உமர் தம்பி
உமர் தம்பி (ஜூன் 15, 1953 - ஜூலை 12, 2006) தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கிய ஆளுமைகளுள் ஒருவராவார்.
இவர் கணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு உதவக்கூடிய பல செயலிகளையும் கருவிகளையும், எழுத்துருக்களையும் ஆக்கியளித்துள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகு- பிறப்பிடம் - அதிராம்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு
- பெற்றோர் - அ. அப்துல் அமீது - ரொக்கையா
தனது துவக்கக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியையும் அதிராம்பட்டிணத்திலும், தனது Bsc (விலங்கியல்) பட்ட படிப்பினை அதிராம்பட்டிணத்தில் உள்ள காதர் மொஹைதீன் கல்லூரியில் படித்தார்கள்.
அதன் பின் இலத்திரனியலில் டிப்ளோமா படிப்பினையும் முடித்த உமர் தனது ஊரிலேயே 1983 ஆம் ஆண்டு வானொலி, தொலைக்காட்சி பழுது நீக்கும் பணிமனை அமைத்து நிர்வகித்து வந்துள்ளார்.
மாணவப் பருவத்திலிருந்தே வானொலிப் பெட்டி, ஒலிபரப்பு இவற்றில் ஆர்வம் மிக்கவராக இருந்திருக்கிறார். அந்த ஆர்வத்தால், மாணவப் பருவக் குறும்பாக, ஒருமுறை தான் பயின்ற காதர் முகைதீன் உயர்நிலைப்பள்ளியிலிருந்து அலைவரிசையொன்றை உருவாக்கி அதிராம்பட்டினத்திலிருப்போர்கள் கேட்கும்படியாக உரையாடல்களை ஒலிபரப்பியிருக்கிறார்.
இப்படியான ஆர்வத்தால் அவரது தொழிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுதுபார்க்கும் பணியாகவே அமைந்து, 1984 ஆம் ஆண்டு துபாயில் உள்ள Al Futtaim Group of Companies ல் இலத்திரனியல் உபகரணங்களுக்கான National Panasonic பழுது நீக்கும் பொறியாளராக பணியில் சேர்ந்தார்.
கல்வி பயிலும் காலகட்டத்திலேயே 1977 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருமணம் நடைபெற்றது அவரது மனைவியின் பெயர் பெளஷியா (Fouzia). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
முறையாக எந்த கல்லூரியிலும் கணினி தொழில் நுட்பத்தை பயிலாத உமர் அவர்கள், துபாயில் பணிபுரிந்த காலங்களில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தி தானாகவே தனக்கிருந்த ஆர்வத்தினாலும், முயற்சியாலுமே கணினி தொழில்நுட்பங்களை கற்றுவந்துள்ளார்.
துபாயில் தான் பணிபுரிந்துவந்த நிறுவனத்தில் சில நாட்களிலேயே கணினி நுட்பவல்லுனரானார். Network Administrator, SAP Implementation Team Head, Kiosk Programmer எனக் கணினித் துறையில் திறம்பட பணியாற்றியிருக்கிறார்.
ஒரு குழுவை முன்னின்று நடத்துவது வரையில் அவரது பதவி உயர்வு நிகழ்ந்திருக்கிறது. பதினேழு ஆண்டுகளாக துபாயில் இந்தப் பணியைச் செய்த அவர், அவர் 2001 மாவது ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று தாயகம் திரும்பினார்.
தாயகம் திரும்பிய அவர் தனது ஊரிலிருந்து கொண்டே தனது மூத்த மகன் மொய்னுதீனுடன் இணைந்து சென்னை போன்ற பெருநகரங்களில் இயங்கிவரும் மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் விற்கும் (மாருதி கார்) நிறுவனங்களுக்கு, பொருள் இருப்பு மற்றும் விற்பனைக்கான மென்பொருட்களை வடிவமைத்து கொடுத்து பராமரித்து வந்துள்ளார்கள்.
