண்டும். நன்றி. --இரவி (பேச்சு) 11:51, 10 ஏப்ரல் 2025 (UTC)Reply
// முழுநீளக் கட்டுரையாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.//இதனை எவ்வாறு வரையறுப்பது? இதனை இரு அல்லது மூன்று உப தலைப்புகள் என வைத்துக் கொள்ளலாமா?
// குறைந்தது மூன்று துணைத்தலைப்புகளும் 15KB அளவும்
இருந்தால் உதவும்.// ஒரு கட்டுரையினை வெளியிட்ட பிறகு தானே அளவு தெரியும். இதனை முன்னரே எப்படி தெரிந்து கொள்வது? -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 12:45, 10 ஏப்ரல் 2025 (UTC)Reply
விண்ணப்பிக்கும்போது தரும் எடுத்துக்காட்டுக்கான கட்டுரைகள் ஓரளவாவது பெரிதாக இருந்தால் தான் மொழிபெயர்ப்புத் திறன்களை மதிப்பிட முடியும். அவை குறுங்கட்டுரைகளாக இருந்தால் உதவா. அதனால் தான் மூன்று துணைத்தலைப்புகள் அல்லது 15 KB அளவு என்று கூறினேன். இந்தக் கருவி பயன்படுத்தி Draftல் வெளியிட்டாலும் பக்கத்தின் அளவு தெரியும் தானே? அல்லது, கருவி பயன்படுத்தாமலேயே மொழிபெயர்த்துக் கட்டுரைவெளியில் பதிப்பித்துக் காட்ட இயலும் தானே? இப்போதும் கருவி பயன்படுத்தாமல் பலர் முன்பு இருந்ததைப் போல தானே கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்? - இரவி (பேச்சு) 14:25, 11 ஏப்ரல் 2025 (UTC)Reply
//இந்தக் கருவி பயன்படுத்தி Draftல் வெளியிட்டாலும் பக்கத்தின் அளவு தெரியும் தானே? அல்லது, கருவி பயன்படுத்தாமலேயே மொழிபெயர்த்துக் கட்டுரைவெளியில் பதிப்பித்துக் காட்ட இயலும் தானே? // ஆம். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:34, 11 ஏப்ரல் 2025 (UTC)Reply

வாக்கெடுப்பு

தொகு

கட்டுரை எண்ணிக்கை

தொகு

அனைத்துப் பயனர்களுக்கும் மூன்று கட்டுரைகளை (மூன்று உப தலைப்புகளுடன்) குறைந்தபட்ச அளவாக வைப்பது.

  • புதிய பயனர்கள் எனில் மூன்று வரைவுக் கட்டுரைகளைக் குறிப்பிட்டு அணுக்கம் கோரலாம்.
  • ஏற்கனவே கருவியினைப் பயன்படுத்தியவர்கள் எனில் அவர்கள் உருவாக்கிய மூன்று கட்டுரைகளை முன் வைத்து அணுக்கம் கோரலாம். ஆனால் அவர்கள் இதற்கு முன்னர் உருவாக்கிய கட்டுரைகளின் தரமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
ஆதரவு
தொகு
  1.   விருப்பம் --ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:23, 17 ஏப்ரல் 2025 (UTC)Reply
  2.   விருப்பம் --இரவி (பேச்சு) 16:54, 17 ஏப்ரல் 2025 (UTC)Reply
  3.   விருப்பம்--கு. அருளரசன் (பேச்சு) 00:15, 18 ஏப்ரல் 2025 (UTC)Reply
  4.   விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 01:01, 18 ஏப்ரல் 2025 (UTC)Reply
  5.   விருப்பம் --மகாலிங்கம் இரெத்தினவேலு 06:52, 18 ஏப்ரல் 2025 (UTC)Reply
  6.   விருப்பம் --௮ன்புமுனுசாமி 08:40, 18 ஏப்ரல் 2025 (UTC)Reply
  7.   விருப்பம் --பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 06:51, 19 ஏப்ரல் 2025 (UTC)Reply
  8.   விருப்பம் --வசந்தலட்சுமி--வசந்தலட்சுமி (பேச்சு) 03:49, 20 ஏப்ரல் 2025 (UTC)Reply
  9.   விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:32, 20 ஏப்ரல் 2025 (UTC)Reply
  10.   ஆதரவு --சா. அருணாசலம் (உரையாடல்) 05:13, 20 ஏப்ரல் 2025 (UTC)Reply
  11.   விருப்பம் -நாஞ்சில் பாலா உரையாட 14:31, 22 ஏப்ரல் 2025 (UTC)Reply
  12.   விருப்பம்--உழவன் (உரை) 01:06, 23 ஏப்ரல் 2025 (UTC)Reply
எதிர்ப்பு
தொகு

