இந்திரா நகர், சென்னை

இந்திரா நகர் (ஆங்கில மொழி: Indira Nagar) சென்னைப் பெருநகரின் தென்பகுதியில் அமைந்துள்ள செல்வச்செழிப்பான புறநகர்ப் பகுதியாகும்.

இந்திரா நகர்
சுற்றுப்புறப் பகுதி
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
பெருநகரப்பகுதிசென்னை
அரசு
 • நிர்வாகம்சென்னை மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
திட்டமிடும் முகமைசென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
உள்ளாட்சி அமைப்புசென்னை மாநகராட்சி
இணையதளம்www.chennai.tn.nic.in
இந்திரா நகர்ப் பகுதியில் ராஜீவ் காந்தி சாலை

1970களின் பிற்பகுதியிலும் 1980களின் துவக்கத்திலும் இந்திரா நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் உருவாக்கப்பட்டது. வீட்டுமனைகள், அடுக்ககங்கள், வணிக வளாகங்கள், அகன்ற சாலைகள், பள்ளி மண்டலங்கள், பேருந்து முனையங்கள், பூங்காக்களை இந்த வாரியம் திட்டமிட்டு உருவாக்கியது. முறையாக அரசால் திட்டமிடப்பட்ட நகர்புறப் பகுதியாக இந்திராநகர் விளங்குகின்றது. அதே காலகட்டத்தில் வீட்டு வசதி வாரியம் அண்ணா நகர், கேகே நகர், அசோக் நகர் மற்றும் பெசண்ட் நகர் பகுதிகளையும் உருவாக்கியது. சென்னை திரள் விரைவுப் போக்குவரத்து அமைப்பின் இந்திரா நகர் தொடருந்து நிலையம் இப்பகுதிக்கு சேவையளிக்கிறது. இந்து மேல்நிலைப்பள்ளி இப்பகுதியில் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரா_நகர்,_சென்னை&oldid=4132074" இலிருந்து மீள்விக்கப்பட்டது