விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)/தொகுப்பு01
சில நாட்களுக்கு முன் இக்கருவி வேண்டுமென தகவலுழவன் ஒத்தாசைப் பக்கத்தில் கேட்டிருந்தார். ஆங்கில விக்கியில் இதனை இயல்பிருப்பாக அனைத்து பயனர்களுக்கும் வைத்துள்ளனர். தமிழ் விக்கியிலும் இக்கருவியை வைக்கலாமா? கருத்துகளைக் கூறவும். உங்கள் தனிப்பட்ட ஜாவாஸ்கிரிப்டில் பயன்படுத்த
mw.loader.load('//en.wikipedia.org/w/index.php?title=MediaWiki:Gadget-ReferenceTooltips.js&action=raw&ctype=text/javascript'); mw.loader.load('//en.wikipedia.org/w/index.php?title=MediaWiki:Gadget-ReferenceTooltips.css&action=raw&ctype=text/css', 'text/css');
மேற்கண்டவற்றை உங்கள் jsல் சேர்க்கவும், நன்றி.--சண்முகம்ப7 (பேச்சு) 11:39, 19 ஆகத்து 2012 (UTC)
ஆதரவு
- மதனாகரன் (பேச்சு) 12:27, 19 ஆகத்து 2012 (UTC)
- --செல்வா (பேச்சு) 13:58, 19 ஆகத்து 2012 (UTC)
- --த♥ உழவன் +உரை.. 20:31, 19 ஆகத்து 2012 (UTC)
- ஸ்ரீகாந்த் (பேச்சு) 20:49, 19 ஆகத்து 2012 (UTC)
- தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:00, 23 ஆகத்து 2012 (UTC)
- --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 22:59, 24 ஆகத்து 2012 (UTC)
எதிர்ப்பு
கருத்து
தொகு- பயனுள்ள கருவி. தமிழ் விக்கிப்பீடியாவில் வரிகளையும் மேற்கோள்களையும் பார்ப்பதற்கு மேலேயும் கீழேயும் சென்று பார்க்கும்போது நேரம் எடுக்கிறது.
இவ்வாறான கருவி இருப்பது பயனுள்ளதாக இருக்கும். --மதனாகரன் (பேச்சு) 12:27, 19 ஆகத்து 2012 (UTC)
- அப்படியே இதற்கு எளிதான பெயர் ஒன்றை யாரவது பரிந்துரைக்கவும்--சண்முகம்ப7 (பேச்சு) 12:52, 19 ஆகத்து 2012 (UTC)
- நூற்சுட்டி என்பது பொருந்தும், ஆனால் சுட்டப்படுவது நூலாக இல்லாமல், ஆவணம் போன்ற பிற பலவாகவும் இருக்கலாம் ஆகவே சான்றுச்சுட்டி, குறிப்புச்சுட்டி, மேற்கோள்சுட்டி என்றெல்லாம் கூறாமல், மேற்சுட்டுக் கருவி எனலாம். ஒரு சொல் அல்லது தொடரின் மேலெண்ணாக இருப்பதாலும், மேற்கொண்டு போய்ப் பார்த்து குறிப்பு அல்லது மேற்சான்றாக அறிவதாலும், மேற்ச்சுட்டுக் கருவி எனலாம். கருவியின் சுருக்கப்பெயராக மேற்சுட்டி என்றே கூறலாம்.--செல்வா (பேச்சு) 13:58, 19 ஆகத்து 2012 (UTC)
மேற்சுட்டுகருவி என்றே வினைத்தொகையாகக் கூறலாம். --மதனாகரன் (பேச்சு) 14:07, 19 ஆகத்து 2012 (UTC)
- குறிப்புச்சுட்டி அல்லது அடிச்சுட்டி என்பது எனது பரிந்துரை. அடி என்பது வாக்கியம், கீழ்புறம், அடைக்கப்பட்டது என்றும் பொருளாகும். மேற்கோள் என்ற சொல் அனைத்துக்கும் பொருந்தாது. இங்கு நூல்களும் காட்டப்படுகிறது. --த♥ உழவன் +உரை.. 20:38, 19 ஆகத்து 2012 (UTC)
- பயனுள்ள கருவி. ஆங்கில மூலத்தை பிரதியெடுக்காமல் தமிழாக்கம் செய்ய இயலாது போல் இருக்கிறது. அவ்வப்போது ஆங்கில மூல மாற்றங்களை கவனித்து இற்றைப்படுத்துவது அவசியமாகிறது. ஸ்ரீகாந்த் (பேச்சு) 20:49, 19 ஆகத்து 2012 (UTC)
- அடிச்சுட்டி என்ற பெயர் நன்றாக உள்ளது. --மதனாகரன் (பேச்சு) 05:48, 20 ஆகத்து 2012 (UTC)
- கருவி செயலாக்கம் செய்யப்பட்டுள்ளது, ஏதேனும் பிழை அல்லது வழு இருந்தால் தெரிவிக்கவும். நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 04:55, 24 ஆகத்து 2012 (UTC)
சரியாக வேலை செய்கின்றது. நன்றி சண்முகம்ப7! --மதனாகரன் (பேச்சு) 12:36, 24 ஆகத்து 2012 (UTC)
பிற மொழிப் பெயர்களில் தமிழ் எழுத்து- பிழை??