  எதிர்ப்பு. பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருபவர்களும் அணுக்கம் கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை எதிர்க்கின்றேன். அணுக்கம் அவர்களின் பங்களிப்பிற்காக வழங்கியிருக்கவேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடு. --Chathirathan (பேச்சு) 02:16, 24 ஏப்ரல் 2025 (UTC)Reply

பல முறை சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களும் அடுத்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வது போல இதுவும் ஒரு நடைமுறை (formality) தான். புதியவர், நீண்ட நாள் பயனர், பயனர், நிருவாகி போன்ற எந்தப் பாகுபாடுகளும் இன்றி அனைவருக்கும் ஒரே நடைமுறையாகச் சமத்துவம் கருதி இம்முறை பரிந்துரைக்கப்பட்டது. இக்கருவி பயன்படுத்தி எழுதப்பட்ட கட்டுரைகளின் தரம் குறித்து யாருக்காவது கேள்விகள், குறைகள் இருந்தால், அவற்றைச் சுட்டிக்காட்டி மேம்படுத்திக் கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பு. நீண்ட நாள் பயனர்கள் அனைவருக்கும் தானே அணுக்கம் வழங்குவது என்றால், ஒரு சிலருக்கு மட்டும் பாகுபாடு காட்டுவது போன்ற ஒரு தோற்றம் வரலாம். இந்தப் பின்னணியை எண்ணிப் பார்த்து வாக்கிட வேண்டுகிறேன். நன்றி. - இரவி (பேச்சு) 12:04, 24 ஏப்ரல் 2025 (UTC)Reply
தகவலுக்கு நன்றி. நீங்கள் சுட்டும் உதாரணம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒன்று. பதவிக் காலம் கால வரைமுறைக்கு உட்பட்டது. ஆனால் தற்பொழுது நான் கேட்பது, இந்த வசதியினைப் பயன்படுத்தி வருபவர்களுக்கான ஓர் அங்கீகாரம். தானாகவே வழங்கப்பட்டிருக்க வேண்டும். இங்கு நிர்வாகி, பயனர் என்ற வேறுபாடு குறித்து அல்ல. கருவியின் பயன்பாடு குறித்தும் அதனைப் பயன்படுத்தியவர் குறித்தது ஆகும். இங்கு வேறுபாடு என்ற கேள்விக்கு வாய்ப்பில்லை. எனவே எனது கருத்தில் மாற்றமில்லை. பெரும்பான்மை அடிப்படையில் எந்த முடிவு வந்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என்னுடைய கருத்திலும் முடிவிலும் மாற்றமில்லை. --Chathirathan (பேச்சு) 12:48, 24 ஏப்ரல் 2025 (UTC)Reply
எல்லா நடைமுறைகளுமே என்றேனும் ஒரு நாள் உருவாக்கப்பட வேண்டியவே. ஒரு நிருவாகியின் அணுக்கம் கூட அவர் தொடர்ந்து இரு ஆண்டுகள் தொகுக்காமல் இருந்தால் தானாகக் காலாவதியாகும் வகையில் உலகளாவிய விக்கிமீடியா கொள்கை உள்ளது. அத்தகைய ஒருவருக்கு மீண்டும் நிருவாகம் அணுக்கம் தேவைப்பட்டால் அவர் மீண்டும் ஒரு முறை கோரியே பெற முடியும். தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகிகளைத் தேர்ந்தெடுப்பதில் சுணக்க நிலை ஏற்பட்ட