தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம்
தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம் (Tamil Nadu Board of Secondary Education) 1910ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது தமிழக அரசின் கல்வித்துறையின் கீழ் இயங்குகிறது. இடைநிலைக் கல்வியின் பத்தாவது வகுப்பு வரைக்கான கல்வி கீழ்வரும் முறைமைகளில் வழங்கப்படுகிறது:
- இடைநிலைப் பள்ளி நீங்கு சான்றிதழ் (SSLC) முறைமை
- ஆங்கிலோ இந்திய முறைமை
- ஓரியண்டல் பள்ளி நீங்கு சான்றிதழ் (OSLC) முறைமை
- பதின்மப் பள்ளிகள் (Matriculation) முறைமை.
வகை | தமிழ்நாடு அரசு |
---|---|
நிறுவுகை | 1911 |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | தமிழ்நாடு, இந்தியா |
தொழில்துறை | கல்வி, பள்ளித் தேர்வுகள் & சான்றிதழ் வழங்கல் |
இணையத்தளம் | அலுவல்முறை இணையதளம் |
உயர்நிலைக் கல்வியில் (வகுப்புகள் 11 & 12) உயர்நிலைப் பள்ளிச் சான்றிதழ் (HSC) வழங்க ஒரே ஒருங்கிணைக்கப்பட்ட முறைமை கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு மாநில பள்ளித் தேர்வுகள் வாரியம் மாணவர்களின் கல்வித்தகுதியை இருநிலைகளில் - பத்தாவது வகுப்பு முடிவிலும் 12வது வகுப்பு முடிவிலும் - வாரியத்தேர்வுகள் மூலம் மதிப்பிடுகிறது. 12வது வகுப்பு வாரியத் தேர்கவுளில் பெற்ற மதிப்பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான தகுதியாகவும் விருப்ப கல்வித்திட்டங்களுக்கான துண்டிப்பு மதிப்பெண்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.[1][2]
இந்த வாரியத்தின் ஆட்சிப்பகுதி தமிழ்நாடு முழுமையிலும் உள்ள பள்ளிகளாகும். பள்ளிகள் இந்த வாரியத்துடனோ அல்லது பத்தாவது மற்றும் 12வது வகுப்புத் தேர்வுகளை நடத்தி சான்றிதழ் வழங்க இந்த வாரியத்தின் அனுமதி பெற்ற நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்துடனோ அல்லது இந்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடனோ இணைந்து கொள்ளலாம்.
1978ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் இடைநிலைக்கல்வியின் வடிவமைப்பாளர் எனப் போற்றப்படும் எச்.எச்.எஸ்.லாரன்ஸ் அந்த வாரியத்தின் இயக்குனராகப் பணிபுரிந்தபோது தமிழ்நாட்டின் கல்வித்திட்டங்களை ஆய்வு செய்து அனைத்திந்தியாவிலும் தற்போது கடைபிடிக்கப்படும் 10+2+3 முறைமையைத் தோற்றுவித்தார்.
வெளியிணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Team, BS Web (2020-06-09). "Tamil Nadu 10th exam 2020 cancelled; All 950,000 students to be promoted". Business Standard India. https://www.business-standard.com/article/education/tamil-nadu-10th-exam-2020-cancelled-all-950-000-students-to-be-promoted-120060900532_1.html.
- ↑ https://www.tn.gov.in/rti/proactive/sedu/handbook_DGE.pdf [bare URL PDF]