விக்கிப்பீடியா:தானியங்கி வேண்டுகோள்கள்

நுட்பம்
ஆலமரத்தடி (தொழினுட்பம்)

நுட்ப நெறிப்படுத்தல்
தமிழ்த் தட்டச்சு
நுட்ப மாற்ற வாக்கெடுப்பு
இணைய எழுத்துரு
வழு நிலவரங்கள்
நுட்பத் தேவைகள்

தானியங்கிகள்

தானியங்கிகள்
பைவிக்கிதானியங்கி
மீடியாவிக்கி செ.நி.இ (Mediawiki API)

தானியங்கி வேண்டுகோள்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம்
Ganeshbot
விக்சனரி தானியங்கிதிட்டம்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - பழங்குடிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - ஊராட்சிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நகரங்கள்

பயனர் நிரல்கள்

தொடுப்பிணைப்பி
translation helper.js
குறுந்தொடுப்பு
தொகுத்தல் சுருக்கம் உதவியான்
விக்கியன்பு
பகிர்வி
விக்சனரி பார்!
பக்கப்பட்டை மறை
புரூவ் இட்
சேமி&தொகு
உபதலைப்புத் தொகுப்பி

பயனர் கருவிகள்
விக்கிப்பீடியா:பயனர் கருவிகள்
விக்கி

விக்கி
மீடியாவிக்கி
மீடியாவிக்கி நீட்சிகள்
விக்கிதானுலாவி
தமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்

இந்தப் பக்கம் தானியங்கிகளுக்கு அனுமதி பெறுவதற்கான பக்கம். அனுமதி தானியங்கிக் கொள்கைக்கு இணங்க வழங்கப்படும். This is a page for requesting work to be done by bots per the standard bot policy.

== Bot/தானியங்கி அனுமதி ==
* BotName/தானியங்கியின் பெயர்:
* Purpose/நோக்கம்:
* Owner/உரிமையாளர்:
* Decision/முடிவு:

பார்க்க: அணுக்கம் பெற்ற வேண்டுகோள்கள்கள்


நடப்பு வேண்டுகோள்கள்: Bot/தானியங்கி அனுமதி தொகு

Bot/தானியங்கி அனுமதி - பயனர்:Shribot தொகு

  • BotName/தானியங்கியின் பெயர்:Shribot
  • Purpose/நோக்கம்:கட்டுரைகளில் சொல் மற்றும் இலக்கணப் பிழைகளைச் சரிசெய்தல், வார்ப்புரு இணைத்தல் & மாற்றம், துப்புரவு பணியில் ஈடுபடல், பகுப்பு இணைத்தல் & மாற்றம், சிறு உரைதிருத்தங்கள் மற்றும் பல.
  • Owner/உரிமையாளர்:ஸ்ரீகர்சன்

உரையாடல் தொகு

ஸ்ரீகர்சன், அண்மையில் நீங்கள் செய்த சில துப்புரவப் பணிகளுக்கு மாற்றுக் கருத்துகள் எழுந்தன. எடுத்துக்காட்டுக்கு, நூற்றுக் கணக்கான கட்டுரைகளில் வார்ப்புருப் பெயர்களைத் தமிழுக்கு மாற்றுதல். இவற்றைத் தானியங்கி கொண்டு செய்தாலும் மாற்றுக் கருத்துகள் வரலாம். இந்தச் சிக்கலைத் தீர்க்க, புதிதாக நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு துப்புரவுப் பணிக்கும் ஒரு முன்னறிவிப்பினை இங்கு தந்து, மற்ற பயனர்களின் கருத்துக்கு ஒரு வாரம் பொறுத்திருந்து நிறைவேற்றினால் உதவியாக இருக்கும். எடுத்துக்காட்டுக்கு, இலக்கணப் பிழைகளைச் சரி செய்வது என்றால் என்னென்ன இலக்கணப் பிழைகள் என்று முன்கூட்டியே பட்டியல் இடுங்கள். பிறகு, அனைத்தையும் சேர்த்து ஒரு கட்டுரைக்கு ஒரே தொகுப்பாக செயற்படுத்துங்கள். ஏனெனில், எத்தனை தானியங்கித் தொகுப்புகள் ஒரு விக்கிப்பீடியா திட்டத்தில் நடைபெறுகின்றன என்று கண்காணித்து தர அளவீடுகளில் அதனையும் ஒன்றாக கொள்கிறார்கள். எனவே, தேவையின்றி முன்னும் பின்னுமாகவும் மாற்றி மாற்றியும் நிறைய தொகுப்புகளாகச் செய்வதைத் தவிர்ப்பது நன்று. இந்த நடைமுறையை ஏற்பதாக உறுதி அளிக்க இயலும் எனில், தானியங்கி அணுக்கம் வழங்கலாம். நடைமுறையில் மாற்றம், மேம்பாடு தேவை என்றாலும் ஏதேனும் ஐயம் என்றாலும் தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 14:34, 24 சூன் 2014 (UTC)[பதிலளி]

@இரவி அவர்களே! ஆம் நிச்சயமாக ஆங்கில விக்கிப்பீடியாவிலும் இவ்வழமை உள்ளதென நினைக்கின்றேன். இந்த நடைமுறையை ஏற்பதாக உறுதி அளிக்கின்றேன். பேச்சுப்பக்கத்தில் விக்கித்திட்ட வார்ப்புரு இடுதல் போன்ற சமயங்களில் முன் அனுமதிபெற வேண்டுமா?--ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:05, 25 சூன் 2014 (UTC)[பதிலளி]
பொதுவாக, எல்லா பணிகளையும் ஒரு வாரம் முன்பு அறிவித்து விட்டுச் செய்வது நன்று. திட்டங்கள் தொடர்பான பணிகளுக்கு அந்தந்த திட்டங்களின் பேச்சுப் பக்கத்திலும் தெரியப்படுத்தலாம். தானியங்கி அணுக்கம் பெற்ற பிறகு தாங்கள் செய்யப் போகும் முதல் சில பணிகளைத் தெளிவாக தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் தற்போது இங்கு பட்டியலிட்டுக் காட்ட முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 13:35, 25 சூன் 2014 (UTC)[பதிலளி]

