புதிய புத்தகம் பேசுது

புதிய புத்தகம் பேசுது என்பது தமிழ் பதிப்புத்துறை மற்றும் நூல்கள் பற்றிய ஒர் மாதாந்திர இதழ் ஆகும். இதன் நோக்கம் "எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் வாசகர்களிடையே ஓர் இணைப்புப் பாலமாக" அமைவதாகும். இதில் நூல்கள் பற்றிய அறிமுகங்கள், எழுத்தாளர்கள் மற்றும் கல்வி பின்புலம் கொண்ட பிரமுகர்களின் நேர்காணல்கள், செய்திகள், ஆய்வுக் கட்டுரைகள் உட்பட்ட படைப்புகள் இடம்பெறுகின்றன.

இதனை தமிழகத்தின் மிக முக்கியமான இடதுசாரி பதிப்பகங்களில் ஓன்றான பாரதி புத்தகாலயம் கடந்த 20 ஆண்டுகளாக வெளியிடுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_புத்தகம்_பேசுது&oldid=3308045" இலிருந்து மீள்விக்கப்பட்டது