மேற்கு மாம்பலம்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

மேற்கு மாம்பலம் (ஆங்கில மொழி: West Mambalam) அல்லது பழைய மாம்பலம் என்பது தமிழகத் தலைநகர் சென்னையின் தென்பகுதியில் தி.நகருக்கு மேற்கே உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியாகும். சென்னையின் பழமையான குடியிருப்புகளில் ஒன்றான இது, சென்னை புறநகர் இருப்புப்பாதையின் தெற்கு வழியில் உள்ள மாம்பலம் தொடருந்து நிலையத்தின் மேற்கே உள்ளது.

மேற்கு மாம்பலம்
மேற்கு மாம்பலம் is located in தமிழ் நாடு
மேற்கு மாம்பலம்
மேற்கு மாம்பலம்
மேற்கு மாம்பலம், சென்னை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 13°02′18″N 80°13′15″E / 13.0383°N 80.2209°E / 13.0383; 80.2209
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
ஏற்றம்
55 m (180 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
600033[1]
தொலைபேசி குறியீடு+9144xxxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்தியாகராய நகர், மாம்பலம், கோடம்பாக்கம், நந்தனம், சைதாப்பேட்டை, சின்னமலை, கிண்டி மற்றும் நுங்கம்பாக்கம்
மாநகராட்சிசென்னை மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்திருமதி. மு. அருணா,
இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிதென் சென்னை
சட்டமன்றத் தொகுதிதியாகராய நகர்
மக்களவை உறுப்பினர்தமிழச்சி தங்கப்பாண்டியன்
சட்டமன்ற உறுப்பினர்ஜெ. கருணாநிதி

பெயரியல்

தொகு

மாம்பலம் என்பது மாமல்லம் என்பதின் மருவிய பெயர். பிறகு மாம்பலம் ஜமீன் மாம்பலம் பழைய மாம்பலம், மேற்கு மாம்பலம் என்று மாறியது.

கல்வி

தொகு

இங்குள்ள சில பள்ளிகள்:

  • அகோபில மட ஓரியண்டல் பள்ளி
  • அஞ்சுகம் இடைநிலைப் பள்ளி
  • செயகோபால் கரோடியா இந்து வித்யாலயா
  • ஸ்ரீ பி. எஸ். மூதா பெண்கள் பள்ளி
  • எஸ். ஆர். எம் நைட்டிங்கேல் மெட்ரிக்குலேசன் பள்ளி
  • ஸ்ரீ நாராயணா மிசன் பள்ளி

போக்குவரத்து

தொகு

சென்னையின் பிற பகுதிகளுடன் தொடருந்து மற்றும் மாநகரப் பேருந்துகளால் இணைக்கப்பட்டுள்ளது.

வழிபாடு

தொகு

இங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து வழிபாட்டுத்தலங்கள்

  • அயோத்தியா மண்டபம்
  • கோதண்டராம சுவாமி கோவில்
  • காசி விசுவநாதர் கோவில்[2]
  • சத்தியநாராயணா கோவில்

இப்பகுதியில் ஒரு பள்ளிவாசலும், தென்னிந்தியத் திருச்சபைத் தேவாலயமும் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "WEST MAMBALAM Pin Code - 600033, Chennai City Corporation All Post Office Areas PIN Codes, Search CHENNAI Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-10.
  2. Maalaimalar (2023-09-06). "மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகம் 10-ந்தேதி நடைபெறும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-10.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_மாம்பலம்&oldid=4102358" இலிருந்து மீள்விக்கப்பட்டது