Bot/தானியங்கி அனுமதி - பயனர்:KalaiBOT தொகு

  • BotName/தானியங்கியின் பெயர்: பயனர்:KalaiBOT
  • Purpose/நோக்கம்:
  • Owner/உரிமையாளர்:
  • Decision/முடிவு:

Bot/தானியங்கி அனுமதி - பயனர்:Info-farmer தொகு

எந்தெந்த சிகப்பு இணைப்புகளைத் தானியக்கமாக நீக்குவது என்று எப்படி வரையறுக்கிறீர்கள்? இத்தானியங்கி ஒரு பகுப்பில் உள்ள ஒரே மாதிரியான/குறிப்பிட்ட சிகப்பு இணைப்புகளை மட்டும் நீக்குமா? வெவ்வேறு வகையான நீக்கங்களுடன் இன்னும் சில மாதிரித் தொகுப்புகளைச் செய்து காட்ட வேண்டுகிறேன். எல்லா சிகப்பு இணைப்புகளும் நீக்கப்பட வேண்டியன அல்ல. இவை புதிய கட்டுரைகள் எழுதுவதைத் தூண்டவும் உதவுகின்றன. எனவே, இத்தானியங்கியின் பணி குறித்து அனைவரின் கருத்துகளையும் வரவேற்கிறேன். --இரவி (பேச்சு) 05:29, 10 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

பயனர்_பேச்சு:AswnBot#மீண்டும் நினைவூட்டல் என்ற கோரிக்கையைக் காணவும். அதன்படி நிறைவேற்றியது. அடுத்து இந்த அறிவிப்புப்படி செய்ய உள்ளேன்.(மாதிரிப் பதிவு) துப்புரவு என்பது வேறுபடுவதால், குறிப்பிட்டு சொல்வதென்பது தற்போது இயலாது. ஆனால், முன்அறிவிப்பு இன்றி, எப்பதிவுகளையும், நான் இயக்கும் இத்தானியங்கி செய்யாது என உறுதிகூறுகிறேன். மேலும், இத்தானியங்கி இணைய இணைப்பு, மின்தடை போன்ற காரணிகளால், பாதிப்பு அடையாமல் செயற்படும் திறன் உள்ளதால், விருப்பப்படுவோருக்கு உரிய ஒப்புதலோடு பயிற்சியும் அளிக்கும் திட்டத்தின் முன்னோடி ஆகும். பொதுவகத்தின் இத்தானியங்கி போல, பிறரின் வேண்டுகோளையும், அறிவிப்போடு நிறைவேற்றும்.--உழவன் (உரை) 00:54, 11 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
@Mayooranathan, Natkeeran, Ravidreams, and Sundar: மேற்கூறிய எனது தானியங்கி விண்ணப்பத்தை, ஏற்கக் கோருகிறேன்.--உழவன் (உரை) 01:13, 17 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
  ஆதரவு--Kanags \உரையாடுக 01:32, 17 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
  ஆதரவு--நந்தகுமார் (பேச்சு) 03:22, 17 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
  ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 15:39, 17 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

பதிப்புரிமை மீறல் போன்ற பராமரிப்பு வார்ப்புருக்களைத் தெளிவான ஏற்பு இன்றி தானியக்கமாக நீக்குதல் வேண்டாம். மற்றபடி, உங்கள் விளக்கம் ஏற்புடையது. 3 மாத காலத்துக்குத் தானியங்கி அணுக்கம் அளிக்கிறேன். தானியங்கியின் செயற்பாடுகளுக்கு ஏற்ப நீட்டிக்கலாம். நன்றி. --இரவி (பேச்சு) 18:08, 17 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

பொதுவான விதிகள், குறிப்பான வளர்ச்சியைத் தடைசெய்கின்றன. எடுத்துக்காட்டாக, இங்கு தமிழகஅரசின் ஆவணத்தைக்காட்டி, உருவாக்கப்பட்ட கட்டுரைகளில், வார்ப்புரு நீக்குதல் பற்றி குறிப்பிட்டுள்ளேன். ஒரு தமிழகஅரசிடம் பலரின், பலநாள் முயற்சிக்குப் பிறகு, உரிய ஆவணத்தைப் பெற்று, வெளியிட்டப் பிறகு, இன்னும் தெளிவான ஏற்பு என்றால் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை. அவ்வார்ப்புருவை நீக்க, என்ன ஏற்பை, யாரிடம் பெற வேண்டும்.? ஏனெனில், பல கட்டுரைகள் தமிழக பாடத்திட்டங்களைக் கொண்டு உருவாக்க எண்ணம் கொண்டு உள்ளேன்.--உழவன் (உரை) 00:44, 18 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
விக்கி வழிகாட்லைப் பின்பற்றவும். குறித்த கட்டுரை கட்டற்ற ஆவணத்தில் இருந்து பெறப்பட்டது என்று எவ்வாறு மற்றவர்கள் தெரிந்து கொள்வது? பார்க்க: பேச்சு:உருளைக் கிழங்கு குடும்பம். பதிப்புரிமை மீறியிருக்கக்கூடிய கட்டுரைகள் பகுப்பில் தெளிவான பதிப்புரிமை மீறல் கட்டுரைகளும் உள்ளதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். --AntanO 02:13, 18 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
en:Wikipedia:Copying text from other sources--AntanO 02:16, 18 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
அவ்வார்ப்புரு இடுவாதல், பகுப்புத்தோன்றுகிறது. அப்பகுப்பில் இருந்து நீக்க என்ன, நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பதை, பகுப்பு பேச்சு:பதிப்புரிமை மீறியிருக்கக்கூடிய கட்டுரைகள் பக்கத்தில் தொடரலாமென்று எண்ணுகிறேன். வார்ப்புரு இட்டவருக்கே, அது குறித்து அதிகம் தெரியும். அவரே நீக்கினால், உரையாடல் நீளாது என்ற நோக்கில், கடந்த அக்டோபர் மாதம் நீக்குதல் பற்றி தொடங்கினேன். தமிழ் பங்களிப்பாளர்களுக்கு, தமிழ் மாதிரிகளைக் கொண்டு நடைமுறைகளை உருவாக்குவோம். வணக்கம்--உழவன் (உரை) 04:43, 18 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
 --AntanO 06:04, 18 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

