விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள் 6
சோடாபாட்டில் மற்றும் கலை ஆகியோர்களுக்கான நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்கள் மற்றும் வாக்குகள் குறித்த விபரங்கள் இங்கு உள்ளன.
சோடா பாட்டில் (செப்டம்பர் 16, 2010 - செப்டம்பர் 23, 2010) ஓட்டு (19|0|0)
தொகுதமிழ் விக்கி கட்டுரைப் போட்டியின் மூலம் தமிழ் விக்கிக்கு கிடைத்த மிக அருமையான பயனர் சோடாபாட்டில். அன்றாடம் தமிழ் விக்கியின் பல்வேறு பணிகளில் முனைப்போடு ஈடுபட்டு வருகிறார். ஆங்கில விக்கி அனுபவத்துடன், விக்கி கொள்கைகள், நடைமுறைகள், மென்பொருளில் மிகவும் தேர்ந்தவராகவும் இருக்கிறார். தமிழ் இணைய மாநாட்டின் விக்கிப் பயிற்சிப் பட்டறை ஏற்பாடுகளில் நேரடியாக கலந்து கொண்டு பெரும் பங்களித்தார். இவரை நிருவாகியாகப் பெறுவது தமிழ் விக்கிக்கு வளம் சேர்க்கும். சோடா பாட்டிலை தமிழ் விக்கிப்பீடியா நிருவாகப் பொறுப்புக்கு முன்மொழிகிறேன்.--இரவி 08:16, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- என்னை முன்மொழிந்தமைக்கு நன்றி இரவி. த.விக்கியில் நிருவாகி ஆகும் முதிர்ச்சியும் அனுபவமும் இப்போது என்னிடம் இருப்பதாக உணர்கிறேன். விக்கி சமூகம் சம்மதமளித்தால் பொறுப்பேற்க சம்மதிக்கிறேன்.--சோடாபாட்டில் 08:23, 16 செப்டெம்பர் 2010 (UTC)
ஆதரவு
தொகு- விக்கியின் நெளிவு சுழிவுகளை நன்கு அறிந்தவர். நிருவாகியாவதற்கு அனைத்துத் தகுதிகளையும் கொண்டவர். எனது ஆதரவு.--Kanags \உரையாடுக 08:39, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- சோடாபாட்டிலுக்கு ஆதரவாக வாக்களிக்கிறேன். --பவுல்-Paul 09:24, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- ஆதரவு --அராபத்* عرفات 11:33, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- சுந்தர் \பேச்சு 13:01, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- --ஹிபாயத்துல்லா 13:39, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- --செல்வா 13:52, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- --குறும்பன் 16:26, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- விக்கியின் விதிமுறைகளை நன்கு அறிந்தவர்.பல நல்ல கட்டுரைகளை ஆக்கியவர்.விக்கி சமூகத்தில் முனைப்போடு ஈடுபாடு காட்டுபவர்.நிருவாகி ஆவதன் மூலம் ஆங்கில விக்கியின் பல நல்ல நெறிமுறைகளை இங்கு அறிமுகப்படுத்துவார் என்ற நம்பிக்கை அளிப்பவர்.அவருக்கு எனது முழு ஆதரவு.--மணியன் 18:18, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- --மயூரநாதன் 18:31, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- --கலை 20:13, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- --கார்த்திக் 20:44, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- --Natkeeran 23:51, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- --தேனி.எம்.சுப்பிரமணி. 01:13, 17 செப்டெம்பர் 2010 (UTC)
- --சஞ்சீவி சிவகுமார் 04:41, 17 செப்டெம்பர் 2010 (UTC)
- --இரவி 05:29, 17 செப்டெம்பர் 2010 (UTC)
- --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 06:03, 17 செப்டெம்பர் 2010 (UTC)
- --ராஜ்6644 09:49, 17 செப்டெம்பர் 2010 (UTC). (விக்கிப்பீடியாவில் நிர்வாகி பொறுப்பு ஏற்பதற்கான அனைத்து தகுதியும் உடையவர். இவர் ஆங்கில விக்கிப்பீடியாவில் அளித்துள்ள பங்களிப்புக்கள் அனைத்தும் பொக்கிஷம் போன்றவை. வாழ்க தமிழ்!!! )
- --மாஹிர் 10:23, 18 செப்டெம்பர் 2010 (UTC)
- --சி. செந்தி 11:47, 21 செப்டெம்பர் 2010 (UTC)
எதிர்ப்பு
தொகுநடுநிலை
தொகுகருத்து
தொகுகேள்விகள்
தொகுகேள்வி 1
தொகு- சோடாபாட்டில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் விக்கிப்பீடியா எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்களும் பெறக்கூடிய வாய்ப்புகளும் என்னவாக இருக்கும்? அவற்றை நம் தளத்தின் நோக்கங்களுக்கு எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்? -- சுந்தர் \பேச்சு 09:14, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- பெறக்கூடிய வாய்ப்புகள்:
- தமிழ்நாடு அரசுடனான கூட்டு முயற்சிகள். விக்ஷனரிக்கு சொற்கள் வழங்கியது போல, தமிழ் கலைகளஞ்சியத்தையும், தகவல்துறையின் ஆவணக்காப்பகத்தின் (Archives Dept) பழைய கோப்புகளையும் தரச்சொல்லி கேட்கலாம்
- கல்வி நிறுவனங்களுடனான கூட்டு முயற்சிகள். தற்போது Public Policy Initiative என்றொரு திட்டத்தை விக்கிமீடியா அறக்கட்டளை அமெரிக்காவில் செயல்படுத்தி வருகிறது. அது போல. விக்கிபீடியாவுக்கு கட்டுரைகள் எழுதுவதை வீட்டுப் பாடமாக / திட்டப்பணி பாடமாக வைக்கச் சொல்லி தமிழார்வமிக்க பேராசிரியர்களிடம் கேட்கலாம்.
