விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)

Latest comment: 16 மணிநேரம் முன் by MediaWiki message delivery in topic Tech News: 2024-12
 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
குறுக்கு வழிகள்:
WP:VPT
WP:VP/T
WP:TECHPUMP
WP:PUMPTECH
ஆலமரத்தடிக்கு (தொழினுட்பம்) வருக! இங்கு விக்கிப்பீடியா தொழினுட்பம் குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புதிய சிந்தனைகள், உதவிக் குறிப்புகள், தொழினுட்ப விவாதங்கள் போன்றவை இடம்பெறுகின்றன. நீங்களும் இப்பக்கத்தில் உங்கள் கருத்துகளைப் பிற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பக்கத்தில் இருக்கும் பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது இங்கிருந்து நீக்கப்பட்டுக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு விடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். விக்கி மென்பொருளிலுள்ள வழுக்களை முறையிடுவதற்கு, பேப்ரிக்கேட்டரைப் பயன்படுத்தவும்..
  • இப்பகுதி தொடங்குவதற்கு முன் நடந்த உரையாடல்கள், இப்பகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
« பழைய உரையாடல்கள்

தொகுப்பு காப்பகம் (தொகுப்புகள்)
1 - 2 - 3 - 4 - 5 - 6 - 7 - 2017 - 2018 - 2019 - 2020 - 2021 - 2022 - 2023 - 2024




மாணவர்களுக்கான நுட்பத் திட்டங்கள் தொகு

விக்கித் திட்டங்களில் எழுத்துப் பங்களிப்பு மட்டுமன்றி நுட்பப் பங்களிப்பிற்கும் மாணவர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறோம். கடந்த விக்கித் தொழில்நுட்ப மாநாட்டின் மூலம் கோவை ஜிஆர்டி கல்லூரி மாணவர்கள் பல்வேறு தொழில்நுட்பப் பயிற்சியினை ஐஐஐடி ஹைதராபாத் மூலம் வழங்கியிருந்தோம். அதன் தொடர்ச்சியாகக் கல்லூரி நிர்வாகத்தினரின் ஆர்வத்தோடு சில நுட்பக் கருவிகளைச் செய்ய அந்த மாணவர்கள் முன்வந்துள்ளனர். தானியங்கியோ கட்டுரையாக்கமோ அல்லாமல் வார்ப்புரு/விக்கித்தரவு, எழுத்துணரி நுட்பம் சார்ந்த சில நுட்பத் தேவைகளைப் பரிந்துரைத்துள்ளோம். தமிழ் விக்கிக்கான வேறு தொழில்நுட்பச் சவால்களைப் பட்டியலிடலாம். வாய்ப்புள்ளவற்றை மாணவர்கள் எடுத்துச் செய்யக்கூடும். மேலும் ஆர்வமுள்ளவர்கள் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கவோ நுட்பச்சிக்கல்களைப் பட்டியலிட்டோ உதவலாம். மாணவர்களின் பங்களிப்புகளுக்கேற்ப முன்னேற்றாங்களை இற்றை செய்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 09:20, 1 சூலை 2023 (UTC)Reply

  விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:14, 12 சூலை 2023 (UTC)Reply
@Neechalkaran: நாம் அடையாளம் கண்டுள்ள மேம்பாட்டுப் பணிகளைச் செய்ய மாணவர்களின் உதவியை முயற்சி செய்து பார்க்கலாம். அப்பணிகளை ஒருங்கிணைக்க இந்தத் துணைப் பக்கத்தை ஆரம்பித்துள்ளேன்: விக்கிப்பீடியா:மேம்பாடு/தொழினுட்பம் வாயிலாக இலக்கினை அடைதல் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:49, 3 ஆகத்து 2023 (UTC)Reply
இது ஒரு குறிப்பிட்ட கட்டுரைகளுக்கு மட்டுமான பணியாக இருப்பதால் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவது கடினம். இதைப் பொதுச் சிக்கலாகவும் திரும்பத் திரும்பப் பயன்படும் வகையிலும் நுட்பத்தீர்வினைச் செய்ய முடியுமா என்றும் பார்க்கிறேன். குறித்துக் கொள்கிறேன். தற்போது நான்கு மாணவர்கள் உள்ளகப் பயிற்சியில் இணைந்துள்ளனர். வெவ்வேறு சிக்கல்களை எடுத்து முயன்று வருகின்றனர். -நீச்சல்காரன் (பேச்சு) 14:00, 4 ஆகத்து 2023 (UTC)Reply

Tech News: 2023-27 தொகு

MediaWiki message delivery 22:50, 3 சூலை 2023 (UTC)Reply

Tech News: 2023-28 தொகு

MediaWiki message delivery 19:53, 10 சூலை 2023 (UTC)Reply

Tech News: 2023-29 தொகு

MediaWiki message delivery 23:07, 17 சூலை 2023 (UTC)Reply

Tech News: 2023-30 தொகு

MediaWiki message delivery 02:19, 25 சூலை 2023 (UTC)Reply

Tech News: 2023-31 தொகு

MediaWiki message delivery 23:53, 31 சூலை 2023 (UTC)Reply

Tech News: 2023-32 தொகு

MediaWiki message delivery 21:20, 7 ஆகத்து 2023 (UTC)Reply

Tech News: 2023-33 தொகு

MediaWiki message delivery 05:59, 15 ஆகத்து 2023 (UTC)Reply

Tech News: 2023-34 தொகு

15:24, 21 ஆகத்து 2023 (UTC)

Tech News: 2023-35 தொகு

MediaWiki message delivery 13:59, 28 ஆகத்து 2023 (UTC)Reply

Tech News: 2023-36 தொகு

MediaWiki message delivery 23:33, 4 செப்டம்பர் 2023 (UTC)

Tech News: 2023-37 தொகு

MediaWiki message delivery 21:07, 11 செப்டம்பர் 2023 (UTC)

நீக்கல் பதிவுகள் தொகு

அண்மைய மாற்றங்கள் பகுதியில் "நீக்கல் பதிவுகள்" எதுவும் இப்போது காட்டப்படுவதில்லை போல் தெரிகிறது. @Neechalkaran:.--Kanags \உரையாடுக 03:49, 16 செப்டம்பர் 2023 (UTC)

@Kanags: வணக்கம் ஐயா, நான் தானியங்கியாக செயல்படுவதால் எனது நீக்கல் பதிவுகள் மட்டும் காட்டப்படுவதில்லை ஐயா.நன்றி--தாமோதரன் (பேச்சு) 04:43, 16 செப்டம்பர் 2023 (UTC)
@Almighty34:, நீக்கல் பதிவுகளை மட்டுமல்ல, பொதுவான தொகுப்புகளைத் தானியங்கிக் கணக்கு மூலம் செயல்படுத்துவது விரும்பத்தக்கதல்ல. தானியங்கிக் கணக்கைத் தவறாகப் பயன்படுத்துகிறீர்கள் போல் தெரிகிறது. எப்போது உங்களுக்குத் தானியங்கி அணுக்கம் கிடைத்தது? இங்கு உங்கள் கோரிக்கை இல்லையே?--Kanags \உரையாடுக 05:09, 16 செப்டம்பர் 2023 (UTC)
@Sundar:, Almighty34 என்ற பயனர் கணக்கின் தானியங்கி அணுக்கத்தை நீக்கி விடுங்கள். தவறுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கலாம் என நம்புகிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 05:15, 16 செப்டம்பர் 2023 (UTC)
@Kanags: ஐயா நிர்வாகி அணுக்கம் நீட்டிப்பு (03 ஆகத்து 2023) செய்யப்பட்ட அன்று எனக்கு தவறுதலாக தானியங்கி அணுக்கம் வழங்கப்பட்டது. அதன் மறுநாள் (04 ஆகத்து 2023) எனக்கு வழங்கப்பட்ட தானியங்கி அணுக்கத்தைத் நீக்கம் செய்ய சுந்தர் அவர்களிடம் கோரிக்கை விடுத்தேன் ஐயா. அவர்களும் முயன்று பார்க்கிறேன் என்று பதிலளித்தார்.--தாமோதரன் (பேச்சு) 06:08, 16 செப்டம்பர் 2023 (UTC)
நன்றி. @Sundar and Ravidreams: Almighty34 என்ற பயனர் கணக்கின் தானியங்கி அணுக்கத்தை மட்டும் நீக்கி விடுங்கள்.--Kanags \உரையாடுக 06:32, 16 செப்டம்பர் 2023 (UTC)
நன்றி, நீக்கியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 12:32, 17 செப்டம்பர் 2023 (UTC)

Tech News: 2023-38 தொகு

MediaWiki message delivery 19:19, 18 செப்டம்பர் 2023 (UTC)

Lua error in Module:Citation/CS1 தொகு

தாவர வகைப்பாட்டியலில் மேற்கோள்களை எளிமையாகப் பயன்படுத்த Module:Citation/CS1 என்ற லுவா(Lua) மொழி கட்டகம் உதவுமென நம்புகிறேன். இதன் வழுவை நீக்கித் தருக. வழுவைக் காண மல்லிகை இனங்களின் பட்டியல் என்ற கட்டுரையைக் காணவும். உழவன் (உரை) 18:25, 23 செப்டம்பர் 2023 (UTC)

