விக்கிப்பீடியா பேச்சு:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - இரண்டாம் காலாண்டு 2023

2017 ஆம் ஆண்டில் தமிழகத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. அதன் வாயிலாக உருவான கட்டுரைகளை துப்புரவு செய்து, செம்மைப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

செம்மைப்படுத்தும் பணியினை விரைவாக்கும் பொருட்டு 2022 ஆம் ஆண்டில் சில முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு, இவ்வாண்டிலும் இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாரத்தான், சிறப்பு மாதம் ஆகிய இணையவழி நிகழ்வுகளின் வாயிலாக இப்பணி சீராகத் தொடர்ந்தாலும் விரைவுபடுத்த இயலவில்லை. 5 ஆண்டுகளாகியும், இன்னமும் 2,250 கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட வேண்டியவையாக உள்ளன. முனைப்புடன் செயல்பட்டு, இப்பணியினை நிறைவுசெய்வதற்கான பரிந்துரைகளை வரவேற்கிறோம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:52, 27 மார்ச் 2023 (UTC)

ஞா. ஸ்ரீதர்

தொகு
  • 5 கட்டுரைகளுக்கு மேல் செம்மைப்படுத்தும் விக்கிப்பீடியர்களுக்கு நினைவுப் பரிசு (தண்ணீர் குடுவை, கேடயம், இதர) வழங்கலாம்.
  • 300 பைட்டுகள் என்பதனை குறைந்தபட்சமாக நிர்ணயிக்கலாம்.
  • மே மற்றும் ஜூன் மாதங்களில் செம்மைப்படுத்தும் பணிமனைகளை நடத்தலாம்.ஸ்ரீதர். ஞா (✉) 16:24, 28 மார்ச் 2023 (UTC)

மகாலிங்கம் இரெத்தினவேலு

தொகு
  • செம்மைப்படுத்தும் பணி என்பது நம் மொழி விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்தும் பணி. ஆகவே, இப்பணிக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.
  • இப்பணியில் ஈடுபட்டு வருபவர்களை ஊக்கப்படுத்த நினைவுப் பரிசு கொடுப்பது என்பது வரவேற்கப்பட வேண்டியதே.
  • தேர்ந்த விக்கிப்பீடியர்களைக் கொண்டு வாரம் ஒரு நாள் புதிய கட்டுரைகள் எழுதாமல் துப்புரவுப் பணி மட்டுமே செய்யலாம்.

--TNSE Mahalingam VNR (பேச்சு) 01:40, 29 மார்ச் 2023 (UTC)

கு. அருளரசன்

தொகு
  • இப்பணியில் ஈடுபடுபவர்களை ஊக்கபட்டுத்தி நினைவு பரிசு கொடுப்பது வரவேற்கத்தக்கது. இந்தப் பகுப்பில் உள்ள திருத்தி மேம்படுத்துவது மிகவும் அவசியம்.
  • ஆசிரியர் பகுப்பில் உள்ள கட்டுரைகளில் பல கட்டுரைகள் பழைய பயனர்களால் உருவாக்கபட்ட கட்டுரைகளாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஆசிரியர் சிலர் தங்கள் மாவட்ட ஆசிரியர்கள் துவக்கிய கட்டுரைகள் என்ற பகுப்பில் பழைய கட்டுரைகளையும் சேர்த்துள்ளனர். எனவே முதலில் கட்டுரையின் வரலாற்றை ஒரு முறை சரிபார்ப்பது அவசியம். எடுத்துக் காட்டுக்கு கருங்கல், கரந்தைத் திணை, வஞ்சித் திணை ஆகிய கட்டுரைகளைப் பார்க்கலாம்.--கு. அருளரசன் (பேச்சு) 09:56, 1 ஏப்ரல் 2023 (UTC)
தகவலுக்கு நன்றி. —-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:04, 1 ஏப்ரல் 2023 (UTC)
@Arularasan. G: ஆனால், இன்னொரு பிரச்சனையும் உள்ளது. கிருஷ்ணன்கோவில் (நாகர்கோவில்) எனும் கட்டுரையின் வரலாற்றை இன்னமும் கவனத்துடன் பாருங்கள். பழைய உள்ளடக்கம் முற்றிலும் மாறிவிட்டது. பழைய கட்டுரையானது, சிறீவில்லிபுத்தூர் அருகிலுள்ள கிருஷ்ணண்கோயில் பற்றியது. —-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:19, 1 ஏப்ரல் 2023 (UTC)
ஓ நீங்கள் கூறிய பிறகே அதை கவனித்தேன். அதில் உள்ள கூடுதல் தகவல்களை சிறீவில்லிபுத்தூர் அருகிலுள்ள கிருஷ்ணண்கோயில் கட்டுரையில் சேர்த்துவிட்டேன்.--கு. அருளரசன் (பேச்சு) 13:06, 1 ஏப்ரல் 2023 (UTC)
@Arularasan. G: இங்குள்ள உரையாடல்களைக் கவனியுங்கள். மண்ணியல் கட்டுரையிலும் over-write நடந்திருக்கலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:54, 2 ஏப்ரல் 2023 (UTC)
உரையாடலை கவனித்தேன் மண்ணியல் கட்டுரையில் நடந்துள்ள குழப்பங்களையும் கண்டேன் அதைக் களைந்துள்ளேன். --கு. அருளரசன் (பேச்சு) 07:00, 2 ஏப்ரல் 2023 (UTC)
@Arularasan. G: இங்கு குறிப்பிட்டுள்ளபடி, தங்களது பங்களிப்புகளை ஆவணப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.—-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:31, 3 ஏப்ரல் 2023 (UTC)