- ஆங்கில் விக்கியில் தமிழ்/தமிழ்நாடு தொடர்பாகப் பங்களிப்பவர்களை இங்கு இழுத்து வரவேண்டும். நன்றாகத் தமிழ் தெரிந்தும் இங்கு வரலாமல் இருப்பவர்களைக் கவர்வதற்கு திட்டங்கள் வகுக்கலாம்.
- எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்கள்
- கணினி இணைய இணைப்புகளின் எண்ணிக்கை குறைந்து நகர்பேசி மூலம் இணையத்தை மேய்பவர்களின் எண்ணிக்கை கூடுமென்பதால், நகர்பேசி உலாவிகளின் மூலம் த.விக்கி படிக்க / பங்களிக்க எளிதாக்கும் வேலைகளைச் செய்ய வேண்டும்
- தேடு பொறிகளில் ஆங்கில் விக்கியைப் போலன்றி த. விக்கியின் கட்டுரைகள் குறைந்த தரவரிசை ரேங்கையே பெறுகின்றன. இணையத்தில் தமிழடக்கம் அதிகமாக அதிகமாக, த. விக்கி தொடுப்புகள் பின் பக்கங்களுக்கு தள்ளப்படுகின்றன. த. விக்கி ஒன்று இருப்பதே பலருக்கு தெரியாமல் போவதன் காரணமும் இது தான். எனவே தேடுபொறிகளில் த. வி கட்டுரைகள் முதல் பத்து தொடுப்புகளுக்குள் வரும்படி செய்ய வேண்டும். நாம் நல்ல தமிழில் எழுதுவது ஒரு வகையில் இதற்கு காரணமாக அமைகிறது - ஏனெனில் இணையத்தில் தமிழில் தேடுபவர்கள் பெரும்பாலும் லத்தீன் எழுத்துருவிலும், தமிங்கலத்திலும், எழுத்துப் பிழைகளுடன் தேடுகிறார்கள். த.விக்கி தமிழின் தரமும் குறையக் கூடாது ஆனால் தமிங்கலர்களை இங்கே வரவைக்க வேண்டும். இதற்கான முறையை ஆராய வேண்டும்.
கருத்து
நல்ல கேள்விகள். நல்ல பதில்கள் :) மற்ற அனைத்தைக் காட்டிலும் தேடுபொறிகளில் தமிழ் விக்கியைக் கொண்டு வருவது நம் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு விசயம். இதனைக் கவனித்துச் சொன்ன சோடா பாட்டிலுக்கு நன்றி. பொதுவாக, தமிழ் வலையில் பிற பக்கங்களுக்குத் தொடுப்பு கொடுத்து எழுதும் பக்கமும், குறிப்பாக எல்லா சொற்களையும் விக்கிக்குத் தொடுப்பு கொடுக்கும் வழக்கமும், தொடுப்பு கொடுக்கக்கூடிய அளவுக்கு பல தலைப்புகளில் நம்மிடம் கட்டுரைகள் இல்லாததும் ஒரு காரணம். எழுத்துப்பிழை உள்ள சொற்கள், தமிங்கிலச் சொற்களில் இருந்து வழிமாற்றுகள் தரலாமா என்று தெளிவில்லை. இப்படித் தருவதன் மூலம் துப்புரவுப் பணிகள் கடினமாகலாம். இந்த வழிமாற்றுகள் தேடலில் முந்த உதவுமா என்றும் சோதித்துப் பார்க்க வேண்டும். போன், செல்போன், மொபைல் போன் போன்ற பரவலான தமிங்கிலச் சொற்களுக்கு தமிழ் விக்கி கட்டுரைகளைக் காணவில்லை. ஆனால். நகர்பேசி என்ற சிறப்புக் கட்டுரையைக் கொண்டிருக்கிறோம். பரவலான தமிங்கிலச் சொற்களை விக்சனரியில் சேர்ப்பது ஒரு வழி. கட்டுரையின் தொடக்கத்தில் ஆங்கிலப்பெயர் தருவது போல் கட்டுரையின் இறுதியில் தமிழ்ச் சொல்லை ஆங்கில எழுத்தில் எழுதிக் காட்டுவதும் ஒரு வழி ( எ. கா: pone, kanini ). இந்திய மொழிகள்விக்கி பற்றிய பொதுவான விழிப்புணர்வு ஊட்ட, இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கையில் இருந்து ஆங்கில / உள்ளூர் மொழி விக்கிகளை அணுகுபவர்களுக்கு உள்ளூர் மொழிகளிலும் விக்கி உள்ளதை ஒரு அறிவிப்பாக இடலாம். இது குறித்து ஏற்கனவே இந்திய விக்கிக் குழுமத்தில் உரையாடியுள்ளோம். தகுந்த நிரலாளரைப் பெற்று ஒப்புதல் வாங்கிச் செயற்படுத்த வேண்டும்.