@Info-farmer: அந்த வார்ப்புரு இணைக்கப்பட்ட அனைத்துக் கட்டுரைகளிலும் வழுக்கள் வருகின்றன. நீங்கள் இந்த வார்ப்புருவை இன்று திருத்துவதற்கு முன்னரும் இவ்வழுக்கள் காணப்பட்டனவா? @Neechalkaran: கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 23:56, 23 செப்டம்பர் 2023 (UTC)
சில கட்டுரைகளில் இருந்தன. வார்ப்புரு இறக்குமதி வசதியைப் பயன்படுத்திய போது, ஏற்கனவே இருந்த அந்த வார்ப்புருவில் எந்த மாற்றமும் நிகழவில்லை. ஆனால், இப்பொழுது பல கட்டுரைகளில் வழுக்கள் தோன்றியுள்ளன. இதற்கு முன் 2019 ஆம் ஆண்டு மாற்றங்கள் ஏற்படுத்தினேன். அதன் பிறகு மீடியாவிக்கியினர் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர் நீங்கள் முன்னிலைப் படுத்தியும் எந்த மாற்றங்களும் நிகழவில்லை என்பதால் மேலும் குழப்பமாக உள்ளது. இங்கு பிறரின் உதவி கிடைத்தால் இது போன்ற லுவா மொழி மேற்கோள் நிரற்கூறு(Module) தொடர்புடைய வார்ப்புருக்களும், பிற நிரற்கூறுகளும் மேம்படும். அதனால் மேற்கோள் பராமரிப்பு எளிதாகும் என்றே எண்ணுகிறேன். எனக்கு 30% மட்டுமே தெரியும். @Neechalkaran Wikimedia Phabricator தளத்தில் உதவி கேட்க வேண்டுமா? உழவன் (உரை) 02:09, 24 செப்டம்பர் 2023 (UTC)
@Info-farmer: {{Cite web}} இல் மட்டுமே இந்த வழுக்கள் புதிதாக வருகின்றன. {{Cite news}} இல் இல்லை. இரண்டு வார்ப்புருக்களுக்கும் இடையே பெரும் வித்தியாசம் இல்லை. ஆதலால், Cite web ஐத் திருத்தும் வரை, அதனை Cite news இற்கு வழிமாற்றியிருக்கிறேன். இதனால் ஏதேனும் ஒரு கட்டுரையில் வழுக்கள் தோன்றினால் தெரியப்படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 05:06, 24 செப்டம்பர் 2023 (UTC)
சரி. மிக்க நன்றி. உழவன் (உரை) 02:32, 25 செப்டம்பர் 2023 (UTC)
@Info-farmer: இப்போது சரிசெய்துள்ளேன். Module:Citation/CS1/Utilities நிரற்கூற்றில் ஆங்கிலத்தில் சில புதிய மாற்றங்களைச் செய்துள்ளனர். அதனை இப்போது சேர்த்தவுடன் காட்டு மல்லி பக்கத்தில் சரியாகி விட்டது.--சிவக்குமார் (பேச்சு) 07:57, 26 செப்டம்பர் 2023 (UTC)
@SivakumarPP: நன்றி சிவகுமார். முடிந்தால் //Archived from the original on YYYY-MM-DD. Retrieved 26 செப்டம்பர் 2023.// என்பதை //மூலத்தில் இருந்து 26 செப்டம்பர் 2023 அன்று பரணிடப்பட்டது.// என்று தமிழாக்கம் செய்ய முடியுமா எனப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 09:20, 26 செப்டம்பர் 2023 (UTC)
@Kanags:முயன்று பார்க்கிறேன். சிவக்குமார் (பேச்சு) 15:07, 26 செப்டம்பர் 2023 (UTC)
@Kanags, @Info-farmer: மாற்றியிருக்கிறேன். மல்லிகை இனங்களின் பட்டியல் கட்டுரையில் சரியாகத் தெரிகிறது. சிவக்குமார் (பேச்சு) 07:32, 27 செப்டம்பர் 2023 (UTC)
கவனித்தேன். மிக்க நன்றி. மல்லிகை வகைப்பாட்டியல் சார்ந்த குறுங்கட்டுரைகளை எழுதிய பின்பு அப்பட்டியலில் உள்ளனவற்றை படத்துடன் விரிவு படுத்துவேன். முதலில் படத்தினை பொதுவகத்திலும், ஆங்கில விக்கியிலும் இற்றைப்படுத்துகிறேன். உழவன் (உரை) 09:01, 27 செப்டம்பர் 2023 (UTC)

Tech News: 2023-39 தொகு

MediaWiki message delivery 16:51, 26 செப்டம்பர் 2023 (UTC)

விருப்பத்தேர்வுகள்-->தோற்றம் தொகு

நான் எனது விருப்பத்தேர்வுகளின் வழியே தோற்றம் என்ற தத்தலில்(tab) MonoBook என்ற பக்கத்தோற்றத்தினைப் பயன்படுத்துகிறேன். அதில் சில ஆங்கிலச்சொற்களுக்கு தமிழ் சொல்லை இட விரும்புகிறேன். எனவே, அதற்கான translatewiki இணைப்பினை என்னால் அடைய முடியவில்லை. அதற்குரிய இணைப்பினைத் தருக உழவன் (உரை) 07:49, 28 செப்டம்பர் 2023 (UTC)

Temporary accounts for unregistered editors தொகு

Read this in your languagePlease help translate to your language • Please tell other users about these changes

 
Next year, unregistered editors will start using temporary accounts.

In 2024, editors who have not registered an account will automatically begin using temporary accounts. These editors are sometimes called "IP editors" because the IP address is displayed in the page history.

The Trust and Safety Product team gave a presentation at Wikimania about this change. You can watch it on YouTube.

There is more information at m:IP Editing: Privacy Enhancement and Abuse Mitigation.

SGrabarczuk (WMF) (பேச்சு) 02:05, 30 செப்டம்பர் 2023 (UTC)

வார்ப்புருவின் வெளியிணைப்பில் இணைப்பு வழு தொகு

வார்ப்புரு பேச்சு:WCSP இதற்குரிய தீர்வினைப் பெற உதவுங்கள் உழவன் (உரை) 00:51, 1 அக்டோபர் 2023 (UTC)Reply

Tech News: 2023-40 தொகு

MediaWiki message delivery 01:26, 3 அக்டோபர் 2023 (UTC)Reply

Tech News: 2023-41 தொகு

MediaWiki message delivery 14:39, 9 அக்டோபர் 2023 (UTC)Reply

TemplateStyles' src attribute must not be empty. தொகு

வார்ப்புரு:Taxonomy/Polysporangiophytes என்ற வார்ப்புரு பல கட்டுரைகளில் பயன்படுகிறது. காண்க: பகுப்பு:Pages with TemplateStyles errors எனவே மேற்கூறிய வழுவை சீர்செய்ய வேண்டுகிறேன். கிளைவித்தகத் தாவரம் என்பதன் தகவற்பெட்டியை தூய்மைப்படுத்திய போது, அந்த வழு மறைந்து விட்டது. ஆனால் எதனால் என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. அறிந்தவர் விவரம் தருக. உழவன் (உரை) 07:36, 14 அக்டோபர் 2023 (UTC)Reply

Pagers என்ற பயனர் நேற்றும் இன்றும் வார்ப்புருக்களிலும், Module களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார். இதன் மூலமே இவ்வழுக்கள் தோன்றியிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளிலும் பகுப்புகளிலும் வழுக்கள் தோன்றுகின்றன. @Pagers and Neechalkaran:.--Kanags \உரையாடுக 10:21, 14 அக்டோபர் 2023 (UTC)Reply
நான் en wiki இலிருந்து திருத்தங்கள் இறக்குமதி செய்தேன் Pagers (பேச்சு) 10:27, 14 அக்டோபர் 2023 (UTC)Reply
@Pagers: எதற்காக அவ்வாறு செய்தீர்கள்? என்ன தேவையிருந்தது? இவ்வாறு செய்வதால் கட்டுரைகளில் ஏற்படும் வழுக்களையும் நீங்கள்தானே சரிசெய்ய வேண்டும்?--Kanags \உரையாடுக 10:31, 14 அக்டோபர் 2023 (UTC)Reply
பல Module களின் தொகுப்புகள் பழையதாக இருந்தது அதை update செய்தேன் Pagers (பேச்சு) 10:34, 14 அக்டோபர் 2023 (UTC)Reply
Pagers, ஏற்கெனவே வார்ப்புருக்கள், moduleகள் பல தேவையான மொழிபெயர்ப்புகளுடன் உள்ளன. இவற்றை நீங்கள் வெறுமனே புதிதாக இறக்குமதி செய்வதால், மீண்டும் அவை மொழிபெயர்க்கப்பட வேண்டாமா? பாருங்கள்: Birth date, Birth date and age, Death date, Death date and age ஆகிய வார்ப்புருக்கள் இணைக்கப்பட்ட கட்டுரைகளில் இப்போது ஆங்கிலத்தில் மாதங்கள் வருகின்றன. இது எவ்வாறு வருகிறது? உடனடியாகத் திருத்துங்கள். இல்லையேல் நிரந்தரமாகத் தடை செய்யப்படுவீர்கள்.--Kanags \உரையாடுக 11:11, 14 அக்டோபர் 2023 (UTC)Reply
Module தொகுப்புகளை நான் மீளமைப்பு செய்துவிட்டேன் Pagers (பேச்சு) 11:38, 14 அக்டோபர் 2023 (UTC)Reply
இன்று இறக்குமதி செய்யப்பட்டவை. --AntanO (பேச்சு) 12:40, 14 அக்டோபர் 2023 (UTC)Reply

இறக்குமதி தொகு

இந்த இறக்குமதிகளின் நோக்கம் என்ன? இறக்குமதி செய்யும்போது மிகுந்த அவதானம் தேவை. ஆ.வி.யில் இருந்து இறக்குமதி செய்யும்போது அவை எவ்விதம் த.வி.யில் தாக்கம் என்பது செய்கிறது உட்பட தேவையான மாற்றங்களையும் இறக்குமதி செய்பவர் மேற்கொள்ள வேண்டும். இது தெரியாவிட்டால் தயவுசெய்து இறக்குமதி போன்ற நுட்பமாக செயற்பாடுகளைத் தவிர்த்தல் வேண்டும். இதுதொடருமாயின் இறக்குமதி செயற்பாட்டை நிர்வாகிகளிடமிருந்து நீக்கி, interface administrator அனுக்கம் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். எல்லா நிர்வாகிகளுக்கும் நுட்பம் தெரிய வாய்ப்பில்லை. @Ravidreams and Sundar: AntanO (பேச்சு) 12:51, 14 அக்டோபர் 2023 (UTC)Reply