பாலசுப்ரமணியன்

தொகு

செம்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பரிசு வழங்கலாம் என்பது எனது கருத்து.--Balu1967 (பேச்சு) 11:34, 29 மார்ச் 2023 (UTC)

ஆதரவு S.BATHRUNISA 07:42, 3 திசம்பர் 2023 (UTC)Reply

செல்வசிவகுருநாதன்

தொகு

செம்மைப்படுத்துதலுக்கான வரையறையை இங்கு பட்டியலிட்டுள்ளேன். கூடுதல் எதிர்பார்ப்புகளை தொடர்ச்சியாக பட்டியலிடலாம். மாற்றங்களையும் பரிந்துரைக்கலாம்.

குறைந்தபட்ச செம்மையாக்கம்

  1. குறைந்தது 5 முழுமையான தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
  2. கலைக்களஞ்சியத்திற்குரிய நடையில் அறிமுகம் இருத்தல் வேண்டும்.
  3. குறைந்தது ஒரு மேற்கோள் இருக்க வேண்டும். அது முறையாக காட்டப்படல் வேண்டும்.
  4. குறைந்தது ஒரு பகுப்பாவது இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். பொருத்தமான பகுப்பை, இயன்றளவு துல்லியமானதை இடவேண்டும்.
  5. சிவப்பிணைப்புகளை நீக்க வேண்டும்.
  6. கட்டுரைத் தலைப்பை விக்கித் தரவில் இற்றை செய்யவேண்டும்.

மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:32, 29 மார்ச் 2023 (UTC)

நிதியுதவிக் குறித்து

தொகு

@Selvasivagurunathan m: வணக்கம். இந்த திட்டத்தில் நினைவுப் பரிசு/பாராட்டுப் பரிசு அளிக்க நிதியுதவி 40 ஆயிரத்திற்கு குறைவாகத் தேவைப்படும் எனில் இங்கு விண்ணப்பிக்கலாம். 30 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். மேலும். 500 டாலருக்கு மேல் தேவையெனில் இங்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட இலக்கை அடையும் அனைவருக்கும் பரிசு என்பது சரிவராது என்று தோன்றுகிறது. குறிப்பிட்ட இலக்கையடைந்த முதல் மூன்று பேர், ஆறுதல் பரிசு, பெண்கள், புதுப்பயனர் என்று பிரித்துக்கூட பரிசு வழங்கலாம். அதனுடம் ஒரு சிறிய பயிற்சி நிகழ்ச்சியையும் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் விண்ணப்பம் செய்யும் முன் இத்திட்டத்தைப்பற்றி ஆலமரத்தடியில் தெரிவித்து சமூகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 09:52, 30 மார்ச் 2023 (UTC)