தமிழ் நன்கு தெரிந்த ஆங்கில விக்கியர்களைக்கடத்துவது நல்ல யோசனை :) சுந்தர், சோடா பாட்டில் ஆகியோர் ஆங்கில விக்கியில் இருந்து இங்கு வந்தோரே..--இரவி 11:16, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- சிறப்பான பதில்கள் சோடாபாட்டில்! இரவி, தேடல் பொறிகளில் முந்த வழிமாற்றுகள் உதவுவதில்லை:( ஏற்கனவே சோதித்து விட்டேன். மாற்று வழிகளை ஆராய வேண்டும். --அராபத்* عرفات 11:33, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- நல்ல பரிந்துரைகள், சோடாபாட்டில். இவற்றைத் தனியாக ஒரு பக்கத்தில் வைத்து உரையாடி செயல்படலாம். (ஆர்வமூட்டும் தலைப்புகளில் சிறப்புக் கட்டுரைகளை எழுதி en:WP:FAOL திட்டத்தின் வழியாக ஒத்த ஆங்கில விக்கிக் கட்டுரைகளில் இடம்பெறுவதும் அங்குள்ள தமிழ்ப்பங்களிப்பாளர்களை ஈர்க்கலாம்.) -- சுந்தர் \பேச்சு 13:01, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- ஒரு கட்டுரைக்கு வரும் வழிமாற்றுகளை கட்டுரையின் இறுதியில் - பகுப்புகளுக்கும் கீழே அல்லது விக்கி தோலுக்குள் ”இப்பக்கத்தைக் கடைசியாக xxx மணிக்குத் திருத்தினோம்" என்பதற்கு மேலே- ஒரு தொகுக்க முடியாத செக்ஷனில் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். இப்படி செய்தால் தேடுபொறிகளில் அப்பதங்கள் சிக்குகின்றனவா என்று சோதனை செய்து பார்க்கலாம். சிக்கின என்றால் இதனை 1)ஒற்றுப் பிழைகள் 2)தமிங்கல வார்த்தைகள் 3)கிரந்த வார்த்தகள் ஆகியவை கொண்ட வழிமாற்றுகளை தேடுபொறிகளில் சிக்க வைக்க ஏதுவாக இருக்கும்--சோடாபாட்டில் 14:05, 16 செப்டெம்பர் 2010 (UTC)
கேள்வி 2,3
தொகு- தமிழ் விக்கிப்பீடிய சமூகம் அண்மைய கட்டுரைப் போட்டியை நிறைவேற்றியதில் உள்ள குறைபாடுகள் எவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
- தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மலேசியா (1.5-2 மில்லியன்), ஐ.இரா (250 000), பிரான்சு (~100 000) ஆகிய நாடுகளில் இருந்து பயனர்களை ஈர்க்க உங்களிடம் ஏதாவது பரிந்துரைகள் உள்ளனவா? --Natkeeran 03:17, 17 செப்டெம்பர் 2010 (UTC)
- விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி
- 1) விக்கிப்பீடியா கட்டுரையென்றால் ”தகவல் கட்டுரை”, ரெண்டு மேற்கோள் காட்டி, ஊருக்கு உபதேசம் செய்யும் வழக்கமான காம்போசிசன் கட்டுரை அல்ல என்பதை மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லத் தவறிவிட்டோம். வந்து கொண்டிருந்து தலைப்புகளைப் பார்த்து நான் சொன்ன ஒரு டய்லாக் "ta wiki people have assumed that students of TN are competent enough to understand what is expected of them". துரதிர்ஷ்டவசமாக ஆட்டுமந்தைகளை வளர்க்கும் கல்விச் சூழல் உள்ள நாட்டில், பெரும்பான்மை மாணவர்களுக்கு “தகவல் கட்டுரை” என்றால வேறு என்பதைப் புரிந்து கொள்ள இயலவில்லை. (சுயமாக சிந்திப்பது இங்கு பெரும் பாவம் எனக் கருதப்படுவதால்). எனவே நமக்கு வந்த தலைப்புகளில் பாதிக்கு மேலே நீதி போதனைக் கட்டுரைகள் (”இதனால் மக்கள் அனைவரும் செய்ய வேண்டியது யாதெனில்”) அல்லது “சுய தம்பட்டக் க்ட்டுரைகள்” (”கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தமிழன் டைனோசருக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்தான்.....”). இதையும் தாண்டி சில நல்ல கட்டுரைகள் வந்தாலும் அவை தொடர்ந்து பங்களிப்பவர்களை உருவாக்கவில்லை (என்னையும் பவுல் அய்யாவையும் தவிர்த்து).
