விக்கிப்பீடியா பேச்சு:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்

நிருவாகி

தொகு

புள்ளி ஏறிய ரகரத்தையடுத்து வகரம் வராது என்று நினைக்கிறேன். மரபுக்கேற்ப அனைத்து இடங்களிலும் நிருவாகி என்று பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 06:06, 2 ஏப்ரல் 2009 (UTC)

சுந்தர், தமிழில் இன்ன எழுத்துக்கு அடுத்து இன்ன எழுத்து வராது என்று ஒரு வழிகாட்டல் அட்டவணை செய்ய இயலுமா? எடுத்துக்காட்டுக்கு, இரண்டு வல்லின மெய்யெழுத்துகள் அடுத்தடுத்து வரா--ரவி 09:23, 2 ஏப்ரல் 2009 (UTC)
தமிழில் மெய்யொலிக் கூட்டம் கட்டுரையை அந்த நோக்கிலேயே துவக்கினேன். நீங்கள் கேட்டுள்ள அட்டவணையைச் செய்து தக்க கட்டுரையில் இடலாம். மற்றபடி, எனது கூற்றில் ஒரு திருத்தம்: பார்வை என்ற சொல்லில் உள்ளதுபோல் வகரம் ரகர ஒற்றடுத்து வரும். ஆனால் குறிலைத்தொடர்ந்து ரகர ஒற்று வராது. தமிழில் மெய்யொலிக் கூட்டம் கட்டுரையில் இதற்கான விளக்கத்தை இட்டிருக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 09:53, 2 ஏப்ரல் 2009 (UTC)

வாக்களிப்பது அவசியமா?

தொகு

சில பங்களிப்பாளர்களோ அல்லது அவர்களது பங்களிப்புகளோ சிலருக்கு அதிகம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு நம்மை தெரிந்திருக்கும். அதனால் வாக்கெடுப்பிற்கு வரும்போது, நாமும் கட்டாயம் வாக்களிக்கவேண்டுமா? வாக்களிக்காத பட்சத்தில் மனவருத்தம் ஏற்படுமா? இதற்கு முன் நடந்த நிருவாகி வாக்கெடுப்பில் நான் கலந்து கொள்ளவில்லை. இதனால் அந்த நிர்வாகிகள்(பங்களிப்பாளர்கள்) என்மீது மனவருத்தம் கொள்வார்களா? இதுபற்றி விளக்கினால் நன்று. இது பொதுவான கேள்வியாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி -- மாஹிர் 10:32, 18 செப்டெம்பர் 2010 (UTC)Reply

அப்படி எந்தக் கட்டாயமும் இல்லை, மாகிர். யாரும் தவறாகக் கொள்ளப் போவதில்லை. சில வேளைகளில் ஒரு நபரின் செயல்பாடுகளில் நமக்கு ஏற்பு இருந்தாலும் அவர் நிருவாகப் பொறுப்பேற்க இது சரியான நேரமில்லை என்ற கருதினால் எதிர்த்தும் வாக்களிக்கலாம். அதையும் மனம் கோணாமல் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருக்கும் என நம்புவோம். -- சுந்தர் \பேச்சு 10:50, 18 செப்டெம்பர் 2010 (UTC)Reply

மாகிர், ஒருவர் பல்வேறு காரணங்களுக்காக விக்கிப் பக்கம் வராமலோ தேர்தலில் வாக்களிக்காமலோ இருக்கலாம். எனவே, இன்னார் எனக்கு வாக்களிக்கவில்லை என்று யாரும் கவலைப்படத் தேவை இல்லை. ஆனால், தேர்தல் நடப்பது அறிந்தும் நமது நண்பராக நினைக்கக்கூடியவருக்கோ மற்றவருக்கோ முழு மனதாக வாக்களிக்க இயலா நிலையில் உள்ள தர்ம சங்கடம் புரிகிறது. விக்கிக்கு வெளியே உள்ள பல தேர்தல் களங்களில் இந்த நிலை உண்டு :) ஆனால், விக்கியின் சிறப்பே அதன் வெளிப்படைத் தன்மை, துணிந்து மாற்றுக் கருத்துகளைத் தெரிவித்தல், விக்கியின் நலனை முதன்மையாக கொள்ளல் ஆகியவையே. தற்போது நெடுநாள் பயனராக இருக்கும் பலரும் கூட பல இடங்களில் முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்து உள்ளோம். கடுமையாக மோதி உள்ளோம். ஆனால், அதையும் தாண்டி விக்கியர் என்ற உணர்வும் நட்பு பேணலும் உண்டு. அந்த உணர்வு இல்லாமல் ஒருவர் சிறந்த நிருவாகியாக ஆக முடியாது. துணிந்து மாற்றுக் கருத்துகளைச் சொல்லாத வரை நாமும் ஒரு சிறந்த விக்கியராக ஆக முடியாது. நிருவாகத் தேர்தலைப் பொறுத்தவரை, ஒருவர் மேல் தவறான விசயங்கள் இருந்தால் சுட்டிக்காட்டி எதிர்ப்பது இலகு. நல்ல முறையில் செயல்படுகிறவர்களுக்கு நிருவாகியவதற்கு இந்த அளவு பங்களிப்புகள் போதுமா என்று தயங்கலாம். தமிழ் விக்கி போன்ற வளரும் விக்கிகளில் நம்பிக்கைக்கு உரிய, திறனும் ஈடுபாடும் உடைய எவரையும் நிருவாகி ஆக்குவதே வழக்கம். ஆங்கில விக்கி அளவு கடுமையான வரையறைகள் இல்லை.

ஒருவர் நிருவாகி ஆவது விக்கிக்கு ஊறு விளைவிக்கும் என்றால் நாம் துணிந்து சொல்ல வேண்டும். ஊறு ஏதும் இல்லை; ஆனால், பங்களிப்புகள் போதாது என்று நினைத்தால் அதையும் சுட்டிக்காட்டலாம். விக்கி செய்திகள் தொடர்பான உங்களின் ஒரு விண்ணப்பத்துக்கு இவ்வாறு நான் கூறி இருந்தேன். அதே போல், நான் அதிகாரிப் பொறுப்புக்கு முன்மொழியப்பட்ட போது, நான் இன்னும் கொஞ்சம் பக்குவம் அடைய வேண்டும் என்று ஒரு பயனர் கருத்திட்டார். அதனை ஏற்று நான் சிறிது காலம் பொறுத்து மீண்டும் விண்ணப்பித்தேன். தமிழ் விக்கியின் ஒரு நிருவாகியின் தேர்தலின் போது நான் ஆதரவு வாக்கு இட்டேன். ஆனால், இன்னும் அவர் எப்படிச் சிறப்பாக செயல்பட முடியும் என்பதைத் தனி மடலில் இட்டேன். இவ்வாறு பல்வேறு விதங்களிலும் மற்றவர் மனம் நோகாமலும் அதே வேளை விக்கியன் நலனை விட்டுக் கொடுக்காமலும் செயல்பட முடியும். --இரவி 15:40, 18 செப்டெம்பர் 2010 (UTC)Reply

மாஹிர், விக்கியின் நிர்வாகி, அதிகாரி தேர்தல்களில் வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. விரும்பினால் வாக்களிக்கலாம் அல்லது விடலாம். ஆனால், இப்படியான வேளைகளில் ஒருவரைத் தெரிவு செய்கிறோம் என்பதை விடச் சிறப்பாகப் பணிபுரியும் ஒருவருக்கு எமது ஆதரவைத் தெரிவிப்பதன்மூலம் அவரை ஊக்குவிக்கும் ஒரு வாய்ப்பையும் பெறுகிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். பலன் எதிர்பாராமல் விக்கியில் செயல்படுபவர்களுக்கு இவ்வாறான அங்கீகாரங்கள் ஓரளவு திருப்தியை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, சிறப்பாகச் செயல்படுகிறார் என்று நீங்கள் எண்ணும் பயனர் ஒருவர் குறித்த தேர்தல்கள் நிகழும்போது ஆதரவாக வாக்களிப்பது நல்லது. --- மயூரநாதன் 17:55, 18 செப்டெம்பர் 2010 (UTC)Reply

தேவையற்ற கேள்விகள்

தொகு

நிருவாகிகள் தேர்வின் போது குறிப்பிட்ட ஒருவரை நிர்வாகிக்காகப் பரிந்துரை செய்வதும் அதற்கான வாக்கெடுப்பு நடத்துவதும் நடைமுறையில் இருக்கிறது. இந்த வாக்கெடுப்பில் வாக்குகளுக்கான ஆதரவு, எதிர்ப்பு, நடுநிலை என்று மூன்றுவிதமான நிலை பயன்படுத்தப்படுவது சரியானது. அதற்கடுத்து கருத்து என்கிற பகுதியும் தேவையானதுதான். ஏனெனில் நிருவாகியாகத் தேர்வு செய்யப்படுபவர்கள் குறித்து வாக்களிப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்கிற கருத்தை வெளியிடுவதற்கான வாய்ப்பை இந்தப் பகுதி அளிக்கலாம். ஆனால் இதில் கேள்விகள் என்ற பகுதி என்னைப் பொறுத்த வரை தேவையற்றது. அவசியம் இந்தக் கேள்விகள் தேவை என்று கருதினால் வாக்கெடுப்பு முடிந்த பின்பு, அதாவது அவர் நிர்வாகியாகத் தேர்வு செய்யப்பட்ட பின்பு தாங்கள் நிருவாகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். நீங்கள் நிருவாகியாக இந்த விக்கிப்பீடியாவிற்கு என்ன செய்யலாம் என்றிருக்கிறீர்கள்? விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம்? என்பது போன்ற பொதுவான கேள்விகளாக, அவர்கள் மனம் திறந்து பதில் சொல்லக் கூடிய கேள்விகளாக அமைய வேண்டும். கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும் என்பதாகவும், கேள்விக்கேற்ற பதிலைச் சொல்வதாகவும் அமைவது சரியானதல்ல. எந்த ஒரு கேள்விக்கும், கேள்வி கேட்டவரின் விருப்பத்திற்கேற்ப பதிலளிக்க முடியும். இந்தப் பதில்கள் வெறுமனே எழுத்தில் பதிவாகுமே தவிர அவர்களது செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டதாகவும் அமையும். இதை அனைவரும் பரிசீலித்து மாற்றம் செய்திட வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி. 18:08, 18 செப்டெம்பர் 2010 (UTC)Reply

உங்கள் எண்ணம் புரிகிறது, சுப்பிரமணி. ஆங்கில விக்கியில் நிருவாக அணுக்கத்துக்கான தேர்வில் கேள்வி கேட்பதற்கான நோக்கம் அங்குள்ள தேவையினால் வந்தது. முதலில், அங்கு ஆயிரக்கணக்கான பயனர்கள் இருப்பதால் ஒருவரைப் பற்றித் தெரிந்திருக்காவிட்டாலும் அவர்களது பங்களிப்புகளைப் பார்த்து, சில கருவிகள் கொண்டு அலசி (!), நிருவாக அணுக்கம் பெற்றால் என்னென்ன செய்வார்கள் வெவ்வேறு சூழல்களை எவ்வாறு கையாள்வார்கள் கொள்கைகளை அறிந்திருக்கிறார்களா என்று அவர்களிடம் கேட்டறிந்து பின் தங்கள் வாக்குகளைச் செலுத்துவர். இங்கு, தற்போதைய சூழலில் நாம் ஒருவரை ஒருவர் அறிந்துள்ளபடியால் இதற்கான தேவை குறைவு. ஆனால், நாளடைவில் சற்று தேவைப்படும். ஆனால், அண்மையில் நாம் கேட்ட கேள்விகள் நிருவாக அணுக்கத்துக்கு தொடர்பற்றவை என்பதை முழுமையாக ஒப்புக் கொள்கிறேன். இது தொடர்பில் ஏற்கனவே கருத்தும் தெரிவித்திருந்தேன். நிருவாகத் தேர்தலைச் சாக்காகக் கொண்டு தொலைநோக்குக் கேள்விகளை நம் அனைவரின் மனத்திலும் எழுப்புவது போல அமைந்துள்ளது. இதை நிருவாகத் தேர்தலில் இருந்து பிரித்தெடுத்துத் திட்டமிடல் பகுதி ஒன்றில் நடத்த வேண்டும். விக்கிமீடியா முழுமைக்குமான திட்டமிடல் விக்கியில் (http://strategy.wikimedia.org/wiki/Main_Page) இருப்பதுபோல் நாம் தமிழ் விக்கிக்கென திட்டமிடலாம். மற்றபடி, நிருவாகத் தேர்தலில் கொள்கைகளைப் பற்றிய புரிதல், நிருவாக அணுக்கத்தின் வழியாகப் பெறக்கூடிய மீடியாவிக்கி மென்பொருள் வசதிகள், பொதுவான பொறுப்புணர்வு, உணர்ச்சிகளுக்காட்பட்டு செயல்படாமை போன்றவற்றைப் பற்றி மட்டும் கேள்விகள் கேட்கலாம். அதைத் தாண்டிய கேள்விகள் ஏதோ நிருவாகிகளுக்கு மட்டுமானவை அல்ல. நிருவாக அணுக்கத்தைப் பற்றிய மிகையான எண்ணத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற அடிப்படையில் உங்கள் கருத்துடன் ஒப்புகிறேன். மற்றபடி வேறு விதமான கேள்விகளை (நான் மேலே எடுத்துக்காட்டியவை போன்று) தொடர்ந்து கேட்கலாம் என்று கருதுகிறேன். -- சுந்தர் \பேச்சு 03:13, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply
தேனி சுப்பிரமணி, கேள்விகள் மிக முக்கியமானவை என நான் நினைக்கின்றேன். ஏனெனில், பயனரின் பங்களிப்பு என்பதைவிட அவர்கள் அணுகும்முறைகள் யாவை, விக்கியின் கோட்பாடுகளுடன் எவ்வாறு அவை இணங்கி உள்ளன என்று அறிவது முக்கியம். பயனரின் பங்களிப்புகளில் இருந்து இவற்றை அதிகம் அறிந்து கொள்ள இயலாது. உரையாடல்களில் கலந்தூகொள்வோரைப் பற்றி ஓரளவுக்கேனும் அறிந்து கொள்ள இயலும். எல்லோரும் உரையாடல்களில் அதிகம் பங்குகொள்வதும் இல்லை . எனினும் குறிப்பிட்ட கேள்விகளுக்கு தேர்வில் நிற்கும் பயனர் மறுமொழிகள் தருவது அவருடைய அணுகுமுறையை அறிந்துகொள்ள பயனுடையதாக இருக்கும். ஒருவரை ஒரு பணியில் அமர்த்தும் முன் கேள்விகள் கேட்பீர்களா, அமர்த்தியபின கேள்விகள் கேட்பீர்களா? இங்கு பணியில் அமர்த்துவது என்பது விக்கி குழுமத்தினரிடம் அவர்கள் ஒப்புதல் பெற்று ஒருவர் தேர்வு பெறுவது. --செல்வா 03:51, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • செல்வா, நிர்வாகப் பொறுப்புக்கு இங்கு ஒரு பயனரை பயனர் நிர்வாகியாக இருப்பவர் பரிந்துரைக்கிறார் அல்லது தாங்களாகவே தங்களைப் பரிந்துரைத்துக் கொள்ளலாம் என்கிற நிலையும் உள்ளது. பயனர் நிர்வாகியாகப் பரிந்துரைக்கப்படுபவர்களுக்கு குறிப்பிட்ட தகுதிகள் எதுவுமில்லை. மேலும் இத்தேர்வில் யார் வாக்களிக்கலாம் என்கிற வாக்களிப்பவர்கள் பட்டியலும் இல்லை.எனவே வாக்கெடுப்பில் பரிந்துரைக்கப்படுபவர்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டவர்களாக முன்கூட்டியே முடிவு செய்து விடலாம். உண்மையைச் சொன்னால் போட்டியின்றி தேர்வு செய்யப்படுபவர்கள் என்றே சொல்லலாம். பெயரளவில் தேர்வு செய்வதற்கு வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட பயனருக்கு போட்டியாக பயனர் எவரும் இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட பயனர்களது போட்டியில் ஒருவர் மட்டும் தேர்வு செய்யப்படும் பொழுதுதான் தாங்கள் குறிப்பிடும் கேள்விகள் அவசியமானது. இங்கு போட்டி எதுவுமில்லை. எனவே கேள்விகள் கேட்டுத்தான் நிர்வாகிகள் தேர்வு செய்ய வேண்டும் என்கிற நிலையே இங்கில்லை. உண்மையைச் சொன்னால் பரிந்துரை என்று வந்து விட்ட பின்பு தேர்வு என்பதே தேவையற்றதே. நீங்கள் சொல்வது போல் ஒருவரைப் பணியில் அமர்த்த பரிந்துரை என்று வந்து விட்டால் போட்டிகளே இருந்தாலும் கேட்கப்படும் கேள்விகள் பெயரளவில்தான் என்பதைத் தாங்களும் அறிந்திருக்கலாம். எனவே கேள்விகளை ஒரு பயனரைப் பரிந்துரைக்கும் முன்பே கேட்க வேண்டும். இந்தக் கேள்விகள் போட்டியில்லாத தேர்வுக்கு அவசியமற்றது . இதற்கு உதாரணமாக நடைமுறை எனும் பெயரில் உள்ள தவறுகள்தான் காரணம். இதற்கு பூனை இல்லாமல் பாடமா? என்கிற குட்டிக்கதையைக் குறிப்பிட விரும்பிகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி. 04:28, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply
நீங்கள் போட்டி என்று தவறுதலாகப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று உணர்கிறேன். இதில் பலர் போட்டி இட்டு, அவர்களுள் ஒருவர் தேர்வு பெறுவதில்லை. ஒருவரை முன் மொழிந்தோ, அல்லது ஒருவர் தானாகவே தன்னை முன்மொழிந்தோ நிற்க நேர்ந்தால், அவருடைய ஏற்பு-மறுப்பு பற்றிக் குழுமத்தினர் வாக்களிப்பர், கருத்தளிப்பர். இத்தேர்வு முறையை புரிந்துகொள்ள வேண்டுகிறேன். இப்பக்கத்தைப் பார்க்க வேண்டுகிறேன். நீங்கள் மேலே கூறிய பல கருத்துகளை (கேட்கப்படும் கேள்விகள் பெயரளவில்தான் என்பதைத் தாங்களும் அறிந்திருக்கலாம்; பரிந்துரைக்கப்படுபவர்களுக்கு குறிப்பிட்ட தகுதிகள் எதுவுமில்லை; வாக்கெடுப்பில் பரிந்துரைக்கப்படுபவர்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டவர்களாக முன்கூட்டியே முடிவு செய்து விடலாம்; உண்மையைச் சொன்னால் போட்டியின்றி தேர்வு செய்யப்படுபவர்கள் என்றே சொல்லலாம்; இந்தக் கேள்விகள் போட்டியில்லாத தேர்வுக்கு அவசியமற்றது) நான் காணும்பொழுது, நீங்கள் இந்த தேர்வு முறையைப் பற்றி இன்னும் தெளிவாகப் படித்து புரிந்து கொள்ள வேண்டியீருப்பதாக உணர்கிறேன். இன்னும் மிகுந்த நன்னோக்கத்தோடும், நம்பிக்கையோடும் அணுக வேண்டும் என்று உணர்கிறேன். தேனி சுப்பிரமணி, அருள்கூர்ந்து இவற்றைப் பற்றித்தீர எண்ணிப்பாருங்கள். ஆங்கில விக்கியில் " At the end of that period, a bureaucrat will review the discussion to see whether there is a consensus for promotion. This is sometimes difficult to ascertain and is not a numerical measurement, but as a general descriptive rule of thumb most of those above ~80% approval pass; most of those below ~70% fail, and the area between is subject to bureaucratic discretion " என்றும்கூடத் தந்திருக்கின்றார்கள். இதில் மிக முக்கியமானதாக கருத வேண்டியது ஒருவரின் நடுநிலைமை, நன்னோக்குடன் திறம்பட அணுகும் முறையும் கூட்டுழைப்பாற்றும் திறமும், விக்கியின் மேம்பாட்டுக்கு உண்மையிலேயே உழைக்கும் உளநோக்கும் செயற்பாடும் முக்கியமானவை. இங்கே தமிழ் விக்கிப்பீடியாவில் அதிகம் எதிர்ப்பு யாரும் தெரிவிக்காதாதற்குக் காரணம், அப்படியொரு நல்ல தேர்ந்த முன்மொழிவுகள், இணக்க உணர்வுகள் என்றே நினைக்கின்றேன். இப்படியே எப்பொழுதும் இருக்கும் என்றுகூறமுடியாது. ஆனால் எதிர்ப்புகள் தெரிவித்தாலும் ஆதரவு (அடியூட்டு) தெரிவித்தாலும், நடுநிலை அறிவித்தாலும் அவை யாவும் நேர்மையானதாக இருக்க வேண்டும் என்பதே எதிர்பார்ர்ப்பு. எதிர்ப்புத் தெரிவித்தால், அவர்கள்மீது பகை உணர்வு கொள்ளல் ஆகாது. என்ன காரணங்களுக்காக எதிர்ப்புத் தெரிவித்தார்கள் என்று உணர்ந்து அதனைச் சரி செய்ய முயல வேண்டும் (இவை சில நேரங்களில் நிகழாமல் இருக்கலாம், ஏனெனில் அணுகுமுறை என்பது அத்தனை எளிதாக மாறுவதல்ல, ஆனால் கற்றுக்கொள்ளக்கூடியதே. நன்னோக்கம் என்பதைப் பெயரளவாக இல்லாமல் உண்மையான அணுகுமுறையாக இருக்க வேண்டும். முதலில் இல்லாமலோ, குறைவாகவே இருந்தாலும், சிறுகச் சிறுக வளர்த்துக்கொள்ளக்கூடியதே). நன்னோக்கம் என்பதில் நம்பிக்கை இன்மை, cynicism போன்றவற்றைக் கடந்து வருதல் வேண்டும் (இது எளிது என்று சொல்லவில்லை, ஆனால் இயலும்). விக்கியின் ஒவ்வொரு நல்லாக்கமும், இதற்கு எடுத்துக்காட்டு. ஒவ்வொரு இணக்கக் கூட்டுழைப்பும் இதன் உண்மையை பறைசாற்றும் ஒன்று. --செல்வா 05:31, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply
தேனி சுப்பிரமணி, நிர்வாகியாக ஒருவர் பரிந்துரைக்கப்பட்டு ஒருவர் எதிர்த்துக் கருத்துக் கூறியதற்காக அவர் தெரிவு செய்யப்படாத உதாரணமும் தமிழ் விக்கிப்பீடியாவில் இடம்பெற்றுள்ளது. அதற்கான பதிவு எங்குள்ளது என்பது இப்போது என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே ”வாக்கெடுப்பில் பரிந்துரைக்கப்படுபவர்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டவர்களாக முன்கூட்டியே முடிவு செய்து விடலாம்” என்ற உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.--Kanags \உரையாடுக 05:46, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply
ஆம், சுப்பிரமணி. நிருவாக அணுக்கம் உடையவர்களுக்கு இத்தனை இடங்கள் என்று எதுவும் கிடையாது. பொறுப்பானவர்கள், மற்ற பயனர்களின் நன்னம்பிக்கையைப் பெற்றவர்கள், இங்கு பணியாற்றி நிருவாகச் சிக்கல்களைத் தீர்க்க முயல்பவர்கள், மற்றும் செல்வா குறிப்பிட்டது போல நல்ல அணுகுமுறையை உடையவர்களுக்கு ஒரு அணுக்கம் தருகிறோம். மற்றபடி இது ஒரு பட்டமோ பதவியோ அல்ல. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கென்று முடிவெடுப்பதில் முன்னுரிமை எதுவும் இல்லை. விரைந்து நீக்கல் போன்ற பணிகளில் அவர்கள் தாங்களாக முடிவெடுத்தாலும் பயனர்களின் கூட்டு முடிவு வேறாக இருப்பின் அவர்களது செயல்பாடு மீளப்பெறும்.
அதே வேளையில், இங்கு பரிந்துரைப்பவர்கள் அனைவரும் தாமாகத் தேர்வாவார்கள் என்றும் எதிர்ப்பு வாக்குகளே வராது என்றும் எண்ண முடியாது. முன்பு இரவி அதிகாரித் தேர்தலில் போட்டியிட்ட போது ஒரே ஒரு பயனர் மட்டும் இப்போது இன்னொரு அதிகாரி தேவையா என்ற கருத்தை வெளியிட்டார் (எதிர்த்து வாக்களித்தாரா என நினைவில்லை). அதை மதித்து இரவி தேர்தலில் இருந்து விலகினார். பின்னால், சில திங்கள்கள் கடந்த பின்னரே மீண்டும் தேர்வானார். -- சுந்தர் \பேச்சு 05:49, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply

சுப்பிரமணி சொல்வது போல கேட்கப்பட்ட கேளிவிகளுக்கு ஏற்றவாறு பதில் சொல்வது எளிதென்றாலும் ஆங்கில விக்கி RFA க்களை ஒரு வருடமாக படித்து வரும் அனுபவத்தில் சொல்கிறேன். இந்த வழக்கம் உபயோகமானது. அங்கு பலமுறை கட்டாயம் நிர்வாகியாகத் தேர்வு பெற்று விடுவார் என்று பரவலாக நம்பப்படும் ஒருவர், கேள்விகளுக்கு அளித்த பதில்களால் தோல்வியடைந்திருக்கிறார்கள். (அடிக்கடி இது நடந்துள்ளது) பயனர் எண்ணிக்கை அதிகமாகும் போது இது கட்டாயத் தேவையானதாக மாறிவிடும். எனவே நேரடி பழக்கமில்லாத பயனர்களை எடைபோட கேள்விகளும் உதவும். --சோடாபாட்டில் 06:04, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply

  • செல்வா,நிர்வாகி தேர்வில் முன்மொழிதல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதை நானும் அறிவேன்.இதை நான் முன்பே குறிப்பிட்டு விட்டேன். என் புரிதலில் தவறு எதுவும் இல்லை. தாங்கள் ஒருவரைப் பணி அமர்த்துவதற்கான உதாரணத்தைச் சுட்டிக் காட்டியதால்தான் நான் போட்டி குறித்த தகவலைச் சொல்ல வேண்டியுள்ளது. எந்த ஒன்றிற்கும் போட்டி என்று ஒன்று வரும் போதுதான் சிறந்ததைத் தேர்வு செய்ய சில வழிமுறைகளைக் கையாள வேண்டியுள்ளது. உதாரணமாக,நாம் நம் குழந்தைக்கு ஒரு மிதிவண்டி வாங்க ஒரு கடைக்குச் செல்கிறோம். அந்தக் கடையில் பல நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட பல வடிவமைப்பிலான மிதிவண்டிகள் இருக்கும் நிலையில் நாம் ஒவ்வொரு மிதிவண்டி குறித்தும் கேள்விகள் கேட்கிறோம். இதில் நம் வாங்கும் சக்தி,நம் தேவை என பல விபரங்கள் அடங்கும். இங்கு கேள்விகள் தேவையாக உள்ளன. ஆனால் நாம் சைக்கிள் வாங்கச் செல்லும் நிறுவனத்தில் முன்பே விசாரணை செய்து, ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ள மிதிவண்டியை வாங்கச் செல்லும் பொழுது நம் விருப்பம் மட்டுமே மேலோங்கியிருக்கும். இங்கு நம்முடைய கேள்விகள் தேவையற்றதாகி விடுகிறது. இது போல் மிதிவண்டி விற்பனை செய்யும் கடைகள் பல இருக்கும் போது ஒரு கடைக்கும் மற்ற கடைகளுக்கும் இடையில் அதே வடிவமைப்புடைய மிதிவண்டியாக இருந்தாலும் அதன் விலை, நிறம் என்பது போன்ற பல வேறுபாடுகள் குறித்து அறிய கேள்விகள் அவசியமாகி விடுகிறது. இது போல்தான் தமிழ் விக்கிப்பீடியாவில் நிர்வாகிகள் தேர்வில் போட்டிகள் இல்லை. கேள்விகளின் தேவையுமில்லை. ஆங்கில விக்கிப்பீடியாவில் எண்ணிக்கை அதிகமிருப்பதால் கேள்விகள் அவசியமாகின்றன.

தமிழ் விக்கிப்பீடியாவில் நிர்வாகிகள் தேர்வில் முன்மொழியப்படுபவர்கள் நடுநிலைமை, நன்னோக்குடன் திறம்பட அணுகும் முறை, கூட்டுழைப்பாற்றும் திறம், விக்கியின் மேம்பாட்டுக்கு உண்மையிலேயே உழைக்கும் உளநோக்கும் செயற்பாடு போன்றவைகளை அவருடைய பங்களிப்பைக் கொண்டு முடிவு செய்து விடலாம். நிர்வாகியாக பயனர் எவரையாவது முன்மொழிய விரும்புபவர்கள் குறிப்பிட்ட பயனரின் பங்களிப்புகள் குறித்தும், அவர்களுடைய செயல்பாடுகள் குறித்தும் முழுமையாக ஆய்வு செய்து அதுகுறித்து பல தகவல்களைச் சேகரித்து அந்தத் தகவல்களை முன்மொழியும் போது குறிப்பிட்டு பரிந்துரைக்க முன் வர வேண்டும். பயனர் பேச்சுப் பக்கத்தில் ஒப்புதல் கோரும் போது அவர் ஒப்புதல் வழங்கி விட்டால் அங்கு அவரிடம் முன்மொழிய விரும்புபவரே தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நிர்வாகியாக தேர்வு செய்யப்பட்டால் என்ன செய்வீர்கள்? விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம்? என்பது போன்ற பொதுவான கேள்விகளுடன் அவருடைய விருப்பத்தையும் தொழில்நுட்பத் திறனையும் வெளிப்படுத்தும் கேள்விகள் கேட்கலாம். அவருடைய பதில்களைக் கொண்டு அவரைப் பற்றி முழுமையான தகவல்களை முன்மொழிவில் தெரிவித்து விடலாம். வாக்களிப்பவர்கள் அனைவரும் நிர்வாகியாகத் தேர்வு செய்யப்படுபவர் குறித்த முழுமையான புரிதலுடன் வாக்களிக்க உதவும். மேலும் இது குறித்த கருத்துக்களை தேர்வுக்கான வாக்கெடுப்புப் பக்கத்தில் வாக்களிப்பவர்கள் பதிவு செய்ய வாய்ப்பாக அமையும்.

என்னைப் பொறுத்தவரை தமிழ் விக்கிப்பீடியாவில் நிர்வாகிகள் தேர்வில் போட்டிகளில்லாத நிலை (பற்றாக்குறை என்று கூட சொல்லலாம்) இருப்பதால் நிர்வாகிகள் தேர்வுக்கான வாக்கெடுப்பில் கேள்விகள் தேவையற்றது. மேற்போக்காக ஏதோ கேள்விகள் கேட்க வேண்டும் என்பது போலான நடைமுறையைப் பின்பற்றுவது சரியாகத் தெரியவில்லை. --தேனி.எம்.சுப்பிரமணி. 02:07, 20 செப்டெம்பர் 2010 (UTC)Reply

ஓட்டு எண்ணிக்கை

தொகு

இதற்கு முன் நடந்த ஓட்டெடுப்பிலில்லாமல் இம்முறை மட்டும் ஏன் ஓட்டு எண்ணிக்கையில் பிழைகள்? 20 ஆதரவு ஓட்டு இருந்தும் (வாக்கு: 19|0|0) என்று காட்டுகிறது, 10 ஆதரவு ஓட்டிற்கு (வாக்கு: 8|0|0)என்று காட்டுகிறது. (செல்லாத ஓட்டு விழுந்துவிட்டதா? ) நுட்பரீதியான பிழையை சரிசெய்யலாம்.--நீச்சல்காரன் (பேச்சு) 05:20, 19 மே 2012 (UTC)Reply

தானியங்கி ஓட்டுமுறை யென்று குழம்பிவிட்டேன். மன்னிக்க--நீச்சல்காரன் (பேச்சு) 05:55, 19 மே 2012 (UTC)Reply

உங்கள் தவறான கருத்தை வெட்டி விட்டீர்கள் என்றால் (<s>, </s> என்பவற்றைப் பயன்படுத்தி) ஏனைய பயனர்கள் உங்கள் கருத்தைச் சரியெனத் தவறாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள். --மதனாகரன் (பேச்சு) 15:52, 19 மே 2012 (UTC)Reply

கேள்விகள் கேட்கப்படாத நிர்வாக அணுக்கம்

தொகு

இதுவரைக்கும் நிர்வாக அணுக்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டவர்களை கேள்விகள் சில கேட்டு அதன் பின் நிர்வாகி ஆக்குவது வழக்கம். முன்பு தேனியார் கேட்ட நிலை வேறு. ஆனால் சென்ற வாக்கெடுப்பில் கேள்விக்கான பதில்கள் அளிக்கப்பட்ட பிறகு ஒரு வாக்கு மாற்றப்பட்டதே. அது போல் இப்போதும் நடப்பதற்கான சாத்தியம் இல்லையா?. கேள்விகள் கேட்கும் முன் நிர்வாக அணுக்கம் கொடுக்கலாம் என விதி ஏதும் தளர்த்தப்பட்டுளதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:49, 14 சனவரி 2013 (UTC)Reply

கேள்விகள் கேட்பது கட்டாயம் இல்லை. வேண்டுமானால் கேட்கலாம். இல்லையெனில் விட்டுவிடலாம். விதி ஏதுமில்லை. :-)--சோடாபாட்டில்உரையாடுக 09:06, 14 சனவரி 2013 (UTC)Reply
கேள்வி கேட்கப்பட்டிருந்தால் நான் நிருவாகியாகியிருக்க மாட்டேன்:)--Kanags \உரையாடுக 10:07, 14 சனவரி 2013 (UTC)Reply
எப்படியோ யாரும் கேள்விகள் கேட்காமல், வாக்கெடுப்பிலிருந்தவர்களும் பதில்கள் சொல்லமால், என் விருப்பப்படியும் மூன்று பயனர்கள் நிருவாக அணுக்கம் பெற்றிருக்கிறார்கள். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 15:39, 14 சனவரி 2013 (UTC)Reply

சொற்களின் வன்மை

தொகு

நாம் பல்வேறு நிலைகளில், பிற தமிழ் இணையங்களில் இருந்து வேறுபட்டவர்கள் என்பதை நமது சொற்கள் தான் கூறும். village pump என்பதை ஆலமரத்தடி என்று தனித்துவ அழகோடு, சுந்தர் மொழியாக்கம் செய்திருப்பது போல, பல அயலகச் சொற்கள் தமிழ் எழுத்துக்களால் மறைந்து இருப்பதும், தமிழைத் திரையாகக் கொண்டு ஆட்சி செய்வதும் வேதனை அளிக்கிறது. தமிழ் என்ன சொல்வளம் இல்லாத மொழியா? இதுபற்றி ஏற்கனவே, பல இடங்களில் எனது எண்ணங்களை தெரியப்படுத்தியுள்ளேன். அவற்றில் ஒரு உரையாடற் பகுதியை இங்கு தருகிறேன் system operator → sysop என்பதற்கு நிருவாகி என்பதும், bureaucrat என்பதற்கு அதிகாரி என்பதும் எப்படி பொருந்தும்? எண்ணங்களை பகிர்வதோடு தங்கள் முடிவுகளையும் கூறக் கேட்டுக்கொள்கிறேன். --≈ உழவன் ( கூறுக ) 03:27, 8 அக்டோபர் 2013 (UTC)Reply

ஆங்கில விக்கிப்பீடியாவில் sysop என்பதை administrator என்றும் கூறுகிறார்கள். இதற்கு ஈடாகவே நிருவாகி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். நிருவாகி, அதிகாரி என்பனவற்றுக்கு ஈடாக அதிகாரப்படிநிலையைச் சுட்டாத நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அனைவருக்கும் உடன்பாடே. ஏற்கனவே இது குறித்து நிறைய இடங்களில் உரையாடியுள்ளோம். தங்களின் அணுக்கர் என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை. மாற்றுச் சொற்கள் இருந்தால் அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.--இரவி (பேச்சு) 04:43, 8 அக்டோபர் 2013 (UTC)Reply
அணுக்கர் என்ற சொல்லை கைவிட்டேன். எனது நோக்கம், நான் முன்மொழிந்ததை காப்பாற்றுவது அன்று. அதனால் தான்
//அயலகச் சொற்கள் தமிழ் எழுத்துக்களால் மறைந்து இருப்பதும், தமிழைத் திரையாகக் கொண்டு ஆட்சி செய்வதும் வேதனை // எனக்குறிப்பிட்டேன்.
பலர் கவனிக்கப்படும் சொற்களானது, பிற மொழி சொற்களாக இருப்பது நமக்கு இழுக்கு. நாம் பயன்படுத்தும் சொற்கள், நம் விக்கிக்குடும்பத்தாரின் நோக்கத்தை விவரிக்கின்றன. ஒரு சொல்லுக்கு பல ஒத்த சொற்கள் இருக்கலாம். பலரும் பயன்படுத்தலாம். மேலும், உங்களின் toolserver -இல், எனக்கான toolserver -இல், administrator என்ற சொல் பயன்படுத்த படவில்லை என்பதால் sysop என்ற நேரடியான சொல்லையே, நமது உரையாடலுக்கு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதுவரை நீங்கள், நான், சுந்தர், மதனாகரன் உரையாடி உள்ளோம். நம் நால்வருக்கும், உங்களின் கீழ்கண்ட உங்கள் முடிவை ஏற்கிறோம்.
//நுட்ப அணுக்கர் என்பது நேரடியான கரடு முரடான சொல்லாக உள்ளது :) நிருவாகி - > பொறுப்பாளர், அதிகாரி - > கூடுதல் பொறுப்பாளர் அல்லது மீ பொறுப்பாளர் என்று அழைக்கலாமா? பல முறை இது குறித்த உரையாடல் எழுவதால், இதனைத் தொடர்ந்து உரையாடி ஒரு முடிவுக்குக் கொண்டு வருவது நல்லது என்று நினைக்கிறேன்--இரவி (பேச்சு) 03:18, 26 ஆகத்து 2012 (UTC)//எனவே, வழக்கம்போல விரைந்து செயற்பட வேண்டுகிறேன். --≈ உழவன் ( கூறுக ) 02:48, 9 அக்டோபர் 2013 (UTC)Reply

புதுப்பயனர் நிர்வாகி கோரிக்கை

தொகு

வணக்கம். நான் புதிசு. ஆனால் எல்லோரும் ஒரே சமம் எனும் அடிப்படையில் எனக்கும் நிர்வாகி அதிகாரம் தரும் பட விக்கிப்பீடியாவில் உயர் அதிகாரி இரவி சார் அவர்களிடம் அன்புடனும் பன்புடனும் கேட்டுக்கொள்கிறேன். இங்கணம் அன்புள்ள வாரணா விருப்பம் --Vaarana18 (பேச்சு) 09:30, 8 அக்டோபர் 2013 (UTC)Reply

வாரணா, விக்கிப்பீடியாவில் நிருவாக அணுக்கம் வேண்டி யார் வேண்டுமானாலும் தங்களைத் தாங்களே கூட பரிந்துரைத்துக் கொள்ளலாம். அவர்கள் நிருவாகப் பொறுப்புக்கு ஏற்றவர் என்றால் மற்றவர்கள் வாக்களிப்பர். விக்கி சமூகத்தின் கருத்தொற்றுமை அடிப்படையில் அவருக்கான நிருவாக அணுக்கம் அளிக்கப்படும். எனவே, இதில் தனிப்பட்டு யாரிடமும் வேண்டுகோள் விடுக்கத் தேவையில்லை.--இரவி (பேச்சு) 14:26, 8 அக்டோபர் 2013 (UTC)Reply

வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்ட பின்பு புதியதாக கணக்கொன்றை தொடங்கிய பயனர் வாக்களிபபதை ஏற்க வேண்டாம் என்று தோன்றுகிறது. பரிந்துரைக்கும் நபர்களைப் பற்றியும், அவர்களுடைய விக்கி செயல்களைப் பற்றியும் அறியாத ஒரு பயனரின் வாக்கு ஆதாரவாக இருக்கும் பொழுதும் ஏற்றதாக இருக்காது என்று எண்ணுகிறேன். மற்றவர்களின் கருத்தினை அறிய ஆவல். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:59, 8 அக்டோபர் 2013 (UTC)Reply

நிராகரிக்கலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 15:08, 8 அக்டோபர் 2013 (UTC)Reply
புதுப்பயனர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு. ஆனால், அவர்களின் வாக்குகள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. நெடுநாள் பயனர்கள் என்றாலும் கூட எதிர்ப்பு வாக்குகள் என்று வரும்போது அதற்கான காரணத்துக்கே முக்கியத்துவம் தரப்படுமேயன்றி எண்ணிக்கைக்கு அன்று.--இரவி (பேச்சு) 15:13, 8 அக்டோபர் 2013 (UTC)Reply
புதிதாக வரும் ஒருவர் நிர்வாகி தரத்திற்கான வாக்கெடுப்பில் வாக்கிட்டால் அதை நிராகரிப்பதில் எனக்கு விருப்பமில்லை. மேலும் அவர் விக்கியை சுத்திவந்தும் விக்கிபற்றி அறிந்தும் கட்டுரை எழுதாமலும் விக்கியுலகத்திற்குத் தெரியாமலும் இருந்திருக்கலாம். இக்கருத்தைக் கூறுவதன் காரணம் நானும் அவர்களுள் ஒருவன் தான். சிறுவயதில் விக்கிகணக்குகள் இரண்டு தொடங்கியிருப்பேன். அப்போதெல்லாம் விக்கியை உலா வந்தேன் ஆனால் கட்டுரை எழுதவில்லை. அந்தக் காலத்தில் இப்பக்கத்திற்கும் வந்துள்ளேன். வாக்களிக்க நினைத்தேன். ஆனால் வாக்களித்தேனா என்பது மறந்துவிட்டது. மேலும் அந்த வாக்குகளை கவனத்தில் கொள்ளாவிடிலும் அவற்றை நீக்க வேண்டாம். அது அங்கேயே இருக்கட்டும். அதை அழிக்க வேண்டாம் என வேண்டுகிறேன். நானும் இரவியும் ஒரே நேரத்தில் கருத்திட்டுள்ளோம். நல்லவேளை கொப்பி பண்ணி வைத்திருந்ததால் பிழைத்தேன் :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:23, 8 அக்டோபர் 2013 (UTC)Reply
ஆதவன், அந்த வாக்குகள் அப்படியே தான் இருக்கும். ஆனால், கருத்து வேறுபாடு வரும் நிலையில் அவற்றுக்கான மதிப்பு குறைவாகவே இருக்கும். அவ்வளவு தான். நீங்கள் தொகுக்கும் அதே நேரத்தில் இன்னொருவர் முந்திக் கொண்டாலும், அடுத்து வரும் "முரண்பாடுகளைச் சீர் செய்யவும்" என்பது போல் வரும் பக்கத்தின் கீழே ஏற்கனவே நீங்கள் எழுதி வைத்திருந்த உரையும் இருக்கும். எனவே, படியெடுத்து வைக்காமல் இருந்தாலும் உங்கள் உரை பாதுகாப்பாக இருக்கும். --இரவி (பேச்சு) 15:31, 8 அக்டோபர் 2013 (UTC)Reply
:) நன்றி :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:39, 8 அக்டோபர் 2013 (UTC)Reply
தெளிவு படுத்தியமைக்கு நன்றி இரவி அவர்களே. தங்களுடைய கருத்தினை பகிர்ந்து கொண்ட அன்டன் மற்றும் ஆதவன் அவர்களுக்கும் என் நன்றிகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:43, 8 அக்டோபர் 2013 (UTC)Reply

உயர் இரவி சார் மன்னிச்சுக்கங்க சார். எனக்கு இங்க என்ன நடக்குதுனே தெரியல சார். நான் "தமிழ் விக்கிப்பீடியா 10ஆம் ஆண்டு விழாவுக்கு வந்திருந்தேனுங்க. ஆனால் அங்க பேசுன எதையும் சரியா காது குடுத்து கேட்டுகிறலீங்க. அப்புறம் தமிழ் விக்கிப்பீடியாவில் உயர் அதிகாரியாக இருக்கும் ஒருத்தர் பேசுபுக்குல சாட்டுல பேசும் போது சொன்னாருங்க. அதனால தான் நான் விக்கிப்பீடியாவில எழுதலாம் என்று வந்தேன் சார். அப்படியே நிர்வாகி அதிகாரமும் கேட்டேன் சார். நான் ஏதாவது தவறா கேட்டிருந்த மன்னிச்சுருங்க சார். என்னுடைய வாக்கெடுப்பையும் அழிச்சிருங்க சார்.