பலர் இறக்குமதி செய்துள்ள பக்கத்தில் நானும் நேற்று இறக்குமதி செய்துள்ளேன். கிளைவித்தகத் தாவரம் என்ற கட்டுரைக்காக {{clade|label1=கிளைவித்தகத் தாவரம்|1={{Clade polysporangiophyte}}}} என்பதை இறக்குமதி செய்தேன். அப்பொழுது src வழு வந்ததது. அக்கட்டுரையில் உள்ள தகவற்பெட்டியை இற்றைப்படுத்தியவுடன், அவ்வழு மறைந்து விட்டது. என்ன நடந்துள்ளது என தொடர்ந்து அறிய முற்படுகிறேன். இற்றைப்படுத்த வேண்டிய நுட்பங்களை நாம் எண்ணுதல் வேண்டும். அதற்கு வழுக்கள் உதவும் என்றே எண்ணுகிறேன். நுட்பம் அறிந்தோர் தெளிவு படுத்தினால், தமிழ் விக்கிப்பீடிய தளம் பிற மொழி தளங்களைப் போல செம்மையுற என்னால் இயன்றதை செய்ய ஏதுவாக இருக்கும். உழவன் (உரை) 04:14, 15 அக்டோபர் 2023 (UTC)Reply

பயனர் அணுக்கம் தொகு

இவ்வாறு எல்லாப் பயனரும் Module போன்ற நுட்ப பெயர்வெளிகளில் தொகுக்க முடியாதவாறு phabricator வழு பதிய வேண்டும். அத்துடன் முக்கியமான வார்ப்புருக்களும் காப்பிடப்பட வேண்டும். த.வி.யில் சில இடங்கள் (தவறுதலாகவும்) விசமத்தாக்ககுதலுக்குள்ளாகக்கூடிய சாத்தியமுள்ளது. @Ravidreams, Sundar, and Neechalkaran: AntanO (பேச்சு) 13:05, 14 அக்டோபர் 2023 (UTC)Reply

ஆம். வழுக்களைக் கண்டறிந்து phabricator பக்கத்தில் வழு பதிய வேண்டும் என்பதை முழு மனத்துடன் ஏற்கிறேன். ஓரிரு வழிகாட்டுதல் தந்தால் அப்பொறுப்பினை நான் ஏற்கிறேன். அப்பொழுதே பிற தளங்களைப் போல நாமும் புதிய நுட்பங்களின் வழி செல்ல ஏதுவாகும். //அனுக்கம்// அல்ல. அணுக்கம் என்பதே சரியென்று எண்ணுகிறேன். உழவன் (உரை) 04:19, 15 அக்டோபர் 2023 (UTC)Reply
நன்றி, @AntanO, @Info-farmer; இதை மாதிரியாகக் கொண்டு வழு பதியுங்கள். @Tshrinivasan @Neechalkaran போன்றோரும் வழிகாட்டலாம். -- சுந்தர் \பேச்சு 03:36, 16 அக்டோபர் 2023 (UTC)Reply
@AntanO: இத்தகைய அணுக்கக் கட்டுப்பாடுகளை விதிக்க இந்த விதிப்படி சமுகத்தின் ஒப்புதல் வேண்டும் என அண்மையில் வலுயுறுத்தினர். சமுக ஒப்புதலைக் கோரும் முன்னர் கவனிக்க வேண்டிய சில தரவுகளை அளிக்க விரும்புகிறேன். இதுவரை உருவான இப்பெயர்வெளிப் பக்கங்களில் கணிசமான திருத்த உருவாக்கத்தைப் பிற மொழி நுட்பப் பயனர்களே உருவாக்கிவிட்டுள்ளனர். இவை இனி தடைபடலாம். தமிழில் 1263 பக்கங்கள் இப்பெயர்வெளியில் உள்ளன. மேலும் பல உருவாகும் வாய்ப்புமுள்ள நிலையில் ஒரு சிலரிடம் மட்டும் இதன் அணுக்கம் இருக்குமானால் எப்படி மேம்படுத்துவதெனச் சிந்திக்க வேண்டும். மேலே சுட்டிக்காட்டப் பட்ட பயனரைத் தவிர வேறு யாரும் பிழையான தொகுப்புகளைச் செய்யாவிட்டால் தேவையான பக்கங்களைக் காப்பிட்டு மட்டும் கொள்ளலாமா? -நீச்சல்காரன் (பேச்சு) 07:30, 16 அக்டோபர் 2023 (UTC)Reply
@Sundar வழிகாட்டலுக்கு நன்றி. @Neechalkaran //தமிழில் 1263 பக்கங்கள் இப்பெயர்வெளியில் உள்ளன// என்பவையில் உள்ள வழுவை சீராக்க முதலில் முயற்சி எடுக்க விரும்புகிறேன். அப்பக்கங்களுக்கான இணைப்பு தருக. மேலும் ஒரு எடுத்துக்காட்டு மூலம் வழிகாட்டினால், இன்னும் விரைவாக அவற்றைக் களைய முடியுமென்றே எண்ணுகிறேன். நுட்பத்திற்காக பிற மொழியினரைச் சாரந்து இருத்தலை விட, சுய கற்றல் நம் சமூகத்திற்கு நல்லது என்றே எண்ணுவதால் வழிகாட்டுக. உழவன் (உரை) 02:03, 17 அக்டோபர் 2023 (UTC)Reply
அந்தப் பக்கங்களில் பிழை எனச் சொல்ல வில்லை. மேலே பரிந்துரைத்தவாறு அணுக்கக் கட்டுப்பாட்டினை விதித்தால் இப்பக்கங்களைத் திருத்த முடியாமல் போகலாம் எனப் பொதுவாகச் சொன்னேன். https://quarry.wmcloud.org/ தளத்தில் 'select * from page where page_namespace =828' என்ற வினவலைத் தமிழ் விக்கிப்பீடியாவில் இட்டால் அந்தப் பெயர்வெளிப் பக்கங்கள் கிடைக்கும். -நீச்சல்காரன் (பேச்சு) 08:49, 17 அக்டோபர் 2023 (UTC)Reply

MONTHNAME தொகு

முதல் பக்கம் உட்பட பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளில் சிவப்பு இணைப்பு (மாதம் ஆங்கிலத்தில்) வருகிறது. உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டும். கடைசியாக வார்ப்புரு:MONTHNUMBER, வார்ப்புரு:MONTHNNAME ஆகியன இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. @Neechalkaran, Info-farmer, Jayarathina, and Aswn:.--Kanags \உரையாடுக 22:20, 14 அக்டோபர் 2023 (UTC)Reply

வார்ப்புரு:MONTHNAME ஐ 2016 இல் உள்ள திருத்தத்திற்கு முன்னிலையாக்கியிருக்கிறேன். இப்போது வழு இல்லை. மாதங்கள் தமிழில் வருகின்றன. இதனால் வேறு வழுக்கள் வருகிறதா எனப் பார்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 11:39, 15 அக்டோபர் 2023 (UTC)Reply
நன்றி உழவன் (உரை) 01:37, 16 அக்டோபர் 2023 (UTC)Reply

Tech News: 2023-42 தொகு

MediaWiki message delivery 23:46, 16 அக்டோபர் 2023 (UTC)Reply

பிற மொழிச் சொற்களுக்கான இணைப்புகளை களைய நுட்பக்கருவி தேவை தொகு

நாம் பெரும்பாலும் நம் கட்டுரை வளத்தினைக்கூட்ட பிற மொழி கட்டுரைகளையே பயன்படுத்துகிறோம். அப்பொழுது இதுபோன்று உள் இணைபுகளைக் களைய நேரமாகிறது. இந்நிக்கலைச் செய்யக்கூடிய பொத்தான் ஒன்று அமைத்தால் தொகுப்பவருக்கு எளிமையாக இருக்கும். யாவாகிறிப்டில்(javascript), இதற்கென ஒரு பொத்தான் செய்ய இயலும் என்றே எண்ணுகிறேன். அதனை எழுதவல்ல நிரலர் உதவுக. உழவன் (உரை) 03:40, 17 அக்டோபர் 2023 (UTC)Reply

Tech News: 2023-43 தொகு

MediaWiki message delivery 23:16, 23 அக்டோபர் 2023 (UTC)Reply

Tech News: 2023-44 தொகு

MediaWiki message delivery 23:21, 30 அக்டோபர் 2023 (UTC)Reply

Tech News: 2023-45 தொகு

MediaWiki message delivery 21:05, 6 நவம்பர் 2023 (UTC)Reply

Tech News: 2023-46 தொகு

MediaWiki message delivery 23:52, 13 நவம்பர் 2023 (UTC)Reply

Tech News: 2023-47 தொகு

MediaWiki message delivery 00:55, 21 நவம்பர் 2023 (UTC)Reply

Tech News: 2023-48 தொகு

MediaWiki message delivery 23:08, 27 நவம்பர் 2023 (UTC)Reply

தேடு வார்ப்புருவில் வழு களைய உதவுக தொகு

வார்ப்புரு பேச்சு:உரலி-தாவரவியல்பெயர் உழவன் (உரை) 10:55, 28 நவம்பர் 2023 (UTC)Reply

 Y மீடியாவிக்கி நுட்பத்தால் வழு களையப்பட்டது. உழவன் (உரை) 02:22, 18 திசம்பர் 2023 (UTC)Reply

வார்ப்புரு பேச்சு:Automatic taxobox தொகு

வார்ப்புரு பேச்சு:Automatic taxobox என்பதை இற்றைப்படுத்த வேண்டும். ஏனெனில் தொடர்புடைய கட்டுரைகள் தகவற்பெட்டியில் தற்போது தெரியவில்லை. உழவன் (உரை) 09:14, 30 நவம்பர் 2023 (UTC)Reply

Tech News: 2023-49 தொகு

MediaWiki message delivery 23:50, 4 திசம்பர் 2023 (UTC)Reply

Tech News: 2023-50 தொகு

MediaWiki message delivery 02:12, 12 திசம்பர் 2023 (UTC)Reply

கணக்கை ஆக்கு தொகு

புதிய இடைமுகத்தில் புதிய கணக்கை உருவாக்குக என்பதற்குப் பதில் கணக்கை ஆக்கு எனவும், முன்னிலையாக்கு என்பதற்குப் பதில் திரும்பப்பெறு எனவும் வருகிறது. இது சரியா? இதனை மாற்ற வேண்டும் எனில் எங்கு தெரிவிக்க வேண்டும். தெரிந்தவர்கள் உதவவும். -- ஸ்ரீதர். ஞா (✉) 13:25, 16 திசம்பர் 2023 (UTC)Reply

