விக்கிப்பீடியா:தானியங்கி வேண்டுகோள்கள்/தொகுப்பு 1
Bot/தானியங்கி அனுமதி
தொகு- BotName/தானியங்கியின் பெயர்: பயனர்:NatkeeranBot
- Purpose/நோக்கம்: இது துறை வாரியான சீரான கட்டுரைகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது.
- Owner/உரிமையாளர்: பயனர்:Natkeeran
- Decision/முடிவு: சூன் 12, 2011 அன்று தானியங்கி அணுக்கம் அளிக்கப்பட்டுள்ளது
JayarathinaAWB_BOT - தானியங்கி அனுமதி
தொகு- BotName/தானியங்கியின் பெயர்: பயனர்:JayarathinaAWB BOT
- Purpose/நோக்கம்: விக்கிப்பீடியா:AWBயின் அரை தானியக்கி பயன்படுத்தி தமிழ் விக்கிப்பீடியாவில் துப்புரவு பனிகளை செய்ய
- Owner/உரிமையாளர்: ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக
- Decision/முடிவு: செப்டெம்பர் 1, 2011 அன்று தானியங்கி அணுக்கம் அளிக்கப்பட்டுள்ளது
AswnBot - தானியங்கி அனுமதி
தொகு- BotName/தானியங்கியின் பெயர்:AswnBot
- Purpose/நோக்கம்:interwiki இணைப்புகளை சரிபார்த்தல் மற்றும் இணைத்தல்
- Owner/உரிமையாளர்:அஸ்வின்
- Decision/முடிவு: நவம்பர் 27, 2011 அன்று தானியங்கி அணுக்கம் அளிக்கப்பட்டுள்ளது
Sodabot/தானியங்கி அனுமதி
தொகு- BotName/தானியங்கியின் பெயர்: பயனர்:Sodabot
- Purpose/நோக்கம்: சிறு உரைதிருத்தங்கள் / வார்ப்புரு சேர்த்தல் & மாற்றம் / பகுப்பு சேர்த்தல் & மாற்றம்
- Owner/உரிமையாளர்: பயனர்:Sodabottle
- Decision/முடிவு: தானியங்கி அணுக்கம் அளிக்கப்பட்டது--இரவி 15:10, 25 சனவரி 2012 (UTC)
shanmugambot/தானியங்கி அனுமதி
தொகு- BotName/தானியங்கியின் பெயர்:user:shanmugambot
- Purpose/நோக்கம்:பகுப்பாக்கம் மற்றும் வார்ப்புருக்களை சேர்த்தல் மற்றும் நீக்கல் & general cleanup
- Owner/உரிமையாளர்:shanmugam
- Decision/முடிவு: ̺ தானியங்கி அணுக்கம் அளிக்கப்பட்டது--இரவி (பேச்சு) 18:52, 25 சூலை 2012 (UTC)
Bot/தானியங்கி அனுமதி
தொகு- BotName/தானியங்கியின் பெயர்: NeechalBOT
- Purpose/நோக்கம்:த.வி. புள்ளிவிபரம் சேகரிப்பு, பல பக்கங்களில் ஒரே செய்திகளை இடல் மற்றும் பல
- Owner/உரிமையாளர்: பயனர்:Neechalkaran
- Decision/முடிவு: தானியங்கி அணுக்கம் அளிக்கப்பட்டது- --Natkeeran (பேச்சு) 03:08, 27 அக்டோபர் 2013 (UTC)
கருத்துகள்
தொகுவிக்கித் தானுலவியைப் (AWB) பயன்படுத்தவுள்ளீர்களா, சண்முகம்? -- சுந்தர் \பேச்சு 14:26, 5 மே 2012 (UTC)
- ஆம் சுந்தர். விக்கி தானுலவி மூலமே பகுப்பை சேர்த்தல், நீக்கல் மற்றும் GENERAL CLEANUP போன்ற வேலைகளைச் செய்வேன். BOT அணுக்கம் இருந்தால் எளிதாக இருக்கும். மேலும் அண்மைய மாற்றங்கள் பக்கத்திலும் எளிதாக பயனர்கள் தானியங்கி தொகுப்புகளை மறைத்து பார்க்க இயலும். (தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். அப்போது தேர்வுகள் நடந்தமையால் பார்க்கவில்லை, இப்போதுதான் கவனித்தேன் :) )--சண்முகம் (பேச்சு) 06:13, 19 மே 2012 (UTC)
LogicwikiBot/தானியங்கி அனுமதி
தொகு- BotName/தானியங்கியின் பெயர்: பயனர்:LogicwikiBot
- Purpose/நோக்கம்: புள்ளிவிவரங்களை தினந்தோறும் இற்றைப்படுத்த
- Owner/உரிமையாளர்: ஸ்ரீகாந்த்
- Decision/முடிவு: சுந்தரின் கேள்விக்கு LogicwikiBotன் பங்களிப்புகளே விடையாக உள்ளதால் தானியங்கி அணுக்கம் வழங்கப்படுகிறது --இரவி (பேச்சு) 11:44, 18 பெப்ரவரி 2013 (UTC)
கருத்துகள்
தொகுபுள்ளி விவரப் பக்கங்களை மட்டும் தான் இக்கணக்கில் இருந்து தொகுக்க உள்ளீர்களா, ஸ்ரீகாந்த்? -- சுந்தர் \பேச்சு 14:27, 5 மே 2012 (UTC)
- புள்ளிவிபரங்கள் மட்டுமே நாளுக்கு ஒரு தடவை இத்தானியங்கி மூலம் தரப்படுகிறது. இதற்கு தானியங்கி அணுக்கம் தருவதால் மிக அவசியமான இத்தரவுகள் அண்மைய மாற்றங்களில் தெரிய வாய்ப்பில்லை. இதனால் தானியங்கி அணுக்கத்தைத் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 07:30, 20 பெப்ரவரி 2013 (UTC)
- ஒவ்வொரு மாதமும் முனைப்பாக உள்ள பயனர்கள், தமிழ் விக்கிப்பீடியாவில் நிகழும் தொகுப்புகளில் தானியங்கி அல்லாதவற்றைப் பிரித்துப் பார்க்க விரும்புகிறேன். இதன் காரணமாகவும் தானியக்கமாக தொகுப்பவற்றை அவ்வாறே குறிக்க வேண்டும் என்பது ஒரு அடிப்படை செயற்பாடு என்பதாலும் இக்கணக்கின் தானியங்கி அணுக்கம் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.
- இங்கு தானியங்கி அணுக்கம் இருப்பது பிரச்சினை இல்லை. அதனால், அண்மைய மாற்றங்களில் தெரியவில்லை என்பதே பிரச்சினை. இப்பக்கத்தின் தொகுப்புகள் சிறிய தொகுப்புகளாக இருப்பதால் அண்மைய மாற்றங்களில் சிறு தொகுப்புகளை மறைத்திருப்பவர்களுக்கும் கூட தென்படாது. எனவே, இப்பிரச்சினையைத் தீர்க்க, அண்மைய மாற்றங்களின் தலைப்புப் பகுதியிலேயே பெப்ரவரி 2013 புள்ளிவிவரத்துக்கான இணைப்பைத் தந்திருக்கிறேன். அனைவரின் பார்வைக்கும் கிட்டும். ஒவ்வொரு மாதமும் இந்த இணைப்பை இற்றைப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். இதுவே போதுமான தீர்வாக இருக்கும் என்று பரிந்துரைக்கிறேன்.
- சுந்தரின் கேள்விக்கு ஆம், இல்லை என்று இரண்டே பதில்கள் தான் வர இயலும். இல்லை என்றால் இன்னும் என்னென்ன பணிகள் என்ற அடுத்த கேள்வி வரும். அந்தத் தானியக்கப் பணி ஏற்றுக் கொள்ளக்கூடிய மாற்றங்களைச் செய்தால் அதற்கு தானியங்கி அணுக்கம் கொடுப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சிரீக்காந்த் தற்போது தமிழ் விக்கியில் முனைப்பாக இல்லாத நிலையில் அக்கணக்கின் பங்களிப்புகளையே விடையாக கொள்ள வேண்டும். ஒரு தானியங்கி செய்யும் பணி தீங்காக இருந்தாலோ பெரும்பான்மை பயனரிடமிருந்து உள்ளடக்கத்துக்கு நேரும் பெரும் மாற்றங்களை மறைப்பதாக இருந்தாலோ மட்டுமே அதற்கான அணுக்கத்தை மறுக்கலாம். அண்மைய மாற்றங்களில் பார்க்க இயலவில்லை என்பது அணுக்கத்தை மறுப்பதற்கான போதுமான காரணம் இல்லை. இணையத்தில் ஒரு பக்கத்தைப் பார்க்க நிறைய வழிகள் உள்ளன. உலாவியில் குறித்து வைத்துக் கொண்டும் பார்க்கலாம். எனவே, தொடர்ந்து தானியங்கி அணுக்கத்தை அளிக்குமாறு பரிந்துரைக்கிறேன்--இரவி (பேச்சு) 08:04, 20 பெப்ரவரி 2013 (UTC)
- இரவி, தானியங்கி அணுக்கம் ஏன் கொடுக்கப்படுகிறது என்பதை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள் என நான் நினைக்கிறேன். பொதுவாகப் பயனர்களுக்குத் தேவையற்ற தொகுப்புகளை செய்யும் தானியங்கிகளுக்கே தானியங்கி அணுக்கம் கொடுக்கப்படுகிறது என்பதே எனது புரிதல். இவற்றின் நம்பகத் தன்மையைக் கொண்டு அவற்றின் பதிவுகள் அண்மைய மாற்றங்களில் மறைக்கப்படுகின்றன. சிறீகாந்தின் தரவுகள் பலரும் பார்த்துப் பயனுறுவது என்ற முறையில் அதனை மறைக்க முயல வேண்டாம். அனைத்துத் தானியங்கிகளுக்கும் தானியங்கி அணுக்கம் கொடுப்பதென்ற உங்கல் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.--Kanags \உரையாடுக 08:24, 20 பெப்ரவரி 2013 (UTC)
