விக்கிப்பீடியா:நுட்பத் தேவைகள்

நுட்பம்
ஆலமரத்தடி (தொழினுட்பம்)

நுட்ப நெறிப்படுத்தல்
தமிழ்த் தட்டச்சு
நுட்ப மாற்ற வாக்கெடுப்பு
இணைய எழுத்துரு
வழு நிலவரங்கள்
நுட்பத் தேவைகள்

தானியங்கிகள்

தானியங்கிகள்
பைவிக்கிதானியங்கி
மீடியாவிக்கி செ.நி.இ (Mediawiki API)

தானியங்கி வேண்டுகோள்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம்
Ganeshbot
விக்சனரி தானியங்கிதிட்டம்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - பழங்குடிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - ஊராட்சிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நகரங்கள்

பயனர் நிரல்கள்

தொடுப்பிணைப்பி
translation helper.js
குறுந்தொடுப்பு
தொகுத்தல் சுருக்கம் உதவியான்
விக்கியன்பு
பகிர்வி
விக்சனரி பார்!
பக்கப்பட்டை மறை
புரூவ் இட்
சேமி&தொகு
உபதலைப்புத் தொகுப்பி

பயனர் கருவிகள்
விக்கிப்பீடியா:பயனர் கருவிகள்
விக்கி

விக்கி
மீடியாவிக்கி
மீடியாவிக்கி நீட்சிகள்
விக்கிதானுலாவி
தமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்

கணித நீட்சியில் ஒருங்குறி ஆதரவுத் தேவை

தொகு
சீனி, மீடியாவிக்கியின் math நீட்சியில் ஒருங்குறி ஏற்பு இல்லை. யுவராஜ் பாண்டியனிடமும் இது பற்றி சொல்லியிருக்கிறேன். நீங்களும் கொஞ்சம் கவனியுங்களேன்.--சோடாபாட்டில்உரையாடுக 14:24, 6 சனவரி 2013 (UTC)[பதிலளி]
இதனை நானும் பலமுறை சொல்லியுள்ளேன். இது மிக மிகத் தேவையான ஒரு வசதி. சீனி இதற்கான உதவி செய்தால் நன்றாக இருக்கும். கணிதச் சமன்பாடுகள் கோவைகளில் உரோமன் (இலத்தீன்), கிரேக்கம், சில எபிரேய எழுத்துகள், குறியீடுகள் இருப்பது போன்று தமிழ் எழுத்துகள் அனைத்தையும் இட்டு எழுதுமாறும் செய்தல் மிகவும் தேவையானது. அண்மையில் மாத்திசியாக்ஃசு (http://www.mathjax.org/) என்னும் மென்கலம் வழியாக வலைத்தளங்களிலே எளிதாக கணிதக் குறியீடுகளை இட வசதியாக உருவாக்கி இருக்கின்றார்கள். இதனை நான் இன்னும் செய்தேர்வு செய்து பார்க்கவில்லை. --செல்வா (பேச்சு) 15:00, 6 சனவரி 2013 (UTC)[பதிலளி]

வார்ப்புருக்களில் இருந்து தரவு பிரித்தல்

தொகு
வார்ப்புருக்களில் இருந்து தரவுகளை extract செய்வதற்கு சீரான செயலிகள் இருந்தால் நன்று. எ.கா வார்ப்புரு:சஞ்சிகை தகவல் சட்டம் என்ற வார்ப்புருவைப் பயன்படுத்தும் அனைத்து பக்கங்களில் இருந்தும் தரவுகளை எடுத்து ஒரு csv கோப்பாகத் தந்தால் உதவியாக இருக்கும். சுந்தர் போன்றவர்களிடம் ஏற்கனவே இதற்கான நிரல் துண்டுகள் (scripts) உண்டு, ஆனால் ஒரு அடிப்படை இடைமுகம் உதவியாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 17:16, 6 சனவரி 2013 (UTC)[பதிலளி]

விக்கித் தொகுப்பியில் தமிழ் சொல்திருத்தி, இலக்கணத் திருத்தி

தொகு

விக்கியில் தொகுக்கும் போது தமிழ்ச் சொற்களை பிழையாக எழுதினால் சொற் பரிந்துரைகள் தந்தால் உதவியாக இருக்கும்.