தமிழ் கணிமைக்கு செய்த பங்களிப்புகள்
தொகுதேனீ இயங்கு எழுத்துரு
தொகுமைக்ரோசொஃப்ட் நிறுவனத்தயாரிப்பு உலாவிகளில் மட்டும் தொழிற்படக்கூடிய வெஃப்ட் என்ற தொழிநுட்பத்தை பயன்படுத்தி, தமிழ் எழுத்துரு கணினியில் நிறுவப்படாத நிலையிலும் கூட தமிழ் ஒருங்குறி எழுத்துக்களாலமைந்த இணையத்தளங்களை மைக்ரோசொஃப்ட் உலாவிகளில் படிக்கும் வசதியை இவ்வெழுத்துரு வழங்குகிறது. தேனீ எனப்படும் இவரது தயாரிப்பான எழுத்துருவை இவ்வாறு இயங்கு எழுத்துருவாக பல்வேறு இணைய முகவரிகளில் பயன்படுமாறு மாற்றி வெளியிட்டார். இன்று தமிழ் வலைப்பதிவு உலகில் பெரும்பாலானவர்கள் இந்த வசதியை தமது வலைப்பதிவுகளில் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் இணைய அகராதி
தொகுகணினி, அறிவியல், பொருளாதாரம், கல்வி, வணிகம் போன்ற துறைகளில், இன்று வழக்கத்தில் உள்ள ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை மிக எளிமையான முறையில் தொகுத்து வழங்க முடிவெடுத்த சகோதரர் உமர் அவர்கள் தமிழ் இணைய அகராதியைக் கொண்டுவந்தார். இந்த அகராதியை தமிழ் உலக உறுப்பினரும் talktamil.4t.com என்ற இணையத் தள நிர்வாகியான மஞ்சு அவர்களும் இணைந்து உருவாக்கினார்கள்.
பங்கு பற்றிய இணையத்தளங்கள்/சேவைகள்
தொகு- தமிழ் மணம்
- தமிழ் உலகம் குழுமம் பரணிடப்பட்டது 2006-09-03 at the வந்தவழி இயந்திரம்
- ஈ உதவி குழுமம் பரணிடப்பட்டது 2005-05-06 at the வந்தவழி இயந்திரம்
- ஒருங்குறி குழுமம்
- அறிவியல் தமிழ் குழுமம் பரணிடப்பட்டது 2006-04-23 at the வந்தவழி இயந்திரம்
சமுதாயப் பணிகள்/கட்டுரைகள்
தொகுசமூக சிந்தனையும், சமூக அக்கறையும் கொண்ட சகோதரர் உமர் அவர்கள் அதிரை பைத்துல்மால் பரணிடப்பட்டது 2007-10-28 at the வந்தவழி இயந்திரம் எனும் சமுதாய சேவை செய்யும் அறக்கட்டளையில முக்கிய நிர்வாகியாக இருந்து சேவை செய்து வந்துள்ளார்கள்.
- குழம்பி நிற்கும் குமுகாயம் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- நமக்கு கண்கள், செவிகள் இரண்டிரண்டு ஏன்? பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- தவிடுபொடியாகிறது டார்வின் கொள்கை பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- காரியம் சிறிது, காரணம் பெரிது 3 பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- காரியம் சிறிது காரணம் பெரிது -2 பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- காரியம் சிறிது, காரணம் பெரிது பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
தொகுஉமர் தம்பி உருவாக்கிய செயலிகளும் கருவிகளும்
தொகு- AWC Phonetic Unicode Writer[தொடர்பிழந்த இணைப்பு]
- Online RSS creator - can be used in offline as well
- RSS செய்தியோடை உருவாக்கி [1][தொடர்பிழந்த இணைப்பு][2] பரணிடப்பட்டது 2007-01-08 at the வந்தவழி இயந்திரம்
- எண்களாக தெரியும் ஒருங்குறி எழுத்துக்களை படிப்பதற்கான செயலி பரணிடப்பட்டது 2007-06-02 at the வந்தவழி இயந்திரம்
- தமிழை ASCII வடிவில் டேட்டாபேஸில் சேமிக்கும் கருவி பரணிடப்பட்டது 2016-10-21 at the வந்தவழி இயந்திரம்
- எல்லாவகையான குறிமுறைகளையும் ஒருங்குறிக்கு மாற்றும் செயலி [3][4] பரணிடப்பட்டது 2007-01-08 at the வந்தவழி இயந்திரம்
- ஒருங்குறி மாற்றி [5][தொடர்பிழந்த இணைப்பு][6] பரணிடப்பட்டது 2007-01-08 at the வந்தவழி இயந்திரம்
- குனூ பொதுமக்கள் உரிம அடிப்படையில் வெளியிடப்பட்ட எழுத்துருக்கள் [7][8] பரணிடப்பட்டது 2007-01-08 at the வந்தவழி இயந்திரம்
- தேனீ ஒருங்குறி எழுத்துரு[9][10] பரணிடப்பட்டது 2007-01-08 at the வந்தவழி இயந்திரம்[11] பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- வலைப்பதிவுகள், வலைத்தளங்களுக்கான இயங்கு எழுத்துரு தொடுப்பு[12][தொடர்பிழந்த இணைப்பு][13][தொடர்பிழந்த இணைப்பு]
- வைகை இயங்கு எழுத்துரு[தொடர்பிழந்த இணைப்பு]
- தமிழ் மின்னஞ்சல் பரணிடப்பட்டது 2008-07-20 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ் ஒருங்குறி Toolbar for உலாவி[தொடர்பிழந்த இணைப்பு]
- Uniwriter (உலாவியில் Tools மெனுவில் சேர்க்கப்படும்)
- தமிழா-எ-கலப்பை உருவாக்கத்திலும் பங்காற்றி உள்ளார்.
