விக்கிப்பீடியா:இடைமுகப்பு மொழிபெயர்ப்பு/வேண்டுகோள்கள்
தமிழ் விக்கிப்பீடியா இடைமுகப்பின் தமிழாக்கத்தில் எதையேனும் மாற்ற வேண்டுமா? இங்கு வேண்டுங்கள். Translatewikiயில் அறிமுகம் உள்ள பயனர்கள் உதவுவர்.
Difference between revisions of
தொகுஇது ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்னர் மொழிபெயர்க்கப்பட்டும் இன்னும் இங்கு மாற்றம் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 07:54, 27 சூலை 2012 (UTC)
- betawiki:MediaWiki:Difference-title/ta இங்கு மொழிபெயர்க்கப்பட்டும் இன்னும் மீடியாவிக்கி:Difference-title இங்கு இற்றையாகவில்லை. இது பற்றி அங்குள்ளவர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன். --சண்முகம்ப7 (பேச்சு) 18:00, 27 சூலை 2012 (UTC)
- இங்குள்ள மீடியாவிக்கி:Difference-title தானாகவே இற்றைப்படுத்தப்படுமா? அல்லது இங்கும் அதனை மொழிபெயர்க்கவேண்டுமா?--Kanags \உரையாடுக 03:27, 28 சூலை 2012 (UTC)
- தானாகவே இற்றையாகும், அங்கு update செய்வதில் ஏதோ பிரச்சினையாம், raymond என்பவர் வந்துதான் சரி செய்ய வேண்டும் என்றும், அவர் இன்னும் இரண்டொரு நாளில் வந்துவிடுவார் என்றும் கூறியுள்ளனர் (அவர்களின் மறுமொழி Translations have not been exported normally in the last few weeks, Niklas did it in the end but some things were left to fix, this might be one of those. Raymond should be back in a couple days and take care of it.)--சண்முகம்ப7 (பேச்சு) 03:57, 28 சூலை 2012 (UTC)
- ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 08:08, 7 ஆகத்து 2012 (UTC)
உங்களுக்குப் ஒரு செய்தி உள்ளன என்று பிழையாக வருகிறது. திருத்தவும் யாரோ ஒருவர் முன்பே கூறியிருந்தார். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:51, 22 செப்டெம்பர் 2012 (UTC)
உங்களுக்கான அறிவிப்புகளில் செய்யவேண்டிய திருத்தங்கள்
தொகு- ஆங்கில விக்கிப்பீடியா தளத்தில் Your alerts என இருப்பது, தமிழ் விக்கிப்பீடியா தளத்தில் Your அறிவிப்புகள் என உள்ளது. இதனை உங்களுக்கான அறிவிப்புகள் அல்லது உங்களுக்கான விழிப்பூட்டல்கள் என மாற்ற வேண்டும் (உரிய சொற்களை பரிந்துரைகளின் அடிப்படையில் தீர்மானிக்கலாம்).
- மாற்றக்களை பார் என உள்ளதை மாற்றங்களைப் பார் என திருத்த வேண்டும் (உரிய சொற்களை பரிந்துரைகளின் அடிப்படையில் தீர்மானிக்கலாம்).
படிமம் 1 | படிமம் 2 |
---|---|
-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:05, 23 திசம்பர் 2023 (UTC)
- சுட்டிக்காட்டியமைக்காக உங்களுக்கு நன்றி. நான் அவற்றைத் திருத்த முயல்கிறேன். பாஹிம் (பேச்சு) 17:07, 23 திசம்பர் 2023 (UTC).
திருத்தங்களுக்கான பரிந்துரை
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் ...
தொகுப்பு வரலாற்றைப் பார்
பேச்சுப் புத்தகத்தைப் பார்
கட்டுரையை உலாவியிற் பார்
வாசி
மூலத்தைத் தொகு
நகர்த்து
முன்தோற்றம் காட்டு
மாற்றங்களைக் காட்டு ...
...
... இம்மாதிரியான கட்டளைகளை
தொகுப்பு வரலாற்றைப் பார்க்க
பேச்சுப் புத்தகத்தைப் பார்க்க
கட்டுரையை உலாவியிற் பார்க்க
வாசிக்க
மூலத்தைத் தொகுக்க
நகர்த்துக
முன்தோற்றம் காட்டுக
மாற்றங்களைக் காட்டுக ...
...
என்று கட்டளைகளின் வார்த்தைகளை மாற்ற முயற்சிக்க வேண்டுகிறேன். நன்றி!
. பொதுஉதவி (பேச்சு) 13:10, 27 சனவரி 2025 (UTC)
- கீழ்க்காணும் மாற்றங்களைச் செய்யவும் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். நன்றி!
