சென்னையிலுள்ள பள்ளிகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

சென்னைப் பள்ளிகள் பலவகை கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. சிறுவர்கள் பள்ளிப் படிப்பை மழலையர் பள்ளிகளில் மூன்று வயதில் துவங்குகின்றனர். மழலையர் முதுநிலை வழியே பன்னிரண்டு ஆண்டுகள் படிப்பைத் தொடர்கின்றனர். பத்தாம் வகுப்பிலும் பன்னிரண்டாவது வகுப்பிலும் பல்வேறு வாரியங்களின் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்கின்றனர்.

நிர்வாக வகைப்பாடு

தொகு

சென்னை பள்ளிகள் இருவகையான நிர்வாக வகைப்பாட்டில் அடங்குகின்றன - அரசுப் பள்ளிகள் (மாநகராட்சிப் பள்ளிகள்), தனியார் பள்ளிகள். அரசுப் பள்ளிகள் அனைவருக்கும் தாங்கத்தகுந்ததாக உள்ளன; தனியார் பள்ளிகள் விலைமிக்கனவாக உள்ளன. தனியார் பள்ளிகள் மத்திய அரசின் வாரிய கல்வித்திட்டப் பள்ளிகள், மாநில வாரிய கல்வித்திட்டப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் என பலவகை கல்வித்திட்டங்களை பின்பற்றுகின்றன. அண்மையில் மாநில அரசு அனைத்து கல்வித் திட்டங்களையும் ஒருங்கிணைத்து சமச்சீர்க் கல்வியை செயற்படுத்தி உள்ளது. மாநில வாரிய கல்வித்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள் அரசுதவி பெறும் பள்ளிகள் என்றும் சுயநிதி பள்ளிகள் என்றும் இருவகைப்படுகின்றன.

பயிற்றுமொழி

தொகு

பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஆங்கிலவழியிலும் (பயிற்றுமொழி ஆங்கிலம்) அரசுப் பள்ளிகள் முதன்மையாக தமிழ் வழியிலும் (பயிற்றுமொழி தமிழ்) கற்பிக்கப்படுகின்றன. தெலுங்கு மொழியை கற்பிக்கும் தனியார் பள்ளிகளும், பயிற்றுமொழியாக கற்பிக்கும் மாநகராட்சிப் பள்ளிகளும் உண்டு. சிறு மத்திய அரசுப் பள்ளிகள் இருமொழி கொள்கையைப் பின்பற்றுகின்றன: ஆங்கிலமும் இந்தியும்.

தரக் கண்காணிப்பு அமைப்புகள்

தொகு

அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளும் கீழ்க்காணும் வாரியங்களில் ஏதாவது ஒன்றில் இணைந்துள்ளன:

  1. நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் - கற்கும் அனைத்து ஆண்டுகளுக்கும்
  2. தமிழ்நாடு மாநில வாரியம் - கற்கும் அனைத்து ஆண்டுகளுக்கும்
  3. இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் - கற்கும் அனைத்து ஆண்டுகளுக்கும்
  4. தமிழ்நாடு பதின்மப் பள்ளிகள் இயக்ககம் கிண்டர்கார்ட்டன் முதல் 10ஆம் வகுப்பு வரை - பின்னர் 11, 12 வகுப்புக்களுக்கு தானாகவே தமிழ்நாடு வாரிய கல்விமுறைக்கு மாற்றப்படுதல்
  5. தமிழ்நாடு ஆங்கிலோ-இந்திய பள்ளி நிறைவுச் சான்றிதழ் அமைப்பு - கிண்டர்கார்ட்டன் முதல் 10ஆம் வகுப்பு வரை - பின்னர் 11, 12 வகுப்புக்களுக்கு தானாகவே தமிழ்நாடு வாரிய கல்விமுறைக்கு மாற்றப்படுதல்

இவற்றிற்கு விலக்காக சில பள்ளிகள் மான்டேசொரி கல்வி, பன்னாட்டு இளங்கலைஞர் அல்லது அமெரிக்க முறைமைகளைப் பின்பற்றுகின்றன.[1]