@Sridhar G: இடைமுக மாற்றங்களை https://translatewiki.net/ என்னும் இணையதளத்தில் செய்ய வேண்டும். அண்மையில் @Fahimrazick: நிறைய மாற்றங்களை செய்தார். அதனால்தானா என்று தெரியவில்லை. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:31, 17 திசம்பர் 2023 (UTC)Reply
தகவலுக்கு நன்றி @Balajijagadesh,
@Fahimrazick இது போன்ற மாற்றங்களை
சமூக ஒப்புதல் பெற்று மாற்றலாம். -- நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 06:18, 17 திசம்பர் 2023 (UTC)Reply
நான் ஆங்கிலத்தின் மொழிபெயர்ப்பையே வழங்கினேன். பழைய மொழிபெயர்ப்புகளில் ஏராளமான பிழைகள் காணப்பட்டதால் அவற்றிற் பலவற்றைத் திருத்தினேன். பிழை திருத்த மற்றவர்களின் ஒப்புதல் தேவையா? புதிய கணக்கை உருவாக்குக என்ற பொருளில் ஆங்கிலத்தில் கிடையாது. அது Create account என்றிருக்கிறது. புதிய என்ற சொல் கிடையாது. மற்றது, உருவாக்குக என்று இங்கே ஒருவரைப் பார்த்துக் கூறப்படுவதில்லை. மாறாக அது பயனர் இடைமுகத்துக்கே கட்டளையிடுகிறது. அதனாலேயே அது அஃறிணை ஒருமையிலேயே இருந்தாக வேண்டும். பாஹிம் (பேச்சு) 07:11, 17 திசம்பர் 2023 (UTC)Reply
நல்லது. ஆங்கிலத்தில் Sand box என்று இருப்பதால் மணல் பெட்டி எனவும் Village pump என்பதை கிராம அடிகுழாய் என மாற்றாமல் எளிதில் புரியும்படியும் காரணத்தோடும் இருக்க வேண்டும் என்பதற்காக தானே தகுந்த உரையாடல் நடைபெற்று வைத்துள்ளனர். இங்கும் உங்களது கருத்தினைக் கண்டேன். இது போல் மற்றவர்கள் கருத்தினைப் பெற்று இடைமுகத்தை மாற்றுவதே சரியாக இருக்கும். நன்றி வணக்கம். ஸ்ரீதர். ஞா (✉) 05:47, 19 திசம்பர் 2023 (UTC)Reply
@Fahimrazick: வணக்கம். இடைமுகத்தில் செய்யப்படும் மாற்றங்கள், விக்கிப்பீடியத் தளத்தில் பல்வேறு இடங்களில் பிரதிபலிக்கக்கூடியவையாக இருக்கின்றன. கண்டறியப்பட்டுள்ளத் திருத்தங்களை தமிழ் விக்கிப்பீடியா குமுகாயத்தில் உரையாடி, மாற்றுக் கருத்துகள் இருப்பின் அவற்றையும் கருத்திற்கொள்ள வேண்டும் என்பது எனது கருத்தாகும். முன்னிலையாக்கு என்பது திரும்பப்பெறு என மாற்றம் கண்டிருந்தது. இதனைச் செய்தது நீங்களா என்பது எனக்குத் தெரியவில்லை. withdraw எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாகவும் திரும்பப்பெறு என்பது அமைகிறது. ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் முன்னிலையாக்கு எனும் சொல் பொருத்தமானது என்றே நான் கருதுகிறேன் - முன் இருந்த நிலைக்கு கொண்டுசெல்லல்.
புதிய கணக்கை உருவாக்கு எனும் சொற்றொடர் அனைவருக்கும் எளிதில் புரியத்தக்கதாக உள்ளது. கணக்கை ஆக்கு என்பது வாசகர்களுக்குப் புரிந்துகொள்ள சற்றுக் கடினமானதாக இருக்கக்கூடும். இவ்வாறாக மாற்றுக் கருத்துகள் எழும் என்பதால் செய்ய விரும்பும் திருத்தங்களை அறிவித்து, உரையாடிய பிறகு மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:07, 19 திசம்பர் 2023 (UTC)Reply
நல்லது. அப்படியே முயல்கிறேன். ஆயினும் எல்லா இடங்களிலும் அது சாத்தியமில்லை. பெரும்பாலும் நான் ஆங்கிலத்தை அப்படியே மொழிபெயர்க்க முயல்கிறேன். ஏனென்றால் பல்வேறு இடங்களில் ஆங்கிலத்திற் கூறப்பட்டுள்ளதன் கருத்துக்குச் சற்றும் பொருத்தமில்லாத தமிழ் மொழியாக்கங்களைக் காண்கிறேன். அத்துடன் திரும்பப் பெறு என்பது ஏற்கனவே பல இடங்களிற் பயன்படுத்தப்பட்டிருந்தது. நானும் சில இடங்களிற் கவனிக்காமல் அதை அப்படியே எடுத்தாண்டு விட்டேன். ஆயினும் முன்னிலையாக்கு என்பது போன்ற பரவலான சொல்லாக்கங்களை நானும் முடிந்த வரை அப்படியே பேணவே முயல்கிறேன். பாஹிம் (பேச்சு) 16:26, 19 திசம்பர் 2023 (UTC)Reply
அன்பின் சிறீதர், மொழிபெயர்ப்பு என்பது சொல்லுக்குச் சொல் மொழிமாற்றம் செய்வதல்ல. கருத்துக்குக் கருத்து என மொழிமாற்றம் செய்வதே. சில இடங்களில் இலக்கணப் பிழையாக அல்லது தமிழ் மரபுக்குச் சற்றும் பொருந்தாத பயன்பாடுகள் இருக்கின்றன. அத்தகையவற்றைத் திருத்துவது தானே முறை. பாஹிம் (பேச்சு) 16:29, 19 திசம்பர் 2023 (UTC)Reply
//சில இடங்களில் இலக்கணப் பிழையாக அல்லது தமிழ் மரபுக்குச் சற்றும் பொருந்தாத பயன்பாடுகள் இருக்கின்றன. அத்தகையவற்றைத் திருத்துவது தானே முறை// முழுமையாக உடன்படுகிறேன். ஆலமரத்தடியிலாவது ஒரு தகவல் கொடுத்துவிட்டு செய்திருக்கலாம் என்பது தான் எனது கருத்து. தங்களது புரிதலுக்கு நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 09:13, 22 திசம்பர் 2023 (UTC)Reply
@Fahimrazick: ஒற்றோபர் (Otrober) என்பதற்கான ஒலிப்பெயர்ப்பு இலக்கணம் என்ன?--Kanags \உரையாடுக 06:16, 20 திசம்பர் 2023 (UTC)Reply
ககர மெய்யை அடுத்து டகரம் வருவதற்கான எந்த இலக்கணமும் இல்லை. பாஹிம் (பேச்சு) 17:38, 20 திசம்பர் 2023 (UTC)Reply
தமிழிக்கணத்திற் ககர மெய்யை அடுத்து அதன் உயிர்மெய்யெழுத்து மட்டுமே வரலாம். அக்டோபர் என்றெழுதுவது எப்பொழுதும் இலக்கணப் பிழை. அதனாலேயே இலங்கை வழக்கான ஒற்றோபர் என்பதைப் பயன்படுத்தினேன். ஒற்றோபர் என்றெழுதுவதில் இலக்கணப் பிழை கிடையாது. இலங்கையில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்றவர்கள் அதை நன்கறிவர். பாஹிம் (பேச்சு) 17:54, 20 திசம்பர் 2023 (UTC)Reply
  • கணக்கை ஆக்கு என்பதற்கான எனது நிலைப்பாடு: பொதுவாக புதிய பயனர்களுக்கான பயிற்சி வகுப்புகளில், 'கணக்கு உள்ளதா? புதிதாக உருவாக்க வேண்டுமா? எனக்கு கணக்கு உருவாக்குவது எப்படி?' போன்ற வினாக்கள் கேட்படுவது வழமையாக உள்ளன. எனவே, இடைமுகத்தில் உள்ள ஆங்கிலச் சொற்றொடருக்கு, 'கணக்கை ஆக்கு' என்பது பொருத்தமானது தான். ஆனால், அதனை தமிழ் சூழலுக்கு ஒப்ப குறிப்புச்சொல்லாக அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இடைமுகத்தில் ஓரிரு சொற்களால் அமைப்பது நன்று. கூகுள் உட்பட பலமுன்னணி இணையங்கள் தெளிவு வேண்டி, சொற்றொடர்களை (Sign up ---> Create a Google Account) மாற்றியுள்ளன. எனவே ஆங்கிலச் சொற்றொடர்களை மறப்போம். குறிச்சொல்லாக, 'புதிய கணக்கு' என மாற்றக் கோருகிறேன். 'கணக்கு ஆக்கு' என்பதை, நான் 'முன்னிலையாக்கு' என்ற சொல் போலவே எண்ணுகிறேன். இருப்பினும் புதியவர்களுக்காக இதனைக் கோருகிறேன்.--உழவன் (உரை) 00:57, 22 திசம்பர் 2023 (UTC)Reply
    தகவலுழவன் வேண்டிக் கொண்டதற்கு ஏற்ப வரலாற்றைக் காட்டு என்றிருந்ததைப் பக்க வரலாறு என்று மாற்றியுள்ளேன். அது சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பல்லவாயினும் பக்கங்களுக்கும் இடைமுகத்துக்கும் தகும் என்பதால் அதனை ஏற்றேன். பாஹிம் (பேச்சு) 08:08, 22 திசம்பர் 2023 (UTC)Reply

இன்று முதல், வேண்டுகோள் வைத்தல் அல்லது மாற்றம் செய்ய விழைதல் ஆகியனவற்றிற்கு விக்கிப்பீடியா:இடைமுகப்பு மொழிபெயர்ப்பு/வேண்டுகோள்கள் எனும் பக்கத்தில் உரையாடுவோம். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:56, 22 திசம்பர் 2023 (UTC)Reply