- சிறீதரன், //பொதுவாகப் பயனர்களுக்குத் தேவையற்ற தொகுப்புகளை செய்யும் தானியங்கிகளுக்கே தானியங்கி அணுக்கம் கொடுக்கப்படுகிறது என்பதே எனது புரிதல். // என்பது சரியான அணுகுமுறை அன்று. பயனில்லாத எந்தத் தொகுப்பையும் அது தானியங்கி செய்தாலும் சரி பங்களிப்பாளர் செய்தாலும் சரி ஏற்பதில்லை. தமிழ் விக்சனரியில் இலட்சக்கணக்கான சொற்கள் தானியங்கி மூலம் ஏற்றப்பட்டது. தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்கத்தில் நூற்றக்கணக்கான கட்டுரைகள் தானியங்கி மூலம் ஏற்றப்பட்டது. இவை யாவும் பயனுள்ள தொகுப்புகளே. ஒரே மாதிரியான செயற்பாட்டை தானியங்கி மூலம் செய்ய முடியுமானால், அதனைத் தானியங்கி மூலம் செய்வது மனித உழைப்பை மிச்சப்படுத்தும் என்ற நோக்கிலேயே தானியங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்துத் தொகுப்புகளும் பயனுடையவையே. ஆனால், உலக விக்கிப்பீடியாக்கள் முழுவதிலுமே தரவு நோக்கில் தானியங்கித் தொகுப்புகளும் பங்களிப்பாளர் தொகுப்புகளும் வேறுபடுத்தியே பார்க்கப்படுகிறது. ஒரு தானியங்கி தொடர்ந்து பயனுள்ள தொகுப்புகளைத் தந்தால் அதற்குத் தானியங்கி அணுக்கம் வழங்குவது முறை. அத்தொகுப்பை எப்படிப் பார்வைக்குத் தருகிறோம் என்பது வேறு பிரச்சினை. அண்மைய மாற்றங்களில் காண்பது மட்டும் ஒரே வழி அன்று. --இரவி (பேச்சு) 08:37, 20 பெப்ரவரி 2013 (UTC)
- அவ்வாறென்றால், நீங்கள் தானியங்கியையும் தானியங்கி அணுக்கத்தையும் ஒன்றெனப் பார்க்கிறீர்கள். நான் அப்படிப் பார்க்கவில்லை. தானியங்கி வேறு. தானியங்கி அணுக்கம் வேறு எனப் பார்க்கிறேன். ஒரு தானியங்கி செய்யும் மாற்றம் பொதுவாகப் பயனர்களுக்குப் பயன் தராது எனக் கருதும் பட்சத்தில் அதற்குத் தானியங்கி அணுக்கம் தரலாம். அதே வேளையில், தானியங்கி செய்யும் மாற்றம் கவனிக்கப்பட வேண்டும், அல்லது கட்டாயம் தெரிய வேண்டும் எனக் கருதினால் அதற்கும் அணுக்கம் தரத் தேவையில்லை. மேலும் இது குறித்து நான் வாதாட விரும்பவில்லை. எனது புரிதலும் தவறென்றால் நான் ஏற்றுக் கொள்கிறேன். சுந்தர் அல்லது மயூரநாதன் தெளிவான பதிலைத் தருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.--Kanags \உரையாடுக 08:46, 20 பெப்ரவரி 2013 (UTC)
- தானியங்கியையும் அணுக்கத்தையும் தனித்தனியாகப் பார்க்கும் உங்கள் நோக்கு புரிகிறது. ஆனால், என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விக்சனரியில் ஏற்றிய இலட்சக்கணக்கான சொற்களும் விக்கிப்பீடியாவில் ஏற்றிய நூற்றக்கணக்கான கட்டுரைகளும் பயனுடையவையே. இவற்றைப் பயனர்கள் பார்க்கத் தேவையில்லை என்பதற்காக தானியங்கி அணுக்கம் கொடுத்து மறைத்து வைக்கவில்லை. தானியங்கி செய்யும் பணியை அவ்வாறே குறிக்க வேண்டும் என்பது உலக விக்கிகள் நடைமுறை. இந்தக் குறிப்பிட்ட தரவுப் பக்கம் சிலருக்குப் பயனுடையதாக இருப்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அனைத்துப் பயனர்களும் ஒவ்வொரு நாளும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒன்றாக நான் கருதவில்லை. அப்படியே கருதினாலும், அதற்காக தானியங்கி அணுக்கத்தை மீளப்பெற வேண்டும் என்பதை ஏற்க இயலாது. அணுக்கத்தை மீளப் பெறாமலேயே தொகுப்புகளைப் பயனர்களின் காட்சிக்கு வைக்க முடியும். நானும் என்னுடைய கருத்துகளை இத்துடன் நிறைவு செய்து கொள்கிறேன். மற்ற பயனர்களும் தங்கள் கருத்தை முன்வைத்தால் நன்று. --இரவி (பேச்சு) 09:34, 20 பெப்ரவரி 2013 (UTC)
- அவ்வாறென்றால், நீங்கள் தானியங்கியையும் தானியங்கி அணுக்கத்தையும் ஒன்றெனப் பார்க்கிறீர்கள். நான் அப்படிப் பார்க்கவில்லை. தானியங்கி வேறு. தானியங்கி அணுக்கம் வேறு எனப் பார்க்கிறேன். ஒரு தானியங்கி செய்யும் மாற்றம் பொதுவாகப் பயனர்களுக்குப் பயன் தராது எனக் கருதும் பட்சத்தில் அதற்குத் தானியங்கி அணுக்கம் தரலாம். அதே வேளையில், தானியங்கி செய்யும் மாற்றம் கவனிக்கப்பட வேண்டும், அல்லது கட்டாயம் தெரிய வேண்டும் எனக் கருதினால் அதற்கும் அணுக்கம் தரத் தேவையில்லை. மேலும் இது குறித்து நான் வாதாட விரும்பவில்லை. எனது புரிதலும் தவறென்றால் நான் ஏற்றுக் கொள்கிறேன். சுந்தர் அல்லது மயூரநாதன் தெளிவான பதிலைத் தருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.--Kanags \உரையாடுக 08:46, 20 பெப்ரவரி 2013 (UTC)
- சிறீதரன், //பொதுவாகப் பயனர்களுக்குத் தேவையற்ற தொகுப்புகளை செய்யும் தானியங்கிகளுக்கே தானியங்கி அணுக்கம் கொடுக்கப்படுகிறது என்பதே எனது புரிதல். // என்பது சரியான அணுகுமுறை அன்று. பயனில்லாத எந்தத் தொகுப்பையும் அது தானியங்கி செய்தாலும் சரி பங்களிப்பாளர் செய்தாலும் சரி ஏற்பதில்லை. தமிழ் விக்சனரியில் இலட்சக்கணக்கான சொற்கள் தானியங்கி மூலம் ஏற்றப்பட்டது. தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்கத்தில் நூற்றக்கணக்கான கட்டுரைகள் தானியங்கி மூலம் ஏற்றப்பட்டது. இவை யாவும் பயனுள்ள தொகுப்புகளே. ஒரே மாதிரியான செயற்பாட்டை தானியங்கி மூலம் செய்ய முடியுமானால், அதனைத் தானியங்கி மூலம் செய்வது மனித உழைப்பை மிச்சப்படுத்தும் என்ற நோக்கிலேயே தானியங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்துத் தொகுப்புகளும் பயனுடையவையே. ஆனால், உலக விக்கிப்பீடியாக்கள் முழுவதிலுமே தரவு நோக்கில் தானியங்கித் தொகுப்புகளும் பங்களிப்பாளர் தொகுப்புகளும் வேறுபடுத்தியே பார்க்கப்படுகிறது. ஒரு தானியங்கி தொடர்ந்து பயனுள்ள தொகுப்புகளைத் தந்தால் அதற்குத் தானியங்கி அணுக்கம் வழங்குவது முறை. அத்தொகுப்பை எப்படிப் பார்வைக்குத் தருகிறோம் என்பது வேறு பிரச்சினை. அண்மைய மாற்றங்களில் காண்பது மட்டும் ஒரே வழி அன்று. --இரவி (பேச்சு) 08:37, 20 பெப்ரவரி 2013 (UTC)
- அதாவது உலக விக்கி நடைமுறை: தானியங்கிகள் செய்யும் மாற்றங்கள் அனைத்தையும் அண்மைய மாற்றங்களில் தெரியாது மறைத்து வைக்க வேண்டும். விரும்பியவர்கள் அந்த மாற்றங்களப் பார்க்கலாம். என்று நீங்கள் சொல்கிறீர்கள். அவ்வாறான உலக நடைமுறை இருப்பது எனக்கு இப்போது தான் தெரியும். தெரியப்படுத்தியமைக்கு நன்றி. //அணுக்கத்தை மீளப் பெறாமலேயே தொகுப்புகளைப் பயனர்களின் காட்சிக்கு வைக்க முடியும்.// எவ்வாறு எனக் கூறுங்கள்?--Kanags \உரையாடுக 09:44, 20 பெப்ரவரி 2013 (UTC)
- அண்மைய மாற்றங்களில் தானியங்கிகள் செய்யும் தொகுப்புகளை மறைத்து வைத்திருப்பது அனைத்து விக்கிகளிலும் இயல்பு நிலை. Firefox private browsing அல்லது Google chrome incognito modeல் சென்று பார்த்தால் இதை உறுதிப்படுத்தலாம். தானியக்கமாகச் செய்யும் பணியைத் தானியக்கத் தொகுப்பு என்று குறிப்பதும் அதற்காக தானியங்கி அணுக்கம் வழங்குவதும் உலக நடைமுறை. http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm ல் Edit activity levels of registered users and bots per group of namespaces , 50 bots, ordered by number of contributions ஆகிய தரவுகள் தானியங்கித் தொகுப்புகளை வரையறுக்க வேண்டிய அவசியத்தைச் சுட்டுகிறது. தானியங்கி செய்யும் தொகுப்பைப் பங்களிப்பாளர் செய்யும் தொகுப்பாக கருத இடமளிப்பது புள்ளிவிவரப் பிழை. //அணுக்கத்தை மீளப் பெறாமலேயே தொகுப்புகளைப் பயனர்களின் காட்சிக்கு வைக்க முடியும்.// தற்போது அண்மைய மாற்றங்கள் பக்கத்தின் தலைப்பில் பெப்ரவரி 2013 புள்ளிவிவரத்துக்கான இணைப்பு உள்ளது. இது ஒரு வழி. ஒவ்வொரு நாளும் இத்தானியங்கி செய்யும் தொகுப்பு சரியா தவறா என்று பார்த்து திருத்த வேண்டிய தேவையில்லை. எனவே, ஒவ்வொரு நாளும் நிகழும் மாற்றத்தை அண்மைய மாற்ற வரிசையில் காட்டாமல் அப்பக்கத்தைச் சுட்டும் இணைப்பு மட்டுமே போதுமானது. இதே போல் வேறு ஏதாவது தானியங்கியின் பங்களிப்பைப் பார்ப்பதற்கான தேவை இருந்தால் சுட்டுங்கள். அதற்கான மாற்று வழியைச் சிந்திப்போம்--இரவி (பேச்சு) 10:31, 20 பெப்ரவரி 2013 (UTC)
Bot/தானியங்கி அனுமதி - பயனர்:Shribot
தொகு- BotName/தானியங்கியின் பெயர்:Shribot
- Purpose/நோக்கம்:கட்டுரைகளில் சொல் மற்றும் இலக்கணப் பிழைகளைச் சரிசெய்தல், வார்ப்புரு இணைத்தல் & மாற்றம், துப்புரவு பணியில் ஈடுபடல், பகுப்பு இணைத்தல் & மாற்றம், சிறு உரைதிருத்தங்கள் மற்றும் பல.