போது, விக்கிப்பீடியா:விக்கி நிருவாகிகள் பள்ளி என்னும் முறையைக் கொண்டு வந்து, நிருவாக அணுக்கத்தை மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள், ஒரு ஆண்டு என்று நீட்டித்து இறுதியாகவே என்றைக்கும் அணுக்கம் கிடைப்பது போல செய்தோம். அந்த முறை பல புதிய நிருவாகிகளைத் தேர்ந்தெடுக்க உதவியது. ஒருவரின் நிருவாகப் பணியில் முறையீடுகள் இருந்தால், முறையான உரையாடல், வாக்கெடுப்புக்குப் பின் அவரது நிருவாக அணுக்கத்தை நீக்கவும் இடமுண்டு.
உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவி அணுக்கத்தைப் பொருத்தவரை, இப்படியான சமூக ஒப்புதல் நடைமுறைகள் ஏதும் இல்லாமலிருந்த காரணத்தால், பல நாள் பங்களிப்பவர்களின் கட்டுரைகளில் கூட சில மேம்பாடுகள் தேவைப்பட்டன. அதை யார், இன்னார் என்று ஒரு சிலரை மட்டும் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்ட வேண்டிய தர்மசங்கடத்தைத் தவிர்க்கவும், அவ்வாறு குறைபட்டவர்கள் தகுந்த மீளாய்வைச் செய்து தகுந்த ஒப்புதலைத் தரவும் தற்போதுள்ள முறை உதவும். Autoconfirmed users, ஏற்கனவே பயன்படுத்தியவர்களுக்குத் தானாகவே அணுக்கம் தருவதை விட தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள முறை வெளிப்படையானது, சமூகப் பங்கேற்பையும் ஒப்புதலையும் உறுதி செய்தது. ஒருவருக்குத் தானே அணுக்கம் கிடைத்தது என்பதை விட விக்கிச் சமூகம் நம்பி அந்த அணுக்கத்தை அளித்திருப்பது இன்னும் சிறப்பு வாய்ந்ததாகவே இருக்க முடியும் என்று நான் கருதுகிறேன். நிருவாக அணுக்கம் கூட அப்படித் தரப்படுவது தானே?
ஒருவேளை, நெடுங்காலம் பயன்படுத்துகிறவர்கள் தாங்களே கோரி விண்ணப்பிக்கும் நிலை முறையான அங்கீகாரமாகத் தோன்றாவிடில், ஒருவர் மற்றொருவருக்கு அணுக்கத்தைத் தரலாம் என்று பரிந்துரைத்து, அதற்குச் சமூக ஒப்புதல் அளிப்பதும் தகுந்த முறையே. பல உலகளாவிய விருதுகள் கூட ஒருவருக்குப் பிற சான்றோர் பரிந்துரைத்துத் தான் கிடைக்கின்றன. விருது அளவுக்கு இது பெரிய விசயம் இல்லை என்றாலும் தாங்களே விண்ணப்பிக்க வேண்டிய சங்கடத்தைத் தவிர்க்கும். இவ்வாறு பரிந்துரை முறையையும் கொள்கையில் உள்ளடக்கினால், நீங்கள் இந்த வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களிப்பீர்களா என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் தமிழ் விக்கிப்பீடியா வழமையைப் பொருத்தவரை, பெரும்பான்மை முடிவு என்பதை விட இயன்ற வரை உரையாடி அனைவருக்கும் ஏற்புடைய இணக்க முடிவு என்பதற்குத் தான் எப்போதும் முயற்சி செய்வோம். நன்றி. - இரவி (பேச்சு) 16:02, 24 ஏப்ரல் 2025 (UTC)Reply
நடுநிலை
தொகு
பரிந்துரை
தொகு

