விக்கிப்பீடியா:அதிகாரி தரத்துக்கான வேண்டுகோள்கள்

வாக்கு நிலவரம்: (6/0/0)

  • I nominate Ravi for bureaucratship. Mayooranathan 16:31, 2 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி, மயூரநாதன். இந்த நியமனத்தை ஏற்கிறேன்--Ravidreams 16:58, 2 பெப்ரவரி 2007 (UTC)

ஆதரவு (Support)

  • --கோபி 16:36, 2 பெப்ரவரி 2007 (UTC)
  • ---பயன் பெருக்குவார். --செல்வா 17:06, 2 பெப்ரவரி 2007 (UTC)
  • --Sivakumar \பேச்சு 17:58, 2 பெப்ரவரி 2007 (UTC)
  • ----Umapathy 18:50, 2 பெப்ரவரி 2007 (UTC)
  • --Natkeeran 22:14, 2 பெப்ரவரி 2007 (UTC)
  • --Kanags 02:41, 3 பெப்ரவரி 2007 (UTC)

எதிர்ப்பு (Oppose)

  • ---

நடுநிலை (Neutral)

  • ---

அதிகாரி அணுக்கம்

தொகு

ரவிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பின் அடிப்படையில் அதிகாரிக்கான அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழ் விக்கிபீடியாவுக்கான உங்கள் பங்களிப்பை மேலும் பயனுள்ளதாக்க உதவும் என நம்புகிறேன். உங்கள் அணுக்கத்தைச் சோதித்துப் பார்க்க விரும்பினால் நிர்வாகி அணுக்கம் கோரியுள்ளவர்களில் ஒருவருக்கு அணுக்கத்தை வழங்கிச் சோதித்துப் பார்க்கவும். வாழ்த்துக்கள். Mayooranathan 18:15, 9 பெப்ரவரி 2007 (UTC)

என் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பை அளித்த அனைவருக்கும் என் நன்றிகள். வருங்காலத்திலும் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட உறுதி அளிக்கிறேன். --Ravidreams 20:29, 9 பெப்ரவரி 2007 (UTC)

நற்கீரன்

தொகு

வாக்கு நிலவரம்: (4/0/0)

  • I nominate Natkeeran for bureaucratship. Mayooranathan 16:31, 2 பெப்ரவரி 2007 (UTC)
    • நன்றி, மயூரநாதன். இந்த நியமனத்தை ஏற்கிறேன்.--Natkeeran 16:33, 2 பெப்ரவரி 2007 (UTC)

ஆதரவு (Support)

  • --கோபி 16:37, 2 பெப்ரவரி 2007 (UTC)
  • --Ravidreams 16:58, 2 பெப்ரவரி 2007 (UTC)
  • -----செல்வா 17:06, 2 பெப்ரவரி 2007 (UTC)
  • --Sivakumar \பேச்சு 17:58, 2 பெப்ரவரி 2007 (UTC)
  • Regular user contributed in a constructive way. bureaucratship definitely will bring more benefits to Tamil Wikipedia----Umapathy 18:53, 2 பெப்ரவரி 2007 (UTC)
  • --Kanags 02:41, 3 பெப்ரவரி 2007 (UTC)

எதிர்ப்பு (Oppose)

  • ---

நடுநிலை (Neutral)

  • ---

அதிகாரி அணுக்கம்

தொகு

நற்கீரனுக்கு நடைபெற்ற வாக்கெடுப்பின் அடிப்படையில் அதிகாரிக்கான அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழ் விக்கிபீடியாவுக்கான உங்கள் பங்களிப்பை மேலும் பயனுள்ளதாக்க உதவும் என நம்புகிறேன். உங்கள் அணுக்கத்தைச் சோதித்துப் பார்க்க விரும்பினால் நிர்வாகி அணுக்கம் கோரியுள்ளவர்களில் ஒருவருக்கு அணுக்கத்தை வழங்கிச் சோதித்துப் பார்க்கவும். வாழ்த்துக்கள். Mayooranathan 18:15, 9 பெப்ரவரி 2007 (UTC)

அனைவருக்கும், நன்றி. --Natkeeran 19:52, 9 பெப்ரவரி 2007 (UTC)

வாக்கு நிலவரம்: (3/0/0)