தொகுஆங்கில விக்கியில் பிற மொழி இணைப்புகளைப் பார்த்தபோது படத்தில் உள்ளவாறு காட்டியது. காரணம் என்ன? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:58, 22 ஆகத்து 2012 (UTC)
- தவறாகத் தோன்றுகின்ற பக்கமொன்றின் தொடுப்பைத் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 11:56, 22 ஆகத்து 2012 (UTC)
எல்லா பக்கங்களும் இப்படித்தான் தோன்றுகின்றன மதன். என் கணினியில் வயர்வாக்சை இலங்கைத் தமிழில் நிறுவியுள்ளேன். சில நாட்களாகவே இப்பிழை தோன்றுகிறது. வேறு எந்த மொழி விக்கிக்கு சென்றாலும், சில latin diacritics, தமிழ் எழுத்துகளாகத் தோன்றுகின்றன. Latha எழுத்துருவை இயல்பு எழுத்துருவாக வைத்துள்ளேன். ஒருவேளை, இதில் தமிழ் மற்றும் அடிப்படை எழுத்துருக்கள் மட்டுமே உள்ளதால் இவ்வாறு பிற எழுத்துருக்கள் மாற்றப்படுகின்றனவோ? அப்படி மாற்றப்பட்டாலும், முன்பு இதுபோல் இல்லையே! யாரோ ஒருங்குறியில் அல்லது தகுந்த இடத்தில் மாற்றியிருக்கக்கூடும். கூடுதல் தகவல்களை அளிக்க முடியவில்லை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:10, 23 ஆகத்து 2012 (UTC)
- ஏனைய வலை மேலோடிகளில் உங்களுக்குச் சரியாகத் தெரியும் என நினைக்கின்றேன். நான் இண்டர்நெட்டு எக்சுப்புளோரர் 9ஐயே பயன்படுத்துகின்றேன். உங்கள் வயர்வாக்சில் எழுத்துருக்கள் தவறாக மாற்றியமைக்கப்பட்டதே இதற்குக் காரணம் என நினைக்கின்றேன். உங்கள் வயர்வாக்சில் Help என்பதன் கீழுள்ள Troubleshooting Information என்பதைத் தெரிவு செய்து, அதிலுள்ள Reset Firefox என்னும் ஆளியைச் சொடுக்கினால் சரி வரும் என நினைக்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 12:30, 23 ஆகத்து 2012 (UTC)
[[1]] பாருங்கள். உங்கள் கணினியில் எப்படித் தெரிகிறது? பிற விக்கியிடை இணைப்புகளை சொடுக்கினால், அங்கேயும் தமிழ் கலந்த தலைப்பைக் காட்டி கட்டுரை இல்லையென்கிறது. மேலும், நான் தொகுத்த கட்டுரையிலும், தலைப்புகள் மாறியிருக்கின்றன. உதவுங்கள் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:11, 28 ஆகத்து 2012 (UTC)
- எனது கணினியில் சரியாகவே உள்ளது. வேறு உலாவிகளில் முயற்சி செய்து பாருங்கள். இண்டநெட்டு எக்சுப்புளோரரிலும் திறந்து பாருங்கள். அனைத்து உலாவிகளிலும் அவ்வாறா வருகின்றது? உங்கள் இயங்குதளத்தையும் (விண்டோசு இயங்குதளமா பயன்படுத்துகின்றீர்கள்?) இயங்குதளப் பதிப்பையும் அறிந்தால் உதவுவது இலகுவாக இருக்கும். --மதனாகரன் (பேச்சு) 06:30, 29 ஆகத்து 2012 (UTC)
சில நாட்களுக்கு முன் நான் தொகுத்த விக்கிப்பீடியா:பயிற்சி பக்கத்தில், மேற்குறிப்பிட்ட பிழையால் தானியங்கிகள் அழிக்கப்பட்டிருப்பதைக் காண்க. இதனால் என் பங்களிப்பில் குறை வர வாய்ப்பு உள்ளது. :( மேலும், IE விரைவாகவும் சரியாகவும் இயங்கவில்லை. வேறு வழி கூறவும் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:10, 30 ஆகத்து 2012 (UTC)
- ஆப்பெரா, எப்பிக்கு, சபாரி போன்ற உலாவிகளைப் பயன்படுத்திப் பாருங்கள். --மதனாகரன் (பேச்சு) 09:51, 2 செப்டெம்பர் 2012 (UTC)
ஆப்பெரா சரியாக இயங்குவதில்லை. சரியானது எனத் தட்டச்சிட்டால், சனது என வருகிறது. எங்குமே தமிழ்த் தட்டச்சு சரியாக வேலை செய்வதில்லை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:30, 27 செப்டெம்பர் 2012 (UTC)
- ஆப்பெராவிலும் சபாரியிலும் ஒலிபெயர்ப்பு முறையில் தட்டச்சிடுவதில் சிக்கல்கள் உள்ளன. எப்பிக்கைப் பயன்படுத்திப் பாருங்கள். --மதனாகரன் (பேச்சு) 11:41, 1 அக்டோபர் 2012 (UTC)
தேவைகள்
தொகு- புதிய பிரிவு என்பதனை விட, புதியத்தலைப்பு என்பது பொருத்தமாக இருக்கும். ஏனெனில், பல இடங்களில் /உட்பொருள்/தலைப்பு/ என்றே அமைந்துள்ளது. எனவே,அதைப்போலவே இருப்பின் சீர்மையாக இருக்கும். ஆயிற்று
- படமிடும்போது, அடிக்கடி thumb|right|150px எனத் தட்டச்சு செய்யவேண்டியுள்ளது.தற்போதிருக்கும் தொகு சாளரத்தில் இருக்கும் குறிப்புகள் முழுமையற்றவை. மேம்படுத்துங்கள்.
- தமிழ்விக்சனரியின் இப்பக்கத்தில் செய்துள்ளது போல, படமிடுவதற்கானக் குறிப்புகளை ஏற்படுத்துக. இதனால் பலரும் படமிடுதலை விரைவாக செய்திடல் இயலும்.
