மான்டேசொரி கல்வி

மான்டேசொரி கல்வி (Montessori education) என்பது ஒருவகை பயிற்றுவிப்பு முறையாகும். இத்தாலியைச் சேர்ந்த மருத்துவரும் கல்வியாளருமான மரியா மான்டேசொரி எனும் பெண்மணியால் இக்கல்வி முறை உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதுமாக சுமார் 20,0000 பள்ளிக்கூடங்கள், இக்கல்வி முறையை பின்பற்றுகின்றன.[1]

ஒலிவரைவு மூலம் எழுத்துக்களை நகர்த்தும் முறையை குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள்.[2]

மான்டேசொரி கல்வி என்பது சுதந்திரத்தை வலியுறுத்தி, அச்சுதந்திரத்தை வரையறைக்குள் கொண்டுவந்து, குழந்தைகளின் இயல்பான உளவியல், உடல் மற்றும் சமூக வளர்ச்சியை மதிப்பதைக் குறிப்பதாக உள்ளது. மான்டேசொரி என்ற பெயரால் பலதரப்பட்ட பயிற்சிகள் வழக்கத்தில் இருந்தாலும், அகில உலக மான்டேசொரி சங்கம் (AMI) மற்றும் அமெரிக்கன் மான்டேசொரி சமூகம்(AMS) கீழ்க்காணும் சில அடிப்படைக் கூறுகளை வரையறுத்துள்ளது:[3][4]

 • வெவ்வேறு வயதினர் கலந்திருக்கும் வகுப்பறை - உதாரணமாக 212 அல்லது 3 முதல் 6 வயதுள்ள குழந்தைகள் கலந்த வகுப்பறைகள்
 • கொடுக்கப்பட்டுள்ள பலவகையான விருப்பத்தேர்விலிருந்து மாணவனே தனக்குப்பிடித்தமான செயற்பாட்டைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு.
 • தங்குதடையற்ற வேலை நேரம், குறிப்பாக மூன்று மணி நேரமாவது வேலை நேரம்.
 • ஒரு ஆக்கப்புர்வமான அல்லது "கண்டுபிடிப்பிற்கான" மாதிரி, இவற்றின் மூலம் மாணவர்கள் ஆசிரியரின் நேரடி குறிப்புகளின் மூலம் அல்லாது கோட்பாடுகளைத் தாங்களாகவே அறிந்து கற்றல்
 • மான்டோசொரி மற்றும் அவரது கூட்டாளிகளால் மேம்படுத்தப்பட்ட குறிப்பிடத்தகுந்த கல்விச் சாதனங்கள்
 • வகுப்பறைக்குள் சுற்றிவர சுதந்திரம்.
 • பயிற்றுவிக்கப்பட்ட மான்டோசொரி ஆசிரியர்.

மேலும், பல மான்டோசொரி பள்ளிகள் மான்டோசொரியின் மனித மேம்பாட்டிற்கான மாதிரியையும் அவரது புத்தகங்களையும் அடிப்படையாகக்கொண்டு தங்கள் பள்ளிக்கான செயல்முறை திட்டத்தை நிறுவிக்கொள்கிறார்கள். அத்துடன், மான்டோசொரியால் தன் வாழ்நாளில் அளிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிரியரியல், பாடங்கள், மற்றும் மூலப்பொருட்களையும் பயன்படுத்துகின்றனர்.[சான்று தேவை]


மேற்கோள்கள்தொகு

 1. "Frequently Asked Questions: How Many Montessori Schools Are There?". North American Montessori Teachers Association. 2011-07-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-04-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 2. "What are phonograms and how they are taught to children". The Montessorian wordpress. 26 March 2014 அன்று பார்க்கப்பட்டது.
 3. "AMI School Standards". Association Montessori Internationale-USA (AMI-USA). 2010-11-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-04-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 4. "Introduction to Montessori". American Montessori Society (AMS).

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மான்டேசொரி_கல்வி&oldid=3224451" இருந்து மீள்விக்கப்பட்டது