- Owner/உரிமையாளர்:ஸ்ரீகர்சன்
- Decision/முடிவு:அனுமதி வழங்கப்படவில்லை
உரையாடல்
தொகுஸ்ரீகர்சன், அண்மையில் நீங்கள் செய்த சில துப்புரவப் பணிகளுக்கு மாற்றுக் கருத்துகள் எழுந்தன. எடுத்துக்காட்டுக்கு, நூற்றுக் கணக்கான கட்டுரைகளில் வார்ப்புருப் பெயர்களைத் தமிழுக்கு மாற்றுதல். இவற்றைத் தானியங்கி கொண்டு செய்தாலும் மாற்றுக் கருத்துகள் வரலாம். இந்தச் சிக்கலைத் தீர்க்க, புதிதாக நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு துப்புரவுப் பணிக்கும் ஒரு முன்னறிவிப்பினை இங்கு தந்து, மற்ற பயனர்களின் கருத்துக்கு ஒரு வாரம் பொறுத்திருந்து நிறைவேற்றினால் உதவியாக இருக்கும். எடுத்துக்காட்டுக்கு, இலக்கணப் பிழைகளைச் சரி செய்வது என்றால் என்னென்ன இலக்கணப் பிழைகள் என்று முன்கூட்டியே பட்டியல் இடுங்கள். பிறகு, அனைத்தையும் சேர்த்து ஒரு கட்டுரைக்கு ஒரே தொகுப்பாக செயற்படுத்துங்கள். ஏனெனில், எத்தனை தானியங்கித் தொகுப்புகள் ஒரு விக்கிப்பீடியா திட்டத்தில் நடைபெறுகின்றன என்று கண்காணித்து தர அளவீடுகளில் அதனையும் ஒன்றாக கொள்கிறார்கள். எனவே, தேவையின்றி முன்னும் பின்னுமாகவும் மாற்றி மாற்றியும் நிறைய தொகுப்புகளாகச் செய்வதைத் தவிர்ப்பது நன்று. இந்த நடைமுறையை ஏற்பதாக உறுதி அளிக்க இயலும் எனில், தானியங்கி அணுக்கம் வழங்கலாம். நடைமுறையில் மாற்றம், மேம்பாடு தேவை என்றாலும் ஏதேனும் ஐயம் என்றாலும் தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 14:34, 24 சூன் 2014 (UTC)
- @இரவி அவர்களே! ஆம் நிச்சயமாக ஆங்கில விக்கிப்பீடியாவிலும் இவ்வழமை உள்ளதென நினைக்கின்றேன். இந்த நடைமுறையை ஏற்பதாக உறுதி அளிக்கின்றேன். பேச்சுப்பக்கத்தில் விக்கித்திட்ட வார்ப்புரு இடுதல் போன்ற சமயங்களில் முன் அனுமதிபெற வேண்டுமா?--ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:05, 25 சூன் 2014 (UTC)
- பொதுவாக, எல்லா பணிகளையும் ஒரு வாரம் முன்பு அறிவித்து விட்டுச் செய்வது நன்று. திட்டங்கள் தொடர்பான பணிகளுக்கு அந்தந்த திட்டங்களின் பேச்சுப் பக்கத்திலும் தெரியப்படுத்தலாம். தானியங்கி அணுக்கம் பெற்ற பிறகு தாங்கள் செய்யப் போகும் முதல் சில பணிகளைத் தெளிவாக தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் தற்போது இங்கு பட்டியலிட்டுக் காட்ட முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 13:35, 25 சூன் 2014 (UTC)
Bot/தானியங்கி அனுமதி - பயனர்:Info-farmer
தொகு- BotName/தானியங்கியின் பெயர்: பயனர்:Info-farmerBot
- Purpose/நோக்கம்:இங்கு இருவார முன்னறிவுப்பு செய்து, துப்புரவு , சிறு உரைதிருத்தங்கள், பகுப்பு சேர்த்தல் , புதிய கட்டுரைகளை உருவாக்குதல்
- Owner/உரிமையாளர்:பயனர்:Info-farmer
- Example editts/மாதிரிப்பதிவுகள்:சிவப்பு இணைப்பு நீக்கல்கள்; ஒரு மாதிரித் தொகுப்பு
- Decision/முடிவு: 15 மார்ச்சு 2017 வரை
- கருத்து:
எந்தெந்த சிகப்பு இணைப்புகளைத் தானியக்கமாக நீக்குவது என்று எப்படி வரையறுக்கிறீர்கள்? இத்தானியங்கி ஒரு பகுப்பில் உள்ள ஒரே மாதிரியான/குறிப்பிட்ட சிகப்பு இணைப்புகளை மட்டும் நீக்குமா? வெவ்வேறு வகையான நீக்கங்களுடன் இன்னும் சில மாதிரித் தொகுப்புகளைச் செய்து காட்ட வேண்டுகிறேன். எல்லா சிகப்பு இணைப்புகளும் நீக்கப்பட வேண்டியன அல்ல. இவை புதிய கட்டுரைகள் எழுதுவதைத் தூண்டவும் உதவுகின்றன. எனவே, இத்தானியங்கியின் பணி குறித்து அனைவரின் கருத்துகளையும் வரவேற்கிறேன். --இரவி (பேச்சு) 05:29, 10 திசம்பர் 2016 (UTC)
- பயனர்_பேச்சு:AswnBot#மீண்டும் நினைவூட்டல் என்ற கோரிக்கையைக் காணவும். அதன்படி நிறைவேற்றியது. அடுத்து இந்த அறிவிப்புப்படி செய்ய உள்ளேன்.(மாதிரிப் பதிவு) துப்புரவு என்பது வேறுபடுவதால், குறிப்பிட்டு சொல்வதென்பது தற்போது இயலாது. ஆனால், முன்அறிவிப்பு இன்றி, எப்பதிவுகளையும், நான் இயக்கும் இத்தானியங்கி செய்யாது என உறுதிகூறுகிறேன். மேலும், இத்தானியங்கி இணைய இணைப்பு, மின்தடை போன்ற காரணிகளால், பாதிப்பு அடையாமல் செயற்படும் திறன் உள்ளதால், விருப்பப்படுவோருக்கு உரிய ஒப்புதலோடு பயிற்சியும் அளிக்கும் திட்டத்தின் முன்னோடி ஆகும். பொதுவகத்தின் இத்தானியங்கி போல, பிறரின் வேண்டுகோளையும், அறிவிப்போடு நிறைவேற்றும்.--த♥உழவன் (உரை) 00:54, 11 திசம்பர் 2016 (UTC)
- @Mayooranathan, Natkeeran, Ravidreams, and Sundar: மேற்கூறிய எனது தானியங்கி விண்ணப்பத்தை, ஏற்கக் கோருகிறேன்.--த♥உழவன் (உரை) 01:13, 17 திசம்பர் 2016 (UTC)
- ஆதரவு--Kanags \உரையாடுக 01:32, 17 திசம்பர் 2016 (UTC)
- ஆதரவு--நந்தகுமார் (பேச்சு) 03:22, 17 திசம்பர் 2016 (UTC)
- ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 15:39, 17 திசம்பர் 2016 (UTC)
பதிப்புரிமை மீறல் போன்ற பராமரிப்பு வார்ப்புருக்களைத் தெளிவான ஏற்பு இன்றி தானியக்கமாக நீக்குதல் வேண்டாம். மற்றபடி, உங்கள் விளக்கம் ஏற்புடையது. 3 மாத காலத்துக்குத் தானியங்கி அணுக்கம் அளிக்கிறேன். தானியங்கியின் செயற்பாடுகளுக்கு ஏற்ப நீட்டிக்கலாம். நன்றி. --இரவி (பேச்சு) 18:08, 17 திசம்பர் 2016 (UTC)
- பொதுவான விதிகள், குறிப்பான வளர்ச்சியைத் தடைசெய்கின்றன. எடுத்துக்காட்டாக, இங்கு தமிழகஅரசின் ஆவணத்தைக்காட்டி, உருவாக்கப்பட்ட கட்டுரைகளில், வார்ப்புரு நீக்குதல் பற்றி குறிப்பிட்டுள்ளேன். ஒரு தமிழகஅரசிடம் பலரின், பலநாள் முயற்சிக்குப் பிறகு, உரிய ஆவணத்தைப் பெற்று, வெளியிட்டப் பிறகு, இன்னும் தெளிவான ஏற்பு என்றால் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை. அவ்வார்ப்புருவை நீக்க, என்ன ஏற்பை, யாரிடம் பெற வேண்டும்.? ஏனெனில், பல கட்டுரைகள் தமிழக பாடத்திட்டங்களைக் கொண்டு உருவாக்க எண்ணம் கொண்டு உள்ளேன்.--த♥உழவன் (உரை) 00:44, 18 திசம்பர் 2016 (UTC)
- விக்கி வழிகாட்லைப் பின்பற்றவும். குறித்த கட்டுரை கட்டற்ற ஆவணத்தில் இருந்து பெறப்பட்டது என்று எவ்வாறு மற்றவர்கள் தெரிந்து கொள்வது? பார்க்க: பேச்சு:உருளைக் கிழங்கு குடும்பம். பதிப்புரிமை மீறியிருக்கக்கூடிய கட்டுரைகள் பகுப்பில் தெளிவான பதிப்புரிமை மீறல் கட்டுரைகளும் உள்ளதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். --AntanO 02:13, 18 திசம்பர் 2016 (UTC)
- en:Wikipedia:Copying text from other sources--AntanO 02:16, 18 திசம்பர் 2016 (UTC)
- அவ்வார்ப்புரு இடுவாதல், பகுப்புத்தோன்றுகிறது. அப்பகுப்பில் இருந்து நீக்க என்ன, நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பதை, பகுப்பு பேச்சு:பதிப்புரிமை மீறியிருக்கக்கூடிய கட்டுரைகள் பக்கத்தில் தொடரலாமென்று எண்ணுகிறேன். வார்ப்புரு இட்டவருக்கே, அது குறித்து அதிகம் தெரியும். அவரே நீக்கினால், உரையாடல் நீளாது என்ற நோக்கில், கடந்த அக்டோபர் மாதம் நீக்குதல் பற்றி தொடங்கினேன். தமிழ் பங்களிப்பாளர்களுக்கு, தமிழ் மாதிரிகளைக் கொண்டு நடைமுறைகளை உருவாக்குவோம். வணக்கம்--த♥உழவன் (உரை) 04:43, 18 திசம்பர் 2016 (UTC)
- en:Wikipedia:Copying text from other sources--AntanO 02:16, 18 திசம்பர் 2016 (UTC)
