விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை

(விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குறுக்கு வழி:
விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை

விக்கிப்பீடியாவினுள் ஒரு தலைப்பின் குறிப்பிடத்தக்கத் தன்மை என்பது, அது குறித்து கட்டுரை வரையத் தகுதி கொண்டதா என அளவிடுதலாகும். கட்டுரைப் பொருள் குறிப்பிடத்தக்கதாக அல்லது அறிய வேண்டிய ஒன்றாக அமைய வேண்டும். ஒரு கட்டுரைப் பொருளின் குறிப்பிடத்தக்கத் தன்மை அதன் புகழ், பெருமை அல்லது பரவலான அறிமுகம் குறித்தது மட்டுமே அல்ல; கீழ்வரும் வழிகாட்டுதல்களோடு இவையும் சேர்ந்திருந்தால் அவை பொருளின் சிறப்பைக் கூட்டலாம்.

பொதுவான குறிப்பிடத்தக்கத் தன்மைக்கான வழிகாட்டல்கள்

தொகு

ஓர் கட்டுரைப்பொருள் அதனுடன் தொடர்பற்ற நம்பகமான மூலங்களில் பரவலான கட்டுரைகள் கிடைக்கப்பெற்றால் அதனைக் குறித்து தனியான கட்டுரை ஆக்கலாம் என்று கொள்ளலாம்.

  • பரவலான கட்டுரைகள்: குறிப்பிட்ட பொருளில் நேரிடையான பல கட்டுரைகள் மிக விவரமாக நம்பகமான மூலங்களில் கிடைக்கப்பெறுதலும் சொந்த ஆய்வு இல்லாது அவற்றைப் பெறக்கூடியதுமாகும். பரவலான என்பதன் பொருள், கட்டுரைகளில் அவை எங்கோ குறிப்பிடப்படாமல், கட்டுரைகளின் முதன்மைப் பொருளாக இருப்பதை உறுதி செய்கிறது.[1]
  • நம்பகமானவை: கட்டுரைப்பொருள் பெறப்படும் மூலங்கள் சரிபார்க்கக்கூடியனவாகவும் நம்பகமான மூலங்களாக அறியப்படுவனவாகவும் இருத்தல். அவை அச்சு அல்லது பிற ஊடகங்களில் வெளியாகியிருக்கலாம். பொருளின் மீது இரண்டாம் நிலை மூலங்கள் எழுதப்பட்டிருத்தல் குறிப்பிடத்தக்கத்தன்மைக்கு சிறப்பாகும்.
  • மூலங்கள்:[2] செய்தித்தாள்கள், புத்தகங்கள், மின்னூல்கள், வார/மாத இதழ்கள்,தொலைக்காட்சி, வானொலி ஆவணங்கள், அரசு அறிக்கைகள், அறிவியல் இதழ்கள் மற்றும் இரண்டாம் நிலை மூலங்கள் குறிடத்தக்கத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. நம்பகமான மூலங்களின் எண்ணிக்கையும் வகையும், எந்தளவு ஆழமாக கட்டுரைப்பொருள் விவாதிக்கப்படுகிறது என்பதையும் கட்டுரையின் தரத்தையும் முடிவு செய்கின்றன. பொதுவாக பல்வேறு மூலங்கள் கொண்டமைவது எதிர்பார்க்கப்படுகின்றது.[3]
  • தொடர்பற்றவை: கட்டுரைப்பொருளுடன் தொடர்புடையவர் வெளியிட்ட ஆக்கங்களை புறக்கணித்தல். இவை சுயவிளம்பரம், விளம்பரங்கள், சொந்த ஆக்கங்கள், தன்வரலாறுகள், பத்திரிக்கை அறிக்கைகள் என்பன அடங்கும். கட்டுரை நபருடன் அண்மைத்திருக்கும் நண்பர்களும் உறவினர்களும் வெளியிட்ட ஆக்கங்களும் எடுத்துக்கொள்ளக் கூடாது.[4]
  • கொள்ளலாம்: ஏனெனில் நம்பகமான மூலங்களில் பரவலான கட்டுரைகள் இருப்பது மட்டுமே கட்டுரைப் பொருள் குறித்து விக்கிப்பீடியாவில் தனிக்கட்டுரை தொடங்க உறுதி வழங்குவதில்லை. இப்பொருளுக்கு தனிக்கட்டுரை அமையக்கூடுமானாலும் அவை தனிக்கட்டுரையாக அமையப் பொருத்தமில்லாதது எனப் பல தொகுப்பாளர்கள் இணக்க முடிவு எட்டலாம். காட்டாக, அக்கட்டுரைகள் கலைக்களஞ்சியத்திற்கு தகுதியானதல்லாதவையாக இருக்கலாம்.[5]

