விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)/தொகுப்பு02

சான்றைப் பெற்றுத்தரும் தானி

தொகு

http://toolserver.org/~verisimilus/Bot/DOI_bot/ - இந்தத் தானியைத் தமிழ் விக்கியில் சான்றுகளை இணைக்குமாறு செய்ய இயலுமா? மிகவும் பயனுள்ளதாக இருக்கும். -- சுந்தர் \பேச்சு 08:59, 10 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

என் விருப்பத் தேர்வுகள் சரியாக தொழிற்படவில்லை

தொகு
  • என் விருப்பத் தேர்வுகளில் போய், பயனர் தரவு, தோற்றம், நாள் நேரம், தொகுத்தல், அண்மைய மாற்றங்கள், கவனிப்புப்பட்டியல், தேடல் விருப்பத் தேர்வுகள், பலதரப்பட்டவை, கருவிகள் போன்ற எந்த ஒன்றில் போய் அழுத்தினாலும், "பயனர் தரவு" பக்கத்தை மட்டுமே திறக்கின்றது. நேற்று வீட்டில் இருக்கும்போது சரியாகவே வேலை செய்தது. இன்று அலுவலகத்தில் இருக்கும்போதுதான் இப்படி. என்ன காரணம் என்று தெரியவில்லை.
  • தவிரவும் சில பக்கங்களைத் திறக்கும்போது, சில நேரங்களில் 'want to stop the script?' message வருகின்றது. ஆனால் முன்பு போல் அல்லாமல் தொகுப்புப் பெட்டியில் விரைவாகத் தட்டச்ச முடிகின்றது.
  • விக்சனரி பார்!, இது சொற்களின் மீது இரண்டு சொடுக்குகள் செய்யும்போது அவற்றுக்கான பொருளை விக்சனரியிலிருந்து கொண்டுவந்து தரும். என்ற கருவியைச் செயல்படுத்தினேன். ஆனால் எந்த ஒரு சொல்லின் மேல் இரண்டு சொடுக்குகள் செய்தாலும், அது குறிப்பிட்ட பக்கத்தின் தொகுப்புப் பெட்டிக்கே போகின்றது. அது ஏன்?

--கலை (பேச்சு) 10:51, 11 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

நானும் அலுவலகக் கணினியில் நாளை சோதித்துப் பார்க்கிறேன்.--Kanags \உரையாடுக 11:14, 11 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

என். எச். எம். இரைட்டர் பயன்படுத்தும்போதும் இவ்வாறான சிக்கல்கள் (முதலாவதும் மூன்றாவதும்) எழுவதுண்டு. --மதனாகரன் (பேச்சு) 05:49, 12 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

என். எச். எம். இரைட்டர் பயன்படுத்தவில்லை. அலுவலகக் கணினியில் எந்த ஒரு மென்பொருளையும் தரவிறக்கம் செய்யவும் முடியாது. நான் த.வி. யிலுள்ள 'தமிழில் எழுத' தட்டச்சு உதவியைப் பயன்படுத்தியே தமிழில் தட்டச்சு செய்கின்றேன். --கலை (பேச்சு) 10:27, 12 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம். கலை உங்களுக்கு மட்டும் இல்லை எனக்கும் இதே பிரச்சனைதான், காரணம் ஒரு சில நிறுவனங்களுக்கு சொந்தமான பாதுகாப்பு தரவுகள் உள்ள கணனிகளில் அனைத்து மென்பொருளும் பாவிக்க முடியாதபடி தடை செய்திப்பார்கள், அதனால் எனக்கும் இதே பிரச்சனைதான் அதனால் இப்போது நான் யேர்மனியில் எனது வீட்டில் இருக்கும் கணணியை வெளிநாடுகளில் இருந்து இயக்குகிறேன். நான் இப்போது இத்தாலியில் இருகின்றேன், ஆனால் எனது விக்கி இணைப்பு யேர்மனி. --சிவம் 19:26, 12 அக்டோபர் 2012 (UTC)

  • 1 & 2. விருப்பத்தேர்வு பக்கம் translatewiki யிலும் அவ்வாறே வழுவுடன் இருந்தால் பக்ஸில்லாவில் வழு பதியுங்கள். பொதுவாக நிரலாக்குவோர் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் சோதிக்கமல் இருப்பதால் வழுக்கள் தப்பலாம்.
  • 3. விக்சனரி பார்! கருவியின் அம்சமே நீங்கள் கூறியது தான். அது வழு அல்ல :) ஸ்‌ரீகாந்த் (பேச்சு) 00:24, 16 அக்டோபர் 2012 (UTC) விரைவில் பார்க்கிறேன். நன்றி[பதிலளி]

விக்கி மின்னூல்வசதி

தொகு

விக்கிமூலத்தில் தமிழிசை என்ற பக்கத்தினை உருவாக்கினேன். அதனை மின்னூலாக மாற்றி பார்த்தபோது, வரியமைப்புகள் பிசகாமல் அப்படியே வந்தது. ஆனால் சொற்கள் கொக்கி கொக்கியாக வருகிறது. ஏன்?ods முறையிலும் உருவான கோப்பு உருவாக்கிய அமைப்பில் வரவில்லை. ஆனால் தமிழ் எழுத்துக்கள் மின்னூலைவிட சரியாக வந்தது. பிற பதிவிறக்க முறைகள்(zim,epub) எதற்கு என்றும் புரியவில்லை.விளக்குக.ஆவலுடன்..-- உழவன் +உரை.. 19:12, 12 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

//"கொக்கி கொக்கியாக" என்பதற்கு படக்காட்சி உதவும். // என்பது எனக்குப் புரியவில்லை. மின்னூலில்(pdf) எழுத்துக்கள் படிக்கும்படி வரவில்லை.கொக்கிகொக்கியாக வருகிறது. தெளிவாக தமிழ் எழுத்துக்களைத் தெரிய என்ன செய்யவேண்டும்? மற்ற குறிப்புகளுக்கு நன்றி! ஸ்‌ரீகாந்த்!-- உழவன் +உரை.. 19:02, 18 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

இற்றைப்படுத்துதல்

தொகு

http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm#wikipedians இப்பக்கம் இரண்டு மாதங்களுக்கு மேலாக இற்றைப்படுத்தாமல் உள்ளது, கவணிக்கவும். நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:26, 15 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

நானறிந்து ஒரு தடவை இதை 20ஆம் தேதி தான் இற்றைப்படுத்தினார்கள். அதாவது செப்டம்பர் மாதத்தீர்கு அக்டோபர் 20 இற்றைப்படுத்தப்படும் என்று நினைக்கிறேன். தற்போது ஆகத்து முடிய இற்றைப்படுத்தப்பட்டுளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:59, 15 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

இன்று இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:03, 19 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

விக்கிமூல வார்ப்புரு பட வழு

தொகு

தற்போதுள்ள விக்கிமூல வார்ப்புருவில் உள்ள படத்தில் வழு இருக்கிறதென்றே கருதுகிறேன் #switch சரியாக வேலை செய்யவில்லை. காண்க: வார்ப்புரு பேச்சு:விக்கிமூலம் / விக்கிமூலத்திற்கான படம் -- உழவன் +உரை.. 19:07, 18 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