பேசுபுக்குல சாட்டுல விக்கிப்பீடியா பத்தி நெறைய தெரிஞ்சுக்கிட்டேனுங்க. அந்த சார் தான் விக்கிப்பீடியாவில் மாணவர்கள் கட்டாயம் பங்கெடுக்கனும்னு சொன்னாருங்க. வேணும்னா பேசுப்புக்கு சாட்ட அப்படியே இசுக்கிரினு சொட்டு எடுத்து தாரனுங்க. அல்லது அப்படியே இங்கே வெட்டி ஒட்டிவிடலாமாங்க? --Vaarana18 (பேச்சு) 16:34, 8 அக்டோபர் 2013 (UTC)Reply

Vaarana18, நீங்கள் விக்கிப்பீடியாவில் இணைவதற்கும் எழுதுவதற்கும் எவ்வித தடையும் கிடையாது. பங்களிப்புச் செய்வதற்கு நிர்வாகியாக இருக்கவேண்டிய தேவை இல்லை. குறிப்பிட்ட காலம் விக்கிப்பீடியாவில் பங்களிப்புச் செய்தபின்னர் நீங்கள் நிர்வாக அணுக்கம் கேட்கலாம். இந்தப் பக்கத்தில் நீங்கள் காண்பது போல் நிர்வாக அணுக்கம் கோருபவர்களுக்குப் பிற பயனர்கள் வாக்களிப்பார்கள். பயனர்கள் ஒருவருக்கு வாக்களிக்கும்போது அவர் நல்ல முறையில் பங்களிப்புச் செய்துள்ளாரா, எவ்வளவு காலம் பங்களிப்புச்செய்துள்ளார், மற்றப் பயனர்களோடு எவ்வாறு நடந்து கொள்கிறார், விக்கிப்பீடியாவின் நடைமுறைகளை அறிந்து வைத்திருக்கிறாரா என்பவற்றையெல்லாம் பார்த்துத்தான் வாக்களிப்பார்கள். எனவே இங்கே இணைந்து பங்களிப்புச் செய்யுங்கள். விக்கி நடைமுறைகளை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் செயற்பாடுகளைப் பொறுத்து யாராவது உங்களை நிர்வாகியாகப் பரிந்துரை செய்வார்கள் அல்லது நீங்களே உங்களை நிர்வாகி ஆக்குமாறு கோரலாம். புதிதாக இணைந்தவுடன் நிர்வாகியாகும் வாய்ப்பு மிகமிகக் குறைவு. ---மயூரநாதன் (பேச்சு) 17:44, 8 அக்டோபர் 2013 (UTC)Reply

நிர்வாகி : சந்தேகம்

தொகு

ஏற்கனவே நிர்வாகியாக இருக்கும் ஒருவர், அதை மறைத்து வேறொரு புது கணக்கு துவங்கி நிர்வாகி அதிகாரம் கோரலாமா ? புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 15:36, 8 அக்டோபர் 2013 (UTC)Reply

கோரலாம். ஆனால் பெற்றுக் கொள்ள முடியாது. மேலும் ஒருவர் இரு கணக்குகள் வைத்திருப்பதை உரிய முறையில் கண்டு கொள்ளலலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 01:03, 11 அக்டோபர் 2013 (UTC)Reply
  1. நண்பரே புருனோ! //நிர்வாகி அதிகாரம்// என்ற சொற்களை நீங்கள் பயன்படுத்துவது, எனக்கு வியப்பாக இருக்கிறது. புகுபதிகை செய்த பங்களிப்பாளர் ஒருவருக்கு, ஏற்கனவே அனுபவமிகுந்த பங்களிப்பாளர்கள் முன்வந்து கொடுக்கும் ஒரு நம்பிக்கைப் பொறுப்பு. நமது விக்கியின் நோக்கமே யாரும் அதிகாரம் செய்ய இயலாது என்றே எண்ணுகிறேன். ஊக்கப்படுத்துவதே நமது இலக்கு அல்லவா?--≈ உழவன் ( கூறுக ) 04:32, 12 அக்டோபர் 2013 (UTC)Reply
  2. பல்வேறு தமிழ் கல்வி அமைப்புகள், தமிழகத்தில் சிறந்த முறையில் இயங்குகின்றன. ஆண்டுதோறும் தமிழுக்காக பல இலட்ச ரூபாய்கள் செலவு செய்யப்படுகிறது. ஒரு சில அமைப்புகளுடன் தொடர்பு கொண்ட போது, அவர்கள் தட்டச்சு செய்ய தந்துவிடுகிறோம் என்கிறார்கள். சிலர் பணக்கொடை கொடுக்கிறேன் என்கிறார்கள். விக்கியாக்கம் செய்ய அவர்களுக்கு ஈடுபாடு இல்லை. அத்தகைய மாறுபட்ட கொடைகளைப் பெற்று நானோ பிறரோ விக்கியாக்கம் செய்ய, தனி கணக்கு ஒன்றைப் பேணலாமா? அதாவது அக்கணக்கில் உருவாக்கும் கட்டுரைகள், எனது பொறுப்பில் பதிவேற்றப்படும். ஆனால், பலர் அதற்காக ஒன்றுகூடி உழைப்பர். சோதனை அடிப்படையில் உருவாக்கியவை (எ.கா) பயனர்:TamilBOT (பங்களிப்புகள்) இரவி, சுந்தர், செல்வா இன்னும் சிலரின் தொடர் உழைப்பால், [தமிழ்வளர்ச்சிக்குழுவின் கலைக்களஞ்சியம்] கிடைத்துள்ளது. அது அப்படக்கட்டுரைகளை தட்டச்சாகப் பெற்று விக்கியாக்கம் செய்ய எண்ணுகிறேன். வழிகாட்டுக. ஆர்வத்துடன்..--≈ உழவன் ( கூறுக ) 04:32, 12 அக்டோபர் 2013 (UTC)Reply
சார், சொற்குற்றம் தானே கண்டீர், பொருட்குற்றமும் உண்டா ? :) புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 01:04, 19 அக்டோபர் 2013 (UTC)Reply

கையொப்பம் இடாப்பதிவு

தொகு

ஏற்கெனவே இயங்காமல் இருக்கும் நிர்வாகிகளை என்ன செய்வது? விக்கி நடைக்கேற்ப செயற்பட கட்டுரையாக்க முடியாதவர்களுக்கு நிர்வாக அணுக்கம் எதற்கு? −முன்நிற்கும் கருத்து 66.171.229.68 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

மதிப்பிடும் மதிப்பு மிக்கவரே! புகுபதிகை செய்து கருத்திடவும். சொல்லுதல் யார்க்கும் எளிய...(திருக்குறள்)--≈ உழவன் ( கூறுக ) 04:37, 12 அக்டோபர் 2013 (UTC)Reply

புதிய நிருவாகிகள் தேர்ந்தெடுப்பு குறித்த அணுகுமுறை

தொகு

கடந்த இரு நிருவாகிகள் தேர்தலின் போது புதிய நிருவாகிகளைத் தேர்ந்தெடுப்பது குறித்த இன்னும் மேம்பட்ட அணுகுமுறை தேவை என்று கருத்துரைக்கப்பட்டது. அதனை ஒட்டி இவ்வுரையாடலைத் தொடங்குகிறேன். புதிய நிருவாகிகள் தேர்ந்தெடுப்பில் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன என்று தெரியப்படுத்துங்கள். பலரின் கருத்துகளையும் உள்வாங்கி இணக்க முடிவை நோக்கி நகர்வோம்.

என் பரிந்துரைகள்:

  • இரண்டு நிருவாகிகள் தேர்தலுக்கு இடையே மூன்று மாத காலம் விடலாம் (அடிக்கடி ஒவ்வொருவருக்காய் தேர்தல் நடத்துவதைத் தவிர்க்கலாம்)
  • ஒவ்வொரு தேர்தலுக்கும் மூன்று பயனர்களுக்கு மேல் முன்மொழிய வேண்டாம் (ஒரே நேரத்தில் பல பயனர்களைப் பற்றி உரையாடுவது திறம் மிக்கதாய் இருக்காது என்பதால்)
  • முன்மொழிவுக்கு முந்தைய ஆறு மாதங்களில் முனைப்பான பங்களிப்பை அளித்திருக்க வேண்டும். இந்த ஆறு மாதங்களில் கட்டுரைப் பெயர்வெளியில் 1000 தொகுப்புகளாவது செய்திருக்க வேண்டும் என்பது போல் ஏதாவது ஒரு வரையறை. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.
  • ஒவ்வொரு நிருவாகத் தேர்தலையும் ஆலமரத்தடி, அண்மைய மாற்றங்கள், தள அறிவிப்பில் தெரியப்படுத்த வேண்டும். (குறைவாக வாக்குகள் பதிவாவதைத் தவிர்க்க)
  • வாக்கெடுப்பு நடக்கும் காலத்திலேயே கேள்வி கேட்பது, கருத்து தெரிவிப்பதைத் தவிர்த்து முதல் ஒரு வாரம் வாக்கெடுப்பின் மீதான உரையாடல், அடுத்த வாரம் வாக்கிடுதல் மட்டும் என்று கொள்ளலாம். எனவே, பயனர்களைப் பற்றி அதிகம் அறியாதோரும் தங்கள் ஐயங்களைத் தெளிந்து கொண்டு உறுதியான வாக்கிடலாம். பயனரைத் தெரியாது என்பதற்காக நடுநிலை வாக்கிடுவதைத் தவிர்க்கலாம்.
  • ஆங்கில விக்கிப்பீடியாவில் ஒவ்வொரு பயனரும் பதில் அளிக்க வேண்டிய மூன்று கட்டாயக் கேள்விகள் என்று சில உள்ளன. அதே போல் நாமும் சில கேள்விகளை உருவாக்க முனையலாம்.

மற்ற பயனர்களின் கருத்துகளையும் அறிந்து தொடர்ந்து உரையாடுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 10:37, 16 சூன் 2014 (UTC)Reply

அடிப்படைகளில், முதல் மாற்றம் தேவை

தொகு
உழவன், சொற்கள் பற்றிய உரையாடலைத் தனியாகவே மேற்கொள்ளலாம். அணுக்கர் என்ற சொல்லைத் தவிர்த்து மாற்றுச் சொற்களை முன்வைக்க முடியுமா? தேர்தல் சரியாக தோன்றவில்லை என்றால் வாக்கெடுப்பு என்று குறிப்பிடலாம்.
தானே தன்னை முன்மொழியலாம் என்றும், நிருவாகிக்கு உரிய தகுதி என்னவென்றும் வரையறுக்கும் போது, யார் யார் முன்மொழியலாம் என்று வரையறுப்பது தேவையற்றது.
ஆங்கில விக்கிப்பீடியாவில் ஒரு நிருவாகி ஒரு ஆண்டுக்கு மேல் பங்களிப்புகளைச் செய்யாமல் இருக்கும் போது தற்காலிகமாக நிருவாக அணுக்கத்தை முடக்கி வைக்கிறார்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் 5 ஆண்டுகளாக தொடர்ந்து பங்களிக்காமல் இருக்கும் நிருவாகிகளைத் தொடர்பு கொள்ளலாம். அவர்கள் மீண்டும் உடனடி பங்களிப்புக்கு வரப் போவதில்லை என்று சொன்னாலோ தொடர்பில் வராமல் இருந்தாலோ நிருவாக அணுக்கத்தை முடக்கி வைக்கலாம் என்பது என் பரிந்துரை.--இரவி (பேச்சு) 05:51, 21 சூன் 2014 (UTC)Reply
  • 'நிருவாகி', அதிகாரி,.. போன்ற பொருத்தமற்ற பயன்பாடு, நம் விக்கிக் குடும்பத்தில் வேண்டாம் என்பதே என் இலக்கு. 'அணுக்கர்' என்ற சொல்லை நிலைநிறுத்துவது எனது நோக்கமல்ல. நாம் நடத்திய உரையாடல்களோடு, பிறரின் எண்ணங்களையும் ஒரு பக்கத்தில் குவியப்படுத்த விரும்புகிறேன். தயவுசெய்து வழிகாட்டுக. அக்குவியப்பக்கமே, சிறந்து முடிவு நோக்கி நகரும்.
  • புகுபதிகை செய்த பங்களிப்பாளர்கள், சீரிய பணிகளைச் செய்ய, சிறப்புரிமைத் தேவைப்படுகிறது. அதனை வழங்கப்படுவதற்காகவே தோன்றியது இப்பக்கம். இப்பக்கத்தின் நோக்கம். போட்டியிடுவது அல்ல. எனவே, தான் 'தேர்தல்' என்பதை பயன்படுத்த விரும்பவில்லை. எனவே, நீங்கள் கூறியது போல, 'வாக்கெடுப்பு' என்றழைக்க எனக்கு விருப்பம். இனி அச்சொல்லைப் பயன்படுத்த எத்தகைய ஒப்புதலை பிறரிடம், எப்படி பெற வேண்டும்?
  • ஓராண்டிற்கு பிறகு உரிய அறிவிப்பை, மேற்கூறிய சிறப்புரிமை பெறப்பட்ட தமிழ் விக்கிமீடியர்களுக்கு (தமிழ் விக்கிப்பீடியா என்ற குறுக்க விரும்பவில்லை)அளித்து, அவர்களுக்கான நீக்கல் கால எல்லையாக 5 ஆண்டுகள் தரலாம் என்ற உங்களின் கூற்றினை ஏற்பதில் எனக்கும் உடன்பாடே.பிறரும் உடன்பட்டால், இக்கால எல்லையை, விக்கிமீடியாஅனைத்துக்கும் பொதுவான விதியாக்குவோம்.வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 06:48, 21 சூன் 2014 (UTC)Reply

ஸ்ரீகர்சனின் பரிந்துரைகள்

தொகு
  • இங்கு வாக்களிப்பவர்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதனையும் ஒரு கொள்கையாக உருவாக்க வேண்டும் என நினைக்கின்றேன். வாக்களிப்பவர் 3 மாதங்கள் அனுபவ மிக்கவராக இருப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன். 3 மாதங்கள் என்பதை பயனர் கணக்கு உருவாக்கி 3 மாதங்கள் அல்லது தொகுக்கத் தொடங்கி 3 மாதங்கள் என்ற இரண்டில் ஒன்றின் மூலம் வரையறுக்கலாம் என நினைக்கின்றேன். 3 மாதங்கள் இலாவிடில் 2 மாதங்கள் என்றாலும் எனக்கு உடன்பாடே. அல்லது குறைந்தது 100 தொகுப்புக்கள் என்பதன் மூலம் வாக்களிப்பதற்கான அனுமதியை வரையறுக்கலாம். ஆயினும் 100 தொகுப்புக்கள் செய்திருந்தாலும் தொகுக்கத் தொடங்கி 1 மாதம் நிறைவுற்றவராக இருக்கவேண்டும் என்பது எனது பரிந்துரை ஆகும்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:21, 21 சூன் 2014 (UTC)Reply

மயூரநாதன் கருத்து

தொகு

நிருவாகிகள் தேர்வுக்கான மேம்பட்ட அணுகுமுறை ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியின்போது பின்வருவனவற்றின் அடிப்படையில் கலந்துரையாடலை நகர்த்துவது நல்லது.

  1. நிருவாகிகள்/ அதிகாரிகள் தேர்வு திறனுள்ள வகையில் அமைவதற்கான வழிமுறைகள்
  2. நிருவாகி/ அதிகாரி அணுக்கத்துக்குப் பரிந்துரைக்கப்படுவதற்கான அடிப்படைத் தகுதி
  3. முன்மொழிபவர்களுக்கான தகுதி
  4. முன்மொழியப்பட்டவர்கள் மேற்படி அணுக்கங்களைப் பெற்றிருப்பவர்களுக்கு இருக்கவேண்டிய பண்புகளைப் பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும் வழிமுறைகள்
  5. வாக்களிப்பவர்களுக்கு இருக்கவேண்டிய தகுதிகள்
  6. கருத்துச் சொல்பவர்களும் வாக்களிப்பவர்களுக்குமான வழிகாட்டுதல்கள்
  7. நிருவாகி/ அதிகாரி அணுக்கங்களைப் பெறுபவர்கள் நீண்டகாலம் இயங்காமல் இருப்பது தொடர்பான விடயங்கள்

இரவியின் பரிந்துரைகளில், 1ம், 2ம், 4ம், 5ம் பரிந்துரைகள் நான் மேலே குறித்துள்ள முதல் வகைக்குள் அடங்குவன. 3ம் பரிந்துரை எனது இரண்டாம் வகைக்குள் அடங்கும். இரவியின் 6ம் பரிந்துரை நான் குறிப்பிட்ட நான்காம் வகையைச் சேர்ந்தது. முன்மொழிபவர்களுக்கான தகுதி என்னும் விடயம் குறித்துத் தகவல் உழவனும், ஸ்ரீகர்சனும் கருத்துத் தெரிவித்துள்ளனர். நீண்டகாலம் இயங்காமல் இருக்கும் நிருவாகிகள் குறித்த விடயம் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

  • நிருவாகிகள் தேர்வை அடிக்கடி நடத்தாமல் இருப்பது நல்லதே. இரவி குறிப்பிட்டிருப்பது போல் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை வைத்துக்கொள்ளலாம். ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை என்று வைத்துக்கொண்டால் கூடப் பரவாயில்லை. குறித்த இடைவெளிகளில் குறிப்பிட்ட மாதங்களை நிர்வாகிகள் தெரிவுக்கான மாதங்களாக அறிவிக்கலாம். அந்த மாதங்களில் மாதத் தொடக்கத்தில் இருந்தே முன்மொழிவுகளைப் பதிவுசெய்யத் தொடங்கலாம். மூன்றாம், நான்காம் கிழமைகளில் கலந்துரையாடலையும் வாக்களிப்பையும் வைத்துக்கொள்ளலாம்.
  • மூன்று பேருக்குமேல் முன்மொழியக்கூடாது என்ற நிபந்தனை நடைமுறையில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். கூடுதலானவர்கள் முன்மொழிய விரும்பினால் என்ன செய்வது? என்ன அடிப்படையில் சிலரை விலக்குவது? முன்வருபவர்களுக்கு முன்னுரிமை என்பது நியாயமாக இருக்காது. எனவே எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது சரியாக இருக்காது என்பது எனது கருத்து.
  • முன்மொழியப்படுவதற்கான தகுதியாக, குறிப்பிட்ட அளவு காலம் பங்களித்திருக்க வேண்டும், குறிப்பிட்ட அளவு தொகுப்புக்களைச் செய்திருக்க வேண்டும் போன்ற வரையறைகள் அடிப்படைத் தகுதிகளாக இருக்கலாம். ஆனாலும், இதற்கும் மேல் சில விடயங்களைக் கவனிப்பதும் அவசியம். குறிப்பாக ஒருவர் 1000 தொகுப்புக்களைத் தான் தொடங்கிய கட்டுரைகளில் மட்டும் செய்திருக்கலாம். ஆனால், இது நிருவாக அணுக்கம் பெறுபவருக்குரிய பண்பாக இருக்காது. பிறர் தொடங்கிய கட்டுரைகளை விரிவாக்குதல், கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளல், பிற பயனர்களை ஊக்குவித்தல், பிற பயனர்களுடைய ஐயங்களைத் தீர்த்துவைத்தல், துப்புரவுப்பணிகளில் ஈடுபடல், போன்ற வகையிலும் தொகுப்புக்கள் இருப்பது நிர்வாகியாக விரும்பும் ஒரு விக்கிப்பீடியருக்கு இருக்கவேண்டிய பண்பைக் காட்டும். இவ்விடயங்களை அடிப்படைத் தகுதியாகக் கொள்ளவேண்டியதில்லை எனினும், வாக்களிப்பவர்களுக்குரிய வழிகாட்டல்களாக இவற்றை வைத்துக்கொள்ளலாம்.
  • இந்த விடயத்தில் வாக்களிக்கும் தகுதியுள்ள எவரும் முன்மொழிவதற்கு தகுதி உள்ளவராகக் கொள்ளலாம் வேறு சிறப்புத் தகுதிகள் எதுவும் வேண்டியதில்லை என்பது எனது கருத்து. விக்கிப்பீடியாவில் வாக்களிப்பதற்கான தகுதியை இதற்காக மட்டும் அல்லாது பொதுவாக வரையறுத்துக்கொள்வது நல்லது.
  • நிருவாகி, அதிகாரி ஆகிய சொற்கள் ஆங்கிலத்தில் பயன்பாட்டில் உள்ள "administrator", "bureaucrat" ஆகிய சொற்களின் நேரடித் தமிழாக்கமே. இது தமிழில் மட்டுமல்லாது, ஆங்கிலத்திலுமே பொருத்தமானதாக இல்லை. ஆனாலும் இவற்றுக்குச் சரியான சொற்களைத் தெரிவது இலகுவான விடயம் அல்ல. அதனால் பொருத்தமான சொற்கள் கண்டறியப்படும்வரை, இருக்கும் சொல்லை மாற்றவேண்டியது இல்லை. "அணுக்கர்" என்ற சொல் பொருத்தமாகத் தெரியவில்லை. எனவே இந்த விடயத்தை தற்போது எடுத்துக்கொண்ட விடயத்துடன் குழப்பிக்கொள்ளாமல் தனியாகக் கையாளுவதே நல்லது.