மேற்கண்ட வழிகாட்டுதல்களின்படி அமைந்து பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட கட்டுரைபொருள் தனிக்கட்டுரையாக உருவாக்கப்படலாம். மெய்யறிதன்மை இல்லாத அல்லது உள்ளடக்கம் பல மூலங்கள் வழியே துணைநிற்காதவை மற்றொரு கட்டுரையின் பகுதியாக அமையலாம்.

குறிப்பிடத்தக்கத் தன்மை மற்றும் நீக்கம்

தொகு

குறிப்பிடத்தக்கத் தன்மை இல்லாதிருத்தல் நீக்கம் செய்வதற்கான அடிப்படைத்தகுதி என்று விவாதம் செய்யப்படுகிறது, ஏனெனில், (மற்றவற்றுடன்) நீக்கல் கொள்கை (deletion policy) இதுபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே விக்கிப்பீடியா (கோட்பாட்டளவில்) தாள் அல்ல, அளவிற்கும் வரையறை இல்லை, நமது மற்ற அடிப்படைத் தகுதிகளுக்குள் உட்படும் "எல்லாவற்றையும்" ஏன் சேர்த்துக் கொள்ளக்கூடாது. மெய்யறிதன்மை (verifiability) மற்றும் புத்தாக்க ஆய்வு கூடாது (no original research).

குறிப்பிடத்தக்கதல்ல எனப்படும் கட்டுரைகளை நீக்குவது தொடர்பான விவாதங்கள்

தொகு
  • விக்கிபீடியா ஒரு முதன்மைத் தரவோ, இரண்டாம் நிலைத்தரவோ அல்ல-நேரடிக் கண்காணிப்பின் மூலமாக பதிப்பிப்பதற்கான ஒரு வாகனமாக அதனைக்கொள்ளலாம்-இந்நிலையில் குறிப்பிடத்தக்க பொருண்மைகள் அதில் காணக்கிடைப்பதில்லை. "அடுத்த வீட்டில் உள்ள நாயைப் பற்றி ஏன் எழுதக்கூடாது? (ஏனென்றால் அது இருப்பதைப்பற்றி எளிதாக உறுதி செய்யமுடியும் என்ற கோணத்திலும், நடுநிலைக்கொள்கை விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு (NPOV-Neutral Point Of View) என்ற நிலையிலும்) என்று சிலர் கேட்கலாம்"
  • குறிப்பிடத்தக்க என்ற சொல் எப்பொழுதும் "சிறப்புத்தன்மை" அல்லது "செய்திமதிப்பு" என்பதற்கான பொருளாகக் கருதப்படுகிறது மக்களால் குறிப்பிடத்தக்கன அல்ல என்ற நிலையில் கருதப்படுவதால் பெரும்பாலான பகட்டுக் கட்டுரைகள் நீக்கப்படுகின்றன. சில சமயங்களில் ஒரு குறிப்பிடத்தக்கதல்ல என்று கருதப்படும் கட்டுரையில் காணப்படும் சில பொருண்மைகள் மற்றொரு கட்டுரையுடன் இணைப்பு செய்யப்படும். உதாரணமாக, ஓர் ஆங்கிலேயச் சிறுவன் ஆங்கிலேயக் காவல்துறை பயிற்சி மாணவர் படைக்காக ஒரு புதிய நிறுவனம் திட்டத்தை உருவாக்கியதற்காக அவனது காவல்துறையிடமிருந்து ஒரு விருது பெற்றால் அவன் தன்னைப் பற்றிய ஒரு பம்மாத்துக் கட்டுரையினை எழுதலாம். புதிய அமைப்புத்திட்டம் என்பது குறிப்பிடத்தக்கதாகவும், விருது வழங்கும் விழாவும், அப்பையனைப் பற்றிய குறிப்பும் குறிப்பிடத்தக்கதல்ல என்று தீர்மானிக்கப்படலாம். இதனைப் பொறுத்தவரை அந்த பகட்டுக் கட்டுரையில் ஆங்கிலேயப் பையனைப் பற்றிய குறிப்பிடத்தக்க பொருண்மை என்பதானது பிரிட்டனில் காணப்படும் பிரிவுத்திட்டம் (cadet schemes) பற்றிய பெரிய கட்டுரையுடன் இணைக்கப்படலாம்.