பள்ளிகளின் பட்டியல்

தொகு
பெயர் சுற்றுப்புறம் நிர்வாகம் இணைவு
அகாதமி ஆஃப் பெர்சனலைசுடு லேர்னிங் குளோபல் பள்ளி துறைப்பாக்கம் தனியார், பன்னாட்டு கேம்பிரிட்ச்சு: ஐஜிஎஸ்சிஈ
ஆதர்ஷ் வித்யாலயா இராயப்பேட்டை தனியார் தமிழ்நாடு பதின்மப் பள்ளிகள் இயக்ககம்
ஹோலி கிராஸ் மெட்ரிகுலேசன் பள்ளி திருவொற்றியூர் தனியார் தமிழ்நாடு பதின்மப் பள்ளிகள் இயக்ககம்
அக்சரபோல் பன்னாட்டுப் பள்ளி மேற்கு மாம்பலம், தி-நகர் தனியார் பன்னாட்டுக் கல்வி
அமெரிக்கப் பன்னாட்டு பள்ளி, சென்னை தரமணி தனியார் பன்னாட்டு இளங்கலைஞர்
ஆசான் நினைவு மேல்நிலைப் பள்ளி ஆயிரம் விளக்கு தனியார் சிபிஎஸ்ஈ
செட்டிநாடு வித்தியாசுரமம் ஆர். ஏ. புரம் தனியார் சிபிஎஸ்ஈ
சின்மயா வித்யாலயா அண்ணா நகர் தனியார் சிபிஎஸ்ஈ
சிபிஎஸ் குளோபல் பள்ளி அண்ணாநகர் கிழக்கு, திருமழிசை தனியார் பன்னாட்டு இளங்கலைஞர் மற்றும் கேம்பிட்ச்சு
சி. எஸ். ஐ பெய்ன் மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி கீழ்ப்பாக்கம் தனியார் தமிழ்நாடு பதின்மப் பள்ளிகள் இயக்ககம்
சி. எஸ். ஐ எவார்ட் மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளி புரசைவாக்கம் தனியார் மெட்ரிகுலேசன்
டி.ஏ.வி. ஆண்கள் மேநிலைப் பள்ளி கோபாலபுரம் தனியார் சிபிஎஸ்ஈ
டி.ஏ.வி மெட்ரிகுலேசன் இடைநிலைப் பள்ளி சூளைமேடு தனியார் மெட்ரிகுலேசன்
டி.ஏ.வி. பொதுப் பள்ளி செனடாப் சாலை, தேனாம்பேட்டை தனியார் சிபிஎஸ்ஈ
டி.ஏ.வி. மேநிலைப் பள்ளி (ஆண்கள்) முகப்பேர் தனியார் சிபிஎஸ்ஈ
டி.ஏ.வி. மேநிலைப் பள்ளி (பெண்கள்)]] முகப்பேர் தனியார் சிபிஎஸ்ஈ
டான் பள்ளி நோலாம்பூர் தனியார் சிபிஎஸ்ஈ
டான் பாசுக்கோ மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி எழும்பூர் கத்தோலிக் மெட்ரிகுலேசன்[2]
டவுட்டன் கோரி ஆண்கள் உயர்நிலைப் பள்ளி வேப்பேரி தனியார் தமிழ்நாடு ஆங்கிலோ இந்திய பள்ளி வாரியம்
எபினேசர் மார்க்கஸ் பன்னாட்டு பள்ளி & இளநிலைக் கல்லூரி அம்பத்தூர் கிறித்தவம் சிபிஎஸ்ஈ
எபினேசர் மார்க்கஸ் மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளி அம்பத்தூர் கிறித்தவம் மெட்ரிகுலேசன்[3]
எவர்வின் மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளி கொளத்தூர் தனியார் மெட்ரிகுலேசன்
ஜி. கே. செட்டி இந்து வித்யாலயா மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி ஆதம்பாக்கம் தனியார் மாநில வாரியம்
செருமானியப் பன்னாட்டுப் பள்ளி, சென்னை நீலாங்கரை தனியார் மெட்ரிகுலேசன்