---மயூரநாதன் (பேச்சு) 19:15, 21 சூன் 2014 (UTC)Reply

தென்காசி சுப்பிரமணியன் கருத்து

தொகு

நிர்வாகி ஆவதற்கான முக்கியத்தகுதியாக குறிப்பிட்ட அளவு எண்ணிக்கயில் இணக்க முடிவுகளுக்கு அழைத்துச் செல்வதையே காண்கிறேன். அந்த சுமுக முடிவுகளை பின்வரும் வழிகளில் ஒரு பயனர் செய்திருக்கலாம்.

  1. இரு பயனர்களுக்கு வாக்குவாதம் நடக்கும் போது விக்கி விதிகளைக் காட்டி அதன்படி நடக்கச் சொல்ல அறிவுருத்தல்.
  2. புதுப்பயனர் தொகுப்பு அழிக்கப்படும்போது அதை எதிர்த்து புதுப்பயனர் கருத்திடுவார். அப்போது அந்த நீக்கம் விக்கி விதிகளுக்கு உட்பட்டு தான் நடந்தது, அனைவருக்கும் பொதுவான விதிகளே இவை எனப் பலக்கூறி புதுப்பயனரை விக்கியில் தக்கவைத்தல்.
  3. இரு கட்டுரைகளுக்கு இணைப்பு வார்ப்புரு இடுதல். (இவருக்கு கட்டுரைகளை இணைப்பதில் ஆர்வம் இருக்கும்)
  4. சர்ச்சைக்கூறிய விவாதம் வைக்கப்படும் போது அதை நிர்வாகிகள் கவனத்துக்கு கொண்டுவருதல்.
  5. இன்னும் சொல்லலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:35, 31 மார்ச் 2015 (UTC)

இற்றை

தொகு

விதிமுறைகள் தொடர்பில் இற்றை அவசியமாகிறது. இதுபற்றி ஏற்கெனவே கலந்துரையாடப்பட்டுள்ளது. எனவே, அடுத்த நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோளுக்கு முன்னர் விதிமுறைகளை இற்றைப்படுத்துவது அவசியமாகிறது. அதுவரைக்கும் புதிய நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்கள் தேவையில்லையெனக் கருதுகிறேன். --AntonTalk 06:24, 8 ஆகத்து 2014 (UTC)Reply

சரி. விக்கிப்பீடியா:நிருவாகிகள் பட்டியல்/பரிந்துரைகள் ஒரு ஆலோசனைப் பக்கம் மட்டுமே. அங்கு பரிந்துரைகளை இட்ட பின் உடனுக்குடன் நிருவாக அணுக்க முன்மொழிவுகள் வரும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை. --இரவி (பேச்சு) 06:38, 8 ஆகத்து 2014 (UTC)Reply

புதிய நிருவாக அணுக்கங்கள்

தொகு

வழமையாக நாம் ஒவ்வொரு ஆண்டும் 4 புதிய நிருவாகிகளைத் தேர்ந்தெடுத்து வந்தோம். அக்டோபர் 2013க்குப் பிறகு புதிதாக யாரையும் தேர்வு செய்யாமல் இருக்கிறோம். அடுத்து இதில் கவனம் செலுத்தினால் தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த தலைமுறையை துடிப்புடன் வளர்த்தெடுக்க முடியும். கடந்த முறை நடந்த தேர்தல், பிறகு நிருவாக அணுக்கம் நீக்குதல் தொடர்பான உரையாடல்களை அடுத்து தற்போது உள்ள நடைமுறைகளில் உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்கான பணிகளை முடுக்குவோம். அதுவரை, புதிதாக நிருவாக அணுக்கம் பெறக்கூடியவர்களை இனங்கண்டு இங்கு பரிந்துரைத்தால் உரியவர்கள் தங்கள் பங்களிப்புகளை இன்னும் சிறப்பாக நல்க முடியும். நன்றி.--இரவி (பேச்சு) 15:57, 19 மார்ச் 2015 (UTC)

பரிந்துரைக்கு முன், நிர்வாகி தரத்துக்கான விதிமுறைகளை மீளாய்வு செய்தல் அவசியம். (இதைப் பற்றிய முன்னர் பேசியதாக நினைவு. எங்கு என்று நினைவில் இல்லை) விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள், விக்கிப்பீடியா:நிர்வாகிகள் ஆகியன மேம்படுத்தலுக்கு உள்ளாவது சிறப்பு. கடந்த காலங்களில் புதிதாக நிர்வாகிகளாக்கப்பட்டவர்களில் இன்று எத்தனை பேர் நிர்வாக அணுக்கத்தினை பயன்படுத்துகிறார்கள் என்பதில் கிடைக்கும் பதிலானது (குறைவான நிர்வாகப் பங்களிப்பு) இனி வருங்காலங்களில் நிர்வாக அணுக்கம் பெறப்போகிறவர்கள் மட்டில் கைக்கொள்ள வேண்டிய அணுகுமுறையை மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. புதிய நிர்வாக அணுக்கங்கள் வருடா வருடம் வேண்டும் என்பதைவிட, நிர்வாக அணுக்கங்கள் பயன்படுத்துபவர்களுக்கு உடன் கிடைக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. அதிலும் குறிப்பாக விக்கிப்பீடியாவில் கொள்கையிலில் மிகுந்த தெளிவும், தமிழ் மொழியில் குறிப்பிடத்தக்க அறிவும் வேண்டும். எ.கா: பிரியா என்பதை ப்ரியா என்றும் பெயர் மாற்றலாம் என்று தன்னிலை விளக்கம் கொடுப்பவர்கள் வேண்டாம். ஜிம்மி வேல்ஸ் கூறுவதுபோல் "இது (நிர்வாக அணுக்கம்) ஒரு பெரிய விடயமே அல்ல". ஆகவே, நான் ஒரு நிர்வாகி என்பதற்கான வார்ப்புருவோ, இரு வருடத்தில் எப்போவாவது நிர்வாக அணுக்கத்தைப் பயன்படுத்திவிட்டு, நிர்வாக அணுக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் தந்திரோபாயமோ இன்றி முனைப்புடன் செயற்பட்டால் நன்று என்பதே என் கருத்து. ஆரம்ப காலங்களில் நிர்வாகிகளாகியோர் விடயத்தில் குறை காண முற்படுவது என் நோக்கமல்ல. கடந்த 2-3 ஆண்டுகளில் நிர்வாக அணுக்கம் பெற்று இன்று அதனை முழுமையாகச் செய்யாதிருப்பவர்கள் நிமித்தமே என் ஆதங்கம். எனவே, சிலவேளை நாம் வலுக்கட்டயமாக நிர்வாகிகளாக்கிவிடுகிறோமோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. எ.கா: இன்று இப்பக்கத்தை ரோந்திட்டதாகக் குறி என்பதை எத்தனை நிர்வாகிகள் செய்கிறோம்? இந்த நிர்வாகிகள் புள்ளிவிபரம் கடந்த 365 நாட்களில் நிர்வாகிகளின் பங்களிப்பைக் (பங்களிப்பின்மையைக்) காட்டுகிறது. புதிய நிர்வாகிகள் தேவை. அதற்கு முன் தேர்ந்தெடுக்க முறையான பொறி முறை அவசியம். --AntonTalk 17:00, 19 மார்ச் 2015 (UTC)
தற்போதுள்ள உயர்அணுக்கம் (sysop<--system operator=நிருவாக அணுக்கம்?) பெற்றவர்களுக்கு மட்டும் தனி அறிவிப்புப் பகுதி இருப்பின் சிறப்பு. அதில் செய்யவேண்டியன குறித்த பட்டியலை உருவாக்கலாம். அதில் விருப்பமானவற்றை தெரிவு செய்யும் வசதியும், அதனை பிறர் தேர்ந்தெடுக்காமல் இருப்பின், நமது கட்டகம் நன்கு வளரும். குறைவான எண்ணிகையில் இருக்கும் நம் சமூகம் வளர, நமக்குள் இந்த பகிர்வு அவசியம். அப்பொழுதே முழுமையான வளர்ச்சி எப்பொழுதும் இருக்கும். நான், இ்ப்பொழுது பகுப்புகளில், விக்கிதரவினை இணைக்கிறேன்; மேம்படுத்துகிறேன். மேலும், திறநிலை மென்பொருள் குறித்த கட்டுரைகளையும், தாவரவியல் கட்டுரைகளை வளர்க்கத் தேவையான உட்கட்டமைப்புகளையும், நூல்கள் குறித்தவற்றிலும் கவனம் செலுத்துகிறேன். ----≈ உழவன் (உரை) 07:24, 14 பெப்ரவரி 2015 (UTC) 04:07, 20 மார்ச் 2015 (UTC)
அன்டன், நிருவாக அணுக்கத் தேர்தலில் மேம்பட்ட பொறிமுறை தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இது தொடர்பான உரையாடலை இங்கு ஓராண்டு முன்பே முன்னெடுத்தோம். எனவே, பொறிமுறை தொடர்பான உங்கள் கருத்துகளை அங்கு இட வேண்டுகிறேன். நிற்க :) !
முனைப்பாக இருக்கிற நிருவாகிகளே அண்மைய மாற்றங்களில் தென்படும் பெரும்பாலான நிருவாகப் பணிகளை உடனுக்குடன் கவனித்து விடுவதால் தங்களுக்கு எந்தப் பணியுமே இருப்பதில்லை என்று சில மாதங்கள் முன்பு விளையாட்டாக ஒரு உரையாடல் ஓடியது. உண்மையில், உங்களைப் போன்ற சில நிருவாகிகள் முனைப்பாக கவனிக்கிறீர்கள் என்ற நிம்மதியில் தான் நான் வேறு விக்கிப் பணிகளில் கவனம் செலுத்துவதுண்டு. நிலுவையில் நிறைய பணிகள் இருந்தாலும், உடனடி கவனம் தேவைப்படும் பல நிருவாகப் பணிகள் கிட்டத்தட்ட ஒரு சுழியக் கூட்டல் ஆட்டம் தான். எனவே, ஒரு சிலர் முனைப்பாக இருக்கும் போது மற்றவர்களின் நிருவாகப் பங்களிப்புகள் குறைவது இயல்பு தான். இன்னொன்று, வழமையான பங்களிப்பே தன்னார்வம் தான் எனும்போது கட்டாயம் நிருவாகப் பங்களிப்புகளைப் பயன்படுத்திக் கொண்டே இருக்கும் என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. குறைவான நிருவாகப் பங்களிப்பைத் தந்துள்ளோர் அதே காலகட்டத்தில் மிகச் சிறப்பாக வேறு விக்கிப் பணிகளைக் கவனித்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வேறு சிலரோ வேறு வாழ்க்கைப் பணிகள் காரணமாக ஒட்டு மொத்தமாக பங்களிப்பு குறைந்திருப்பதையும் காணலாம். தற்போது 2 ஆண்டுகள் தொடர் பங்களிப்பு இல்லாதவர்களின் நிருவாக அணுக்கத்தை நீக்கும் ஏற்பாடு கூட பாதுகாப்பு முதலிய காரணங்களை முன்னிட்டே தவிர, அது ஒரு எதிர்மறை நடவடிக்கை அன்று. "இது (நிர்வாக அணுக்கம்) ஒரு பெரிய விடயமே அல்ல" என்று சிம்மி சொன்னதை, ஒரு சில நிருவாகிகள் நிருவாகப் பங்களிப்புகள் குறைவாகத் தருவது ஒரு பிரச்சினையே அன்று என்றும் பார்க்க முடியும் அல்லவா? அப்படியே இது ஒரு பிரச்சினை என்று கருதினாலும் 2 ஆண்டு பங்களிப்பு விதி இதனைக் கவனித்துக் கொள்ளும்.
தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்தவை, வலுக்கட்டாயமாக யாரையும் நிருவாகி ஆக்கவில்லை. அப்படி ஆக்கவும் முடியாது :) பூங்கோதை, பவுல் போன்றோர் நிருவாக அணுக்கம் வேண்டாம் என மறுத்துள்ளனர். செங்கைப் பொதுவன் போன்றோருக்கு பணிச்சுமையைக் கூட்டக்கூடாது என்று நிருவாக அணுக்கம் எடுத்துக் கொள்கிறீர்களா என்று கேட்பதைத் தவிர்த்திருக்கிறேன். எனவே, தமிழ் விக்கியில் நிச்சயம் இதனை ஒரு பதவி போல் வழங்குவதில்லை. நிருவாகி என்பதைக் குறிப்பிடும் வார்ப்புரு கூட மற்ற பங்களிப்பாளர்கள் அவர்களைத் தொடர்பு கொண்டு உதவி கேட்க உதவுமே? உலகின் பல நேரவலயங்களில் உள்ள பங்களிப்பாளர்களிடமும் நிருவாக அணுக்கம் இருப்பது அவசர கால நிருவாகப் பணிக்கு உதவியாக இருக்கும். https://meta.wikimedia.org/wiki/List_of_Wikimedia_projects_by_size பார்த்தீர்கள் என்றால், நிருவாகிகள் எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா மிகவும் முன்னோடி நிலையில் இருப்பதைக் காணலாம். இதனைத் தமிழ் விக்கிப்பீடியாவின் மிகப் பெரும் வலுவாக, நாம் சரியாக செய்த ஒன்றாகவே கருதுகிறேன். ஏனெனில், மற்ற பல விக்கிச் சமூகங்களிடம் பேசும் போது இந்த நிருவாக அணுக்கம் கிடைப்பது ஒரு குதிரைக் கொம்பாக இருப்பதைப் பங்களிப்பாளர்கள் அலுப்புடன் தெரிவிப்பதைப் பல முறை கேட்டிருக்கிறேன். இது எந்த விதத்திலும் தமிழ் விக்கி போன்ற சிறிய திட்டங்களின் வளர்ச்சிக்கு உதவாது. தமிழ் விக்கிப்பீடியா வளர வளர அனைத்து நிலைகளிலும் இன்னும் வலுவான தர எதிர்பார்ப்புகள் தேவை தான். ஆனால், அது நிச்சயம் ஆங்கில விக்கிப்பீடியா போன்ற பெரிய விக்கிகளின் அளவுக்கு இறுக்கத்தன்மை கொண்டிருக்கலாகாது.
சிலர் தாமாக பொறுப்பெடுத்துச் செய்வார்கள். சிலர் பொறுப்பு கொடுத்தால் ஏற்றுக் கொண்டு சிறப்பாகச் செய்வார்கள். எந்த சிறப்பான எதிர்பார்ப்பும் இல்லாமல் நிருவாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பலர் மிகச் சிறப்பான, முனைப்பான பங்களிப்புகளைத் தந்திருக்கிறார்கள். இவர்கள் இப்படிப் பங்களிப்பார்கள் என்பது முன்கூட்டியே தெரியாதே? பொறுப்பு கொடுத்தால் அல்லவா தெரியும்? இத்தகைய 2, 3 பேர இனங்காணும் பொருட்டு பத்தில் இன்னும் வேறு இருவர் குறைவான பங்களிப்புகளைத் தந்தாலும் தகுமே. உண்மையில், நிருவாகப் பங்களிப்பு உட்பட, எந்த ஒரு பங்களிப்பும் தராமல் இருப்பது சிக்கல் அன்று. தவறான பங்களிப்புகளைத் தந்து, மற்றவர்கள் சுட்டிக் காட்டினாலும் பொதுக் கருத்துக்கு இணங்க செயற்படும் தன்மை இல்லாமல் போவதே சிக்கல். நாம் தேர்ந்தெடுத்த 39 நிருவாகிகளில் அத்தகைய சூழல் ஒரே ஒரு முறை தான் வந்தது. அதன் இறுக்கத்தன்மை தான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் புதிய நிருவாகிகளைத் தேர்ந்தெடுக்காமல் இருக்கிறோம். எவ்வளவு தான் கடுமையான பொறிமுறை இருந்தாலும் இவ்வாறான விதிவிலக்குகளைத் தவிர்க்க முடியாது. அச்சூழல் வரும்போதே எதிர்கொள்ள முடியும். வழமையாக, ஒவ்வொரு புதுப்பங்களிப்பாளரும் முழுமையான முனைப்புடன் 2 ஆண்டுகள் பங்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்த முனைப்பான காலத்தில் அவர் தன்னையும், தன்னுடைய பங்களிப்புகளையும் மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் பொறுப்புகளையும் நாம் வழங்க வேண்டும். இந்த அடிப்படையிலேயே தான் ஒவ்வொரு ஆண்டும் புதிய நிருவாக அணுக்கங்களைத் தந்து வந்தோம். வலுக்கட்டாயமாகச் சிலரைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என்பதற்காக அல்ல. மொத்தம் 37 நிருவாகிகள் இருக்கிறார்கள் என்பது மட்டும் நம்முடைய வலுவன்று. புதிதாக வரும் ஒவ்வொரு பங்களிப்பாளருக்கும் சரியான நேரத்தில் நிருவாகப் பொறுப்பு எடுப்பதற்கான சூழல் நிலவுவதும் முக்கியம். என்ன தான் நிருவாகப் பொறுப்பு என்பது பதவி இல்லை என்று சொன்னாலும், அது திட்டத்துடன் ஒரு வகையான பிணைப்பை ஏற்படுத்துவதும் உண்மையே. உலகளாவிய விக்கிகள் யாவும் பங்களிப்பாளர்கள் இழப்பை ஒரு சிக்கலாக இனங்கண்டு வரும் சூழலில், இந்தப் பிணைப்பு ஒரு சில பங்களிப்பாளர்களைத் தக்க வைக்க உதவினாலும் நன்றே. சிலர் தொடக்கத்திலேயே மிகச்சிறப்பாக பங்களிப்பார்கள். சிலர் போகப் போகப் புரிந்து கொண்டு தங்களை மேபடுத்திக் கொள்வார்கள். நான் உட்பட பலர் இப்படித் தங்களை மேம்படுத்திக் கொண்டவர்கள் தாம். இந்தத் தொடர் மேம்படுத்தலுக்கான வாய்ப்பு இருந்தால் தான் நம்மைப் போன்ற சிறு விக்கிகள் முன்னேற முடியும். நன்னயம், அடிப்படைக் கொள்கைகளில் தெளிவு, நல்ல தமிழ் அறிவு உடைய பலரும் நிருவாகப் பொறுப்பு ஏற்பதற்குத் தகுந்தவர்களே. நன்றி.--இரவி (பேச்சு) 09:58, 20 மார்ச் 2015 (UTC)
//சிலர் போகப் போகப் புரிந்து கொண்டு தங்களை மேபடுத்திக் கொள்வார்கள்.// ஆம், நான் தமிழ் விக்கியில் நுழையும் போது மிகவும் இறுகிய கொள்கையுடன்தான் இருந்தேன். தொடர்ச்சியான உரையாடல்களைக் கவனித்த பின்னர் இணையத்தில் இதுவரை நான் தேடிக்கொண்டிருந்த இடம் இதுவெனத் தோன்றியது. அதன் பின்னர் விக்கியின் கொள்கைகளைப் புரிந்து கொண்டு என் இறுகிய கொள்கையை விட்டொழித்து நெகிழ்வுத்தன்மை கொண்டேன். :-) --இரா.பாலா (பேச்சு) 02:22, 21 மார்ச் 2015 (UTC)
மிக நீளமாக உள்ளது, இரவி. தாமதமாகப் பதிலளிக்கிறேன்.--AntonTalk 06:46, 21 மார்ச் 2015 (UTC)
நிர்வாகிகளின் பணிகளை செம்மை செய்திட தனித் திட்டமொன்றை இயற்றி, அதில் நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள், இலக்குகள் ஆகியவற்றை இடலாம். என்ன செய்வதென அறியாது இருக்கும் நிர்வாகிகளுக்கு வழிகாட்டுதலும், பங்களிப்பினை ஊக்கம் செய்யவும் இது உதவலாம். விக்கிப்பீடியா உதவிப் பக்கங்கள், வார்ப்புரு உதவிகள், துறைசார் விக்கித் திட்டங்கள் ஊக்குவிப்பு போன்றவற்றை இதன் மூலம் மேம்படுத்தலாம். தங்களது ஆலோசனைகளைத் தெரிவியுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:07, 21 மார்ச் 2015 (UTC)

இரவி, பொறிமுறை தொடர்பான கருத்துகளை விரைவில் இடுவேன்.