குறிப்பிடத்தக்கன அல்ல என்பதற்காக கட்டுரைகளை நீக்குவதற்கான எதிர்வாதங்கள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. எடுத்துக்காட்டு: ஐபிஎம்மைப் பற்றி சோபெலின் 360 பக்க நூலும் பிளாக்கின் 528 பக்க நூலும் முற்றிலும் சாரமுள்ளவை. பில் கிளின்டனின் வாழ்க்கை வரலாற்றில், வாக்கர் ஒரு சொற்றொடரில் குறிப்பிட்ட மூன்று குருட்டு எலிகள் (Three Blind Mice) இசைக்குழு (Martin Walker (1992-01-06). "Tough love child of Kennedy". தி கார்டியன். http://www.guardian.co.uk/usa/story/0,,1240962,00.html. ) முற்றிலும் சாரமற்றது.
  2. நாளிதழ்கள், நூல்கள், மின்னூல்கள், இதழ்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆவணப்படங்கள், அரச முகமைகளின் அறிக்கைகள், அறிவியல் ஆய்விதழ்கள் உள்ளிட்டவை எனினும் இவை மட்டுமே என வரையறுக்கப்படாதவை. பல்வேறுபட்ட மூலங்கள் இல்லாவிடில், கிடைக்கப்பெறும் மூலமானது, விரிவான ஒரு கட்டுரைக்குத் தேவையான தகவலைத் தரக்கூடியவாறும் நம்பகமானதாகவும், நடுநிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகையிலும் உள்ளது எனச் சரிபார்க்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
  3. பல்வேறுபட்ட மூலங்கள் இல்லாதிருப்பது, அந்தத் தலைப்பானது பரவலான தலைப்பின் உள்ளடக்கமாக அமையத்தகுந்ததாக இருக்கலாமென அறிவுறுத்துகின்றது. பெரும்பாலும், ஒரே மூலத்தின் அல்லது செய்தி வழங்கு சேவையின் மறுவெளியீடுகள் பல்வேறு மூலங்களாகக் கருதப்படுவதில்லை. பல்வேறு இதழ்கள் ஒரே வேளையில் ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் நிகழ்ந்த நிகழ்வைப் பற்றி வெளியிடும் கட்டுரைகள், குறிப்பாக கட்டுரையாளர்கள் ஒரே மூலத்தைச் சார்ந்திருந்து கிடைத்த தகவலை வெறும் வேறுவகைகளில் விவரிப்பவை, பல்வேறு மூலங்களாகக் கருதப்படுவதில்லை. குறிப்பாக ஒரே நிலப்பகுதியினுள் உள்ள பல இதழ்கள் செய்தி வழங்கு சேவை வழங்குனரிடமிருந்து பெற்று வெளியிடும் ஒரே கட்டுரை பன்முகப்பட்டவையாகக் கருதப்படமாட்டாது.
  4. நபரால் படைக்கப்பட்ட படைப்புகள் அல்லது அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களால் உருவாக்கப்பட்டவை பொதுவாக உலகத்தோரின் ஆர்வத்துக்கு உகந்ததற்கு வலுவான சான்றாக இருக்க வாய்ப்பில்லை. இவ்வகைச் சூழல்களைக் கையாள வேண்டின், மேலும் காண்க: விக்கிப்பீடியா:நலமுரண் .
  5. இருப்பினும், விக்கிபிபீடியாவின் நம்பத்தக்க மூலங்களென பரவலாக உள்ளடக்கப்பட்டவை எல்லாம் கட்டுரை உருவாக்கத் தேவையான குறிப்பிடத்தக்கமைக்கான சான்றாகாது; எடுத்துக்காட்டாக தரவுத்திரட்டு, தரவுதளம், விளம்பரங்கள், அறிவிப்புப் பத்திகள் மற்றும் பிற சிறு செய்திச் சுருக்கங்கள் போன்றவை எல்லாம், அவை இருப்பினும், கூர்ந்து நோக்குகையில் குறிப்பிடத்தக்கமைக்குத் துணைவராத உள்ளடக்கங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும் நம்பத்தக்க மூலங்கள்.