ஆதரவு (Support)

எதிர்ப்பு (Oppose)

  • ---

நடுநிலை (Neutral)

  • ---

வாக்கு நிலவரம்: (3/1/0)


ஆதரவு (Support)

எதிர்ப்பு (Oppose)

  • Ravi has no doubt been one of the best users around in Tamil wikipedia, and his contributions has no doubt helped ta-wikipedia come a long way in the past six months. He has been using his adminship to good effect and has been great in encouraging and helping new users. But his judgement has been found wanting at certain times. I would like to see this user become less rigid and more accommodating. I can already see him developing these good qualities. When the number of users increase, and system of voting in Tamil Wikipedia become more functional and if he continues his good job (which I am sure he will), I can see him as a good candidate for bureaucratship, after perhaps, three months. But not yet. -ஸ்ரீநிவாசன் 04:48, 23 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

நடுநிலை (Neutral)

  • ---

கருத்துக்கள் (Comments)

  • தமிழ் விக்கிபீடியாவில் முதல் முறையாக நிர்வாகிகள்/அதிகாரிகள் தேர்தலில் ஸ்ரீநிவாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது ஒரு வகையில் நல்லதே. அதாவது, இது போன்ற சூழல்களில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றி நமக்கு ஒரு அனுபவம் கிடைக்கிறது. தனிப்பட்ட முறையில் ரவிக்கு எனது ஆதரவு உள்ளது என்றாலும் ஸ்ரீநிவாசனின் கருத்தை மதிக்கிறேன். நம்மில் எவரும் இந்த ஓட்டை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதே என் வேண்டுகோள். கண்டிப்பாக, இரவி, இந்த ஒரு எதிர்ப்பு வாக்குப்பதிவு சில குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமேயன்றி அவர் மீதான பொதுக்கருத்து அல்ல என உணர்ந்து எந்த ஒரு மனக்கசப்புமின்றி ஏற்றுக்கொள்ளுவார் என நம்புகிறேன்.

