விக்கிப்பீடியா பேச்சு:அதிகாரிகள்

தலைப்பு மாற்றம்

தொகு

இவ்வுரையாடல் நிகழ்வதற்கு முன், கீழ்கண்ட இடங்களிலும், வேறு சில பயனர்களால் உரையாடப்பட்டது.

தொடக்கம்

தொகு

  விக்கிப்பீடியா_பேச்சு:உங்களுக்குத்_தெரியுமா#விதிகள் பற்றிய உரையாடல் என்ற இடத்தில், சுந்தரும் கருத்திட்டுள்ளார்.

  பயனர்_பேச்சு:தகவலுழவன்/பயனர்_பேச்சு:தகவலுழவன்-பரண்#அணுக்கரும் நிர்வாகிதானே என்ற இடத்தில் தென்காசி சுப்பிரமணியனும், த*உழவனும் உரையாடினர்.

தொடர்ச்சி

தொகு

அதிகாரிகள் என்ற பயன்பாட்டை முற்றிலும் கைவிட எண்ணுகிறேன். ஏனெனில்,

  1. இது தமிழ் சொல் அல்ல
  2. தமிழகத்தில் அதிகாரி என்பது officer என்ற சொல்லிற்கான மொழிபெயர்ப்பாகவே அதிகம் பயனாகிறது.
  3. மேலும், இங்கு அதிகாரம் எதுவும் வழங்கப்படுவதில்லை. மாற்றாக பொறுப்புரிமை வழங்கப்படுகிறது.

கட்டுரையின் முதல் வரியிலேயே அழகான விளக்கம் உள்ளது. //சில சிறப்பு நுட்ப அணுக்கங்களைக் கொண்ட பயனர்களை// நுட்ப அணுக்கர் என்பதே தமிழ்சொல் எனவே, இதுபற்றி சிந்திக்கக் கோருகிறேன். கிரந்த நீக்கல் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் தமிழ் எழுத்துக்களை போர்த்திக்கொண்டு இருக்கும் அயலகச்சொல். நமது தமிழில் சொல்வளம் இல்லையா? என்ன? -- உழவன் +உரை.. 20:05, 19 ஆகத்து 2012 (UTC)Reply

நுட்ப அணுக்கர் என்பது நேரடியான கரடு முரடான சொல்லாக உள்ளது :) நிருவாகி - > பொறுப்பாளர், அதிகாரி - > கூடுதல் பொறுப்பாளர் அல்லது மீ பொறுப்பாளர் என்று அழைக்கலாமா? பல முறை இது குறித்த உரையாடல் எழுவதால், இதனைத் தொடர்ந்து உரையாடி ஒரு முடிவுக்குக் கொண்டு வருவது நல்லது என்று நினைக்கிறேன்--இரவி (பேச்சு) 03:18, 26 ஆகத்து 2012 (UTC)Reply

பொறுப்பாளர், மீபொறுப்பாளர் ஆகிய சொற்கள் நன்றாகவும் எளிமையாகவும் உள்ளன. --மதனாகரன் (பேச்சு) 04:02, 26 ஆகத்து 2012 (UTC)Reply

+1 -- சுந்தர் \பேச்சு 13:08, 27 ஆகத்து 2012 (UTC)Reply
//நுட்ப அணுக்கர் என்பது நேரடியான கரடு முரடான சொல்லாக உள்ளது//. என்ன கரடு முரடு? சற்று விளக்கவும். அணுக்கம் என்ற சொல்லை, பலமுறை அதிகமாக பயன்படுத்துகிறோம்.அதனால், அதில் இறுதி எழுத்தை மாற்றி, அணுக்கர் என்று பரிந்துரைத்தேன்.பொறுப்பு என்றால், என்னென்ன பொறுப்பு ?யார்யார் என்னென்ன பொறுப்புகளைக் கையாள வேண்டும்? ஒருவர் பொறுப்பை, மற்றவர் கையாளலாமா? என்ற வினாக்கள் தோன்றும்.
அணுகு-->அணுகுமுறை-->அணுக்கம்-->அணுக்கர்.
  • ஏதேனும் ஐயமா? அவரை அணுகு.
  • கணிதப் பிரிவுக்கு, என்னென்ன தொழில்நுட்ப அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்?
  • ஒரு பக்கத்தை நீக்கலுக்கான அணுக்கம் எனக்கு இல்லை?
  • நீக்கல் அணுக்கம் உள்ளவரிடையே என்னென்ன அணுக்கங்கள் உள்ளன.? என்றே என்மனதில் தோன்றுகிறது.பொறுப்பு என்பதும், கட்டுப்பாடு என்ற சொல்லும் மிக நெருக்கமாக இருக்கின்றன.நம் விக்கிக்குடும்பத்தில் கட்டுப்பாடுகளா?கடப்பாடுகள் தானே உள்ளன. நம் காப்பது நமது கடப்பாடுகளே. அவைகளே நம்மை காக்கும். ஓங்கச்செய்யும்.கட்டுப்பாடுகள் நம்மை வீழவே செய்யும் அல்லவா? இவர் புதுப்பயனர்(பழகாப்பயனர்) அல்ல. பழகியப் பயனர் / சிறப்பு அணுக்கங்களைப் பெற்றவர் என்பதனைக் குறிக்க வேறு சொற்களை அறியத் தாருங்கள்.-- உழவன் +உரை.. 05:45, 28 ஆகத்து 2012 (UTC)Reply