@Balajijagadesh: துப்புரவு / செம்மைப்படுத்துதல் என்பதாக பணி இருப்பதால், ஒரு போட்டியாகக் கருதாமல், பங்களிப்பிற்கு அங்கீகாரம் வழங்குதல் என்பதாகப் பார்க்கிறோம். எனவேதான் நினைவுப் பரிசு/பாராட்டுப் பரிசு எனக் குறிப்பிட்டுள்ளோம். இலக்கினை சற்று அதிக எண்ணிக்கைக்கு உயர்த்தலாம். பணியின் அளவைப் பார்க்கும்போது, 25 கட்டுரைகள் என்பது பொருத்தமான இலக்காக இருக்கும் என கருதுகிறேன். 50 பேர் கலந்துகொண்டு ஆளுக்கு 25 கட்டுரைகளை செம்மைப்படுத்தினார்கள் எனில் 1,250 கட்டுரைகள்.
  1. பணி மனை நடத்தும் எண்ணமும் இருக்கிறது. நீங்கள் பரிந்துரைத்தபடி, ஆலமரத்தடியில் தனது கருத்தினை சிறீதர் தெரிவித்துள்ளார். பயனர்களின் கருத்துகளுக்காக காத்திருக்கிறோம். முதற்கட்ட வழிகாட்டல்களுக்கு மிக்க நன்றி.
  2. இன்னொரு கேள்வி: CIS-A2K தரும் நிதியானது இந்திய உரூபாயில் இருக்குமா அல்லது டாலரில் இருக்குமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:50, 30 மார்ச் 2023 (UTC)
    CIS அளிக்கும் நிதி இந்திய ரூபாயில் இருக்கும்.
    பங்களிப்புப் பரிசு என்பது கட்டணத் தொகுப்பாக மாறாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பாலாஜி (பேசலாம் வாங்க!) 11:25, 30 மார்ச் 2023 (UTC)
@Balajijagadesh: கட்டணத் தொகுப்பு என்பது எதனைக் குறிக்கிறது? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:03, 30 மார்ச் 2023 (UTC)
போட்டி என்றால் குறிப்பிட்ட ஒரு கரு தொடர்பான கட்டுரைகளையோ அல்லது புதியவர்களுக்காகவோ நாம் ஏற்பாடு செய்வது. இந்த துப்புரவுப் பணி அதில் சேராது. ஆனாலும் நாம் நினைவுப் பரிசுகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம் தானே. அதனால் தான் இது கட்டணத் தொகுப்பாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். (உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் எனில் 100 தொகுப்புகளுக்கு 100 ரூபாய் எனப் பணம் பெறுவது போன்றது). ஏற்கனவே தமிழ் விக்கியில் கட்டுரைக்குப் பணம் தந்தது தொடர்பாக ஆலமரத்தடியில் உரையாடல் நடந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். ஸ்ரீதர். ஞா (✉) 08:30, 1 ஏப்ரல் 2023 (UTC)

பள்ளி கட்டுரைகளை நீக்குதல் குறித்து

தொகு

வணக்கம்,விக்கிப்பீடியாவில் பள்ளிகள் தொடர்பாக ஆசிரியர்கள் உருவாக்கிய கட்டுரைகளை நீக்கலாமா? மற்றவர்களது கருத்தினையும் தெரிவிக்கவும்.நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 04:24, 3 ஏப்ரல் 2023 (UTC)