- {.{புதுப்பயனர்}}வார்ப்புருவில் இருந்து நேரிடையாக, புதிய கட்டுரையைத்தொடங்குவதற்காக அமைந்துள்ள சாளரம் சரியாக வேலை செய்ய வில்லை.--த♥ உழவன் +உரை.. 19:15, 24 ஆகத்து 2012 (UTC)
விக்சனரி:முதற்பக்கம்
தொகுவிக்சனரியின் முதற்பக்கத்திலிருந்து, அதன் உரையாடல்பக்கத்திற்கு தத்தல் வழியே மாறமுடிகிறது. ஆனால், அந்த உரையாடல் பக்கத்திலிருந்து, மேலுள்ள தத்தல் வழியே முதற்பக்கத்திற்கு வர இயலவில்லை.இதனை சரி செய்வது எப்படி ?வழக்கமாக உள்ள கட்டுரை என்பதனை முதற்பக்கம் எனமாற்றி இருப்பர். வழிமாற்று செய்க.--த♥ உழவன் +உரை.. 06:32, 29 ஆகத்து 2012 (UTC)
- என்னால் வர முடிகின்றது. மேலேயுள்ள கட்டுரை என்பது வலைப் பக்கம் முழுமையாக ஏற்றப்பட்ட பிறகே முதற் பக்கம் என்று மாறுகிறது. உங்கள் இணைய இணைப்பிற்சிக்கல் இருக்கலாம். --மதனாகரன் (பேச்சு) 07:02, 29 ஆகத்து 2012 (UTC)
- உங்களைப் போலவே நானும் நினைத்தேன். இடபக்கக்கோடி மூலையில் விக்சனரி என்ற இலச்சினை உள்ளதல்லவா? அதன் கீழ்வரும்
முதற் பக்கம் சமுதாய வலைவாசல் கோரப்பட்ட சொற்கள் அண்மைய மாற்றங்கள்
- என்பதனை , அப்பக்கத்தில் அப்பயனாளிக் குறிப்பிடவில்லை. அது எல்லாப் பக்கங்களிலும் சரியாகப் போகிறது. விக்சனரி என்ற இலச்சினையின் கீழ்நோக்காமல், அதற்கு வலப்பக்கம் உள்ள முதற்பக்கம் என்பதனையே, அவர் குறிப்பிடுகிறார். அப்பக்கமுள்ள அடிவரிகளைக் கவனிக்கவும். அங்கு புகுபதிகைச் செய்யாத அவரின் குறிப்பிடலைக் காணலாம்.--த♥ உழவன் +உரை.. 07:18, 29 ஆகத்து 2012 (UTC)
இங்கே குறிப்பிடப்பட்டதால் நான் தவறுதலாக விக்கிப்பீடியா என்று நினைத்து விட்டேன். விக்சனரியில் வர முடியாதுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 08:11, 29 ஆகத்து 2012 (UTC)
ஆங்கில விக்சனரியில், இடப்பக்கமுள்ள Random entry (By Language) என்பதை சொடுக்கினால் தமிழைத் தவிர பெரும்பான்மை மொழிகள் தோன்றுகின்றன. அனைத்தையும் பார்க்கவும் சொடுக்கினாலும், அதிலும் தமிழ் இல்லை. முதன்மையான விக்சனரி, அதுவும் முதற்பக்கத்தில்(wiktionary.org) வரக்கூடியது, ஏன் ஆங்கில விக்கியில் வரவில்லை? தயை கூர்ந்து இதை யாராவது அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். நன்றி-தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:24, 29 ஆகத்து 2012 (UTC)
- Random entry என்பது விக்சனரிக்கான இணைப்பு அல்ல. ஆங்கில விக்சனரியிலுள்ள பிற மொழிச் சொற்களுக்கான இணைப்பு. ஆங்கில விக்சனரியில் தமிழ்ச் சொற்கள் மிகக் குறைந்தளவிலேயே உள்ளதால் அங்கே சேர்க்கப்படவில்லை. 303 தமிழ்ப் பெயர்ச் சொற்களே ஆங்கில விக்சனரியில் இருப்பதை இங்கே காணலாம். --மதனாகரன் (பேச்சு) 10:05, 29 ஆகத்து 2012 (UTC)
- இவ்வழுவை நீக்குவதற்கான விண்ணப்பத்தைப் பதிந்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 05:39, 31 ஆகத்து 2012 (UTC)
- வழு நீங்கி விட்டது.--த♥ உழவன் +உரை.. 09:34, 11 நவம்பர் 2012 (UTC)
ஃபயர்பாக்சு உலாவியில் தொகுத்தல் சிக்கல்
தொகுநான் பெரும்பாலும் பயர்பாக்சு உலாவியையே தொகுத்தலுக்குப் பயன்படுத்துகின்றேன்..அண்மைக்காலமாக இவ்வுலாவியில் தட்டச்சினால் எழுத்துக்கள் கணனியில் தோன்ற கூடுதல் நேரமெடுக்கிறது. குறிப்பாக எழுத்துக்களை அழித்தால் சற்று நேரம் கழித்தே அழிவதால் எந்தளவு backspace அழுத்தினேன் என்று தெரிவதில்லை. இதனால் என்னால் விரைவாக செயலாற்ற முடியாது உள்ளது. இது உலாவியின் சிக்கலா அல்லது மீடியாவிக்கியின் வழுவா ?--மணியன் (பேச்சு) 11:00, 4 செப்டெம்பர் 2012 (UTC)
- இக்குறைபாடு நேற்று முதல் அனைத்து உலாவிகளிலும் உள்ளது. தெரிந்தவர்கள் விளக்கவும்.-Kanags \உரையாடுக 11:03, 4 செப்டெம்பர் 2012 (UTC)
ஆமாம். விக்கிப்பீடியாவின் தொகுத்தற்பக்கத்தைத் திறந்து வைத்திருப்பது கணினியின் வேகத்தையும் குறைத்து விடுகிறது. பல எழுத்துகளைத் தொடர்ந்து தட்டச்சிட்டால் சில எழுத்துகள் தட்டச்சாகவில்லை. பொதுவாக 5-10 சதவீத்தில் இருக்கும் மையமுறைவழியாக்கியின் பயன்பாடும் 60 விழுக்காட்டுக்கு உயர்ந்து விடுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 11:13, 4 செப்டெம்பர் 2012 (UTC)
- ஏனைய மொழி விக்கிகளில் இப்பிரச்சினை இல்லை போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக
- நரயம் உள்ளீட்டில் ஏதோ வழு உள்ளது. பார்க்க bugzilla:39969--சண்முகம்ப7 (பேச்சு) 13:38, 4 செப்டெம்பர் 2012 (UTC)
- ஆயிற்று, நரையம் உள்ளீட்டில் வழு இல்லை, நரையம் பயன்படுத்தும் ஜெகுவெரி எனப்படும் ஜாவாஸ்கிரிப்ட் நிரல் நூலகத்தின் புதிய பதிப்பினால் ஏற்பட்ட வழு இது. இப்பொழுது பழைய பதிப்பிற்கு மீள்விக்கப்பட்டது. ஸ்ரீகாந்த் (பேச்சு) 17:23, 4 செப்டெம்பர் 2012 (UTC)