நான் முன்னர் குறிப்பிட்டதுபோல், முன்னர் சிறப்பாகப் பங்களித்து தற்போது தங்களின் சொந்த விடயம் காரணமாக குறைவாகப் பங்களிப்போர் (எ.கா: பார்வதி), வேறு விக்கிப் பணிகள் செய்வோர் (எ.கா: தகவலுழவன்) ஆகியோரின் பங்களிப்பை அறிவேன். இவர்களைப் போன்றவர்களை குறை சொல்லவில்லை. தற்போது பரிந்துரையில் இருப்பவர்களையும் நான் நிராகரிக்கவில்லை. விக்கித்தரத்தில் ஆர்வமுள்ள (எ.கா: தினேஷ்குமார்), நுட்ப உதவி வழங்கும் (எ.கா: நீச்சல்காரன்) ஆகியவர்களுக்கு நிர்வாக அணுக்கம் கொடுப்பதற்கு எனக்கு எவ்வித மறுப்பும் இல்லை. என்னுடைய கருத்தின் சாரம்: நிர்வாக அணுக்கத்தை பயன்படுத்தத் தேவையானவர்களுக்கே அது செல்ல வேண்டும். அது குறித்த காலத்திற்காவது நீடிக்க வேண்டும். (புள்ளி விபரத்தோடு, பெயரைக் குறிப்பிடும் மறையான எடுத்துக்காட்டுகள் வேண்டாம் என நினைக்கிறேன்.)

இங்கு நிலுவையிலுள்ள பணிகளை நிர்வாகிகளால் மட்டுமே செய்ய வேண்டும் என்றில்லை. நிர்வாக அணுக்கத்தினால் மட்டும் செய்யக் கூடியனவையாக நீக்குதல், மீளமைத்தல், ஒன்றிணைத்தல், தடை செய்தல், பக்கங்களைப் பூட்டுதல், வழிமாற்றின்றி நகர்த்தல், பூட்டப்பட்ட பக்கங்களைத் தொகுத்தல், சிக்கலான தொகுப்புக்களை மறைத்தல் ஆகியன உள்ளன. இப்பணிகள் நிலுவையில் உள்ளனவா? இவை தவிர்ந்த ஏனையவற்றைச் செய்ய நிர்வாக அணுக்கம் எதற்கு? அல்லது நிர்வாக அணுக்கம் எனும் உற்சாகம் அதை செய்யத் தூண்டுமா? அப்படியானால் நிர்வாகிகளுக்கு அதிகாரி அணுக்கம் கொடுக்க வேண்டுமோ? பிழையாக எடுக்க வேண்டாம் :)

// முனைப்பாக இருக்கிற நிருவாகிகளே அண்மைய மாற்றங்களில் தென்படும் பெரும்பாலான நிருவாகப் பணிகளை உடனுக்குடன் கவனித்து விடுவதால் தங்களுக்கு எந்தப் பணியுமே இருப்பதில்லை என்று சில மாதங்கள் முன்பு விளையாட்டாக ஒரு உரையாடல் ஓடியது. // இது எவ்விதம் நியாயப்பாடுள்ளது என நான் அறியேன். பணி இல்லை என்போர் இங்கு வரலாம். இங்கும் வரலாம். இப்படிப் பல உள்ளன. இதற்கெல்லாம் நிர்வாக அணுக்கம் வேண்டாமே. இதனை யாரும் கவனிப்பதில்லையே. நானே சிலவற்றை முன்னெடுத்தாலும் அதற்கும் மறைமுகத் தடைகள். (“மறைமுகத்தடை” பற்றி எதுவும் கேட்காதீர்கள்.) எ.கா: 19 சனவரி 2014 அன்று மட்டும் என்னுடைய தொகுப்புக்கள் 12 மீளமைக்கப்பட்டுள்ளன. விளைவு பெப்ரவரி மாதத்தில் என்னுடைய தொகுப்புக்களை 82 உடன் மட்டுப்படுத்திக் கொண்டு, ஆ.வி.யில் விக்கிக் கோப்பையில் தோற்றுவிடுவேன் என்று தெரிந்தும் இரண்டாவது சுற்று ஆடிக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால், இங்கு முறையிட்டால் தீர்வு கிடைக்காது. நிர்வாகிகள் பார்த்துக் கொண்டிருப்பார்கள் அல்லது நீங்கள் வர வேண்டும். கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க முனைதல் என்பது நிர்வாகியின் பணி அல்லவா? ஒரு சிக்கலான தீர்வு என்றால் ஒரு சிலர்தான் மல்லுக்கட்டுகிறோம். ஆகவே கெட்ட பெயரும் அந்த ஒரு சிலருக்குத்தான். இவ்வாறு நிர்வாகிகளை மையப்படுத்திய காரணிகளே புதிதாக நிர்வாக அணுக்கம் தேவையா என்ற கேள்விக்குக் காரணமேயன்றி வேறல்ல. --AntonTalk 17:42, 22 மார்ச் 2015 (UTC)

அன்ரன், //19 சனவரி 2014 அன்று மட்டும் என்னுடைய தொகுப்புக்கள் 12 மீளமைக்கப்பட்டுள்ளன. விளைவு பெப்ரவரி மாதத்தில் என்னுடைய தொகுப்புக்களை 82 உடன் மட்டுப்படுத்திக் கொண்டு,// தங்களின் 12 தொகுப்புகளும் மீளமைக்கப்பட்டதில் உங்களுக்கு ஒப்புதல் இல்லை எனத் தெரிகிறது. இது பற்றி முறையிட்டீர்களா? அல்லது தகுந்த காரணங்களுடன் அவற்றை மீளமைத்தீர்களா என அறியத் தாருங்கள். நிருவாகிகள் அனைவரினதும் தொகுப்புகள் 100 க்கு 100 வீதம் சரியானவையாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? நிருவாகிகளின் தொகுப்புகளையும் ஏனையவர்கள் கண்காணிக்க வேண்டியது அவசியம்.--Kanags \உரையாடுக 20:16, 22 மார்ச் 2015 (UTC)
அன்டன், நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள பல விசயங்கள் கவனிக்கப்பட வேண்டியவையே. நிருவாகியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் விக்கிப்பீடியா கொள்கைகள், நடைமுறைகளுக்கு ஏற்ப பலரும் பல்வேறு வகையான பங்களிப்புகளைச் செய்ய வேண்டிய தேவையுள்ளதை உணர்கிறேன். த.உழவன், செகதீசுவரன் சுட்டியபடி இதற்கான உதவிப் பக்கங்கள், பட்டியல் பக்கங்களை உருவாக்குவோம். பங்களிப்பில் உங்களுக்கு ஏற்படும் இடர்களைப் பற்றி உரிய இடங்களில் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 15:07, 26 மார்ச் 2015 (UTC)

நிருவாக அணுக்கங்கள் தொடர்பாக இங்கும் பல்வேறு இடங்களிலும் நடந்த உரையாடல்கள், பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு நிருவாகப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேவைகளை இறுதி செய்வது நல்லது. அனைவரின் கருத்துகளையும் வேண்டுகிறேன். கவனிக்க - @AntanO:--இரவி (பேச்சு) 07:06, 1 திசம்பர் 2015 (UTC)Reply

இது தொடர்பில் எனது கருத்துக்களை ஒருசில நாட்களில் முன் வைப்பேன். --AntanO 10:08, 3 திசம்பர் 2015 (UTC)Reply

Autopatrolled, Rollback

தொகு

குறிப்பிட்ட சில பயனர்களுக்கு Autopatrolled, Rollback அணுக்கங்களைத் தருவது நிருவாகிகளின் பணிச்சுமைகளைக் குறைக்கவும் வருங்கால நிருவாகிகளின் பணிகளுக்கு ஒரு முன்னோட்டமாகவும் அமையுமா? கவனிக்க: Anton--இரவி (பேச்சு) 09:32, 28 மார்ச் 2015 (UTC)

தற்போதுள்ள நிர்வாகிகளுக்கே இவ்வணுக்க செயல்பாடுகளில் விருப்பமானதை தேர்வு செய்து செயலில் ஈடுபடவும் கோரிக்கை வைக்கலாம். உடன் அவர்களை புதிதாக அணுக்கங்கள் கொடுக்கப்பெறும் பயனர்களுக்கு வழிகாட்டவும் சொல்லலாம். இதற்கென தனித்த செயல்திட்ட பக்கம் இருந்தால் நன்றாக இருக்கும். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:43, 28 மார்ச் 2015 (UTC)
அனைத்து நிருவாகிகளுக்கும் இவ்வணுக்கங்கள் ஏற்கனவே உள்ளன. Rollback என்னும் முன்னிலையாக்கலை அனைவரும் பயன்படுத்துகிறோம். Mark as patrolled என்னும் ரோந்திட்டதாக குறிக்கும் வழக்கத்தைப் பலரும் கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. இதனைச் செய்து வரும் நிருவாகிகளுக்கு உதவியாக இருக்கும் என்றால் நானும் இப்பணியைச் செய்யத் தொடங்குகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 09:55, 28 மார்ச் 2015 (UTC)
ரோந்திட்டமையை குறிப்பதை நானும் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் முதலில் இதன் பலன் என்னவென்று புரியவில்லை. புதிய பக்கங்களில் ரோந்திடாதப் பக்கங்களைக் காணும் பொழுது இதன் உதவித் தன்மை புரிந்தது. ரோந்திடாதப் பக்கங்களைக் கண்டு, அவற்றில் இருக்கும் குறைபாடுகளை சரி செய்த பின் ரோந்திட்டதாக குறிப்பது மிகவும் பலனுள்ளதே. இதனால் விக்கிப்பீடியாவில் புதிதாக உருவான கட்டுரையை செம்மைப் படுத்துதல் இயலும். தாங்களும் இதனை செய்ய முன்வருது கண்டு மகிழ்ச்சி. மேலே குறிப்பிட்டுள்ள அணுக்கங்கள் அனைத்து நிர்வாகிகளுக்கும் இருந்தாலும், பயன்படுத்துகின்ற நிர்வாகிகளை மட்டும் இனங்கண்டு அவர்களை புதிதாக அணுக்கங்களைப் பெறும் பயனர்களை கண்காணிக்க செய்யலாம். இதன்முலம் அணுக்கங்களைப் பெற்றோர் ஊக்கமுடன் செயல்பட ஏதுவாக இருக்கும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:28, 28 மார்ச் 2015 (UTC)
Autopatrolled, Rollback, Pending changes reviewer ஆகிய அணுக்கங்களைத் தருவது பயனுள்ளதாக அமையும். ஆனால், இதனை விரும்புவார்களா எனப் பார்க்க வேண்டும். //Mark as patrolled என்னும் ரோந்திட்டதாக குறிக்கும் வழக்கத்தைப் பலரும் கொண்டிருக்கிறார்களா// சிக்கல் அற்ற தொகுப்புக்களை நான் குறிப்பதுண்டு. ஆனாலும், பல வாரங்கள் தாண்டிய பின்னும் சுற்றுக் காவலுக்குள்ளாகாத (ரோந்திடப்படாத) பக்கங்கள் இருப்பதுண்டு. அவற்றில் மாற்றம் செய்ய பின்னர்தான் வேறு சிலர் அதில் கவனம் செலுத்துவதுண்டு. அதை முன்னரே செய்திருந்தால் இலகுவாக இருக்கும். சில பக்கங்கள் சுற்றுக் காவலுக்குள்ளானதாகக் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால், அது மீளாய்வுக்கு உள்ளாகாது வெறுமனே குறிக்கப்படுவதுண்டு. இவ் நடைமுறைச் சிக்கல்களைக் கவனத்திற் கொண்டு, Autopatrolled, Pending changes reviewer அணுக்கங்களைக் கொடுக்கலாம். en:Wikipedia:Reviewing இங்குள்ள விடயங்களை நிருவாகிகள் (மற்றும் எதிர்கால Pending changes reviewer?) கவனித்தாலே பெரும் உதவியாக இருக்கும். நிருவாக அணுக்கம் கொடுக்கு முன் இதனை ஒர் தகுதிகாண் பருவமாகக் (probation period) கொள்ளலாம். --AntonTalk 11:07, 31 மார்ச் 2015 (UTC)
Autopatrolled மற்றும் Pending changes reviewer குறித்த சில விவரங்கள் :Autopatrolled அனுமதி கொண்ட பயனர்கள் தன்னுடைய தொகுப்புகளை மட்டுமே ரோந்திட்டதாக குறிக்க இயலும், மற்றவர்களின் தொகுப்புகளைப் பார்வையிட்டதாகக் குறிக்க (patrol) இயலாது. அதற்கு வேண்டுமானால் Patroller என்னும் அனுமதியை உருவாக்கலாம். Pending changes reviewer அனுமதியை பொருத்தவரை, இதில் உள்ள சிலஅனுமதிகள், mw:Extension:FlaggedRevs-க்கானவை. மேலும் நமது விக்கியில் Pending changes இல்லாததால், இந்த பெயரும் பொருத்தமில்லாததாக தோன்றுகிறது. --சண்முகம்ப7 (பேச்சு) 11:53, 31 மார்ச் 2015 (UTC)


//The autopatrolled (formerly autoreviewer) user right is intended to reduce the workload of new page patrollers and causes articles created by autopatrolled users to be automatically marked as patrolled.// என்று விளக்கம் இருப்பதால் தற்காவலர்கள் (autopatrollerகளை இப்படி அழைக்கலாமா?) உருவாக்கும் பக்கங்கள் எல்லாமே தாமே சுற்றுக்காவலுக்கு (ரோந்து என்பதற்குப் பதில் இச்சொல்லைப் பயன்படுத்தலாம்) உட்பட்டதாக குறிக்கப்படும் என்று புரிந்து கொள்கிறேன். அவர்கள் மெனக்கெட்டு இவ்வாறு குறிக்கத் தேவையில்லை. காத்திருக்கும் மாற்றங்கள் ஆய்வாளர் பொறுப்பு தற்போது தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பொருந்தாது என்பதால் அதனை விட்டு விடலாம். சண்முகம் பரிந்துரைப்பது போல் சுற்றுக்காவலர்கள் அணுக்கத்தைப் புதிதாக உருவாக்கினால் மற்ற நிருவாகிகளின் பணிச்சுமை குறையும். முன்னிலையாக்குநர் (Rollbacker) அணுக்கங்களும் நிருவாகச் சுமை குறைக்க உதவும். அன்டன் பரிந்துரைப்பது போல் இப்பணிகளை ஒருவர் மேற்கொள்வதைக் கவனித்து நிருவாகப் பொறுப்பு தரலாம். இது நிருவாகத் தேர்தல்கள் தொடர்பான தேவையற்ற ஏமாற்றங்கள், சர்ச்சைகளைக் குறைக்க உதவும். சண்முகம், இவ்வணுக்கங்கள், பயனர் குழுக்களை உருவாக்க என்ன செய்ய வேண்டும்?--இரவி (பேச்சு) 12:08, 31 மார்ச் 2015 (UTC)
Phabricator-ல் வழு பதிய வேண்டும் இரவி. நமது விக்கி சமுக கருத்தொற்றுமைக்கான இணைப்பும் கொடுக்கப்பட வேண்டும். என்னென்ன அனுமதி வேண்டும் என முடிவெடுத்தால் ஒரு வாக்கெடுப்பு நடத்தி வழு பதிந்து விடலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 12:39, 31 மார்ச் 2015 (UTC)
  விருப்பம்--AntonTalk 13:03, 31 மார்ச் 2015 (UTC)

Patroller என்று ஒரு பயனர் குழுவை https://en.wikipedia.org/wiki/Wikipedia:User_access_levels பக்கத்தில் காண முடியவில்லையே? இப்படி ஒரு குழு இருந்தால், புதிதாக உருவாக்க முடிந்தால் உருவாக்கலாம். மற்றபடி, தற்காவலர்கள் (autopatrolled), முன்னிலையாக்குநர் (rollbacker) ஆகிய இரண்டு பயனர் குழுக்களை உருவாக்க வேண்டும். இது தொடர்பான வாக்கெடுப்பை ஆலமரத்தடியில் நடத்துவோம்.--இரவி (பேச்சு) 13:28, 31 மார்ச் 2015 (UTC)

பொதுவகத்தில் உள்ளது. c:Commons:Patrol --AntonTalk 13:40, 31 மார்ச் 2015 (UTC)
நன்றி, அன்டன். அப்படி என்றால், அந்தப் பயனர் குழுவையும் உருவாக்குவோம்.--இரவி (பேச்சு) 14:25, 31 மார்ச் 2015 (UTC)

புதிய நிருவாகிகளுக்கான தேவை? ஆலோசனை

தொகு

ஓர் ஒப்பீடு

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவைவிட கட்டுரைகளின் எண்ணிக்கை, தொகுப்பு, பயனர், செயற்படும் பயனர் என்பவற்றில் முன்னனி வகிக்கும் சில விக்கிப்பீடியாக்களுடன் ஒப்பீட்டு கீழ் உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன. உசாத்துணை: மேல்விக்கி, சனவரி 2016

மொழி கட்டுரை தொகுப்பு நிருவாகி பயனர் செயற்படும் பயனர் செயற்படும் பயனருக்கான நிருவாகிகள் வீதம்
வியட்நாம் 1,142,245 22,864,501 23 477,611 1,318 0.005
கொரியா 338,844 17,435,080 33 384,596 2,769 0.009
பாரசீகம் 480,171 21,191,898 30 550,027 2,733 0.005
செக் 342,725 13,601,641 28 322,559 2,138 0.009
துருக்கி 259,603 17,444,787 26 830,143 3,951 0.003
கிரேக்கம் 113,582 5,752,886 20 190,500 844 0.010
இந்தி 100,883 3,116,474 8 210,149 464 0.004
தமிழ் 83,322 2,083,184 37 93,970 288 0.039
இலகுபடுத்தலுக்காக, வீதத்தை முழு எண்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. (எ.கா: 0.005*1000)
மொழி செயற்படும் பயனருக்கான நிருவாகிகள்
வியட்நாம்
5
கொரியா
9
பாரசீகம்
5
செக்
9
துருக்கி
3
கிரேக்கம்
10
இந்தி
4
தமிழ்
39
கேள்வி
  • இந்த அதிகபட்ச நிருவாக அணுக்கம் உள்ளதால், த.வி அடைந்த நன்மைகள் என்ன?

நிருவாகிகளின் செயற்பாடு

தொகு
  • த.வி நிருவாகிகள் அடிக்கடி செய்யும் குறிப்பிடத்தக்க செயற்பாடுகள்:
தடை செய்தல்
தடை நீக்கல்
நீக்கல் (கட்டுரை, பக்கங்கள்....)
மீளமைத்தல் (கட்டுரை, பக்கங்கள்....)
தொகுக்க முடியாதவாறு பாதுகாத்தல் (கட்டுரை, பக்கங்கள்....)
தொகுக்க முடியாதவாறு பாதுகாக்கப்பட்டதை தொகுத்தல் (கட்டுரை, பக்கங்கள்....)
நுட்ப பகுதிகளைத் தொகுத்தல் (mediawiki, ...)
வரலாற்றுடன் இணைத்தல் (கட்டுரை, பக்கங்கள்....)
நாசவேலைகளை மறைத்தல்
கேள்விகள்
  • இவற்றில் தேக்கம் உள்ளதா?
  • புதிதாக நியமிக்கப்படுவதால் ஆற்றப்படக்கூடிய பணிகள் என்ன?
  • அவ்வாறாயின், அவை ஏன் இப்போது நடைபெறவில்லை?
  • ஏனைய அணுக்கங்கள் எவ்வாறான பயன்பாட்டில் உள்ளன? நிருவாக அணுக்கம் வேண்டுவோர் அல்லது பரிந்துரைக்கப்படுவோர் எவ்விதம் கையாளுகின்றார்கள்?
  • பிணக்குகள் ஏற்படுகையில் (நிருவாக அணுக்கம் வேண்டுவோர் அல்லது பரிந்துரைக்கப்படுவோர்) எவ்வாறு செயற்பட்டனர், உதாரணம்?
  • விக்கிப்பீடியா கொள்கை, வழிகாட்டல்கள் மட்டில் அவர்களது புரிந்து கொள்ளல் எப்படி? (த.வி, ஆ.வி)
  • த.வி.யில் இவற்றை நடைமுறைப்படுத்துவதில் (நிருவாக அணுக்கம் வேண்டுவோர் அல்லது பரிந்துரைக்கப்படுவோர்) பங்களிப்பு எப்படி இருந்தது?

