இராசேந்திர சோழன் (எழுத்தாளர்)
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
இராசேந்திர சோழன் (Rajendra Chozhan) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். 1945 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அஷ்வகோஷ் என்ற புனைப்பெயரிலும் எழுதிவந்தார். அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதினார். மார்க்சியப் பார்வை கொண்ட இவர்[1] பின்னர் தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப்பார்வை கொண்டவராக மாறினார். சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் எனக் கலை இலக்கியத்திலும்; அரசியல், அறிவியல், தத்துவம், போராட்டம் எனப் பொதுவாழ்விலுமாக இயங்கினார்.[2] [3]
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇராசேந்திரசோழன் தென்னாற்காடு மாவட்டத்தில் உளுந்தூர்ப்பேட்டையில் 1945 திசம்பர் 17 அன்று பிறந்தார்.[4][5] பெற்றோர் இருவரும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்.[5] பள்ளி ஆசிரியராக இருபத்து ஒரு ஆண்டுகள் பணியாற்றி விருப்பு ஓய்வு பெற்றார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள மயிலத்தில் வசித்து வந்தார். பாதல் சர்க்காரிடம் நாடகப்பயிற்சி பெற்று, தமிழ்நாடு முழுவதும் பல நாடகங்களை இயக்கி அரங்கேற்றினார்.[4] அஸ்வகோஷ் என்ற புனைப்பெயரில் பல நாடகங்களை எழுதினார். சிறுகதை, நாவல், நாடகம் போன்ற புனைவிலக்கியங்கள் மட்டுமின்றி, மார்க்சியம், திராவிடம், தமிழ்த்தேசியம், பின்நவீனத்துவம் போன்றவற்றில் முக்கியமான அரசியல் கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார்.
1970 முதல் 1985 வரை மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் கலை செயற்பாடுகளில் ஈடுபடுத்திய இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கினார்.[4] தொடர்ந்து, கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளில் முரண்பட்டு அதிலிருந்து வெளியேறினார்.[4] 1985 முதல் 2005 வரை தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியில் வினையாற்றினார். பின்னர் தமிழ்த்தேச மார்க்சியக் கட்சியைத் தொடங்கினார். [6]
வெளியிட்ட இதழ்கள்
தொகு'உதயம்', 'பிரச்சனை', 'மண்மொழி' ஆகிய இதழ்களை வெளியிட்டார்.
இறப்பு
தொகுசிறிது காலமாக உடல்நலமின்றி இருந்த நிலையில், 2024 மார்ச் 1 அதிகாலையில் காலமானார்.[4] இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர்.[5]
படைப்புகள்
தொகுசிறுகதைகள்
தொகுஇராசேந்திரசோழன் பின்வரும் 79 சிறுகதைகளை எழுதியிருக்கிறார்: (அகரவரிசையில்)
- அவரோட லோகம் (இருபால் அத்துமீறல் கதை)
- அவுட்பாஸ்
- அன்பின் வழியது (தமிழினி இணைய இதழ்)
- இச்சை
- இசைவு (தமிழினி இணைய இதழ்)
- இடம்
- இணக்கம்
- இழை
- உளைச்சல் (தமிழினி இணைய இதழ்)
- ஊற்றுக்கண்
- ஊனம் (இருபால் அத்துமீறல் கதை)
- எங்கள் தெருவில் ஒரு கதாபாத்திரம் (1971) (ஆனந்த விகடன்) (மூன்றாவதுகதை)
- எதிர்பார்ப்புகள் (இருபால் அத்துமீறல் கதை)
- கடன்
- கரசேவை (அரசியற்பகடி அங்கத உருவகக்கதை)
- கழுதையின் வாயில் (தமிழினி இணைய இதழ்)
- காசுக்காக அல்ல
- காணிக்கை (தமிழினி இணைய இதழ்)
