சென்னை புத்தகக் காட்சி

ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி

சென்னை புத்தகக் காட்சி (Chennai Book Fair அல்லது Madras Book Fair) சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் ஓரு நூல் கண்காட்சியாகும். இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு - பொங்கல் காலத்தில், திசம்பர் கடைசி வாரத்திலிருந்து சனவரி மூன்றாம் வாரத்திற்குள், பத்து நாட்கள் நடைபெறும்.[1] இக்கண்காட்சி சென்னையின் சென்னை சங்கமம், சென்னை இசைவிழா நிகழ்ச்சிகளை ஒட்டி நடத்தப்படும் முதன்மையான பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றாக விளங்குகிறது.[2]

சென்னை புத்தகக் காட்சி
45ஆவது புத்தகக் கண்காட்சி காட்சி அரங்கு (2022)
நிகழ்நிலைசெயல்பாட்டில் உள்ளது
நிகழிடம்ஒய்.எம்.சி.ஏ. மைதானம்
அமைவிடம்நந்தனம், சென்னை
நாடுஇந்தியா
முதல் நிகழ்வுதிசம்பர் 14, 1977
வந்தோர் எண்ணிக்கை600,000 ( 2007-இல்)
இணையத்தளம்bapasi.com

வரலாறு

தொகு

முதல் "சென்னை புத்தகக் காட்சி", தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் திசம்பர் 14 முதல் திசம்பர் 24 வரை 1977-இல் நடத்தப்பட்டது. தமிழ்நாடு, முக்கியமாக சென்னை, மற்றும் தென்னிந்தியாவின் பல முக்கியமான பதிப்பகங்களின் சங்கமே தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆகும்.[3][4][5] முதல் கண்காட்சியில் 22 கடைகள் போடப்பட்டிருந்தன; மதரசா-இ-ஆசாம் பள்ளியில் நடத்தப்பட்டது. பி.ஐ. பதிப்பகத்தின் கே வி மாத்தியூ அவர்களின் முன்னெடுப்பில் முதல் ஆறு புத்தகக் காட்சிகள் பெரும் வெற்றி பெற்றன; அவர்தம் முயற்சியில் ஆரம்ப காலங்களில் புத்தகக் காட்சி பெரும் வளர்ச்சி பெற்றது. மேலும், மாணவ/மாணவியருக்கான புத்தகக் கண்காட்சியையும் அவர் தொடங்கினார். ஆயினும், சென்னை புத்தகக் காட்சியைப் போல மாணவ/மாணவியருக்கான புத்தகக் கண்காட்சி வெற்றியைப் பெறவில்லை.

 
குழந்தைகள் புத்தகத் திருவிழா

மதரசா-இ-ஆசாம் பள்ளியில் முதல் நான்கு புத்தகக் காட்சிகள் நடத்தப்பட்ட பிறகு, 1981-ஆம் ஆண்டு இராயப்பேட்டை, சென்னை - இல் இருக்கும் கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (ஒய்.எம்.சி.ஏ.) மைதானத்தில் நடத்தப்பட்டது. 1982-இல் செலுத்தி-சென்று உணவருந்தும் நிலையத்தில் (Drive-in Restaurant) நடத்தப்பட்டது. புத்தகக் காட்சியின் புகழ் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் இருந்தது. திசம்பர் 22, 1989, முதல் சனவரி 1, 1990, வரை நடத்தப்பட்ட 12-வது புத்தகக் காட்சியில் உலக சுகாதார அமைப்பின் புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள் இடம்பெற்றிருந்தன.[6] சென்னை புத்தகக் காட்சியின் பெருவெற்றியின் காரணத்தினால், உதகமண்டலம், திருவனந்தபுரம், பாண்டிச்சேரி, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களிலும் "தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தால்" புத்தகக் காட்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆரம்ப காலங்களில் கிறித்துமசு-புத்தாண்டு விடுமுறைகளுடன் ஒத்துப்போகுமாறு திசம்பர் இறுதி வாரங்களிலிருந்து சனவரியின் ஆரம்ப வாரம் வரை புத்தகக் காட்சி நடத்தப்பட்டது. ஆயினும், 90-களில் பொங்கல் விடுமுறைகளுடன் ஒத்திருக்கும்படி சனவரியின் மையப் பகுதிகளில் நிகழுமாறு மாற்றப்பட்டது.

