விக்கிப்பீடியா பேச்சு:அதிகாரிகள் உரையாடல்
அமீரகத்திலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டு இலங்கைக்கு வந்த பின்னர் பல்வேறு காரணங்களால் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பில் போதிய கவனம் செலுத்த இயலாமல் போய்விட்டது. இதனால், விக்கி நிர்வாகிகள் பள்ளி தொடர்பான கலந்துரையாடல்களிலும் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. இதற்காக வருந்துகிறேன்.
குறித்த ஒரு காலாண்டுக்கான நிர்வாகிகள் தெரிவுக்காக வேண்டுகோள் முன்வைப்பதற்கு ஏதாவது கால எல்லை உண்டா அல்லது அக்காலாண்டு இறுதிவரை வேண்டுகோள்களை முன்வைக்க முடியுமா என்பது குறித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை தெளிவாக விளக்கவில்லை என்று தோன்றுகின்றது. இதற்கு ஒரு கால எல்லை விதித்தால் நல்லது. கால எல்லை இல்லாவிட்டால் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக வேண்டுகோள்கள் வந்துகொண்டேயிருக்கும். இவ்வாறான சூழ்நிலையைக் கையாள்வது கடினம்.
தற்போதைய நிலையில் நிர்வாகிகள் தெரிவுக்குப் பின்வருவனவற்றுள் ஒன்றைக் கையாளலாம் என்பது எனது கருத்து.
- கடந்த 5 ஆண்டுகளாக நிர்வாகிகள் தெரிவு நடைபெறவில்லை என்பதால், முதல் காலாண்டில் மட்டும் கூடுதலானவர்களைத் தெரிவு செய்யலாம். (தற்போது அணுக்கம் வேண்டுபவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் நிர்வாக அணுக்கங்களைப் பயன்படுத்துவதற்கு அதிக உதவி தேவைப்படாது என்றே தோன்றுகிறது. எனவே, முதல் காலாண்டுக்கு இதுவரை வேண்டுகோள் முன்வைத்து ஏற்றுக்கொள்ளப்படும் எல்லோரையுமே தெரிவு செய்யலாம்.)
- ஆறு பேருக்கு மட்டுமே அணுக்கம் வழங்கமுடியும் எனின், 12 வேண்டுகோள்கள் கிடைத்ததும் (இதுவரை 10 வேண்டுகோள்கள் உள்ளன) புதிய வேண்டுகோள்கள் ஏற்பதை நிறுத்திவிட்டு, முதல் ஆறு பேரையும் முதல் காலாண்டுக்கும், அடுத்த ஆறு பேரையும் அடுத்த காலாண்டுக்கும் தெரிவு செய்யலாம். (அணுக்கம் கோரியுள்ளவர்களில் ஒருவரைத் தவிர ஏனையோர் காத்திருக்க விருப்பம் தெரிவித்துள்ளதால் இதில் சிக்கல் இருக்காது.) மீண்டும் புதிய வேண்டுகோள்கள் ஏற்பதை மூன்றாம் காலாண்டில் தொடங்கலாம். --மயூரநாதன் (பேச்சு) 14:48, 11 சனவரி 2019 (UTC)
//புதியவர்கள், நெடுநாள் பயனர்கள், ஆண்கள்/பெண்கள், இலங்கை/தமிழகம் பயனர்கள், நுட்பப் பங்களிப்பு உள்ளவர்கள் என்று பல்வேறு பின்புலம் உள்ளோரைத் தேர்ந்தெடுத்து முதலில் நிருவாக அணுக்கம் வழங்கலாம்.// இது இப்போதைக்குத் தேவைப்படாது என்று எண்ணுகிறேன். எதிர்காலத்தில் வேண்டுமானால், ஆறு தெரிவுகளில் ஒன்றைத் தேவைப்படும்போது இவ்வாறான முன்னுரிமைத் தெரிவுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். -- மயூரநாதன் (பேச்சு) 15:20, 11 சனவரி 2019 (UTC)
- @Mayooranathan: உங்கள் கருத்துகளை ஏற்கிறேன். முதலில் வேண்டுகோள் விடுத்து தேர்வாகும் ஆறு பேருக்கும் முதல் காலாண்டில் அணுக்கம் வழங்குவது எனக்கு ஏற்பே. ஒட்டு மொத்தமாக 10 பேருக்கும் அணுக்கம் வழங்க தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு என்றாலும், கொள்கையின் போது இது சுட்டிக் காட்டப்பட்டு ஆறு என்று எண்ணிக்கைக்கு ஒப்புக் கொண்டுச் சமூகம் வாக்களித்து உள்ளதால், அதையே பின்பற்ற விரும்புகிறேன். தேர்தல் தேதி அறிவுப்பு, வேட்பு மனு ஏற்கப்படும் காலம், யார் வாக்களிக்கலாம் என்பது போன்ற இன்னும் பல வரையறைகளைச் சேர்க்க வேண்டியுள்ளது. அடுத்த காலாண்டில் கொள்கையை மீளாய்வு செய்யும் போது இவற்றைக் கருத்தில் கொள்ளலாம். நன்றி. --இரவி (பேச்சு) 08:49, 12 சனவரி 2019 (UTC)
- @Mayooranathan: எனக்கும் உங்கள் பரிந்துரை சரியாகவே படுகிறது. எனக்கும் உகப்பே. -- சுந்தர் \பேச்சு 13:14, 14 சனவரி 2019 (UTC)
- @Mayooranathan and Sundar: வேட்பு மனு தாக்கல் செய்த கால வரிசையின் அடிப்படையில் தேர்வாகும் முதல் ஆறு பயனர்களுக்கு உடனடி நிருவாக அணுக்கமும் எஞ்சியவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் நிருவாக அணுக்கமும் வழங்குவது என்பதை நம் அனைவரின் இணக்க முடிவாக இங்கு பதிவு செய்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 18:17, 14 சனவரி 2019 (UTC)
- @Ravidreams: இரவி மேலேயுள்ள உங்கள் பரிந்துரையை ஏற்கிறேன். -- சுந்தர் \பேச்சு 05:57, 15 சனவரி 2019 (UTC)
- @Ravidreams: நானும் ஏற்கிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 07:52, 15 சனவரி 2019 (UTC)
- @Mayooranathan and Sundar: வேட்பு மனு தாக்கல் செய்த கால வரிசையின் அடிப்படையில் தேர்வாகும் முதல் ஆறு பயனர்களுக்கு உடனடி நிருவாக அணுக்கமும் எஞ்சியவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் நிருவாக அணுக்கமும் வழங்குவது என்பதை நம் அனைவரின் இணக்க முடிவாக இங்கு பதிவு செய்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 18:17, 14 சனவரி 2019 (UTC)