விக்கிப்பீடியா:இணைய எழுத்துரு

'ப்' பன்னா சரியாக வாராமல் இருக்கும் ஓர் கணினியின் எழுத்துரு
அதே கணினியில் இணைய எழுத்துரு பயன்படுத்தும் பொழுது--தேனீ தமிழா எழுத்துரு

மீடியாவிக்கி இணைய எழுத்துரு தொகு

கணினியில் இணைய எழுத்துரு (en:Webfont) என்பது, ஒருவர் அவரது கணினியில் எழுத்துரு இல்லாமல் இருப்பினும், அவருக்கு நவீன உலாவிகள்(அனேக தற்கால உலாவிகள்,ஐ.ஈ 6 உட்பட) வழியாக அம்மொழிக்கான எழுத்துருவை அவரது உலாவியில் காண்பிக்கும் நுட்பமாகும். மீடியாவிக்கியில் இணைய எழுத்துருக்களை சேர்க்க நரையம் நீட்சியைப் போல இணைய எழுத்துரு மீடியாவிக்கி நீட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நீட்சி இப்பொழுது http://translatewiki.net யில் சோதனை முறையில் உள்ளது. (பார்க்க படிமங்கள்). இதை அனைத்து தமிழ் விக்கித்திட்டங்களிலும் நிறுவுவது எழுத்துரு இல்லாத பயனர்களையும் தமிழ் விக்கிகளை எளிதில் பயன்படுத்த உதவும். default ஆக "இயல்பு எழுத்துரு" தேர்வுசெய்யப்பட்டால் முன்னரே எழுத்துரு நிறுவிய பயனர்களுக்கு எந்த ஒரு மாற்றமும் இருக்காது. மலையாள விக்கியில் பழைய எழுத்துமுறை / புதிய எழுத்துமுறைகளை அவரவர் விருப்பம் போல் படிக்க 2 இணைய எழுத்துருக்கள் இருக்கின்றன. இங்கும் தேவைப்பட்டால் தமிழா போன்ற தமிழ் கணிமை அமைப்புகளுடன் சேர்ந்து அது போல் கட்டற்ற எழுத்துருக்களை உருவாக்கி நாமும் பயன்படுத்த இயலும்.

தமிழா கட்டற்ற எழுத்துருக்கள் தொகு

தமிழில் "Lohit Tamil" என்ற எழுத்துரு மட்டுமே கட்டற்ற எழுத்துருவாக இருந்து வந்தது. சமீபத்தில் எ-கலப்பை யின் தாய்க்குழுமமான தமிழா, உமர் தம்பி அவர்கள் 2003-04 யில் உருவாக்கி வெளியிட்ட எழுத்துருக்களை இப்பொழுது வெளியிட்டுள்ளது. தேனீ,வைகை,தென்றல் ஆகிய மூன்று எழுத்துருக்கள் இணைய எழுத்துரு நீட்சியுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றில் வைகை அச்சு தொழிலுக்கேற்ற எழுத்துரு, மீதி இரண்டு எழுத்துருக்களும் தமிழ் விக்கிகளில் இந்நீட்சியுடன் பயன்படுத்தப்படலாம். இந்த எழுத்துருக்கள் 2003-04 யில் உருவாக்கப்பட்டதால் சில முன்னேற்றங்கள் தேவைப் படுகின்றன. ஆகையால் "இயல்பு எழுத்துரு" வை default ஆக வைத்துக்கொள்வது நல்லது.மேலும் நல்ல கட்டற்ற எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டாலோ, வெளியிடப்பட்டாலோ நாம் அதை இந்நீட்சியில் இணைத்துக்கொள்ள இயலும்.