பங்கு கொள்ளும் பதிப்பகங்கள்

தொகு

இந்தியாவில் நடைபெறும் பல்வேறு நூல் கண்காட்சிகளில் மிகப்பெரும் கண்காட்சிகளில் ஒன்றாக இக்கண்காட்சி விளங்குகிறது. நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்தும் பன்மொழிப் பதிப்பகங்களும், தமிழ்நாட்டின் முக்கியமான சில தமிழ்ப் பதிப்பகங்களும் இக்கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர்.

தமிழ் பதிப்பகங்கள்

தொகு

இக்கண்காட்சியில் பங்கு கொள்ளும் தமிழ்மொழிப் பதிப்பகங்களில் கீழ்காணும் பதிப்பகங்கள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.

பன்மொழிப் பதிப்பகங்கள்

தொகு

இக்கண்காட்சியில் பங்கு கொள்ளும் பன்மொழிப் பதிப்பகங்களில் கீழ்காணும் பதிப்பகங்களில் முக்கியமானவையாக உள்ளன.

  • ஆக்சுபோர்ட் பல்கலைக்கழக அச்சகம்
  • கேம்பிரிட்சு பல்கலைக்கழக அச்சகம்
  • புஸ்தக் மகால்
  • இக்கின்பாதம்சு
  • ஓரியண்ட் லாங்மேன்சு
  • மாக்மில்லன் பதிப்பகம்
  • டாடா-மெக்ராஹில்
  • இந்தியா புக் அவுசு
  • பிரித்தானிய கௌன்சில்
  • த இந்து

சிறப்பியல்புகள்

தொகு

சென்னை புத்தகக் காட்சியானது சென்னையின் சென்னை சங்கமம், சென்னை இசைவிழா நிகழ்ச்சிகளை ஒட்டி நடத்தப்படும் முதன்மையான பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றாக விளங்குகிறது.[2] புத்தகக் கடைகளைத் தவிர்த்து உணவு மற்றும் இளைப்பாறுதலுக்கான கடைகளும் கண்காட்சியரங்கில் உண்டு. விவாதங்கள், போட்டிகள் மற்றும் முக்கிய நபர்களின் உரைகளும் அரங்கில் நடைபெறும். சமீப காலங்களில், உலகத் திரைப்படங்களின் குறு-காணொலிகளும் காண்பிக்கப்படுகின்றன. சிறந்த எழுத்தாளர் மற்றும் சிறந்த பதிப்பகத்தார் ஆகிய விருதுகளும் ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கப்படுகின்றன.[7]

கண்காட்சிகள்

தொகு
  • 2015ஆம் ஆண்டு சென்னை புத்தகக் காட்சி 2015 சென்னையில் சனவரி 9-21 தேதிகளில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
  • 2014ஆம் ஆண்டு 37-வது புத்தகக் காட்சி சென்னையில் சனவரி 10-22 தேதிகளில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.[8]
  • 2012-ஆம் ஆண்டு 35-வது புத்தகக் காட்சியும் செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ-இந்திய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனவரி 5 முதல் 17 வரை நடைபெற்றது.
  • 2011ஆம் ஆண்டு 34வது புத்தகக் காட்சி சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே செயிண்ட் ஜோர்ஜ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 666 காட்சிக்கூடங்களுடன் சனவரி 4-17 தேதிகளில் நடைபெற்றது.[9]
  • ஈ.வெ.ரா.பெரியார் சாலையில் சென்னை மெட்ரோ திட்டப் பணிகளின் காரணமாக 36-வது புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சனவரி 11 முதல் 23 வரை நடைபெற்றது. 1,80,000 சதுர அடிகளில் 747 கடைகளுடன் 10 இலட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் கண்காட்சியில் விற்பனைக்கு இடம்பெற்றன.[10][11]
ஆண்டு பதிப்பு இடம் கடைகளின் எண்ணிக்கை பார்வையாளர்கள் நடைபெற்ற நாட்கள் வருமானம்
2001 24 காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி 11 நாட்கள்
2002 25 காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி 15 நாட்கள்
2003 26 காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி 272 300,000 9–19 சனவரி