@Info-farmer: பதிப்புரிமை மீறியிருக்கக்கூடிய கட்டுரைகள் என்பது ஒரு பொதுவான பகுப்பு. இதில் பல்வேறு காரணங்களை முன்னிட்டு கட்டுரைகள் இடம்பெறலாம். எனவே, பொதுவாக, மாற்றுக் கருத்து எழக்கூடிய பராமரிப்புப் பகுப்புகளைத் தானியக்கமாக நீக்குவதைத் தவிர்க்கலாம். அப்படி மாந்த முறையில் தொகுப்புகள் மேற்கொள்ள இயலாத அளவுக்கு நூற்றுக் கணக்கான கட்டுரைகள் இருக்கும் பகுப்பு எனில், இணக்க முடிவை முறையாக நிறுவி தானியங்கியைப் பயன்படுத்தலாம். தமிழக அரசு உரிம அறிவிப்பு குறித்த கருத்தை இங்கு பதிந்துள்ளேன்.--இரவி (பேச்சு) 11:05, 19 திசம்பர் 2016 (UTC)
- அறிவிப்பு இட்டு செய்வதால், இனி இதுபோன்ற சூழல் அமையாதென்றே எண்ணுகிறேன்.--த♥உழவன் (உரை) 12:09, 19 திசம்பர் 2016 (UTC)
கால நீட்டிப்பு வேண்டுகோள்
தொகு@Mayooranathan, Natkeeran, Ravidreams, and Sundar: இம்மாதம் 15 ந்தேதியோடு அணுக்க அனுமதி முடிவடைவதால், நீட்டிக்க வேண்டுகிறேன். அடுத்து செய்ய விரும்புவது பகுப்பு தலைப்புகளில் உள்ள இலக்கணப்பிழையை நீக்க உள்ளேன்.எடுத்துக்காட்டாக, பல தமிழகப்பகுப்புகளில் உரிச்சொல் அற்று ஆங்கில பகுப்புபோல அப்படியே பெயர்ச்சொல்லாக உள்ளன.. காண்க: #பகுப்பு:தமிழ்நாட்டுப் புவியியல் என்பதன் பல துணைப்பகுப்புகள் சீர்மையாக உள்ளன. அதுபோலவே, பகுப்புப்பெயர்களில் உள்ள தமிழ்நாடு(பெயர்ச்சொல்) --> தமிழ்நாட்டு என உரிச்சொல்லாக மாற்றப்பட உள்ளது. மேலும், பகுப்பு:Pages with reference errors என்பதில் 4 அல்லது 5 விதமான வழுக்கள் உள்ளன. அவைகளை துணைப்பகுப்புகளில் முதலில் அடக்க வேண்டும். பிறகு 10 நாட்கள் ஆலமரத்தடி அறிவிப்புப் பகுதியில்,முன்னறிவிப்பு இட்டு, அவ்வழுக்களைக் களைய உள்ளேன்.--த♥உழவன் (உரை) 02:13, 12 மார்ச் 2017 (UTC)

Bot/தானியங்கி அனுமதி - ShriheeranBOT
தொகு- BotName/தானியங்கியின் பெயர்: பயனர்:ShriheeranBOT
- Purpose/நோக்கம்:சிறு உரைதிருத்தங்கள் / வார்ப்புரு சேர்த்தல் & மாற்றம் / பகுப்பு சேர்த்தல் & மாற்றம்
- Owner/உரிமையாளர்:Shriheeran
- Decision/முடிவு: ஆயிற்று. @Kanags, AntanO, and Booradleyp1: இக்கணக்கின் தொகுப்புகளைக் கவனித்து வழிகாட்ட வேண்டுகிறேன். @Shriheeran: நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான பக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய தானியங்கித் தொகுப்புகள் பற்றி இங்கு அறிவித்து ஓரிரு நாள் பொறுத்து பயனர் கருத்துக்கு ஏற்ப தொடர வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 02:49, 30 ஏப்ரல் 2017 (UTC)
- கருத்து:மேற்கண்ட பணிகள் அனைத்துக்கும் எடுத்துக்காட்டுக்குச் சில தொகுப்புகளைச் செய்து காட்ட வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 05:31, 10 திசம்பர் 2016 (UTC)
- @Ravidreams: அவர்களே, இங்கு அதற்கான ஒரு சில இணைப்புக்கள்:
- பேச்சுப்பக்கங்களில் நான் செய்த தொகுப்புக்களைப் பார்க்க (குறிப்பாக இம்மாதம்)
- நான் பொதுவாக் செய்த தொகுப்புகள்
- பேச்சுப்பக்கங்களில் எனது தானியங்கிக் கணக்கு செய்த தொகுப்புக்களைப் பார்க்க
- இரவி, பகுப்புக்கள் சீர்திருத்தம் பணியில் என்னேஅலும் ஈடுபட முடியும், விக்கிதானுலவியைப் பயன்படுத்தி மேற்கொள்ளலாம். அணுக்கம் வழங்கின் பேருதவியாக அமையும். அத்துடனிலங்கை தொடர்பான, திரைப்படங்கள் தொடர்பான பல கட்டுரைகளை உருவாக்கவும் முடியும்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:19, 25 ஏப்ரல் 2017 (UTC)
மன்னிக்கவும், சிறீகீரன். இந்த விண்ணப்பம் நிலுவையில் இருப்பதைக் கவனிக்கத் தவறி விட்டேன். நீண்ட நாள் காத்திருக்கும் வேண்டுகோள்களுக்கு நினைவூட்டல் அனுப்பத் தயங்க வேண்டாம். சில சோதனைத் தொகுப்புகளைச் செய்ய முடியுமா? உங்கள் கணக்குக்கு ஏற்கனவே தானியங்கி அணுக்கம் உள்ளதாக காட்டுகிறது. ஆனால், பயனர் உரிமைப் பதிகையில் தொடர்புடைய இடுகையைக் காண இயலவில்லை. மற்ற அதிகாரிகள் சரி பார்க்க வேண்டுகிறேன் .@Mayooranathan, Sundar, and Natkeeran:--இரவி (பேச்சு) 18:21, 26 ஏப்ரல் 2017 (UTC)
- இங்கு பாருங்கள் https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3ALog&type=rights&user=&page=ShriheeranBOT&year=&month=-1&tagfilter=&subtype= , என் தானியங்கிக் கணக்கிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதோடு நான் செய்த சோதனைத் தொகுப்புகள் இதோ--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:59, 27 ஏப்ரல் 2017 (UTC)
- இந்தத் தானியங்கியை 3 நாட்களுக்குத் தடை செய்துள்ளேன். அத்துடன் இந்தத் தானியங்கியின் அணுக்கத்தைத் தற்காலிகமாக முடுக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன். பல தொகுப்புகள் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. ஏராளமான தொகுப்புகளுக்கு வார்ப்புரு தவறுதலாக இணைக்கப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டுள்ளது. ஒரு சில கட்டுரைப் பகுதிகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன. தானியங்கியை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தியும் மீண்டும் இயக்கியுள்ளார். இவரது ஆர்வத்தைப் பாராட்டினாலும், ஏனையோருக்கு பளு அதிகமாகிறது. விக்கித்திட்டம் 15 தொடர்பான அறிவிப்புகளை தானியங்கி அணுக்கம் இல்லாமலேயே செய்யமுடியும். @Ravidreams:--Kanags \உரையாடுக 10:14, 1 மே 2017 (UTC)
- @Kanags, Shriheeran, and Balurbala:, சிறீகீரன், தங்கள் தானியங்கி இயக்கம் குறித்து மற்ற பயனர்களின் கருத்துகளக் கவனித்துச் செயற்பட வேண்டுகிறேன். தானியங்கி செயற்படும் வேகத்தை மட்டுப்படுத்துவதன் மூலம் தானியங்கித் தொகுப்புகளைச் சரி பார்த்து தொடர்ந்து இயக்க முடியும். ஒரு நிமிடத்துக்கு ஒரு சில தொகுப்புகள் போதுமானது. கால அளவு 0 என்று தந்தால் மிகவும் வேகமாக இயங்கும் என்று நினைக்கிறேன். புதிய பணிகளைச் செய்து பார்க்கும் போது பல கட்டச் சோதனைகளைச் செயற்படுத்திப் பாருங்கள். தொடர்ந்து இயக்கும் முன் பயனர்களுக்கு அறிவிப்புகளைத் தாருங்கள். ஏற்கனவே நன்கு தெரிந்த, ஒப்புதல் பெற்ற பணிகளுக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படுங்கள். எழுத்துப் பிழை திருத்தம் போன்ற பணிகளில் பல வகையான பிழைகளையும் ஒரே தொகுப்பில் சீராக்க முடியுமா என்று பார்க்கலாம். இதற்கு AWB அல்லாத வேறு pythonbotகளும் உதவக் கூடும். தங்கள் தானியங்கியின் செயற்பாடு குறித்து மீண்டும் புகார்கள் எழும் நிலையில் தானியங்கி அணுக்கத்தை மீளப் பெற வேண்டி இருக்கலாம். நன்றி. --இரவி (பேச்சு) 05:31, 2 மே 2017 (UTC)
Bot/தானியங்கி அனுமதி - Hastebot
தொகு- தானியங்கியின் பெயர் : Hastebot
- இயக்குனர் : மாதவன்
- நிரலாக்க மொழி(கள்) : பைத்தான் (பைவிக்கிதானியங்கி, pywikibot, PAWS), விக்கிதானுலாவி
- நோக்கச் சுருக்கம் : பகுப்புக்கள் மாற்றல், சேர்த்தல் மற்றும் நீக்குதல், வார்ப்புருக்கள் சேர்த்தல், மாற்றல் மற்றும் நீக்கல், கட்டுரைகளில் சிறு திருத்தங்கள், பேச்சுப் பக்கங்களில் தகவல்களை இடல் மற்றும் பல.