 Y ஆயிற்று, திட்டத்தின் பெயர் {{sister}} வார்ப்புருவில் ஆங்கிலத்திலும், {{விக்கிமூலம்}}இதில் தமிழிலும் இருந்தததால் இயல்பாக வரும் விக்கிமீடியா சின்னம் வந்துவிட்டது--சண்முகம்ப7 (பேச்சு) 01:28, 19 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
விளக்கியமைக்கு நன்றி.6முகம்!-- உழவன் +உரை.. 06:13, 19 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

புகுபதிகையில் பிழை

தொகு

இங்கே அலுப்பு வந்தால், சில நேரங்களில் பிற விக்கித் திட்டங்களை, குறிப்பாக (ஆங்கிலம் உட்பட) பிற மொழி விக்கிப்பீடியாக்களையும் பார்வையிடுவேன். இங்குள்ள தமிழ்க் கட்டுரைகளின் இணைக் கட்டுரைகளின் அளவு எப்படி உள்ளது, சிறியதா, அதிக தகவல்கள் வழங்கியுள்ளார்களா என்று பார்த்து வருவேன். சில நேரங்களில் மொழி அறியாத விக்கிகளுக்கும் சென்று, தமிழ் தொடர்பான கட்டுரைகளை உருவாக்குமாறு கோருவதுமுண்டு. எங்கேனும் தவறான உள்ளடக்கம் இருந்தால் நீக்கல் வார்ப்புருவை இடுவேன். தானியங்கிகள் செய்ய்யுமென்றாலும், சில நேரங்களில் இடையிணைப்பையும் வழங்குவேன். இதுபோன்றே இந்தி மற்றும் சிங்கள விக்கியில் நுழைய முயன்றேன். என் கணக்கு தடை செய்யப்பட்டிருப்பதாக செய்தி வருகிறது. முன்பு பயன்படுத்திய பழைய கணக்கினைக் கொண்டு புகுபதிந்தேன். பிரச்சனை இல்லை. இப்போதைய தமிழ்ப் பெயரைக் கொண்டு நுழைந்தேன். முடியவில்லை. தமிழ்ப் பெயர்கள் புகுபதியாதவாறு ஏதேனும் தடை உள்ளனவா? நிஜத்தில் தான் எதிரிகள் போல் செயல்படுகிறார்கள், இங்குமா? பிற விக்கிகளில் இப்பிரச்சனை இல்லை. தமிழ்ப் பெயர்கள் உள்ளவர்கள் நுழைந்து பார்த்து கூறுங்கள்.

செய்தி இதுவே:

Login error
<The user name "தமிழ்க்குரிசில்" has been banned from creation. It matches the following blacklist entry: <code> (?!(User|Wikipedia|File)(
talk)?:|Talk:)\P{L}*[^\p{Tamil}\P{L}].*\p{Tamil}.* # Tamil + anything else</code>> 

கட்டுரைகளில் மொழிகளில் வரும் தொகுப்புகளை நான் செய்வதில்லை.. சோதித்துப் பார்த்து கூறுங்கள். நான் செய்வது தவறா? நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:50, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

என்னுடையது ஆங்கிலத்தில் இருப்பதால் பிரச்சினை இல்லை. ஆனால் இந்தி விக்கிப்பீடியா தூதரகத்தில் இதுபோல ஒரு சிங்கள மொழிப் பயனர் முறையிட்டுள்ளதைப் பார்த்தேன். அவருக்கு மட்டும் சிங்களத்தில் புகுபதிகை செய்ய அனுமதித்துள்ளதுபோல உரையாடலில் தெரிகிறது. இது விக்கிமீடியா நிறுவனத்திற்கு தெரியுமா எனத் தெரியவில்லை. இதனால் ஏதேனும் பயன் உண்டெனில் நாமும் பிறமொழிப் பெயர்களை தடுத்து விடலாமே ?--மணியன் (பேச்சு) 06:37, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
இது மொழித் துவேஷத்துக்கு வழிவகுக்குமே! ஒருங்குறியின் நோக்கத்தைக் குலைப்பதைப் போல் இருக்கும்!. சென்னையில் வாழும் மலையாளியோ, தெலுங்கரோ, தம் தாய்மொழியில் பெயர் வைத்துக் கொண்டு தமிழ் விக்கியில் பங்களிக்க முடியாமல் போகுமே. அதே போன்றே தமிழ்ப் பெயர் வைத்துக் கொண்டு பிற மொழி விக்கிகளில் பங்களிப்பவர்க்கும்! இதனால் என்ன நன்மை இருக்கும் எனக் கருதுகிறீர்கள்? விசமத் தொகுப்புகள் குறையுமென்றா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:47, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
இது ஆங்கில விக்கிப்பிடியாவின் en:Mediawiki:Titleblacklistஐ நகலெடுத்தால் வந்த வினை, எதோ காரணத்திற்காக தமிழ்ப்பெயர்களை தடுத்துள்ளார்கள், பிறகு அவற்றை இற்றைப்படுத்தவேயில்லை, பார்க்க hi:Mediawiki:Titleblacklist si:Mediawiki:Titleblacklist, இது குறித்து மேலாளர்களிடம் உரையாடியதில் அவை அனைத்தும் குப்பையான பழைய நிரல்கள் என கூறினர், மேலும் இது குறித்து குறிப்பிட்ட திட்டங்களின் ஏதாவது ஒரு நிர்வாகியை தொடர்பு கொள்ளுங்கள், (பார்க்க hi:special:listadmins, si:special:listadmins). உங்களுக்கு ஏற்படும் பாதிப்பை தெரிவியுங்கள், இந்த கறுப்புபட்டியலை? தமிழ் பயனர் பெயர்களில் கணக்கு உருவாக்க அனுமதிக்குமாறு கேளுங்கள், இது தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் தொழில்நுட்ப உதவி தேவையெனில் m:User:Billinghurst இவரை தொடர்பு கொள்ளுமாறு கூறுங்கள் @ மணியன்: குறிப்பிட்ட ஒரே பெயரில் கணக்கு உருவாக்கி விசமத்தனம் செய்பவர்கள், தவறான வார்த்தைகளை கொண்ட பெயர்களை தடுப்பதற்காகவே Mediawiki:Titleblacklist பயன்படுகிறது, எதற்காக தமிழ்ப் பெயர்களை தடுத்தார்கள் எனத் தெரியவில்லை :(.. கண்டிப்பாக நாம் அவ்வாறு செய்யத் தேவையில்லை என நினைக்கிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 07:02, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
si wiki & hi wiki செயலிலுள்ள நிர்வாகிகள் பட்டியல்--சண்முகம்ப7 (பேச்சு) 07:10, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
சுட்டிகளுடன் விரிவான விளக்கத்திற்கு நன்றி சண்முகம் ! நாம் தடை செய்ய வேண்டும் எனக் கூறவில்லை. இவ்வாறான தடைகளால் ஏதேனும் தொழில்நுட்பப் பயனிருந்து அவர்கள் செய்திருந்தால் அவை என்ன என அறியவே அவ்வாறு கூறினேன். மற்றொன்று, இவ்வாறான நமது பட்டியல் இல்லை போலிருக்கிறதே ! ஏசு/வசவு சொற்களிலும் மற்றும் கட்டுப்பாட்டுச் சொற்களிலும் பயனர் பெயர் உருவாவதைத் தடுக்கவாவது ஒரு பட்டியல் இருக்க வேண்டாவா ?--மணியன் (பேச்சு) 09:08, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
மேல் விக்கியில் உலகளவிய தடைப்பட்டியல் உள்ளது மணியன்m:Titleblacklist, இதில் ஆங்கில வசவு வார்த்தைகளுக்கு தடுக்க பொதுவான பட்டியல் உள்ளது, தமிழில் அல்லது தமிழ் விக்கியில் மட்டும் இது போன்ற ஏதாவது கணக்குகள் உருவானால் பார்த்துக் கொள்ளலாம் :)--சண்முகம்ப7 (பேச்சு) 12:40, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

