விக்கிப்பீடியா:பக்கப்பட்டை மறை
இது விக்கிப்பீடியாவின் இடப்பக்கக் கருவிப்பட்டையை மறைத்து, பக்கங்களை முழுத்திரையில் காண்பிக்கிறது. மிக நீளமான கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்கும்போது "இன்னும் சற்று நீளமாக வரிகள் இருந்தால் பரவாயில்லை" - என்று நினைப்பவர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும். மேலும், நீளமான (Landscape) பக்க அனுபவம் படிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
இக்கருவி ஆங்கில விக்கிப்பீடியர் ப்ளீஸ்ஸ்டேண்டால் உருவாக்கப்பட்டு தமிழ் விக்கிப்பீடியாவிற்கு ஏற்ப சூர்யபிரகாசால் தனிப்பயனாக்கப்பட்டுள்ளது.
நிறுவல்
தொகுகருவியாக நிறுவ
தொகு- என் விருப்பத்தேர்வுகள் என்பதைச் சொடுக்கிவரும் பக்கத்தில் கடைசியாக உள்ள கருவிகள் எனும் தத்தலில் பயனர் இடைமுகப்புக் கருவிகள் எனும் பிரிவில் உள்ள Hideside என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது ஒரு கருவியாக உங்கள் அமர்வுக்கு நிறுவப்பட்டுவிடும். மேலும் ஒவ்வொரு முறையும் உங்கள் நெறியத்தோல் ஏற்றம்பெறாமல் (load) இருக்கும்.
- என் விருப்பத்தேர்வுகள் → கருவிகள் → பயனர் இடைமுகப்புக் கருவிகள் → Hideside
நிரல்வரியாக நிறுவ
தொகு- நிரல்வரியாக இதனை நிறுவ நெறியத் தோல் பக்கம் (இவ்விணைப்பைச் சொடுக்கவும்) என்ற பக்கத்திற்கு சென்று பின்வரும் வரியை நகலெடுத்து ஒட்டவும். (Copy & paste)
importScript('பயனர்:Surya_Prakash.S.A./Hideside.js');
பயன்படுத்துதல்
தொகுஇதனைச் செயலாக்க அழுத்தவும். செயலிழக்கச்செய்யவும் அதையே அழுத்தவும். அல்லது மேலே, வலப்பக்கத்தில் தேடல் பெட்டிக்கு அருகிலுள்ள கீழ்நோக்கு அம்புக்குறியைச் சொடுக்கினால் அதில் "இடப்பக்கக் கருவிப்பட்டையைக் காட்டவும் / மறைக்கவும்" என்று விருப்பம் இருக்கும். அதனைப்பயன்படுத்தவும்.