ஜிடி அலோகா வித்யா மந்திர் பள்ளி நீலாங்கரை தனியார் சிபிஎஸ்ஈ
இந்து மேநிலைப்பள்ளி இந்திரா நகர்மேநிலைப்பள்ளி தனியார் சிபிஎஸ்ஈ
ஹோலி ஏஞ்செல்சு ஆங்கிலோ இந்திய உயர்நிலைப்பள்ளி தியாகராய நகர் தனியார், கிறித்தவம் ஆங்கிலோ-இந்தியர்
ஐதர் கார்டன் மெட்ரிகுலேசன் பள்ளி பெரம்பூர் தனியார்
கேந்திரிய வித்யாலயா மேநிலைப்பள்ளி சிஎல்ஆர்ஐ வளாகம் மத்திய அரசு சிபிஎஸ்ஈ
கேந்திரிய வித்யாலயா மேநிலைப்பள்ளி இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை மத்திய அரசு சிபிஎஸ்ஈ
கோலப் பெருமாள் செட்டி வைஷ்ணவ் மேநிலைப்பள்ளி]] அரும்பாக்கம் தனியார் மெட்ரிகுலேசன்
லாலாஜி மெமோரியல் ஒமேகா பன்னாட்டுப் பள்ளி கோலப்பாக்கம் தனியார் மான்டேசொரி, சிபிஎஸ்ஈ,பன்னாட்டு கேம்பிரிட்ச்சு: ஐஜிஎஸ்சிஈ
இலயோலா மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி கோடம்பாக்கம் கத்தோலிக்கம் மெட்ரிகுலேசன்
மதரசா இ ஆசம் உயர்நிலைப்பள்ளி அண்ணா சாலை அரசு மாநில வாரியம்
மகரிசி வித்யா மந்திர் சேத்துப்பட்டு தனியார் மெட்ரிகுலேசன் & சிபிஎஸ்ஈ
மாந்தன் வித்யாசிரமம் கொட்டிவாக்கம் தனியார் சிபிஎஸ்ஈ, ஐசிஎஸ்சி, மெட்ரிகுலேசன் கல்வித்திட்டங்களின் ஒருங்கிணைந்த கல்வி
எம்சிடிஎம் பன்னாட்டு பள்ளி சென்னை தனியார் பன்னாட்டு இளங்கலைஞர், ஐஜிசிஎஸ்ஈ
மீசி மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி மண்ணடி, ஜார்ஜ் டவுண் தனியார் மெட்ரிகுலேசன்
மாடர்ன் மேநிலைப்பள்ளி நங்கநல்லூர் தனியார் சிபிஎஸ்ஈ
மை மான்டேசொரி பள்ளி சாலிகிராமம், சென்னை தனியார் மான்டேசொரி
நவதிஷா வேளச்சேரி தனியார் ஐசிஎஸ்சி ஐசிஎஸ்சி
நியூ பிரின்சு மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி தனியார் மெட்ரிகுலேசன்
ரோசரி மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி சாந்தோம் தனியார் மெட்ரிகுலேசன்
பொன் வித்யாசுரமம் வளசரவாக்கம் தனியார் சிபிஎஸ்ஈ
பிரின்சு மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி மடிப்பாக்கம் தனியார் தமிழ்நாடு மெட்ரிகுலேசன்
பி.எஸ். உயர்நிலைப்பள்ளி மயிலாப்பூர் அரசு, உதவி மாநில வாரியம்
பத்மா சேசாத்திரி பால பவன் பள்ளிகள் நுங்கம்பாக்கம், கே. கே. நகர், சிறுசேரி தனியார் சிபிஎஸ்ஈ
சீடு அகாதமி சென்னை தனியார் ஐஜிசிஎஸ்ஈ
சேது பாஸ்கர மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி அம்பத்தூர் தனியார் மெட்ரிகுலேசன்
சிஷ்யா அடையாறு தனியார் ஐசிஎஸ்சி , ஐஎஸ்சி
சிவசக்தி மெட்ரிகுலேசன் பள்ளி (இருபாலர்-கல்வி) வேளச்சேரி தனியார் மெட்ரிகுலேசன்