  விருப்பம் விரிவான விளக்கத்திற்கு நன்றி சண்முகம்! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:01, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

விரைவுப்பகுப்பியில் தமிழ் உள்ளீடு

தொகு

எனக்கு ஆட்கேட்டில் (விரைவு பகுப்பி) தமிழ் உள்ளீடு செய்யவியலவில்லையே. தேடுதல்,தொகுத்தல் பெட்டிகளில் தமிழ் உள்ளீடு முடிகிறது. --மணியன் (பேச்சு) 04:57, 25 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

நீங்கள் எந்த இடத்தை சொல்கிறீர்கள், உரலி, நூலின் பெயர் இதெல்லாம் வருமெ அங்கா? எனக்கு ஒழுங்காக வருகிறதே.

சில சமயங்களில் தேடல் பகுதியில் தமிழ் உள்ளீடு செய்ய முடிந்தும், தொகுத்தலில் நீல நிறமே வராமல் போவதுண்டு. ரீலோட் செய்தால் சரியாகிவிடும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:03, 25 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

  • மேலுள்ள தமிழில் எழுத வசதி மூலம், தமிழ்99முறையில் தட்டச்சினைத் தெரிவு செய்து விரைவுப் பகுப்பியைத் தவிர மற்ற இடங்களில் தட்டச்ச முடிகிறது. ஆனால், விரைவிப்பகுப்பியில் ஏன் தட்டச்சிட இயலவில்லை?-- உழவன் +உரை.. 04:51, 28 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

ஆம். தற்போது தான் இந்த சிக்கல் உள்ளது போல் தெரிகிறது. முதலில் மணியன் கேட்டதை நான் புரூவிட்டில் கேட்கிறார் என நினைத்துக் கொண்டேன். ஆனால் விரைவுப்பகுப்பியில் முன்னர் எழுத்துப்பெயர்ப்பு முறையிலும் தமிழ் உள்ளீட முடிந்தது. தற்போது இந்த புதுச்சிக்கலுக்கு வலு பதிய வேண்டுமா இல்லையா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:00, 28 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

எனக்கும் இச்சிக்கல் வருகிறது தமிழில் எழுத என்பது செயற்பாட்டில் உள்ளபோது முன்னர் தமிழில் விரைவுப்பகுப்பியில் எழுத முடிந்தது தற்போது அப்படி எழுதினால் அது ஆங்கிலத்தில் வருகிறது.--சங்கீர்த்தன் (பேச்சு) 10:38, 28 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

எனக்கும் இச்சிக்கல் வருகிறது தமிழில் எழுத என்பது செயற்பாட்டில் உள்ளபோது முன்னர் தமிழில் விரைவுப்பகுப்பியில் எழுத முடிந்தது தற்போது அப்படி எழுதினால் அது ஆங்கிலத்தில் வருகிறது.--Natkeeran (பேச்சு) 04:38, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

சங்கீர்த்தனன் எழுதிய வரிகளை அப்படியே வெட்டி ஒட்டி அக்கருத்தை சங்கீர்த்தனன் கருத்துக்கு கீழேயே எழுதியவரின் பெயர் குறிப்பிடாமல் விட்டிருக்கிறார் நமது நக்கீரர். இது விக்கிப்பீடியா பதிப்புரிமை விதிகளை ஒட்டி வரம்பு மீறிய செயலாகும். இதனால் நக்கீரர் பயன்ரை தடை செய்ய வேண்டும். :)-

இதற்கு வழு பதியலாமா கூடாதா? நமது சிறிகாந்தும் சண்முகமும் எங்கே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:14, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

உள்ளேன் ஐயா :), அனைத்து திட்டங்களிலும் இது வேலை செய்யவில்லை, பிரச்சினை hotcat (மீடியாவிக்கி:Gadget-HotCat.js)கருவியிலா அல்லது நரயத்திலா என தெரியவில்லை, விரைவில் ஸ்ரீகாந்த்தை தொந்தரவு செய்து ஒரு தீர்வுடன் வருகிறேன் :)--சண்முகம்ப7 (பேச்சு) 13:59, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

அப்படி என்றால் அந்த நிரலை யாரேனும் தொகுக்கின்றனரா?

அப்படி எனில் புரூவிட்டில்ல் நூல்கள் தேர்வின் கீழ் உரலி வருவது போல் செய்யச் சொல்லுங்களேன். இப்போது தமிழிலும் அதிக மிந்நூல்கள் உள்ளனவே. புரூவிட் நூல் தேர்வு பகுதியில் உரலி பெட்டி --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:36, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

இதில் பிரச்சினை ஹாட்கேட் எனில் வழு பதியத் தேவையில்லை, நரயம் எனில் வழு பதிய வேண்டும், இரண்டாவது பற்றியும் எனக்கு அதிக தெளிவில்லை தென்காசியாரே, ஸ்ரீகாந்தை 12 ஆம் தேதி வரை பிடிப்பது கடினம் என நினைக்கிறேன் (mw:Pune_LanguageSummit_November_2012 & mw:Bangalore_DevCamp_November_2012) , அதற்குப் பிறகுதான் அவரிடம் பேச இயலும்.--சண்முகம்ப7 (பேச்சு) 01:17, 4 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
bugzilla:41766 பதியப்பட்டுள்ளது. பணிகாரணமாக இந்த பக்கம் அண்மையில் வரயியலவில்லை. என்னை எப்பொழுதும் பக்சில்லாவில் பிடிக்கலாம் :) ஸ்‌ரீகாந்த் (பேச்சு) 03:00, 5 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

வார்ப்புரு:Navbox

தொகு

{{வார்ப்புரு:Navbox}}-ல் சில நாட்களாக autocollapse வேலை செய்யவில்லை. அதைக் கொண்டு உருவாக்கிய {{வார்ப்புரு:சைவ சமயம்}} |state=collapsed என்று கட்டமைத்திருக்கும் போதும், வேலை செய்யவில்லை. தொழில்நுட்பத்தில் வல்லவர்கள் தயவு செய்து இதை கவனிக்கவும். இந்த வார்ப்புருவுக்கு பதிலாக வேறு வார்ப்புரு பயன்படுத்தும் யோசனை இருந்தாலும், வார்ப்புருவின் வரிகளில் மாற்றம் செய்ய வேண்டியிருந்தாலும் தெரிவிக்கவும். மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:14, 7 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

யாராவது உடனடியாக இதனைக் கவனிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 09:45, 7 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
வார்ப்புருவில் சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை. நிர்வாக அணுக்கம் பெற்றவர்கள் இதனைக் கவனிக்கவும் Common.js. --Anton (பேச்சு) 01:41, 8 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
இது நரையம் நீட்சி தொடர்பான வழுவாக இருக்கலாம்.--Kanags \உரையாடுக 22:07, 10 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
வழு நீங்கி விட்டது.--Kanags \உரையாடுக 09:49, 11 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
தொகு