• உள்ளிடு --> உள்ளிடுக
• கைவிடு --> கைவிடுக
• ஏற்று --> ஏற்றுக
• மறை --> மறைக்க
• மீளமை --> மீளமைக்க
• தேடு --> தேடுக
• மின்னஞ்சலிடு --> மின்னஞ்சலிடுக
• மற்றப் பயனர்களிடமிருந்து மின்னஞ்சல்களை அனுமதி --> மற்றப் பயனர்களிடமிருந்து மின்னஞ்சல்களை அனுமதிக்க
• மேலும் சேர் --> மேலும் சேர்க்க
• கடவுச் சொல்லை மாற்று --> கடவுச் சொல்லை மாற்றுக
• வரைபடம் தமிழ் நாடு --> வரைபடம் தமிழ்நாடு
• விக்கிப்பீடியா தளத்தில் தேடு --> விக்கிப்பீடியா தளத்தில் தேடுக
• மொழிகளைச் சேர் --> மொழிகளைச் சேர்க்க
• இப்பயனருக்கு மின்னஞ்சலிடு --> இப்பயனருக்கு மின்னஞ்சலிடுக
• பயனர் குழுக்களைக் காட்டு --> பயனர் குழுக்களைக் காட்டுக
• கோப்பைப் பதிவேற்று --> கோப்பைப் பதிவேற்றுக
• குறுகிய உரலியைப் பெறு --> குறுகிய உரலியைப் பெறுக
• ஒரு நூலாக்கு --> ஒரு நூலாக்குக
• தலைப்பைச் சேர் --> தலைப்பைச் சேர்க்க
• PDF ஆகப் பதிவிறக்கு --> PDF ஆகப் பதிவிறக்குக
• கணக்குத் தரவை அணுகு --> கணக்குத் தரவை அணுகுக
• உலகளாவிய பயனர் விவரத்தைக் காண் --> உலகளாவிய பயனர் விவரத்தைக் காண்க
• மின்னஞ்சல் முகவரியை மாற்று / நீக்கு --> மின்னஞ்சல் முகவரியை மாற்றுக / நீக்குக
• பக்கங்களினதும் கோப்புகளினதும் சிறு தொகுப்புகள் தொடர்பிலும் எனக்கு மின்னஞ்சலிடு --> பக்கங்களினதும் கோப்புகளினதும் சிறு தொகுப்புகள் தொடர்பிலும் எனக்கு மின்னஞ்சலிடுக
• இப்பயனர்கள் எனக்கு மின்னஞ்சலிடுவதைத் தடு --> இப்பயனர்கள் எனக்கு மின்னஞ்சலிடுவதைத் தடுக்க
• நான் மற்ற பயனர்களுக்கு அனுப்பும் மின்னஞ்சல்களின் ஒரு நகலை எனக்கு அனுப்பு --> நான் மற்ற பயனர்களுக்கு அனுப்பும் மின்னஞ்சல்களின் ஒரு நகலை எனக்கு அனுப்பவும்
• மின்னஞ்சல் முகவரியும் பயனர் பெயரும் ஆகிய இரண்டும் வழங்கப்பட்டால் மட்டுமே கடவுச்சொல் மீளமைப்பு மின்னஞ்சல்களை அனுப்பு --> மின்னஞ்சல் முகவரியும் பயனர் பெயரும் ஆகிய இரண்டும் வழங்கப்பட்டால் மட்டுமே கடவுச்சொல் மீளமைப்பு மின்னஞ்சல்களை அனுப்பவும்
• பக்கத்தை மொழிபெயர் --> பக்கத்தை மொழிபெயர்க்க
• மொழிபெயர்க்கத் தொடங்கு --> மொழிபெயர்க்கத் தொடங்குக
• பழைய பார்வைக்கு மாறு --> பழைய பார்வைக்கு மாறுக
• பக்கத்தை ஆக்கு --> பக்கத்தை ஆக்குக
• முன்தோற்றம் காட்டு --> முன்தோற்றம் காட்டுக
• மாற்றங்களைக் காட்டு --> மாற்றங்களைக் காட்டுக
• எல்லாப் புலன்களையும் காட்டு --> எல்லாப் புலன்களையும் காட்டுக
• உசாத்துணையைச் சேர் --> உசாத்துணையைச் சேர்க்க
• நூற்பட்டியலைச் சேர் --> நூற்பட்டியலைச் சேர்க்க
• புலங்களை வடிகட்டு --> புலங்களை வடிகட்டுக
• மூலத்தை ஆக்கு --> மூலத்தை ஆக்குக
• ஒரு வரைபடத்திற் பார் --> ஒரு வரைபடத்திற் பார்க்க
• மாற்றங்களைப் பார் --> மாற்றங்களைப் பார்க்க
• புத்தம் புதிய பயனர்களிடமிருந்து மின்னஞ்சல்களை அனுமதி --> புத்தம் புதிய பயனர்களிடமிருந்து மின்னஞ்சல்களை அனுமதிக்க
விளக்கம் வேண்டுதல்
தொகு- மேற்குறிப்பிடப்பட்ட பதங்களை, கணினிக்கு நாம் இடும் கட்டளைகளாகக் கருதினால், 'பக்கத்தைப் பதிப்பிடுக', ... போன்ற கட்டளைகளை மாற்றும்படி வேண்டுகிறேன். நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 02:54, 11 பெப்பிரவரி 2025 (UTC)
- வெளியிணைப்புகள் மேற்கொள்ளப்படும் போது தானியக்கமாகக் குறிப்பிடப்படும் 'at the வந்த வழி இயந்திரம்' என்பதில் 'at the' என்ற பதங்கள் தமிழாக்கம் செய்யப்படுமா?