- முடிவு: ஆயிற்று--இரவி (பேச்சு) 10:28, 17 சனவரி 2017 (UTC)
Bot/தானியங்கி அனுமதி - AntonBot
தொகு- BotName/தானியங்கியின் பெயர்: பயனர்:AntonBot
- Purpose/நோக்கம்: விக்கிதானுலாவி மூலம் வார்ப்புருக்கள் இடல் (எகா), பகுப்பு மாற்றம் (எகா), விக்கி உள்ளிணைப்புக்களை சரி செய்தல் (எகா) போன்ற விக்கிதானுலவியினால் செய்யக்கூடிய சிறுதொகுப்புக்களைச் செய்தல் (எகா: 18 பெப்ரவரி 2017 அன்று செய்யப்பட்ட 1000 இற்கு மேற்பட்ட தொகுப்புக்கள் மற்றும் இத்தொகுப்புக்கள். தேவைப்படுமிடத்து கட்டுரைகள் உருவாக்குதல். எகா: xxx பிரதேசச் செயலாளர் பிரிவு கட்டுரைகள்
- Owner/உரிமையாளர்: பயனர்:AntanO
- Decision/முடிவு: ஆயிற்று--இரவி (பேச்சு) 03:46, 19 பெப்ரவரி 2017 (UTC)
Bot/தானியங்கி அனுமதி - KanagsBOT
தொகு- BotName/தானியங்கியின் பெயர்: பயனர்:KanagsBOT
- Purpose/நோக்கம்: விக்கிதானுலாவி உதவியுடன் பகுப்பு மாற்றம் இத்தானியங்கியின் முக்கிய நோக்கமாக இருக்கும். விக்கியில் பல பகுப்புகள் சீராக ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது.
- Owner/உரிமையாளர்: பயனர்:Kanags
- Decision/முடிவு: ஆயிற்று--இரவி (பேச்சு) 09:14, 25 ஏப்ரல் 2017 (UTC)
Bot/தானியங்கி அனுமதி TshrinivasanBOT
தொகு- BotName/தானியங்கியின் பெயர்: பயனர்:TshrinivasanBOT
- Purpose/நோக்கம்: ஆசிரியர்கள் உருவாக்கும் கட்டுரைகளின் அறிக்கை தயாரித்தல்
- Owner/உரிமையாளர்: பயனர்:Tshrinivasan
- Decision/முடிவு: ஆயிற்று--இரவி (பேச்சு) 14:55, 6 சூலை 2017 (UTC)
Bot/தானியங்கி அனுமதி - BalajijagadeshBot
தொகு- BotName/தானியங்கியின் பெயர்: பயனர்:BalajijagadeshBot
- Purpose/நோக்கம்: விக்கிதானுலாவி மற்றும் பைத்தான் (பைவிக்கிதானியங்கி, pywikibot, PAWS) உதவியுடன் பராமரிப்பு வார்ப்புருகள் இடுவது, நீக்குவது. இடத்தைப்பற்றி கட்டுரைகளில் இடக் குறி இல்லையென்றால் வார்ப்புரு:Coord missing இடுவது போன்ற பணிகள்.
- Owner/உரிமையாளர்: பயனர்:Balajijagadesh
- கருத்து:@Balajijagadesh: சில சோதனைத் தொகுப்புகளைச் செய்து காட்ட வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 22:16, 22 சனவரி 2019 (UTC)
- @Ravidreams: இங்கு செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். மேலும் இது போல சோதனைக்காக 50 மாற்றங்களை இக்கணக்கைக் கொண்டு செய்துள்ளேன். இது போன்ற பராமரிப்பு பணிகளுக்காக தானியங்கி கணக்கு தேவை. நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 03:11, 27 மார்ச் 2019 (UTC)
- @Balajijagadesh: கோயில்கள் கட்டுரைகள் பல்லாயிரக்கணக்கானவை உள்ளன. அனைத்துக்கும் சேர்க்கப்போகிறீர்களா? இது தேவை தானா எனப் பார்க்கவும். ஊர்கள், நகரங்கள் கட்டுரைகள் பலவற்றில் ஆள்கூறுகள் சேர்க்கப்படவில்லை. அவற்றுக்கு சேர்க்கலாம்.--Kanags (பேச்சு) 06:21, 27 மார்ச் 2019 (UTC)
- @Kanags: தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. பல்லாயிரமாக இருந்தாலும் சேர்த்தல் நல்லது என்று கருதுகிறேன். இதனால் இப்பணிகள் உள்ளன என்று தெரியவரும். ஆங்கில விக்கிப்பீடியாவில் இப்பகுப்பில் ஒரு லட்சத்தி இருபதாயிரத்திற்கும் அதிகமான கட்டுரைகள் coor இல்லாமல் உள்ளன. மேலும் இந்த பகுப்பு மறைந்துள்ளதால் சாதாரண பயனர்களுக்கு கட்டுரைகளை படிக்கும் பொழுது எந்த இடரும் வரப்போவதில்லை. மேலும் இப்படியாக செய்துவைத்தால் மேம்பாடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். மேலும் தாங்கள் கூறியது போல் ஊர்கள் நகரங்கள் அனைத்திற்கும் விக்கிதரவிலிருந்து பதிவிறக்க முடியுமா என்று பார்க்கிறேன். த.இ.க கோயில்கள் ஆங்கிலத்தில் இல்லாததால் விக்கிதரவிலும் இல்லை. நகரங்கள் கட்டுரைகளுக்கு பெரும்பாலும் விக்கிதரவில் இருக்க வாய்ப்பிருக்கிறது. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:33, 27 மார்ச் 2019 (UTC)
- @Balajijagadesh: வேறு என்ன வகையான பராமரிப்புப் பணிகளைச் செய்ய உள்ளீர்கள் என்பதற்குச் சில சோதனைப் பகுப்புகளைச் செய்து காட்டவும். உடனடியாக கவனித்து coor சேர்ப்பதற்கான திட்டம் இல்லாமல் ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் பராமரிப்பு வார்ப்புரு இட வேண்டுமா என்று கேள்வி எனக்குள்ளும் எழுகிறது. ஆங்கில விக்கிப்பீடியாவில் செய்கிறார்கள் என்றால் அங்கு இவ்வாறான பணிகளை மட்டும் கவனித்துச் செய்ய ஆட்கள் உண்டு.--இரவி (பேச்சு) 19:30, 27 மார்ச் 2019 (UTC)
- @Ravidreams: //வேறு என்ன வகையான பராமரிப்புப் பணிகளைச் செய்ய உள்ளீர்கள் என்பதற்குச் சில சோதனைப் பகுப்புகளைச் செய்து காட்டவும்.// இது போன்ற பராமரிப்புகளை தானியக்கமாக எளிதாக செய்யலாம். மேலும் மேலும் இங்குள்ள கிட்டதட்ட 120 மாற்றங்களைப் பார்த்தால் நான் எது மாதிரியான தானியக்கங்களை செய்ய எண்ணியுள்ளேன் என்பது புரியும். தேவையில்லாத இடைவெளி, பகுப்புகளை பக்கத்தின் கடைசியில் சேர்ப்பது, தவறான html tags, தேவியில்லாத விக்கயிணைப்பு விளக்கம் போன்றவற்ற சரிசெய்வது. //உடனடியாக கவனித்து coor சேர்ப்பதற்கான திட்டம் இல்லாமல் ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் பராமரிப்பு வார்ப்புரு இட வேண்டுமா என்று கேள்வி எனக்குள்ளும் எழுகிறது.// தங்கள் கேள்வியும் சரிதான். சில பத்து கோயில்களுக்கான ஆயக்குறியை நான் நேரே சென்று பார்த்து குறித்து சேர்த்துள்ளேன். இந்த கோயில்கள் ஆங்கிலத்தில் இல்லை. விக்கி தரவிலும் ஆயக்குறிகள் இல்லை. இது போல சேர்த்துவரும் பொழுது எந்த கட்டுரைகளில் ஆயக்குறி உள்ளது இல்லை என்பதை எளிதில் அறிய இது போன்று மறைத்த வார்ப்புருக்ககளை இடலாம் என்று கருதினேன். கோயில் கட்டுரைகள் பரவலாக பல ஊர்களில் உள்ளதால் அந்தந்த ஊர்களில் உள்ளவர்களை அக்கோயில் பற்றிய ஆயக்குறி சேர்க்க சொல்லலாம். அல்லது கூகுள் மேப்பில் அக்கோயில்கள் எங்குள்ளது என்று பார்க்கச் சொல்லலாம். ஏனெனில் கூகுள் மேப்பில் உள்ள எழுத்துககள் வேறு விதமாக உள்ளதால் எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை. இது போன்ற சின்ன சின்ன வேலைகளில் பல புதுப்பயனர்களை ஈடுபடுத்தலாம். இதற்காக ஒரு திட்டப்பக்கம் உருவாக்க எண்ணமுள்ளது. மேலும் சில ஓபன்மேப் பயன்படுத்தி சில வேலைகள் செய்யவும் எண்ணமுள்ளது. அதனால் coor பகுப்புகளை இடுவது முக்கியம் என்று கருதுகிறேன். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:59, 28 மார்ச் 2019 (UTC)
- @Balajijagadesh: வேறு என்ன வகையான பராமரிப்புப் பணிகளைச் செய்ய உள்ளீர்கள் என்பதற்குச் சில சோதனைப் பகுப்புகளைச் செய்து காட்டவும். உடனடியாக கவனித்து coor சேர்ப்பதற்கான திட்டம் இல்லாமல் ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் பராமரிப்பு வார்ப்புரு இட வேண்டுமா என்று கேள்வி எனக்குள்ளும் எழுகிறது. ஆங்கில விக்கிப்பீடியாவில் செய்கிறார்கள் என்றால் அங்கு இவ்வாறான பணிகளை மட்டும் கவனித்துச் செய்ய ஆட்கள் உண்டு.--இரவி (பேச்சு) 19:30, 27 மார்ச் 2019 (UTC)
- @Kanags: தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. பல்லாயிரமாக இருந்தாலும் சேர்த்தல் நல்லது என்று கருதுகிறேன். இதனால் இப்பணிகள் உள்ளன என்று தெரியவரும். ஆங்கில விக்கிப்பீடியாவில் இப்பகுப்பில் ஒரு லட்சத்தி இருபதாயிரத்திற்கும் அதிகமான கட்டுரைகள் coor இல்லாமல் உள்ளன. மேலும் இந்த பகுப்பு மறைந்துள்ளதால் சாதாரண பயனர்களுக்கு கட்டுரைகளை படிக்கும் பொழுது எந்த இடரும் வரப்போவதில்லை. மேலும் இப்படியாக செய்துவைத்தால் மேம்பாடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். மேலும் தாங்கள் கூறியது போல் ஊர்கள் நகரங்கள் அனைத்திற்கும் விக்கிதரவிலிருந்து பதிவிறக்க முடியுமா என்று பார்க்கிறேன். த.இ.க கோயில்கள் ஆங்கிலத்தில் இல்லாததால் விக்கிதரவிலும் இல்லை. நகரங்கள் கட்டுரைகளுக்கு பெரும்பாலும் விக்கிதரவில் இருக்க வாய்ப்பிருக்கிறது. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:33, 27 மார்ச் 2019 (UTC)
- Some active bots (eg: KanagsBOT, NeechalBOT) can do this job. If so, why do you want to create a duplicate bot? --AntanO (பேச்சு) 02:29, 29 மார்ச் 2019 (UTC)
- @AntanO: தாங்கள் கூறுவது எனக்கு புரியவில்லை. இப்பணிகளை நான் செய்ய நினைத்துள்ளேன். சாதாரண கணக்கில் செய்தால் அண்மைய மாற்றங்களில் பிறருக்கு தொல்லை வரும் என்பதால் இன்னொரு கணக்கை தானியங்கியாக குறிக்கக் கேட்கிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:13, 29 மார்ச் 2019 (UTC)
- Decision/முடிவு:
மூன்று மாத காலத்துக்கு தானியங்கி அளித்துள்ளேன். தங்கள் செயற்பாட்டை ஆய்வு செய்து அதன் பிறகு தொடர்ந்து நீட்டிப்பு வழங்குகிறேன். coor சேர்ப்பதற்கு முறையான ஒரு திட்டமும், உறுதியான சமூகப் பங்கேற்பும் இல்லாமல் அது தொடர்பான தானியங்கித் தொகுப்புகளைச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். AntanO, ஒரே பணியை வெவ்வேறு பயனர்கள் தங்கள் தானியங்கிக் கணக்குகள் மூலம் செய்ய முன்வருவது நல்லதே. நன்றி.--இரவி (பேச்சு) 19:19, 20 ஏப்ரல் 2019 (UTC)
- அவ்வாறே. நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 01:28, 21 ஏப்ரல் 2019 (UTC)
- @Ravidreams: இக்கணக்கின் தானியங்கி நிலை 21 சூலை 2019 அன்றோடு முடிந்துவிட்டது. தற்பொழுது வேங்கைத் திட்டம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி வருகிறேன். அதற்காகவும் இக்கணக்கின் தானியங்கி நிலையை நீடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 21:29, 3 திசம்பர் 2019 (UTC)
- @Balajijagadesh: நல்லது. அடுத்த ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளேன். --இரவி (பேச்சு) 21:52, 3 திசம்பர் 2019 (UTC)
- @Ravidreams: இக்கணக்கின் தானியங்கி நிலை 21 சூலை 2019 அன்றோடு முடிந்துவிட்டது. தற்பொழுது வேங்கைத் திட்டம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி வருகிறேன். அதற்காகவும் இக்கணக்கின் தானியங்கி நிலையை நீடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 21:29, 3 திசம்பர் 2019 (UTC)
Bot/தானியங்கி அனுமதி - নকীব বট
தொகு- BotName/தானியங்கியின் பெயர்: নকীব বট
- Purpose/நோக்கம்:
The bot will
- Add {{category redirect}} to the redirected category
- Move the members of redirected category to target category.