நுட்ப அணுக்கர் என்ற சொல் நீண்டு விட்டது. அதனை விட அணுக்கர் என்பது பொருத்தமானதாக இருக்கும். அதிகாரியை மீயணுக்கர் எனலாம். --மதனாகரன் (பேச்சு) 06:44, 28 ஆகத்து 2012 (UTC)Reply

மதனுடன் ஒப்புகிறேன், தகவலுழவன். சிசாப்புகள் சில நுட்ப அணுக்கங்களைக் கொண்டவர்களே, அது ஒன்றும் சிறப்புப் பதவியல்ல என விளக்கம் தந்தாலும் பெயரிலும் தெளிவாகக் குறிப்பிட வேண்டுமென கருதினால் அணுக்கர் என்றே அழைக்கலாம். அல்லது இன்னும் எளிய சொல் இருந்தாலும் ஆளலாம். -- சுந்தர் \பேச்சு 13:48, 28 ஆகத்து 2012 (UTC)Reply
நானும், ஒப்புகிறேன். மீஎன்பது அதிகம் பயன்படாவிட்டாலும், மிகச்சுருக்கமாகக் கூற தமிழாலும் முடியும் என்பதனைக் குறிக்கிறது.பிறரும் ஒப்புதல் அளித்தால், மாற்ற வேண்டிய இடங்களைக் காட்டினால், அங்கெல்லாம் அணுக்கர்(system operator), மீயணுக்கர் (bureaucrat) என நானும் மாற்றட்டுமா?.ஏனெனில், கலந்துரையாடிய முடிவுகளைச் செயற்படுத்துவதும் முக்கியமன்றோ? மீண்டும் சந்திப்போம். வணக்கம்.-- உழவன் +உரை.. 06:51, 29 ஆகத்து 2012 (UTC)Reply

மீ என்பது இலங்கையில் வழக்கிலுள்ளது. மீக்கணினி, மீத்திறன், மீயொலி என்றவாறு பயன்பாட்டிலுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 06:59, 29 ஆகத்து 2012 (UTC)Reply

காவலாளியும் சாவி வைத்திருபார். ஒரு பொறுப்பில் இருப்பவரும் சாவி வைத்திருப்பார். அதற்காக அவர்களை சாவியாளர் என்று அழைப்பதில்லை. இங்கு அணுக்கம் என்பது ஒரு கருவி மட்டுமே. பொறுப்பை ஏற்க விரும்புபவர்களுக்கும் அந்த நம்பகத்தன்மை இருப்பதாக சமூகம் உணர்பவர்களுக்கும் மட்டும் இந்த அணுக்கம் வழங்கப்படுகிறது. பொறுப்பு எடுத்துக் கொள்வது வேறு. கட்டுப்படுத்துவது வேறு. பொறுப்பாளர் என்ற சொல்லில் அதிகாரத்தோரணை ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை. அப்படியே தோன்றினாலும் நாம் admin, bureaucrat என்ற சொற்களுக்கு ஈடாகச் சொல்லை ஆக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். sysopக்கு அணுக்கர் என்பது பொருந்தி வரலாம். ஆனால், அதை அடிப்படையாகக் கொண்டு மற்ற இரு சொற்களையும் தமிழாக்குவது சரியாகத் தோன்றவில்லை. --இரவி (பேச்சு) 09:29, 30 ஆகத்து 2012 (UTC)Reply