@Info-farmer: பதிப்புரிமை மீறியிருக்கக்கூடிய கட்டுரைகள் என்பது ஒரு பொதுவான பகுப்பு. இதில் பல்வேறு காரணங்களை முன்னிட்டு கட்டுரைகள் இடம்பெறலாம். எனவே, பொதுவாக, மாற்றுக் கருத்து எழக்கூடிய பராமரிப்புப் பகுப்புகளைத் தானியக்கமாக நீக்குவதைத் தவிர்க்கலாம். அப்படி மாந்த முறையில் தொகுப்புகள் மேற்கொள்ள இயலாத அளவுக்கு நூற்றுக் கணக்கான கட்டுரைகள் இருக்கும் பகுப்பு எனில், இணக்க முடிவை முறையாக நிறுவி தானியங்கியைப் பயன்படுத்தலாம். தமிழக அரசு உரிம அறிவிப்பு குறித்த கருத்தை இங்கு பதிந்துள்ளேன்.--இரவி (பேச்சு) 11:05, 19 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

அறிவிப்பு இட்டு செய்வதால், இனி இதுபோன்ற சூழல் அமையாதென்றே எண்ணுகிறேன்.--உழவன் (உரை) 12:09, 19 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

கால நீட்டிப்பு வேண்டுகோள் தொகு

@Mayooranathan, Natkeeran, Ravidreams, and Sundar: இம்மாதம் 15 ந்தேதியோடு அணுக்க அனுமதி முடிவடைவதால், நீட்டிக்க வேண்டுகிறேன். அடுத்து செய்ய விரும்புவது பகுப்பு தலைப்புகளில் உள்ள இலக்கணப்பிழையை நீக்க உள்ளேன்.எடுத்துக்காட்டாக, பல தமிழகப்பகுப்புகளில் உரிச்சொல் அற்று ஆங்கில பகுப்புபோல அப்படியே பெயர்ச்சொல்லாக உள்ளன.. காண்க: #பகுப்பு:தமிழ்நாட்டுப் புவியியல் என்பதன் பல துணைப்பகுப்புகள் சீர்மையாக உள்ளன. அதுபோலவே, பகுப்புப்பெயர்களில் உள்ள தமிழ்நாடு(பெயர்ச்சொல்) --> தமிழ்நாட்டு என உரிச்சொல்லாக மாற்றப்பட உள்ளது. மேலும், பகுப்பு:Pages with reference errors என்பதில் 4 அல்லது 5 விதமான வழுக்கள் உள்ளன. அவைகளை துணைப்பகுப்புகளில் முதலில் அடக்க வேண்டும். பிறகு 10 நாட்கள் ஆலமரத்தடி அறிவிப்புப் பகுதியில்,முன்னறிவிப்பு இட்டு, அவ்வழுக்களைக் களைய உள்ளேன்.--உழவன் (உரை) 02:13, 12 மார்ச் 2017 (UTC)

Bot/தானியங்கி அனுமதி - ShriheeranBOT தொகு

  • BotName/தானியங்கியின் பெயர்: பயனர்:ShriheeranBOT
  • Purpose/நோக்கம்:சிறு உரைதிருத்தங்கள் / வார்ப்புரு சேர்த்தல் & மாற்றம் / பகுப்பு சேர்த்தல் & மாற்றம்
  • Owner/உரிமையாளர்:Shriheeran
  • Decision/முடிவு:  Y ஆயிற்று. @Kanags, AntanO, and Booradleyp1: இக்கணக்கின் தொகுப்புகளைக் கவனித்து வழிகாட்ட வேண்டுகிறேன். @Shriheeran: நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான பக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய தானியங்கித் தொகுப்புகள் பற்றி இங்கு அறிவித்து ஓரிரு நாள் பொறுத்து பயனர் கருத்துக்கு ஏற்ப தொடர வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 02:49, 30 ஏப்ரல் 2017 (UTC)
  • கருத்து:மேற்கண்ட பணிகள் அனைத்துக்கும் எடுத்துக்காட்டுக்குச் சில தொகுப்புகளைச் செய்து காட்ட வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 05:31, 10 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
@Ravidreams: அவர்களே, இங்கு அதற்கான ஒரு சில இணைப்புக்கள்:
இரவி, பகுப்புக்கள் சீர்திருத்தம் பணியில் என்னேஅலும் ஈடுபட முடியும், விக்கிதானுலவியைப் பயன்படுத்தி மேற்கொள்ளலாம். அணுக்கம் வழங்கின் பேருதவியாக அமையும். அத்துடனிலங்கை தொடர்பான, திரைப்படங்கள் தொடர்பான பல கட்டுரைகளை உருவாக்கவும் முடியும்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:19, 25 ஏப்ரல் 2017 (UTC)
இம்மாத ஆரம்பத்தில் செய்த எனது தொகுப்புக்களை எடுத்துக்காட்டாகக் கொள்க, பகுப்பு, எழுத்துப்பிழைகள் என்பவற்றசி சீர்செய்துள்ளேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:31, 25 ஏப்ரல் 2017 (UTC)