கட்டுரைப் பக்கங்களில் இறுதியில் இடது பக்கத்தில் Navigatin menu என்ற புதிய பகுதி வருகிறது. பக்கம் குழம்பிப் போயும் உள்ளது. முதற்பக்கமும் அவ்வாறே தெரிகிறது. இது IE இல் மட்டுமே இந்த வழு தெரிகிறது. மொசில்லாவில் இல்லை. கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 07:33, 6 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

இப்போது இந்த வழு காணப்படவில்லை.--Kanags \உரையாடுக 11:59, 6 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
கூகுள் குரோமில் தற்போதும் இந்த வழு வருகிறது--சங்கீர்த்தன் (பேச்சு) 15:10, 6 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

Navigation menu ஏதோ இடர் உள்ளது போலுள்ளது. திரையின் இடது பக்க கீழ் மூலையில் பார்க்க.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:46, 6 திசம்பர் 2012 (UTC)+1-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:44, 7 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

IE இல் இவ்வழு நேற்றுத் தெரிந்தது. இப்போது இல்லை. மொசில்லாவிலும் இல்லை. குரோமில் இருப்பதாக சங்கீர்த்தன் குறிப்பிட்டுள்ளார்.--Kanags \உரையாடுக 10:18, 7 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

IEல் மீண்டும் வழு தெரிகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:29, 7 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

சோதித்துப்பார்த்ததில் விண்டோஸ் xpயில் உள்ள ஐ.இ.யில் மட்டும் வருவதாக தெரிகிறது. 7ல் இவ்வழு வரவில்லை. மற்ற பிரவுசர்கள் என் அலுவலகத்தில் இல்லை என்பதால் கண்டறிய முடியவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:21, 7 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

படிமங்களை கட்டுரையில் கொடுக்கும் போது |thumb|50px|xxxxx என்று ஆங்கிலத்தில் தட்டச்சிட வேண்டுயுளது. அதனால் இதை பின்வருமாறு மாற்றினால் நன்றாக இருக்கும். |நகம்|50|xxxxxxxx--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:56, 26 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

thumb என எழுதுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. px என்பதை ஆங்கிலத்தில் தானே எழுத வேண்டியிருக்கிறது?--Kanags \உரையாடுக 07:40, 29 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

நான் தமிழ் படுத்துவதை பற்றிக்கூறவில்லை எளிமைப்படுத்துவதை பற்றி கூறுகிறேன். தும்ப் என்பதற்கு இணையாக நகமளவு சிறிய படம் எனப்பெரிதாக தட்டச்சிட வேண்டியுளது. right left பதிலாக வல்து இடது என்று அடித்தால் சரியாக வருகிறது. அதனால் நகமளவு ... என்பதை மாற்றி நகமெனவும்,

px என்பதை தமிழாக்க தொழில்நுட்ப சிக்கல் இருப்பின் Default Unit ai pxஆக கொடுத்து எண்ணை மட்டும் இடுமாறு செய்ய முடியுமா?

Like this இடது|நகம்|50|xxxxxxxx--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:15, 30 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

நீங்கள் கூறியவாறு px இல்லாமல் எழுதினால், ஏற்கனவே உள்ள 50000 கட்டுரைகளில் உள்ள படிமங்களை எவ்வாறு மாற்றுவது? அவற்றில் குழப்பம் வராதா?--Kanags \உரையாடுக 06:37, 30 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

அவற்றில் ஏன் குழப்பம் வரப்போகிறது. தற்போது |இடது| என்று இட்டாலும் |Left| என்று போட்டாலும் ஒரே மாதிரி தானே வருகிறது. ஏற்கனவே இருப்பது அப்படியே இருக்கட்டும். இனி படத்துக்கென்று மேற்கூறியது ஒரே வார்ப்புரு போல் இருந்தால் நன்றாக இருக்கும்.

நாம் உ.தெ. வார்ப்புருக்களில் தேதி மட்டும் இட்டால் அதற்கான வாசகம் மற்றும் படங்கள் உருவாகிறது அல்லவா. அதே போன்று படத்துக்கு வார்ப்புரு உருவாக்கினால் என்ன? படத்தின் பெயரை வெட்டி ஒட்டிக்கொள்ளலாம். அதன்பிறகு அளவை எண்கள் மட்டும் கொண்டு குறிப்பிடுவது மாதிரி வைக்க வேண்டும். வலது இடது தமிழிலேயே தட்டச்சிட இயலும். நகமளவு சிறுபடம் என்பதை நகம் என்று மாற்ற வேண்டும். மற்றவை சரியாகவே உள்ளது. இவற்றில் ஏதும் தொழில்நுடபச்சிக்கலுண்டா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:59, 30 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

பிற மொழி இணைப்பு

தொகு

சிறுத்தை (மிருகம்) கட்டுரைக்கான பிறமொழி இணைப்புக்கள் சிறுத்தை பக்கவழி நெறிப்படுத்தல் பக்கத்துக்கு இணைக்கப்பட்டுள்ளன. எனவே இதைச் சரி செய்யவும். (ஏற்கனவே நான் சரிசெய்தும், தானியங்கி அதில் மாற்றம் செய்கிறது.)--பிரஷாந் (பேச்சு) 06:37, 29 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

எனக்கும் இப்பிரச்சனை வந்துள்ளது. தானியங்கி மீண்டும் மாற்றக் காரணம் ஆங்கில இடையிணைப்பு உறுதியாயிருத்தல் காரணமாக இருக்கலாம் (strongly connected to en:name என்று வரும்). ஆங்கில விக்கியில் மாற்றிப் பாருங்கள். மாற்றம் தெரியலாம். தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:52, 29 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


{{cn span|text=|date=October 2012}}

தொகு

இவ்வார்ப்புரு ஆங்கிலத்தில் உள்ளது. தமிழிலில்லை.உருவாக்கினால் நன்று.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:09, 29 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

விண்டோசு 8 IE10 ல் தட்டச்சு சரியாக வேலை செய்யவில்லை

தொகு

கட்டுரை உள்ளடக்கத்தில் தட்டச்சு வேலைசெய்கிறது. தலைப்பு மற்றும் சுருக்கம் போன்றவற்றில் தான் சரியாக வேலை செய்யவில்லை. "இணைப்பு இணைப்பு சரியாக வேலை செய்யவில்லை" என்பது தலைப்பு மற்றும் சுருக்கத்தில் இணைப்பு உகைஐல்லஇவய்யஎச லேவ ஆயஇரச ப்பஐணஇ இவ்வாறு வருகிறது. தமிழ்99 ல் இவ்வாறு உள்ளது.

தமிழ் எழுத்துப்பெயர்ப்பில் --- இணைப்பு இணைப்பு சரியாக வேலை செய்யவில்லை என்பது தலைப்பு மற்றும் சுருக்கத்தில் இணைப்பு ணபபௌசரயகாவலசயவலைா்ை்ா்எ்ைா்எ் ்ஆ்ை்ா் ்்ைா் இ என்று வருகிறது. சுருக்கத்தில் தட்டச்சு ஒழுங்காக வராததால் IE உலாவியின் பதிப்பை பார்த்தால் அது 10 என்று உள்ளது. விக்கி தட்டச்சு நீட்சி IE10ல் சோதனை செய்யப்பட்டிருக்காது. IE10 சோதனைக்கு நாம் தயார் ஆகவேண்டும் என்பதற்கு இது கட்டியம் :)--குறும்பன் (பேச்சு) 21:47, 29 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

வரப்போகும் 'தமிழி' தட்டச்சுப்பொறியை தமிழ் விக்கியில் இணைக்கவியலுமா?

