தமிழ்நாடு பதின்மப் பள்ளிகள் இயக்ககம்

தமிழ்நாடு பதின்மப் பள்ளிகள் இயக்ககம் (Directorate of Matriculation Schools, Tamil Nadu) தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகளைக் கட்டுப்படுத்தும் ஓர் அங்கீகார மற்றும் ஆட்சி அமைப்பாகும். இந்தியாவிலேயே தனிப்பட்டநிலையில் 1971ஆம் ஆண்டுவரை தமிழ்நாட்டில் மட்டுமே பல்கலைக்கழகங்கள் இடைநிலைப்பள்ளிக் கல்வியையும் கட்டுப்படுத்தி வந்தன; அத்தகைய பள்ளிகளில் படித்தவர்கள் மெட்ரிகுலேசன் முறைமையில் படித்தவர்களாக அறியப்பட்டனர்.[1] தமிழ்நாட்டில் உள்ளப் பள்ளிகளில் ஏறத்தாழ 5% இந்த முறைமையின் கீழ் உள்ளன.[2]

இந்தப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழியாக உள்ளது. பத்தாவது வகுப்புவரை தனியான கல்வித்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் உயர்நிலைக் கல்வியில் 11 மற்றும் 12வது வகுப்புகளில் தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியத்தின் கல்வித்திட்டத்தை பின்பற்றுகின்றனர்.[3] பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் இணைத்துக்கொள்ளப் படுகின்றன[4]

மாநிலத்தில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்கில் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககம் தமிழகத்தில் அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் மொத்த பள்ளிகளில் சுமாா் 5 சதவீதம் மற்றும் ஒட்டுமொத்த மாணவர் எண்ணிக்கையில் 25 சதவீததிற்கும் அதிகமானவர்கள் தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் வாரியத்தின் கீழ் வருகிறாா்கள். இந்த வாரியத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு வரை மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் வாரியத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிறாா்கள். தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் போர்டு பள்ளிகளின் 2005 - 2008 வரையிலான பாடத்திட்டம் மற்றும் அவற்றின் திருத்தம் ஒரு கட்டமாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், பல மேக்ரோ மற்றும் மைக்ரோ நிலை மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதாவது 14 ஆண்டு பள்ளிப்படிப்பில் வயதுக்கு ஏற்ற கற்றல் உத்திகளுடன் தனித்துவமான நிலைகளாகப் பிரித்தல் மற்றும் அந்த நிலைகளுக்கு இடையில் தடையற்ற மாற்றங்களை வழங்குதல், முதன்மை கட்டத்திலேயே கணினிகளை அறிமுகப்படுத்துதல் என பல உள்ளன.

மேற்கோள்கள்தொகு

  1. Education world: the human development magazine (D. Thakore) 6 (1-6). 2004. 
  2. James W. Tollefson and Amy Tsui, தொகுப்பாசிரியர் (September 1, 2003). Medium of instruction policies: which agenda? whose agenda?. Lawrence Erlbaum. பக். 187. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8058-4278-0. 
  3. Soo, Neelam (December 1, 2003). Management of School Education. APH Publishing Corporation. பக். 179. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8176485004. 
  4. "Permanent recognition sought for matriculation schools". தி இந்து. May 26, 2004. Archived from the original on 2004-06-26. https://web.archive.org/web/20040626211451/http://www.hindu.com/2004/05/26/stories/2004052600660300.htm. பார்த்த நாள்: 2009-08-17. 

வெளியிணைப்புகள்தொகு

Homepage of the Directorate of Matriculation Schools, Tamil Nadu