சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

தமிழ் பதிப்பகம்

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (SAIVA SIDDHANTA WORKS PUBLISHING SOCIETY, TINNEVELLY, LIMITED) என்பது 1920 இல் தமிழகத்தின் திருநெல்வேலியில் துவக்கப்பட்ட ஒரு தமிழ் பதிப்பக நிறுவனமாகும்.[1] இது தமிழையும், சைவத்தையும் வளர்ப்பதை நோக்கமாக கொண்டு துவக்கபட்டது. இந்தப் பதிப்பகம் செந்தமிழ்ச் செல்வி என்ற இதழையும் நடத்தி வருகிறது.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட்
வகைநூல் பதிப்பு/வெளியீடு
நிறுவுகைதிருநெல்வேலி, இந்தியா (1920)
தலைமையகம்சென்னை, இந்தியா
உற்பத்திகள்நூல்கள், இதழ்கள்
சேவைகள்நூல் பதிப்பு/வெளியீடு

வரலாறு தொகு

திருசங்கர் கம்பெனி என்ற பெயரில் புத்தகக் கடை நடத்திய வ. திருவரங்கம் பிள்ளை தன் தம்பி வ. சுப்பையா பிள்ளையோடும், நண்பர் மா. திரவியம் பிள்ளையோடும் சேர்ந்து திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைத் துவக்கினார். எழுத்தாளர்களே பதிப்பாளர்களாக இருந்து தங்கள் நூல்களைத் தாங்களே வெளியிட்டுக்கொண்டிருந்த அந்தக் காலத்தில், தொழில்முறைப் பதிப்பகமாகத் தொடங்கப்பட்டதே இந்த பதிப்பகம். ரூ.10 முகமதிப்புக் கொண்ட 5,000 பங்குகளால் ரூ.50,000 திரட்டித் தொழில் முதலீடாக்கி, மட்டிட்ட (லிமிடெட்) நிறுவனமாகத் தன்னைப் பதிவுசெய்துகொண்டு திருநெல்வேலியில் தொடங்கப்பட்டது. திருவரங்கம் பிள்ளை சென்னையில் நடத்திவந்த திருசங்கர் கம்பெனி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் முதல் கிளைநிலையம் ஆனது.

வெளியீடுகள் தொகு

கழகமானது எளிதில் கையாளத்தக்க கழகத் தமிழ்க் கையகராதியை 1940 இல் வெளிக்கொண்டு வந்தது. மேலும் இந்திறுவனமானது இந்த அகராதியோடு நின்றுவிடாமல், சிறிய கழகத் தமிழ் அகராதி, பெரிய கழகத் தமிழ் அகராதி, ஆட்சித் துறைத் தமிழ் (அகராதி), சட்டத் தமிழ் (அகராதி), தொகை அகராதி, கழக ஆங்கில தமிழ்க் கையகராதி, கழகச் சிற்றகராதி (ஆங்கிலம்-தமிழ்), கழகப் பழமொழி அகரவரிசை, சிலேடை அகரவரிசை, மேற்கோள் விளக்கக் கதை அகரவரிசை என்று தொடர்ந்தது வெளியிட்டது. தேவநேயப் பாவாணர் எழுதிய ‘இயற்றமிழ் இலக்கணம்’, ‘சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்’, ‘உயர்தரக் கட்டுரை இலக்கணம்’, ‘பழந்தமிழ் ஆட்சி’, ‘முதல் தாய்மொழி’, ‘தமிழ்நாட்டு விளையாட்டுகள்’, ‘வேர்ச்சொல் கட்டுரைகள்’ ஆகிய நூல்களைக் கழகமே வெளியிட்டது. மு. வரதராசன் உரை எழுதிய திருக்குறள் உரை நூல், கழகத்தால் வெளியிடப்பட்டது இதுவரை 200 பதிப்புகள் கண்டிருக்கிறது. இவாறு சைவம், அறிவியல், வாழ்வியல் எனப் பல புலங்களில் 2,000 நூல்களுக்கு மேல் வெளியீட்டைக் கண்டுள்ளது இந்தப் பதிப்பகம்.[2] அவற்றுள் சில:

  1. முக்கூடற்பள்ளு (வெளியிட்டு எண்:880); உரையாசிரியர் வித்துவான் ந. சேதுரகுநாதன்; 1957.



நூலகம் தொகு

புத்தகப் பதிப்போடு நின்றுவிடாமல், 1958-ல் கழகத்தால் மறைமலையடிகள் நூல் நிலையம் என்ற பெயரில் நூலகம் தொடங்கி நடத்திவருகிறது.[3] தற்பொழுது இந்நூலகம் சென்னை கன்னிமாரா நூலகத்தின் மாடியில் இயங்கிவருகிறது.

குறிப்புகள் தொகு