சாவி என்பது கண்ணுக்குத் தெரியும் ஒருபொருள். அதனை காவலாளியின், கட்புலனாகாப் பணிக்காகவே தரப்படுகிறது. காவல் பணியை செய்வதால், போலீசை(police) காவலாளி என்றோ, அவர் கையில் தடி கொடுப்பதால் தடியன் என்றோ (லாத்தி) அழைக்க முடியுமா? எனவே, பணிக்குத்தான் கருவி. கருவியை வைத்து பெயரிடல் ஏற்புடையது அன்று.
இங்கு அணுக்கம் என்பது ஒரு கருவியல்ல. அது ஒரு பங்களிப்பாளரின் வளர்நிலை.நம்பகத்தன்மையைக்குறிக்கிறது. அது பணியும் அல்ல. பொறுப்பும் அல்ல. பணியிலும், பொறுப்பிலும் தவறாமல் செய்ய வேண்டிய கடமை உண்டு. அணுக்கம் என்பது ஒரு அணுகுமுறை. சில செயல்களை செய்ய, இந்த அணுகும் முறை தேவைப்படுகிறது. அவ்வளவே. இங்கு தவறாமல் செய்ய வேண்டிய கடமை இல்லை. ஒரு குறிப்பிட நபரை அணுகி, இங்குள்ள சூழ்நிலைகளை, நீங்கள் மாற்ற விரும்பினால், நீங்கள் மாற்றலாம் என்று அணுகுமுறைத் தரப்படுகிறது.அதனை பணி என்றோ, பொறுப்பு என்றோ எல்லையிடுதல் முடியாது.
sysop என்பதற்கு admin என்று பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அவ்வளவே. ஆனால், விக்கி ஆணங்களில் sysop என்று தானே உள்ளது. எனவே, இச்சொல்லை, அணுக்கர் என்று அழைக்கலாமென்று இதுவரை பேசியதில் முடிவெடுத்துள்ளோம். அப்படித்தானே?
bureaucrat என்பது அணுக்கர் நிலையில் இருப்பவரின் அணுகுமுறை பண்புகளோடு, வேறுசில அணுகுமுறைகளும் தரப்படுகிறது என்றே எண்ணுகிறேன். எனவே, இச்சொல்லிற்கு மீயணுக்கர் = உயரணுக்கர் =மாஅணுக்கர்(வேண்டாம்.மாணாக்கர் என்றும் பேச்சுவழக்கில் மாறும் வாய்ப்புள்ளது) = மேலணுக்கர் எனலாமே?
எது எப்படியோ? நிருவாகி, அதிகாரி என்ற புறமொழிச் சொற்கள் நீங்கினால் சரி. கிரந்தத்தை வெளியேற்ற, பல அழுத்தமான உரையாடல்கள் நடந்தபோது உரையாடியவர்கள் பலரும், இப்புறமொழிச் சொற்களை வெளியேற்றுவதிலும் ஈடுபட்டால் நன்றாக இருக்கும். தமிழை வரவேற்க வாரீர் என இதன் மூலம் அழைப்பு விடுக்கிறேன். அதனால் தமிழ் சிறக்க ஏதுவாகும். மீண்டும் சந்திப்போம்.-- உழவன் +உரை.. 19:05, 5 செப்டெம்பர் 2012 (UTC)Reply

மேலணுக்கர் என்பதில் மேல் என்பது மேல்-விக்கியுடன் குழப்பத்தை ஏற்படுத்தலாம். மீயணுக்கர், உயரணுக்கர் என்பவற்றில் ஏதேனுமொன்றைப் பயன்படுத்தலாம். --மதனாகரன் (பேச்சு) 07:03, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

இங்கு நிருவாகி, அதிகாரி ஆகிய சொற்கள் அதிகாரத் தோரணை மிக்கதாக உள்ளதாக உணரப்படுவதாலேயே மாற்றுச்சொற்கள் குறித்து உரையாடப் புகுந்தேன். தனித்தமிழ் நோக்கில் அன்று. நீங்கள் கூறிய அத்தனை விளக்கத்தையும் விளக்கிச் சொன்னாலே ஒரு புதிய பயனருக்கு அணுக்கர் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முடியும் (அணுக்கரா அணுகரா எது சரி? அணுகு என்பது வேர்ச்சொல்) அதுவும் வறட்டுத்தனமான சொல்லாக உள்ளது. அணுக்கர் என்பதை அடிப்படையாக கொண்ட எந்த சொல்லிலும் எனக்கு உடன்பாடு இல்லை. //இங்கு அணுக்கம் என்பது ஒரு கருவியல்ல. அது ஒரு பங்களிப்பாளரின் வளர்நிலை.நம்பகத்தன்மையைக்குறிக்கிறது.// நீங்களே சுட்டியுள்ள இந்தப் பண்புகளைக் குறிக்குமாறு பெயர் வைப்பதே முறை. --இரவி (பேச்சு) 07:54, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

  • எனது நோக்கம் யாதெனில், கிரந்த எழுத்த நீக்கலுக்கு பக்கம்பக்கமாக உரையாடல்கள் நிகழ்ந்துள்ளன. அதற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவு பிற சொற்களுக்கும் தரப்பட வேண்டும். பிற சொற்கள் என்று இங்கு நான் குறிப்பிடுவது, தமிழ் எழுத்துக்களைப் போர்த்திக் கொண்டு இருக்கும், அயல்மொழிச்சொற்கள். முதலில் அயல்மொழிச்சொற்கள் விரைந்து நீக்கப்பட வேண்டும். அதற்கு எந்த தமிழ் சொல்லாக இருந்தாலும், பயன்படுத்தினாலும் எனக்கு உடன்பாடே. தமிழால், தமிழரால் அயலக மொழிகள் இல்லாமல் வாழ முடியும். ஓங்க முடியும். முன்மொழிவுகள் இல்லாத போது, இருப்பதையே ஏற்றுக்கொள்ளுதலே, நல்ல அணுகுமுறை. வேறொன்றும் அறியேன், பராபரமே! வணக்கம்-- உழவன் +உரை.. 14:56, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

முடிவு

தொகு
Return to the project page "அதிகாரிகள்".