- நரயம் உள்ளீட்டில் ஏதோ வழு உள்ளது. பார்க்க bugzilla:39969--சண்முகம்ப7 (பேச்சு) 13:38, 4 செப்டெம்பர் 2012 (UTC)
- ஏனைய மொழி விக்கிகளில் இப்பிரச்சினை இல்லை போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக
தொகுப்பதில் சிக்கல்
தொகுஎனக்கு தமிழ் விக்கியில் இன்று காலையில் (US-Sanjose -நேரம்) இருந்து எந்த தொகுப்பினைச் செய்வதும் மிகவும் தாமதமாக உள்ளது. மற்ற எதிலும் (ஆங்கில விக்கி, இ-மெயில், word document...) எனக்கு இப்பிரச்சனை இல்லாததால் எனது கணினியிலோ அல்லது எனது இணைய இணைப்பிலோ கோளாறு இல்லை எனப் புரிகிறது. தமிழ் விக்கியில் இப்பிரச்சனை எனக்கு மட்டும் நேர்கிறதா? உங்களுக்கெல்லாம் எப்பொழுதும் போல செயல்பட முடிகிறதா என்பதை எனக்குச் சொல்ல முடியுமா? நன்றி.--Booradleyp (பேச்சு) 04:46, 4 செப்டெம்பர் 2012 (UTC)
எனக்கும் இதே பிரச்சினை. மிக மெதுவாக இருக்கிறது. IE இலும், தமிழ் விக்கியில் ஆங்கிலத்துக்கும் --Natkeeran (பேச்சு) 14:17, 4 செப்டெம்பர் 2012 (UTC)
- மேலே பார்க்கவும் (நரயம் உள்ளீட்டில் ஏதோ வழு உள்ளது. பார்க்க bugzilla:39969)--சண்முகம்ப7 (பேச்சு) 14:23, 4 செப்டெம்பர் 2012 (UTC)
- நன்றி. --Natkeeran (பேச்சு) 14:27, 4 செப்டெம்பர் 2012 (UTC)
- இப்பொழுது சரி போல தெரிகிறது. --Natkeeran (பேச்சு) 14:27, 4 செப்டெம்பர் 2012 (UTC)
- ஆம், இந்த வழுவில் ஏதும் குறிப்பிடப்படவில்லை எனினும் சரியாகி விட்டதாக முகநூலில் குறிப்பிட்டுள்ளனர்--சண்முகம்ப7 (பேச்சு) 14:44, 4 செப்டெம்பர் 2012 (UTC)
- எனக்கும் இந்தப் பிரச்சனை இருந்தது. நான் நோட்பேடில் தட்டச்சு செய்து பிரதியெடுத்து ஒட்டினேன். ஆனால் தற்போது இந்தப் பிரச்சனை இல்லை. சரியாகி விட்டது என நினைக்கிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:12, 4 செப்டெம்பர் 2012 (UTC)
- இப்பொழுது சரி போல தெரிகிறது. --Natkeeran (பேச்சு) 14:27, 4 செப்டெம்பர் 2012 (UTC)
- ஆம் தேனியாரே, சரியாகி விட்டதென ஸ்ரீகாந்த் தற்போது வழுவில் குறிப்பிட்டுள்ளார் :)--சண்முகம்ப7 (பேச்சு) 16:18, 4 செப்டெம்பர் 2012 (UTC)
IE இல் மீண்டும் (13.9.12) அச்சிக்கல் தெரிகின்றது. குரோமில் இல்லை. --Anton (பேச்சு) 03:54, 13 செப்டெம்பர் 2012 (UTC)
கட்டுரையை உருவாக்குவதில் சிக்கல்
தொகுபுதுப்பயனர் வரவேற்பு பகுதியில் உள்ள கட்டுரை தொடங்கவும் பொத்தானை அழுத்தினால் அது புது கட்டுரையை உருவாக்குவதற்கு பதிலாக வாருங்கள் ----(கட்டுரை தலைப்பு) என்று வருகிறது. இதுப்பற்றி முன்பே த. உழவன் ஆலமரத்தடியில் முறையிட்டதாக நினைவு. நான் இப்போது தான் முயற்சித்தேன். --குறும்பன் (பேச்சு) 17:29, 5 செப்டெம்பர் 2012 (UTC)
- நீங்கள் குறிப்பிடும் சிக்கலை உறுதிப்படுத்த முடியவில்லை. கட்டுரையை உருவாக்குவதற்கான பகுதிக்கு மேலாக மேலதிக தகவல்கள் உள்ளன. அவற்றையா குறிப்பிடுகிறீர்கள்?--Natkeeran (பேச்சு) 17:48, 5 செப்டெம்பர் 2012 (UTC)
பெட்டியின் வெற்று இடத்தில் அஇஉஆஈஊ என்று எழுதிவிட்டு அஇஉஆஈஊ என்ற கட்டுரை தலைப்பில் கட்டுரையை உருவாக்க கட்டுரையைத் தொடங்கவும் பொத்தானை அழுத்தினால் அது புது கட்டுரையை உருவாக்குவதற்கு பதிலாக அஇஉஆஈஊ! வாருங்கள் என்று வருகிறது. கீழே புதுபயனருக்கான குக்கி உள்ள இளம்பச்சை (வார்ப்புரு) வருகிறது (அதை கீழே ஒட்டியிருக்கிறேன்). அதற்கு கீழ் முன்தோற்றம் வருகிறது.
வாருங்கள் அஇஉஆஈஊ,
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட குறும்பன் (பேச்சு) 18:19, 5 செப்டெம்பர் 2012 (UTC) என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்: கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும் . விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
பங்களிப்பாளர் கவனத்திற்கு தொகுத்தல் உதவிப் பக்கம் விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. --குறும்பன் (பேச்சு) 18:19, 5 செப்டெம்பர் 2012 (UTC)
அருகில் உள்ள படத்தைப் பார்க்க. எனக்கு அப்படித்தான் வருகிறது. --Natkeeran (பேச்சு) 18:31, 5 செப்டெம்பர் 2012 (UTC)
- எனக்கும் நக்கீரனுக்கு வந்ததுபோலவே வருகிறது. கூடுதலாக ஏற்கெனவே உள்ள ஒரு கட்டுரையின் பெயரை இட்டேன். எ-டு:குரங்கு. அப்போது இதே அறிவுரைகளுடன் தொகுத்தல் பக்கத்தைத் திறக்கிறது. (பார்க்க:படம்) புதிய பயனர்கள் அறியாது ஏற்கெனவே உள்ள உள்ளடக்கத்தை அழித்து புதிய கட்டுரையாக்கக்கூடிய அபாயம் உள்ளது. மீடியாவிக்கி உருவாக்கத்தையும் தொகுத்தலையும் வேறுபடுத்தும்போது நமது அறிவுரையையும் தொகுத்தல் பக்கங்களில் மாற்றலாமே !
