2024 இந்தோனேசியக் குடியரசுத் தலைவர் தேர்தல்

2024 இந்தோனேசியக் குடியரசுத் தலைவர் தேர்தல் (2024 Indonesian presidential election), இந்தோனேசியா நாட்டின் 2024 - 2029 பதவிக் காலத்திற்கான குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவரை வாக்காளர்களள் நேரடித் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இத்தேர்தல் 14 பிப்ரவரி 2024 (புதன் கிழமை) அன்று நடைபெற்றது. [1]இத்தேர்தலை இந்தோனேசியாவின் தேர்தல் ஆணையம் தலைமையில் நடத்தப்பட்டது. இந்தோனேசியா அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இரண்டு முறை குடியரசுத் தலைவர் பதவி வகித்த ஜோக்கோ விடோடோ இத்தேர்தலில் போட்டியிட முடியாது. இத்தேர்தல் முடிவில் பிரபோவோ சுபியாந்தோ குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2024 இந்தோனேசியக் குடியரசுத் தலைவர் தேர்தல்

← 2019 பெப்ரவரி 14, 2024 (2024-02-14) 2029 →
பதிவு செய்த வாக்காளர்கள்204,421,612 (Increase 6.04%)
வாக்களித்தோர்82.39% (Increase 0.42pp)
 

வேட்பாளர் பிரபோவோ சுபியாந்தோ அனீஸ் பஸ்வேதன் கஞ்சார் பிரனோவோ
கட்சி கெரிந்திரா கட்சி சுயேச்சை இந்தோனேசிய ஜனநாயகப் போராட்டக் கட்சி
கூட்டணி இந்தோனேசியா முன்னேற்றத்திற்கான கூட்டணி [b] மாற்றத்திற்கான ஐக்கிய கூட்டணி [a] அரசியல் கட்சிகளின் கூட்டணி[c]

2024 தேர்தல் வரைபடம்

நடப்பு குடியரசுத் தலைவர்

ஜோக்கோ விடோடோ
இந்தோனேசிய ஜனநாயகப் போராட்டக் கட்சி



2024 குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான சின்னம்

குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல், 2024 இந்தோனேசிய பொதுத் தேர்தலுடன் சேர்த்து இந்தோனேசியா முழுவதும் 14 பிப்ரவரி 2024 அன்று நடைபெற்றது. பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவில் பிரபோவோ சுபியாந்தோ குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள்

தொகு

உலகின் மூன்றாவது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியா நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்று கூட்டணிக் கட்சிகளின் 3 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். அவர்கள் வருமாறு: பிரபோவோ சுபியாந்தோ, கஞ்சர் பிரனோவோ (Ganjar Pranowo) மற்றும் அனீஸ் பஸ்வேதன் (Anies Baswedan)[2]

துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள்

தொகு

முஹைமின் இஸ்கந்தர், மஹ்ஃபுட் எம்.டி., மற்றும் ஜிப்ரான் ரகாபுமிங் ராகா ஆகியோர் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் அட்டவணை

தொகு
நாட்கள் நிகழ்வுகள்
29 சூலை 2022 – 14 டிசம்பர் 2022 வாக்காளர் பதிவு, சரிபார்த்தல் மற்றும் வாக்குச் சாவடிகளை அறிவித்தல்
14 அக்டோபர் 2022 – 9 பிப்ரவரி 2023 போட்டியிடும் இடங்கள் & தொகுதிகள் வரையறை செய்தல்
19 – 25 அக்டோபர் 2023 குடியரசுத் தலைவர் & துணைத் தலைவர் பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல்
28 நவம்பர் 2023 – 10 பிப்ரவரி 2024 தேர்தல் பிரச்சாரக் காலம்
11 – 13 பிப்ரவரி 2024 அமைதிக்கான நாட்கள்
14 பிப்ரவரி 2024 வாக்குப் பதிவு நாள்
14 – 15 பிப்ரவரி 2024 வாக்குகள் எண்ணும் நாள்
15 பிப்ரவரி 2024 – 20 மார்ச் 2024 வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் மறுபரிசீலனை
20 அக்டோபர் 2024 தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றல்

குடியரசுத் தலைவர் தேர்தலில் இழுபறி ஏற்படின் இரண்டாவது சுற்று தேர்தல் நடத்தப்படும்[3]

நாட்கள் நிகழ்வுகள்
2 சூன் – 22 சூன் 2024 குடியரசுத் தலைவர் & துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் பிரச்சாரம்
23 சூன் – 25 சூன் 2024 தேர்தல் பிரச்சாரம் அமைதிக் காலம்
26 சூன் 2024 வாக்கு பதிவு நாள்
26 – 27 சூன் 2024 வாக்கு எண்ணிக்கை
27 சூன் – 20 சூலை 2024 வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் மறுபரிசீலனை

வேட்பாளர்கள்

தொகு

 
வேட்பாளர் எண் 1
அனிஸ் பஸ்வேடன் முஹைமின் இஸ்கந்தர்
ஜனாதிபதி வேட்பாளர் துணை ஜனாதிபதி வேட்பாளர்
   
ஜகார்த்தாவின் சிறப்பு தலைநகர் பிராந்தியத்தின் ஆளுநர் (2017–2022) இந்தோனேசியா குடியரசின் பிரதிநிதிகள் சபையின் துணைத் தலைவர்
29.0%
'''மாற்றத்திற்கான கூட்டணி'''
 
 
Calon nombor 2
பிரபோவோ சுபியாண்டோ ஜிப்ரான் ரகபுமிங் ரகா
ஜனாதிபதி வேட்பாளர் துணை ஜனாதிபதி வேட்பாளர்
   
பாதுகாப்பு அமைச்சர் சுரகர்த்தா மேயர்
45.0%
'''மேம்பட்ட இந்தோனேசியா கூட்டணி'''
 
 
Calon nombor 3
கஞ்சர் பிரணோவோ முகமது மஹ்ஃபுத் மஹ்மோதின்
ஜனாதிபதி வேட்பாளர் துணை ஜனாதிபதி வேட்பாளர்
   
மத்திய ஜாவாவின் ஆளுநர் இந்தோனேசியாவின் அரசியல், சட்டம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர்
26.0%
அரசியல் கட்சி ஒத்துழைப்பு
 

தேர்வு முடிவுகள்

தொகு
வேட்பாளர்Running mateகட்சிவாக்குகள்%
பிரபோவோ சுபியாந்தோகிப்ரான், சுயேச்சைகெரிந்திரா கட்சி9,62,14,69158.59
அனீஸ் பஸ்வேதன்முகைமின் இஸ்கந்தர், தேசிய எழுச்சிக் கட்சிசுயேச்சை4,09,71,90624.95
கஞ்சர் பிரனோவோமகபூத் எம்டி, சுயேச்சைஇந்தோனேசிய போராட்டத்திற்கான ஜனநாயகக் கட்சி2,70,40,87816.47
மொத்தம்16,42,27,475100.00
செல்லுபடியான வாக்குகள்16,42,27,47597.51
செல்லாத/வெற்று வாக்குகள்41,94,5362.49
மொத்த வாக்குகள்16,84,22,011100.00
பதிவான வாக்குகள்20,44,21,61282.39
மூலம்: KPU

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Indonesia announces candidates for presidential election
  2. These Are the Three Contenders Vying to Be Indonesia’s Next President
  3. detikcom, Tim. "Jadwal Pemilu 2024 Lengkap, Termasuk Jadwal Pilpres Jika 2 Putaran". detiknews (in இந்தோனேஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-27.