சுமார் 40 கட்டுரைகள் இருக்கின்றன. கட்டுரையின் குறிப்பிடத்தக்கமையை கவனித்து அதற்கேற்றவாறு, நீக்கிவிடலாம். சில கட்டுரைகளுக்கு குறிப்பிடத்தக்கமை இருப்பதாகக் கருதினால், அவை குறித்து அந்தந்த பேச்சுப் பக்கங்களில் உரையாடி முடிவெடுக்கலாம். உதாரணமாக, ஒரு பள்ளி 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருதல் என்பது குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:17, 3 ஏப்ரல் 2023 (UTC)
இந்தப் பரிந்துரை குறித்தான கருத்துகளைப் பெறுவதற்கு, ஏப்ரல் 7 அன்று இந்திய நேரம் மாலை 6 மணி என்பது காலக்கெடுவாக நிர்ணயிக்கப்படுகிறது. மாற்றுக் கருத்து எதுவும் பதிவாகாவிட்டால், இந்தப் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:48, 6 ஏப்ரல் 2023 (UTC)
வணக்கம். எந்த சிறப்புகளும் இல்லாத பள்ளிகள் என்பதை எப்படித் தீர்மானம் செய்வது? அறிவுக் கண்ணைத் திறக்கும் எந்த ஒரு இடமுமே (பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள்) சிறந்ததாகவே கருதுகிறேன். நம் விக்கியில் போதிய தவல்கள் இல்லையென்றால் அது தனியாக கவனம் கொள்ள வேண்டிய விடயம். இவை இங்கிருந்து நீக்கப்பட வேண்டுமா? @மா. செல்வசிவகுருநாதன் அட்டவணைகளைப் பார்த்த பிறகும் என்னுடைய கருத்துகளில் மாற்றம் ஏதுமில்லை. என்றாலும், பொது கருத்திற்கு நான் தலை வணங்குகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 17:05, 6 ஏப்ரல் 2023 (UTC)

இந்தக் கட்டுரைகளை தக்கவைக்க வேண்டுமெனில் உரிய மேற்கோள்கள் வேண்டும். செம்மைப்படுத்துதல் பணியில் இருப்பவர்களுக்கு உதவி கிடைத்தால், நன்று; மேம்படுத்துவோம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:53, 13 ஏப்ரல் 2023 (UTC)

@Nan: இந்தப் பள்ளிகளை மாவட்டவாரியாக பட்டியலிட்டு, பட்டியல் கட்டுரைகளாக உருவாக்கலாம் என்பது எனது இன்னொரு பரிந்துரை. தங்களின் கருத்தினை வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:30, 14 ஏப்ரல் 2023 (UTC)