-Sundar \பேச்சு 05:20, 23 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

    • Yes. I am sure Ravi knows that I don't have anything personal against him, and will take my vote in a good spirit. All I wanted to say was that he needs a little more experience as a wikipedian before he becomes a bureaucrat. Also, until the number of active users becomes large enough, and the system of consensus becomes more functional, (ie., until ta wikipedia becomes truly democratic) I think it is not a good idea to have too many bureaucrats. -ஸ்ரீநிவாசன் 06:56, 23 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
  • இங்கு ஒரு அதிகார படிநிலை தோன்றி, தேவையற்ற விவாதங்களில் விழுந்துவிடுவோமே என்று பயமாக இருக்கின்றது. எனக்கு பயனர், நிர்வாகி, அதிகாரி போன்ற பதங்களே விக்கிபீடியாவின் ஆரம்ப கொள்கைகளுக்கு புறப்பானதாக தெரிகின்றது. இவ் வேறுபாடுகளுக்கான விளக்கம் நிச்சியம் தேவைப்படுகின்றது. நிர்வாகி ஆவதோ, அதிகாரி ஆவதோ ஆங்கில விக்கிபீடியாவுடன் இணைந்து செயல்பட உதவும் என்பதாலேயே நான் தற்போதைக்கு ஏற்றுக்கொள்கின்றேன். --Natkeeran 07:52, 23 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
    • ஒரு வேளை ஆங்கில விக்கிபீடியாவில் நிர்வாகிகளோ அதிகாரிகளோ தங்கள் ஆட்சி அதிகாரத்தை காட்டிக்கொள்கிறார்களோ என்னவோ தெரியவில்லை. இது குறித்து ஸ்ரீநிவாசன் அவரது வலைப்பதிவில் ஒரு முறை வருந்தி எழுதி இருந்தார். தமிழ் விக்கிபீடியாவை பொறுத்த வரை இது வரை இம்மாதிரியான பதவிகள் (?)விக்கிபீடியா தள பராமரிப்பை விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஒரு மேற்படி பொறுப்பாகத்தான் இருந்து வருகிறது. நான் அறிந்து கொண்ட மட்டிலும் அதிகாரி பொறுப்பில் உள்ளவர்கள் பயனர்கள் பெயரை மாற்றலாம், நீக்கப்பட்ட பக்கங்களை மீட்கலாம், பயனர்களுக்கு பதவி உயர்த்தலாம், பயனர்களைத் தடுக்கலாம். அவ்வளவு தான். விக்கிபீடியா நிர்வாகியோ அதிகாரியோ அனைத்துப் பயனர்களின் கருத்தொற்றுமையில் எடுத்த முடிவுகளை செயற்படுத்த ஒரு கருவி தானே தவிர தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பதில்லை. அப்படி தவறாக முடிவு எடுக்கும் பட்சத்தில் அவற்றை முன்னிலைப்படுத்தும் வசதி மற்ற அதிகாரிகளுக்கு உண்டு என்று நம்புகிறேன். நிர்வாகி பொறுப்பில் நான் இருக்கும் மட்டிலும் இந்த கொள்கைகளுக்கு உடன்பட்டு தான் இருந்து வந்திருக்கிறேன் என்று தான் நினைக்கிறேன். குறைந்த பட்ச பயனர்கள் இருக்கும் வரையிலும் இந்த வாக்கெடுப்பிற்கு பெரிய அர்த்தம் இருக்காது. எதிர்ப்பு வாக்கு ஒன்று தான் என்றாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். நான் மேற்குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் பணியை பகிர்ந்து கொள்ள சுந்தர் ஒருவர் போதும் என நினைக்கிறேன். இதன் மூலம் மயூரநாதனின் சுமையை குறைக்கவும் அவர் விடுப்பில் செல்லும் போது தளத்தை கவனித்துக்கொள்ளவும் ஏதுவாக இருக்கும். அதிகாரிகள் பணிச்சுமை ஏற்படும்போது மேற்படி அதிகாரிகளை நியமிப்பது குறித்து கலந்துரையாடலாம். ஆதரவு தெரிவித்த சுந்தர், சிவக்குமாருக்கும் கருத்துக்கள் தெரிவித்த நற்கீரனுக்கும் ஆலோசனைகள் தெரிவித்த ஸ்ரீநிவாசனுக்கும் நன்றி. நிச்சயம் இதை நான் தனிபட்ட முறையில் எடுத்துக்கொள்ளப் போவதில்லை. கருத்தையும் அதை சொன்னவரையும் தனித்தனியாகத்தான் பார்க்கிறேன். எந்த ஒரு திட்டத்தின் நல் வளர்ச்சிக்கும் மாற்றுக் கருத்துடையவர்களும் அவசியம்.--ரவி (பேச்சு) 08:43, 23 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
