விக்கிப்பீடியா:அதிகாரிகள் உரையாடல்

அதிகாரிகள் செயற்படுத்த வேண்டிய முடிவுகள் தொடர்பான உரையாடல் இங்கு இடம்பெறும்.

புதிய நிருவாகிகள் அறிவிப்பு தொகு

வணக்கம் @Mayooranathan, Sundar, and Natkeeran: .

பார்க்க:

5 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்று வரும் நிருவாகிகள் தேர்தலில் ஆர்வமுள்ள பலர் பங்கு பெற்று வருகின்றனர். எனினும், புதிதாக இயற்றி உள்ள விக்கி நிர்வாகிகள் பள்ளி கொள்கையின் படி ஒவ்வொரு காலாண்டிலும் ஆக அதிகம் 6 பேர் நிருவாகிகளாகப் பொறுப்பேற்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறோம்.

தேர்தலில் பங்கு கொள்கிற பெரும்பாலானோரும் காலாண்டுகள் காத்திருந்து நிருவாகப் பொறுப்பு ஏற்க சம்மதம் தெரிவித்து உள்ளார்கள்.

இவர்களில் யாருக்கு முன்னுரிமை தந்து முதல் ஆறு பேரை அறிவிப்பது?

என்னுடைய யோசனைகள் சில:

  • உடனே வேண்டும் என்று விண்ணப்பித்தவர்களுக்கு உடனே அணுக்கம் வழங்கலாம்.
  • புதியவர்கள், நெடுநாள் பயனர்கள், ஆண்கள்/பெண்கள், இலங்கை/தமிழகம் பயனர்கள், நுட்பப் பங்களிப்பு உள்ளவர்கள் என்று பல்வேறு பின்புலம் உள்ளோரைத் தேர்ந்தெடுத்து முதலில் நிருவாக அணுக்கம் வழங்கலாம்.
  • Randomizer போன்ற கருவிகளைப் பயன்படுத்தி யாரேனும் ஆறு பேரை முதலில் அறிவிக்கலாம்.
  • தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவரையும் அவர்களுக்குள் பேசி இணக்க முடிவு எடுத்து ஒரு பட்டியலைத் தரச் சொல்லலாம்.

அடுத்த காலாண்டில் விக்கி நிர்வாகிகள் பள்ளிக் கொள்கையை மீளாய்வு செய்யும் போது, இவ்வாறு எழும் சூழல்களையும் கருத்தில் கொண்டு கொள்கையை மேம்படுத்த வேண்டிய தேவையை உணர்கிறேன்.

உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 14:04, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]

தேர்ந்தெடுத்தவர்களிடையே இணக்கமுடிவையெட்டச்சொல்வது ஒரு சிறப்பான வாய்ப்பாக அமையலாம். அதன்மூலம் (பொதுவாக ஈடான தேர்வுகளின்போது) வாக்கெடுப்பு என்பது இணக்கமுடிவை எட்டுவதற்கான வழிமுறையென்பதை நிலைநிறுத்தமுடியும். அவ்வாறு எணக்கமுடிவுக்கு வருவதற்கு ஓர் உள்ளீடாகப் பின்வரும் பார்வைகளை முன்வைக்கிறேன்.
  • கருவிகளைப் பயன்படுத்தினால் உடனடியாகப் பயன்பெற பயன்தரத்தக்க சில பயனர்கள். (எ.கா. துப்புரவுப்பணிகளில் நாட்டமுள்ளவர்கள்)
  • கருத்துத் தெரிவிக்கும்போது நிருவாகி அதிகாரி பொறுப்புக்களினால் ஏதும் சிறப்பு நிலை ஏதும் இல்லாவிட்டாலும், நிருவாகக் கருவிகளைப் பயன்படுத்திச் செயற்படுத்தும் முடிவுகளை எடுப்பதிலும் செயற்படுத்துவதிலும் சில சிக்கல்களை அந்தந்த அணுக்கம் கொண்டோர் கூடுதலாக உணரவாய்ப்புண்டு. இப்போது நம்முன் உள்ள முடிவைப்போல. ஆகையால் நெடிய அனுபவமுள்ள சிலருக்கும் தரலாம். கொள்கைப் புரிதல் உரையாடல்களில் ஈடுபாடு முதலியவற்றைக் கருத்தில் கொள்ளலாம்.
  • ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசு என்பதால் ஒரு கலவையாக இருத்தல் என்றும் நல்லது.

தவிர நிருவாகியாவதென்பதை ஒருவகையில் பெரிதாக எண்ணவேண்டியதில்லை என்பதையும் தெரிவிக்கலாம். -- சுந்தர் \பேச்சு 09:25, 13 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Sundar: நன்றி சுந்தர். பேச்சுப் பக்கத்தில் மயூரநாதன் இட்டுள்ள கருத்துகளையும் கவனிக்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 09:52, 13 சனவரி 2019 (UTC)[பதிலளி]