--மணியன் (பேச்சு) 04:00, 6 செப்டெம்பர் 2012 (UTC)
மீண்டும் ஒரு முறை சரிபாருங்கள். புதிய கட்டுரையே உருவாக்கப்படுகின்றது. Natkeeranஇன் படத்திலும் அவ்வாறே உள்ளது. --மதனாகரன் (பேச்சு) 07:14, 7 செப்டெம்பர் 2012 (UTC)
பயனர் வரவேற்பு பகுதி மூலம் உருவாக்கப்பட்ட கட்டுரை பெட்டியில் கட்டுரை தலைப்பை எழுதி தத்தலை அழுத்தியபோது (முன்தோற்றம் என ஏன் காட்டுகிறது?) கிடைத்த படிமமும், பயனர் வரவேற்பு பகுதியிலிருந்து உருவாக்கப்படாத கட்டுரையுன் படிமமும். இங்கு முன்தோற்றம் என்பது இல்லை. பயனர் வரவேற்பு பகுதி மூலம் உருவாக்கப்பட்ட கட்டுரையும் இது போலவே இருக்கவேண்டும்.--குறும்பன் (பேச்சு) 18:05, 7 செப்டெம்பர் 2012 (UTC)
- குறும்பன் குறிப்பிட்டது போன்ற சிக்கல் IE, firefox இரண்டிலும் எனக்கு வரவில்லை.--Kanags \உரையாடுக 22:38, 7 செப்டெம்பர் 2012 (UTC)
- இந்த பிரச்சினையின் காரணம் வார்ப்புரு:newuser மற்றும் வார்ப்புரு:புதுப்பயனர் என இரு வார்ப்புருக்கள் இருந்ததுதான். முன்பு புதுப்பயனர் வார்ப்புருவிலும் இது போலத்தான் இருந்தது, அதனால் வார்ப்புரு:முதல் கட்டுரை வழிமுறைகள் வருவது போல மாற்றினேன், ஆனால் newuser வார்ப்புருவில் மாற்றத் தவறி விட்டேன். இப்போது newuser வார்ப்புருவை புதுப்பயனர் வார்ப்புருவிற்கு வழிமாற்றியுள்ளேன். இப்போது சரி பார்க்கவும் --சண்முகம்ப7 (பேச்சு) 03:04, 8 செப்டெம்பர் 2012 (UTC)
பந்தியை நிரல்களாகப் பிரித்தல்
தொகு{{Div col}} என்ற வார்ப்புரு இண்டர்நெட்டு எக்சுப்புளோரரில் பந்திகளை நிரல்களாகப் பிரித்துத் தரவில்லை. ஆனாலும் வயர்வாக்சில் சரியாகவே உள்ளது. எடுத்துக்காட்டுக்கு இப்பக்கத்தையே இரு உலாவிகளிலும் பார்க்கவும். இதனைச் சீர்செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்? --மதனாகரன் (பேச்சு) 06:50, 23 ஆகத்து 2012 (UTC)
- இவ்வார்ப்புரு அந்த உலாவிக்கு ஆதரவளிக்காதாம், பார்க்க {{Div col}} அல்லது en:template:Div col--சண்முகம்ப7 (பேச்சு) 16:20, 11 செப்டெம்பர் 2012 (UTC)
இது தொடர்பாக என்ன செய்ய முடியும்? உலகில் ஏராளமான இண்டநெட்டு எக்சுப்புளோரர் பயனர்கள் உள்ளனர். ஆப்பெரா உலாவிப் பயனர்களும் உள்ளனர். --மதனாகரன் (பேச்சு) 11:06, 12 செப்டெம்பர் 2012 (UTC)
- இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று Gecko அல்லது en:WebKit அடிப்படையிலான உலாவிகளுக்கு மாற வேண்டும். அல்லது வார்ப்புருவை மாற்றி உருவாக்க வேண்டும். en:Category:Table and column templates இங்குள்ள வார்ப்புருக்களில் ஏதாவது உதவுமா எனப் பார்த்துவிட்டு கூறுகிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 07:42, 15 செப்டெம்பர் 2012 (UTC)
- {{Multicol}} அல்லது {{Col-begin}} வார்ப்புருவை இதற்கு மாற்றாக பயன்படுத்தலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 07:53, 15 செப்டெம்பர் 2012 (UTC)
- இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று Gecko அல்லது en:WebKit அடிப்படையிலான உலாவிகளுக்கு மாற வேண்டும். அல்லது வார்ப்புருவை மாற்றி உருவாக்க வேண்டும். en:Category:Table and column templates இங்குள்ள வார்ப்புருக்களில் ஏதாவது உதவுமா எனப் பார்த்துவிட்டு கூறுகிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 07:42, 15 செப்டெம்பர் 2012 (UTC)
புரூவிட்டில் மேம்பாடு தேவை
தொகுபார்க்க விக்கிப்பீடியா பேச்சு:புரூவ் இட்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:11, 11 செப்டெம்பர் 2012 (UTC)
தொகுப்பதில் சிக்கல்
தொகுவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)#தொகுப்பதில் சிக்கல் IE இல் மீண்டும் (13.9.12) அச்சிக்கல் தெரிகின்றது. குரோமில் இல்லை. --Anton (பேச்சு) 08:13, 13 செப்டெம்பர் 2012 (UTC)
- ஆமாம். இருந்தது. இப்போது தீர்ந்து விட்டது போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 08:18, 13 செப்டெம்பர் 2012 (UTC)
- எனக்கு இன்னும் தீரவில்லை. ஒவ்வொரு எழுத்துக்கும் அதிக நேரம் எடுக்கின்றது. இதே போன்ற பிரச்சனை சில நாட்களுக்கு முன்னரும் இருந்தது. சில மணி நேரத்தில் போய்விட்டது.--கலை (பேச்சு) 08:49, 13 செப்டெம்பர் 2012 (UTC)
- எனக்கும் இன்னும் தீரவில்லை. தேடு பெட்டியில் உள்ளீடு செய்ய/படம் ஒன்றினை இணைக்க முற்படுகையில் கிடைத்த செய்தி. யாவா ஸ்கிரிப்டை நிறுத்தியும் பயன் இல்லை.