  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 13:06, 15 ஏப்ரல் 2023 (UTC)
வணக்கம் மா. செல்வசிவகுருநாதன், நந்தகுமார் எனது சில ஐயங்கள்
  1. ஒவ்வொரு பள்ளிக்கும் UDISE எனும் எண் உள்ளது. ( அரசு வழங்கும் எண்) அதனையே ஓர் ஆதாரமாகக் கருத வாய்ப்புள்ளதா? உதாரணம்:331910028##
  2. //எந்த சிறப்புகளும் இல்லாத பள்ளிகள் என்பதை எப்படித் தீர்மானம் செய்வது?// இதனைக் குறிப்பிட்டதற்குக் காரணம் அரசே சிறப்பு வாய்ந்த பள்ளிகள் என்று ஒரு முறை தகவல் கேட்டிருந்தது. (அதில் மிகப் பழமையான பள்ளிகள்,தமிழக அல்லது தேசியத் தலைவர்கள் அந்தப் பள்ளியில் பயின்று இருப்பதனைக் குறிப்பிட்டிருந்தது)
  3. ஒரே ஊரில் இருக்கும் பள்ளிகளை ஒரே கட்டுரையாக்கலாமா? உதாரணம், நாங்கூர் பள்ளிகள் எனும் தலைப்பில் துவக்கப்பள்ளி, உதவிபெறும் பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்றையும் சேர்க்கலாமா?
(குறிப்பு:பள்ளிக் கட்டுரைகளுக்கு ஏதேனும் வரையறையினை உருவாக்கினால் பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளை உருவாக்கலாம்)
நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 18:28, 17 ஏப்ரல் 2023 (UTC)
வணக்கம், சிறீதர்,
  1. அரசு வழங்கும் எண்ணை ஆதாரமாகக் கொள்வது சிறப்பே.
  2. என்னுடையக் கருத்தில் பழமையானப் பள்ளிகள், தலைவர்கள் படித்த பள்ளிககளை மட்டுமே சிறந்தவைகளாகக் கருதத்தேவையில்லை. சிறப்பற்றதாக இன்று கருதும் பள்ளிகள் நாளையே சிறப்பான பள்ளிகளாகக் கருதப்படும் சாத்தியங்கள் உள்ளன. இது தவிர, கிராமமோ, நகரமோ, மாணவர்களின் கல்விக்கண்ணைத் திறக்கும் எந்தவொரு பள்ளியுமே சிறந்த பள்ளியே. நமக்கு தேவையான, இரண்டாம் நிலை தரவுகள் இல்லாதப் பள்ளிகளை, மாவட்ட- , நகர- ரீதியில் அட்டவணையிட்டும், பிற பள்ளிகளுக்குத் தனித்த பக்ககங்களை உருவாக்குவதுமே நம் பணியாக இருக்க வேண்டும் என்பது, என் கருத்து. நடேசன் ஆரம்பப் பள்ளியில் படித்த "நந்தகுமார்" வெளிநாடுகளுக்குச் சென்று பேராசிரியர் வரை வளர முடியும் என்பதை எப்படி முன்கூட்டியே கணிக்க முடியும். இன்றுவரை, என்னுடைய ஆரம்பப் பள்ளி, விக்கிப்பக்கம் இல்லாமலே உள்ளது. தகுந்த தரவுகள் இல்லாததால் என்னால் ஆரம்பிக்க முடியவில்லை. இது ஒரு உதாரணம் மட்டுமே.
  3. சில ஊர்களில் உள்ள பலவகைப்பட்ட பள்ளிகளை ஒன்றிணைத்து ஒரு பக்கம் உருவாக்கலாம். ஆனால், இதைப் பொது விதியாகக் கொள்ளவது சரியில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு ஊரில், துவக்கப்பள்ளிக்குத் தரவுகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், உதவி பெரும் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆகியன தரவுகள் இருந்தால், தனி தனி பக்கங்களை அவற்றிற்கு உருவாக்குவதே சாலச் சிறந்தது, என்பது என் எண்ணம்.
(குறிப்பு:பள்ளிகளுக்கும், மக்கள் வழிபடும் தலங்களுக்கும், விக்கி பக்கங்களை உருவாக்குவதில் எந்தவிதமானக் கட்டுப்பாடும் தேவையில்லை என்பதே என்னுடையக் கருத்தாக உள்ளது).
நன்றி!!!--நந்தகுமார் (பேச்சு) 20:41, 17 ஏப்ரல் 2023 (UTC)
தங்கள் கருத்திற்கு நன்றி. ஸ்ரீதர். ஞா (✉) 02:04, 18 ஏப்ரல் 2023 (UTC)
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 07:52, 18 ஏப்ரல் 2023 (UTC)
வணக்கம் நந்தகுமார், அரசு மேல்நிலைப்பள்ளி ஆரல்வாய்மொழி இந்தக் கட்டுரை போல் இருந்தால் போதுமா? மாற்றங்கள் தேவையெனில் குறிப்பிடவும்.

குறிப்பு: இங்கு தரவுகளை சரி பார்க்கலாம். ஸ்ரீதர். ஞா (✉) 07:54, 19 ஏப்ரல் 2023 (UTC)