இசுபார்டன் மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி மொகப்பேர் தனியார் மெட்ரிகுலேசன் & சிபிஎஸ்ஈ
சிறீ வெங்கடேசுவரா மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளி தனியார் மெட்ரிகுலேசன்
செயின்ட். பீட்சு ஆங்கிலோ இந்திய உயர்நிலைப்பள்ளி சாந்தோம் தனியார் ஆங்கிலோ இந்தியன்
செயின்ட். ஜான்சு மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி ஆழ்வார் திருநகர் தனியார் மெட்ரிகுலேசன்
செயின்ட். ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளி எண்ணூர் தனியார், கிறித்தவம் மெட்ரிகுலேசன்
செயின்ட். கெவின் ஆங்கிலோ-இந்திய உயர்நிலைப்பள்ளி ராயபுரம் தனியார், கத்தோலிக்கம் ஆங்கிலோ-இந்தியர்
செயின்ட். மேரீசு ஆங்கிலோ-இந்திய உயர்நிலைப்பள்ளி பாரீசு தனியார் ஆங்கிலோ-இந்தியர்
செயின்ட். மத்தியாசு ஆங்கிலோ-இந்திய உயர்நிலைப்பள்ளி வேப்பேரி தனியார் மெட்ரிகுலேசன்
செயின்ட். மைக்கேல்சு அகாதமி காந்தி நகர் தனியார், கத்தோலிக்கம் மெட்ரிகுலேசன்
செயின்ட். பாட்றிக்சு ஆங்கிலோ இந்திய உயர்நிலைப்பள்ளி அடையாறு தனியார், கிறித்தவம் ஆங்கிலோ-இந்தியர்
செயின்ட். பீட்டர்சு உயர்நிலைப்பள்ளி ராயபுரம் மேலாண்மை, கத்தோலிக்கம் மாநில வாரியம்
செயின்ட். உர்சுலாசு ஆங்கிலோ-இந்தியர் உயர்நிலைப்பள்ளி சர்ச் பார்க், அண்ணாசாலை தனியார் ஆங்கிலோ-இந்தியர்
சுந்தரவல்லி மெமோரியல் பள்ளி குரோம்பேட்டை தனியார் சிபிஎஸ்ஈ
சுஷில்ஹரி பன்னாட்டு உறைவிட பள்ளி கேளம்பாக்கம் தனியார் [[சிபிஎஸ்ஈ & மாநில வாரியம்
தி இந்து உயர்நிலைப்பள்ளி திருவல்லிக்கேணி அரசு, உதவி மாநில வாரியம்
தி இந்து காலனி செல்லம்மாள் வித்யாலயா மேநிலைப்பள்ளி நங்கநல்லூர், தனியார் சிபிஎஸ்ஈ
வனவாணி மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை இதொக-சென்னை உதவியுடன் மெட்ரிகுலேசன்
வாணி வித்யாலயா மேநிலை பள்ளி & இளநிலைக் கல்லூரி மேற்கு கே,கே,நகர் தனியார் சிபிஎஸ்ஈ
வெள்ளையன் செட்டியார் உயர்நிலைப்பள்ளி திருவொற்றியூர் அரசு உதவியுடன் மாநில வாரியம்
வித்யா மந்திர மேநிலைப்பள்ளி மயிலாப்பூர் தனியார் சிபிஎஸ்ஈ
வியாச வித்யாலயா மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி ஆதம்பாக்கம் தனியார் மெட்ரிகுலேசன்
வெஸ்லி உயர்நிலைப்பள்ளி ராயப்பேட்டை அரசுதவியுடன் மாநில வாரியம்
எல்.எம்.டி மேநிலைப்பள்ளி சூளைமேடு தனியார் சிபிஎஸ்ஈ
கில் ஆதர்ஷ் மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி ராயப்பேட்டை தனியார் மெட்ரிகுலேசன்
இந்து மேநிலைப்பள்ளி இந்திரா நகர் சிபிஎஸ்ஈ