- 2) நாம் செய்திருக்க வேண்டியது என்னவென்றால் அ) கட்டுரைப் போட்டியை வெளி இணையதளத்துக்கு விட்டிருக்கக் கூடாது. அனைவரையும் இங்கு பதிய வைத்து அவரவர் பயனர்வெளியில் கட்டுரைகளை உருவாகக் வைத்திருக்க வேண்டும். (விக்கியாக்கத்துக்கு குறைந்த பட்ச மதிப்பெண்கள் என்று தெளிவாக எடுத்துச் சொல்லி, விக்கி ஃபார்மாட்டிங் பண்ணுங்கள் ஆனால் அது கட்டாயமல்ல என்று விளக்கியிருக்கலாம்). இதனால் நன்றாக எழுதக் கூடியவர்களுக்கு விக்கியில் பங்களித்த எமோஷனல் அப்பீல் இல்லாமல் போய் விட்டது. பரிசுகளை வாங்கியதும் சாதாரண கட்டுரைப் போட்டி போல பாவித்து மீண்டும் வராமல் போய் விட்டனர். எனவே அவர்களுக்கு ஒரு “விக்கி எக்ஸ்பீரியன்ஸ்” தரத் தவறி விட்டோம். நானும் பவுலும் தொடர்ந்து தங்கியதற்கு இதுவே காரணம் என்று நினைக்கிறேன் (த. விக்கி நம்முடையது. நாம் ஏதேனும் செய்ய வேண்டுமென்ற உந்துதல்) கட்டுரைகளைத் தரவேற்றும் பணிச்சுமை வெகுவாகக் குறைந்திருக்கும். ஆ) கட்டுரை மாதிரிகள்: இருண்டு மூன்று சிறந்த கட்டுரைகளை வடிவமைத்து விட்டு, நடை இது போல வேண்டும் என்று தெளிவாகச் சொல்லியிருந்தோமானால் பலர் அதைக் காப்பியடித்து எழுத முயற்சி செய்திருப்பார்கள், நமக்கும் விக்கி நடையில் கட்டுரைகள் கிடைத்திருக்கும்.
- இவை அனைத்தையும் நடைமுறைப்படுத்துவது. தமிழக அரசுடன் இணைந்து செயல்படும் போது சிவப்பு நாடா பிரச்சனையால் பெரும் கஷ்டம் என்பதை இரவியிடம் உரையாடும் போது உணர்ந்து கொண்டேன். ஆனால் நாம் வருங்காலத்தில் ஏதேனும் போட்டிகள் நடத்தினால் இவற்றைக் கருத்தில் கொள்ளலாம்.
- ஆமாம். தற்போது விக்கியில் நேரடியாக பங்களிக்கக் கேட்பது ஒரு நல்ல நடைமுறையாகவே தெரிகிறது. ஆனால் அப்போது விக்கி தொடரியல் (விக்கி syntax) இடையூறாக வருமோ என்பது ஒரு அக்கறையாக இருந்தது. பின் தளத்திலும் நாம் நடைமுறைப் படுத்திய விடயத்தில் நாம் கற்கைகளைப் பெற்றும் முன்னேற வேண்டும். இதர போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. --Natkeeran 16:01, 19 செப்டெம்பர் 2010 (UTC)
- மலேசிய, பிரன்சு, ஐ. ரா தமிழர்கள்
- இவர்களிடையே த. விக்கியைப் பிரபலப்படுத்துவதற்கு “மலேசிய நாள் / பிரான்சு நாள் / ஐ. ரா நாள்” என்று ஏதேனும் ஒரு நாளில் அந்நாட்டினைப் பற்றிய கவரேஜை அதிகம் செய்கிறோம் வாருங்கள் என்று அங்குள்ள தமிழர் அமைப்புகளின் மின் மடல் குழுமங்களுக்கு அழைப்பிதல அனுப்பலாம். புதியவர்கள் பங்களிக்க கட்டுரைகளை விட புகைப்படங்கள் எளிதானவை என்பதால் “விக்கிபீடியா டேக்ஸ் யூ. கே” போல த. விக்கியிலும் ஏற்பாடு செய்யலாம்.--சோடாபாட்டில் 04:32, 17 செப்டெம்பர் 2010 (UTC)
- நல்ல எண்ணக்கரு. இதை நாங்கள் யோசிக்க வில்லை. அங்கு அங்கு உள்ள தமிழர் அமைப்புகள், மின் மடல் குழுமங்களின் தொடர்புகளைப் பெற்று இந்த மாதிரி செயற்பாடுகளை செய்து பாக்கலாம். --Natkeeran 16:01, 19 செப்டெம்பர் 2010 (UTC)
- கட்டுரைப்போட்டியை நேரடியாக விக்கியிலேயே நடத்தி இருக்க வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். நீங்களே சுட்டிக் காட்டியுள்ளபடி, முதன்முறையாக, குறுகியகாலத்தில் அரசு போன்ற ஒரு பெரிய நிறுவனத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டி இருந்ததாலும், தமிழ் விக்கிப் பயனர் சமூகத்தின் வள அளவு காரணமாகவும் சில விசயங்களைச் சரி வரச் செய்ய இயலவில்லை. வெற்றி பெற்ற பயனர்கள் பலர் தமிழ் விக்கியில் நாம் கொடுத்திருந்த வழிகாட்டல்களைப் படித்துப்பார்த்துத் தான் எழுதி இருந்தனர். இன்றைய தலைமுறையின் பெரும்பகுதி மேம்போக்கான அணுகுமுறையுடனேயே இருக்கிறது என்பது பல இடங்களிலும் உணரப்படும் குறையாக இருக்கிறது.--இரவி 05:29, 17 செப்டெம்பர் 2010 (UTC)
வாழ்த்துகள்
