வாருங்கள், Prash! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Prash, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Prash, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--தேனி.எம்.சுப்பிரமணி. 07:05, 7 அக்டோபர் 2010 (UTC)Reply

பதக்கம்

தொகு
  சிறந்த உரைதிருத்துனர் பதக்கம்
பல கட்டுரைகளில் உள்ள பிழைகளைக் களைந்து செம்மைப் படுத்தும் உங்கள் பணியினைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 06:13, 11 ஆகத்து 2011 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

Invite to WikiConference India 2011

தொகு
 

Hi Prash,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

வணக்கம்

தொகு

வணக்கம் பிரஷாந்த், யாழ்ப்பாணத்தில் இருந்து பங்களிக்கும் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.--Kanags \உரையாடுக 12:20, 15 ஆகத்து 2011 (UTC)Reply

யாழ் சூழலில் இருந்துகொண்டு, சிறிய வயதிலேயே விக்கிப்பிடியாவில் பங்களிப்புச் செய்ய வந்திருக்கும் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.--கலை 21:45, 5 செப்டெம்பர் 2011 (UTC)Reply
நல்வரவு பிரஷாந்: உங்களின் ஆர்வத்துக்கும் முயறிகளுக்கு நன்றிகள். நிச்சியமாக வெவ்வேறு நாடுகளில் வசிப்பவர்கள் அந்த அந்த நாடுகள், நாட்டுக் கலைகள், பண்பாடுகள், அரசியல் சட்ட முறைகள், அங்கு வாழும் தமிழர்கள் பற்றி நிறையக் கட்டுரைகள் எழுதலாம். படங்கள் சேர்க்கலாம். நல்ல எண்ணக்கரு. --Natkeeran 01:16, 9 செப்டெம்பர் 2011 (UTC)Reply

தகவற்சட்டத் திருத்தம்

தொகு

சில நாடுகளின் தகவற்சட்டத்தில் அவற்றின் பரப்பளவுகள் தவறாகக் காணப்படுகின்றன. ஆயினும் தொகுப்பில் சரியான அளவுகளே குறிப்பிடப்பட்டுள்ளன. கட்டுரையில் தான் தவறாக காட்டப்பட்டுள்ளது. திருத்தி உதவுக.--Prash 08:49, 29 அக்டோபர் 2011 (UTC)Reply

ஒரு எடுத்துகாட்டு கட்டுரை சுட்டுங்கள் பிரஷாந், ஆராய்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:59, 29 அக்டோபர் 2011 (UTC)Reply

பல உள்ளன. உதாரணமாக, இந்தியா, இலங்கை, கம்போடியா போன்றவற்றைப் பாருங்கள்--Prash 14:04, 29 அக்டோபர் 2011 (UTC)Reply

எண்களுக்கிடையில் கால்புள்ளி இடுவதால் இப்படி தவறாக மாறுகிறது. தகவற்சடடத்தில் உள்ள ”area" தரவில் கால்புள்ளிகளை அகற்றிவிட்டால் இது சரியாகிவிடும்.--சோடாபாட்டில்உரையாடுக 06:47, 11 நவம்பர் 2011 (UTC)Reply
 Y ஆயிற்று. அனைத்து நாடுகளிலும் மாற்றியுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 17:00, 11 நவம்பர் 2011 (UTC)Reply

கட்டடக்கலை - சிறப்புக்கட்டுரை

தொகு

கட்டடக்கலை கட்டுரை சிறப்புக்கட்டுரைகள் பகுப்பில் சேர்க்கப்பட்டு விட்டது. இவ்வாறு நீங்களே கூட குறிப்பிட்ட பகுப்பில் இணைத்துவிடலாம். நன்றி.--கலை (பேச்சு) 09:58, 15 சூன் 2012 (UTC)Reply

:படிமம்:KLNationalMuseumFrieze.jpg இன் பதிப்புரிமை என்ன?