நுட்பம்
ஆலமரத்தடி (தொழினுட்பம்)

நுட்ப நெறிப்படுத்தல்
தமிழ்த் தட்டச்சு
நுட்ப மாற்ற வாக்கெடுப்பு
இணைய எழுத்துரு
வழு நிலவரங்கள்
நுட்பத் தேவைகள்

தானியங்கிகள்

தானியங்கிகள்
பைவிக்கிதானியங்கி
மீடியாவிக்கி செ.நி.இ (Mediawiki API)

தானியங்கி வேண்டுகோள்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம்
Ganeshbot
விக்சனரி தானியங்கிதிட்டம்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - பழங்குடிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - ஊராட்சிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நகரங்கள்

பயனர் நிரல்கள்

தொடுப்பிணைப்பி
translation helper.js
குறுந்தொடுப்பு
தொகுத்தல் சுருக்கம் உதவியான்
விக்கியன்பு
பகிர்வி
விக்சனரி பார்!
பக்கப்பட்டை மறை
புரூவ் இட்
சேமி&தொகு
உபதலைப்புத் தொகுப்பி

பயனர் கருவிகள்
விக்கிப்பீடியா:பயனர் கருவிகள்
விக்கி

விக்கி
மீடியாவிக்கி
மீடியாவிக்கி நீட்சிகள்
விக்கிதானுலாவி
தமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்

Community Concensus தொகு

I propose the installation of the Webfonts mediawiki extension on all Tamil wiki projects and seek community concensus for the same. Please provide your views and support.

  1. Support ஸ்ரீகாந்த் 17:18, 24 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
  2. Support--சோடாபாட்டில்உரையாடுக 17:57, 24 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
  3. Support - --செல்வா 18:24, 24 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
  4. பலத்த ஆதரவு (Support) - --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 09:47, 25 அக்டோபர் 2011 (UTC) (ஓரிரு மணி நேரத்தில் முடிந்தால் பரவாயில்லை.)[பதிலளி]
  5. Support --Kanags \உரையாடுக 09:54, 25 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
  6. Support ----கலை 11:04, 25 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
  7. Support --மணியன் 11:41, 25 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
  8. Support --குறும்பன் 15:44, 25 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
  9. Support --03:45, 26 அக்டோபர் 2011 (UTC)உழவன்+உரை..
  1. Support --Tharique 23:34, 26 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

Default Font தொகு

  • Please vote for default font on the Webfonts if you supported the installation.

Options: Lohit Tamil,Thenee, Thendral, Vaigai,"Reset Font"(Do not use the fonts provided by Webfont by default unless the user chooses one of the above manually)

  1. Vote for Reset Font which will not override system font for users already having fonts natively. I suggest we can look into default fonts once we have nicer fonts available freely. ஸ்ரீகாந்த் 17:18, 24 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
  2. Vote for Reset Font as default--சோடாபாட்டில்உரையாடுக 17:57, 24 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
  3. Vote for Reset Font as default --கலை 11:05, 25 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
  4. Vote for Reset Font as default --மணியன் 11:41, 25 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
  5. Vote for Reset Font as default --குறும்பன் 15:45, 25 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
  6. Vote for Reset Font as default --Kanags \உரையாடுக 20:08, 25 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
  7. Vote for Reset Font as default --03:46, 26 அக்டோபர் 2011 (UTC)உழவன்+உரை..


வழு திரும்பப் பெறப்பட்டது தொகு

இதற்கான வழுவைப் பதிந்து பின் அதனைத் திருப்பிப் பெற்றுள்ளோம். தமிழ் விக்கி சமூகம் மேலே கேட்டுள்ள வசதிகளை ஏற்படுத்தித் தர விக்கிமீடியாவின் i18n நுட்பக் குழு மறுக்கின்றது. நாம் கேட்பவற்றைத் தராமல், அவர்கள் அனைத்து மொழிகளுக்கும் பொதுவாக உருவாக்குவதையே தமிழுக்கும் தர இயலும் எனச் சொல்லுகிறார்கள். அவர்கள் சொல்லுவது

1) இணைய எழுத்துரு அனைத்து பயனர்களுக்கும் / அனானிகளுக்கும் கட்டாயமாக்கப்படும் - தமிழுக்கென கட்டற்ற நல்ல இணைய எழுத்துரு உருவாகும் வரை பொறுக்க மாட்டோம். இருப்பதை எடுத்துக் கொள்ளுங்கள்