உமர் தம்பி அவர்களுடன் தொடர்புடைய வலைத்தளங்கள்
தொகு- தமிழ் இணைய அகராதி பரணிடப்பட்டது 2008-05-16 at the வந்தவழி இயந்திரம்
- மின்னஞ்சலில் திருக்குர்ஆன் பரணிடப்பட்டது 2016-10-21 at the வந்தவழி இயந்திரம்
- தமிழன் வாக்கு பரணிடப்பட்டது 2011-03-11 at the வந்தவழி இயந்திரம்
உமர் தம்பி அவர்களின் வலைப்பதிவு
தொகு- தென்றல் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
உமர் தம்பியின் ஆக்கங்கள்
தொகு- எழுதப்பழகுவோம் எச்.ரி.எம்.எல் பரணிடப்பட்டது 2006-11-12 at the வந்தவழி இயந்திரம்
- யுனிகோடும் இயங்கு எழுத்துருவும்[தொடர்பிழந்த இணைப்பு]
- யுனிகோடும் தமிழ் இணையமும் பரணிடப்பட்டது 2006-11-12 at the வந்தவழி இயந்திரம்
- யுனிகோடின் பன்முகங்கள்[தொடர்பிழந்த இணைப்பு]
- RSS ஓடை-ஒரு அறிமுகம்[தொடர்பிழந்த இணைப்பு]
- தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு பரணிடப்பட்டது 2006-11-12 at the வந்தவழி இயந்திரம்
- முத்தமிழ்மன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
உமர் தம்பி பற்றிய பிறரது எழுத்துக்கள்
தொகு- உமர்தம்பி பற்றிய வலைப்பதிவு பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- யுனிகோடு உமர் அவர்களின் மறைவு - அதிரைக்காரன் பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்
- 'யூனிகோட்' உமர்தம்பி மரணமடைந்தார்கள் -adirai.com பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- உமர் தம்பி - தமிழ்க் கணிமைக் கொடையாளர் -காசி பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- 'தேனி' உமர் - நிலா முற்றம்
- ஒருங்குறி (Unicode) எழுத்துரு முன்னோடி உமர்தம்பி மறைந்தார் - சத்தியமார்க்கம்.காம்
- வாசனின் வலைப்பதிவு பரணிடப்பட்டது 2007-03-04 at the வந்தவழி இயந்திரம்
- யுனிகோடு உமர் அவர்களின் மறைவு -முஃப்தி பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- உமர் தம்பி மறைவு -முகுந்த்
- உமர் தம்பி -வாசன் பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்
- உமர் தம்பி காக்கா(அண்ணன்) - என் நினைவுகள் -மாஹிர் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- தேனீ உமருக்கு அஞ்சலி -மதிகந்தசாமி
- 'THEENE.eot' உமர் மறைவு -தேசிகன்
- திரு. உமர் மரணம் -க்ருபா பரணிடப்பட்டது 2007-01-19 at the வந்தவழி இயந்திரம்
- யுனிகோட் உமர் தம்பி மரணம் -அபூ முஹை
- நண்பர் உமர் மறைவு -வெங்கட் பரணிடப்பட்டது 2006-08-19 at the வந்தவழி இயந்திரம்
- அஞ்சலி தேனீ உமர் -பரி பரணிடப்பட்டது 2006-08-11 at the வந்தவழி இயந்திரம்
- அஞ்சலி தேனீ உமர் -டுபுக்கு பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்
- Deep Condolences -பிரகாஷ் பரணிடப்பட்டது 2015-11-23 at the வந்தவழி இயந்திரம்
- 'தேனீ' உமர் மறைவு - கேட்டவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.-ஆசாத் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- உமர் -சுரேஷ் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- e-வீதியில்: யுனிகோடு உமர் அவர்களின் மறைவு -மா.சிவகுமார் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- உமருக்கு அஞ்சலி -மணியன் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ் வலையுலகின் இழப்பு 'தேனீ உமர் தம்பி' -இறை நேசன் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- Tiru. Umarthambi - sad news -ஒருங்குறி வலைக்குழுமம்
- Tiru. Umarthambi - sad news -தமிழ்மணம் வலைக்குழுமம்
- அஞ்சலி - யூனிகோடு உமர் - சுரதா யாழ்வாணன்
- கண்ணீர் அஞ்சலி - எழில்நிலா.காம் பரணிடப்பட்டது 2006-11-12 at the வந்தவழி இயந்திரம்
- உமர் பன்மொழி மாற்றி