இவ்விடயங்களை ஒவ்வொன்றான ஆராயந்து அடுத்த கட்ட நகர்விற்குச் செல்லலாம். --AntanO 17:03, 15 சனவரி 2016 (UTC)Reply

AntanO, 2013 அக்டோபர் முதல் நாம் புதிய நிருவாகிகள் எவரையும் தேர்ந்தெடுக்கவில்லை. முன்பு ஆண்டுக்கு நால்வர் என்ற அளவில் தேர்ந்தெடுத்து வந்தோம். இது தமிழ் விக்கிப்பீடியாவின் தலைமைத்துவத்தில் ஒரு தொடர்ச்சியை உறுதி செய்தது. நாம் தேர்ந்தெடுக்கும் அனைவரும் சிறப்பாகவும் முனைப்பாகவும் பங்களிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், அதற்காக யாரையுமே தேர்ந்தெடுக்காமல் இருந்தால் சிறப்பாகச் செயற்படக்கூடிய ஓரிருவரையும் இனங்காண முடியாது. தேர்ந்தெடுக்கப்படுவர்கள் முறை தவறி செயற்படும் போது அதனைக் கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறைகளை வகுத்தால் போதும். போதிய நிருவாகப் பங்களிப்புகள் இல்லை என்பது ஒரு பெரிய குறை அன்று.

விக்கிப்பீடியர்களின் இயல்புப் படி, சிலர் தேடி முன்வந்து பங்களிப்பார்கள். சிலரோ மற்றவர்கள் நம்பி பொறுப்பு அளித்த பின்பு சிறப்பாகப் பங்களிப்பார்கள். இரு வகையினரையும் இனங்காணும் வகையில் நமது அணுகுமுறை இருக்க வேண்டும். நிருவாக அணுக்கம் என்பது ஒரு பதவி அன்று என்றாலும், அவ்வணுக்கும் கிடைப்பது பயனருக்கு மனதளவில் ஒரு ஏற்பை வழங்குகிறது. விக்கிப்பீடியாவுடனான பிணைப்பையும் அதனால் பங்களிப்புகளையும் கூட்டுகிறது. இதன் நேர்மறை விளைவைத் தமிழ் விக்கியில் கண்டிருக்கிறோம். பல நிருவாகிகளும் நிருவாகப் பங்களிப்புகள் அளிக்காவிட்டாலும் கூட வழமை போல் கட்டுரைப் பங்களிப்புகள் அளித்து வருவது கவனிக்கத்தக்கது. மற்ற பல விக்கிப்பீடியா சமூகங்களிடம் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில், நன்றாகப் பங்களித்தாலும் நிருவாக அணுக்கம் கிடைப்பதில்லை என்பது ஒரு பெரிய மனக்குறை. அதனால் நாளடைவில் ஊக்கம் குன்றி பங்களிப்புகளைக் குறைத்துக் கொள்வதும், சமூகங்களில் போதிய தலைமைத்துவமும் இணக்கமும் கைகூடாமல் போவதும் காண முடிகிறது. எடுத்துக்காட்டுக்கு, நீங்கள் இந்தி விக்கிப்பீடியாவில் 8 நிருவாகிகள் மட்டுமே இருக்கிறார்க்ள என்பதை ஒப்பீட்டுக்குத் தந்துள்ளீர்கள். நிருவாக அணுக்கம் கிடைப்பதில்லை என்று அங்கு பயனர் சமூகத்தில் எவ்வளவு குழப்பம் விளைகிறது என்று என்னால் விளக்க முடியும். இது போல் ஒவ்வொரு விக்கிப்பீடியாவிலும் இவ்வெண்ணிக்கை இவ்வாறு இருப்பதற்கு நிறைய காரணம் இருக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, மலையாள விக்கியில் செயற்பாட்டில் இல்லாத நிருவாகிகளின் அணுக்கங்களை நீக்கி விடுகிறார்கள் (நாம் உலகளாவிய அணுக்க நீக்கல் கொள்கைக்கு உட்பட்டிருக்கிறோம். இதன் மூலம் ஈராண்டுக்கு மேலாகப் பங்களிக்காத நிருவாகிகளின் அணுக்கம் நீக்கப்படும்). எனவே, மற்ற விக்கிகளை ஒப்பிட நமக்கு ஏற்கனவே நிறைய நிருவாகிள் இருக்கிறார்கள் என்பது சரியான ஏரணம் அன்று. நமக்கு நிறைய நிருவாகிகள் இருக்கிறார்கள் என்பதை விட தொடர்ச்சியும் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். ஒரு பயனர் ஓரிரு ஆண்டுகளே முனைப்பாகப் பங்களிப்பார் என்னும் நிலையில், அவர் முனைப்பாக இருக்கும் போதே அணுக்கம் வழங்க வேண்டும்.

இனி தங்கள் கேள்விகளுக்கான பதில்கள் என்ன?

//இந்த அதிகபட்ச நிருவாக அணுக்கம் உள்ளதால், த.வி அடைந்த நன்மைகள் என்ன?//

  • தமிழ் விக்கிப்பீடியாவின் பன்முகத் தலைமைத்துவம் கூடியிருக்கிறது. சண்முகம் போன்றோரின் நேரடி தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புகள் குறைவாக இருந்தாலும் உலகளாவிய விக்கி மேலாளராக முன்னேறியுள்ளது நல்ல எடுத்துக்காட்டு.
  • ஒரு சிறு குழு அல்லது ஒரு வட்டாரத்தின் கட்டுப்பாட்டில் தமிழ் விக்கிப்பீடியா சிக்கியிருக்கிறது என்ற எண்ணம் இல்லாமல் நமது விக்கி என்று எண்ணி ஒன்று கூடி உழைப்பதற்கு இந்தப் பரவலான நிருவாக அணுக்கம் உதவி இருக்கிறது.
  • நான் தனிப்பட்ட முறையில் எதிர்பார்த்ததை விட பல மடங்கு கூடுதல் நிருவாகப் பங்களிப்புகளை அளித்தோரை இனங்கண்டிருக்கிறோம். இவ்வாறு தேடி இனங்காண, இன்னும் பலருக்கு நிருவாக அணுக்கம் அளித்து ஊக்குவிக்க வேண்டும்.

நிருவாக அணுக்கம் என்பதை sysop என்னும் நுட்ப நோக்கில் மட்டும் பார்த்தால் இவ்வாறான சமூக இயங்கியல் புலப்படாமல் போகலாம்.

//இவற்றில் தேக்கம் உள்ளதா?//

ஆம்.

//* புதிதாக நியமிக்கப்படுவதால் ஆற்றப்படக்கூடிய பணிகள் என்ன?//

தேங்கியுள்ள துப்புரவுப் பணிகளைக் குறைக்க ஆர்வம் காட்டலாம். ஏன் நிருவாக அணுக்கம் பெறாமலேயே ஆற்றக்கூடிய பணிகளைச் செய்ய மாட்டார்களா என்றால், மீண்டும் சமூக உளவியலைத் தான் நாட வேண்டும். நிருவாக அணுக்கம் பெற்ற ஆர்வத்தில் சிலர் இப்பணிகளை முயன்று பார்த்து தொடர்ந்து பங்களிப்பார்கள் எனில் (ஏற்கனவே அவ்வாறு கண்ட அனுபவத்தில்), கூடுதல் நிருவாக அணுக்கம் தருவதில் இழப்பு ஏதும் இல்லை.

//* அவ்வாறாயின், அவை ஏன் இப்போது நடைபெறவில்லை?//

ஒரு பயனர் ஒரு நேரத்தில் எவ்வாறான பங்களிப்புகளைத் தருகிறார் என்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். போதிய நிருவாகப் பங்களிப்பு இல்லாதவர்களை நிருவாக அணுக்கம் நீக்கல், ஒட்டு மொத்த நிருவாகிகள் எண்ணிக்கையை ஒரு குறிப்பிட்ட வரம்பில் வைத்தல் ஆகியவை வளர்முக அணுகுமுறைகளாகத் தோன்றவில்லை.

//* ஏனைய அணுக்கங்கள் எவ்வாறான பயன்பாட்டில் உள்ளன? நிருவாக அணுக்கம் வேண்டுவோர் அல்லது பரிந்துரைக்கப்படுவோர் எவ்விதம் கையாளுகின்றார்கள்? //

அடுத்து நிருவாக அணுக்கத்துக்குப் பரிந்துரைப்பவர்கள் முன்னிலையாக்குநர், சுற்றுக்காவல் போன்ற அணுக்கங்களில் போதிய பங்களிப்புகள் நல்கியிருப்பதை உறுதி செய்வதை ஒரு வழிகாட்டலாக வைக்கலாம்.

//* பிணக்குகள் ஏற்படுகையில் (நிருவாக அணுக்கம் வேண்டுவோர் அல்லது பரிந்துரைக்கப்படுவோர்) எவ்வாறு செயற்பட்டனர், உதாரணம்?//

இத்தகைய பங்களிப்புகள் நல்கியிருப்பதை விரும்பத்தக்க நிருவாகச் செயற்பாடுகளில் ஒன்றாக வரையறுக்கலாம். புதிதாகத் தேர்வாக விரும்புபவர்கள் இத்தகைய பங்களிப்புகளை நல்க ஊக்குவிக்கலாம்.

//* விக்கிப்பீடியா கொள்கை, வழிகாட்டல்கள் மட்டில் அவர்களது புரிந்து கொள்ளல் எப்படி? (த.வி, ஆ.வி)//

நிருவாகிகளைத் தேர்ந்தெடுக்கும் கேள்வி - பதில் பகுதியில் இவற்றை அறியலாம்.

சுருக்கமாகச் சொன்னால், மேலும் புதிய நிருவாக அணுக்கங்களைத் தாமதப்படுத்துவது த. வி. யில் ஒரு தலைமுறை இடைவெளியை உருவாக்கும். முற்றிலும் சரியான நிருவாகிகளைத் தான் (100% perfect) தேர்ந்தெடுப்போம் என்று நிலையை விடுத்து நல்ல நிருவாகிகளாக பரிணமிக்க வாய்ப்புள்ளவர்களை இனங்கண்டு தக்க அணுக்கம் வழங்கி ஊக்குவிக்கும் அணுகுமுறையைக் கைக்கொள்ள வேண்டும். நன்றி.--இரவி (பேச்சு) 18:43, 23 பெப்ரவரி 2016 (UTC)

தொடர்புடைய இணைப்புகள்:

இது போன்ற தரவுகளைத் தமிழ் விக்கிப்பீடியாவிலும் மேற்கொள்ளலாம்.

@AntanO: சனவரி 15, 2016 அன்று நீங்கள் இட்ட கருத்தை நேற்று தான் கண்டேன். எனவே, தாமதமான பதிலுக்குப் பொறுக்க வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 07:00, 24 பெப்ரவரி 2016 (UTC)

ஊகமா? அறிவியலா?

ஆ.வி.யை ஒட்டி இங்கும் இற்றைப்படுத்தப்பட வேண்டும். பயனர்களை இங்கு பரிந்துரைப்பதும் அணைவரும் ஆதரவு தெரிவிக்கும் நிலை மாறி, த.வி. வளர்ச்சிக்கு ஏற்புடையவர்கள் பரிந்துரைக்கப்பட வேண்டும். இங்கு அளவிற்கு அதிகமான பெயரளவு நிருவாகிகள் என்பதை விடுத்து, ஆர்வமாக செயல்படக்கூடியவர்களை நியமிக்க வேண்டும். சில பதில்களைத் தவிர்த்த சில குறிப்புக்கள் வருமாறு:

  • //முன்பு ஆண்டுக்கு நால்வர் என்ற அளவில் தேர்ந்தெடுத்து வந்தோம்.// விக்கிப்பீடியா:அதிகாரி தரத்துக்கான வேண்டுகோள்கள் - இங்குகூட 2007 இற்குப் பிறகு யாவரும் பரிந்துரைக்கப்படவில்லை. இங்கு சமூக உளவியல் தேவையில்லையா? ஒரு வட்டாரத்தின் கட்டுப்பாட்டில் தமிழ் விக்கிப்பீடியா சிக்கியிருக்கிறது என்ற எண்ணம் ஏற்படுமல்லவா?
  • //இவற்றில் தேக்கம் உள்ளதா?// // ஆம். // - எவையெனக் குறிப்பிட முடியுமா?
  • புள்ளிவிபரத்திற்கா, இறுதியாக நிருவாக அணுக்கம் பெற்றவர்களின் நிலை என்ன என்று பார்த்தால், கடந்த 3 வருடத்தில் பயனர்:தமிழ்க்குரிசில் நிருவாகச் செயற்பாடுகள் 354, பயனர்:Info-farmer நிருவாகச் செயற்பாடுகள் 139. ஆனால் அவர்கள் நிருவாக அணுக்கம் தவிர்த்து பிற செயற்பாடுகளில் நிருவாக அணுக்கம் பெற முன்னும், பெற்ற பின்பும் மாற்றமில்லை. ஆனால், பயனர்:Vatsan34 நிருவாகச் செயற்பாடுகள் 12, பயனர்:Krishnaprasaths 0. இதைவிட புள்ளிவிபரம் காட்ட முடியாது. எனவே பயனரை ஊக்கப்படுத்த நிருவாக அணுக்கம் என்பது தேவையற்றது. இவ் ஏரணத்தில் எவ்வித அறிவியல் பூர்வமான நியாயம் இருப்பதையும் காணவில்லை. இது ஒரு பிழையான முன்னுதாரணமும் கூட.
  • பயனர்:Booradleyp1 நிருவாக அணுக்கம் பெற அழைத்தும், மறுத்து சிறப்பான பங்களிப்பதும், பயனர்:கி.மூர்த்தி சுற்றுக்காவல் வேண்டாம் என்று மறுத்து தொடர்ச்சியாகப் பங்களிப்பதும், பயனர்:Dineshkumar Ponnusamy தான் தயாரல்ல என நிருவாக அணுக்கம் மறுப்பதும் நம்மிடையே சிறப்பான தன்னல ஆர்வலர்கள் உள்ளார்கள் எனக் காட்டுகிறது. நிருவாக மற்றும் பிற அணுக்கம் இருந்தால்தான் பங்களிப்பேன் என்னும் போக்கோ அல்லது அணுக்கங்களை "இலஞ்சமாககக்" கொடுத்து பங்களிக்கச் செய்யலாம் என்பது தன்னல ஆர்வலர்கள் உளவியலில் சரிவராது. தன்னல ஆர்வலர்கள், தலைவர்கள் என்பவர்களை உருவாக்கக் கூடாது, மாறாக அவர்கள் உருவாக வேண்டும் என்பதை உளவியலின் அடிப்படையில் தெளிவாகக் கூற முடியும்.

--AntanO 15:47, 6 அக்டோபர் 2016 (UTC)Reply

நிருவாக அணுக்க வரையறை 2016

தொகு

இப்பேச்சுப்பக்கத்தில் இது வரை மேற்கொண்டுள்ள உரையாடலை உள்வாங்கி பின்வரும் வரையறைகளை முன்மொழிகிறேன். இவற்றில் பல வரையறைகள் ஆங்கில விக்கிப்பீடியா நடைமுறையை ஒட்டியவை. தொடர்ந்து உரையாடி நிருவாக அணுக்க வாக்கெடுப்புகள் தொடர்பான புதிய கொள்கை/வழிமுறைகளை இறுதி செய்வோம்.

  • ஒவ்வொரு ஆண்டும் சனவரி, ஏப்ரல், சூலை, அக்டோபர் முதல் வாரத்தில் நிருவாகிகள்/அதிகாரிகள் அணுக்கம் தொடர்பான வாக்கெடுப்புகளை நடத்தலாம்.
  • ஒவ்வொரு நிருவாகத் தேர்தலையும் ஆலமரத்தடி, அண்மைய மாற்றங்கள், தள அறிவிப்பில் தெரியப்படுத்த வேண்டும்.
  • நிருவாகிகள் அணுக்கத்துக்கு முன்மொழியப்படுவோர் முந்தைய மூன்று மாதங்களில் (அதிகாரிகள் அணுக்கத்துக்கு ஆறு மாதங்கள்) சுற்றுக்காவல் பணி உட்பட முனைப்பான பங்களிப்பை அளித்திருக்க வேண்டும். முந்தைய மூன்று மாதங்களில் கட்டுரைப் பெயர்வெளியில் 300 தொகுப்புகளாவது (அதிகாரிகள் அணுக்கத்துக்கு 600 தொகுப்புகள்) செய்திருக்க வேண்டும். பிறர் உருவாக்கும் கட்டுரைகளை மேம்படுத்துதல், விக்கிப்பீடியா துப்புரவு, புதுப்பயனர் அரவணைப்பு, பேச்சுப் பக்கங்களில் உள்ளடக்கம்/கொள்கை குறித்த உரையாடல்களில் பங்கேற்று இணக்க முடிவை நோக்கி இட்டுச் செல்லல் ஆகியவை முனைப்பான பங்களிப்பில் அடங்கும். வாக்களிப்போர் இச்செயற்பாடுகளையும் பண்புகளையும் கவனித்து உரிய கேள்விகளை எழுப்பி அதன் அடிப்படையில் வாக்களிக்க வேண்டும்.
  • முன்மொழிவு, பயனர் ஒப்பத்தை அடுத்து முதல் ஒரு வாரம் வாக்கெடுப்பின் மீதான உரையாடல் நடைபெறும். அடுத்த வாரம் வாக்கிடுதல் மட்டும் நடைபெறும். எனவே, பயனர்களைப் பற்றி அதிகம் அறியாதோரும் தங்கள் ஐயங்களைத் தெளிந்து கொண்டு உறுதியான வாக்கிடலாம். பயனரைத் தெரியாது என்பதற்காக நடுநிலை வாக்கிடுவதைத் தவிர்க்கலாம்.
  • ஆங்கில விக்கிப்பீடியாவில் ஒவ்வொரு பயனரும் பதில் அளிக்க வேண்டிய மூன்று கட்டாயக் கேள்விகள் உள்ளன. அவையாவன:
    • நீங்கள் நிருவாக அணுக்கம் பயன்படுத்தி செய்ய விரும்பும் பணிகள் யாவை?
    • விக்கிப்பீடியாவுக்கான உங்கள் சிறந்த பங்களிப்புகள் பற்றி கூறுங்கள். ஏன் இவற்றைச் சிறந்ததாக கருதுகிறீர்கள்?
    • விக்கிபீடியா தொகுப்புகள் தொடர்பாக பிற பயனர்களுடன் முரண்பட்டுள்ளீர்களா? பிற பயனர்களால் உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளீர்களா? இதனை எப்படிக் கையாண்டீர்கள்? வருங்காலத்தில் இவ்வாறான சூழல்களை எவ்வாறு கையாள்வீர்கள்?

இவை போக கேள்வி நேரத்துக்கான முதல் வாரத்தில் வேறு கேள்விகளையும் எழுப்பலாம். ஒவ்வொரு பயனரும் ஒவ்வொரு முன்மொழிவு குறித்தும் இரு கேள்விகள் கேட்கலாம்.

  • மூன்று மாதங்களுக்கு முன் கணக்கு தொடங்கி குறைந்தது 100 கட்டுரைவெளித் தொகுப்புகள் பங்களித்திருப்போர் வாக்குகள் செல்லும்.
  • நடுநிலை வாக்குகள் கணக்கில் கொள்ளப்பட மாட்டா. மொத்த ஆதரவு, எதிர்ப்பு வாக்குகளில் 75% மேல் பெறுபவர்கள் (அதிகாரிகள் அணுக்கத்துக்கு 85%) நிருவாக அணுக்கம் பெற தகுதியுடையவர் ஆவார்கள். 65% (அதிகாரிகள் அணுக்கத்துக்கு 75%) கீழ் பெறுவோர் தகுதி இழப்பர். 65 முதல் 75% வாக்குகள் பெறுவோர் (அதிகாரிகள் அணுக்கத்துக்கு 75 முதல் 85%) குறித்து அதிகாரிகள் உரையாடி முடிவெடுக்கலாம்.