தொகுவாக்கெடுப்பு முடிந்து சோடா பாட்டிலுக்கு நிருவாக அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. அவரது விக்கிப்பணியை மென்மேலும் சிறப்பாகச் செய்ய வாழ்த்துகள்--இரவி 15:24, 23 செப்டெம்பர் 2010 (UTC)
கலை (செப்டம்பர் 17, 2010 - செப்டம்பர் 24, 2010) ஓட்டு (18|0|0)
தொகுகலையரசி நோர்வே, பேர்கன் மருத்துவமனையில் சிறுநீரக ஆய்வியல் கூடத்தில் பணியாற்றுகிறார். 2008 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். மூச்சுத்தடை நோய், காச நோய், வடமுனை ஒளி, தொற்றுநோய், நோய்க்காரணி, எறும்பு முதலிய தலைப்புகளில் எழுதியுள்ளார். விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை, கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டச் சீரமைப்பு, விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்பு முதலிய திட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார். கட்டுரைப் போட்டியை முதன்மையாக நின்று ஒருங்கிணைத்தவர். -- Natkeeran 23:59, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- என்னை நிருவாகப் பொறுப்புக்கு பரிந்துரைத்த இரவிக்கும், ஏற்றுக் கொள்ளும்படி கருத்துத் தெரிவித்த செல்வா, மயூரநாதனுக்கும், மற்றும் மடலிட்டவர்களுக்கும் நன்றி. என்மேல் நம்பிக்கை வைத்து, ஏனையவர்களும் ஆதரவு தந்தால் ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவிக்கிறேன். நன்றி.--கலை 21:46, 16 செப்டெம்பர் 2010 (UTC)
ஆதரவு
தொகு- --Natkeeran 23:59, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- --செல்வா 00:08, 17 செப்டெம்பர் 2010 (UTC)
- --தேனி.எம்.சுப்பிரமணி. 01:14, 17 செப்டெம்பர் 2010 (UTC)
- --Kanags \உரையாடுக 03:14, 17 செப்டெம்பர் 2010 (UTC)
- --பவுல்-Paul 03:37, 17 செப்டெம்பர் 2010 (UTC)
- --அராபத்* عرفات 03:59, 17 செப்டெம்பர் 2010 (UTC)
- --Chandravathanaa 04:19, 17 செப்டெம்பர் 2010 (UTC)
- --சோடாபாட்டில் 04:33, 17 செப்டெம்பர் 2010 (UTC)
- --இரவி 05:29, 17 செப்டெம்பர் 2010 (UTC)
- --மயூரநாதன் 05:56, 17 செப்டெம்பர் 2010 (UTC)
- --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 06:01, 17 செப்டெம்பர் 2010 (UTC)
- --ராஜ்6644 09:53, 17 செப்டெம்பர் 2010 (UTC)
- --மணியன் 12:46, 17 செப்டெம்பர் 2010 (UTC)
- --குறும்பன் 14:25, 17 செப்டெம்பர் 2010 (UTC)
- -- சுந்தர் \பேச்சு 03:04, 18 செப்டெம்பர் 2010 (UTC)
- --மாஹிர் 10:25, 18 செப்டெம்பர் 2010 (UTC)
- --கார்த்திக் 05:04, 21 செப்டெம்பர் 2010 (UTC)
- --சி. செந்தி 11:48, 21 செப்டெம்பர் 2010 (UTC)
எதிர்ப்பு
தொகுநடுநிலை
தொகுகருத்து
தொகு- விக்கியின் வளர்ச்சியில் அரிய பங்களிப்புகளை மிகவும் பொறுப்பாகவும் சீராகவும் செய்துவரும் கலை ஒரு சிறந்த எடுத்துக்காட்டான பங்களிப்பாளர். அண்மையில் நடந்த கட்டுரைப் போட்டியில் அயராது கடும் உழைப்பையும் நல்கினார் என்பதை இங்கு நினைவு கூர்கின்றேன். வெற்றிபெற என் நல்வாழ்த்துகள்.--செல்வா 00:08, 17 செப்டெம்பர் 2010 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகிகள் பட்டியலில் இடம்பெற உள்ள கலை பல கலந்துரையாடல் நிகழ்வுகளில் பங்கேற்று, அந்நிகழ்வுகளில் தமிழ் விக்கிப்பீடியா குறித்து அறிமுகம் செய்வதுடன் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு அருமையான பல தலைப்புகளில் நல்ல கட்டுரைகள் அளித்திருக்கிறார். தமிழ் விக்கிப்பீடியாவின் முதல் பெண் நிர்வாகியாக தேர்வு செய்யப்படவுள்ளது குறித்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி. 01:23, 17 செப்டெம்பர் 2010 (UTC)