@பாஹிம், இடைமுகத்தில் செய்யும் இவ்வாறான திருத்தங்கள் விக்கிப்பீடியாவில் உரையாடிய பின்னரே மாற்றவேண்டும். மாதங்களின் பெயர்களை உங்களுக்குத் தெரிந்த மொழிபெயர்ப்புகளில் மாற்றுவது தவறு. October என்பதைத் தமிழிலக்கணத்தின்படி ஒக்குதோபர் என எழுதவேண்டும் என நான் கூறலாம். அனால் அவ்வாறு எழுதவேண்டுமா என்பதை இங்கு உரையாடியே தீர்மானிக்கலாம். உங்கள் மொழிபெயர்ப்புகள் எல்லாம் சரி என்று கூற இயலாது. உங்களுக்கு விரும்பியபடி இடைமுக மொழிபெயர்ப்புகளை மாற்றியதற்கு எனது எதிர்ப்பைப் பதிவுசெய்கிறேன். ஆங்கிலத்தில் உள்ளதெல்லாம் அப்படியே மொழிபெயர்க்க வேண்டியதில்லை. புதிய கணக்கை உருவாக்கு என்பது பயனர்களுக்கு எளிதில் புரியுமாறு இருந்தது. அதனைக் கணைக்கை ஆக்கு என மாற்றியிருக்கத் தேவையில்லை. மேலும், தமிழக வழக்குச் சரியா அல்லது இலங்கை வழக்குச் சரியா என்று வாதிடுவதில் பயனில்லை. இங்குள்ள தகவல்கள் பல கோடித் தமிழருக்குப் புரியாதிருந்தால் அவற்றாற் பயனேதுமில்லை. ஒரு சில பயனர்கள் இவ்வாறு தாம் நினைப்பதே சரி என மாற்றங்களை மேற்கொள்வது ஏனைய தொடர் பங்களிப்பாளர்களுக்கு அயர்ச்சியை உருவாக்குகிறது. நீங்கள் ஏற்படுத்திய தேவையற்ற மாற்றங்களை நீங்களே மீளமைத்துவிடுமாறு வேண்டுகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஆக்கபூர்வமான முறையில் உங்கள் பங்களிப்புகளை வழங்குமாறு வேண்டுகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 15:19, 23 திசம்பர் 2023 (UTC)Reply

சிவகோசரன், நீங்கள் கூறுவது தவறு. இந்த விக்கிப்பீடியாத் தளம் தமிழ் மொழிக்கானது தானே. நீங்கள் சொல்வது போன்று ஒக்குதோபர் என்று இதுவரை எவரும் எழுதுவது கிடையாது. வேண்டுமென்றே வீம்புக்காக ஒரு வார்த்தையைக் கூறுவது ஆக்கபூர்வமானதன்று. இங்கே நான் இலக்கணப் பிழையான ஒன்றுக்குப் பதிலாகப் புதிதாக ஒரு வழக்கத்தைத் திணிக்கவில்லை. மாறாக ஏற்கனவே புழக்கத்திலுள்ள இலக்கணப் பிழையில்லாத ஒரு சொல்லையே பயன்படுத்தியிருக்கிறேன். தேவையற்ற மாற்றங்கள் என்று எவ்வெவற்றை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்பது தெரியவில்லை. நான் செய்த எல்லா மாற்றங்களையுமா அப்படிக் குறிப்பிடுகிறீர்கள் என்பது தெரியாது. இங்கே நான் தமிழ் மொழிக்குத் தான் தொண்டு செய்கிறேனேயன்றி அதைச் சிதைப்போருக்கல்ல. பாஹிம் (பேச்சு) 15:57, 23 திசம்பர் 2023 (UTC)Reply
இங்கே நான் மற்றுமொரு தகவலையும் கட்டாயம் ஆணித்தரமாகப் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. நான் செய்த மாற்றங்களும் மொழிபெயர்ப்புகளும் ஆக்கபூர்வமான நன்னோக்கிலேயே செய்திருக்கிறேனேயன்றி எதையும் சிதைக்கும் நோக்கத்திலல்ல. இலங்கை வழக்கா இந்திய வழக்கா என்பதைப் பற்றி ஏற்கனவே பல இடங்களில் நாம் உரையாடியிருக்கின்ற நினைவிருக்கிறது. இங்கே ஒரு வழக்கம் தமிழிலக்கணத்தைச் சிதைப்பதாகவும் மறு வழக்கம் தமிழிலக்கணத்துக்குப் பொருத்தமாகவும் இருந்தால் இலக்கணத்துக்குப் பொருத்தமான வழக்கத்தைக் கையாள்வதே ஏற்புடைமை என்றே விளங்கியிருக்கிறேன். பயனர் @செல்வா: இத்தகைய நிலைமைகளைப் பற்றி இதற்கு முன்னர் விளக்கமளித்திருந்ததாக ஞாபகம். பாஹிம் (பேச்சு) 16:08, 23 திசம்பர் 2023 (UTC)Reply
சிவகோசரன், நீங்கள் ஏன் என் மீது தனிப்பட்ட தாக்குதலை நிகழ்த்துகிறீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. நீங்கள் உங்கள் மொழிபெயர்ப்புகள் எல்லாம் சரி என்று கூற இயலாது என்றும் ஒரு சில பயனர்கள் இவ்வாறு தாம் நினைப்பதே சரி என மாற்றங்களை மேற்கொள்வது ஏனைய தொடர் பங்களிப்பாளர்களுக்கு அயர்ச்சியை உருவாக்குகிறது. நீங்கள் ஏற்படுத்திய தேவையற்ற மாற்றங்களை நீங்களே மீளமைத்துவிடுமாறு வேண்டுகிறேன் என்றும் கூறுவது இங்கு பொருத்தமான உரையாடலல்ல. இவ்வாறான தனிப்பட்ட தாக்குதலை நான் வன்மையாக எதிர்க்கிறேன். நான் அங்கு மொழிபெயர்ப்பதையும் நிறுத்தி விட வேண்டும் என்று கூறப்படுகிறதா என்பது தெளிவில்லை. பாஹிம் (பேச்சு) 16:16, 23 திசம்பர் 2023 (UTC)Reply
உங்கள் மீது தனிப்பட்ட தாக்குதல் நடாத்தும் நோக்கில் நான் இதை எழுதவில்லை. October என்பதை இலங்கையில் ஒக்ரோபர் என்றும் இந்தியாவில் அக்டோபர் என்றும் ஊடகங்களிலும் பேச்சு வழக்கிலும் வழங்கப்படுகிறது. இவை இரண்டுமே இலக்கணப்படி தவறு. இதற்குப் பொருத்தமான, இலக்கணப் பிழையற்ற சொல்லை இடைமுகத்தில் மாற்றம் செய்வதானால் அதனை உரையாடி மாற்றியிருக்கலாம். அதுபோலவே "புதிய கணக்கை உருவாக்கு" என்பது தெளிவான அறிவுறுத்தலாக இருந்தது. இவை பல ஆண்டுகளாகப் புழக்கத்திலுள்ள மொழிபெயர்ப்புகள். இவற்றை மாற்றச் சமூக ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாத தொகுப்புகளையே 'தேவையற்ற தொகுப்புகள்' என்கிறேன். சமூக ஒப்புதல் பெறப்படாததால் அவற்றை மீளமைக்க வேண்டுகிறேன். செப்டம்பர் என்றிருந்ததைச் செப்தெம்பர் என்று மாற்றியிருக்கிறீர்கள். இதுவும் இலக்கணப்படி தவறானதே. ஏற்கனவெ உள்ள மொழிபெயர்ப்புகளைத் தவறென நீங்கள் முடிவெடுத்து (உங்கள் முடிவு சரியானதாகவே இருந்தாலும்) மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இன்னும் ஆங்கிலத்தில் உள்ள பல சொற்கள்/தொடர்களைச் சரியான முறையில் நீங்கள் மொழிபெயர்க்கலாம். மேலும், வடமொழி எழுத்துக்களை முற்றாகப் பயன்படுத்தக் கூடாதென்று கருத்தொருமைப்பாடு எட்டப்படவில்லை. அண்மையில் ஒரு பயனரின் தொகுப்பில் பாகிஸ்தான் என்றிருந்ததைப் பாகித்தான் என்று மாற்றியதற்காகத் தான் இனி விக்கிப்பீடியாவில் பங்களிக்கப் போவதில்லை என்று தெரிவித்துவிட்டு விலகிவிட்டார். அவருக்குப் புரியவைக்க முயன்ற போதிலும் அவர் மீள வரவில்லை என்றே தோன்றுகிறது. தமிழக ஆவணங்களைக் கணக்கெடுக்க முடியாது என்று கூறியிருக்கிறீர்கள். அது பொருத்தமற்ற கூற்று. செய்ய விரும்பும் மாற்றங்களை உரையாடி மாற்றலாம் என்ற கருத்துக்குப் பதிலாக எல்லா இடங்களிலும் சாத்தியமில்லை என்று கூறியிருக்கிறீர்கள். இந்த உரையாடல்களின் அடிப்படையிலேயே உங்கள் திருத்தங்களை மீள்விக்கக் கோரினேன். எனது சொற்கள் உங்களைக் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன். இங்கு பக்களிக்கும் விக்கிப்பீடியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழுக்குத் தொண்டு செய்யும் நோக்கிலேயே பங்களிக்கின்றனர். அவ்வாறான நீண்டகாலப் பயனர்களின் கருத்துகளிற்கு மதிப்பளித்து மாற்றங்களைச் செய்வதே பொருத்தமாக இருக்கும். புரிதலுக்கு நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 13:18, 27 திசம்பர் 2023 (UTC)Reply
விக்கிப்பீடியா இற் சேர்க என்று தற்போது வருகிறது. ஏற்கனவே இருந்த விக்கிப்பீடியாவில் இணைக என்பது நன்றாகத் தானே இருந்தது. மேலும் பக்கத்தைப் பதிப்பிக்கும் போது பக்கத்தைப் பிரசுரிக்கவும், பக்கத்தைப் பதிப்பிக்கவும் என்று இருவிதமான சொல்லாடல்கள் வருவதைக் கவனிக்கவும். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 14:42, 29 திசம்பர் 2023 (UTC)Reply
ஆம். தமிழக ஆவணங்களைக் கணக்கெடுக்க முடியாது என்று கூறுவது ஏற்புடையதல்ல. தமிழ் விக்கிப்பீடியா விக்கிப்பீடியர்களுக்கானது மட்டுமல்ல. பெரும்பான்மையின் அடிப்படையில்தான் நாம் முன்னேறிச் செல்ல முடியும். --கி.மூர்த்தி (பேச்சு) 13:33, 27 திசம்பர் 2023 (UTC)Reply