அனைவரின் கருத்துகளையும் வரவேற்கிறேன். --இரவி (பேச்சு) 12:41, 17 அக்டோபர் 2016 (UTC)Reply


விரிவாக கருத்தினைத் தெரிவிக்கு முன் இங்கு மேம்படுத்த, உருவாக்க வேண்டிய பக்கங்கள்:

--AntanO 01:51, 18 அக்டோபர் 2016 (UTC)Reply

en:Wikipedia:Inactive administrators, en:Wikipedia:Administrators#Procedural_removal_for_inactive_administrators, en:Wikipedia:Removing administrator rights ஆகிய பகுதிகளும் இத்துடன் உள்வாங்கப்படல் வேண்டும். --AntanO 04:19, 18 அக்டோபர் 2016 (UTC)Reply
உரிய பக்கங்களை உருவாக்குவோம். அனைவரும் இயன்றளவு பங்களிப்போம். அதே வேளை, ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள பல்வேறு வழிகாட்டல்கள், தனிநபர் கருத்தினை முன்வைக்கும் கட்டுரைகள் ஆகியவை ஆங்கில விக்கிப்பீ்டியா வளர்ந்த சூழலுக்குத் தக்கவாறு விரிவாக உள்ளதையும் கவனிக்க வேண்டும். ஆங்கில விக்கிப்பீடியாவிலேயே தேவைக்கு மிக அதிகமாக அதிகார வழிமுறைகளும் (bureaucracy) வழிமுறைகளும் விதிகளும் பங்களிப்பாளர்களைச் சோர்வடையச் செய்கின்றன என்ற விமரிசனம் உண்டு. இதனாலேயே அவர்களின் நிருவாக அணுக்க வாக்கெடுப்புப் பொறிமுறையை மறுவரையறை செய்ய, இலகுவாக்க முயன்று வருகிறார்கள். இம்மாறுபட்ட சூழல்களை ஒப்பு நோக்கி தமிழ் விக்கிப்பீடியா சூழலைக் கருதி சுருக்கியோ தவிர்த்தோ எழுதலாம். அடிப்படைக் கொள்கைகள், தகுதிகள், திறன்களில் சமரசம் வேண்டாம். ஆனால், பொறிமுறைகள் இலகுவாக இருத்தல் வேண்டும். எடுத்துக்காட்டு, அண்மைய பங்களிப்புகள் குறைந்த நிருவாகிகளின் அணுக்கத்தை விலக்குவது நமக்கு தனிப்பட்ட கொள்கை இல்லை. உலகளாவிய கொள்கையைப் பின்பற்றுகிறோம். இது போன்ற கொள்கைகளில் மாற்றம் வேண்டுமெனில், அவற்றைத் தனியே முன்னெடுக்கலாம். --இரவி (பேச்சு) 06:08, 18 அக்டோபர் 2016 (UTC)Reply
ஆம், எவற்றை சேர்ப்பது, தவிர்ப்பது என்று முடிவெடுத்தால், மேற்கொண்டு அப்பக்கங்களை உருவாக்க அல்லது விரிவாக்க உதவியாக இருக்கும். --AntanO 01:33, 19 அக்டோபர் 2016 (UTC)Reply
அப்டியே சமுதாய முறையீட்டுக் கூடத்துக்கும் ஒரு இரண்டு மூன்று ஆட்களை தேர்ந்தெடுத்துப்போடுங்க.. அப்போதான் திடீர்னு ஏதாவது ஏடாகூடம் ஆயிட்டா சமாளிக்க முடியும். (கொச்சைத் தமிழில் எழுதியதை மன்னித்தருள்க..--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:02, 19 அக்டோபர் 2016 (UTC)Reply
@AntanO:, தற்பொழுது en:Wikipedia:Inactive administrators, en:Wikipedia:Administrators#Procedural_removal_for_inactive_administrators, en:Wikipedia:Removing administrator rights ஆகியவை தவிர்த்து நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்ற பக்கங்களைத் தேவைக்கேற்ப விரிவாகவோ சுருக்கமாகவோ உருவாக்குவோம்.
@Dineshkumar Ponnusamy:, முதலில் இக்கொள்கை குறித்த உரையாடலை இறுதி செய்து விட்டு, தேவையான மற்ற ஏற்பாடுகளை அடுத்து கவனிப்போம். நன்றி.--இரவி (பேச்சு) 12:33, 25 அக்டோபர் 2016 (UTC)Reply

மீண்டும் நிருவாகிகளைத் தேர்ந்தெடுத்தல்

தொகு

ஏற்கனவே உள்ள நிருவாக அணுக்க தேர்தல் நடைமுறையில் மேம்பாடு வேண்டும் என்று கருதி பல முறை முயன்றும் புதிய நடைமுறையை இறுதி செய்ய இயலாமல் நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. தற்போது குவிந்துள்ள ஆயிரக்கணக்கான கட்டுரைகளைத் துப்புரவு செய்யும் நோக்கில் புதிய நிருவாகிகள் தேர்தலை ஏற்கனவே உள்ள நடைமுறைக்கு ஏற்பவாவது நடத்துவது அவசியம். எனவே, இந்நடைமுறை காலாவதியானது என்ற நிலையை நீக்கி, உடனடியாக அடுத்த தேர்தலை நடத்த பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 16:47, 27 சூலை 2017 (UTC)Reply

 விருப்பமில்லை --AntanO 17:36, 30 சூலை 2017 (UTC)Reply

கடவுச் சொல் சிக்கலால் முடங்கி கணக்குகளுக்கு நிருவாக அணுக்கத்தை நீக்குதல்

தொகு

பயனர்:பரிதிமதி, பயனர்:Sivakumar ஆகிய இரு பயனர் கணக்குகள் கடவுச் சொல் சிக்கலால் கடந்த இரு ஆண்டுகளாகவே முடங்கியுள்ளன. எனவே, பாதுகாப்பு கருதியும், தமிழ் விக்கிப்பீடியாவின் நிருவாகிகள் எண்ணிக்கையைத் துல்லியமாக இற்றைப்படுத்தும் வகையிலும் இந்தக் கணக்குகளுக்கான நிருவாக அணுக்கத்தை நீக்கப் பரிந்துரைக்கிறேன். இந்த இரு கணக்குகளுக்கும் பேச்சுப் பக்கத்தில் முறையான அறிவிப்பு இட்டும் மறுமொழி ஏதும் இல்லை. இந்தக் கணக்குகளை முன்பு வைத்திருந்த பயனர்:PARITHIMATHI மற்றும் பயனர்:SivakumarPP ஆகியோர் இந்த மாற்றம் தங்களுக்கு ஏற்புடையது தான் என்று தெரிவித்து உள்ளனர். பயனர்:SivakumarPP நடைபெற்ற நிருவாக அணுக்கத் தேர்தலில் மீண்டும் தனது புதிய கணக்குக்கு அணுக்கமும் பெற்றுள்ளார். இந்தப் பரிந்துரைக்கு மாற்றுக் கருத்து ஏதும் இல்லையெனில், உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில், ஒரு வார காலம் கழித்து Stewardகள் கவனத்துக்கு இதனைக் கொண்டு செல்வோம். நன்றி. --இரவி (பேச்சு) 11:41, 20 சனவரி 2019 (UTC)Reply

  விருப்பம் -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:10, 22 சனவரி 2019 (UTC)Reply
  விருப்பம் --நந்தகுமார் (பேச்சு) 01:40, 25 சனவரி 2019 (UTC)Reply
@Shanmugamp7: உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:37, 27 சனவரி 2019 (UTC)Reply

அணுக்கம் நீட்டிப்புக் கோரிக்கை

தொகு

எனது நிருவாக மற்றும் இடைமுகப்புத் தொகுப்பாளர் அணுக்கம் காலாவதியாகிவிட்டன. நிர்வாக அணுக்கத்தை முறையாகப் பயன்படுத்தியிருந்தால் அணுக்கங்களை நீட்டிக்கக் கோருகிறேன். (மற்ற புதிய நிர்வாகிகளுக்கும் சேர்த்து) -நீச்சல்காரன் (பேச்சு) 09:35, 9 சூலை 2019 (UTC)Reply

  1. நீச்சல்காரன் குறிப்பிட்ட மேற்கூறிய இரு அணுக்கங்களையும் நிலையாகப் பெற, எனது முழு ஆதரவினை அளிக்கிறேன்.--உழவன் (உரை) 01:19, 10 சூலை 2019 (UTC)Reply
@Ravidreams, Mayooranathan, Sundar, and Natkeeran: கவனிக்கவும். மின்னஞ்சலும் இட்டுள்ளேன். //மீண்டும் மீண்டும் புதிய நிர்வாகிகள் தங்கள் அணுக்கத்தை நீட்டிக்கக் கோரிக்கை வைக்கத் தேவையில்லை. நிர்வாக அணுக்கத்தைத் தக்க முறையில் பயன்படுத்துவோருக்கு அதிகாரிகள் தாமாகவே நீட்டிப்பு வழங்குவர்.// என்றுள்ளதால் அதிகாரிகள் எடுத்த முடிவை இங்கே குறிப்பிட்டால் மற்றவர்களுக்கும் உதவும். -நீச்சல்காரன் (பேச்சு) 10:44, 17 சூலை 2019 (UTC)Reply
@Neechalkaran: நினைவூட்டியமைக்கு நன்றி. நிருவாக அணுக்கத்தை அடுத்த ஆறு மாதம் நீட்டித்துள்ளேன். அடுத்த முறை இது போல் மறந்து விடாமல் இருக்க ஏதாவது reminder set செய்து கொள்கிறேன். இடைமுகப்புத் தொகுப்பாளர் அணுக்கம் கொண்டு நீங்கள் செய்த பணிகளை மட்டும் தனியாகப் பார்வையிட வழியுண்டா? அதை ஒரு முறைப் பார்த்து விட்டு அந்த அணுக்கத்தையும் நீட்டிக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 11:04, 17 சூலை 2019 (UTC)Reply
(இரவியின் கருத்தைப்படிக்குமுன் தட்டியது, தொகுத்தல் முரண் ஏற்பட்டதால் மீண்டும் பதிகிறேன்) @Neechalkaran: நீச்சல்காரன், நான் அண்மையில் விக்கியில் அதிகம் உலவாததால் இந்த அணுக்கத்தின் பயன்பாட்டைக் காணவில்லை. அது தொடர்பில் உங்கள் பங்களிப்புகளை எங்கு பார்க்கலாம்? தற்கால அணுக்கம் பெற்ற நிருவாகிகளின் பணிகளை நோட்டம்விட்டுப்பிறகு அவர்களது அணுக்கத்தை நிலையாக நீட்டிக்கிறேன். காலந்தாழ்ந்தமைக்கு வருந்துகிறேன். -- சுந்தர் \பேச்சு 11:08, 17 சூலை 2019 (UTC)Reply
@Sundar: விக்கிப்பீடியா:விக்கி நிர்வாகிகள் பள்ளி கொள்கை பார்க்கவும். இதன் படி, முதலில் 3 மாதங்கள், அடுத்து 6 மாதங்கள், பிறகு ஒரு ஆண்டு, அதன் பின் நிலையான அணுக்கம் என்று படிப்படியாக வழங்கப்படுகிறது. அதன் படி, தற்கால நிர்வாகிகள் அனைவருக்கும் 6 மாதம் அணுக்கம் என்னும் இரண்டாம் கட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. மேற்கொண்டு நிருவாகிகள் அணுக்கம் தொடர்பாக நடவடிக்கை தேவை இல்லை. உடனே நிரந்தர அணுக்கம் தருவதற்குக் கொள்கையில் இடம் இல்லை. --இரவி (பேச்சு) 11:22, 17 சூலை 2019 (UTC)Reply
நன்றி இரவி. -- சுந்தர் \பேச்சு 07:36, 19 சூலை 2019 (UTC)Reply
@Ravidreams and Sundar:உடனே களத்திற்கு வந்ததற்கு நன்றி. மீடியாவிக்கி:Mobile.js பக்கத்தைத் தவிர வேறு எங்கும் இடைமுகப்புத் தொகுப்பாளர் அணுக்கம் பயன்படவில்லை என நினைக்கிறேன்-நீச்சல்காரன் (பேச்சு) 11:31, 17 சூலை 2019 (UTC)Reply
@Neechalkaran:இடைமுகப்புத் தொகுப்பாளர் அணுக்கம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை உங்கள் பணிகளை ஆய்வு செய்து நிரந்தரமாக நீட்டித்து விடுகிறேன். யன்றி--இரவி (பேச்சு) 20:38, 19 சூலை 2019 (UTC)Reply
@Ravidreams: எனது நிர்வாக அணுக்கம் நேற்றோடு காலாவதியாகியுள்ளது என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 22:19, 18 சனவரி 2020 (UTC)Reply
@Ravidreams: எனது நிர்வாக அணுக்க ஓராண்டு நிறைவடைந்து காலாவதியாகிவிட்டது. நீட்டிக்கக் கோருகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 14:15, 14 பெப்ரவரி 2021 (UTC)
@Ravidreams, Mayooranathan, Sundar, and Natkeeran: இரவி இதைக் கவனிக்கவில்லை என நினைக்கிறேன். தாங்கள் யாரேனும் கவனித்து நிர்வாக அணுக்கத்தை நீட்டிக்கக் கோருகிறேன். --நீச்சல்காரன் (பேச்சு) 17:22, 8 மார்ச் 2021 (UTC)
  ஆதரவு--Kanags \உரையாடுக 06:04, 9 மார்ச் 2021 (UTC)
இப்போது நிரந்தரமாக நிருவாக அணுக்கத்தைச் செயற்படுத்தியுள்ளேன். உங்கள் வேண்டுகோளைத் தாமதமாக இன்று தான் கண்டேன். வருந்துகிறேன். --இரவி (பேச்சு) 06:41, 9 மார்ச் 2021 (UTC)
நன்றி, இரவி. -- சுந்தர் \பேச்சு 14:24, 11 மார்ச் 2021 (UTC)

நிர்வாக அணுக்கம்

தொகு

@Ravidreams: நிர்வாக அணுக்கம் எப்போது கிடைக்கும்???-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:39, 15 அக்டோபர் 2019 (UTC)Reply

வழக்கமான முறையினைப் பின்பற்றுக

தொகு

@Nan உங்கள் திருத்தத்தைக் கண்டேன். இப்பக்கம் நிர்வாகி அணுக்கத்தைக் கோருவதற்கானது. அணுக்கத்தை ஏற்க அழைப்பு விடுவதற்கு இப்பக்கம் சரியாக இருக்காது என நினைக்கிறேன். சரியெனில் பயனர்களிடம் அவர்கள் பேச்சுப் பக்கத்தில் ஒப்புதல் கேட்டுவிட்டு, பயனர்கள் குறித்த சிறு குறிப்புடன் இங்கே முன்மொழியலாம். எதிர்காலத்திலும் பார்ப்பவர்களுக்குத் தெளிவுகிடைக்கும். -06:20, 4 ஏப்ரல் 2023 (UTC) நீச்சல்காரன் (பேச்சு) 06:20, 4 ஏப்ரல் 2023 (UTC)

  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:16, 6 ஏப்ரல் 2023 (UTC)
@பயனர்:Mayooranathan, வணக்கம், மயூரநாதன். தற்பொழுது புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க பயனர்கள் வாக்களித்து வருகிறார்கள். காலம் முடிந்தவுடன், தேவையான வாக்குகளைப் பெற்றவர்களுக்கு (80%) தாங்கள் நிர்வாக அணுக்கம் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 09:16, 6 ஏப்ரல் 2023 (UTC)
@பயனர்:Mayooranathan, வணக்கம், மயூரநாதன். இன்றுடன் நிர்வாகிகளுக்கான தேர்தல் நிறைவு பெறுகிறது. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, புதிய, தேவையான ஆதரவுப் பெற்ற நிர்வாகிகளுக்கு, நியமனம் அளிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 06:14, 14 ஏப்ரல் 2023 (UTC)
@Nan: முழு நியமனம் அளிக்க இயலாது. விக்கிப்பீடியா:விக்கி நிர்வாகிகள் பள்ளி என்ற முறையில் தற்காலிக நிர்வாக அணுக்கத்தைக் கொடுத்து, மதிப்பீட்டே முழுமையான அணுக்கம் அளிக்க இயலும். கவனிக்க:@Sundar and Ravidreams: -நீச்சல்காரன் (பேச்சு) 16:42, 15 ஏப்ரல் 2023 (UTC)
  விருப்பம்--AntanO (பேச்சு) 11:26, 16 ஏப்ரல் 2023 (UTC)
ஒரு கோரிக்கைக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் அணுக்கத்தை மறுத்துள்ளேன். ஐவரின் கோரிக்கைகளை ஏற்றுள்ளேன். பயனர் பாலு கோரிக்கையின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு இன்னும் விடையளிக்கவில்லை. அதனால் அவரது கோரிக்கையை அவரது பதிலுக்காக நிலுவையில் வைத்துள்ளேன்.
இறுதியாகத் தேர்வுபெற்றோர் அனைவருக்கும் ஒரே நாளில் நிர்வாகிப் பள்ளிக்கான அணுக்கத்தைத் தொடங்கலாமென நினைக்கிறேன். வேறு ஏதும் முறைமை உள்ளதா? -- சுந்தர் \பேச்சு 04:50, 17 ஏப்ரல் 2023 (UTC)
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 05:24, 17 ஏப்ரல் 2023 (UTC)


நிருவாகிப் பள்ளியில் அறுவர் இணைப்பு

தொகு

@Balu1967, TNSE Mahalingam VNR, Sridhar G, சத்திரத்தான், சா அருணாசலம், and Almighty34: அண்மைய வாக்களிப்பின் அடிப்படையில் உங்கள் அறுவருக்கும் 3 மாதத்துக்கான நிருவாக அணுக்கத்தைச் செயற்படுத்தியுள்ளேன். நீங்கள் நிருவாகிகள் பள்ளியில் இணைந்து திறம்படப் பயிற்சி பெற வாழ்த்துகிறேன். அருள்கூர்ந்து பழைய நிருவாகிகள் இப்பட்டியலிலுள்ள நிருவாகிகளை வரவேற்று வழிநடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 04:28, 19 ஏப்ரல் 2023 (UTC)

  விருப்பம்-- சா. அருணாசலம் (பேச்சு) 06:21, 19 ஏப்ரல் 2023 (UTC)
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 10:13, 19 ஏப்ரல் 2023 (UTC)

@Nan and Sundar: ஆகியோருக்கும் ஏனைய நிர்வாகிகளுக்கும், தமிழ் விக்கிப்பீடிய சமூக நண்பர்களுக்கும் என் பணிவான நன்றி. நிர்வாகியின் பணிப்பொறுப்பினைக் கற்றுக்கொடுத்து எம்மை வழிநடத்தவும் கேட்டுக்கொள்கிறேன். --TNSE Mahalingam VNR (பேச்சு) 12:52, 19 ஏப்ரல் 2023 (UTC)

  விருப்பம்-- சத்திரத்தான்
  விருப்பம்--தாமோதரன் (பேச்சு) 13:40, 19 ஏப்ரல் 2023 (UTC)

@ மகாலிங்கம், வணக்கம். கீழே உள்ள இணைப்புகளை சொடுக்கினால், பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிருவாகப் பணிகளும், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரிந்துவிடும். உங்களுக்கு விருப்பமான பணிகளைத் தேர்ந்தெடுத்து செய்யுங்கள். நிருவாகியானதால் எந்தவொரு அழுத்தங்களும் தங்களுக்கு இல்லை என்பதைக் கவனித்தில் கொள்ளுங்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, நீங்கள் தேர்ந்தெடுத்த நிருவாகப் பணிகளைச் செய்யுங்கள். நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 20:07, 19 ஏப்ரல் 2023 (UTC)

நிர்வாக அணுக்க நீடிப்பு

தொகு

@Sundar: வணக்கம். எங்கள் ஆறு பேரின் 3 மாத நிர்வாக அணுக்கம் காலாவதியானது. நிர்வாக அணுக்கத்தை நீட்டித்து உதவுங்கள்.--சா. அருணாசலம் (பேச்சு) 12:19, 20 சூலை 2023 (UTC)Reply

  ஆதரவு--Kanags \உரையாடுக 22:25, 20 சூலை 2023 (UTC)Reply
  ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 02:31, 21 சூலை 2023 (UTC)Reply
  ஆதரவு --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:20, 21 சூலை 2023 (UTC)Reply
ஆறு பேருக்கும் தேவைதானா என்பதை அவர்களிடமும் கேட்டு அறிந்து கொள்வதும் அவர்களின் நிர்வாகச் செயற்பாட்டை மதிப்பிடுவதும் நல்லது. சில இடங்களில் நானாகவே வலிந்து அழைத்தும் அவர்களில் சிலர் அவற்றைத் தவிர்த்திருந்தனர். நாமாகவே நிர்வாகச் செயற்பாட்டில் திணிப்பது போல் உள்ளது. --AntanO (பேச்சு) 03:47, 23 சூலை 2023 (UTC)Reply
நிர்வாகச் செயற்பாடு (2023-04-19 - 2023-07-19) --AntanO (பேச்சு) 03:53, 23 சூலை 2023 (UTC)Reply
@Balu1967, TNSE Mahalingam VNR, Sridhar G, சத்திரத்தான், and Almighty34: நிர்வாக அணுக்கம் பெறுவதற்கு உங்கள் அனைவரின் கருத்துகளும் தேவைப்படுகிறது. --சா. அருணாசலம் (பேச்சு) 05:16, 23 சூலை 2023 (UTC)Reply
  ஆதரவு AntanO (பேச்சு) 18:56, 23 சூலை 2023 (UTC)Reply
வணக்கம், என்னால் இயன்றவரை துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.எனது நிருவாகப் பணிகள் உங்களுக்கும் ஏற்புடையதாக இருந்தால் எனது நிர்வாக அணுக்கத்தை நீட்டிக்கக் கோருகிறேன். நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 05:32, 23 சூலை 2023 (UTC)Reply
  ஆதரவு AntanO (பேச்சு) 05:55, 23 சூலை 2023 (UTC)Reply
வணக்கம், என்னால் முடிந்தவரை பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு உள்ளேன்.நான் நிர்வாக அணுக்கத்தை முறையாகப் பயன்படுத்தியிருப்பதாக தாங்கள் கருதினால் எனது நிர்வாக அணுக்கத்தை நீட்டிக்கக் கோருகிறேன்.--தாமோதரன் (பேச்சு) 06:02, 23 சூலை 2023 (UTC)Reply
  ஆதரவு AntanO (பேச்சு) 06:04, 23 சூலை 2023 (UTC)Reply