2) இணைய எழுத்துரு வேண்டாம், என் கணினியில் எழுத்துரு உள்ளது என்பவர்கள் ஒவ்வொரு பக்கம் திறக்கும் போதும், எழுத்துருவை மாற்ற வேண்டும். இல்லையெனில் பயனர் கணக்கைத் தொடங்கி, “என் விருப்பத் தேர்வுகள்” பக்கத்துக்குப் போய் அங்கு ஒரு பெட்டித் தெரிவை நீக்க வேண்டும். முடியாத அனானிகள் ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்துருவை மாற்றிக் கொள்ளட்டும்.

3) தமிழுக்கென்று தனியாக மாற்றத்தகுந்த தெரிவுகள் (projectwise/languagewise configurable options) தர இயலாது. அனைத்து மொழிகளுக்கும் என்ன வருகிறதோ அதை நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். (உங்களை விட எங்களுக்கு நிறையத் தெரியும் என்ற தோனியே இருக்கிறது). கருவியின் கட்டுப்பாடு அவர்களிடமே இருக்கும், நாம் மாற்றக் கோரினாலும் “நமது நன்மை கருதி” அவர்கள் மறுத்து விடுவார்களாம்.

4) எவ்வளவு எடுத்துக் கூறினும், வேண்டினும் நம்மைக் கிண்டல் செய்வது / அறிவுரை கூறுவது / பேசித் தீர்த்துக் கொள்ளலாம் எனத் தட்டிக் கழிப்பது போன்றவையே பதிலாகக் கிடைக்கின்றன.

இது போன்று நரையம் நீட்சியிலும் செய்துள்ளார்கள். ஒவ்வொரு மொழி விக்கியிலும் அந்தந்த மொழி தட்டச்ச மட்டுமிருந்த வசதி போய், அனைத்து மொழிகளையும் தட்டச்சத் தெரிவுகளைச் சேர்த்துள்ளார்கள். இந்த மாற்றம் எந்த விக்கித் திட்டத்திலிருந்தும் கேட்கப்படவில்லை - ஒரு மீடியாவிக்கி நிரலாளர் தனது சொந்த வசதிக்காக இன்னொரு நரையம் வகையறா கருவியைக் கேட்டதை சாக்காகக் கொண்டு வலுக்கட்டாயமாக அனைத்து விக்கிகளுக்கும் நரையத்தில் இதனைத் திணித்துள்ளனர். எங்களுக்கு வேண்டாம், எங்கள் கருவி “தமிழ் தட்டச்சுக் கருவி” மட்டும் என்று நாங்கள் கோரியதை கண்டு கொள்ளவில்லை.

இவ்வாறு விக்கி சமூகத்தைப் புறந்தள்ளி நுட்பக் குழு /அறக்கட்டளை தன்னிச்சையாக நடந்து கொள்வது சில காலமாக பன்மொழித் திட்டங்களிலும் அதிகரித்துள்ளது. - [1], [2], [3].

i18n நுட்பக்குழுவினரின் நடத்தை இந்தத் திட்டத்தை முன்வைத்த எனக்கும், ஸ்ரீகாந்துக்கும் அச்சத்தை அளிப்பதால் நாங்கள் பதிந்த வழுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டோம். சிறு விசயங்களில் கூட சமூகத்தின் கூற்றினை கேட்க அறவே மறுத்து தன்னிச்சையாகச் அவர்கள் செயல்படுவதால் இவ்வாறு செய்துள்ளோம். மேலே நடந்த கருத்து வேண்டல் வாக்களிப்பு குறிப்பிட்ட வசதிகளை கருவிக்காகவே நடத்தப்பட்டது. சமூகம் ஒப்புதல் அளித்ததும் அதற்காகவே. ஆனால் வேறொன்றைத் தான் அவர்கள் தருவோம் என சொல்லி விட்டதால் வழு திரும்பப் பெறப்பட்டு விட்டது. --சோடாபாட்டில்உரையாடுக 20:28, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]