(11 நாட்கள்)

ரூ.6 கோடி
2004 27 காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி 310 540,000 9–19 சனவரி

(11 நாட்கள்)

2005 28 காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி 700,000 7–17 சனவரி

(11 நாட்கள்)

ரூ.6 கோடி
2006 29 காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி 375 6–16 சனவரி

(11 நாட்கள்)

2007 30 செயிண்ட் ஜார்ஜ் பள்ளி, கீழ்ப்பாக்கம் 474 600,000
2008 31 செயிண்ட் ஜார்ஜ் பள்ளி, கீழ்ப்பாக்கம்
2009 32 செயிண்ட் ஜார்ஜ் பள்ளி, கீழ்ப்பாக்கம் 600 1,000,000 8–17 ஜனவரி

(10 நாட்கள்)

ரூ.7 கோடி
2011 34 செயிண்ட் ஜார்ஜ் பள்ளி, கீழ்ப்பாக்கம் 646
2012 35 செயிண்ட் ஜார்ஜ் பள்ளி, கீழ்ப்பாக்கம் 687 5–17 ஜனவரி

(13 நாட்கள்)

[12]
2013 36 ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரித் திடல் 746 900,000 11–23 சனவரி

(13 நாட்கள்)

ரூ.12 கோடி
2014 37 ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரித் திடல் 777 10–22 சனவரி

(13 நாட்கள்)[13]

2015 38 ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரித் திடல் 700 9–21 சனவரி

(13 நாட்கள்)

2016 39 தீவுத்திடல் 700 1–13 சூன்

(13 நாட்கள்)

2017 40 செயிண்ட் ஜார்ஜ் பள்ளி, கீழ்ப்பாக்கம் 700 6–19 சனவரி

(13 நாட்கள்)

2018 41 செயிண்ட் ஜார்ஜ் பள்ளி, கீழ்ப்பாக்கம் 708 10–22 சனவரி

(13 நாட்கள்)

[14]
2019 42 ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரித் திடல் [15] 4-20 சனவரி

(17 நாட்கள்)

2020 43 ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரித் திடல் 9 - 21 சனவரி

(13 நாட்கள்)

2021 44 ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரித் திடல் 578 24 பிப்ரவரி - 09 மார்ச்

(14 நாட்கள்)

8 - 12 கோடி[16][17][18]
2022 45 ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரித் திடல் 800 16 பிப்ரவரி - 06 மார்ச்

(19 நாட்கள்)[19]

ரூ 15 கோடி[20]
2023 46 ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரித் திடல் 1000 6 சனவரி - 22 சனவரி

(16 நாட்கள்)[21]

ரூ 16 கோடி[22]
2024 47 ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரித் திடல் 3 சனவரி - 21 சனவரி

(18 நாட்கள்)[23]