- கிட்டுதல் (அரசியற்பகடி அங்கத உருவகக்கதை)
- குருவிவர்க்கம்
- கொஞ்சம் இருட்டுக்கு வந்துபாருங்கள்
- கோணல்வடிவங்கள் (கசடதபற இதழ் எண் 10; 1971 சூலை, பக்.2-4, 13) (இருபால் அத்துமீறல் கதை)
- கைக்கிளை
- சடங்கு
- சவாரி (தீராநதி, 2006 பிப்ரவரி)
- சாம்பல் குவியலில்
- சாவி
- சிதைவுகள் (இருபால் அத்துமீறல் கதை) (விழிப்பு இதழில் வெளிவந்தது)
- சில சந்தர்ப்பங்கள் ((பாலியல் தொழிலாளி கதை) (செம்மலர்)
- சுழல்காற்றும் சருகுகளும் (தமிழினி இணைய இதழ்)
- சூரப்பன் வேட்டை
- சூழல் (இருபால் அத்துமீறல் கதை)
- சென்னையில் பார்க்க வேன்டிய இடங்கள்
- டெய்லர் கந்தசாமி
- தக்கார் தகவிலார்
- தனபாக்கியத்தோட ரவ நேரம் (தமிழினி இணைய இதழ்)
- தற்செயல்
- தாகம்
- தோது
- நாட்டம் (இருபால் அத்துமீறல் கதை)
- நாய்வேஷம் (தமிழினி இணைய இதழ்) (இருபால் அத்துமீறல் கதை)
- நாவன்மை (அரசியற்பகடி அங்கத உருவகக்கதை)
- நான் பண்ணாத சப்ளை
- நிலச்சரிவு
- நீதி
- பகல்தூக்கம்
- பக்கவாத்தியம்
- பக்தி மார்க்கம்
- பகை (தமிழினி இணைய இதழ்)
- பரிணாமச் சுவடுகள்
- பலவீனம் (இரண்டாவது கதை)
- பறிமுதல் (செம்மலர்)
- பற்று
- பாசிகள் (பாலியல் தொழிலாளி கதை), (பிரச்சினை இதழில் வெளிவந்தது
- பிரார்த்தனைகளும் பிரசாதங்களும்
- புரட்சிப் பயணம் (அரசியற்பகடி அங்கத உருவகக்கதை)
- புற்றில் உறையும் பாம்புகள் (கசடதபற)
- பெண் என்று சொல்லிடிலோ! (தமிழினி இணைய இதழ்)
- பைத்தியம்
- பொழுது
- பேதைமை
- மடை
- மதராஸும் மன்னார்சாமியும்
- மயக்கம்
- மனக்கணக்கு (முதற்கதை)
- முனைப்பு
- மையம்
- ருசிப்பு
- ரோதனை
- வரம்பு
- வன்மம் (தமிழினி இணைய இதழ்)
- வானம் வெளிவாங்கி (1972) ((பாலியல் தொழிலாளி கதை), (அஃக் இதழ்)
- விசுவாசம்
- விபத்து
- விருந்து
- விவஸ்தை
- வினை
- வெளிப்பாடுகள்
- வைபவம் (செம்மலர், 1973)
இக்கதைகளை (1) அரசியல் இயக்கப் பகடி அங்கதக் கதைகள் (1985-2011 காலப்பகுதியில் எழுதப்பட்டவை), (2) காமத்திளைப்புப் பாலியல் கதைகள் (உட்பிரிவு: அ. பாலியல் தொழிலாளி கதைகள், ஆ. இருபால் அத்துமீறல் கதைகள்), (3) நவீன - பின்நவீன யதார்த்தக்கூறுகள் என பேராசிரியர் வே. மு. பொதியவெற்பன் பகுக்கிறார்.[6] மேலும் அவற்றை (1) விமர்சன யதார்த்தவாதக் கதைகள், (2) இலக்கிய யதார்த்த கதைகள்
குறுநாவல்கள்
தொகு- உறவு பந்தம் பாசம்
- சிறகுகள் முளைத்து; முதற்பதிப்பு: 1988 சனவரி, சரவணபாலு பதிப்பகம், 33-இ, கீழ செட்டி தெரு, விழுப்புரம், பக்.146+54); இரண்டாம் பதிப்பு: 2018 தமிழினி, சென்னை
- சீட்டாட்டக்கலைஞன்
- மகாலட்சுமி (தமிழினி இணைய இதழ்)
- பரிதாப எழுத்தாளர் திருவாளர் பரதேசியார் பண்டித புராணம் (1997)
- விதிகள் . . . விதிகள் . . .
- வேட்கை
- 21-வது அம்சம்
நாடகங்கள்
தொகு- தெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள்
- நாளை வரும் வெள்ளம்
- மரியாதைராமன் மதிநுட்ப நாடகங்கள்
- மீண்டும் வருகை
- வட்டங்கள்
- விசாரணை
(அஸ்வகோஷ் என்ற புனைப்பெயரில் எழுதிய இராசேந்திரசோழன் எழுதிய 12 நாடகங்கள் "அஸ்வகோஷ் நாடகங்கள்" என்ற நூலாக வெளிவந்துள்ளன.)
நாவல்
தொகு- காவலர் இல்லம், 2019, தமிழினி
- பதியம், 2023, பக்.224, தமிழினி
பகட்டுரைகள்
தொகு- சிவப்பு காவிகள் (உதயம், சூன் 15,197?)