- தவறான பக்கங்களை நீக்குவது, விசமப்பயனர்களைத் தடுப்பது, தவறான தொகுப்புகளை மீள்விப்பது மிக முக்கியமான நிருவாகப் பணிகளாகும். இவற்றை இலகுவாக கற்றுக் கொள்ளலாம். நேரம் இருக்கும் போது செய்யலாம். இதனால், உங்கள் கட்டுரையாக்கப்பணி கண்டிப்பாகத் தடை பெறாது. நீங்கள் ஐரோப்பிய நேர வலயத்தில் இருந்து வரும் முதல் நிருவாகியாக இருப்பதால், 24 மணி நேரமும் தமிழ் விக்கியைக் கண்காணிக்க உதவியாக இருக்கும். முதல் பெண் xyz என்று சொல்வதே சில வளர்ந்த சமூகங்களில் புருவத்தை உயர்த்த வைக்கும். எனவே, முதல் பெண் நிருவாகி என்பதை வலியுறுத்த விரும்பவில்லை :) ஆனால், விக்கி இயக்கத்தைப் பொறுத்தவரை உலகளவிலேயே கூட இன்னும் கூடிய அளவு பெண்களின் பங்களிப்பைப் பெற முயன்று வருகிறார்கள். அந்த வகையில் உங்களின் தமிழ் விக்கிப் பங்களிப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை--இரவி 05:29, 17 செப்டெம்பர் 2010 (UTC)
- கலை தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மிகவும் சிறப்பாகப் பங்களிப்பவர்களுள் ஒருவர். முக்கியமான பொறுப்புக்களை ஏற்றுச் சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார். நிர்வாக அணுக்கம் பெறுவதற்கு மிகவும் பொருத்தமானவர். --மயூரநாதன் 06:09, 17 செப்டெம்பர் 2010 (UTC)
- கலையின் பங்காற்றால் தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக உள்ளது. சிறந்தக் கட்டுரை ஆக்கங்களைத் தவிர வெளியுலக பரவலுக்கும் பயிலரங்குகள் நடத்தி உள்ளார்.பல கலந்துரையாடல்களில் ஆக்கமுள்ள கருத்துக்கள் வழங்கியுள்ளார்.தமது விக்கி அனுபவத்தை உதவிக் கட்டுரைகளாக பலருக்கும் உதவும் வகையில் வடித்துள்ளார்.அவர் நிர்வாக அணுக்கம் பெறுதல் தமிழ் விக்கிக்கு மிக்கப் பயனளிக்கும்.--மணியன் 12:59, 17 செப்டெம்பர் 2010 (UTC)
கேள்விகள்
தொகு- கலையரசி, விக்கியின் வளர்ச்சிக்காக விக்கிக்கு வெளியே சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அவற்றில் நீங்கள் பங்களிக்கவும் செய்துள்ளீர்கள். இந்நிலையில் விக்கிக்கு வெளியேயான திட்டங்களில் நாம் கொள்கை அளவிலும், நுட்ப அளவிலும் பேண வேண்டியவை எவை? (பின்புலம்: விக்கிக்குள் மேற்கொள்ளும் திட்டத்தில் இவ்வூடகத்தின் விளைவாகப் பின்வருவன போற்றப்படுகின்றன. அ.) ஒருவருக்கே சுமை ஏற்படுவதில்லை. ஆ.) பங்களிப்பாளர்கள் அவர்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் கிடைக்கும் இடத்தில் இருந்து கொண்டே பங்களிக்க முடிகிறது. இ.) அனைவரது பங்களிப்புகளும் பக்க வரலாற்றில் முறையாகப் பதிவாகின்றன. ஈ.) விக்கியர்கள் அனைவரும் கூட்டுழைப்பின் தன்மையையும் கொள்கைகளையும் உணர்ந்திருக்கிறோம். ஆனால், செய்தித்தாள் நிருபர்கள் போன்றோர் அவற்றை அறியாமல் வெளியில் தெரியும் ஓரிருவரை முன்னிறுத்த வாய்ப்புண்டு.) நீளமான கேள்வியாகி விட்டது. எவர் ஒருவருக்கும் உறுதியாகத் தெரியாத விடை எனினும் சிந்தையைக் கிளருவதற்காகக் கேட்கிறேன். :) -- சுந்தர் \பேச்சு 06:21, 17 செப்டெம்பர் 2010 (UTC)
பதில்
தொகு- உங்கள் கேள்வியால் பலருடைய சிந்தனையையும் தூண்டியதற்கு முதலில் நன்றி சுந்தர்.
விக்கியின் வளர்ச்சிக்காக விக்கிக்கு வெளியேயான நடவடிக்கைகள் என்னும்போது விக்கி அறிமுகம், விக்கி கலந்துரையாடல்கள், விக்கி பயிற்சிப் பட்டறைகள், கூகிள் மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பு, கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்பு போன்றவற்றை நாம் எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம்.
விக்கிக்குள்ளேயே திட்டங்களை செயற்படுத்தும்போது நீங்கள் குறிப்பிட்டபடி அனைவரின் பங்களிப்பும் முழுமையாக, முறையாக பதிவு செய்யப்படுகின்றன. அதேநேரம் பலரும் கூட்டாக இணைந்து ஒரே இடத்தில் தொழிற்படுவதால், அந்தக் கூட்டுழைப்பின் முக்கியத்துவம் இலகுவாக உணரப்படுவதுடன், ஒருவருக்கான சுமை குறைக்கப்படுகிறது. தவிரவும், அவரவர் தமக்கு கிடைக்கும் நேரத்தில், விரும்பியபோது, விரும்பிய அளவில் தமது பங்களிப்பை செய்ய முடிகிறது.