    • நற்கீரன், நிர்வாகி, அதிகாரி போன்றவை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தேவைப்படுகின்றன. இன்னும் கூடுதலான வருணர்கள் வரும்பொழுது சில நாச வேலைகளும் நடக்கும். அப்பொழுது சில மென்பொருள் வசதிகள் நம்பிக்கைக்குறிய அனுபவமிக்க பயனர்களிடம் இருத்தல் அவசியம். இது அதிகார படிநிலைகளை உருவாக்காமல் இருக்க வேண்டுமானால் முதலில் இவை ஒரு பதவியோ அல்லது சிறப்பு அதிகாரமோ இல்லை என்பதை முழுவதும் உணர்த்த வேண்டும். தன்னிச்சையாக எந்த ஒரு முடிவும் எடுக்கும் உரிமை இவர்களுக்கு இருத்தல் கூடாது. முழுக்க முழுக்க இணக்கமுறை முடிவுகளையும் கொள்கைகளையும் மட்டும் செயல்படுத்துதல் வேண்டும். இந்த விடயத்தை நாம் விவாதிக்கும்போது கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் - இனி பக்கங்களை நீக்கும்போது ஒரு பொதுப்பக்கத்தில் தெரிவித்துவிட்டு யாரும் எதிர்க்காதபோது மட்டுமே நீக்க வேண்டும். தேவைப்பட்டால் வாக்கெடுப்பு நடைபெற வேண்டும். விக்கிபீடியா:நிக்கல் கொள்கை வகுக்கப்பட வேண்டும். இதன் பின் இந்த வசதிகளைப் பெருவாரியான, ஆனால், நம்பிக்கைக்குறிய பயனர்களிடம் தருவது மூலம் அதிகாரம் வேண்டிய அளவு பரவலாக்கப் பட ஏதுவாகும். இவர்கள் தெரிவு செய்யப்படுவதற்கான தகுதிகளும் முறையும் உறுதியாகப் பின்படுத்தப்படவேண்டும். -- Sundar \பேச்சு 09:21, 23 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
  • நற்கீரன், நான் அதிகாரி வாக்கெடுப்பில் ஒருவருடைய நியமத்திற்கு எதிராக வாக்களித்ததையும் நிர்வாகி பொறுப்பையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். நிர்வாகி என்பது ஒரு பதவியோ, பொறுப்போ கூட இல்லை. நீங்கள் ஒரு நல்ல நோக்கம் கொண்ட பயனர் என உறுதிப்படுத்திக் கொண்ட பின் உங்களிடமிருந்து இதுவரை மறைக்கப் பட்டிருந்த சில பயனுள்ள கருவிகள் உங்களுக்கு அறிமுகப்படுத்தப் படுகின்றன. அவ்வளவே. உதாரணமாக நிர்வாகி ஆன பின் நீங்கள் தேவையற்ற பக்கங்களை நீக்கலாம், அவசரப் பட்டு நீக்கிய பக்கங்களை மீட்கலாம், எளிதாக பக்கங்களை முன்னிலைப் படுத்தலாம்,.... அதற்கு நீங்கள் விக்கிபீடியாவில் பங்களிக்கும் முறைகளைப் பற்றி ஓரளவு நன்கு அறிந்தவராகவும், ஒரு நல்ல நோக்குள்ள நம்பிக்கையான பயனராகவும் மட்டும் இருந்தாலே போதுமானது. ஆனால் அதிகாரி என்பவர் கூடுதலாக பயனர்களின் நிலையை உயர்த்தவது, பயனர் பெயர் மாற்றம் செய்வது போன்றவற்றை செய்யும் அதிகாரம் உடையவர். ஆனால் அவரும் தானாக ஒரு முடிவை எடுக்க முடியாது. ஒரு காரியத்தை மொத்த பயனர்களில் குறிப்பிட்ட சதவிகித்தினருக்கு மேல் அதற்கு ஆதரவு அளிக்கும் போதே இவ்வாறு செய்ய முடியும். ஆனால் இங்கு தமிழ் விக்கிபீடியாவில் கொள்கைகள் முழுவதாக வடிவு பெறாமல் இருப்பதாலும், பயனர்களின் எண்ணிக்கை வெகு குறைவாக இருப்பதாலும் வாக்கெடுப்பு முறை இப்போதைக்கு அவ்வளவு வளர்ச்சி அடையவில்லை என்பது என் கருத்து. இக்காரணத்தாலும், என் வாக்கில் கூறிய காரணங்களாலும், பயனர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் நிர்வாகி நியமனம், பெயர் மாற்றம் போன்றவைக்கான விண்ணப்பம் இன்னும் சில மாதங்களுக்கு குறைவாகவே இருக்கும் என்ற காரணத்தாலும், இப்போதைக்கு சில அதிகாரிகளே போதும் என்று நான் கருதியதால் ஒருவருக்கு மட்டுமே வாக்களித்தேன். சிக்கலான விவாதங்களில் அதிகாரியின் கருத்துகளுக்கு கொஞ்சம் மதிப்பு இருக்கும் என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். இப்போதைக்கு நல்ல நோக்கம் கொண்ட பயனர்களே இங்கு இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும்போது அதிகாரியின் முக்கியத்துவம் உங்களுக்கு புரியும்.
ரவி, சிலவற்றை நீங்கள் தப்பாக புரிந்துகொண்டீர் என்று தோன்றுகிறது. ஆங்கில விக்கிபீடியாவில் என் மூன்று மாத அனுபவத்தில் எந்த அதிகாரியுமே தன் ஆட்சி அதிகாரத்தை காட்டிக் கொண்டதை நான் கண்டதில்லை. என் வலைப்பதிவிலும் நான் எதைப்பற்றியும் வருந்தி எழுதவில்லை. சார்புக் கருத்துகளை விக்கிபீடியாவில் திணிக்க முயற்சிப்பவர்களும், ஏன் நாச வேலை செய்பவர்களையும் கூட விக்கிபீடியா அனுமதித்த பின்பும் அது வெற்றி பெறுவதை நினைத்து பூரித்து தான் எழுதியிருந்தேன். என் வலைப்பதிவைப் பற்றி மேலும் விவாதிக்க இது சரியான இடம் இல்லை என நினைக்கிறேன். இது பற்றி மேலும் விளக்கம் தேவைப்பட்டால் உங்கள் பேேச்சுப் பக்கத்தில் கொடுக்கிறேன். -ஸ்ரீநிவாசன் 18:57, 24 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