- எனக்கு இன்னும் தீரவில்லை. ஒவ்வொரு எழுத்துக்கும் அதிக நேரம் எடுக்கின்றது. இதே போன்ற பிரச்சனை சில நாட்களுக்கு முன்னரும் இருந்தது. சில மணி நேரத்தில் போய்விட்டது.--கலை (பேச்சு) 08:49, 13 செப்டெம்பர் 2012 (UTC)
--Anton (பேச்சு) 10:44, 13 செப்டெம்பர் 2012 (UTC)
எனக்கு எவ்வகையான சிக்கலுமில்லை. இன்ட்டர்நெட் எக்சுப்ளோரரின் பதிப்பு 9ஐப் பயன்படுத்துகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 12:52, 13 செப்டெம்பர் 2012 (UTC)
- என்னுடையது பதிப்பு 8. அன்டன் சொல்வதுபோல் யாவா ஸ்கிரிப்டை நிறுத்தியும் பயன் இல்லை. விக்சனரியிலும் இதே பிரச்சனை.--கலை (பேச்சு) 13:16, 13 செப்டெம்பர் 2012 (UTC)
- ஐ.இ பதிப்பு 9 மாறுவது ஒரு தீர்வாக அமையலாம். --Natkeeran (பேச்சு) 13:18, 13 செப்டெம்பர் 2012 (UTC)
இது அலுவலகக் கணினி. நான் அதெல்லாம் மாற்ற முடியாது. :)--கலை (பேச்சு) 14:43, 13 செப்டெம்பர் 2012 (UTC)
நிறைய பேர் Windows XP பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள், ஐ.இ பதிப்பு 9 Windows XP ஐ ஆதரிப்பதில்லை. நான் Windows XP பயன்படுத்தினாலும் நெருப்புநரியை தான் பெரும்பாலும் பயன்படுத்துவேன் அரிதாக தான் ஐ. இ-யை பயன்படுத்துவேன்.--குறும்பன் (பேச்சு) 14:56, 13 செப்டெம்பர் 2012 (UTC)
ஐ.இ பதிப்பு 9க்கு மேம்படுத்தியதும் சிக்கல் இல்லை. ஆனாலும் 9க்கு கீழ் உள்ள பதிப்பை பயன்படுத்துபவர்களைக் கருத்திற் கொள்வது நன்று. --Anton (பேச்சு) 15:02, 13 செப்டெம்பர் 2012 (UTC)
- ஆமாம், எனது அலுவலகக் கணினியிலும் பழைய பதிப்பே உள்ளது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் இன்னும் பழைய பதிப்புகளையே நிறையப் பேர் பயன்படுத்துவார்கள். அனைவரதும் பயன்பாட்டையும் கருத்தில் கொள்ள வேண்டும்.--Kanags \உரையாடுக 22:42, 13 செப்டெம்பர் 2012 (UTC)
இவ்வளவு நாள் சரியாக தானே வந்தது இப்பொது என்னபுதுச்சிக்கல். முன்பு இது போல் நான் மடலாடல் குழுவுக்காக வைத்திருந்த தமிழ் மின்னஞ்சலிலும் இதே சிக்கல் வந்தது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:26, 14 செப்டெம்பர் 2012 (UTC)
- அண்மையில் புதிதாக வந்த ஜெகுவெரி வெளியீட்டினால் இந்தப் பிரச்சனை. பிற ஜாவாஸ்கிரிப்ட் உள்ளீட்டுக் கருவிகளிலும் இருக்க வாய்ப்புண்டு. தட்டச்சுக் கருவியில் இதனைப் நீக்க சில முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளது, சோதனைக்குப் பின் விரைவில் இற்றைப்படுத்தப்படும். நன்றி Srikanth WMF (பேச்சு) 09:34, 17 செப்டெம்பர் 2012 (UTC)
- நன்றி சிறீகாந்து. இது முன்னுரிமை கொடுத்துக் கவனிக்கப்பட வேண்டியது. எனது அலுவலகக் கணினியில் தமிழ் விக்கித் திட்டங்களுக்குச் செல்ல முடியவில்லை.--Kanags \உரையாடுக 11:51, 17 செப்டெம்பர் 2012 (UTC)
எனக்கும் அலுவலகத்தில் இருக்கும்போது பயன்படுத்த முடியாமல் உள்ளது. எனவே இந்தப் பிரச்சனை சரி செய்யப்பட்டால் நல்லது. இதனை google transliteration, word மூலமாகத்தான் தட்டச்சு செய்து copy and paste செய்து போடுகின்றேன்.--கலை (பேச்சு) 12:09, 17 செப்டெம்பர் 2012 (UTC)
- இன்னமும் இந்தப் பிரச்சனை தீரவில்லையே. அலுவலகத்தில் இருக்கையில் என்னால் ஓரளவு த.வி யில் பங்களிக்க முடியும். ஆனால் தொகுப்பதில் உள்ள சிக்கலால், அது மிகவும் கடினமாக உள்ளது. ஆங்கில விக்கியில் இந்தப் பிரச்சனை இல்லையே. இது தமிழ் விக்கித் திட்டங்களில் மட்டும் உள்ள பிரச்சனையா? விரைவில் பிரச்சனை தீர்ந்தால் நல்லது.
