ஆதம்பாக்கம்

சென்னையின் புறநகர்ப் பகுதி

ஆதம்பாக்கம் (ஆங்கிலம்: Adambakkam), இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது சென்னையின் தென் பகுதியில் அமைந்துள்ள, முதன்மையான குடியிருப்புப் பகுதியாகும். ஆதம்பாக்கம் சென்னை மாவட்டமான, வேளச்சேரி வட்டம் மற்றும் ஆலந்தூர் வட்டத்தின் கீழ் வருகிறது. ஆதம்பாக்கத்தின் வடமேற்கில் ஆலந்தூர், மேற்கில் நங்கநல்லூர், தெற்கில் மடிப்பாக்கம், கிழக்கில் வேளச்சேரி மற்றும் வடக்கில் கிண்டி போன்ற பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. முன்னதாக, ஆதம்பாக்கத்தின் ஒரு பகுதி சென்னை மாநகராட்சியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருந்தது. அக்டோபர் 2011 முதல், முழுப் பகுதியும் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

ஆதம்பாக்கம்
ஆதம்பாக்கம் பிருந்தாவனம் நகர் முதன்மைச் சாலை
ஆதம்பாக்கம் பிருந்தாவனம் நகர் முதன்மைச் சாலை
ஆதம்பாக்கம் is located in சென்னை
ஆதம்பாக்கம்
ஆதம்பாக்கம்
ஆதம்பாக்கம்(சென்னை)
ஆதம்பாக்கம் is located in தமிழ் நாடு
ஆதம்பாக்கம்
ஆதம்பாக்கம்
ஆதம்பாக்கம் (தமிழ் நாடு)
ஆள்கூறுகள்: 12°59′N 80°12′E / 12.99°N 80.20°E / 12.99; 80.20
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
புறநகர்சென்னை
வார்டு163,165
மாவட்டம்சென்னை
அரசு
 • நிர்வாகம்சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
 • ஆளுநர்ஆர். என். ரவி[1]
 • முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்[2]
 • மாவட்ட ஆட்சியர்மருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப
ஏற்றம்
7 m (23 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
600 088
தொலைபேசிக் குறியீடு44 - 225, 233, 234
வாகனப் பதிவுTN-22
மக்களவைத் தொகுதிதிருப்பெரும்புதூர்
சட்டமன்றத் தொகுதிஆலந்தூர்
திட்டமிடல் நிறுவனம்சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்

புவியியல்

தொகு

இவ்வூரின் அமைவிடம் 12°59′N 80°12′E / 12.99°N 80.20°E / 12.99; 80.20 ஆகும்.[3] இது கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 7 மீட்டர் (23 அடி) உயரத்தில் உள்ளது. ஜீவன் நகரில் அமைந்துள்ள ஆதம்பாக்கம் ஏரி மற்றும் கக்கன் நகரில் அமைந்துள்ள வேளச்சேரி ஏரி ஆகியவை இப்பகுதியில் உள்ள இரண்டு ஏரிகள் ஆகும்.

அமைவிடம்

தொகு

சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், அடையாறு அமைந்துள்ளது.

சுற்றுப் பகுதிகள்

தொகு

ஆதம்பாக்கத்தைச் சுற்றி அமைந்துள்ள மற்ற பகுதிகள், கிண்டி, நங்கநல்லூர், வானுவம்பேட்டை, பழவந்தாங்கல் மற்றும் ஆலந்தூர் ஆகும். ஆதம்பாக்கம், பரங்கி மலை தொடருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது. வேளச்சேரி பகுதிக்கு அருகில் உள்ள பகுதி புனித தோமையர் ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இருக்கிறது. இதன் சுற்று வாட்டர பகுதிகளாக புனித தோமையர் மலை, கிண்டி, வேளச்சேரி, புழுதிவாக்கம், உள்ளகரம், நங்கைநல்லூர் மற்றும் பழவந்தாங்கள் பகுதிகள் அமைந்துள்ளன. இங்கிருந்து தொடருந்து மார்கமாகவும், பேருந்து மார்கமாகவும் பயணிக்க ஏதுவான பகுதியாகும். பல புகழ் பெற்ற கோயில்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள், மற்றும் பள்ளிகள் இப்பகுதியில் உள்ளன.

நெடுஞ்சாலைகள்

தொகு

தெற்கு நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆதம்பக்கத்தை ஒட்டியே அமைந்துள்ளது.

பள்ளிக்கூடங்கள்

தொகு

ஆதம்பாக்கம் பகுதியில் கீழ்கண்ட பள்ளிக்கூடங்கள் உள்ளன:

  • தூய. மார்க்ஸ் நடுப்பள்ளி
  • ஜி. கே. ஷெட்டி இந்து வித்யாலயா மெட்ரிக் பள்ளி
  • வியாச வித்யாலயா மெட்ரிக் மற்றும் உயர்நிலைப் பள்ளி
  • டி. ஏ. வி. பள்ளி
  • தூய. பிரித்தொவின் அகாடமி
  • இந்திரா காந்தி மெட்ரிக் பள்ளி
  • லிட்டில் பிளவர் பள்ளி
  • யூனிட்டி பொதுப் பள்ளி
  • புதிய பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி
  • ரோசரி மெட்ரிக் பள்ளி

மருத்துவமனைகள்

தொகு

ஆதம்பாக்கம் பகுதியில் கீழ்கண்ட மருத்துவமனைகள் உள்ளன

  • ஜெயலக்ஷ்மி அரசு மருத்துவமனை
  • எஸ். பி. மருத்துவமனை
  • ஜி. ஆர். மருத்துவமனை
  • பொன்மாளிகை மருத்துவமனை

கடைவீதி

தொகு
 
கருணீகர் தெரு கடைவீதி

ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள கருணீகர் தெரு உள்ளபடி அப்பகுதியின் பெரிய கடைவீதியாக கருதப்படுகிறது.

வழிபாட்டுத் தலங்கள்

தொகு

கோயில்கள்

தொகு
 
ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில், பிருந்தாவன் நகர்.
  • ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில், பிருந்தாவன் நகர்
  • நாகமுத்து மாரியம்மன் கோவில்
  • புவனேஸ்வரி அம்மன் கோவில்
  • பழாண்டி அம்மன் கோவில்
  • ஐயப்பன் கோவில்
  • பாப்பாத்தி கருமாரியம்மன் ஆலயம் டாக்டர் அம்பேத்கர் நகர் (குயில் குப்பம்)

தேவாலயங்கள்

தொகு
 
புனித மார்க் கத்தோலிக்க தேவாலயம் ஆடம்பாக்கத்தில் உள்ள ஒரு முக்கியமான கத்தோலிக்க தேவாலயம் ஆகும்.
  • புனித மார்க் தேவாலயம்

பள்ளிவாசல்கள்

தொகு
  • மஸ்ஜித் தபாரக்
  • மஸ்ஜித் முபாரக்

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. Falling Rain Genomics, Inc - Adambakkam
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Adambakkam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.



"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதம்பாக்கம்&oldid=3851943" இலிருந்து மீள்விக்கப்பட்டது