ஸ்ரீநிவாசன், ஒரு முறை உங்கள் வலைப்பதிவில் நான் குறிப்பிட்டவாறு நீங்கள் எழுதி இருந்ததாக ஞாபகம். அது வேறொருவர் வலைப்பதிவாகவும் இருக்கலாம். மற்றபடி, நீங்கள் கொடுத்துள்ள விளக்கங்கள், நிர்வாகிகள், அதிகாரிகள் ஆகியோரின் பொறுப்பு, தேர்ந்து எடுக்கும் முறை குறித்து நம்முள் ஒரு தெளிவு உண்டாக வழிவகுத்துள்ளது. இப்பொழுது எந்தக் குழப்பமும் தப்பான புரிந்துணர்வும் இல்லை. நன்றி--ரவி (பேச்சு) 14:54, 25 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

ஒரு எதிர்ப்பு வாக்குக் காரணமாக ரவி என்னுடைய முன்மொழிவை ஏற்றுக்கொள்ள முடியாமற் போனமைக்காக வருந்துகிறேன். ரவி அதிகாரி பதவிக்கு முற்றிலும் பொருத்தமான ஒருவர் என்பதே என்னுடைய கருத்து. I do not think he is rigid and less accommodating. அவர் விக்கிபீடியா நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கின்ற ஒருவர் என்பதுடன் தன்னுடைய செயற்பாடுகள் மூலம் தன்னுடைய ஜனநாயக அணுகுமுறைகளைப் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளார். ஒரு எதிர்ப்பு வாக்குக் காரணமாக அதிகாரிதரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. தமிழ் விக்கிபீடியா ஆரம்பநிலையில் இருக்கிறது, குறைந்த பங்களிப்பாளர்களே இருக்கிறார்கள் என்பதற்காக எல்லாச் சந்தர்ப்பங்களிலும் மெத்தனமாக இருந்துவிட முடியாது. உறுதியான நடவடிக்கைகளும் அவசியம். இவ்வாறான ஒரு இயல்பைத்தான் நான் அவரிடம் காண்கிறேன். இன்னும் காலதாமதம் ஆகிவிடவில்லை. Mayooranathan 13:56, 29 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
ரவியின் உறுதியான நடவடிக்கைகள் அவசியமானவை என்று மயூரநாதன் கருதலாம். ஆனால் அதிகாரி தர்த்தை ஏற்றுக்கொள்ளும் முன் அவருக்கு இன்னும் சற்று அனுபவமும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் தேவை என்ற என் வாக்கில் நான் உறுதியாகவே உள்ளேன். ஒரு வாக்கெடுப்பில் தன் கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை யாவருக்கும் உண்டு. நான் வாக்களிக்கும் போது என்னுடைய வாக்கு மட்டுமே ரவிக்கு எதிரான வாக்காக இருக்கும் என்பது நான் எதிர்பார்த்தது தான். ஆனால் இந்த ஒரே வாக்குக்காக அவர் அதிகாரி தரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது நான் எதிர்பார்க்காதது. ரவி அத்தரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது அவருடைய தனிப்பட்ட முடிவு. இப்பொழுதும் அதிகபட்ச வாக்குகள் அவருக்கு சாதகமாக இருப்பதால் தன் முடிவை மாற்றிக்கொண்டு தரத்தை ஏற்றுக்கொள்ள அவருக்கு உரிமை உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. ஒரு வாக்கெடுப்பில் தான் வெற்றிபெற அனைவரும் தனக்கு சாதகமாகவே வாக்களிக்க வேண்டும் என்று அவர் கருதினால் அது அவருடைய தவறு. அப்படியிருந்தால் ஏன் ஜனநாயகம், ஏன் வாக்கெடுப்பு முறை? -ஸ்ரீநிவாசன் 16:16, 29 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