ஆனால் விக்கிக்கு வெளியான திட்டங்களில், திட்டங்களுக்கு ஏற்ப இவ்வகையான புரிந்துணர்வுடன் கூடிய கொள்கைகளை சரிவர நிறைவேற்ற முடியாமல் போகின்றது. அதற்கு நாம் எதிர்காலத்தில் இவை தொடர்பான சில கொள்கைகளைப் பின்பற்றலாம். வெளிப்படைத் தன்மையும், கூட்டுழைப்பும் இங்கே முக்கியமாகக் கொள்ளப்பட வேண்டும். இதற்குத் தேவையான கருவிகளும், வளங்களும் கண்டெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும். தகுந்த திட்டமிடலும், ஒருங்கிணைப்பும் இங்கே அவசியமாகிறது.
- செய்தித்தாள் நிருபர்கள் ஓரிருவரை முன்னிறுத்துவதைத் தவிர்க்கவும், குறிப்பிட்ட நிகழ்ச்சி அல்லது திட்டம்பற்றி பிழையான தகவல்கள் அல்லது தெளிவற்ற தகவல்கள் வெளி வருவதைத் தவிர்க்கவும், ஆரம்பத்திலேயே அதுபற்றி விக்கியில் அனைவரின் பார்வைக்கும் பொதுவில் அறிவிக்கலாம். இந்த வெளிப்படையான அறிவிப்பைப்பற்றி விக்கியில் பயனரல்லாத, ஆனால் வெளியே அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சி அல்லது திட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கும் அறிவிக்கலாம். அவசியமேற்படின், அது தொடர்பான அச்சடிக்கப்பட்ட செய்தி வெளியீடுகளை எழுத்து வடிவில் தயாரித்து வழங்கலாம். அந்த வெளியீடானது விக்கியில் பொதுப் பார்வைக்குட்பட்டும், அனைவரும் இணைந்தே தயாரிக்கலாம். இதை சரிவரச் செய்யாமல் போனதால், நடந்து முடிந்த கட்டுரைப் போட்டி தொடர்பாக இவ்வாறு சில தவறான தகவல்கள் வந்தது அறிந்ததே.
- நிகழ்ச்சி அல்லது திட்டம் விக்கிக்கு வெளியான வேறு நபர்கள் அல்லது நிறுவனங்களுடன் சேர்ந்து நடத்தப்படும்போது, அவைபற்றி ஆரம்பத்தில் எடுக்கும் முடிவுகள் சரியானபடி நடைமுறைப் படுத்தப்படும் என்பதை உறுதி செய்து கொள்வது விக்கி தனது நல்மதிப்பை இழக்காது இருக்க உதவும். எடுத்துக்காட்டுக்கு, கட்டுரைப் போட்டியில் மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், அது பின்னர் நடைமுறைப் படுத்தப்படவில்லை என நினைக்கிறேன் (சரியாகத் தெரியவில்லை).
- விக்கிப் பயனர்கள் கலந்துகொள்ளும் விக்கி தொடர்பான நிகழ்ச்சிகளைப்பற்றி முதலிலேயே விக்கியில் அறிவிக்க வேண்டும். அந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதவர்கள் கூட விக்கிமூலமாக தமது பங்களிப்பை வழங்க முடியும். ஏனையோரது கருத்துக்களும் இதன் மூலம் அந்த நிகழ்ச்சிக்கு வழங்கப்படும். இதனால் கூட்டுழைப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்படும்.
- விக்கிப் பயனர் ஒருவர், இப்படியான வெளி நிகழ்ச்சி அல்லது திட்டங்களில் கலந்து கொள்ளும்போது, ஒருவர் தான் பயனர், நிருவாகி, அதிகாரி என எந்தவொரு படிநிலையில் இருந்தாலும் தன்னை பயனராக மட்டும் அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் விக்கியானது கூட்டுழைப்பாலான ஒன்று என்பதை ஆணித்தரமாக எடுத்துக் கூறலாம். ஒரு சில விக்கிப்பீடியர்கள் தம்மைத் தாமே பெரியவர்களாகக் காட்டிக்கொள்ள விளையும்போதும், இவ்வாறான தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. (ஓரிருவரால் அப்படி ஏற்பட்டதாக அறிந்ததால் அதுபற்றி குறிப்பிடுகிறேன்).
மேலும் இவ்வாறு வெளி நிகழ்ச்சிகளில் ஒருவர் பங்குபற்றும்போது, அதில் பங்குபற்றாத ஒரு பயனரின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டியவிடத்து, அதனை பங்குபற்றுபவர் தவறாது தரவேண்டும். சில விடயங்களில் தாம் ஒருவராக முடிவுகளைக் கூறுவதைத் தவிர்த்து, விக்கி சமூகத்தைத் தொடர்புகொள்ள வெளியில் இருப்பவர்கள் கேட்டுக் கொள்ளப்படலாம்.
- நிகழ்ச்சி, அல்லது திட்டம் தொடர்ந்து வெளிப்படையான பார்வைக்கு சரியான முறையில் ஆவணப்படுத்தப்பட வேண்டும். (நான் கட்டுரைப்போட்டி தொடர்பாக நடந்த நடவடிக்கைகள் முழுவதையும் எனது விடுமுறை முடிந்து வந்த பின்னர் ஆவணப்படுத்துவதாக கூறியிருந்தேன். இன்னமும் அதனைச் செய்யவில்லை என்பது இப்போதுதான் நினைவுக்கு வருகிறது :(. ஒருவேளை சுந்தர் இதனை எனக்கு நினைவுபடுத்தத்தான் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டாரோ? :). பல பிரச்சனைகள் காரணமாக இதனை செய்ய முடியாமல் போய்விட்டது. கூடிய விரைவில் இதனை செய்ய முயல்கிறேன்).