மன்னிக்கவும், சிறீகீரன். இந்த விண்ணப்பம் நிலுவையில் இருப்பதைக் கவனிக்கத் தவறி விட்டேன். நீண்ட நாள் காத்திருக்கும் வேண்டுகோள்களுக்கு நினைவூட்டல் அனுப்பத் தயங்க வேண்டாம். சில சோதனைத் தொகுப்புகளைச் செய்ய முடியுமா? உங்கள் கணக்குக்கு ஏற்கனவே தானியங்கி அணுக்கம் உள்ளதாக காட்டுகிறது. ஆனால், பயனர் உரிமைப் பதிகையில் தொடர்புடைய இடுகையைக் காண இயலவில்லை. மற்ற அதிகாரிகள் சரி பார்க்க வேண்டுகிறேன் .@Mayooranathan, Sundar, and Natkeeran:--இரவி (பேச்சு) 18:21, 26 ஏப்ரல் 2017 (UTC)

இங்கு பாருங்கள் https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3ALog&type=rights&user=&page=ShriheeranBOT&year=&month=-1&tagfilter=&subtype= , என் தானியங்கிக் கணக்கிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதோடு நான் செய்த சோதனைத் தொகுப்புகள் இதோ--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:59, 27 ஏப்ரல் 2017 (UTC)
இங்கு ஏற்கனவே தானியங்கி அணுக்கம் இருப்பதாகக் காட்டுகிறது. எனவே, உங்கள் ShriheeranBOT கணக்கில் இருந்து சில சோதனைத் தொகுப்புகளைச் செய்யுங்கள். அத்தொகுப்புகள் தானியங்கித் தொகுப்புகள் எனக் குறிக்கப்படுகின்றனவா என்று பார்ப்போம். --இரவி (பேச்சு) 04:27, 28 ஏப்ரல் 2017 (UTC)
ஆம், எனது தானியங்கிக் கணக்கின் விருப்பத்தேர்விலும் தானியங்கி எனவே காட்டுகிறது.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:04, 28 ஏப்ரல் 2017 (UTC)
[1] எனது தொகுப்புகள் தானியங்கித் தொகுப்பாகவே காட்டப்படுவதால் தானியங்கி அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது எனவே எண்ணுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:42, 28 ஏப்ரல் 2017 (UTC)
இந்தத் தானியங்கியை 3 நாட்களுக்குத் தடை செய்துள்ளேன். அத்துடன் இந்தத் தானியங்கியின் அணுக்கத்தைத் தற்காலிகமாக முடுக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன். பல தொகுப்புகள் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. ஏராளமான தொகுப்புகளுக்கு வார்ப்புரு தவறுதலாக இணைக்கப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டுள்ளது. ஒரு சில கட்டுரைப் பகுதிகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன. தானியங்கியை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தியும் மீண்டும் இயக்கியுள்ளார். இவரது ஆர்வத்தைப் பாராட்டினாலும், ஏனையோருக்கு பளு அதிகமாகிறது. விக்கித்திட்டம் 15 தொடர்பான அறிவிப்புகளை தானியங்கி அணுக்கம் இல்லாமலேயே செய்யமுடியும். @Ravidreams:--Kanags \உரையாடுக 10:14, 1 மே 2017 (UTC)[பதிலளி]
@Kanags, Shriheeran, and Balurbala:, சிறீகீரன், தங்கள் தானியங்கி இயக்கம் குறித்து மற்ற பயனர்களின் கருத்துகளக் கவனித்துச் செயற்பட வேண்டுகிறேன். தானியங்கி செயற்படும் வேகத்தை மட்டுப்படுத்துவதன் மூலம் தானியங்கித் தொகுப்புகளைச் சரி பார்த்து தொடர்ந்து இயக்க முடியும். ஒரு நிமிடத்துக்கு ஒரு சில தொகுப்புகள் போதுமானது. கால அளவு 0 என்று தந்தால் மிகவும் வேகமாக இயங்கும் என்று நினைக்கிறேன். புதிய பணிகளைச் செய்து பார்க்கும் போது பல கட்டச் சோதனைகளைச் செயற்படுத்திப் பாருங்கள். தொடர்ந்து இயக்கும் முன் பயனர்களுக்கு அறிவிப்புகளைத் தாருங்கள். ஏற்கனவே நன்கு தெரிந்த, ஒப்புதல் பெற்ற பணிகளுக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படுங்கள். எழுத்துப் பிழை திருத்தம் போன்ற பணிகளில் பல வகையான பிழைகளையும் ஒரே தொகுப்பில் சீராக்க முடியுமா என்று பார்க்கலாம். இதற்கு AWB அல்லாத வேறு pythonbotகளும் உதவக் கூடும். தங்கள் தானியங்கியின் செயற்பாடு குறித்து மீண்டும் புகார்கள் எழும் நிலையில் தானியங்கி அணுக்கத்தை மீளப் பெற வேண்டி இருக்கலாம். நன்றி. --இரவி (பேச்சு) 05:31, 2 மே 2017 (UTC)[பதிலளி]