எம். சி. சி. உயர்நிலைப்பள்ளி சேத்துப்பட்டு தனியார் மாநில வாரியம்
நர்ச்சர் மொன்டிசோரி பள்ளி அண்ணா நகர் தனியார் மொன்டிசோரி, சிபிஎஸ்ஈ
பி.எஸ். மேநிலைப்பள்ளி மயிலாப்பூர் தனியார் சிபிஎஸ்ஈ
யூனிட்டி பொதுப் பள்ளி கோட்டூர்புரம் தனியார் சிபிஎஸ்ஈ
ஆர்எம்கே உறைவிடப் பள்ளி கவரைப்பேட்டை தனியார்
சரஸ்வதி வித்யாலயா மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி வடபழனி தனியார் மெட்ரிகுலேசன்
எஸ்பிஓஏ பள்ளி & இளநிலைக் கல்லூரி அண்ணா நகர் தனியார், பகுதி-உறைவிடம் சிபிஎஸ்ஈ
சரணாலயா மொன்டிசோரி பள்ளி நுங்கம்பாக்கம் தனியார் மான்டேசொரி கல்வி, சிபிஎஸ்ஈ
சிந்தி மாடல் மேநிலைப்பள்ளி கெல்லீசு தனியார் சிபிஎஸ்ஈ
சிறீ அகோபில மடம் உயர்நிலைப்பள்ளி மாம்பலம் தனியார் மாநில வாரியம்
சிறகு மான்டேசொரி பள்ளி ஆவடி தனியார் மான்டேசொரி கல்வி
சர் சிவசாமி கலாலயா மேநிலைப்பள்ளி மயிலாப்பூர் தனியார் சிபிஎஸ்ஈ
சிறீ சங்கரா மேநிலைப்பள்ளி அடையாறு தனியார் சிபிஎஸ்ஈ
சிறீ சீதாராம் வித்யாலயா மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி மேற்கு மாம்பலம் தனியார் மெட்ரிகுலேசன்
டி.ஏ.வி. மெட்ரிகுலேசன் மேநிலைப்பள்ளி முகப்பேர் தனியார் மெட்ரிகுலேசன்
வடபழனி மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி வடபழனி தனியார் மெட்ரிகுலேசன்
வி. இராமகிருஷ்ணா பாலிடெக்னிக் திருவொற்றியூர்
ஸ்ரீவித்யா அகாதமி பன்னாட்டு உறைவிடப் பள்ளி சொக்கநல்லூர், பூவிருந்தவல்லி தனியார் சிபிஎஸ்ஈ மற்றும் கேம்பிரிட்ச்சு
வள்ளியம்மாள் மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி தனியார் மெட்ரிகுலேசன்
வேலம்மாள் குளோபல் பள்ளி புழல் தனியார் கேம்பிரிட்ச்சு
வேலம்மாள் குளோபல் பள்ளி மாம்பாக்கம் தனியார் ஐஜிசிஎஸ்ஈ
வித்யோதயா பள்ளிகள் தியாகராய நகர் தனியார் மெட்ரிகுலேசன்
விசயமாருதி வித்யாலயா கேளம்பாக்கம் தனியார் சிபிஎஸ்ஈ
தூய இருதய மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளி,சர்ச் பூங்கா கோபாலபுரம் தனியார்

மேற்சான்றுகள்

தொகு
  1. "Schools in Chennai, school details, reviews, ratings". schoolswelike.com. Archived from the original on ஆகஸ்ட் 21, 2014. பார்க்கப்பட்ட நாள் February 2, 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "டான் பாசுக்கோ மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி". India9.com. பார்க்கப்பட்ட நாள் 2009-08-07.
  3. "Ebenezer-Marcus-Mat-Hr-Sec-Schoo".