- தோப்புகளில் தனிமரமாய் (பின்னுரை)
- முக்காட்டு முகங்கள் (பின்னுரை)
சிறுகதைத்தொகுதிகள்
தொகு- எட்டுக் கதைகள், க்ரியா பதிப்பகம்
- சீட்டாட்டக் கலைஞன்,2022, தமிழினி
- தற்செயல் (1994)
- பறிமுதல் (1979)
- இராசேந்திரசோழன் கதைகள் (இருதொகுதிகள்), 2022, தமிழினி
- இராசேந்திரசோழன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்; 2020; டிஸ்கவரி புக்பேலஸ்
- முத்துக்கள் பத்து இராசேந்திர சோழன், 2023, பக்.140, அம்ருதா
குருநாவல் தொகுதிகள்
தொகு- இராசேந்திரசோழன் குறுநாவல்கள் (தொகுப்பு)
- சிறகுகள் முளைத்து
- மகாலட்சுமி, 2021, பக்.191, தமிழினி
- சீட்டாட்டக்கலைஞன்
கட்டுரைத்தொகுதிகள்
தொகு- அணு ஆற்றலும் மானுட வாழ்க்கையும், இரண்டாம் பதிப்பு 2012, பக்.200; மங்கை பதிப்பகம்
- அணுசக்தி மர்மம்: தெரிந்ததும் தெரியாததும்
- அம்பேத்கரின் சாதி ஒழிப்பு - சில சிந்தனைகள்
- அரங்க ஆட்டம் (இருதொகுதிகள்)
- இந்தியம் திராவிடம் தமிழ்த் தேசியம்
- கட்வுள் என்பது என்ன?
- கருத்தியல் மதம் சாதி பெண்
- சாதியம் தீண்டாமை தமிழர் ஒற்றுமை, 2011, பக்.400, மங்கை பதிப்பகம்
- சொர்க்கம் எங்கே இருக்கிறது? (2006)
- சொர்க்கத்துக்குப் போவது எப்படி?
- தமிழ்த் தேசமும் தன்னுரிமையும்
- தமிழ்த் தேசியம் என்றால் என்ன?
- தமிழகம் தேசம் மொழி சாதி
- தலித்தியம் - நோக்கும் போக்கும்
- திராவிடம் மார்க்சியம் தமிழ்த் தேசியம்
- தீண்டாமை ஒழிப்பும் தமிழர் ஒற்றுமையும்
- நாம் ஏன் தமிழ் வழியில் பயில வேண்டும்?, 2013, பக்.32, மங்கை பதிப்பகம்
- பகுத்தறிவின் மூடநம்பிக்கை, தமிழினி
- பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் தேவைதானா?
- பின்நவீனத்துவம் பித்தும் தெளிவும் (கட்டுரைத் தொகுப்பு)
- பெண்கள் சமூகம் மதிப்பீடுகள்
- பொதுவுடைமையும் தமிழர்களும்
- மண், மொழி,மனிதம்,நீதி, 2003, பக்.256, மங்கை பதிப்பகம்
- மார்க்சிய மெய்யியல்:கடவுள் என்பது என்ன?(1995)
- மிதிபடும் மானுடம் மீட்பின் மனவலி,2006, பக்.320, மங்கை பதிப்பகம்
- மொழிக்கொள்கை
படைப்புகள் வெளியான இதழ்கள்
தொகு- அஃக்
- ஆனந்தவிகடன்
- உதயம்
- கசடதபற
- கணையாழி
- கவிதாசரண்
- மண்மொழி
- செம்மலர்
- பிரச்சினை
- யுகவிழிப்பு
- தமிழர் கண்ணோட்டம்
- தீராநதி
- விழிப்பு
மேற்கோள்கள்
தொகு- ↑ "அறிவை ஜனநாயகப்படுத்துவதே என் குறிக்கோள்- இராசேந்திர சோழன் நேர்காணல்", Hindu Tamil Thisai, 2020-10-18, பார்க்கப்பட்ட நாள் 2024-05-18
- ↑ எழுத்தாளர் இராசேந்திர சோழன் (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-05-18
- ↑ "தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் தொடக்கவிழா". திண்ணை. https://old.thinnai.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0/. பார்த்த நாள்: 18 May 2024.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 'களத்திலும் எழுத்திலும் பணியாற்றப் பாதை தந்தவர்' - எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமானார்!, விகடன், மார்ச் 1, 2024
- ↑ 5.0 5.1 5.2 எழுத்தாளர் அஷ்வகோஷ் (எ) இராசேந்திர சோழன் காலமானார், தினமணி, மார்ச் 1, 2024
- ↑ 6.0 6.1 [https://manalveedu.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/ மணல்வீடு 39ஆவது இதழில் வே.மு.பொதியவெற்பன் எழுதிய விளாம்பழங்களும் பன்னீர்ப்பழங்களும்: இராசேந்திரசோழன் கதைகள் என்னும் கட்டுரை