These settings are configurable through configuration here. Please help me localising the setting as I do not understand your language. If I did any mistake, feel free to correct. I use google translator to understand your scripts which often leads to ambiguity. Regards. Nokib Sarkar (பேச்சு) 10:35, 18 சூன் 2020 (UTC)
- Addition: I am having trouble with the creation of my configuaration page (from the page). Would you please help me? Nokib Sarkar (பேச்சு) 10:35, 18 சூன் 2020 (UTC)
- Owner/உரிமையாளர்:User:Nokib Sarkar
- Decision/முடிவு:
Bot/தானியங்கி அனுமதி - SelvasivagurunathanmBOT
தொகு- BotName/தானியங்கியின் பெயர்: பயனர்: SelvasivagurunathanmBOT
- Purpose/நோக்கம்: (1) விக்கிதானுலாவி உதவியுடன் பகுப்பினை ஒழுங்கமைப்பது தொடர்பான பணிகளைச் செய்தல். (2) துப்புரவு, ஒழுங்கமைவு தொடர்பான பராமரிப்பு வார்ப்புருகள் இடுதல். (3) எழுத்துப் பிழை திருத்தம், கட்டுரை வடிவமைப்புத் திருத்தம் ஆகிய சிறிய அளவுப் பங்களிப்புகளை தானியங்கிக் கணக்கில் புகுபதிகை செய்து செய்தல்.
- Owner/உரிமையாளர்: பயனர்:Selvasivagurunathan m
- Additional Information/கூடுதல் தகவல்: விக்கிதானுலவி உதவியுடன் செய்யப்பட்ட தொகுப்புகளை இங்கு காணலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:24, 15 சனவரி 2023 (UTC)
- இந்தத் தானியங்கியின் செயற்பாடுகள் சிறப்பாகவே உள்ளன. அணுக்கம் வழங்குவதற்கு எனது ஆதரவு.--Kanags \உரையாடுக 06:35, 19 சனவரி 2023 (UTC)
- ஆயிற்று -- சுந்தர் \பேச்சு 06:53, 19 சனவரி 2023 (UTC)
Bot/தானியங்கி அனுமதி - S. ArunachalamBot
தொகு- BotName/தானியங்கியின் பெயர்: பயனர்:S. ArunachalamBot
- Purpose/நோக்கம்: (1) விக்கிதானுலாவி உதவியுடன் பகுப்பினை ஒழுங்கமைப்பது, இணைப்பது தொடர்பான பணிகளைச் செய்தல். (2) துப்புரவு, ஒழுங்கமைவு தொடர்பான பராமரிப்பு வார்ப்புருக்கள் இடுதல். (3) எழுத்துப் பிழை திருத்தம், கட்டுரை வடிவமைப்புத் திருத்தம் ஆகிய சிறிய அளவுப் பங்களிப்புகளை தானியங்கிக் கணக்கில் புகுபதிகை செய்து செய்தல்.
- Owner/உரிமையாளர்: பயனர்:சா அருணாசலம்
- Additional Information/கூடுதல் தகவல்கள்:இதன் பங்களிப்புகளை இங்கு காணலாம். --S. ArunachalamBot (பேச்சு) 16:43, 27 சனவரி 2023 (UTC)
- மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுடன் கூடுதலாக பல்லாயிரக்கணக்கான தமிழ்த் திரைப்படங்களில் இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் என்ற பகுப்பினை இணைக்கிறேன்.
எடுத்துக்காட்டாக இதன் முறையே [[பகுப்பு:2020 தமிழ்த் திரைப்படங்கள்]] என்று மட்டும் இருக்கும் திரைப்படப் பக்கங்களில் [[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]] என்ற பகுப்பினை சேர்க்க வேண்டும். ஆண்டுகளை மட்டும் மாற்றி தானியக்கமாக [[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]] என்ற பகுப்பினை இணைக்கிறேன். இதில் [[பகுப்பு:நாடுகள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்]] என்ற பகுப்பில் உள்ள [[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]] [[பகுப்பு:இலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள்]], [[பகுப்பு:கனேடியத் தமிழ்த் திரைப்படங்கள்]] [[பகுப்பு:மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள்]] இந்நான்கு பகுப்புகளும் ஒரே திரைப்படக் கட்டுரையில் இல்லாதவாறு தானியக்கமாக பார்த்துத் தொகுக்கிறேன். இந்த தானியக்க தொகுப்பில் இந்நான்கு பகுப்புகளும் இணைவது இயல்பு. இதை எடுத்துக்காட்டாக இந்த தானியங்கி கொண்டு தொகுத்தால் [[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]] மற்றும் [[பகுப்பு:இலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள்]] என்ற இரண்டு பகுப்புகளும் ஒரே திரைப்படப் பக்கத்தில் வரும். இதற்கும் தானியங்கி கொண்டு ஒரு நாட்டின் பகுப்பு மட்டும் இடம்பெறுமாறு மாற்றுகிறேன்.--சா. அருணாசலம் (பேச்சு) 10:50, 8 மே 2023 (UTC)
- ஆதரவு. @Sundar: கவனிக்க.--Kanags \உரையாடுக 08:39, 8 மே 2023 (UTC)
- நன்றி. @சா அருணாசலம்: நீங்கள் கேட்டபடி தானியங்கி அணுக்கத்தை வழங்கியுள்ளேன். இந்தக் கோரிக்கையிலுள்ளபடி அதைப் பயன்படுத்த வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 10:20, 8 மே 2023 (UTC)
- @Kanags:, @Sundar: உங்கள் இருவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.--சா. அருணாசலம் (பேச்சு) 10:50, 8 மே 2023 (UTC)
- நன்றி. @சா அருணாசலம்: நீங்கள் கேட்டபடி தானியங்கி அணுக்கத்தை வழங்கியுள்ளேன். இந்தக் கோரிக்கையிலுள்ளபடி அதைப் பயன்படுத்த வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 10:20, 8 மே 2023 (UTC)
Bot/தானியங்கி அனுமதி- Sridhar G BOT
தொகு- BotName/தானியங்கியின் பெயர்:Sridhar G BOT
- Purpose/நோக்கம்: (1) விக்கிதானுலாவி உதவியுடன்
துடுப்பாட்டக்காரர்கள் கட்டுரைகளில் முதல் தரத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, பட்டியல் அ துடுப்பாட்டம் ஆகியவற்றினை முறையே மு.த.து, ஒ.ப.து,ப.இ20,ப.அ.து என்றவாறு சுருக்குதல் இதன்மூலம் தகவற்பெட்டி அகலமாக இருப்பதைத் தவிர்க்கலாம். 2) இந்தியா, துடுப்பாட்டம் என்பதற்குப் பதிலாக இந்தியத் துடுப்பாட்ட அணி என இணைப்புக் கொடுத்தல் 3) ஒரு இந்திய என்பதற்குப் பதிலாக ஓர் இந்திய என்று மாற்றுதல் 4) சான்றில்லை, குறுங்கட்டுரை என வார்ப்புரு இடுதல், எழுத்துப் பிழை திருத்தம், கட்டுரை வடிவமைப்புத் திருத்தம் ஆகிய சிறிய அளவுப் பங்களிப்புகளை தானியங்கிக் கணக்கில் புகுபதிகை செய்து செய்தல்.
- Owner/உரிமையாளர்:Sridhar G
- Additional Information/கூடுதல் தகவல்: விக்கிதானுலவி உதவியுடன் செய்யப்பட்ட சோதனைத் தொகுப்புகளை இங்கு காணலாம். - ஸ்ரீதர். ஞா (✉) 15:40, 9 மே 2023 (UTC)
- முடிவு : அணுக்க வேண்டுகோள் மீளப்பெறப்பட்டது.
