வே. மு. பொதியவெற்பன்

தமிழ் எழுத்தாளர்

வே. மு. பொதியவெற்பன் (பிறப்பு 26 ஏப்ரல் 1949) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர், கவிஞர், இலக்கியத் திறனாய்வாளர் மற்றும் பதிப்பாளர் ஆவார்.

வே. மு. பொதியவெற்பன்
பிறப்புசண்முகசுந்தர நேதாஜி
26 ஏப்ரல் 1949 (1949-04-26) (அகவை 75)
கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம், சென்னை மாகாணம், இந்திய மேலாட்சி (தற்போது தமிழ்நாடு, இந்தியா)
மற்ற பெயர்கள்கனல் வேந்தி
பித்தகுமாரன்
கூத்தப்பறையன்
சூர்யமுகி
மு.வ.தாசன்
பொதிகைச் சித்தர்
குடியுரிமைஇந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
தாக்கம் 
செலுத்தியோர்
வள்ளலார்,
பாப்லோ நெருடா, புதுமைப்பித்தன்,
மு. வரதராசன்,
பிரமிள்
பெற்றோர்வேலம்மாள் (தாய்)
முத்தையா (தந்தை)
வாழ்க்கைத்
துணை
ஆண்டாள்
பிள்ளைகள்ஆ.பொ.பாக்யவினோத்
உறவினர்கள்மனோன்மணியம் பெ. சுந்தரனார் (முன்னோர்)
ச. வையாபுரி (முன்னோர்)
இராமலட்சுமி (மருமகள்)

தொடக்க வாழ்க்கை

தொகு

26 ஏப்ரல் 1949 அன்று வேலம்மாள் - முத்தையா இணையருக்கு மகனாகப் பிறந்த இவரின் இயற்பெயர் சண்முகசுந்தர நேதாஜி.

தன் பதின்பருவத்தில் கும்பகோணம் குருசாமிதாஸ் எனும் நாட்டார் தெருப்பாடகர் வழியே கலை ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டார். என். எஸ். கிருஷ்ணன், எஸ். எஸ். ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா, ம. கோ. இராமச்சந்திரன், ஆகியோரால் திரைப்பட ஈடுபாட்டையும் சி.எஸ் ஜெயராமன், நாகூர் அனிபா, சிவகங்கை சேதுராசன் ஆகியோரால் இசை ஈடுபாட்டையும் பெற்றார்.

திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) ஏற்படுத்திய வாசக சாலைகள், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் ஆகியவற்றின் வழியே இவருக்கு செய்தித்தாள், நூல்கள் வாசிப்புப் பழக்கம் உருவானது. இலக்கிய வாசிப்புப் பழக்கத்தை மு. வரதராசன் (மு.வ) வழியே பெற்றார். காலப்போக்கில் வரதராசன், இராமச்சந்திரன் ஆகியோர் மீதான பற்றை விடுத்ததாகப் பின்னாளில் நினைவுகூர்ந்தார்.[1]

கல்வி

தொகு

கும்பகோணம் நகரில் பல்கலைக்கழக முந்தைய படிப்பு படிக்கையில் இவருக்கு ஆசிரியராக வாய்த்தவர் சா. கு. சம்பந்தன் (விடுதலை இதழின் அன்றைய ஆசிரியரான கி. வீரமணியின் தமர்). அவர் வழிகாட்டுதலில், ‘தமிழ் மாணவர் கழகம்’ எனும் அமைப்பில் பிற மாணவர்களுடன் செயல்பட்டோம். இதுவே இவரின் திராவிட இயக்க ஈடுபாட்டுச் செயற்பாடுகளுக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.[1]

1968-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இக் காலகட்டத்தில் தன் இயற்பெயரை "வே. மு. பொதியவெற்பன்" என்று அரசிதழில் அறிவித்து முறைப்படி மாற்றிக்கொண்டார்.[1] ந. அரணமுறுவல் உடன் திராவிட மாணவர் கழகத் தலைமைப் பொறுப்புகளில் இயங்கினார். இவர்களுடன் இரா. நெடுஞ்செழியனும் பயின்றார். பொதுப்பேரவைக் கூட்டத்தில் "பெரியார்" ஈ. வெ. இராமசாமியையும், திருவாரூர் கே. தங்கராசையும், இம்மாணவர்கள் அண்ணாமலை நகர் வீதிக்கூட்டத்தில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பங்கேற்க வைத்தனர்.[1]