Prove it தொகு

Prove it கருவியில் cite web என்னும் தேர்வு திடீர் என்று வரவில்லை. மிகவும் உதவிகரமான தேர்வு அது. ஏன் வரவில்லை என்று தெரிய வில்லை. விசயம் தெரிந்தவர்கள் உதவவும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:33, 17 திசம்பர் 2023 (UTC)Reply

@Balajijagadesh: Cite news என்பதைத் தேர்ந்தெடுத்து மேற்கோளை இணையுங்கள். மேற்கோள் கட்டுரைக்கு வந்த பின்னர் cite web என்பதற்கு மாற்றுங்கள்.-- சா. அருணாசலம் (பேச்சு) 06:24, 17 திசம்பர் 2023 (UTC)Reply
@சா அருணாசலம்: cite web என்பது இன்னும் பல சவுகரிகங்கள் உள்ளது. இணைப்பைக் கொடுத்து load என்பதை சொடுக்கினால் பல தரவுகள் தானாக வரும். Cite web ஏன் வருவதில்லை. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 09:06, 17 திசம்பர் 2023 (UTC)Reply
@Balajijagadesh: மேற்கோள்களின் பிழை காரணமாக kanags Cite news என்பதற்கு வழிமாற்று கொடுத்துள்ளார். அதனால் cite web தேர்வு செய்ய இயலாது.-- சா. அருணாசலம் (பேச்சு) 09:55, 17 திசம்பர் 2023 (UTC)Reply
@Kanags: cite web இல் என்ன பிழை வருகிறது. தெரிந்தால் அதனை நிபுணர்கள் கொண்டு சரி செய்ய முயற்சி செய்கிறேன். cite web என்பதே வேண்டாம் என்பது சரியான தீர்வாகாது. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:50, 16 பெப்பிரவரி 2024 (UTC)Reply
@Balajijagadesh: Cite web வார்ப்புருவில் வழிமாற்றை நீக்கியிருக்கிறேன். கட்டுரைகளில் சில பிழைகள் தெரிகின்றன. பிழை தெரிந்தால் முடிந்தால் சரி செய்யுங்கள்.--Kanags \உரையாடுக 07:39, 16 பெப்பிரவரி 2024 (UTC)Reply
@Kanags: சரி. நான் பார்க்கிறேன். எந்த மாதிரி பிழை என்றால் நீங்களும் குறிப்பிடுங்கள். நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:44, 16 பெப்பிரவரி 2024 (UTC)Reply
archive-date = YYYY-MM-DD என்பதை மட்டும் ஏற்றுக் கொள்கிறது, Accessdate = YYYY-MM-DD அல்லது 15 August 2023 என்ற முறைமையை மட்டும் ஏற்றுக் கொள்கின்றது. இவ்வாறு அனைத்தும் archive பகுதியில்தான் தவறுள்ளது போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 07:58, 16 பெப்பிரவரி 2024 (UTC)Reply

Tech News: 2023-51 தொகு

MediaWiki message delivery 16:17, 18 திசம்பர் 2023 (UTC)Reply

பிழையான தானியக்கப் பகுப்பினை மாற்றுக தொகு

விளக்கத்திற்கு காண்க : பகுப்பு பேச்சு:புகைப்படங்களை பயண்படுத்தும் பக்கங்கள் இதற்கான தீர்வு காணும் போது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளில் உள்ள எழுத்துப்பிழை நீங்கும். உழவன் (உரை) 13:41, 20 திசம்பர் 2023 (UTC)Reply

@Info-farmer: வேறு எந்த பிழைகளும் இல்லையென்றால் புகைப்படங்களை பயண்படுத்தும் பக்கங்கள் என்பதை புகைப்படங்களைப் பயன்படுத்தும் பக்கங்கள் என்று தானியங்கி கொண்டு மாற்றலாம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் என்பதால் பொறுமையாக, தெளிவாக மாற்ற வேண்டும்.-- சா. அருணாசலம் (பேச்சு) 01:28, 21 திசம்பர் 2023 (UTC)Reply
உங்கள் செய்திக்கு நன்றி. ஆனால், இங்கு தோற்றமே எங்கிருந்து வருகிறது எனப் புரியவில்லை. வார்ப்புருக்களில் பார்த்தேன். புலப்படவில்லை. நிரல் பொதியிலும்(Module) பார்த்தேன். அறிய முடியவில்லை. மூல இடத்தில் மாற்றினால் இங்கு தானாகவே மறைந்து விடும் என எண்ணுகிறேன். பின்பு சரியான தலைப்புக்கு, இப்பொழுதுள்ள பகுப்பினை நகர்த்தி விடலாமென்றே எண்ணுகிறேன். பிறர் கண்டறிவர் என்றே எண்ணுகிறேன். உழவன் (உரை) 01:35, 21 திசம்பர் 2023 (UTC)Reply
  • ஒலிப்பு வார்ப்புருவில் உள்ளீடு தரும் போது, அது செயற்படுகிறது. அப்பொழுது மட்டுமே,   என்ற படம் தோன்றுகிறது. அதனால் பகுப்பு வருகிறது. --உழவன் (உரை) 01:54, 21 திசம்பர் 2023 (UTC)Reply
எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடித்து மாற்ற வேண்டும். தனித்தனியே மாற்ற முடியாது.--Kanags \உரையாடுக 02:52, 21 திசம்பர் 2023 (UTC)Reply
@சா அருணாசலம்: .ogg வகையைச் சார்ந்த படிமங்கள் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் இந்தப் பகுப்பு சேர்ந்து கொள்கிறது. இந்தப் பகுப்பில் எழுத்துப்பிழை இருப்பதோடு, பொருட்பிழை இருக்கிறது. படிமம் என்பது வேறு, புகைப்படம் (ஒளிப்படம்) என்பது வேறுதானே. எனவே மூலத்தில் உரிய திருத்தத்தைச் செய்யவேண்டும். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:19, 21 திசம்பர் 2023 (UTC)Reply

──────────────────────────────────────────────────────────────────────────────────────────────────── இப்பிழைக் கண்டறிவதற்கான எனது முயற்சிகளை, அப்பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். முதலில் மூலத்தினை கண்டறிய வேண்டும். பிறகு பெயர் வைப்பது குறித்து கலந்துரையாடுவோம். தொடர்ந்து அப்பக்கத்திலேய உரையாடினால் பின்னாளில் எடுத்துக் காண்பதற்கு வசதியாக இருக்கும். எனவே, அப்பக்கத்திலேயே உரையாடுவோம்.--உழவன் (உரை) 01:05, 22 திசம்பர் 2023 (UTC)Reply

தானியக்க தகவற்பெட்டி தவறான பகுப்பு காட்டுகிறது? தொகு

பகுப்பு:Automatic taxobox cleanup என்ற துப்புரவு பகுப்பில் 1100 கட்டுரைகள் தானியக்கமாக இணைந்துள்ளன. இப்பகுப்பில் பல பிழைகள் உள்ளன. எடுத்துக்காட்டாகர அகந்தூரசு நிக்ரோரிசு என்ற கட்டுரையின் தகவற்பெட்டி சரியாகவே உள்ளது. எனினும், இத்தானியக்க பகுப்பு தோன்றுகிறது. எங்கு வழு உள்ளது? கண்டறிந்து தெரிவித்தால் இதனை துப்புரவு செய்வது எளிமையாகும். உழவன் (உரை) 03:54, 24 திசம்பர் 2023 (UTC)Reply

@Info-farmer: வார்ப்புரு:Create taxonomy வார்ப்புருவில் இந்தப் பகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது. வார்ப்புருவில் ஏதும் தவறுள்ளதா எனப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 08:51, 24 திசம்பர் 2023 (UTC)Reply
நன்றி. ஒன்றுக்கொன்று தொடர்புடைய வகைப்பாட்டியல் வார்ப்புருக்கள் ஏறத்தாழ 50 உள்ளன. மேற்கூறிய வார்ப்புரு உட்பட. அவைகளுக்காக, பகுப்பு:Taxobox templates என்ற தாய்பகுப்பை உருவாக்கியுள்ளேன். இன்னும் சில விடுபட்டுள்ளன என்றே ஊகிக்கிறேன். தானியக்கத் தவறினை கண்டறிவதற்கு கூடுதல் நேரம் ஆகிறது. கண்டறிந்தவுடன் தெரிவிக்கிறேன். உழவன் (உரை) 14:10, 24 திசம்பர் 2023 (UTC)Reply

Sidebars with styles needing conversion? தொகு

பகுப்பு:Sidebars with styles needing conversion என்ற பகுப்பில் பல வார்ப்புருக்கள் உள்ளன. ஒவ்வொரு வார்ப்புருவும் பல கட்டுரைகளுடன் இணைந்துள்ளன. என்ன வடிவம் தேவைப்படுகிறது? ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குங்கள். இதற்கான தீர்வை அனைத்து வார்ப்புருக்களுக்கும் எடுக்க விரும்புகிறேன். உழவன் (உரை) 00:57, 26 திசம்பர் 2023 (UTC)Reply

@Info-farmer: இதனைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 01:39, 26 திசம்பர் 2023 (UTC)Reply
நன்றி. சிறிய எண்ணிக்கைத் தொடர்புள்ள ஒரு வார்ப்புருவில், அறிவித்து விட்டு செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன். உழவன் (உரை) 02:37, 28 திசம்பர் 2023 (UTC)Reply