- @Sridhar G:, பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளில் ஒரே மாதிரியான மாற்றங்களைத் தானியங்கி மூலம் செய்யும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கெனவே தங்களுக்குத் தெரிவித்தபடி, உங்கள் தொகுப்புகளில் தவறுள்ளன. வேறு பயனர்களிடம் ஒப்புதல் கேட்டு விட்டு இவ்வாறான தொகுப்புகளைச் செய்வதே நல்லது. தவறான தொகுப்புகளில் சிலவற்றைத் திருத்துங்கள். அதன் பின்னர் இங்கு இற்றைப்படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 05:43, 19 மே 2023 (UTC)
- சரிங்க ஸ்ரீதர். ஞா (✉) 06:16, 19 மே 2023 (UTC)
- வணக்கம் @Kanags,எனது தொகுப்புகள் சிலவற்றை திருத்தியுள்ளேன். இவை சரிதானா? ஸ்ரீதர். ஞா (✉) 08:58, 22 மே 2023 (UTC)
இற்றை
தொகு@Sundar and Kanags: வணக்கம், மேற்கூறிய தவறான தொகுப்புகள் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளன. கூடுதலாக, பகுப்பு:இந்தியத் தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள் பகுப்பு:இந்தியத் துடுப்பாட்டக்காரர்கள் எனும் இரு பகுப்புகளும் ஒரே கட்டுரையில் இருப்பதனால் பகுப்பு:இந்தியத் துடுப்பாட்டக்காரர்கள் எனும் பகுப்பு நீக்கப்படுகிறது. எனது தொகுப்புகள் சரி எனில் மற்ற கட்டுரைகளிலும் இற்றை செய்ய தானியங்கி அனுக்கம் கோருகிறேன். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 15:54, 31 மே 2023 (UTC)
- நன்றி, ஸ்ரீதர். கனகு சிறிதரன் சரிபார்த்தபிறகு அணுக்கத்தைச் செயற்படுத்தலாமென நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 02:53, 6 சூன் 2023 (UTC)
- நன்றி சுந்தர், @Sridhar G: இந்தத் தானியங்கியின் கடைசி இரு தொகுப்புகளையும் மீளமைத்து சரி செய்திருக்கிறேன். ([2], [3]) எவ்விதமான முன்பயிற்சியும் இல்லாமல் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன போல் தெரிகிறது. Cite web வார்ப்புருவில் தமிழிலேயே (சூன் 14, 2023 என்றவாறு) தேதிகளை எழுதக்கூடியதாக உள்ளது, வழுக்கள் இல்லை, அவ்வாறிருக்க ஆங்கிலத்திற்கு மாற்ற வேண்டிய அவசியமுமில்லை. ஏனைய Cite வார்ப்புருக்களில் எவ்வாறு என்று தெரியவில்லை. கட்டுரைகளில் திருத்தம் செய்யாமல் வார்ப்புருக்களைத் திருத்துவதன் மூலம் வழுக்களை இல்லாமல் ஆக்கலாம் என நினைக்கிறேன். துடுப்பாட்டத் திருத்தங்களைப் பொருத்தவரையில், நீங்கள் செய்துள்ள மாற்றங்களில் எனக்குப் பெரிதாக உடன்பாடில்லை. இவ்வாறான மாற்றங்கள் செய்யும் போது, ஏனைய பயனர்களுடன் உடன்பாடு எட்டுவது நல்லது.--Kanags \உரையாடுக 10:23, 14 சூன் 2023 (UTC)
- @Kanags திகதி பிழைகளை நான் தானியங்கி கொண்டு சரிசெய்வதாக தெரிவிக்கவில்லை. அதனை சோதனை முயற்சியாக செய்து பார்த்தேன் (மொத்தமே 5 தொகுப்புகள் தான்)
- //வழுக்கள் இல்லை// ஓர் உதாரணம்:ஆன்றி மட்டீசு
- //நீங்கள் செய்துள்ள மாற்றங்களில் எனக்குப் பெரிதாக உடன்பாடில்லை// மகிழ்ச்சி.
- //ஏனைய பயனர்களுடன் உடன்பாடு எட்டுவது நல்லது// 19 மே, மே 22 ஆகிய நாட்களில் நான் கேட்ட சந்தேகங்களுக்கு இப்போது வரை எந்தப் பதிலும் இல்லை. பதிலே இல்லாதவிடத்து உடன்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை.
- @Sundar இங்கே அவர்களின் கருத்தின்படி அந்தத் தொகுப்புகளை மேற்கொண்டேன். திருத்திய பின்னர் வேறு எந்தப் பயனரும் அந்தத் தொகுப்புகளைத் தவறு எனக் கூறவில்லை. ஒரு புறாவிற்குப் போரா என்பது போல் தான் எனக்குத் தோன்றுகிறது:)தங்களது இருவரது கருத்திற்கும் நன்றி. சுந்தர், மற்ற துப்புரவுப் பணிகளிலாவது ஈடுபடலாம் என்பதால் எனது கோரிக்கையினை மீளப் பெறுகிறேன்.-- ஸ்ரீதர். ஞா (✉) 04:07, 18 சூன் 2023 (UTC)
- இந்தக் குறிப்பிட்ட தானியங்கியின் பங்களிப்புகளைச் சரிபார்க்கவியலாதபடியால் என்னால் தனித்து முடிவெடுக்கவியலாது. தவிர, தானியங்கி என வரும்போது ஏவுதற்குமுன்னரே அமைப்பைச் சீர்செய்தல் நலம். மற்றபடி உங்கள் நற்பணிகளைத் தொடருங்கள். இன்னும் தெளிவு ஏற்பட்டு மீண்டும் விண்ணப்பிக்க விரும்புகையில் விண்ணப்பியுங்கள். பலரது உள்ளீடுகளும் வந்தால் செம்மைபெறும். -- சுந்தர் \பேச்சு 08:16, 18 சூன் 2023 (UTC)
- நன்றி சுந்தர், @Sridhar G: இந்தத் தானியங்கியின் கடைசி இரு தொகுப்புகளையும் மீளமைத்து சரி செய்திருக்கிறேன். ([2], [3]) எவ்விதமான முன்பயிற்சியும் இல்லாமல் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன போல் தெரிகிறது. Cite web வார்ப்புருவில் தமிழிலேயே (சூன் 14, 2023 என்றவாறு) தேதிகளை எழுதக்கூடியதாக உள்ளது, வழுக்கள் இல்லை, அவ்வாறிருக்க ஆங்கிலத்திற்கு மாற்ற வேண்டிய அவசியமுமில்லை. ஏனைய Cite வார்ப்புருக்களில் எவ்வாறு என்று தெரியவில்லை. கட்டுரைகளில் திருத்தம் செய்யாமல் வார்ப்புருக்களைத் திருத்துவதன் மூலம் வழுக்களை இல்லாமல் ஆக்கலாம் என நினைக்கிறேன். துடுப்பாட்டத் திருத்தங்களைப் பொருத்தவரையில், நீங்கள் செய்துள்ள மாற்றங்களில் எனக்குப் பெரிதாக உடன்பாடில்லை. இவ்வாறான மாற்றங்கள் செய்யும் போது, ஏனைய பயனர்களுடன் உடன்பாடு எட்டுவது நல்லது.--Kanags \உரையாடுக 10:23, 14 சூன் 2023 (UTC)
Bot/தானியங்கி அனுமதி- Sridhar G BOT
தொகு- BotName/தானியங்கியின் பெயர்:Sridhar G BOT
- Purpose/நோக்கம்: (1) விக்கிதானுலாவி உதவியுடன் கட்டுரைகளுடன் தொடர்புடைய விக்கித்திட்டத்தினைச் சேர்த்தல். (உதாரணமாக துடுப்பாட்டக்காரர் எனில் விக்கித்திட்டம் துடுப்பாட்டம், பள்ளிகள் எனில் விக்கித்திட்டம் பள்ளிகள் என்பதனை அந்தந்தக் கட்டுரைகளின் உரையாடல் பக்கத்தில் சேர்த்தல்)
- Owner/உரிமையாளர்:Sridhar G
- Additional Information/கூடுதல் தகவல்: விக்கித்திட்டத்தினைச் சேர்ப்பதற்கான சோதனைத் தொகுப்புகள்.
- Decision/முடிவு: அணுக்கம் வழங்கப்பட்டது.
கருத்து
தொகு@Sundar: -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 10:50, 11 மே 2024 (UTC)
- ஆதரவு-- சா. அருணாசலம் (உரையாடல்) 11:30, 11 மே 2024 (UTC)
- ஆதரவு - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:45, 11 மே 2024 (UTC)
- விக்கித்திட்டம் மட்டுமா அல்லது அதைத் தவிர வேறு ஏதேனும் தானியங்கி மூலம் தொகுக்கவிருக்கிறீர்களா?--Kanags \உரையாடுக 13:08, 11 மே 2024 (UTC)
- இல்லை. தற்போது விக்கித் திட்டத்தினை மட்டும் சேர்க்க உள்ளேன். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 13:24, 11 மே 2024 (UTC)
- விக்கித்திட்டம் சேர்க்கும் போது அதனை ஒரு தகுந்த பகுப்பினுள் சேர்க்க வேண்டும் அல்லவா?--Kanags \உரையாடுக 13:49, 11 மே 2024 (UTC)
- ஆம். நினைவூட்டியமைக்கு நன்றி. பகுப்பு:விக்கித்திட்டம் துடுப்பாட்டம் கட்டுரைகள் எனும் பகுப்பில் கட்டுரைகள் இற்றையாகும். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 16:04, 11 மே 2024 (UTC)
- நன்றி. விக்கித்திட்டத்தை பேச்சுப் பக்கத்தில் சேர்க்கும்போது, அது எந்தத் திட்டம் என்பதையும் ("விக்கித்திட்டம் துடுப்பாட்டம் சேர்ப்பு" என்பதாக) குறிப்புகளில் சேருங்கள்.--Kanags \உரையாடுக 22:36, 11 மே 2024 (UTC)
- ஆம். நினைவூட்டியமைக்கு நன்றி. பகுப்பு:விக்கித்திட்டம் துடுப்பாட்டம் கட்டுரைகள் எனும் பகுப்பில் கட்டுரைகள் இற்றையாகும். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 16:04, 11 மே 2024 (UTC)
- விக்கித்திட்டம் சேர்க்கும் போது அதனை ஒரு தகுந்த பகுப்பினுள் சேர்க்க வேண்டும் அல்லவா?--Kanags \உரையாடுக 13:49, 11 மே 2024 (UTC)
- இல்லை. தற்போது விக்கித் திட்டத்தினை மட்டும் சேர்க்க உள்ளேன். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 13:24, 11 மே 2024 (UTC)
- ஆதரவு.--Kanags \உரையாடுக 22:36, 11 மே 2024 (UTC)
- @Sundar: கவனித்து, உரியது செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:05, 13 மே 2024 (UTC)
- @Sundar: அனுக்கம் வழங்கக் கோருகிறேன். மாற்றுக் கருத்து இருந்தால் அறியத் தாருங்கள். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 07:09, 17 மே 2024 (UTC)
- @Ravidreams and Mayooranathan: வணக்கம். வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ள இந்தத் தானியங்கி வழியாக சில முக்கியப் பணிகளை ஸ்ரீதர் செய்யவிருக்கிறார். ஆகையால் அவரின் வேண்டுகோளையும், தரப்பட்டுள்ள ஆதரவுகளையும் கவனித்து உரியது செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:45, 18 மே 2024 (UTC)
என்னென்ன விக்கித்திட்டங்களைச் சேர்க்க இருக்கிறீர்கள்? இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான புதிய பக்கங்களை உருவாக்க முடியும் என்பதால், இது எந்த வகையில் தேவை, விக்கித்திட்ட இணைப்புகளைச் சேர்த்த பிறகு உங்கள் செயல்திட்டம் என்ன என்பதையும் குறிப்பிடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 06:44, 19 மே 2024 (UTC)
- // என்னென்ன விக்கித்திட்டங்களைச்// இங்கு உள்ள அனைத்தையும்.