வணக்கம் சிறீதர், ஆம், இது ஒரு ஆரம்பத்திற்கான பக்கமாக இருப்பதற்கு போதுமென்றே எண்ணுகிறேன். ஏனெனில், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் பள்ளிகளைப் பார்த்தால், அவர்கள் தங்கள் பள்ளிப் பக்கங்களை மேம்படுத்தக்கூடும். அனைவரும் சேர்ந்து பங்களித்து உருவாக்குவதுதானே நம் விக்கிபீடியா!--நந்தகுமார் (பேச்சு) 09:49, 19 ஏப்ரல் 2023 (UTC)
தரவுகளை சரிபார்க்க சிறீதர் கொடுத்துள்ள இணைப்பை கட்டுரையில் எவ்வாறு இணைக்கலாம் ? அரசு மேல்நிலைப்பள்ளி ஆரல்வாய்மொழி கட்டுரையில் இணைத்தேன். ஆனால் அது சரியான இணைப்புக்கு செல்லவில்லை. வழிகாட்டவும்.--கி.மூர்த்தி (பேச்சு) 09:55, 19 ஏப்ரல் 2023 (UTC)
வணக்கம் மூர்த்தி, சீறிதர் கொடுத்துள்ள பக்கத்தில், நமக்குத் தேவையான தரவுகளை கேட்பதன் மூலம் பெறலாம். உதாரணமாக, Kanniyakumari (1st box), second box (I do not know, so I left it blank), GHSS-ARALVAYMOZHI (3rd box) என்பதைத் தேடுவதன் மூலம் நமக்குத் தேவையான தகவல்களை பெற முடியும். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 10:05, 19 ஏப்ரல் 2023 (UTC)
ஆம், உங்கள் புரிதல் சரியே. ஸ்ரீதர். ஞா (✉) 10:49, 19 ஏப்ரல் 2023 (UTC)
அரசு மேல்நிலைப்பள்ளி ஆரல்வாய்மொழி கட்டுரையின் மேற்கோளை சொடுக்கிப் பாருங்கள்--கி.மூர்த்தி (பேச்சு) 10:20, 19 ஏப்ரல் 2023 (UTC)
ஆம். ஏற்கனவே சொடுக்கிப் பார்த்துவிட்டேன். தனி தேடு பக்கங்களுக்கு இணைப்பினைக் கொடுக்க இயலாது. நீங்கள் கொடுத்துள்ள தேடு பக்கத்திற்கு மட்டுமே இணைப்பைக் கொடுக்க முடியும்.--நந்தகுமார் (பேச்சு) 10:38, 19 ஏப்ரல் 2023 (UTC)
அனைவருக்கும் வணக்கம் பள்ளிகள் குறித்த கட்டுரைகளில் அந்த பள்ளி குறித்த துவக்கிய ஆண்டு, ஆசிரியர் எண்ணிக்கை, மாணவர் எண்ணிக்கை, முடிந்தால் பள்ளியின் சிறப்பு போன்ற அடிப்படைத் தகவல்கள் இருக்கின்ற கட்டுரைகளை தக்கவைத்துக் கொள்ளலாம். உரிய தகவல்கள் இல்லாத கட்டுரைகளை நீக்குவதே நன்று.--கு. அருளரசன் (பேச்சு) 06:00, 19 ஏப்ரல் 2023 (UTC)

தகவல்

தொகு

வணக்கம். நடைபெற்றுவரும் பணியின் ஒரு பகுதியாக, கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் நேரடி நிகழ்வுகளுக்கான திட்டமிடல் நடைபெற்று வருகிறது. இவற்றை மே மாதத்தில் நடத்தலாம் எனும் கருத்துள்ளது. சாத்தியக்கூறுகள் தெளிவான பிறகு, குமுகாயத்தின் கருத்துகள்/ ஒப்புதலுக்காக விரிவான தகவல்கள் இங்கு தரப்படும். நன்றி.- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:19, 17 ஏப்ரல் 2023 (UTC)

பதாகை அறிவிப்பு

தொகு

வணக்கம்,மா. செல்வசிவகுருநாதன் செம்மைப்படுத்துதல் இரண்டாம் காலாண்டு தொடர்பாக பதாகை அறிவிப்பு செய்ய இயலுமா? இதன்மூலம் பலரும் இப்பணியில் இணைய வாய்ப்புள்ளது. ஸ்ரீதர். ஞா (✉) 03:56, 19 ஏப்ரல் 2023 (UTC)

வணக்கம் @Sridhar G: எனக்கு உடன்பாடு. மற்ற பயனர்களின் ஒப்புதலுடன் செய்யலாம் என்பது எனது கருத்து. குறைந்தது, 5 பயனர்களின் ஒப்புதல் / கருத்துகள் அடிப்படையில் முடிவெடுக்கலாம் என கருதுகிறேன். —-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:34, 19 ஏப்ரல் 2023 (UTC)
  ஆதரவு-- சா. அருணாசலம் (பேச்சு) 16:20, 19 ஏப்ரல் 2023 (UTC)
  ஆதரவு-- பாலசுப்ரமணியன்
  ஆதரவு-- சத்திரத்தான்
  ஆதரவு--AntanO (பேச்சு) 07:50, 23 ஏப்ரல் 2023 (UTC)
ஆதரவு S.BATHRUNISA 07:40, 3 திசம்பர் 2023 (UTC)Reply
  ஆதரவு--வசந்தலட்சுமி