தொகு

இது தொடர்பான உரையாடல் ஒன்றின் இணைப்பு.

https://groups.google.com/forum/?fromgroups=#!topic/mintamil/jHma0MpdS2Q%5B1-25-false%5D--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:40, 2 சனவரி 2013 (UTC)[பதிலளி]

திருத்தம் தேவை

தொகு

த.வி.யின் கட்டுரைகளின் "வரலாற்றைக் காட்டவும்" பொத்தானைச் சொடுக்கும்போது தோன்றுகின்ற பக்கத்தில் "முந்தைய" என்னும் சொல் உள்ளது. வேறு இடங்களிலும் அச்சொல் வருகிறது. அது "முந்திய" என்று திருத்தப்பட வேண்டும்.

பிந்துதல் என்பதிலிருந்து பிந்து, பிந்திய, பிந்துகிற பிறப்பதுபோன்று, முந்துதல் என்பதிலிருந்து முந்து, முந்திய, முந்துகிற எனும் சொற்கள் பிறக்கும். எனவே, பிந்தைய, முந்தைய எனும் சொல்வடிவங்கள் தவறு.

இன்று, இன்றைய, இற்றைய; அன்று, அன்றைய; நேற்று, நேற்றைய; நாளை, நாளைய என்பவை வேறு மூலங்களிலிருந்து பிறக்கின்றன.

நிர்வாகிகள் இத்திருத்தத்தைச் செய்யுமாறு வேண்டுகிறேன். நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 11:46, 13 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நிகழ்படம்

தொகு

எனது கணனியில் விக்கிப்பீடியா நிகழ்படங்கள் இயக்கப்படும்போது அது தனியாக VLC media playerஇல் இயங்குகிறது. அதே பக்கத்தில் இயங்கவில்லை. ஏன் அவ்வாறு ஏற்படுகிறது?--பிரஷாந் (பேச்சு) 12:30, 17 சனவரி 2013 (UTC)[பதிலளி]

அட நல்ல விடயத்துக்கு ஏன் தயக்கம். VLC media playerஇல் விக்கியில் தெரிவதை விட நன்றாகவே தெரியும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:35, 17 சனவரி 2013 (UTC)[பதிலளி]

கோப்புகளை எந்த மென்பொருள் இயக்க வேண்டும் என்று உலாவிகளின் அமைப்புகளில் இருக்கும், விரும்பினால் மாற்றிக் கொள்ளலாம். நிகழ்படங்கள் வியெல்சியில் இயங்குமாறு அமைக்கப்பட்டிருக்கலாம்.
  • எம்பி3, 3ஜிப்பி போன்ற குறிப்பிட்ட கோப்பு வடிவங்களை இயக்க இயல்பிருப்பு மென்பொருளாக இவற்றைத் தேர்ந்தால் இவ்வாறு நிகழும். கோப்பை ஓபன் வித் முறையிலும், உலாவி அமைப்புகளின் மூலமும் பிடித்த மென்பொருளில் இயக்கலாம். - தமிழ்க்குரிசில்

VLC media playerல் இயங்குவதல்ல என் பிரச்சினை. அது விக்கிபீடியா கட்டுரைப் பக்கத்திலே இயங்காமல் தனியாக playerல் இயங்குவதுதான் பிரச்சினை--பிரஷாந் (பேச்சு) 16:15, 17 சனவரி 2013 (UTC)[பதிலளி]

வார்ப்புரு சீர்ப்படுத்தல்

தொகு

வார்ப்புரு:convert சரியாக வேலைசெய்யவில்லை. உதாரணமாக சிறுத்தை கட்டுரையில் அலகுகள் ஆங்கிலத்தில் உள்ளன. தாய்நாடு அழைக்கிறது (சிலை) கட்டுரையில் அது வேலை செய்யவில்லை. இதனைத் திருத்தி உதவவும்.--பிரஷாந் (பேச்சு) 08:59, 18 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இது ஒரு மிகச் சிக்கலான வார்ப்புரு. இதனை அவசியமில்லாமல் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம் என்பது என் பரிந்துரை.--Kanags \உரையாடுக 09:08, 18 சனவரி 2013 (UTC).[பதிலளி]

நீக்கப்பட்ட பங்களிப்புகள்

தொகு

ஒரு பயனரின் பங்கலிப்புகள் கட்டுரையில் நீக்கப்பட்ட பிறகு அது அவரின் பங்கலிப்புகளில் இல்லை. இதனால் அவர் எத்தனை முரை நீக்கப்பட்ட பங்களிப்புகலை செய்துளார் என்று எப்ப்டி கண்டறிவது. நிக்கப்பட்ட பங்கலிப்புகளும் இருந்தால் பதிப்புரிமை மீறலை அடிக்கடி செய்யும் பயனர்கலை கண்டு பிடிக்க எளிதாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:06, 21 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நீக்கப்பட்ட பங்களிப்புகள் மூலம்தான் காண இயலும் :), வேறு சில கருவிகளில் எண்ணிக்கையை மட்டும் காணலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 10:09, 21 சனவரி 2013 (UTC)[பதிலளி]

ஒரு தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை/பக்கம் மொத்தமாக இதுவரை எத்தனைமுறை பார்க்கப்ட்டுள்ளது என்கிற புள்ளிவிபரத்தை அறிவது எப்படி?

தொகு

ஒவ்வொரு விக்கிபக்கத்திலும் இடது பக்கத்தில் 'பக்கம் பார்க்கப்பட்ட புள்ளிவிவரம்' என்றொரு இணைப்பு உள்ளது. ஆனால், இதன்மூலம் கடைசி 30, 60, 90 நாட்களில் அந்த குறிப்பிட்ட பக்கம் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது என்று மட்டுமே அறிய முடிகிறது. மொத்தமாக இதுவரை எத்தனைமுறை பார்க்கப்ட்டுள்ளது என்கிற புள்ளிவிபரத்தை அறிவதற்கு ஏதாவது வழிமுறை உள்ளதா..

இந்த இணைப்பும் கூட top 1000-த்தை மட்டுமே காட்டுகிறது..