இலக்கியப்பணி

தொகு

புதுமைப் பித்தன் ஆய்வாளர் மற்றும் நிகழ்த்துக் கலைஞராகச் செயல்பட்டுள்ளார். கல்விப் புலத்துக்கு வெளியே நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறார்.[2]

தாக்கம் செலுத்தியோர்

தொகு

"வெவ்வேறு தளங்களில் இயங்கும் சிறுகதைகளைப் புதுமைப்பித்தன் எழுதியுள்ளார். அது, நான் அவரிடமிருந்து கற்ற பாடம்" என்றார் பொதியவெற்பன்.[1]

இதழியல்

தொகு

முனைவன் என்ற சிற்றிதழை 1980-களில் நடத்தி வந்தார். தமிழ்ச் சிற்றிதழ் முன்னோடியான மணிக்கொடி இதழின் பொன்விழா மலரைக் கொண்டுவந்தார்.

அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி, து. இரவிக்குமார் ஆகியோருடன் தோழமை பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். ‘தோழமை’ சார்பில் தொடங்கப்பட்ட நிறப்பிரிகை இதழின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றார். நிறப்பிரிகை-யில் இலக்கியத்துக்கு இடம் இல்லாமையால் ஆசிரியர் குழுவிலிருந்து விலகினார்.

நூல்கள்

தொகு
ஆண்டு தலைப்பு வகை பதிப்பகம்
1986 சூரியக் குளியல் கவிதைகள் & பாடல் தொகுப்பு புரட்சிப் பண்பாட்டு இயக்க வெளியீடு
1989 ‘நிகழ்கலை அனுபவமாகும் கவிதையின் ஒன்னொரு பரிணாமம்

(கவிதா நிகழ்வு அறிமுகமும் ‘போராடும் மானுடம்’ நிகழ்த்துப் பனுவலும்)

ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு சிலிக்குயில் புத்தகப் பயணம்
1990   பறை 1990  தொகைநூல்
2005 புதுமைப்பித்தமும் பிரேமிள் சித்தமும் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு மருதா வெளியீடு
மனமிறக்கும் சாகாக்கலை ஆய்வு நூல்
2006 புதுமைப்பித்தன் கதைகள் அகலமும் ஆழமும் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு பொன்னி வெளியீடு
2009 புதையுண்ட மௌனங்களின் அகழ் மீட்பில்[3] கட்டுரைத் தொகுப்பு

(கையெழுத்துப்படி)

2011 திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல் கட்டுரைத் தொகுப்பு கருப்புப் பிரதிகள் வெளியீடு
2015 கருமை செம்மை வெண்மையைக் கடந்து… ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பறை 2015 தொகைநூல் மணல் வீடு வெளியீடு
2016 தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும் (தொல்காப்பிய-திருக்குறள் உரையியல் ஆய்வுகள்) விஜயா பதிப்பகம்
2018 வானத்தின் மீது மயிலாடக்கண்டேன்

மயில் குயிலாச்சுதடி 

ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு

(புனைகதை விமர்சனம் மற்றும் கதையாடலாய்வு )

அன்னம் வெளியீடு
2022 பெரியாரும் தமிழியல் ஆய்வறிஞர்களும் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு கருப்புப் பிரதிகள் வெளியீடு
கண்டறியாதன கண்டேன் மணல் வீடு வெளியீடு
சமயச்சார்பின்மை   MADRAS REVIEW
சொல்லின் மந்திரமும் சொல் ஓய்ந்த மௌனமும்

(மணிக்கொடிக் கலைஞர்களைப் பற்றிய ஆய்வு)

ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு மருதா வெளியீடு
புதுமைப்பித்தன் சம்சார பந்தம் – கமலா புதுமைப்பித்தன்
என் அரை நூற்றாண்டுக் கவிதை ஆல்பம்
காந்தியமும் பின்னை காந்தியமும்