தொகு
 
Image Copyright problem

படிமம்:KLNationalMuseumFrieze.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான பதிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா பதிப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. பதிப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்ற தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகுவிரைவில் நீக்கப்படும். உங்களுக்கு இத்தகவல்கள் தெரிந்திருப்பின் பதிப்புரிமை வார்ப்புரு ஒன்றைப் படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான வினாக்கள் இருப்பின் பதிப்புரிமை வினாக்கள் பக்கத்தில் கேட்கவும். சண்முகம்ப7 (பேச்சு) 17:45, 6 சூலை 2012 (UTC)Reply

கூட்டு முயற்சி

தொகு

நீங்கள் பரிந்துரைக்கும் கூட்டு முயற்சி அனைவரும் பங்களிக்குமாறு இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தந்தி கட்டுரையில் பொதுச் செய்திகளில் முக்கியமானவை இடம்பெற்று விட்டதாகவே தெரிகிறது. பொதுவாக கூட்டு முயற்சிகளில் ஊர்களும், நம்மைச் சுற்றி காணப்படும் பொருட்களும், அதிகத்தரவுகளை கொண்ட வரலாற்று கட்டுரைகளும் அதிக நபர்களின் பங்களிப்புகளை பெறுவது வாடிக்கை. நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:00, 25 சூலை 2012 (UTC)Reply

ஆண்டு நிறைவுகள்

தொகு

பிரசாந்த், பகுப்பு பேச்சு:முதற்பக்க ஆண்டு நிறைவுகள்(சனவரி, 2012) பகுதியைக் கவனியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 10:29, 25 சூலை 2012 (UTC)Reply

இன்றைய நாளில் வார்ப்புருவில் சிறு மாற்றம் செய்துள்ளேன். இது ஒவ்வொரு ஆண்டும் திரும்பத் திரும்ப வருவதால், வார்ப்புரு இடும்போது ஆண்டைக் குறிக்காமல் செய்வது நன்று. ஏற்கனவே உள்ள பேச்சுப் பக்கங்களில் இதனைத் திருத்திவிட்டு, புதிய பக்கங்களில் இவ்வார்ப்புருவை இட வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 06:02, 26 சூலை 2012 (UTC)Reply
ஒரே கட்டுரையில் இருந்து இரண்டு வெவ்வேறு தேதிகளில் செய்தி வெளியானால், நீங்கள் கூறுவது போல் இரு வேறு வார்ப்புருக்கள் இடலாம். ஆனால், இந்த ஆண்டு சனவரி, 5ஆம் தேதி வெளியாகும் தகவல் திரும்பத் திரும்ப இன்னும் பல ஆண்டுகளுக்கும் வெளியாகும் போது அதற்கு எதற்கு ஆண்டு? இங்கு எந்த ஆண்டு என்பதை விட எந்த மாதத்தின் எந்த நாள் என்பதே முக்கியம். உங்கள் மறுமொழியை இங்கேயே அளிக்கலாம். இது மற்றவர்கள் இந்த உரையாடலைப் பின்தொடர உதவும்.--இரவி (பேச்சு) 06:17, 26 சூலை 2012 (UTC)Reply

சிறு தொகுப்புகள்

தொகு

பேச்சுப் பக்கங்களில் வார்ப்புருவில் சிறு மாற்றங்களைச் செய்யும்போது, அதனை சிறு தொகுப்பு என்று குறித்துச் சேமிக்கவும். இதன் மூலம் அண்மைய மாற்றங்கள் பகுதியில் நெரிசலைக் குறைக்கலாம். நன்றி--இரவி (பேச்சு) 07:10, 26 சூலை 2012 (UTC)Reply

மட்டக்களப்பின் பிரதேச செயலாளர் பிரிவுகள்

தொகு

வணக்கம், en:Batticaloa District#Administrative_units இங்குள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள் சரியானவை. அங்குள்ள இலங்கை அரசின் வலைத்தள சுட்டி இயங்கியதும் சரிபார்க்கலாம். ஆங்கில விக்கியின் மேலுள்ள இணைப்பிற்கு ஏற்ப மாற்றிவிடுங்கள். மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பிரிவு என்று ஒன்றுமில்லை. இங்கும் சரியான தகவல் உள்ளது --Anton (பேச்சு) 10:27, 14 ஆகத்து 2012 (UTC)Reply