இன்னொரு ஆவல், 'பக்கம் பார்க்கப்பட்ட புள்ளிவிவரம்' என்ற இணைப்பிற்கு பதிலாக அங்கே அந்த விபரத்தை எண்ணால்(458 என்பது போல) காட்டினால் இன்னும் எளிதாக இருக்கும். விக்கியின் coding/template -ல் மாற்ற முடியுமா..? (அவ்வாறு மாற்றுவது பக்கம் உலாவியில் load-ஆகும் நேரத்தை குறிப்பிடும் அளவுக்கு அதிகரிக்கும் எனில் வேண்டாம்...) கி. கார்த்திகேயன் (பேச்சு) 08:56, 29 சனவரி 2013 (UTC)[பதிலளி]

அண்மைய மாற்றங்கள் பக்கத்தின் செய்தியோடை இயங்கவில்லை. கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 23:22, 1 மார்ச் 2013 (UTC)

விக்கி உள்ளிணைப்புக்கள்

தொகு

விக்கி உள்ளிணைப்புக்களை இணைக்கும் தனியங்கிகள் இயங்குகின்றனவா? எ.கா: 3 மார்ச் 2013‎ உருவாக்கப்பட்ட அபிவிருத்திக் கற்கைகள் கட்டுரைக்கு இன்னும் (06.03.13) தனியங்கி மூலம் ஏனைய இணைப்புக்கள் கிடைக்கவில்லை. அங்கும் இதற்கான இணைப்பு இல்லை. --Anton (பேச்சு) 11:34, 6 மார்ச் 2013 (UTC)

கீழுள்ள விக்கிமீடியாவின் செயற்றிட்டத்தால் இருக்கலாம்.--மணியன் (பேச்சு) 08:32, 7 மார்ச் 2013 (UTC)
இப்போது, கட்டுரையில் இருந்த ஆங்கில விக்கிப்பீடியாவுக்கான விக்கியிடை இணைப்பை நீக்கிய பிறகு விக்கி தரவுகளில் இருந்து விக்கியிடை இணைப்புகள் தாமாகவே தோன்றுகின்றன. இனி எழுதும் புதிய கட்டுரைகளில் பழைய மாதிரி விக்கியிடை இணைப்புகளைத் தராமல் விக்கி தரவுகளுக்குப் போய் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் பெயரை மட்டும் சேர்த்தால் போதும் என்று நினைக்கிறேன். கட்டுரைகளின் தலைப்புகளை மாற்றும் போதும் அங்கு இற்றைப்படுத்த வேண்டி இருக்கும். இது குறித்த தெளிவான வழிகாட்டுப் பக்கத்தை எழுதி அண்மைய மாற்ற அறிவிப்புகளில் இடலாம்--இரவி (பேச்சு) 08:35, 7 மார்ச் 2013 (UTC)
காண்க:விக்கிப்பீடியா:விக்கித்தரவுகள்..இதனை மேம்படுத்தி அண்மைய மாற்ற அறிவிப்புகளில் இடலாம்.--மணியன் (பேச்சு) 10:46, 7 மார்ச் 2013 (UTC)

Wikidata phase 1 (language links) live on this Wikipedia

தொகு
 

Sorry for writing in English. I hope someone can translate this locally. If you understand German better than English you can have a look at the announcement on de:Wikipedia:Kurier.

As I annonced 2 weeks ago, Wikidata phase 1 (language links) has been deployed here today. Language links in the sidebar are coming from Wikidata in addition to the ones in the wiki text. To edit them, scroll to the bottom of the language links, and click edit. You no longer need to maintain these links by hand in the wiki text of the article.

Where can I find more information and ask questions? Editors on en:wp have created a great page with all the necessary information for editors and there is also an FAQ for this deployment. It'd be great if you could bring this to this wiki if that has not already happened. Please ask questions you might have on the FAQ’s discussion page.

I want to be kept up to date about Wikidata To stay up-to-date on everything happening around Wikidata please subscribe to the newsletter that is delivered weekly to subscribed user’s talk pages.

--Lydia Pintscher 23:11, 6 மார்ச் 2013 (UTC)

Distributed via Global message delivery. (Wrong page? Fix here.)

(தகவலுக்காக)மேலே கூறியுள்ளதன்படி விக்கித்தரவு நமது விக்கியில் நிறுவப்பட்டுள்ளதால் இனி அனைத்து விக்கியிடை இணைப்பு மாற்றங்களும் விக்கித்தரவில்தான் செய்யப்பட வேண்டும். ஏற்கனவே உள்ள இணைப்புகளை நாமே சரிபார்த்து நீக்கலாம் எனினும், ஆங்கில விக்கியில் இணைப்புகளை நீக்கும் பயனர்:addbot தானியங்கியை இயக்கும் பயனர்:addshoreஐ கேட்டதில் அவர் அனைத்து விக்கிகளிலும் அத்தானியங்கியை இயக்குவதாக கூறியுள்ளார்--சண்முகம்ப7 (பேச்சு) 02:19, 7 மார்ச் 2013 (UTC)
முயற்சி விழைவுகளுக்கு நன்றி. சண்முகம்!. இக்குறிப்புகளின் ஒருபடியை, தொழில்நுட்ப பிரிவுக்கும் இட்டால் நன்றாக இருக்குமென்று எண்ணுகிறேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற நுட்பக்குறிப்புகள் அங்கு காண்போருக்கும் உதவலாம்.-- உழவன் +உரை.. 06:44, 7 மார்ச் 2013 (UTC)  Y ஆயிற்று--மணியன் (பேச்சு) 08:32, 7 மார்ச் 2013 (UTC)

விக்கித்தரவுகளுக்கான இணைப்பு

தொகு

தற்போது தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பிறமொழி இணைப்புக்களைத் தருவதற்கு விக்கித்தரவு (Wikidata) செல்லவேண்டி உள்ளது. இதற்கான இணைப்பும் பக்கப்பட்டையில் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் ஒன்றாக இடலாமே. --மணியன் (பேச்சு) 03:43, 9 மார்ச் 2013 (UTC)

 Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 18:05, 10 மார்ச் 2013 (UTC)

ஆங்கில விக்கி இணைப்புகளை சரி செய்ய உதவும் கருவி

தொகு
 
இக்கருவியினை விக்கி தொகுப்பானின் கருவிப்பட்டையிலேயே பயன் படுத்தலாம்

ஆங்கில விக்கி உள் இணைப்புகளை சரி செய்ய உதவும் கருவி ஒன்றை செய்திருக்கின்றேன். பயனர்:Jayarathina/iwt இங்கே சென்று அதனைப்பற்றி மேலும் அறியலாம். இது போன்ற கருவிகள் முன்பே உள்ளன என்றாலும் இது விக்கி தொகுப்பானிலேயே வேலை செய்யும். மேலும் இதனைக்கொண்டு அடிக்கடி பயன்படுத்தும் உங்கள் விறுப்பத்துரை சார்ந்த சொற்களை ஒரே நேரத்தில் தேடிக்கண்டுபிடித்து மாற்றலாம். இதில் திருத்தந்தையரின் பெயர்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் (கட்டுரைகள் இல்லாவிடிலும்) மொழிபெயர்கலாம்.

இக்கருவி குறித்தக்கருத்துகளை தயவு செய்து தெரிவிக்கவும். நன்றி.

(பி.கு: இக்கருவியை நீங்கள் பயன் படுத்தினால், தயவு செய்து உங்கள் பெயரை இங்கு இடவும்) --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 04:12, 10 மார்ச் 2013 (UTC)

பயனர்களின் மணல்தொட்டி

தொகு

ஆங்கில விக்கியில் பயனர்களுக்கான தனிப்பட்ட மணல்தொட்டிக்கான இணைப்பு ஆங்கிலப் பக்கத்தின் மேற்பகுதி வலப்பக்கத்தில் தெரிகிறது. இதே போன்று தமிழ் விக்கிப் பக்கங்களிலும் சேர்க்க முடியுமா?--Kanags \உரையாடுக 08:20, 16 மார்ச் 2013 (UTC)

அட்டவணையில் சீராக்கம் தேவை

தொகு

இப்பக்கத்திலுள்ள அட்டவணை வார்ப்புரு {.{table}} சீராக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது.எப்படி?-- உழவன் +உரை.. 01:33, 21 மார்ச் 2013 (UTC)

திருத்தியிருக்கிறேன் சரியாக பொருந்தியிருக்கிறதா எனப் பாருங்கள். அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 11:48, 21 மார்ச் 2013 (UTC)
அழகுற செய்தீர்கள். வணக்கம். -- உழவன் +உரை.. 05:24, 2 ஏப்ரல் 2013 (UTC)

படப்பதிவேற்றத்தின் போது ..