பதிப்பாளர் பணி

தொகு

சிலி நாட்டின் தேசியக் கவிஞர் பாப்லோ நெருடா நினைவாக சிலிக்குயில் புத்தகப் பயணம் என்ற பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தினார்.[2] ஒருமுறை சென்னைப் புத்தகக்காட்சியில் தீ விபத்து ஏற்பட்டபோது இப் பதிப்பகத்தின் மூலதனத்துக்கே மோசம் வருமளவுக்குப் பாதிப்பு உண்டானது. அதன் பின் ‘எம் சாம்பல்’ என்ற தலைப்பில் பொதியவெற்பன் எழுதிய கவிதை சுபமங்களா உள்ளிட்ட பல இதழ்களில் வெளியானது. பொதியவெற்பனின் பின்னாளைய நண்பரான எழுத்தாளர் கோபிகிருஷ்ணன், ‘சிலிக்குயிலுக்குக் கை கொடுப்போம்’ எனும் வேண்டுகோளுடன் அக்கவிதையை அச்சிட்டு, சிலிக்குயில் முகவரி எழுதப்பட்ட ஒரு பணவிடைப் படிவத்தையும் இணைத்து, 'பிரபலமானவர் விலாசங்கள்’ நூலிலுள்ள பல முகவரிகளுக்கு அனுப்பி உதவினார்.[1]

மாநாடுகளிலும் அரங்கக் கூட்ட வாயில்களிலும் புத்தகங்கள் விற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் பொதியவெற்பன்.[2]

விருதுகள்

தொகு
ஆண்டு நாள் விருது வழங்கியோர் குறிப்பு
2009 சனவரி 24 ஏர்வாடி மணல்வீடு மற்றும்

களரி தெருக்கூத்துப் பயிற்சிப் பட்டறை விருது

-- புதையுண்ட மௌனங்களின் அகழ் மீட்பில்

கையெழுத்துப்படிக்காக

2013 சூன் 15 சிறந்த அரசியல் கட்டுரைக்கான விருது சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை

(நக்கீரன் இதழ்)

‘குறளி’ முதல் இதழில் வெளியான

‘தொ.ப.வின் எடுத்துரைப்பில் புனா ஒப்பந்தம்’ என்ற கட்டுரைக்காக[4]

அரசியல் நிலைப்பாடு

தொகு

2018-இல் ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த நேர்காணலில் "மதவாத அரசியலை எதிர்கொள்ள மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகியவற்றுடன் காந்தியம், சூழலியல், பெண்ணியம், வள்ளலார் சிந்தனைகள் ஆகியவையும் இணைய வேண்டும்” என்றார் பொதியவெற்பன்.

மேலும் "இனத்தூய்மைவாதமும் திராவிட இயக்க எதிர்ப்பும் தமிழ்த்தேசியத்தை இந்துத்துவத்தில் தான் கொண்டுபோய் நிறுத்தும். முருகனையும் சேயோனையும் முப்பாட்டன் என்றால், மாயோன் (திருமால்) நம்பாட்டன் இல்லையா என்ற கேள்வியும் எழத்தானே செய்யும்? ‘நாம் தமிழர்சீமானின் நிலைப்பாடுகள் ஏற்புடையன அல்ல. இளைய தலைவர்களில் திருமாவளவனே நம்பகத்துக்குரிய தலைமைப்பண்பு உடையவராகத் திகழ்கிறார்.” என்றார்.[1]

தனி வாழ்க்கை

தொகு

மனோன்மணியம் பெ. சுந்தரனார், ச. வையாபுரி ஆகியோரின் கொள்ளுப் பேத்தியான ஆண்டாள் என்பவரைத் திருமணம் செய்தார் பொதியவெற்பன். இவர்களுக்கு பாக்யவினோத் என்ற மகன் உள்ளார்.

ஆண்டாளின் குடும்பப் பின்னணி, ஆங்கில இலக்கியம் பயின்றமை ஆகியவற்றால் அவருக்குத் தன் இலக்கியப்பணி பற்றிய புரிந்துணர்வு இருந்தது என்றார் பொதியவெற்பன்.[1]

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 வி.எஸ்.சரவணன். "பொதியவெற்பன் என்னும் இலக்கியப் பயணி!". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2023-04-26. {{cite web}}: External link in |website= (help)
  2. 2.0 2.1 2.2 செல்வ புவியரசன் (15 சூலை 2017). "பொதிகைச் சித்தரின் போர்ப்பறை". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 16 சூலை 2017.
  3. "Keetru | Semmalar | Senthilkumar | Hari Krishnan | Art festival". keetru.com. பார்க்கப்பட்ட நாள் 2023-04-26.
  4. "வே.மு.பொதியவெற்பன் நூல்கள்". பன்மை. 2023-03-26. பார்க்கப்பட்ட நாள் 2023-04-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._மு._பொதியவெற்பன்&oldid=3787608" இலிருந்து மீள்விக்கப்பட்டது