செம்மைப்படுத்துதலில் மெய்ம்மயக்க விதிகளைக் கைக்கொள்ளுதல்

தொகு

மிகவும் தேவையான பணி. எனக்கு பங்குகொள்ள ஆர்வம். இயன்றளவு உதவுகின்றேன். தலைப்புகளிலும் கட்டுரையிலும் மெய்ம்மயக்க விதிகள் பொருந்துமாறு திருத்துதல் நல்லதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். தமிழிலக்கணத்தில் இது உரயிரானவை.--செல்வா (பேச்சு) 08:08, 14 அக்டோபர் 2023 (UTC)Reply

@செல்வா: வணக்கம் ஐயா. இந்தத் திட்டமானது ஏப்ரல், மே, சூன் ஆகிய 3 மாதங்களை உள்ளடக்கிய இரண்டாம் காலாண்டில் நிறைவுற்றது. எனினும் விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2023 எனும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டப் பக்கத்தில் விரிவான வகையில் வழிகாட்டல்கள் தரப்பட்டுள்ளன. நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:28, 14 அக்டோபர் 2023 (UTC)Reply
நன்றி செல்வா (பேச்சு) 14:10, 14 அக்டோபர் 2023 (UTC)Reply

நினைவுப் பரிசு

தொகு

வணக்கம், படிவம் நிரப்பிய 11 பங்கேற்பாளர்களுக்கும் நினைவுப் பரிசு டிசம்பர் 6-15 ,2023க்குள் வந்தடையும். நினைவுப் பரிசுபெற்ற பின்னர் இங்கு உறுதிப்படுத்துமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. நன்றி --ஸ்ரீதர். ஞா (✉) 06:04, 3 திசம்பர் 2023 (UTC)Reply

கவனத்திற்கு:@உலோ.செந்தமிழ்க்கோதை, Balu1967, கி.மூர்த்தி, Booradleyp1, Selvasivagurunathan m, Jagadeeswarann99, சத்திரத்தான், Arularasan. G, and Balajijagadesh:

இன்று (04.12.2023) நினைவுப்பரிசு கிடைக்கப் பெற்றேன். நன்றி.--மகாலிங்கம் இரெத்தினவேலு 12:45, 4 திசம்பர் 2023 (UTC)Reply
08-12-2023 இல் நினைவுப் பரிசு கிடைக்கப் பெற்றேன். -- ஸ்ரீதர். ஞா (✉) 15:22, 8 திசம்பர் 2023 (UTC)Reply
இன்று (09.12.2023) நினைவுப்பரிசு கிடைக்கப் பெற்றேன். நன்றி.--கி.மூர்த்தி (பேச்சு) 07:14, 9 திசம்பர் 2023 (UTC)Reply
07.12.2023 அன்று நினைவுப்பரிசு கிடைக்கப் பெற்றேன். நன்றி.--Balu1967 (பேச்சு) 07:30, 9 திசம்பர் 2023 (UTC)Reply
08-12-2023 இல் நினைவுப் பரிசு கிடைக்கப் பெற்றேன். --Booradleyp1 (பேச்சு) 07:51, 9 திசம்பர் 2023 (UTC)Reply
05-12-2023 இல் நினைவுப் பரிசு கிடைக்கப் பெற்றேன். நன்றி.--கு. அருளரசன் (பேச்சு) 15:18, 10 திசம்பர் 2023 (UTC)Reply
11-டிசம்பர்-2023 அன்று கிடைக்கப் பெற்றேன். @Sridhar G: ஏற்பாடு செய்தமைக்கு மிக்க நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:04, 11 திசம்பர் 2023 (UTC)Reply
08-திசம்பர்-2023 இல் நினைவுப் பரிசு கிடைக்கப் பெற்றேன். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 16:36, 12 திசம்பர் 2023 (UTC)Reply
Return to the project page "செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - இரண்டாம் காலாண்டு 2023".