Bot/தானியங்கி அனுமதி - Hastebot தொகு

  • தானியங்கியின் பெயர் : Hastebot
  • இயக்குனர் : மாதவன்
  • நிரலாக்க மொழி(கள்) : பைத்தான் (பைவிக்கிதானியங்கி, pywikibot, PAWS), விக்கிதானுலாவி
  • நோக்கச் சுருக்கம் : பகுப்புக்கள் மாற்றல், சேர்த்தல் மற்றும் நீக்குதல், வார்ப்புருக்கள் சேர்த்தல், மாற்றல் மற்றும் நீக்கல், கட்டுரைகளில் சிறு திருத்தங்கள், பேச்சுப் பக்கங்களில் தகவல்களை இடல் மற்றும் பல.
  • முடிவு:  Y ஆயிற்று--இரவி (பேச்சு) 10:28, 17 சனவரி 2017 (UTC)[பதிலளி]

Bot/தானியங்கி அனுமதி - AntonBot தொகு

Bot/தானியங்கி அனுமதி - KanagsBOT தொகு

Bot/தானியங்கி அனுமதி TshrinivasanBOT தொகு

Bot/தானியங்கி அனுமதி - BalajijagadeshBot தொகு

@Ravidreams: இங்கு செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். மேலும் இது போல சோதனைக்காக 50 மாற்றங்களை இக்கணக்கைக் கொண்டு செய்துள்ளேன். இது போன்ற பராமரிப்பு பணிகளுக்காக தானியங்கி கணக்கு தேவை. நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 03:11, 27 மார்ச் 2019 (UTC)
@Balajijagadesh: கோயில்கள் கட்டுரைகள் பல்லாயிரக்கணக்கானவை உள்ளன. அனைத்துக்கும் சேர்க்கப்போகிறீர்களா? இது தேவை தானா எனப் பார்க்கவும். ஊர்கள், நகரங்கள் கட்டுரைகள் பலவற்றில் ஆள்கூறுகள் சேர்க்கப்படவில்லை. அவற்றுக்கு சேர்க்கலாம்.--Kanags (பேச்சு) 06:21, 27 மார்ச் 2019 (UTC)
@Kanags: தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. பல்லாயிரமாக இருந்தாலும் சேர்த்தல் நல்லது என்று கருதுகிறேன். இதனால் இப்பணிகள் உள்ளன என்று தெரியவரும். ஆங்கில விக்கிப்பீடியாவில் இப்பகுப்பில் ஒரு லட்சத்தி இருபதாயிரத்திற்கும் அதிகமான கட்டுரைகள் coor இல்லாமல் உள்ளன. மேலும் இந்த பகுப்பு மறைந்துள்ளதால் சாதாரண பயனர்களுக்கு கட்டுரைகளை படிக்கும் பொழுது எந்த இடரும் வரப்போவதில்லை. மேலும் இப்படியாக செய்துவைத்தால் மேம்பாடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். மேலும் தாங்கள் கூறியது போல் ஊர்கள் நகரங்கள் அனைத்திற்கும் விக்கிதரவிலிருந்து பதிவிறக்க முடியுமா என்று பார்க்கிறேன். த.இ.க கோயில்கள் ஆங்கிலத்தில் இல்லாததால் விக்கிதரவிலும் இல்லை. நகரங்கள் கட்டுரைகளுக்கு பெரும்பாலும் விக்கிதரவில் இருக்க வாய்ப்பிருக்கிறது. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:33, 27 மார்ச் 2019 (UTC)
@Balajijagadesh: வேறு என்ன வகையான பராமரிப்புப் பணிகளைச் செய்ய உள்ளீர்கள் என்பதற்குச் சில சோதனைப் பகுப்புகளைச் செய்து காட்டவும். உடனடியாக கவனித்து coor சேர்ப்பதற்கான திட்டம் இல்லாமல் ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் பராமரிப்பு வார்ப்புரு இட வேண்டுமா என்று கேள்வி எனக்குள்ளும் எழுகிறது. ஆங்கில விக்கிப்பீடியாவில் செய்கிறார்கள் என்றால் அங்கு இவ்வாறான பணிகளை மட்டும் கவனித்துச் செய்ய ஆட்கள் உண்டு.--இரவி (பேச்சு) 19:30, 27 மார்ச் 2019 (UTC)
@Ravidreams: //வேறு என்ன வகையான பராமரிப்புப் பணிகளைச் செய்ய உள்ளீர்கள் என்பதற்குச் சில சோதனைப் பகுப்புகளைச் செய்து காட்டவும்.// இது போன்ற பராமரிப்புகளை தானியக்கமாக எளிதாக செய்யலாம். மேலும் மேலும் இங்குள்ள கிட்டதட்ட 120 மாற்றங்களைப் பார்த்தால் நான் எது மாதிரியான தானியக்கங்களை செய்ய எண்ணியுள்ளேன் என்பது புரியும். தேவையில்லாத இடைவெளி, பகுப்புகளை பக்கத்தின் கடைசியில் சேர்ப்பது, தவறான html tags, தேவியில்லாத விக்கயிணைப்பு விளக்கம் போன்றவற்ற சரிசெய்வது. //உடனடியாக கவனித்து coor சேர்ப்பதற்கான திட்டம் இல்லாமல் ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் பராமரிப்பு வார்ப்புரு இட வேண்டுமா என்று கேள்வி எனக்குள்ளும் எழுகிறது.// தங்கள் கேள்வியும் சரிதான். சில பத்து கோயில்களுக்கான ஆயக்குறியை நான் நேரே சென்று பார்த்து குறித்து சேர்த்துள்ளேன். இந்த கோயில்கள் ஆங்கிலத்தில் இல்லை. விக்கி தரவிலும் ஆயக்குறிகள் இல்லை. இது போல சேர்த்துவரும் பொழுது எந்த கட்டுரைகளில் ஆயக்குறி உள்ளது இல்லை என்பதை எளிதில் அறிய இது போன்று மறைத்த வார்ப்புருக்ககளை இடலாம் என்று கருதினேன். கோயில் கட்டுரைகள் பரவலாக பல ஊர்களில் உள்ளதால் அந்தந்த ஊர்களில் உள்ளவர்களை அக்கோயில் பற்றிய ஆயக்குறி சேர்க்க சொல்லலாம். அல்லது கூகுள் மேப்பில் அக்கோயில்கள் எங்குள்ளது என்று பார்க்கச் சொல்லலாம். ஏனெனில் கூகுள் மேப்பில் உள்ள எழுத்துககள் வேறு விதமாக உள்ளதால் எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை. இது போன்ற சின்ன சின்ன வேலைகளில் பல புதுப்பயனர்களை ஈடுபடுத்தலாம். இதற்காக ஒரு திட்டப்பக்கம் உருவாக்க எண்ணமுள்ளது. மேலும் சில ஓபன்மேப் பயன்படுத்தி சில வேலைகள் செய்யவும் எண்ணமுள்ளது. அதனால் coor பகுப்புகளை இடுவது முக்கியம் என்று கருதுகிறேன். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:59, 28 மார்ச் 2019 (UTC)
Some active bots (eg: KanagsBOT, NeechalBOT) can do this job. If so, why do you want to create a duplicate bot? --AntanO (பேச்சு) 02:29, 29 மார்ச் 2019 (UTC)
@AntanO: தாங்கள் கூறுவது எனக்கு புரியவில்லை. இப்பணிகளை நான் செய்ய நினைத்துள்ளேன். சாதாரண கணக்கில் செய்தால் அண்மைய மாற்றங்களில் பிறருக்கு தொல்லை வரும் என்பதால் இன்னொரு கணக்கை தானியங்கியாக குறிக்கக் கேட்கிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:13, 29 மார்ச் 2019 (UTC)
  • Decision/முடிவு:

மூன்று மாத காலத்துக்கு தானியங்கி அளித்துள்ளேன். தங்கள் செயற்பாட்டை ஆய்வு செய்து அதன் பிறகு தொடர்ந்து நீட்டிப்பு வழங்குகிறேன். coor சேர்ப்பதற்கு முறையான ஒரு திட்டமும், உறுதியான சமூகப் பங்கேற்பும் இல்லாமல் அது தொடர்பான தானியங்கித் தொகுப்புகளைச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். AntanO, ஒரே பணியை வெவ்வேறு பயனர்கள் தங்கள் தானியங்கிக் கணக்குகள் மூலம் செய்ய முன்வருவது நல்லதே. நன்றி.--இரவி (பேச்சு) 19:19, 20 ஏப்ரல் 2019 (UTC)

அவ்வாறே. நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 01:28, 21 ஏப்ரல் 2019 (UTC)
@Ravidreams: இக்கணக்கின் தானியங்கி நிலை 21 சூலை 2019 அன்றோடு முடிந்துவிட்டது. தற்பொழுது வேங்கைத் திட்டம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி வருகிறேன். அதற்காகவும் இக்கணக்கின் தானியங்கி நிலையை நீடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 21:29, 3 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
@Balajijagadesh: நல்லது. அடுத்த ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளேன். --இரவி (பேச்சு) 21:52, 3 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

Bot/தானியங்கி அனுமதி - নকীব বট தொகு

  • BotName/தானியங்கியின் பெயர்: নকীব বট
  • Purpose/நோக்கம்:

The bot will

  1. Add {{category redirect}} to the redirected category
  2. Move the members of redirected category to target category.

These settings are configurable through configuration here. Please help me localising the setting as I do not understand your language. If I did any mistake, feel free to correct. I use google translator to understand your scripts which often leads to ambiguity. Regards. Nokib Sarkar (பேச்சு) 10:35, 18 சூன் 2020 (UTC)[பதிலளி]

Bot/தானியங்கி அனுமதி - SelvasivagurunathanmBOT‬ தொகு

  • BotName/தானியங்கியின் பெயர்: பயனர்: SelvasivagurunathanmBOT‬
  • Purpose/நோக்கம்: (1) விக்கிதானுலாவி உதவியுடன் பகுப்பினை ஒழுங்கமைப்பது தொடர்பான பணிகளைச் செய்தல். (2) துப்புரவு, ஒழுங்கமைவு தொடர்பான பராமரிப்பு வார்ப்புருகள் இடுதல். (3) எழுத்துப் பிழை திருத்தம், கட்டுரை வடிவமைப்புத் திருத்தம் ஆகிய சிறிய அளவுப் பங்களிப்புகளை தானியங்கிக் கணக்கில் புகுபதிகை செய்து செய்தல்.
  • Owner/உரிமையாளர்: பயனர்:Selvasivagurunathan m
  • Additional Information/கூடுதல் தகவல்: விக்கிதானுலவி உதவியுடன் செய்யப்பட்ட தொகுப்புகளை இங்கு காணலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:24, 15 சனவரி 2023 (UTC)[பதிலளி]
இந்தத் தானியங்கியின் செயற்பாடுகள் சிறப்பாகவே உள்ளன. அணுக்கம் வழங்குவதற்கு எனது ஆதரவு.--Kanags \உரையாடுக 06:35, 19 சனவரி 2023 (UTC)[பதிலளி]
 Y ஆயிற்று -- சுந்தர் \பேச்சு 06:53, 19 சனவரி 2023 (UTC)[பதிலளி]