மணல்தொட்டி

தொகு

பிரஷாந்த், நீங்கள் உங்கள் பயனர் வெளியில் மணல்தொட்டியை உருவாக்கி அங்கு கட்டுரை ஒன்றை எழுதி அம்மணல்தொட்டி முழுவதையும் கட்டுரைப் பொஅக்கவெளிக்கு வழிமாற்றும் போது மணல்தொட்டியின் பழைய வரலாறும் சேர்ந்து வழிமாற்றப்படுகிறது. உதாரணம்: [1], [2]. இதனால் உங்கள் குறிப்பிட்ட கட்டுரையின் சரியான வரலாறு மறைக்கப்படுகிறது. இதனைத் தவிர்க்க நீங்கள் உங்கள் பயனர் வெளியில் கட்டுரைத் தலைப்பிலேயே கட்டுரையை எழுதிப் பின்னர் வழிமாற்றலாம். பயனர்வெளிக் கட்டுரைத் தலைப்பை பின்னர் நீக்கலாம். எடுத்துக்காட்டாக: பயனர்:Prash/கிரமரின்_விதி என்ற தலைப்பில் கட்டுரை தொடங்கலாம்.--Kanags \உரையாடுக 09:51, 22 ஆகத்து 2012 (UTC)Reply

வேண்டிய கட்டுரைகள் -பாராட்டுகள்

தொகு

பல வேண்டிய வேதியியல் கட்டுரைகளை தொடக்கியுள்ளீர்கள், பாராட்டுகள். தொடருங்கள் --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:41, 22 ஆகத்து 2012 (UTC)Reply

உங்களுக்குத் தெரியுமா

தொகு






மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்

தொகு

வணக்கம், Prash!

 

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 09:11, 2 பெப்ரவரி 2013 (UTC)

உங்கள் வாழ்த்துக்கு நன்றி--பிரஷாந் (பேச்சு) 05:44, 3 பெப்ரவரி 2013 (UTC)

முகடு

தொகு

வணக்கம். முகடை (mode) ’ஆகாரம்’ என்றும் சொல்லலாமா? --Booradleyp (பேச்சு) 14:06, 12 பெப்ரவரி 2013 (UTC)

ஆம். இலங்கையில் இச்சொல்லே பயன்படுத்தப்படுகிறது.

mode - ஆகாரம்

median - இடையம்

mean - இடை

standard deviation - நியம விலகல்

range - வீச்சு

quadrant - காலணை --பிரஷாந் (பேச்சு) 04:50, 13 பெப்ரவரி 2013 (UTC)

நன்றி பிரஷாந், ’உண்ணும் உணவு’ என்ற பொருளில் ஆகாரம் என்பது தமிழ்நாட்டில் வழங்கப்படுகிறது. இலங்கை வழக்கில் ஆகாரம் என்றால் என்ன அர்த்தம், அது எப்படி mode -க்குப் பொருந்துகிறது என்பதைத் தெரிந்துகொள்ள எனக்கு விருப்பம். விளக்கிச் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். mean -இடையன் என்றால் arithmetic mean -இதற்கான சொல் என்ன? --Booradleyp (பேச்சு) 13:21, 13 பெப்ரவரி 2013 (UTC)

இச்சொல்லுக்கான மூலம் எனக்குத் தெரியவில்லை. மன்னிக்கவும். ஐந்து வருடங்கள் பாடசாலைக் கல்வியின்போது (8-13) இது பற்றிய சிந்தனை வரவில்லை. இருப்பதை ஏற்றுக்கொண்டு படித்து முடித்து விட்டேன். மேலும் ஆகாரத்துக்கு இலங்கையில் 'உணவு' எனும் பொருளும் உண்டு அதில் சந்தேகமில்லை.

அடுத்தது,

meadian - இடையம், mean - இடை.

arithmetic mean - கூட்டலிடை

geometric mean - பெருக்கலிடை

harmonic mean - இசையிடை

மேலும் சந்தேகங்கள் இருப்பின் தெரிவிக்கலாம். நன்றி--பிரஷாந் (பேச்சு) 13:31, 13 பெப்ரவரி 2013 (UTC)

mode - ஆகாரம் என்பது சரியாகத் தெரியவில்லை. விக்சனரியிலும் பொருத்தமானதாக சொற்கள் எதுவும் தரப்படவில்லை.--Kanags \உரையாடுக 21:41, 13 பெப்ரவரி 2013 (UTC)

இவ்வார கூட்டு முயற்சிக் கட்டுரை

தொகு

வணக்கம், உங்கள் பரிந்துரையின் பேரில் இலங்கை கட்டுரை இவ்வார கூட்டு முயற்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாரம் முழுக்க கட்டுரையை மேம்படுத்தி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:53, 2 சூன் 2013 (UTC)Reply

2013 தொடர் கட்டுரைப் போட்டி. சூலை, 2013

தொகு

தேதி இன்றோடு ஐந்தாகிவிட்டது :) தாமதமில்லாமல் விரைந்து உங்கள் பங்களிப்புகளை தரவும்.--அராபத் (பேச்சு) 05:21, 5 சூலை 2013 (UTC)Reply