அணுக்கம் வழங்கல்

தொகு

நிருவாகிகள் மற்ற பயனர்களின் கட்டுரையின் தரத்தினைச் சரிபார்த்த பிறகு அணுக்கம் வழங்குவர். ஒரு நிருவாகியின் கட்டுரையினை மற்ற நிருவாகி சரிபார்த்து வழங்குவர்.

அணுக்கம் மீளப் பெறுதல்

தொகு

அணுக்கம் பெறப்பட்ட பிறகு பயனர்கள் உருவாக்கும் கட்டுரையின் தரமானது கேள்விக்குள்ளாகும்பட்சத்தில் தொடர்ந்து மூன்று எச்சரிக்கைக்குப் பிறகும் அதே நிலை தொடருமானால் தகுந்த உரையாடலுக்குப் பிறகு அணுக்கம் மீளப் பெறப்படும்.

முடிவு

தொகு

12 ஆதரவு 1 எதிர்ப்பு எனும் வாக்கெடுப்பு முடிவின் படி இந்தக் கொள்கை நடைமுறைக்கு வருகிறது. அணுக்கத்திற்கு விண்னப்பிக்க இங்கு செல்லவும்--ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:59, 26 ஏப்ரல் 2025 (UTC)Reply

சத்திரத்தான் கருத்துகளையும் கவனத்தில் கொண்டு நிருவாக அணுக்கம் பெற விண்ணப்பித்தல் போல பயனர்கள் மற்றவர்களைப் பரிந்துரைப்பதையும் நடைமுறையில் கொண்டு வரலாம். தமிழ் விக்கிப்பீடியா வழமைகள் அறியாத நல்ல, திறமையான புதிய பயனர்களுக்கும் மற்றவர்கள் பரிந்துரைக்க இது உதவியாக இருக்கும். அப்புறம், ஒருவர் விண்ணப்பித்து மற்றவர்கள் கருத்துகள் தெரிவிக்க ஒரு வார காலம் அவகாசம் தரலாம். இதில் ஆதரவு, எதிர்ப்பு என்றில்லாமல் ஒருவரின் கடந்த காலப் பங்களிப்புகளைப் பற்றிய மதிப்பிடலையும் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கலாம். பயனர் ஏற்கனவே உருவாக்கியுள்ள பெருவாரியான கட்டுரைகளில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் தேவையெனில் மட்டும், அவற்றைச் சீராக்கும் வரை அணுக்கம் தருவதைத் தாமதப்படுத்த கோரலாம். இந்தக் கருத்துகளைக் கவனித்து அதற்கு ஏற்ப கோரிக்கையின் மீது நிருவாகிகள் நடவடிக்கை எடுக்கலாம். இந்த வழிகாட்டல்களையும் அணுக்கம் கோரும் பக்கத்தில் சேர்க்க விரும்புகிறேன். இடைப்பட்ட காலத்தில் விக்கிப்பீடியா:உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவி பக்கத்தில் உள்ள வழிகாட்டல்களை மேம்படுத்த வேண்டும். அணுக்கம் கோரி விண்ணப்பிப்பவர் இந்தப் பக்கத்தைப் பார்த்து அங்கு குறிப்பிட்டுள்ள வழிகாட்டல்களை ஏற்றுப் பின்பற்றுவதாக உறுதி அளித்தலும் வரவேற்கப்படக்கூடிய ஒன்றாக இருக்கும். நன்றி. - இரவி (பேச்சு) 14:43, 27 ஏப்ரல் 2025 (UTC)Reply

GFDL-ஐ நீக்க பரிந்துரை செய்யுங்கள்

தொகு

வணக்கம். மீடியாவிக்கி பேச்சு:Licenses பக்கத்தில், GFDL-ஐ உரிமங்கள் பட்டியலில் இருந்து நீக்க பரிந்துரை செய்துள்ளேன். மேலும், க்ரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை 3.0-ல் இருந்து 4.0-க்கு மேம்படுத்துவதற்கும் முன்மொழிந்துள்ளேன். இது ஏற்கனவே பதிவேற்றப்பட்ட கோப்புகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், பதிவேற்றத்தின் போது தேர்வு செய்யக்கூடிய உரிமப் பட்டியலில் மாற்றம் செய்யப்படும். MGA73 (பேச்சு) 19:08, 12 ஏப்ரல் 2025 (UTC)Reply

எடிட் செய்வது எப்படி

தொகு

விக்கிபீடியா சர்வதிகரிகளை என்ன செய்யலாம்? இங்கு பலர் ஒன்று சேந்து தங்கள் விருப்பத்திக்கு இயங்குறார்கள். ஒரு எடிட் செய்தால் ஆயிரம் தத்துவம். இங்கு எல்லாரும் எடிச் செய்யலாமா இல்ல பதிவுசெய்ய வேனுமா? எப்படி அட்மின் ஆகலாம், Tapediax1 (பேச்சு) 05:20, 19 ஏப்ரல் 2025 (UTC)Reply

@Tapediax1:

  • //விக்கிபீடியா சர்வதிகரிகளை என்ன செய்யலாம்?// இங்கு யாரை சர்வதிகாரி எனக்

குறிப்பிடுகிறீர்கள்??

  • //இங்கு பலர் ஒன்று சேந்து தங்கள் விருப்பத்திக்கு இயங்குறார்கள்.//எத்தனை பேர் என விரிவாக கூறுங்கள்.
  • //ஒரு எடிட் செய்தால் ஆயிரம் தத்துவம்.// இதுவரை தாங்கள் எத்தனை எடிட் செய்துள்ளீர்கள்?? யார் யாரெல்லாம் உங்களுக்கு தத்துவமாக இருந்துள்ளனர்?? இது தான் உங்கள் முதல் கணக்கா??--கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 06:05, 19 ஏப்ரல் 2025 (UTC)Reply
@Tapediax1: வணக்கம், வார்த்தைகளைக் கவனமாகப் பயன்படுத்துங்கள். தாங்கள் கூறவருவதை முதலில் தெளிவாகக் கூறுங்கள்.--ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 06:33, 19 ஏப்ரல் 2025 (UTC)Reply
@Tapediax1://எப்படி அட்மின் ஆகலாம்// என வினவியுள்ளீர்கள். பங்களிப்பினை அதிகப்படுத்தி தமிழ் விக்கிப்பீடியாவின் தனித்துவமான வளர்ச்சியில் பங்கெடுங்கள். ஆகிவிடலாம். அதுவரை பொறுமையாக விக்கியை புரிந்து கொள்ளுங்கள். -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:18, 26 ஏப்ரல் 2025 (UTC)Reply