தொகு
 
ஆலமரத்தடி (தொழினுட்பம்)/தொகுப்பு02

படமொன்றினை ஒரு கட்டுரையில் இணைத்தேன். பிறகு மாற்றத்தை, அண்மைய மாற்றங்கள் பகுதியில் கவனித்தபோது, right என்ற ஆங்கிலச்சொல் வருகிறது. அங்கு அச்சொல் என்ன குறிப்பைத் தெரிவிக்கிறது. மாற்றாக தமிழ் சொல் வர என்ன தொழில் நுட்பத்தை கையாள வேண்டும்? --தகவலுழவன்) 05:30, 2 ஏப்ரல் 2013 (UTC)

[[படிமம்:At recent page-while adding medias.png|240px|ஆலமரத்தடி (தொழினுட்பம்)/தொகுப்பு02|thumb]|]

வலது என்றே கொடுக்கலாம். px என்பதற்கும் thumb என்பதற்கும் தமிழில் ஏதாவது தட்டச்சிட்டு வருகிற மாதிரி செய்தால் நன்றாக இருக்கும். இது தொடர்பான உரையாடலை நான் ஏற்கனவே தொடர்ந்திருந்தும் தகுந்த பதிலில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:30, 2 ஏப்ரல் 2013 (UTC)

அறிந்து மகிழ்ந்தேன். பிறவற்றையும் மாற்ற வினவிப்பார்க்கிறேன். நீங்கள் இதற்குமுன் தொடங்கிய உரையாடற்பக்கத்தின் தொடுப்பைத் தரவும்.--≈ உழவன் (கூறுக) 07:06, 3 ஏப்ரல் 2013 (UTC)

இப்பக்கதிலேயே thumb| என்ற தலைப்பின் கீழ் உள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:52, 4 ஏப்ரல் 2013 (UTC)

மேலே வாசித்தேன். படங்களுக்கு வார்ப்புருக்களை பயன்படுத்துவது பற்றி கூறியிருந்தீர்கள். ஏறத்தாழ 10000 படங்களை தமிழ் விக்சனரியில் இணைத்திருப்பேன். அந்த அனுபவத்தில் படத்தேவைகளைப் பொருத்து பல்வேறு வார்ப்புருக்கள் தேவைப்படுகின்றன. ஆய்வோட்டமாக சில வார்ப்புருக்களை சில வருடங்களுக்கு முன் உருவாக்கியுள்ளேன். அதனை ஒரு முறை கண்டு கருத்திடவும்.படவார்ப்புருகள் --≈ உழவன் ( கூறுக ) 12:31, 10 ஏப்ரல் 2013 (UTC)

எரித எழுத்துக்கள்

தொகு

முன்பிருந்தே இந்த சிக்கல் அவ்வப்போது இருந்து வருகிறது. ஒரு கட்டுரையைத் தொகுக்கும்போது ஆங்கில எழுத்துக்களெல்லாம் கண்டபடி தமிழாகத் தெரிகின்றன. எடுத்துக்காட்டுக்கு, பட்டி என்ற விக்சனரி தலைப்பைத் தொகுத்தால், கீழே உள்ளபடி காட்டுகிறது.

tலீuனீதீ|க்ஷீவீரீலீt|200ஜீஜ்|கூட்டமாக மாடுகள் கட்டப்பட்டிருக்கும் மாட்டுப்பட்டி அல்லது மாட்டுத் தொழுவம்
  1. நீஷீக்ஷீக்ஷீணீறீ, ஜீமீஸீ - தொழுவம்
  2. நீஷீஷ்-stணீறீறீ - பசுக்கொட்டில்
  3. sலீமீமீஜீ-யீஷீறீபீ - ஆட்டுக்கிடை
  4. கி னீமீணீsuக்ஷீமீ ஷீயீ றீணீஸீபீ, ணீs suயீயீவீநீவீமீஸீt யீஷீக்ஷீ ணீ sலீமீமீஜீ-யீஷீறீபீ - நில அளவு
  5. லீணீனீறீமீt, ஸ்வீறீறீணீரீமீ - சிற்றூர்
  6. tலீமீயீt - களவு
  7. லீணீக்ஷீறீஷீt, ஜீக்ஷீஷீstவீtutமீ - விபச்சாரி
  8. sனீணீறீறீ sமீணீ-sலீமீறீறீs - பலகறை
  9. sஷீஸீ - மகன்

இதனால் பல கட்டுரைகளை தொகுக்கமுடியாமல் விலக்கி விட்டேன். பேச்சுப்பக்கங்களிலும் பல முறை ஆங்கிலப் பெயர் உள்ளவர்களின் கையொப்பமும் மேலுள்ளவாறு மாறிவிட்டது. இது பிறருக்கு வந்துள்ளதா? ஒருங்குறிச் சிக்கலா? உலாவியில் பிரச்சனையா? அல்லது குறிமுறையாக்கம், தீநுண்பம் போன்ற வேறு ஏதேனுமா?? இன்னொரு பிரச்சனை: சில எழுத்துக்கள் ஒவ்வாத வகையில் ஒட்டிக்கொள்கின்றன. ”வந்து உன்” .என்று எழுதினால், வந்துுன் என்று காட்டுகிறது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:23, 27 ஏப்ரல் 2013 (UTC)

ஏற்கனவே உங்கள் தொகுப்பு ஒன்றில் கவனித்தேன். உங்கள் மென்பொருளிலேயே பிரச்சினை உள்ளது போல் தெரிகிறது. நான் என்எச்எம் எழுதியையே பயன்படுத்துகிறேன் (விளம்பரம் அல்ல).--Kanags \உரையாடுக 04:34, 27 ஏப்ரல் 2013 (UTC)
மேலுள்ள சிக்கலுக்கு மறுமொழி. ஏற்கனவே, பல முறை இது போல் நடந்து, கட்டுரையின் பிற மொழிீணைப்புகள் அழிந்துவிட்டன. நானும் என்னெச்சம் எழுதியைத் தான் பயன்படுத்துகிறேன். சீராகவே இயங்குகிறது. சிக்கல் உலாவியின் என்று நினைக்கிறேன். பக்கத்தை லோடு செய்யும்போது, ஆங்கிலத்தில் காட்டிவிட்டு சில வினாடிகளில் எரித எழுத்துக்களாய் மாறிவிடுகின்றன. தொகுப்பதிலும் இதே சிக்கல். உலாவியில் தான் இருக்கக்கூடும். நீட்சிகள் ஏதேனும் சதி செய்கின்றனவா?? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:09, 27 ஏப்ரல் 2013 (UTC)
வேறு ஓர் உலாவியைப் பயன்படுத்திப் பார்த்தீர்களா?--Kanags \உரையாடுக 05:29, 27 ஏப்ரல் 2013 (UTC)

(இதை நீக்கிவிடவும்)