ஆஹா..இந்த விடயத்தை இப்படியே விட்டு விட்டு மூன்று மாதம் கழித்து நானே அதிகாரி தகுதிக்கு சுய நியமனம் செய்யலாம் என்று இருந்தேன். திரும்ப விவாதம் ஆரம்பமாகி விட்டது :) இங்கு முனைப்பாக செயல்படும் பயனர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தான். 4,5 பேரை வைத்துக்கொண்டு தேர்தல் நடத்துவதே சில சமயம் வேடிக்கையாக இருக்கிறது. எனினும், விக்கிபீடியாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே சனநாயக நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது விக்கிபீடியா கொள்கைகளின் படி தேவைப்படுவதால் தான் இந்த தேர்தல் தற்பொழுது தேவைப்படுகிறது. எல்லாரும் எனக்கு சாதகமாக வாக்களிக்க வேண்டும் என எதிர்பார்க்க வில்லை. எனினும், ஸ்ரீநிவாசனின் வாதத்திலும் எதிர்பார்ப்பிலும் நியாயம் இருப்பதாகத் தோன்றியதால் தான் நியமனத்தை மறுத்தேன். குருட்டாம்போக்கில் ஏவரேனும் எதிர்க்கும் பட்சத்தில் தான் அதை நிராகரிக்க நினைத்திருப்பேன். நாம் அனைவரும் ஒரு குழுவாக இங்கு செயல்படும் வரை நாம் அனைவரும் கருத்தொருமித்து செயல்பட வேண்டியது அவசியம். தான் ஒருத்தர் எதிர்த்து என்ன ஆகப்போகிறது என்று ஒருவர் நினைக்க ஆரம்பித்து விட்டால் நாளை விக்கிபீடியாவில் மாற்றுக்கருத்து தெரிவிக்கும் வழக்கத்தை கொண்டு வர கடினமாகிவிடும். அதனால் மிகக் குறைந்த பயனர்கள் இங்கு இருக்கும் வரை எதிர்ப்பு வாக்கிற்கான காரணத்தையும் வாக்களித்தவரின் பங்களிப்புகளையும் கருத்தில் கொண்டு அந்த நியமனத்தை மறுப்பதே தகுந்தது என நினைத்தேன். ஒரு நண்பர்கள் குழுவில் ஒருவருக்கு உடன்பாடில்லை என்றாலும் சில விடயங்களை செய்யாமல் விட்டு விடுகிறோம் அல்லவா? அது போல தான் இதுவுமே தவிர ஒருத்தர் எதிர்த்து வாக்களித்து விட்டார் என்று கோபித்துக் கொண்டெல்லாம் இருக்கவில்லை :). எனினும், ஸ்ரீநிவாசன் சொன்னது போல் இது என் தனிப்பட்ட முடிவு தான். --ரவி (பேச்சு) 18:15, 29 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
இந்த வாக்கெடுப்பில் எதிர்ப்பு வாக்கு ஒன்று மட்டுமே இருந்தாலும், அதற்கு ரவியும் மற்றோரும் (சற்று அதிகமாகவே) மதிப்பளித்ததற்கு நன்றி. குறைவானவர்களை வைத்துக்கொண்டு வாக்கெடுப்பு நடத்துவது வேடிக்கையாக இருப்பதாக ரவி குறிப்பிட்டார். இந்த வேடிக்கை விளையாட்டு சற்று சீரியஸானதாக மாறியிருந்தால் அதையே என் வாக்கின் வெற்றியாக கருதுகிறேன். எதிர் வரும் வாக்கெடுப்புகளிலும் வாக்களிப்போர் நட்பு போன்றவற்றை மனதில் கொள்ளாமல் விக்கிபீடியாவின் நன்மைக்காக அவர்தம் கருத்துகளை, சரியோ தவறோ, தயங்காமல் வெளிப்படுத்துவர் என நம்புகிறேன். அதிகாரி தரத்தை ஒரு எதிர் வாக்குக்காக மறுத்த ரவியின் தனிப்பட்ட முடிவையும் இதில் வெளிப்படும் அவருடைய நற்பண்பையும் மதிக்கிறேன். எனினும் இந்த முடிவை எதிர்ப்பு வாக்கு வந்த சில மணி நேரங்களிலேயே எடுத்ததற்கு மாறாக மற்றோரும் வாக்களிக்க ஒரு வாய்ப்பு அளித்து ஓரிரு வாரங்கள் கழித்து வாக்கெடுப்பு முடிந்தவுடன் எடுத்திருக்கலாம். என் வாக்கு நிலையில் எந்த மாற்றமும் இல்லை. எனினும், 80% வாக்குக்கள் ரவியின் அதிகாரி தரத்துக்கு சாதகமாக இருப்பதால் அவர் இத்தரத்தை ஏற்றுக்கொள்ள முழு உரிமை உண்டு என்று நான் கருதுவதை மீண்டும் தெளிவு படுத்துகிறேன். -ஸ்ரீநிவாசன் 03:48, 30 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

