| இப்பக்கம் சுருக்கமாக: கல்வியாளர்களைக் கருப்பொருளாகக் கொண்டுள்ள கட்டுரைகளுக்கான குறிப்பிடத்தக்கமை நெறிகள் சுருக்கமாக:
- வாழ்க்கை வரலாற்று கட்டுரைகளின் கருப்பொருள்கள் (subjects) குறிப்பிடத்தக்கனவாக இருக்க வேண்டும்; அதாவது அவை சிறப்பானதாகவோ ஆர்வமூட்டக்கூடியதாகவோ அல்லது இயல்புக்கு மாறாக இருப்பதன் மூலம் அறியத் தக்கதாகவோ இருந்து அந்தக் கருப்பொருள் நம்பகமான இரண்டாம் நிலை மூலங்களில் சிறப்பாக முழுக்கவிளவப்பட்டிருப்பது (coverage) சான்றுரைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- பல அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மெய்யியலாளர்கள் மற்றும் பிற அறிஞர்கள் (எளிய பயன்முறைக்காக மொத்தமாக "கல்வியாளர்கள்") முதலியவர்களின் வாழ்க்கை வரலாறுகள் இரண்டாம்நிலை மூலங்களின் கருப்பொருளாக இல்லாதிருப்பினும் கருத்துக்களின் உலகில் குறிப்பிடத்தக்க தாக்கம் உள்ளவர்கள் என்ற வகையில் குறிப்பிடத்தக்கவர்களாவர்கள்.
- ஆக்கங்களை வெளியிட்டிருப்பது மட்டுமே, அவை எண்ணிக்கையில் எத்தனையாக இருப்பினும், ஒரு கல்வியாளரைக் குறிப்பிடத்தக்கவராக நிறுவாது. குறிப்பிடத்தக்கமை என்பது துறையில் அவருடைய ஆக்கங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பொறுத்து அமைகின்றது. இந்த குறிப்பிடத்தக்கமைக்கான வழிகாட்டுதல் ஒரு கல்வியாளரின் குறிப்பிடத்தக்கமையை அவருடைய பணியின் தாக்கத்தினை நிறுவும் நம்பகமான மூலங்களைக் கொண்டு தீர்மானிப்பதற்கான அளவுகோல்களைக் குறிப்பிடுகிறது.
|