ஆங்கில பட்டியலில் இருந்து தமிழ் கட்டுரைகளை அறிய நுட்பம் தேவை தொகு

பகுப்பு:மிக அருகிய தாவரங்கள் என்ற பகுப்பிற்குரிய ஆங்கில விக்கிக் கட்டுரைகளை உருவாக்க விரும்புகிறேன். en:Category:Critically endangered plants என்ற பகுப்பில் 800 கட்டுரைகளுக்கும் மேலுள்ளன. இந்த ஆங்கிலக் கட்டுரைகளில், பல ஏற்கனவே தமிழில் எழுதப்பட்டிருக்கலாம். அவற்றினை கண்டறிய ஏதேனும் நுட்பம் உள்ளதா? உழவன் (உரை) 02:45, 28 திசம்பர் 2023 (UTC)Reply

Petscan பயன்படுத்தி எளிதாகக் கண்டறியலாம். இதில் 830 கட்டுரைகள் தமிழில் இல்லை. (விக்கித்தரவில் இணைக்கவில்லை என்றாலும் இந்தக் கருவியில் காட்டாது) நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 14:17, 29 திசம்பர் 2023 (UTC)Reply
அக்கருவியைப் பயன்படுத்தி எப்படி கண்டறிவது? நீங்கள் அதற்குரிய திரைநிகழ்பதிவை செய்தளித்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனக்கு அதில் பகுப்பினை இட்டு அதன் கட்டுரைகளை எடுக்க மட்டுமே தெரியும். உங்கள் பதிவினை காண விரும்புகிறேன்.. உழவன் (உரை) 06:34, 30 திசம்பர் 2023 (UTC)Reply
மேலும் ஒரு ஐயம் படங்கள் உடைய கட்டுரைகளை மட்டும் எடுக்க இயலுமா? உழவன் (உரை) 03:04, 31 திசம்பர் 2023 (UTC)Reply
//எனக்கு அதில் பகுப்பினை இட்டு அதன் கட்டுரைகளை எடுக்க மட்டுமே தெரியும்// கூடுதலாக wikidata என்பதில் Site links என்பதையும் பயன்படுத்தினால் உங்களுக்கான தகவல்கள் கிடைக்கும். நிச்சயம் நிகழ்பட பதிவும் பதிவேற்றிவிட்டு உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
//படங்கள் உடைய கட்டுரைகளை மட்டும் எடுக்க இயலுமா?// இது உங்களுக்கு உதவலாம் என நினைக்கிறேன். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 04:15, 31 திசம்பர் 2023 (UTC)Reply
@Sridhar G 'குவாரி' தளத்தில் அதனோடு பிற வினவல்களையும் தேடிப் பார்த்தேன். எனது முயற்சி பலன் அளிக்கவில்லை. அதனால் மீடியாவிக்கி தளத்தில் கேட்டிருந்தேன். எனக்கு SQL தெரியாது. @Neechalkaran உங்கள் உதவியை எதிர்நோக்குகிறேன். உழவன் (உரை) 14:21, 3 சனவரி 2024 (UTC)Reply
வினவல்களை, கலந்துரையாடி அமைத்துள்ளேன். இனி படக்கட்டுரைகளை மட்டும் எடுக்க இயலும். @Sridhar G நீங்கள் இணைப்பு தந்தமையால் இதனை செய்ய இயன்றது. நன்றி. உழவன் (உரை) 01:16, 20 சனவரி 2024 (UTC)Reply

Tech News: 2024-02 தொகு

MediaWiki message delivery 01:19, 9 சனவரி 2024 (UTC)Reply

வாசி (read) தொகு

கட்டுரைகளில் தென்படும் அடையில் (tag) உள்ள வாசி [வாசி | மூலத்தைத் தொகு | பக்க வரலாறு] என்பது படிமங்களிலும் தெரிகிறது. ஆகவே பார் அல்லது காண் அல்லது ஏதாவது பொருத்தமான சொல்லில் இருப்பது சிறப்பு. AntanO (பேச்சு) 07:24, 11 சனவரி 2024 (UTC)Reply

படிமங்களில் View என்பது முன்னர் எவ்வாறு இருந்தது? அண்மையில் வாசி என்று பாகிம் மாற்றியிருந்தார். அது படிமங்களுக்கும் மாறி விட்டது போலத் தெரிகிறது.--Kanags \உரையாடுக 08:48, 11 சனவரி 2024 (UTC)Reply
View என்றிருந்ததை பார் என்றே மாற்றியிருக்கிறேன். காணவும் என்று இலக்கணப் பிழையாக இருந்ததையே அப்படி மாற்றினேன். Read என்றிருந்ததையே வாசி என்று மாற்றினேன். அதில் பல இடங்களில் பல்வேறு விதமாக மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. பயனர் இடைமுகங்களில் ஒரு பதத்தை ஒரே விதமாகவே மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்படியில்லாவிட்டால் அவற்றிற் பல குழப்பங்கள் ஏற்படலாம். ஆயினும், இங்கே ஏதாவது ஓரிடம் சிக்கலானதாக இருந்தால் அதை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முயல்கிறேன். அப்படிப்பட்டதை அதற்கென்றே தொடங்கப்பட்ட கட்டுரையில் பதிவிட்டு எனக்கும் குறிப்பிடுங்கள். அப்போது அவற்றைப் பார்த்துத் திருத்த வசதியாக இருக்கும். பாஹிம் (பேச்சு) 19:06, 11 சனவரி 2024 (UTC)Reply
விக்கிப்பீடியா:இடைமுகப்பு மொழிபெயர்ப்பு/வேண்டுகோள்கள் -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:11, 11 சனவரி 2024 (UTC)Reply

Tech News: 2024-03 தொகு

MediaWiki message delivery 00:12, 16 சனவரி 2024 (UTC)Reply

விக்கித்தரவில் பக்கங்களை இணைக்க நுட்பம் உள்ளதா? தொகு

விக்கித்தரவில் இணைக்கப்படாமல் பல பகுப்புகளும், சில கட்டுரைகளும் உள்ளன. இவற்றை தொகுத்து, விக்கித்தரவில் இணைக்க நுட்பம் உள்ளதா? எ-கா பகுப்பு பேச்சு:ஆப்பிள்கள் என்ற துணைப்பகுப்பு விக்கித்தரவில் இணைக்கப்படாமல் உள்ளது. உழவன் (உரை) 00:08, 19 சனவரி 2024 (UTC)Reply

d:MediaWiki:Gadget-slurpInterwiki.js என்பது உள்ளது. பயனர் இடைமுகப்புக் கருவியாக, விக்கித்தரவு திட்டத்தில் வைத்துக் கொள்ளலாம். அவர்கள் கூறிய படி செய்து பார்த்தேன். ஆனால், எப்படி செயற்படுகிறது என்பது புரியவில்லை. தானியக்கமாக இணைக்க வழு பதிந்துள்ளனர். உழவன் (உரை) 01:42, 23 சனவரி 2024 (UTC)Reply
@Sriveenkat உங்களால் வழிகாட்ட இயலும் என எண்ணுகிறேன். எண்ணமிடுக. உழவன் (உரை) 02:02, 24 சனவரி 2024 (UTC)Reply

உரிய வார்ப்புருக்கள் இருந்தும் அட்டவணையில் ஏன் வழு வருகிறது? தொகு

{{Nom}}, {{Won}} ஆகிய வார்ப்புருக்கள் கீழ்கண்ட கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், வழு ஏன் வருகிறது? காண்க:ஆரிசின்_(திரைப்படம்)#பாராட்டுக்கள் உழவன் (உரை) 01:10, 20 சனவரி 2024 (UTC)Reply

@சத்திரத்தான் நன்றி. உங்களின் பக்க மேம்பாட்டினைப் பார்த்து கற்றேன்.  Y உழவன் (உரை) 02:42, 22 சனவரி 2024 (UTC)Reply

தாவரவியல் பெயர்களை தமிழ் பெயர்களாக மாற்ற நுட்ப உதவி தேவை தொகு

இதற்குரிய உரையால் பக்கத்தில் விரிவாக தெரிவித்துள்ளேன். கட்டுரையில் 50க்கும் மேற்பட்ட சொற்களை உருவாக்கி கட்டுரைகளை உருவாக்கி வருகிறேன்/வருகிறோம். விரைந்து செய்ய தொழில் நுட்ப வழிகாட்டல்களை/உதவிகளைத் தருக. இதற்கான உரையாடல் பக்கத்தில் எண்ணமிடுக. பேச்சு:மூலிகைப்_பட்டியல்_(தமிழ்நாடு)#தாவரவியல்_பெயர்களை_மாற்ற_உதவி_தேவை உழவன் (உரை) 08:10, 21 சனவரி 2024 (UTC)Reply

Tech News: 2024-04 தொகு

MediaWiki message delivery 01:03, 23 சனவரி 2024 (UTC)Reply

எனது wikitch கணக்கினுள் புகுபதிகை செய்ய இயலவில்லை? தொகு

கடந்த மூன்று மாதங்களுக்கு முன், From The Grid With Toolforge Build Service (kubernets) நடைபெற்றது. எனது விக்கித் தானியங்கி பைத்தான் நிரல்களை wikitech கணக்கினுள் வைத்திருந்தேன்.அக்கணக்கினுள் இப்பொழுது புகுபதிகை செய்ய இயலவில்லை. இதனைப் பார்த்தும் எனக்குப் புரியவில்லை. நம்மில் wikitech கணக்கு வைத்துள்ளவர்களுடன் உரையாட விரும்புகிறேன். அக்கணக்கு வைத்திருப்பவர் தெரிவியுங்கள். உழவன் (உரை) 16:14, 24 சனவரி 2024 (UTC)Reply