தற்போதைய நிலையில் நான் ஏற்றிருக்கும் கடுமையான பணிச்சூழலால் என்னால் நிர்வாகி அணுக்கத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இருப்பினும் கால நீட்டிப்பு செய்யும் போது கிடைக்கும் ஓய்வு நேரங்களில் என்னால் நிர்வாகியாகத் தொடர்ந்து பணியாற்ற இயலும் எனக் கருதுகிறேன். கோரிக்கை நியாயமானதாக இருப்பின் நிர்வாக அணுக்கத்தை நீட்டிக்க அனைவரையும் ஆதரவளிக்கக் கோருகிறேன்.--மகாலிங்கம் இரெத்தினவேலு 09:57, 23 சூலை 2023 (UTC)Reply

  எதிர்ப்புவிக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்பு குறிப்பிடத்தக்களவு இருப்பினும், நிர்வாகச் செயற்பாடு குறைவாகவே உள்ளன. நிர்வாக அணுக்கம் கிடைக்கும் முன்பும் அவ்வாறே இருந்தது. நிர்வாக அணுக்கம் கிடைத்த பின்னும் மாற்றமில்லை. விக்கிப்பீடியாவின் அடிப்படைத் தொகுப்பாக்கம், கொள்கை தொடர்பிலும் இன்னும் மேம்பட வேண்டியுள்ளது. AntanO (பேச்சு) 19:03, 23 சூலை 2023 (UTC)Reply
வணக்கம். மூன்று மாத எனது செயல்பாட்டின் அடிப்படையில் நிர்வாகி அணுக்கம் நீட்டிப்பு செய்தால் ஏற்றுக்கொள்கிறேன். நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 13:50, 23 சூலை 2023 (UTC)Reply
  ஆதரவு நிர்வாக அணுக்கத்தின் முன்பிருந்த முனைப்பு குறைந்தாற்போல் உணர்கிறேன். ஏதும் சிக்கல் இருந்தால் குறிப்பிடுங்கள். AntanO (பேச்சு) 18:59, 23 சூலை 2023 (UTC)Reply
வணக்கம் என்னுடைய பணிச்சூழலால் என்னுடைய நிர்வாக அணுக்கத்தை முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை. இருப்பினும் கால நீட்டிப்பு செய்யும் போது கிடைக்கும் நேரங்களில் என்னால் நிர்வாகியாகத் தொடர்ந்து பணியாற்ற இயலும் எனக் கருதுகிறேன். எனவே எனது நிர்வாக அணுக்கத்தை நீட்டிக்க வேண்டுகிறேன். --Balu1967 (பேச்சு) 01:53, 2 ஆகத்து 2023 (UTC)Reply
  எதிர்ப்பு விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்பு குறிப்பிடத்தக்களவு இருப்பினும், நிர்வாகச் செயற்பாடு குறைவாகவே உள்ளன. நிர்வாக அணுக்கம் கிடைக்கும் முன்பும் அவ்வாறே இருந்தது. நிர்வாக அணுக்கம் கிடைத்த பின்னும் மாற்றமில்லை. விக்கிப்பீடியாவின் அடிப்படைத் தொகுப்பாக்கம் தொடர்பிலும் இன்னும் மேம்பட வேண்டியுள்ளது. --AntanO (பேச்சு) 09:01, 2 ஆகத்து 2023 (UTC)Reply


நிர்வாகிகளுக்கு வழங்கப்படுகின்ற மேலதிக அணுக்கம் தேவைப்படும் வேலைகளைச் செய்வதற்காக, இச் சமுதாயம் நிர்வாகிகளை எதிர்பார்த்துள்ளது. வெற்றிக் கிண்ணம் / பதக்கம் போன்று நிர்வாக அணுக்கத்தை சேகரிக்கும் நிலை மாற வேண்டும். விசமத்தொகுப்பு, தனிநபர் தாக்குதல் இடம்பெறும்போது தானுண்டு தன்வேலையுண்டு என்றிருக்கும் நிர்வாகிகளை என்ன சொல்வது? --AntanO (பேச்சு) 09:09, 2 ஆகத்து 2023 (UTC)Reply

அன்ரன், உங்கள் எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டாலும் விக்கிப்பீடியா:நிர்வாகிகள் பள்ளிக் கொள்கையில் பின்வருமாறு உள்ளது.
இது ஆங்கில விக்கியின் தொடக்கநாள் விழுமியமான It's no big deal. என்பதிலிருந்து வருகிறதென நினைக்கிறேன். இப்போதைக்கு 6 மாத நீட்டிப்பை வழங்குகிறேன். -- சுந்தர் \பேச்சு 11:14, 3 ஆகத்து 2023 (UTC)Reply
அனைவருக்கும் 6 மாத கால நீட்டிப்பு வழங்க முற்பட்டபோது ஸ்ரீதருக்கு மட்டும் முடிவில்லாமல் அணுக்கத்தை வழங்கிவிட்டேன். அதை மீளப்பெற முடியவில்லை. 6 மாதத்துக்குப்பின் அவருக்கு முடிவிலா அணுக்கம் தர முடிவெடுத்தால் அப்படியே தொடரலாம். ஏதும் இடையூறில்லை. -- சுந்தர் \பேச்சு 11:22, 3 ஆகத்து 2023 (UTC)Reply
@Sundar: மிக்க நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 11:46, 3 ஆகத்து 2023 (UTC)Reply
@Sundar: வணக்கம், ஐயா எனக்கு வழங்கப்பட்ட தானியங்கி அணுக்கத்தைத் நீக்க வேண்டுகிறேன்.--தாமோதரன் (பேச்சு) 02:51, 4 ஆகத்து 2023 (UTC)Reply
முயன்று பார்க்கிறேன். -- சுந்தர் \பேச்சு 12:53, 4 ஆகத்து 2023 (UTC)Reply

முடிவுற்ற நிர்வாக அணுக்கம், கால அளவு அதிகப்படுத்தல் தொடர்பாக

தொகு

@Sundar: வணக்கம். என்னுடைய ஆறு மாத கால நிர்வாக அணுக்கம் காலாவதியானது. என்னுடைய நிர்வாகச் செயற்பாடுகளைக் கவனித்து கால அளவை அதிகமாக்கி உதவுங்கள்.--சா. அருணாசலம் (பேச்சு) 15:01, 5 பெப்பிரவரி 2024 (UTC)Reply

வணக்கம், @Sundar: இது நிர்வாகிகளின் கடந்த ஓராண்டு கால செயல்பாடு. எனக்கு ஏற்கனவே முடிவிலா அணுக்கம் வழங்கியதனை நினைவு கூருகிறேன். எனது பங்களிப்புகளில் மாற்றுக் கருத்து இருந்தால் அறியத்தாருங்கள்.கீழ்க்கானும் நிர்வாகிகளுக்கும் அணுக்க நீட்டிப்பு வழங்கக் கோருகிறேன்.

கவனிக்க:Balu1967, TNSE Mahalingam VNR,சத்திரத்தான்Almighty34 உங்களில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருந்தால் அறியத்தாருங்கள். நன்றி --ஸ்ரீதர். ஞா (✉)

Balu1967 தவிர்த்து ஏனையோருக்கு முடிவிலா அணுக்கம் வழங்கப் பரிந்துரைக்கிறேன். Balu1967 அணுக்கம் இருந்தும் எவ்வித நிர்வாகப் பணிகளிலும் பங்களித்ததாகத் தெரியவில்லை. இது குறித்து அவரது கருத்தை எதிர்பார்க்கிறேன்.--Kanags \உரையாடுக 10:18, 9 பெப்பிரவரி 2024 (UTC)Reply
வணக்கம் என்னுடைய பணிச்சூழலால் என்னுடைய நிர்வாக அணுக்கத்தை முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை. இருப்பினும் கால நீட்டிப்பு செய்யும் போது கிடைக்கும் நேரங்களில் என்னால் நிர்வாகியாகத் தொடர்ந்து பணியாற்ற இயலும் எனக் கருதுகிறேன். எனவே எனது நிர்வாக அணுக்கத்தை நீட்டிக்க வேண்டுகிறேன்.--Balu1967 (பேச்சு) 14:58, 9 பெப்பிரவரி 2024 (UTC)Reply
வணக்கம் என்னுடைய பணிச்சூழலால் என்னுடைய நிர்வாக அணுக்கத்தை முழுமையாகப் பயன்படுத்த இயலவில்லை. அவ்வப்போது கண்ணில் படும் பணிகளைக் கவனித்திருக்கிறேன். என்னுடைய பணிச்சூழல் மே மாதத்திற்குப் பிறகு மாற்றமடையும். அப்போது என்னால் இன்னும் சிறப்பாகப் பங்களிக்க இயலும் என நினைக்கிறேன். நிர்வாக அணுக்கத்திற்கான கால நீட்டிப்பை வழங்க வேண்டுகிறேன்.--மகாலிங்கம் இரெத்தினவேலு 17:05, 9 பெப்பிரவரி 2024 (UTC)Reply

தற்போதுள்ள நிர்வாகி தெரிவில் அவர்கள் நிர்வாகப் பங்களிப்புச் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பில்தான் வாக்களிக்கப்பட்டது. இல்லாவிட்டால், user:Balu1967, user:TNSE Mahalingam VNR ஆகிய நிர்வாகிகளுக்கு அப்போது மறுப்பு வாக்களித்திருக்கலாம்! தற்போதும் பாருங்கள், Balu1967 (பேச்சு) 01:53, 2 ஆகத்து 2023 அன்று குறிப்பிட்டதையே நகலெடுத்து தற்போது ஒட்டியிருக்கிறார். சிறிது மாற்றத்துடன் மகாலிங்கம் இரெத்தினவேலு அவ்வாறே செய்துள்ளார்.

நிர்வாகிகள் பள்ளி இவ்வாறு குறிப்பிடுகிறது. புதிய நிருவாகிகள் இந்தப் பக்கத்தில் தங்கள் பணிகளைப் பற்றி கற்றுக் கொள்ளவதுடன் பிற நிருவாகிகள், நெடுநாள் பயனர்களிடம் இருந்து தேவையான வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்ளலாம். user:Balu1967, user:TNSE Mahalingam VNR ஆகிய இருவரும் பணிகளைப் பற்றி கற்றுக் கொள்ளவுமில்லை. பயனர்களிடம் இருந்து தேவையான வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்ளவுமில்லை. மறுப்பிருந்தால் இருவரும் குறிப்பிடலாம். பொதுவில் பள்ளி என்பதே கற்றுக்கொண்டு சித்தியடைவற்குத்தான். ஆனால் இங்கு மட்டும்? --AntanO (பேச்சு) 02:15, 10 பெப்பிரவரி 2024 (UTC)Reply

வணக்கம் AntanO நான் அரசுத் துறையில் பணிபுரிந்து வருவதால் என்னால் தற்போது அதிக அளவில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளமுடியவில்லை. ஆனலும் விக்கிப்பீடியாவில் குறிப்பிடத்தக்க அளவில் தொடர் பங்களிப்பினை செய்து வருகிறேன். // Balu1967 (பேச்சு) 01:53, 2 ஆகத்து 2023 அன்று குறிப்பிட்டதையே நகலெடுத்து தற்போது ஒட்டியிருக்கிறார்// எனக் கூறியுள்ளீர்கள். இது தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் எனது பணிச்சுமையை குறிப்பிட நான் ஏற்கனவே குறிப்பிட்டதையே நகலெடுத்து ஒட்டினேன். நிர்வாக அணுக்கம் உள்ளவர்கள் எனக்கு நிர்வாக அணுக்கம் அளித்தாலும் இல்லையென்றாலும் எனக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. இனிமேல் இது குறித்து விவாதிக்க விரும்பவில்லை. ஆனாலும், நான் தொடர்ந்து விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களித்தே வருவேன். இவ்வளவு காலம் நிர்வாக அணுக்கம் அளித்தமைக்கு நன்றி.--Balu1967 (பேச்சு) 02:35, 10 பெப்பிரவரி 2024 (UTC)Reply

@Kanags and AntanO: வணக்கம். உங்களின் கருத்துக்களை ஆக்கஞ் சார்ந்தவையாகக் கருதுகிறேன். பணிகளைக் கற்றுக்கொண்டு, நிர்வாகப் பங்களிப்பு செய்யவேண்டும் என்பதனை ஏற்கிறேன். Balu1967, TNSE Mahalingam VNR ஆகியோர் தமிழ் விக்கிப்பீடியாவிலும், சகோதரத் திட்டங்களிலும் தமது தொகுத்தல் பணிகளை தொடர்ந்து செய்துவருகிறார்கள். தமிழ் விக்கிப்பீடியா தளத்தில் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகளில் பங்குகொண்டு செயலாற்றுகிறார்கள். துப்புரவுப் பணிகள், செம்மைப்படுத்துதல், விக்கிநாட்கள் 100, பெண்ணியமும் நாட்டார் மரபும் ஆகியன சில எடுத்துக்காட்டுகள். விக்கிமீடியா திட்டங்களை பரப்புரைச் செய்யும் வகையில் அரசு நடத்தும் மாநாடுகள், தமிழ் விக்கிப்பீடியர்கள் நடத்தும் பயிலரங்குகள் ஆகியவற்றில் கலந்துகொண்டு தமது பங்களிப்பைச் செய்கிறார்கள். இப்பணிகளை இவர்கள் செய்வதற்காக, நிர்வாகப் பொறுப்பினைத் தரவேண்டும் என்பதில்லை. தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி மீது இவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும், இலக்கையும் சுட்டிக்காட்டவே இவற்றைக் குறிப்பிடுகிறேன்.
தமிழ் விக்கிப்பீடியா குறித்த பரப்புரைகளில் நமது அணி முனைப்புடன் செயல்பட்டு வருவதால், இனிவரும் மாதங்களில் பங்களிப்போரின் எண்ணிக்கை இங்கு அதிகரிக்கக்கூடும். அண்மைய மாற்றங்களை கண்காணிக்கும் பணியும் அதிகரிக்கும். நிர்வாக அணுக்கம் பெற்றுள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மட்டுமே நடப்புக் காலத்தில், இத்தளத்தில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பங்களிப்பு வகைகளைச் செய்துவருகிறார்கள். Balu1967, TNSE Mahalingam VNR ஆகியோர் இந்த ஒரு பங்கில் அடங்குகிறார்கள். எனவே அவர்களின் நிர்வாக அணுக்கத்தை அடுத்த 6 மாத காலத்திற்கு நீட்டிக்க உங்களின் ஆதரவை வேண்டுகிறேன்.
நவம்பர் 2023 மாதத்திலிருந்து விக்கிப்பீடியா:மாதாந்திர இணையவழிக் கலந்துரையாடல்கள் எனும் முன்னெடுப்பினை எடுத்துள்ளோம். இந்த மாதம் முதல் 'நிர்வாகிகள் பள்ளி' குறித்தும் இந்தக் கூட்டத்தில் உரையாடி, இவ்விரண்டு பயனர்களுக்கு தேவைப்படும் உதவிகளை அளிப்போம் எனும் உறுதிமொழியைத் தருகிறேன். @Sundar: -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:24, 12 பெப்பிரவரி 2024 (UTC)Reply
உங்களது வளர்முக கருத்திற்கு நன்றி. குறித்த பயனர்களின் விக்கி பங்களிப்பு குறித்து எவ்வித கேள்வியும் இல்லை. அவ்வாறு கேட்கவும் முடியாது. //இனிமேல் இது குறித்து விவாதிக்க விரும்பவில்லை.// இப்போக்கில்தான் பல நிர்வாகிகளும் உளர். கருத்திட முடியாதவர்கள் சிக்கலை எப்படி எதிர் கொள்வர்? விசமத்தனம், தனிநபர் தாக்குதல் போன்ற இடங்களில் நிர்வாகிகள் பலர் ஒதுங்கிக் கொள்வதுண்டு. துணிவுள்ள, பிரச்சனைகளை எதிர்கொள்க்கூடிய நபர்கள் நமக்கு வேண்டும். துப்புரவு செயற்பாட்டைக்கடந்து நிர்வாகிகள் ஒட்டுமொத்த பங்களிப்பும் செய்வது நன்று என்பதே என் வாதம். இந்த ஒருவருட காலத்தில் நிர்வாகிகளின் பங்களிப்பைக் காணலாம். வேறு பணிபுரிந்து வருவதால் இங்கு நிர்வாகப் பங்களிப்புச் செய்வதில் இயலாமை உள்ளது என்பவர்களை வலிந்து சுமைத் திணிப்பது ஏற்புடையது அல்ல.
"புதிய நிருவாகிகள் இந்தப் பக்கத்தில் தங்கள் பணிகளைப் பற்றி கற்றுக் கொள்ளவதுடன் பிற நிருவாகிகள், நெடுநாள் பயனர்களிடம் இருந்து தேவையான வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்ளலாம்." என்ற நிர்வாகிகள் பள்ளியின் முக்கிய நோக்கத்திற்கு உடன்படுவார்களா? நிற்க, நிர்வாகிகள் பள்ளியின் குறைபாடுகள் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். AntanO (பேச்சு) 13:40, 12 பெப்பிரவரி 2024 (UTC)Reply
  விருப்பம். @Balu1967 and TNSE Mahalingam VNR: மேற்காணும் வளர்முக கருத்துக்கள் மீதான உங்களின் பார்வையை இங்கு வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:51, 12 பெப்பிரவரி 2024 (UTC)Reply
நிருவாகிகளுக்கான பணிகளைக் கற்றுக்கொள்வதற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் நெடுநாள் பயனர்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன். எப்போதாவது தான் விக்கிப்பீடிய தளத்திற்குள் வர முடிகிறதென்பதால் அந்நேரத்தில் கண்ணில் படும் பிழைகளைச் சுட்டுவதும் சில பயனர் தடைகளைச் செய்வதும் கண்ணில் படும் பயனற்ற கலைக்களஞ்சியத்தின் இலக்கணத்திற்குப் பொருந்தாத கட்டுரைகளை நீக்கியும் வருகிறேன். ஆனால், இது போதாது என்பது எனக்கும் தெரிகிறது. என்னால் விரைந்து செயல்பட இயலும் நேரத்தில் நான் நிருவாக அணுக்கத்தைக் கேட்கிறேன். இப்போதைக்கு எனக்கு நிருவாக அணுக்கத்தை நீட்டிக்கத் தேவையில்லை என்பதை சக விக்கிப்பீடியர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். மகாலிங்கம் இரெத்தினவேலு 05:36, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply
@TNSE Mahalingam VNR நன்றி! @AntanO, @Kanags நிர்வாகிகள் பள்ளியின் செயல்பாட்டினை மேம்படுத்த, மாதாந்திரக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இதனையும் சேர்த்துக் கொள்கிறோம். கலந்துரையாடி, தேவைப்படும் உதவிகளை வழங்குவோம். எனது செய்திகளை பொறுமையாக படித்தமைக்கு நன்றிகள்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:09, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply

பங்களிப்பாளர்கள் பயனர்:சா அருணாசலம், பயனர்:சத்திரத்தான் ஆகியோருக்கு வழங்கியுள்ளேன். தாமோதரன் விகிக்கொள்வதாக முந்தைய உரையாடலில் குறிப்பிட்டதுபோலுள்ளது. அதை யாராவது உறுதிசெய்ய வேண்டுகிறேன். பயனர்:TNSE Mahalingam VNR, பயனர்:Balu1967 ஆகியோர் தொடர்பில் ஒருமித்த ஆதரவு ஏற்படவில்லை எனத் தெரிகிறது. அது மாறும்போது வழங்கலாம். அவர்கள் தங்கள் பணிகளை இயன்றவரை தொடர வேண்டுகிறேன். வேறு யாரும் விடுபட்டுள்ளாரா? -- சுந்தர் \பேச்சு 05:57, 16 பெப்பிரவரி 2024 (UTC)Reply

// வேறு யாரும் விடுபட்டுள்ளாரா?// இல்லை -- ஸ்ரீதர். ஞா (✉) 07:22, 16 பெப்பிரவரி 2024 (UTC)Reply
மிக்க நன்றி. -- சா. அருணாசலம் (பேச்சு) 17:09, 16 பெப்பிரவரி 2024 (UTC)Reply

@Sundar: வணக்கம் ஐயா, கடந்த முறை நிர்வாக அணுக்க நீடிப்பின் பொழுது எனக்கு தவறுதலாக தானியங்கி அணுக்கம் சேர்த்து வழங்கப்பட்டது. எனக்கு வழங்கப்பட்ட தானியங்கி அணுக்கத்தை மட்டும் நீக்கும்படி தங்களிடம் வேண்டுகோள் விடுத்தேன். இது தொடர்பாக ஐயா Kanags அவர்களும் ஆலமரத்தடியில் எனக்கு வழங்கப்பட்ட தானியங்கி அணுக்கத்தை மட்டும் நீக்கி வலியுறுத்தினார். தாங்களும் எனக்கு வழங்கப்பட்ட தானியங்கி அணுக்கத்தை நீக்கிவிட்டீர்கள். தற்போது என்னுடைய ஆறு மாத கால நிர்வாக அணுக்கம் காலாவதியானது. என்னுடைய நிர்வாகச் செயற்பாடுகளைக் கவனித்து கால அளவை அதிகமாக்கி உதவுங்கள். நன்றி--தாமோதரன் (பேச்சு) 06:15, 16 பெப்பிரவரி 2024 (UTC)Reply

ஓ, நன்றி. இப்போது உங்களுக்கும் முடிவிலா அணுக்கத்தைச் செயற்படுத்தியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 09:49, 16 பெப்பிரவரி 2024 (UTC)Reply
Return to the project page "நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்".