--கலை (பேச்சு) 10:09, 24 செப்டெம்பர் 2012 (UTC)
- இதற்கான நிரல் பணி முடிந்தது, சில நாட்களில் நிறுவப்படும், தடங்கலுக்கு வருந்துகிறேன், உங்கள் பொறுமைக்கு நன்றி. Srikanth WMF (பேச்சு) 06:17, 25 செப்டெம்பர் 2012 (UTC)
- நன்றி சிறீகாந்து. உங்கள் பணி வாழ்க.--Kanags \உரையாடுக 22:34, 28 செப்டெம்பர் 2012 (UTC)
உங்களுக்கு தற்போது சரியாகி விட்டதா கனக்ஸ்? எனக்கு இன்றைக்கும் கூட அலுவலகக் கணினியில் எதனையும் சரியாகச் செய்ய முடியவில்லை. :(.--கலை (பேச்சு) 22:44, 28 செப்டெம்பர் 2012 (UTC)
- இல்லை இன்னும் சரியாகவில்லை. சிறீகாந்து சொன்ன மாதிரி இம்மாற்றம் தெரிய சில நாட்கள் செல்லும் என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 22:58, 28 செப்டெம்பர் 2012 (UTC)
ஆயிற்று வழு bugzilla:40630 சரிசெய்யப்பட்டது ஸ்ரீகாந்த் (பேச்சு) 12:36, 10 அக்டோபர் 2012 (UTC)
நன்றி ஸ்ரீகாந்த்!--கலை (பேச்சு) 12:45, 10 அக்டோபர் 2012 (UTC)
தமிழ் எழுத்துகள் முறிவு
தொகுஎனது பயனர் பக்கத்தில் சிவப்பு நிறப் பெட்டியினுள் கலாமணி மதனாகரன் என நான் எழுதியதில் லா, ணி, னா ஆகிய எழுத்துகள் இரண்டு எழுத்துகளாக இன்ட்டர்நெட் எக்சுப்ளோரர், கூகுள் குரோம் ஆகிய உலாவிகளில் பிரிந்து தோன்றுகின்றன. ஆனாலும் வயர்வாக்கு உலாவில் சரியாகவே இணைந்து தோன்றுகின்றன. இதனை எவ்வாறு சீர் செய்ய முடியும்? --மதனாகரன் (பேச்சு) 06:02, 15 செப்டெம்பர் 2012 (UTC)
- இதற்கு காரணம் அப்பகுதியில் நீங்கள் letter-spacing அளவுருவை பயன்படுதியுள்ளதுதான். ி ா போன்றவற்றை தனித்தனி எழுத்துக்களாக பாவித்து அதற்கும் இடைவெளி கொடுக்கிறது. letter-spacingஐ நீக்கினால் சரியாகிவிடும்--சண்முகம்ப7 (பேச்சு) 07:32, 15 செப்டெம்பர் 2012 (UTC)
ஆமாம். letter-spacing அளவுருவைப் பயன்படுத்தும்போது மேற்கூறியவற்றைப் பிரித்துத் தனித்தனி எழுத்துகளாக எடுப்பதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டுமென்று தான் கேட்டிருந்தேன். --மதனாகரன் (பேச்சு) 08:00, 15 செப்டெம்பர் 2012 (UTC) என் நகர்பேசியில் தள்ளல் எழுத்துகள் மேற்கூறியவாறே தோன்றுகின்றன. எப்படி சரி செய்வது? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:30, 27 செப்டெம்பர் 2012 (UTC)
இன்று தமிழ் விக்கி மிகவும் மெதுவாக இருக்கிறது
தொகு--Natkeeran (பேச்சு) 13:42, 26 செப்டெம்பர் 2012 (UTC)
- என்னால் இன்று தொகுக்கவே இயலவில்லை நீண்ட நேரம் ஆகிறது. கடந்த இரண்டு வாரமாகவே இந்தச் சிக்கல் இருந்தது. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:28, 26 செப்டெம்பர் 2012 (UTC)
- எனக்கு எப்போதும் போல்தான் இருக்கிறது. எனது கணினியில் எந்த மாற்றமும் தெரியவில்லையே...--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 15:22, 26 செப்டெம்பர் 2012 (UTC)
எனக்கும் எப்போதும் போல்தானுள்ளது -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:30, 27 செப்டெம்பர் 2012 (UTC)
இரு முறை தெரியும் சுருக்கம்
தொகுதொகுக்கும் போது பயனர் வசதிக்காக சுருக்கத்தில் எழுத பொதுவாக பயன்படும் சில சொற்களை (திருத்தம், விரிவாக்கம், உரைதிருத்தம், எழுத்துப்பிழை, மறுமொழி, துவக்கம், நீக்கம்) நாம் கொண்டுள்ளோம். இச் சொற்கள் இருமுறை தோன்றுகிறது. படத்தை பார்க்கவும் சிவப்பு கட்டம் இரண்டாவது முறை உள்ளது. இவ்வசதி கொண்டுவந்த ஆரம்பத்தில் இருமுறை தோன்றவில்லை சில மாதங்களாக இது உள்ளது (எப்ப இருந்து என்பது சரியாக நினைவில்லை) --குறும்பன் (பேச்சு) 19:19, 26 செப்டெம்பர் 2012 (UTC)
- எனக்கு ஒரு முறை தான் வருகிறது குறும்பன், எந்த உலாவியில் இது மாதிரி வருகிறது?--சண்முகம்ப7 (பேச்சு) 01:02, 27 செப்டெம்பர் 2012 (UTC)
Firefox - OS Windows XP and IE9 & Chrome - OS windows 7.--குறும்பன் (பேச்சு) 01:10, 27 செப்டெம்பர் 2012 (UTC)
- உங்களுடைய பயனர்:Kurumban/vector.js தனிப்பட்ட ஜாவாஸ்க்ரிப்டில் User:Logicwiki/EditSummary.js உபயோகிக்கிறீர்கள் குறும்பன். மேலும் அதனை (விக்கிப்பீடியா:தொகுத்தல் சுருக்கம் உதவியான்) கருவிகளிலும் தேர்வு செய்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஏதாவது ஒன்றை நீக்கவும்.--சண்முகம்ப7 (பேச்சு) 01:40, 27 செப்டெம்பர் 2012 (UTC)
importScript('User:Logicwiki/EditSummary.js'); என்பதை நீக்கியதும் ஒரு முறை தான் வருகிறது நன்றி சண்முகம்.--குறும்பன் (பேச்சு) 13:55, 27 செப்டெம்பர் 2012 (UTC)
பங்களிப்புக்கள்
தொகுஎனது பங்களிப்புகள் பக்கத்தில், தொடங்கிய கட்டுரைகள், தொகுப்பு எண்ணிக்கை ஆகியவற்றை பார்க்க முடியவில்லை. என்ன செய்வது?--பிரஷாந் (பேச்சு) 11:06, 28 செப்டெம்பர் 2012 (UTC)
- அக்கருவிகளை வழங்கும் Toolserverரில் சில நாட்களாக பிரச்சினை உள்ளது பிரஷாந், விரைவில் சரியாகும் என எதிர்பார்க்கலாம் :)--சண்முகம்ப7 (பேச்சு) 11:21, 28 செப்டெம்பர் 2012 (UTC)
தற்போது எனக்கு வருகிறது. நீங்களும் பாருங்களேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:27, 19 அக்டோபர் 2012 (UTC)
பிழை வருகிறது வழுவாக இருக்கலாம்
தொகுஅண்மைக்காலமாக விக்கிப்பீடியாவில் தொகுக்கும் போது எனக்கு ஒரு வழு வருகிறது. அதாவது, ப்ரூவ் இட் கருவி உபயோகிக்கும் போது, பக்கத்தின் முன்பகுதிக்குச் செல்லும் scroll bar வருவதில்லை. படிமத்தை இணைத்திருக்கிறேன் பார்க்கவும். இவ்வழுவை விரைந்து சரி செய்யவும். விண்டோசு 7 மற்றும் குரோம் உலாவியில் இவ்வழு அதிக தடவை வருகிறது.