கூட்டுப் பகுப்புத் தேடல்

தொகு

விக்கிப்பீடியாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட பகுப்புகளில் உள்ள கட்டுரைகளை தேடுமாறு வசதி வேண்டும். உதாரணத்துக்கு வரலாற்று ஆசிரியர்கள் என்னும் பகுப்பில் 1000 நபர்களும் தொல்லியல் ஆசிரியர்கள் என்ற பகுப்பில் 1000 நபர்களும் இருக்கின்றனர். 500 பேர் 2 பட்டியலிலும் உள்ளனர். எனக்கு இரண்டுப் பகுப்பில் உள்ள 500 நபர்களை தனிப்பட்டியலாக காட்டவேண்டும் என்றால் என்ன செய்வது? அப்போது இதைப் போன்றவை பயன்படும்.

இந்த வேண்டுகோளை எவராவது ஆங்கில விக்கிப்பீடியாவில் வைத்தால் நன்றாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:38, 17 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

தென்காசி சுப்பிரமணியன், இதனை விக்கிப்பீடியா:விக்கிதானுலாவியில் செய்யலாமே? (காண்க) --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 19:13, 17 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நான் கேட்டது கீழுள்ளதைப் போல். நீங்கள் கூறும் முறை எனக்கு புரியவில்லை. விளக்க முடியுமா?

File:CatScan 02.png--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:10, 17 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நீங்கள் கூறியுள்ளதே சிறந்த வழி. en:Wikipedia:Category intersectionஇல் இவ்விரு தளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன: [1] [2]. நான் கூறிய வழி யாதெனில், விக்கி விக்கிதானுலவியினை நிருவி, அதில் முதலில் ஒரு பகுப்பு உள்ள கட்டுரைகளை தேடி ஒரு கோப்பில் சேமிக்க வேண்டும், பின்பு மற்றுமோர் பகுப்பில் உள்ள கட்டுரைகளை தேடி பெற வேண்டும். பின்பு filter (இடப்புறம் கீழே இரண்டாவது) -> open file (முன்பு சேமித்த கோப்பினை ஏற்றி) -> set operations (intersection) ->Apply. என செய்தால் இரு பகுப்பிலும் பொதுவாக உள்ள கட்டுரைகள் மட்டும் இருக்கும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 03:44, 18 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

மேற்கோள்களுக்கான விக்கித் தரவு

தொகு

பல இடங்களில் நாம் மேற்கோள்கள் பற்றிய தகவல்களை திரும்ப திரும்ப தட்டச்சுச் செய்ய வேண்டி உள்ளது. இவற்றை ஒரு இடத்தில் தொகுத்துப் பயன்படுத்தக் கூடியதாக இருந்தால் உதவியாக இருக்கும். பல பதிப்புக்கள், பல்வேறு வெளியீடுகளை வேறுபடுத்திக் காட்டும் வசதி வேண்டும்.

--Natkeeran (பேச்சு) 20:06, 22 செப்டம்பர் 2015 (UTC)

ஆய்வுப் பரிந்துரை - தமிழில் எப்படித் தேடுகிறார்கள், என்னதைத் தேடுகிறார்கள்

தொகு

தமிழ் விக்கி தேடல் உள்ளீடுகள், அதிகம் படிக்கப்படும் கட்டுரைகள் ஆகியவற்றைக் கொண்டு தமிழில் எப்படித் தேடுகிறார்கள், என்னதைத் தேடுகிறார்கள் என்பது தொடர்பான ஒரு ஆய்வுனை செய்தால், இவை பற்றிய தரவுகளைத் தொகுத்தால் தமிழ் தேடல், உள்ளடக்க ஆக்கம், பரவலாக்கம் ஆகிய செயற்பாடுகளுக்கு உதவும். --Natkeeran (பேச்சு) 20:06, 22 செப்டம்பர் 2015 (UTC)