Bot/தானியங்கி அனுமதி - S. ArunachalamBot தொகு

  • BotName/தானியங்கியின் பெயர்: பயனர்:S. ArunachalamBot
  • Purpose/நோக்கம்: (1) விக்கிதானுலாவி உதவியுடன் பகுப்பினை ஒழுங்கமைப்பது, இணைப்பது தொடர்பான பணிகளைச் செய்தல். (2) துப்புரவு, ஒழுங்கமைவு தொடர்பான பராமரிப்பு வார்ப்புருக்கள் இடுதல். (3) எழுத்துப் பிழை திருத்தம், கட்டுரை வடிவமைப்புத் திருத்தம் ஆகிய சிறிய அளவுப் பங்களிப்புகளை தானியங்கிக் கணக்கில் புகுபதிகை செய்து செய்தல்.
  • Owner/உரிமையாளர்: பயனர்:சா அருணாசலம்
  • Additional Information/கூடுதல் தகவல்கள்:இதன் பங்களிப்புகளை இங்கு காணலாம். --S. ArunachalamBot (பேச்சு) 16:43, 27 சனவரி 2023 (UTC)[பதிலளி]
  • மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுடன் கூடுதலாக பல்லாயிரக்கணக்கான தமிழ்த் திரைப்படங்களில் இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் என்ற பகுப்பினை இணைக்கிறேன்.

எடுத்துக்காட்டாக இதன் முறையே [[பகுப்பு:2020 தமிழ்த் திரைப்படங்கள்]] என்று மட்டும் இருக்கும் திரைப்படப் பக்கங்களில் [[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]] என்ற பகுப்பினை சேர்க்க வேண்டும். ஆண்டுகளை மட்டும் மாற்றி தானியக்கமாக [[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]] என்ற பகுப்பினை இணைக்கிறேன். இதில் [[பகுப்பு:நாடுகள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்]] என்ற பகுப்பில் உள்ள [[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]] [[பகுப்பு:இலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள்]], [[பகுப்பு:கனேடியத் தமிழ்த் திரைப்படங்கள்]] [[பகுப்பு:மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள்]] இந்நான்கு பகுப்புகளும் ஒரே திரைப்படக் கட்டுரையில் இல்லாதவாறு தானியக்கமாக பார்த்துத் தொகுக்கிறேன். இந்த தானியக்க தொகுப்பில் இந்நான்கு பகுப்புகளும் இணைவது இயல்பு. இதை எடுத்துக்காட்டாக இந்த தானியங்கி கொண்டு தொகுத்தால் [[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]] மற்றும் [[பகுப்பு:இலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள்]] என்ற இரண்டு பகுப்புகளும் ஒரே திரைப்படப் பக்கத்தில் வரும். இதற்கும் தானியங்கி கொண்டு ஒரு நாட்டின் பகுப்பு மட்டும் இடம்பெறுமாறு மாற்றுகிறேன்.--சா. அருணாசலம் (பேச்சு) 10:50, 8 மே 2023 (UTC)[பதிலளி]

  ஆதரவு. @Sundar: கவனிக்க.--Kanags \உரையாடுக 08:39, 8 மே 2023 (UTC)[பதிலளி]
நன்றி. @சா அருணாசலம்: நீங்கள் கேட்டபடி தானியங்கி அணுக்கத்தை வழங்கியுள்ளேன். இந்தக் கோரிக்கையிலுள்ளபடி அதைப் பயன்படுத்த வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 10:20, 8 மே 2023 (UTC)[பதிலளி]
@Kanags:, @Sundar: உங்கள் இருவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.--சா. அருணாசலம் (பேச்சு) 10:50, 8 மே 2023 (UTC)[பதிலளி]

Bot/தானியங்கி அனுமதி- Sridhar G BOT தொகு

துடுப்பாட்டக்காரர்கள் கட்டுரைகளில் முதல் தரத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, பட்டியல் அ துடுப்பாட்டம் ஆகியவற்றினை முறையே மு.த.து, ஒ.ப.து,ப.இ20,ப.அ.து என்றவாறு சுருக்குதல் இதன்மூலம் தகவற்பெட்டி அகலமாக இருப்பதைத் தவிர்க்கலாம். 2) இந்தியா, துடுப்பாட்டம் என்பதற்குப் பதிலாக இந்தியத் துடுப்பாட்ட அணி என இணைப்புக் கொடுத்தல் 3) ஒரு இந்திய என்பதற்குப் பதிலாக ஓர் இந்திய என்று மாற்றுதல் 4) சான்றில்லை, குறுங்கட்டுரை என வார்ப்புரு இடுதல், எழுத்துப் பிழை திருத்தம், கட்டுரை வடிவமைப்புத் திருத்தம் ஆகிய சிறிய அளவுப் பங்களிப்புகளை தானியங்கிக் கணக்கில் புகுபதிகை செய்து செய்தல்.