அதிகாரி

தொகு

சுந்தருக்கு அதிகாரி தரத்துக்கான அணுக்கத்தை ஏற்படுத்தியுள்ளேன். தமிழ் விக்கிபீடியாவுக்கான அவரது பணி மேலும் சிறப்பாகத் தொடர எனது வாழ்த்துக்கள். அவர் மேற்படி வசதியைப் பயன்படுத்தி நற்கீரனையும், சிவகுமாரையும் நிர்வாகிகள் ஆக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் சுந்தர் தனக்குக் கிடைத்துள்ள புதிய வசதி செயற்படுகிறதா எனப் பரீட்சித்துப் பார்க்கலாம். Mayooranathan 13:56, 29 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

எனக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் நன்றி. மயூரநாதன், அதிகாரிகளுக்கான சிறப்பு அணுக்க வசதிகளுக்கான இணைப்புகள் எங்குள்ளன என்று தெரியவில்லை. ஆங்கில விக்கியில் உள்ள Special:Makesysop என்ற இணைப்பையும் Special:நிர்வாகியாக்கு என்ற இணைப்பையும் பயன்படுத்திப் பார்த்தேன். பயனில்லை. ஒருவேளை பதிகையில் பதிந்திருந்தாலும் அணுக்கம் இன்னும் செயற்படுத்தப்படவில்லையோ என்று தோன்றுகிறது. -- Sundar \பேச்சு 14:22, 29 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
இங்கே ஏதோ பிரச்சினை இருப்பதுபோல் தெரிகிறது. சிறப்புப் பக்கங்களில் user rights managemet என்பதைத்தான் சில மணிநேரத்துக்கு முன் நான் பயன்படுத்தினேன். இப்பொழுது பார்க்கும்போது என்னுடைய பக்கத்திலிருந்தும் அது மறைந்துவிட்டது. I have written to Angela. We will wait for her reply. Mayooranathan 18:36, 29 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
ஓ, அப்படியா. சரி. ஏஞ்சலாவின் பதில் வரும் வரை காத்திருப்போம். -- Sundar \பேச்சு 04:32, 30 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
எனக்கு அதிகாரிக்கான அணுக்கங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. அதைப் பயன்படுத்தி சிவகுமாருக்கும், நற்கீரனுக்கும் நிர்வாகி அணுக்கத்தை ஏற்படுத்தியுள்ளேன். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். -- Sundar \பேச்சு 10:02, 3 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

பாஹிம்

தொகு

வாக்கு நிலவரம்:

ஆதரவு (Support)

எதிர்ப்பு (Oppose)

  • ---

நடுநிலை (Neutral)

  • ---
  • கருத்து (comments)

@Fahimrazick: தற்போது தான் உங்கள் நியமனக் கோரிக்கையைக் கண்டேன். தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். நிர்வாகிகள் தேர்ந்தெடுப்புக்கான கொள்கையே கடந்த 5 ஆண்டுகளாக காலாவதி ஆகியுள்ள நிலையில், புதிய அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறை என்னவென்று தெளிவில்லை. விக்கிப்பீடியா பேச்சு:விக்கி நிர்வாகிகள் பள்ளி பார்க்கவும். புதிய நிர்வாகிகளைச் சேர்ப்பதற்கான முறை வெற்றி பெற்ற பிறகு, இதே போன்று புதிய அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான முறையும் செயற்படுத்தப்படும். நன்றி. --இரவி (பேச்சு) 05:39, 25 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]