பல்கலைக்கழகம் ஆரம்பமாகியுள்ளதால் விக்கிப்பீடியாவுடன் இணவதற்கு நேரம் போதவில்லை. முடிந்தவரை பங்களிக்கிறேன். நன்றி.--பிரஷாந் (பேச்சு) 08:02, 9 சூலை 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி

தொகு
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:56, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு

தொகு





விக்கித்திட்டம் 100, 2015, அழைப்பு

தொகு
 
அனைவரும் வருக

வணக்கம் Prash!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:19, 29 திசம்பர் 2014 (UTC)Reply

உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து முனைப்பாக செயல்பட்டு உங்களது அடுத்த பங்களிப்பு மைல்கல்லான 250 தொகுப்புகளை எட்டுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 16:25, 11 சனவரி 2015 (UTC)Reply

தானியங்கி வரவேற்பு

தொகு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:52, 7 மே 2015 (UTC)Reply

ஆசிய மாதம், 2015

தொகு
 

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
  • இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.


குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி

ஆசிய மாதம் - முதல் வாரம்

தொகு
 

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

  • இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
  • (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
  • இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.

கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)Reply

ஆசிய மாதம் - இறுதி வாரம்

தொகு
 

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
  2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)Reply

ஆசிய மாதம், 2017

தொகு
 

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் 2015 அல்லது 2016-ம் ஆண்டு கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

2017-ம் ஆண்டிற்கான ஆசிய மாதப்போட்டி நவம்பர் 1 முதல் துவங்கியது. சுமார் 44 கட்டுரைகள் தற்போது வரை உருவாக்கப்பட்டுள்ளது. நீங்களும் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய பங்களிப்பை நல்க அன்போடு அழைக்கின்றோம்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
  • குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
  • உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
  • 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
  • தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
  • உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க

நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:30, 14 நவம்பர் 2017 (UTC)Reply

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

தொகு

அன்புள்ள பிரசாந்த்,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி.--இரவி (பேச்சு) 19:08, 18 மார்ச் 2018 (UTC)

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு

தொகு
 
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

வணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:52, 2 நவம்பர் 2018 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities

தொகு

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)Reply

re: Candidates meet with South Asia + ESEAP communities

தொகு

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)Reply

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங

தொகு

அன்புடையீர் Prash,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)Reply

விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021

தொகு

விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


 
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி ஆரம்பமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதவும் முன்வாருங்கள். போட்டியில் பங்குபற்றுவதோடு பரிசினையும் வெல்லுங்கள்!


இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது --MediaWiki message delivery (பேச்சு) 15:15, 31 ஆகத்து 2021 (UTC)Reply

Add the below in கொங்கு வேளாளர் article. I dont have access to edit that page. I have verified the sources.

கவுண்டர்களின் மதம்

தொகு

கவுண்டர்கள் சைவ சித்தாந்தத்தின் பாரம்பரிய அடிப்படையில் சைவ மதத்தைப் பின்பற்றுபவர்கள். முந்தைய காலங்களில் கணிசமான மக்கள் சமணத்தைப் பின்பற்றியதாகத் தெரிகிறது அதுக்கு ஆதாரமாக இன்றும் விஜயமங்கலம், ஜினாபுரம், வெள்ளோடு, பெருந்துறை, பழனி, ஐவர்மலை மற்றும் பூந்துறை ஆகிய இடங்களில் கோவில்கள் காணப்படுகின்றன. பின்னர் சித்தர் மரபுகளால் (பெரும்பாலான சித்தர்கள் கொங்குநாட்டில் வாழ்ந்தனர்), அவர்கள் மீண்டும் சைவ மதத்திற்கு மாற்றப்பட்டனர். கவுண்டர்கள் கோத்திரம் என்ற முறையைப் பின்பற்றுகிறார்கள், இது கூட்டம் என்று அழைக்கப்படுகிறது, அதில் ஒரே கூத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே மூதாதையரிடமிருந்து வந்தவர்களாகக் கருதப்படுவதால் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு கூட்டத்திற்கும் அதன் சொந்த குலகுரு அதாவது ஒரு பிராமணர் பாரம்பரியமாக மதிக்கப்படுகிறார். ஒவ்வொரு குலத்திற்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குலதெய்வங்கள் உள்ளன.[1][2][3][4] [5]--−முன்நிற்கும் கருத்து Tamil098 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (5 செப்டம்பர் 2021)

