அண்ணாமலை நகர்
அண்ணாமலை நகர் (ஆங்கிலம்:Annamalai Nagar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சிக்கு அருகே அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளது.
அண்ணாமலை நகர் | |
---|---|
பேரூராட்சி | |
ஆள்கூறுகள்: 11°23′48″N 79°42′58″E / 11.39667°N 79.71611°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கடலூர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 16,289 |
மொழிகள் | |
• அலுவலல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 608002 |
தொலைபேசி குறியீடு | 04144 |
வாகனப் பதிவு | TN-91( TN-31 till Jun17,2015) |
இணையதளம் | http://www.townpanchayat.in/annamalainagar |
அமைவிடம்
தொகுமாவட்டத் தலைமையிடமான கடலூரிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்த அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு அருகில் அமைந்த தொடருந்து நிலையம் 3 கிமீ தொலவில் உள்ள சிதம்பரம் ஆகும். இதன் கிழக்கில் பிச்சாவரம் 15 கிமீ; மேற்கில் சிதம்பரம் 4 கிமீ; வடக்கில் பரங்கிப்பேட்டை 15 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு4.20 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,445 வீடுகளும், 16,289 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 95.22% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 884 பெண்கள் வீதம் உள்ளனர். [2]
ஆதாரங்கள்
தொகு