Tech News: 2024-05 தொகு

MediaWiki message delivery 19:31, 29 சனவரி 2024 (UTC)Reply

ஆங்கில விக்கிப்பீடியாவில் இல்லா வார்ப்புருக்கள் தொகு

மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) என்பதிலுள்ள கட்டுரைகளை உருவாக்க, ஒருங்கிணைப்பு செய்து வருகிறேன். எனவே, இவற்றிற்குரிய தாவரவியல் வார்ப்புருக்களை இறக்குமதி செய்ய வேண்டியதாக சூழ்நிலை உள்ளது. ஆனால், பல தமிழ்நாட்டு தாவரங்களுக்கு உரிய வார்ப்புருக்கள், ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து இறக்குமதி செய்ய இயலவில்லை. எடுத்துக்காட்டாக, வார்ப்புரு:Taxonomy/Hygrophila இதற்குரிய தீர்வினைத் தருக. நான் ஆய்ந்த வரை விக்கியினங்களில் தற்போதுள்ள பன்னாட்டு அறிஞர் வகைப்பாட்டியல் முறை உள்ளது. ஆனால் ஆங்கில விக்கிப்பீடியாவில் அவை உருவாக்கப்படவில்லை. பொதுவாக தாவரவளமுள்ள நாடுகளின் தாவரங்களைக் குறித்து மிகக் குறைவான வகைப்பாட்டியல் தரவுகளே உள்ளன. அதுவும் ஏறத்தாழ பத்துவருடங்கள் பழைமையானது எனலாம்!--உழவன் (உரை) 02:17, 1 பெப்பிரவரி 2024 (UTC)Reply

Tech News: 2024-06 தொகு

MediaWiki message delivery 19:22, 5 பெப்பிரவரி 2024 (UTC)Reply

Tech News: 2024-07 தொகு

MediaWiki message delivery 05:48, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply

CS1 errors - புதிய வழு தொகு

பகுப்பு:CS1 errors: missing title என்ற புதிய வழு இன்று முதல் தோன்றுகிறது. {{citeweb}} மாற்றம் செய்ய வேண்டும். உழவன் (உரை) 09:22, 16 பெப்பிரவரி 2024 (UTC)Reply

இது போன்ற பல வழுக்கள் {{citeweb}} மூலம் வருகிறது. @Balajijagadesh: கவனிக்க.--Kanags \உரையாடுக 10:34, 16 பெப்பிரவரி 2024 (UTC)Reply

Tech News: 2024-08 தொகு

MediaWiki message delivery 15:36, 19 பெப்பிரவரி 2024 (UTC)Reply

Tech News: 2024-09 தொகு

MediaWiki message delivery 19:23, 26 பெப்பிரவரி 2024 (UTC)Reply

சான்று வார்ப்புரு பயன்பாட்டு எல்லை தொகு

ஒரு கட்டுரைக்கு சான்றுகள் தருவது, மிக முதன்மையான பங்களிப்பு என மேல்விக்கியில் தெரிவிக்கின்றனர். தாவரவியல் சார்ந்த குடும்பம், பேரினம், இனம் கட்டுரைகளுக்கு, சான்றுகளைத் தர {{உரலியிடு-தாவரஎண்}} என்பதை உருவாக்கி பல நூறு தாவரவியல் பெயர்களுக்கு பயன்படுத்தி வருகிறேன். இதன் முக்கியத்துவம் யாதெனில், ஒரு தாவரவியல் பெயருக்கு, இரண்டு வெவ்வேறு சான்றுகளை தர இயலும். அச்சான்று இணையதளங்களைக் கொண்டு, கட்டுரையை விரிவாக்கவும் இயலும்; உருவாக்கவும் இயலும். ஒரு கட்டுரையில் ஏறத்தாழ 70 தாவரவியல் பெயர்களுக்கு மட்டுமே சான்றுகளை இவ்வாறு தர இயலுகிறது. ஆனால், பல கட்டுரைகளுக்கு நூற்றுக் கணக்கில் சான்றுகளை இடவேண்டிய சூழல் உள்ளது. காண்க: துன்பேர்சியா வெறும் பெயர் பட்டியலை உருவாக்குவது எனது நோக்கமல்ல. உரிய சான்றுகளை இதுபோல தந்தால் அது கட்டுரைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாகும். எனவே, இப்பேரினக்கட்டுரையில், இனங்கள் 70 வரை வார்ப்புருக்களையும், 71 -150 வரை சான்று என வெளியிணைப்பாகவும் தந்துள்ளேன். தொடர்ந்து இம்முறையை பிற கட்டுரைகளுக்கும் தர விரும்புகிறேன். இதற்கு மாற்று நுட்பம் ஏதேனும் உள்ளதா? இம்முறையையே பின்பற்றவா? உழவன் (உரை) 13:37, 1 மார்ச்சு 2024 (UTC)Reply

BHL என்பது இணையத்தில் உள்ள சிறந்த எண்ணிம நூலகம். இதில் தாவரவியல் குறித்த பன்னாட்டு அறிஞர்களின், பல்லாண்டு ஆவணத் தொகுப்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு தாவரவியலாளரைக் குறித்து அறிய அவர் பெயரை இந்த வார்ப்புருவில் இட்டால் வரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்களை நாம் காண இயலும். நாம் தமிழில் தலைப்பு வைப்பதால், இது தமிழ் தலைப்பில் தேடுகிறது. அதனால் இடர். இதற்குரிய தீர்வு கண்டால் ஆயிரகணக்கான கட்டுரைகளுக்கு சான்றுகளை எளிதில் அமைக்கலாம். இது குறித்து தொடர்ந்து அந்த வார்ப்புருவின் பேச்சுப் பக்கத்திலேயே தெரிவியுங்கள். உழவன் (உரை) 03:18, 4 மார்ச்சு 2024 (UTC)Reply

Tech News: 2024-10 தொகு

MediaWiki message delivery 19:46, 4 மார்ச்சு 2024 (UTC)Reply

இப்பகுப்புகளைத் துப்புரவு செய்ய என்ன நுட்பம் கையாள வேண்டும்? தொகு

  1. பகுப்பு பேச்சு:Automatic taxobox cleanup
  2. அதே போல, பேச்சு:எலுமிச்சை ஊசிமல்லி என்பதில் கூறப்பட்ட பகுப்பு
  3. பகுப்பு:CS1 errors: dates

ஏறத்தாழ 28 கட்டுரைகளில் துப்புரவு செய்ய விரும்புகிறேன். இதற்குரிய துப்புரவு நுட்பம் வேண்டும். அறியத் தந்தால் தொடர்ந்து துப்புரவு செய்ய ஏதுவாகும். உழவன் (உரை) 04:26, 10 மார்ச்சு 2024 (UTC)Reply

வறுமையின் நிறம் சிவப்பு, ஜெ. ஜெயலலிதா உள்ளிட்ட ஏராளமான கட்டுரைகளில் (23,791), மேற்கோள்களில் வழுக்கள் காணப்படுகின்றன. இவை அண்மையில் ஏற்பட்டவை போன்று தெரியவருகிறது. (பகுப்பு:CS1 errors: dates) @AntanO: சரிசெய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:38, 10 மார்ச்சு 2024 (UTC)Reply
கட்டுரைகள் இற்றையாகும்போது 23791 என்ற எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த வழுக்களைச் சரி செய்யலாம். ஆனால் பரந்தளவில் சிக்கல்கள் உள்ளன. நாம் சில தெளிவான வழிகாட்டல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
  • மாதம் போன்ற மதிப்புகளுக்கு குறிப்பிட்ட பெயரை மட்டும் பயன்படுத்தல். வறுமையின் நிறம் சிவப்பு கட்டுரையில் செப்டம்பர் , செப்தெம்பர் ஆகியதும் சரியாகிவிட்டது. அண்மையில் இம்மாதியான மாற்றங்கள் சில நிகழ்ந்திருக்க வேண்டும். இவ்வாறான மாற்றங்கள் செய்பவர்கள் தொழிநுட்ப அறிவுடன் செய்வது மிகவும் நல்லது.
  • மொழிபெயர்க்கும்போது மேற்கோள்களையும் தமிழாக்கம் செய்யாதிருத்தல்.
  • நுட்பம் தெரியாமல் இறக்குமதி செய்தல்.
தற்போதுள்ள கட்டுரைகளில் மாற்றங்கள் செய்வதா? மதிப்பு மாற்றுவதா போன்ற குழப்பங்கள் உள்ளன. AntanO (பேச்சு) 16:07, 10 மார்ச்சு 2024 (UTC)Reply
@Selvasivagurunathan m தொழிநுட்ப ரீதியாகத் தெரியவில்லை ஆனால் இவ்வாறு செய்தால் பிழை சரியாகிறது. காண்க: 1, 2 (ஆனால் அனைத்துப் பிழைகளுக்கும் இது பொருந்துமா எனத் தெரியவில்லை. -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 16:24, 10 மார்ச்சு 2024 (UTC)Reply
மாதங்களில் ஒதுக்கப்பட்ட மதிப்பு (assigned value) புதிய பெயருக்கேற்ப அல்லது ஆங்கிலத்தில் அமைந்தால் சிக்கல் இல்லை. எ.கா: செப்டம்பர் (பழையது) > செப்தெம்பர் (புதியது), மார்ச் (பழையது) > மார்ச்சு (புதியது), January - December. AntanO (பேச்சு) 16:38, 10 மார்ச்சு 2024 (UTC)Reply
CS1 errors: dates குறித்து தொடர்ந்து உரையாடி வழுக்களை சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதில் எனக்கு நிபுணத்துவம் இல்லாததால், பரிந்துரைகளை முன்வைக்க இயலவில்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:34, 16 மார்ச்சு 2024 (UTC)Reply

Tech News: 2024-11 தொகு

MediaWiki message delivery 23:04, 11 மார்ச்சு 2024 (UTC)Reply

உதவி தேவை தொகு

இங்கு பட்டியலாகியுள்ள கட்டுரைகளில் சட்டமன்ற உறுப்பினரின் பெயரை சி. வி. கணேசன் என மாற்றி உதவ வேண்டுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:24, 14 மார்ச்சு 2024 (UTC)Reply

Autosuggest linking Wikidata item after creating an article தொகு

meta:Community Wishlist Survey 2022/Wikidata/Autosuggest linking Wikidata item after creating an article நாளைத் தொடங்க உள்ளது. யாவாக்கிறிட்டு தெரிந்தவர் விக்கிமீடியாவின் மென்பொருள் குழுவுடன் இணைந்து செயற்பட இது ஒரு நல்ல வாய்ப்பு. ஈடுபட்டு திறன் வளர்ப்பீர். மேலதிக விவரம்: meta:Event:WishathonMarch2024 உழவன் (உரை) 14:39, 14 மார்ச்சு 2024 (UTC)Reply

Tech News: 2024-12 தொகு

MediaWiki message delivery 17:39, 18 மார்ச்சு 2024 (UTC)Reply