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Kamath, Rina (2000). Chennai. Orient Blackswan. p. 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8125013784, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125013785.
  2. 2.0 2.1 Krishnamachari, Suganthy (January 17, 2002). "Volumes of wisdom and fun too". தி இந்து (Chennai, India) இம் மூலத்தில் இருந்து ஜூன் 30, 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030630034605/http://www.hindu.com/thehindu/mp/2002/01/17/stories/2002011700210400.htm. 
  3. "25th Chennai Book Fair 2002". உலக சுகாதார அமைப்பு. Archived from the original on 2012-12-12. பார்க்கப்பட்ட நாள் 2014-01-09.
  4. "Films, fun and contests for kids at annual book fair". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. January 7, 2009 இம் மூலத்தில் இருந்து 2012-10-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023005247/http://articles.timesofindia.indiatimes.com/2009-01-07/chennai/28056598_1_fair-venue-bapasi-gandhi-kannadasan. 
  5. Muthiah, S. (November 8, 2004). "60 years midst books". The Hindu (Chennai, India) இம் மூலத்தில் இருந்து ஜனவரி 14, 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050114204139/http://www.hindu.com/mp/2004/11/08/stories/2004110800230300.htm. 
  6. "Health Literature and Literary Services" (PDF). WHO repository. World Health Organization. p. 5. Archived from the original (PDF) on 2011-06-13. பார்க்கப்பட்ட நாள் 2014-01-09.
  7. "Book extravaganza kicks off". தி இந்து (Chennai, India). January 8, 2005 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 4, 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050204110434/http://www.hindu.com/2005/01/08/stories/2005010813910300.htm. 
  8. சென்னை புத்தகக்
  9. 1 கோடிக்கும் அதிகமான நூல்கள் புத்தகக் கண்காட்சி தொடங்கியது - தினகரன்[தொடர்பிழந்த இணைப்பு]
  10. "BAPASI release". Archived from the original on 2012-12-31. பார்க்கப்பட்ட நாள் 2014-01-09.
  11. "Book fair expected to draw 10 lakh visitors". The Hindu (Chennai: The Hindu). 10 January 2013. http://www.thehindu.com/news/cities/chennai/book-fair-expected-to-draw-10-lakh-visitors/article4291492.ece. பார்த்த நாள்: 10 Jan 2013. 
  12. "Book fair ends after stupendous sales". தி இந்து (Chennai, India). 24 January 2013. http://www.thehindu.com/news/cities/chennai/book-fair-ends-after-stupendous-sales/article4337127.ece. 
  13. "Chennai book fair from Jan. 10 to have 777 stalls". தி இந்து (Chennai, India). 9 January 2014. http://www.thehindu.com/news/cities/chennai/chennai-book-fair-from-jan-10-to-have-777-stalls/article5554716.ece. 
  14. "Chennai Book Fair from Jan. 10". Chennai, India. 6 January 2018. http://www.thehindu.com/news/cities/chennai/chennai-book-fair-from-jan-10/article22379738.ece. 
  15. "Chennai Book Fair from January 4". The Hindu (Chennai, India). 30 December 2018. https://www.thehindu.com/news/cities/chennai/chennai-book-fair-from-january-4/article25862138.ece. 
  16. "Chennai: 44th book fair registers drop in footfall amid pandemic". சென்னை. 10 மார்ச் 2021. https://indianexpress.com/article/cities/chennai/chennai-44th-book-fair-drop-footfall-pandemic-7222467. 
  17. "Chennai book fair to be held from Feb 24". The New Indian Express (Chennai: Express Publications). 31 January 2021. https://www.newindianexpress.com/cities/chennai/2021/jan/31/chennai-book-fair-to-be-held-from-feb-24-2257411.html. 
  18. "Despite pandemic, the 44th Chennai Book Fair witnessed good turnout" (in en-IN). The Hindu. 2021-03-10. https://www.thehindu.com/news/cities/chennai/despite-pandemic-the-44th-chennai-book-fair-witnessed-good-turnout/article34031707.ece. 
  19. "Chennai book fair from February 16" (in en-IN). The Hindu. 2022-02-04. https://www.thehindu.com/news/cities/chennai/chennai-book-fair-from-february-16/article38373347.ece. 
  20. 45வது புத்தகக் கண்காட்சி நிறைவு. ரூ. 15 கோடிக்கு விற்பனை. தினமலர், தஞ்சாவூர் பதிப்பு. 07.03.2022. பக்கம் 3
  21. "சென்னை புத்தகக் கண்காட்சி 2023: எத்தனை நாட்கள்? என்னென்ன சிறப்புகள்?". https://tamil.samayam.com/latest-news/chennai-news/all-you-need-to-know-about-bapasi-chennai-book-fair-2023/articleshow/96730538.cms. 
  22. "46வது சென்னை புத்தகக் காட்சி நிறைவு: இந்தாண்டு விற்பனை எப்படி?". https://tamil.news18.com/news/tamil-nadu/bapasi-chennai-46th-book-fair-ends-today-876923.html. 
  23. "47-வது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 3-ம் தேதி தொடக்கம் - பபாஸி அறிவிப்பு". indianexpress. https://tamil.indianexpress.com/tamilnadu/the-47th-chennai-book-fair-will-begin-on-january-3rd-2024-2034578. 

உசாத்துணைகள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_புத்தகக்_காட்சி&oldid=3925038" இலிருந்து மீள்விக்கப்பட்டது