- //இது எந்த வகையில் தேவை// கட்டுரை ஆழத்தினை அதிகரிப்பது முதன்மை நோக்கம்.
- காண்க (கட்டுரை எண்ணிக்கைகள் அதிகரித்தல் ,துப்புரவு பணிகள் ஆகியன செய்துள்ளபோதும் கட்டுரை ஆழம் குறைவாக உள்ளது)
- //இணைப்புகளைச் சேர்த்த பிறகு உங்கள் செயல்திட்டம் //
- ஒரு விக்கி திட்டத்தை சேர்த்த பிறகு அந்தத் திட்டத்தில் உள்ள கட்டுரைகளை செம்மைப்படுத்துதல், நல்ல கட்டுரைகளாக மேம்படுத்துதல். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 07:10, 19 மே 2024 (UTC)
- முதலில் முன்னுரிமை கொடுத்து சிறு விக்கித்திட்டங்களுக்கான பக்கங்களை உருவாக்கி, அக்கட்டுரைகளைச் சீராக்கி முடித்த பிறகு, ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்த திட்டங்களுக்கான தானுலாவி வேலைகளைச் செயற்படுத்த முடியுமா? எடுத்துக்காட்டுக்கு, கிரிக்கெட் தொடர்பாக மட்டும் பல ஆயிரக்கணக்கான கட்டுரைகள் உள்ளன. அவறுக்கு வெறுமனே ஒரு பேச்சுப் பக்கம் விக்கித்திட்ட பகுப்பு இணைப்பு இடுவதால் பெரிய பயன் இருக்குமா என்று தெரியவில்லை. --இரவி (பேச்சு) 11:11, 19 மே 2024 (UTC)
- வணக்கம், நல்ல யோசனை தான் கருத்தில்கொள்கிறேன்.
- //பெரிய பயன் இருக்குமா என்று தெரியவில்லை// இந்த அரைத்தானியங்கி உரையாடல் பக்கத்தில் விக்கித்திட்டங்களை மட்டுமே சேர்க்கும். இந்தச் செயல்முறை Rasnaboy இங்கு குறிப்பிட்டுள்ளது போல் ஒருங்கிணைக்க உதவுகிறது. இதனை மனித ஆற்றலில் செய்வதனை விட அரைத்தானியங்கியால் செய்யும் போது நேரம் மிச்சமாவதுடன் துப்புரவுப் பணிகளைச் செய்ய உதவியாக இருக்கும்.
- ஆனால் சமூகத்திற்கான பயன் என்பது கூட்டுழைப்பின்மூலம் மட்டுமே நிகழ வாய்ப்புள்ளது (இங்கு நீங்கள் பயன் என்று குறிப்பிட்டுள்ளதை கட்டுரை உருவாக்கம், பிழைத் திருத்தம் என்று கருதுவதாக நான் நினைக்கிறேன்).
- 1. அண்மையில் பலரும் இணைந்து இந்திய அளவில் கட்டுரை எண்ணிக்கையில் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளோம்.
- 2. மாத வாரியாக கூகுள் கட்டுரைகளை செம்மைப்படுத்துதல், ஆசிரியர்கள் கட்டுரைகளை துப்புரவு செய்தல், மேற்கோள்களைச் சேர்த்தல், பகுப்புகளை சரிசெய்தல் ஆகியவற்றை கூட்டுழைப்பாக செய்து வருகிறோம், கட்டுரை ஆழத்தில் மட்டும் கவனம் கொள்ளாது துப்புரவிலும் கவனம் செலுத்துகிறோம் என்பதையும் தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.
- 3. தொடர்புடைய விக்கித்திட்டங்களில் உருவாக்க வேண்டிய கட்டுரைகள் , மேற்கோள்கள் சேர்க்க வேண்டியவை, துப்புரவு செய்ய வேண்டிய கட்டுரைகள் ஆகியவற்றைச் சேர்க்கிறேன். மற்றவர்களுடன் இணைந்து கட்டுரையினை மேம்படுத்துவதன் மூலமாக இந்தச் செயல்முறை பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். நன்றி -- ̴̴ ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 13:35, 19 மே 2024 (UTC)
- நீங்கள் குறிப்பிட்டுள்ள சோதனைத் தொகுப்புகள் பல புதிய பேச்சுப் பக்கங்களை உருவாக்கியிருக்கின்றன. துடுப்பாட்டம் குறித்த கட்டுரைகள் 15 ஆண்டுகளுக்கு மேல் இருக்கின்றன. அவற்றைப் பகுப்புகளில் வழியே எளிதாக அடையாளம் கண்டு மேம்படுத்தவும் முடியும். எனவே, புதிதாக ஒரு பேச்சுப் பக்கத்தை உருவாக்கி விக்கித்திட்ட வார்ப்புரு இடுவதால் மட்டும் கட்டுரை மேம்பாட்டுக்கான வாய்ப்பு உண்டா என்பதே என் கவலை/கேள்வி. அந்த மேம்பாடு அனைத்துப் பயனர்களும் பங்களித்தால் தான் வரும் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். எடுத்தவுடன் துடுப்பாட்டம் போன்ற பெரிய பகுப்புகளில் ஒட்டு மொத்தமாக பல ஆயிரக்கணக்கான பேச்சுப் பக்கங்களை உருவாக்கிடாமல், தேவைப்படும் விக்கித்திட்டங்களில் சிறிய அளவிலான பகுப்புகளில் சேர்த்து பிறகு அடுத்தடுத்த திட்டங்களில் தானுலாவியை ஏவக் கேட்டுக் கொள்கிறேன். தானியங்கி அணுக்கத்தைச் செயற்படுத்துகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 15:01, 19 மே 2024 (UTC)
- // சிறிய அளவிலான பகுப்புகளில் சேர்த்து பிறகு அடுத்தடுத்த திட்டங்களில் தானுலாவியை ஏவக் கேட்டுக் கொள்கிறேன்// நல்லது, முதலில் பள்ளிகள் திட்டத்தினைச் சேர்க்கிறேன். இதில் வரும் கற்றலின் அடிப்படையில் மற்ற திட்டங்களைச் சேர்க்கிறேன்.
- கருத்தினைப் பகிர்ந்த @சா அருணாசலம்@Kanags@Selvasivagurunathan m@Ravidreams @Sundar அனைவருக்கும் நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:22, 19 மே 2024 (UTC)
- நீங்கள் குறிப்பிட்டுள்ள சோதனைத் தொகுப்புகள் பல புதிய பேச்சுப் பக்கங்களை உருவாக்கியிருக்கின்றன. துடுப்பாட்டம் குறித்த கட்டுரைகள் 15 ஆண்டுகளுக்கு மேல் இருக்கின்றன. அவற்றைப் பகுப்புகளில் வழியே எளிதாக அடையாளம் கண்டு மேம்படுத்தவும் முடியும். எனவே, புதிதாக ஒரு பேச்சுப் பக்கத்தை உருவாக்கி விக்கித்திட்ட வார்ப்புரு இடுவதால் மட்டும் கட்டுரை மேம்பாட்டுக்கான வாய்ப்பு உண்டா என்பதே என் கவலை/கேள்வி. அந்த மேம்பாடு அனைத்துப் பயனர்களும் பங்களித்தால் தான் வரும் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். எடுத்தவுடன் துடுப்பாட்டம் போன்ற பெரிய பகுப்புகளில் ஒட்டு மொத்தமாக பல ஆயிரக்கணக்கான பேச்சுப் பக்கங்களை உருவாக்கிடாமல், தேவைப்படும் விக்கித்திட்டங்களில் சிறிய அளவிலான பகுப்புகளில் சேர்த்து பிறகு அடுத்தடுத்த திட்டங்களில் தானுலாவியை ஏவக் கேட்டுக் கொள்கிறேன். தானியங்கி அணுக்கத்தைச் செயற்படுத்துகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 15:01, 19 மே 2024 (UTC)
- முதலில் முன்னுரிமை கொடுத்து சிறு விக்கித்திட்டங்களுக்கான பக்கங்களை உருவாக்கி, அக்கட்டுரைகளைச் சீராக்கி முடித்த பிறகு, ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்த திட்டங்களுக்கான தானுலாவி வேலைகளைச் செயற்படுத்த முடியுமா? எடுத்துக்காட்டுக்கு, கிரிக்கெட் தொடர்பாக மட்டும் பல ஆயிரக்கணக்கான கட்டுரைகள் உள்ளன. அவறுக்கு வெறுமனே ஒரு பேச்சுப் பக்கம் விக்கித்திட்ட பகுப்பு இணைப்பு இடுவதால் பெரிய பயன் இருக்குமா என்று தெரியவில்லை. --இரவி (பேச்சு) 11:11, 19 மே 2024 (UTC)
சில நாள்களாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நான் வந்து பார்க்காததால் இந்த உரையாடலைத் தவறவிட்டுவிட்டேன். கருத்திட்ட பங்களிப்பாளர்களுக்கும் இரவிக்கும் நன்றி. -- சுந்தர் \பேச்சு 09:05, 30 மே 2024 (UTC)