பாரதி புத்தகாலயம்
பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) என்பது தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு தமிழ்ப் பதிப்பகம் ஆகும். இலக்கியம், அரசியல், அறிவியல் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களைப் பதிப்பித்துள்ளது. உடன், சமூக நலம் சார்ந்த முற்போக்கு ஆய்வு நூல்களையும் வெளியிட்டு வருகின்றது. இதன் பதிப்பாளர் க.நாகராஜன்
வகை | நூல் பதிப்பு/வெளியீடு |
---|---|
நிறுவுகை | 2002, திசம்பர் 11 |
தலைமையகம் | சென்னை, இந்தியா
7, இளங்கோ சாலை தேனாம்பேட்டை சென்னை |
உற்பத்திகள் | நூல்கள், இதழ்கள் |
சேவைகள் | நூல் பதிப்பு/வெளியீடு |
உரிமையாளர்கள் | Toiling Masses Welfare Trust |
இணையத்தளம் | Thamizhbooks.com |
வரலாறு
தொகுஇப்பதிப்பகம் உழைக்கும் மக்கள் அறக்கட்டளை சாா்பில் கடந்த 2002-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.[1]
அமைப்பு
தொகுஇதன் ஒரு பகுதியாக புக்சு பார் சில்ட்ரன் (Books for Children) தொடர் வரிசையாக வெளிவருகின்றது. கல்வி, குழந்தைகள், தமிழ்நாட்டு அடிப்படை கல்வி: ஆய்வு மற்றும் விமர்சனம் சார்ந்த நூல் இந்த பகுதி ஊடாக வெளியிடப்படுகிறது. மேலும் 'இளையோர் இலக்கியம்', சினிமா சார்ந்து 'புதிய கோணம்', ஆங்கில நூல்வெளியீட்டிற்காக 'Indian University Press' ஆகியவை imprint ஆக செயல்படுகின்றன.
பதிப்பகத்தின் மாத வெளியீடான புதிய புத்தகம் பேசுது இதழ் சமூக, கலை, இலக்கியம், நூல்கள் பற்றிய தகவல்கள், விமர்சனங்கள், மதிப்புரைகள் போன்றவற்றையும் படைப்பாளிகளின் நேர்காணல்களையும் தொகுத்து வெளிவருகின்றது. இதைத் தொடர்ந்து www.bookday.in இணைய இதழ் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. பாரதி தொலைக்காட்சி என்கிற யூடியூப் சமூக காணொலி ஊடகமும் இந்த நிறுவனத்திலிருந்து இயங்கிவருகிறது.
வெளியிட்ட நூல்கள்
தொகு2014ஆம் ஆண்டு நடைபெற்ற 37வது சென்னை புத்தகக் காட்சியில் பாரதி புத்தகாலயம் 100 தலைப்புகளில் புத்தகங்களைக் கொண்டு வந்தது. அவற்றில், தாரிக் அலியின் ‘அடிப்படை வாதங்களின் மோதல்’, பசவபுன்னையாவின் ‘மீரட் சதி வழக்கு’ தேவி பிரசாத் சட்டோபாத்தியாயாவின் ‘இந்திய நாத்திகம்’ சத்தியஜித் ரேயின் குழந்தைகளுக்கான 20 துப்பறியும் கதைகள், அருணனின் ‘கம்யூனிஸ்ட்டுகளின் சாதனை சரித்திரம்’, ச. தமிழ்ச்செல்வனின் ‘என் சக பயணிகள்’, ‘சந்தித்தேன்’, விழியனின் ‘உச்சிநுகர்’, மொழிபெயர்ப்பு நூலான ‘வைக்கம் பஷீர் வாழ்க்கை வரலாறு’, ‘மக்களின் மார்க்ஸ்’ போன்றவை விற்பனைக்கு வந்தன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "உழைக்கும் மக்கள் அறக்கட்டளை சாா்பில் கடந்த 2002-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது பாரதி புத்தகாலயம்". தினமணி. Retrieved 10 March 2025.
- ↑ செ. கவாஸ்கர் (13 சனவரி 2014). "வாசகர்களை வாரி அணைக்க புத்தகங்கள்...". தீக்கதிர்: pp. 8.
வெளி இணைப்புகள்
தொகு- http://thamizhbooks.com/ - பாரதி புத்தகாலயத்தின் அனைத்து புத்தகங்களையும் வாங்க.
- www.bookday.in - பாரதி புத்தகாலாயத்தின் தமிழ்ப் புத்தகம் இணைய தளம்.
- பாரதி புத்தகாலயத்தின் புதிய புத்தகம் பேசுது இதழை வாசிக்க கிளிக் செய்க.