தொகு

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


 
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 7 போட்டியாளர்களுடன் 112 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 17 போட்டியாளர்களுடன் 124 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான பாலசுப்ரமணியன், ஸ்ரீதர் ஆகிய இருவரும் தலா 40 புள்ளிகளுடன் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,

விக்கி பெண்களை நேசிக்கிறது

குறிப்பு

தொகு

கட்டுரைகரைளில் {{Use dmy dates}}, {{Use Indian English}} ஆகிய வார்ப்புருக்கள் பயன்படுத்தத் தேவையில்லை. அதிகமான சிவப்பு இணைப்புக்களை உருவாக்க வேண்டாம். --AntanO (பேச்சு) 15:38, 8 செப்டம்பர் 2021 (UTC)

கவனிக்க --AntanO (பேச்சு) 15:42, 8 செப்டம்பர் 2021 (UTC)
தவற்றைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. வருங்காலங்களில் இது தொடர்பாகக் கவனத்தில் கொள்வேன். சிவப்பிணைப்புகள் அவ்வத் தலைப்புகளில் பிற்காலத்தில் கட்டுரைகளை உருவாக்கும் நோக்கில் விடப்பட்டுள்ளது. எனினும், அவை ஏற்புடையதல்ல எனக் கருதினால் பிற்காலத்தில் தவிர்ப்பதற்கு முயற்சிக்கிறேன்.--பிரஷாந் (பேச்சு) 16:03, 8 செப்டம்பர் 2021 (UTC)

பயனர் அறிமுகம் வேண்டல்

தொகு

வணக்கம் பிரஷாந், தமிழ் விக்கிப்பீடியாவில் பத்தாண்டுகளுக்கும் மேல் சிறப்பாகப் பங்களித்து வருகிறீர்கள். நெடுநாள் பங்களிப்பாளர்களை முதல் பக்கத்தில் அறிமுகம் செய்து வருகிறோம். அதன்படி உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/கிருஷ்ணானந்தலிங்கம் பிரஷாந் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். உங்களது அறிமுகம் மற்றவர்களுக்கும் ஊக்கமாக இருக்கும் என நம்புகிறோம். -நீச்சல்காரன் (பேச்சு) 17:44, 22 மார்ச் 2022 (UTC)

 Y ஆயிற்று--பிரஷாந் (பேச்சு) 17:44, 9 ஏப்ரல் 2022 (UTC)
உங்கள் அறிமுகத்திற்கு நன்றி. இயன்றால் உங்களது ஒளிப்படத்தை இணைக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு)
முதற்பக்கத்தில் உங்களது அறிமுகம் வெளிவந்துவிட்டது. வாழ்த்துக்கள். வாய்ப்பிருந்தால் ஒளிப்படத்தை இணைத்துவிடலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 05:24, 16 ஏப்ரல் 2022 (UTC)

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open

தொகு

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)Reply

(on behalf of the WCI Organizing Committee)

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline

தொகு

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)Reply

On Behalf of, WCI 2023 Core organizing team.

  1. http://www.konguassociation.com/en/epages/religion.html
  2. https://www.jstor.org/stable/44147510
  3. https://books.google.co.in/books?id=pOqgYpCgCXsC&printsec=frontcover&dq=kongu+vellalar+saiva+siddhanta&hl=en&newbks=1&newbks_redir=1&sa=X&ved=2ahUKEwjekZqwx-LyAhWuzDgGHdrsDtMQ6AF6BAgFEAI
  4. https://books.google.co.in/books?id=wcWfAAAAMAAJ&q=kongu+vellalar+AND+saiva+siddhanta&dq=kongu+vellalar+AND+saiva+siddhanta&hl=en&newbks=1&newbks_redir=1&printsec=frontcover&sa=X&ved=2ahUKEwj7j427x-LyAhWnzjgGHY8kBUsQ6AF6BAgJEAI
  5. https://books.google.co.in/books?id=Lm4tAQAAIAAJ&q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+AND+%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&dq=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+AND+%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&hl=en&newbks=1&newbks_redir=1&printsec=frontcover&sa=X&ved=2ahUKEwjnlNHXxtjyAhVSX30KHTZ8AsIQ6AEwAHoECAoQAg
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Prash&oldid=3613361" இலிருந்து மீள்விக்கப்பட்டது