@Sridhar G:, பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளில் ஒரே மாதிரியான மாற்றங்களைத் தானியங்கி மூலம் செய்யும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கெனவே தங்களுக்குத் தெரிவித்தபடி, உங்கள் தொகுப்புகளில் தவறுள்ளன. வேறு பயனர்களிடம் ஒப்புதல் கேட்டு விட்டு இவ்வாறான தொகுப்புகளைச் செய்வதே நல்லது. தவறான தொகுப்புகளில் சிலவற்றைத் திருத்துங்கள். அதன் பின்னர் இங்கு இற்றைப்படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 05:43, 19 மே 2023 (UTC)[பதிலளி]
சரிங்க ஸ்ரீதர். ஞா (✉) 06:16, 19 மே 2023 (UTC)[பதிலளி]
வணக்கம் @Kanags,எனது தொகுப்புகள் சிலவற்றை திருத்தியுள்ளேன். இவை சரிதானா? ஸ்ரீதர். ஞா (✉) 08:58, 22 மே 2023 (UTC)[பதிலளி]

இற்றை தொகு

@Sundar and Kanags: வணக்கம், மேற்கூறிய தவறான தொகுப்புகள் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளன. கூடுதலாக, பகுப்பு:இந்தியத் தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள் பகுப்பு:இந்தியத் துடுப்பாட்டக்காரர்கள் எனும் இரு பகுப்புகளும் ஒரே கட்டுரையில் இருப்பதனால் பகுப்பு:இந்தியத் துடுப்பாட்டக்காரர்கள் எனும் பகுப்பு நீக்கப்படுகிறது. எனது தொகுப்புகள் சரி எனில் மற்ற கட்டுரைகளிலும் இற்றை செய்ய தானியங்கி அனுக்கம் கோருகிறேன். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 15:54, 31 மே 2023 (UTC)[பதிலளி]

நன்றி, ஸ்ரீதர். கனகு சிறிதரன் சரிபார்த்தபிறகு அணுக்கத்தைச் செயற்படுத்தலாமென நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 02:53, 6 சூன் 2023 (UTC)[பதிலளி]
நன்றி சுந்தர், @Sridhar G: இந்தத் தானியங்கியின் கடைசி இரு தொகுப்புகளையும் மீளமைத்து சரி செய்திருக்கிறேன். ([2], [3]) எவ்விதமான முன்பயிற்சியும் இல்லாமல் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன போல் தெரிகிறது. Cite web வார்ப்புருவில் தமிழிலேயே (சூன் 14, 2023 என்றவாறு) தேதிகளை எழுதக்கூடியதாக உள்ளது, வழுக்கள் இல்லை, அவ்வாறிருக்க ஆங்கிலத்திற்கு மாற்ற வேண்டிய அவசியமுமில்லை. ஏனைய Cite வார்ப்புருக்களில் எவ்வாறு என்று தெரியவில்லை. கட்டுரைகளில் திருத்தம் செய்யாமல் வார்ப்புருக்களைத் திருத்துவதன் மூலம் வழுக்களை இல்லாமல் ஆக்கலாம் என நினைக்கிறேன். துடுப்பாட்டத் திருத்தங்களைப் பொருத்தவரையில், நீங்கள் செய்துள்ள மாற்றங்களில் எனக்குப் பெரிதாக உடன்பாடில்லை. இவ்வாறான மாற்றங்கள் செய்யும் போது, ஏனைய பயனர்களுடன் உடன்பாடு எட்டுவது நல்லது.--Kanags \உரையாடுக 10:23, 14 சூன் 2023 (UTC)[பதிலளி]
  • @Kanags திகதி பிழைகளை நான் தானியங்கி கொண்டு சரிசெய்வதாக தெரிவிக்கவில்லை. அதனை சோதனை முயற்சியாக செய்து பார்த்தேன் (மொத்தமே 5 தொகுப்புகள் தான்)
  • //வழுக்கள் இல்லை// ஓர் உதாரணம்:ஆன்றி மட்டீசு
  • //நீங்கள் செய்துள்ள மாற்றங்களில் எனக்குப் பெரிதாக உடன்பாடில்லை// மகிழ்ச்சி.
  • //ஏனைய பயனர்களுடன் உடன்பாடு எட்டுவது நல்லது// 19 மே, மே 22 ஆகிய நாட்களில் நான் கேட்ட சந்தேகங்களுக்கு இப்போது வரை எந்தப் பதிலும் இல்லை. பதிலே இல்லாதவிடத்து உடன்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை.
@Sundar இங்கே அவர்களின் கருத்தின்படி அந்தத் தொகுப்புகளை மேற்கொண்டேன். திருத்திய பின்னர் வேறு எந்தப் பயனரும் அந்தத் தொகுப்புகளைத் தவறு எனக் கூறவில்லை. ஒரு புறாவிற்குப் போரா என்பது போல் தான் எனக்குத் தோன்றுகிறது:)தங்களது இருவரது கருத்திற்கும் நன்றி. சுந்தர், மற்ற துப்புரவுப் பணிகளிலாவது ஈடுபடலாம் என்பதால் எனது கோரிக்கையினை மீளப் பெறுகிறேன்.-- ஸ்ரீதர். ஞா (✉) 04:07, 18 சூன் 2023 (UTC)[பதிலளி]
இந்தக் குறிப்பிட்ட தானியங்கியின் பங்களிப்புகளைச் சரிபார்க்கவியலாதபடியால் என்னால் தனித்து முடிவெடுக்கவியலாது. தவிர, தானியங்கி என வரும்போது ஏவுதற்குமுன்னரே அமைப்பைச் சீர்செய்தல் நலம். மற்றபடி உங்கள் நற்பணிகளைத் தொடருங்கள். இன்னும் தெளிவு ஏற்பட்டு மீண்டும் விண்ணப்பிக்க விரும்புகையில் விண்ணப்பியுங்கள். பலரது உள்ளீடுகளும் வந்தால் செம்மைபெறும். -- சுந்தர் \பேச்சு 08:16, 18 சூன் 2023 (UTC)[பதிலளி]