கலந்துரையாடல்கள், பயிற்சிப் பட்டறைகள் போன்றன ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்றே நினைக்கிறேன்.
இவ்வாறு ஆவணப்படுத்தப்படுவதனால், பயனர் ஒவ்வொருவரது உழைப்பையும் ஒரு வகையில் பதிவு செய்து வைக்கவும் முடிகிறது. எடுத்துக்காட்டுக்கு, கூகிள் மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பு திட்டத்தில் ஓரிருவர் மட்டுமே அதிக உழைப்பை விக்கிக்கு வெளியே இருந்து செய்யும்போது, அவர்களது உழைப்பும் பதிவு செய்யப்பட இந்த ஆவணப்படுத்தல் உதவுகிறது.
- கலந்துரையாடல், பயிற்சிப் பட்டறைகள் போன்ற நிகழ்வுகள் தவிர்ந்த, ஏனைய திட்டங்களை முடிந்தவரையில் விக்கிக்குள்ளேயே வைத்து செய்வது நல்லது. அதனால் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே சுமையேற்றப்படாமல், பலரும் பணிகளை பகிர்ந்து செய்ய முடிவதோடு, முற்று முழுதான வெளிப்படைத் தன்மையும் பேணப்படும். இது வருங்காலத்தில் பின்பற்றப்படுவது நல்லது என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு கட்டுரைப் போட்டி தொடர்பாக நாம் சந்திக்க வேண்டியிருந்த இன்னல்கள் (விக்கியில் எழுத ஆரம்பித்த பின்னர், நான் மறந்து போயிருந்த, தொடர்ந்து பயன்படுத்தி வராத பல தமிழ்ச் சொற்கள் சரளமாக நினைவுக்கு வருவது எனக்கு கிடைத்த நன்மையில் ஒன்று :). இந்த இன்னல் என்ற சொல்லும் அப்படி மறந்து போயிருந்த ஒன்று). அந்த இன்னல்கள்பற்றி விரிவாக அது தொடர்பான ஆவணப்படுத்தலில் குறிப்பிடலாம் என நினைக்கிறேன். கட்டுரைப்போட்டியில் கட்டுரைகள் நேரடியாக ஒரு தனிப்பட்ட பயனர் வெளியில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது அனைவரும் இறுதியில் ஏற்றுக்கொண்டுள்ள ஒன்று. அப்படிச் செய்திருந்தால் பலரது சுமைகளும் குறைக்கப்படிருப்பதுடன் வெளிப்படையாகவும் இருந்திருக்கும்.
பெரிய கேள்வியாதலால், நானும் பெரிய பதிலாகவே தந்துவிட்டேன் என நினைக்கிறேன். :)
- ஆழமாக எண்ணிப் பார்த்து விடையளித்தமைக்கு நன்றி, கலை. பொதுவாக, ஆங்கில விக்கி நிருவாகிகளுக்கான வாக்கெடுப்பில் நிருவாகப் பணிகள் தொடர்பான கேள்விகளைக் கேட்பதன் நோக்கம், ஒரு நபரைப் பற்றி அறியாத பயனர்கள் அந்நபரை மதிப்பிட்டு அதனடிப்படையில் வாக்களிப்பதற்காகவே. இங்கு நாம் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துள்ளதால் அந்தத் தேவை ஏற்படவில்லை. இருந்தாலும் இந்தச் சாக்கில் சில தொலைநோக்குக் கேள்விகளைக் கேட்டால் நீங்கள் தந்துள்ளது போல் நல்ல விடைகள் கிடைக்கும் என்பதாலேயே கேட்டேன், மற்றபடி இது
தேர்வுக்கான கேள்வி இல்லை. :)
- உங்கள் பரிந்துரைகளை வேறு ஒரு திட்டப்பக்கத்தில் வைத்து உரையாடி ஒரு முறை வகுக்கலாம். -- சுந்தர் \பேச்சு 03:03, 18 செப்டெம்பர் 2010 (UTC)
வாழ்த்துகள்
தொகுவாக்கெடுப்பு முடிந்து கலைக்கு நிருவாக அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. அவரது விக்கிப்பணியை மென்மேலும் சிறப்பாகச் செய்ய வாழ்த்துகள். (தவறுதலாக வாக்கெடுப்பு முடிய ஒரு நாள் முன்னரே அணுக்கத்தைச் செயற்படுத்தி விட்டேன். எனினும், ஒருமித்த கருத்து இருப்பதால் இதனைப் பொருட்படுத்த வேண்டாம் என நினைக்கிறேன்)--இரவி 15:24, 23 செப்டெம்பர் 2010 (UTC)
எனக்கு நிருவாக அணுக்கம் கிடைப்பதற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். என்னால் முடிந்தவரை மேலதிக பங்களிப்பை விக்கிப்பீடியாவுக்கு வழங்குவேன்.--கலை 14:48, 24 செப்டெம்பர் 2010 (UTC)