காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி
காயுதே மில்லத் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னையில் செயல்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1974ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தன்னாட்சித் தகுதியுடன் சென்னை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. முனைவர் வி. இராதா தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[3]
வகை | மகளிருக்கான அரசினர் தன்னாட்சிக் கலைக்கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1974 |
தலைவர் | தமிழ்நாடு அரசு |
முதல்வர் | வி. இராதா |
மாணவர்கள் | 4300 |
அமைவிடம் | , , |
இணையதளம் | http://www.qmgcw.in |
வரலாறு
தொகு1974 ஆவது ஆண்டில் 30 ஏக்கர் பரப்பளவில், ஐந்து பட்டப் படிப்புகளில் சில நூறு மாணவிகளுடன் தொடங்கப்பட்ட இக்கல்லூரி தற்போது 12 இளநிலை, 6 முதுநிலைப் படிப்புகளில் 4300கும் அதிகமான மாணவிகளுடன் செயல்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான மாணவிகள் எண்ணிக்கை அதிகமானதை அடுத்து 2006-07 கல்வியாண்டில் இருசுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கல்லூரியில் பயிலும் மாணவிகளில் பெரும்பாலானவர்கள் முதலாம் தலைமுறை பட்டதாரிகள் ஆவர்.
வழங்கும் படிப்புகள்
தொகுஇக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
அமைவிடம்
தொகுகாயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ தினமலர் கல்விமலர்
- ↑ Colleges in Tamil Nadu
- ↑ "காயுதே மில்லத் அரசினர் கலைக்கல்லூரி முதல்வர்". Archived from the original on 2016-12-23. பார்க்கப்பட்ட நாள் 2017-03-31.