தொகு

குரோம் பதிவிறக்க நீண்ட நேரம் எடுக்கிறது, ஒப்பேரா தான் இந்த சிக்கலின் பிறப்பிடம். அதை வைத்துக்கொண்டு தட்டச்சிட்டால் சொற்கள் சுருங்கி தெரிகின்றன, வருவோம் என்று அடித்தால், வவோம் என்றூ காட்டும். எக்சுபுளோரர் சரியாக இயங்க வில்லை. பயர்பாக்சு எவ்வளவோ பரவாயில்லை. அவ்வப்போதுதான் தெரிகிறது,-தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:36, 27 ஏப்ரல் 2013 (UTC)

புகுபதிகையின் மொழிமாற்று வசதி

தொகு
 
தமிழுக்கு தத்தல் தேவை
 
ஆங்கிலம்
 
இந்தி

புதிய பயனர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நிகழ்படவிளக்கங்கள் உருவாக்க முனைந்தேன். அப்பொழுது இடைமுகப்பு மொழியில் தமிழை மீண்டும் இயல்பிருப்பாக செய்ய, அங்கு தமிழ் என்ற தத்தல் இல்லை என்பதனை அறிந்தேன். தற்போது ஆங்கிலம், இந்தி, இன்னும் சில மொழிகளுக்கு தத்தி மாற முடிகிறது. ஆனால், தமிழுக்கு திரும்ப அங்கு ஒரு தத்தல் இல்லையே? இதனை உருவாக்கினால், இன்னும் சிறப்பாக இருக்கும். ≈ உழவன் ( கூறுக ) 04:31, 1 மே 2013 (UTC)[பதிலளி]

 Y ஆயிற்று மீடியாவிக்கி:Loginlanguagelinks என்ற பக்கம் தான் இதைக் கட்டுப்படுத்துகிறது. இதில் தமிழை முதலாவது தத்தலாகச் சேர்த்திருக்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 11:25, 31 மே 2013 (UTC)[பதிலளி]

விக்கித்தரவில் உள்ளது போல் டிராப் டவுன் வரவைக்க இயலாதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:06, 31 மே 2013 (UTC)[பதிலளி]

கட்டுரை முதன்மை பத்தி அருகே "தொகு"

தொகு

நேற்று வரை எனக்கு கட்டுரையின் முதன்மை பத்தி அருகே (lead para) தொகு தத்தல் வந்துகொண்டிருந்தது. ஆனால் இன்று காணவில்லை. தொகு தத்தலை தலைப்பிற்கு அருகே நகர்த்தியதால் நிகழ்ந்ததோ இது ? எனது ஆங்கில விக்கியில் இந்த வசதி மாறவில்லை. விருப்பத்தேர்வுகளிலும் userid fieldஇல் பாலின வார்ப்புரு என புதியதாக சிவப்பிணைப்பு உள்ளது. விக்கிமீடியா நிபுணர்கள் கவனிக்குமாறு, தேவைப்படின் வழு பதியுமாறு வேண்டுகிறேன். --மணியன் (பேச்சு) 07:01, 10 மே 2013 (UTC)[பதிலளி]

எனக்கும் இதே பிரச்சனை தோன்றியுள்ளது. முதன்மைப் பத்தி அருகே இருந்த 'தொகு' என்பதைக் காணவில்லை.--கலை (பேச்சு) 13:44, 10 மே 2013 (UTC)[பதிலளி]
எனக்கு இந்தப் பிரச்சனை இன்னமும் தொடர்கின்றது. பெரிய கட்டுரைகளில் தொகுக்கையில் முதல்பந்தியைத் தொகுப்பதற்கு நீண்ட நேரம் எடுக்கின்றது. வேறு யாருக்காவது இருக்கின்றதா?--கலை (பேச்சு) 10:04, 20 மே 2013 (UTC)[பதிலளி]
எனக்கும் இந்தப் பிரச்சினை தொடர்கிறது. இது விருப்பத்தேர்வுகளில் கருவிகள் தத்தலில் பயனர் இடைமுகப்புக் கருவிகளை அடுத்து வரவேண்டிய தோற்றம் முழுமையாக இல்லாததால் எழுகிறது. இங்குதான் முதன்மை பத்திக்கு தொகு என்ற இணைப்பைத் தருக என்ற விருப்பத்தேர்வு இருந்தது. நமது கணக்கெல்லாம் இப்போது அனைத்து விக்கிகளிலும் பொதுவாக ஆக்கும்போது பிழை நேர்ந்திருக்கலாம். விக்கிமீடியா பட்டறிவு உள்ளவர்கள் சற்றே கவனித்தால் நல்லது. பெரும்பாலோர் புதுப் பக்கங்களிலும் குறுங்கட்டுரைகளிலும் பங்களிப்பதால் நம்மைப் போன்ற மிகச்சிலருக்கே இது பிரச்சினையாக உள்ளது :( --மணியன் (பேச்சு) 00:27, 21 மே 2013 (UTC)[பதிலளி]
1) lead section edit link - முதன்மைப் பத்தி தொகுக்கான தெரிவு “என் விருப்பத்தேர்வுகளில்” “கருவிகள்” தத்ததிலில் “தோற்றம்” என்னும் பிரிவில் ”கட்டுரைகளின் முதல் பத்திக்கு அருகே [தொகு] இணைப்பை ஏற்படுத்தல்” என்ற தெரிவை மீண்டும் வரும்படி செய்துள்ளேன். (இந்த ஜாவாஸ்க்ரிப்ட் கோப்பினை ஆங்கில விக்கியிலிருந்து இற்றைப் படுத்த வேண்டியிருந்தது). அந்த்த் தெரிவை தேர்வு செய்து கொண்டால் முதன்மைப் பத்தியில் தொகு பொத்தான் தெரியும்.
2) ”பாலின வார்ப்புரு” கோளாறு மொழிபெயர்ப்பு விக்கியில் யாரோ புதிய பயனர் ஒருவர் விக்கிப்பீடியா புன்புலம் இல்லாது இந்த மாறியை அப்படியே லிடரலாக மொழிபெயர்த்து விட்டதால் ஏற்பட்ட விளைவு. பழையபடி மீளமைத்திருக்கிறேன். விளைவுகள் தெரிய ஓரிரு நாட்கள் ஆகும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:04, 21 மே 2013 (UTC)[பதிலளி]
முதன்மை பத்தி அருகே "தொகு" பிரச்சனை தீர்ந்துவிட்டது. :) நன்றிகள். --கலை (பேச்சு) 10:58, 21 மே 2013 (UTC)[பதிலளி]

Tech newsletter: Subscribe to receive the next editions

தொகு
Tech news prepared by tech ambassadors and posted by Global message deliveryContributeTranslateGet helpGive feedbackUnsubscribe • 21:15, 20 மே 2013 (UTC)
Important note: This is the first edition of the Tech News weekly summaries, which help you monitor recent software changes likely to impact you and your fellow Wikimedians.

If you want to continue to receive the next issues every week, please subscribe to the newsletter. You can subscribe your personal talk page and a community page like this one. The newsletter can be translated into your language.

You can also become a tech ambassador, help us write the next newsletter and tell us what to improve. Your feedback is greatly appreciated. guillom 21:15, 20 மே 2013 (UTC)[பதிலளி]

சோதனை

தொகு

சோதனைக்காக