சரிசெய்ய உதவவும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:02, 28 செப்டெம்பர் 2012 (UTC)
- ஆப்பெரா, கூகுள் குரோம் ஆகிய உலாவிகளில் இச்சிக்கல் உள்ளது.
மேலும் நான் பயன்படுத்தும் இன்ட்டர்நெட் எக்சுப்ளோரரில் (பதிப்பு 9) புரூவ் இட்டு! தோன்றுவதேயில்லை.--மதனாகரன் (பேச்சு) 02:19, 29 செப்டெம்பர் 2012 (UTC)
இப்போது சரியாகியுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 11:42, 1 அக்டோபர் 2012 (UTC)
சில யோசனைகள்
தொகு- தொகுத்தலுக்கு உதவியாக தொகுத்தல்பெட்டியின் கீழே பல குறியீடுகளை வைத்துள்ளீர்கள். கணிதம் தொடர்பான குறியீடுகளையும் சேர்த்தால் கணிதம் தொடர்பான கட்டுரைகளில் பயன்படுத்த உதவியாயிருக்குமே. (முக்கியமாக booradleyp, kalaiarasy, prash போன்றோருக்கு!). (இதை சீன விக்கியில் பார்த்தேன்!)
- பொதுப் பக்கங்களைத் தொகுக்கும்போது நேரடியாக புதிய பகுதியை சேர்க்க இயலவில்லை. கடைசிப் பகுதியை தொகுத்து, புதிய பகுதியாக பிரிக்க வேண்டியுள்ளது. ஆலமரத்தடி பக்கத்தின் மேலே, புதிய பகுதியைச் சேர்க்க வழியுள்ளது என்றாலும், பக்கத்தின் கீழே, கடைசி தலைப்பிற்கு கீழே, தலைப்பைச் சேர் என்ற ஒட்டைச் சேர்த்தால் எளிமையாயிருக்கும். :)
- நிலப் பகுப்புகள்/வார்ப்புருக்கள்: தமிழர் பண்பாட்டு நிலப் பகுப்புகளான, குறிஞ்சி, மு, ம, நெ, பாலை ஆகியவற்றை இடவமைப்பைப் பொறுத்து ஊர்க் கட்டுரைகளில் சேர்த்தால் பொருத்தமாயிருக்குமா?
- இற்றைப்படுத்தல்: புதிதாக வெளிவரும் திரைப்படம், கைபேசி, மென்பொருள் என புதியவற்றைப் பற்றிய கட்டுரைகளைத் நாள்தோறும் தொடங்குகிறீர்கள். இருப்பினும், முடியாதவற்றை, கோரப்படும் கட்டுரைகள் பக்கத்தில் சேர்த்தால் இவற்றில் கட்டுரைகள் உருவாக்க வசதியாயிருக்குமே. நினைவூட்டினேன் நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:29, 1 அக்டோபர் 2012 (UTC)
- நீங்கள் சொல்லும் சில வசதிகளை இங்கு ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே, அங்கு படமிடுதலுக்கான தேவையைக் குறிப்பிட்டுள்ளேன். எனக்கு விக்சனரியில் அணுக்கம் இருந்ததால் அங்கு உருவாக்க இயன்றது. இங்கு பல அணுக்கர் இருந்தும், அத்தகைய மாற்றம் ஏற்படுத்த ஏன் தயங்குகின்றனர் என்று புரியவில்லை? இதனால் படமிடும் பணி வெகு எளிதாகும்.மாற்றம் செய்வார்களா?--த♥ உழவன் +உரை.. 04:07, 7 அக்டோபர் 2012 (UTC)
- படமிடும் பணியை எளிமைப் படுத்திய அணுக்கருக்கு நன்றி.யாரென்று தெரியவில்லை. படவணுக்களை 150 என்பதிலிருந்து, 210-240க்குள் அமைத்தால் infobox வார்ப்புரு பயன்படுத்தும் போது, சீர்மையாக வரும். படவுரையும் தெளிவாகத் தெரியும்.5000படங்களுக்கும் மேல் விக்சனரியிலும், இங்கும் இட்டுள்ள அனுபவத்தில் இதனை முன்மொழிகிறேன்.--த♥ உழவன் +உரை.. 03:22, 9 அக்டோபர் 2012 (UTC)
- படவணுக்களை மாற்றியமைக்கு நன்றி சண்முகம்--த♥ உழவன் +உரை.. 03:56, 9 அக்டோபர் 2012 (UTC)
- படமிடும் பணியை எளிமைப் படுத்திய அணுக்கருக்கு நன்றி.யாரென்று தெரியவில்லை. படவணுக்களை 150 என்பதிலிருந்து, 210-240க்குள் அமைத்தால் infobox வார்ப்புரு பயன்படுத்தும் போது, சீர்மையாக வரும். படவுரையும் தெளிவாகத் தெரியும்.5000படங்களுக்கும் மேல் விக்சனரியிலும், இங்கும் இட்டுள்ள அனுபவத்தில் இதனை முன்மொழிகிறேன்.--த♥ உழவன் +உரை.. 03:22, 9 அக்டோபர் 2012 (UTC)
பிறப்புக்கான வார்ப்புரு
தொகுஇங்கு பயன்படுத்தப்பட்டுள்ள {{Infobox Writer என்பதிலுள்ள பிறப்புக்கான வார்ப்புருவில்(| birthdate = {{birth date|1902|2|7|mf=y}}) உள்ள வழுவை களைக.--த♥ உழவன் +உரை.. 03:59, 7 அக்டோபர் 2012 (UTC)
- பதிலாக தகவற்சட்டம் நபர் என்ற வார்ப்புருவைப் பயன்படுத்தல் நல்லது.--Kanags \உரையாடுக 04:18, 7 அக்டோபர் 2012 (UTC)
உதவி
தொகுசம்மு காசுமீர் மாநிலத்தில் சிரிநகர் இடம் தவறாக உள்ளது. அது போல் ஆளுனர் பெயரையும் சேர்க்கலாம். சம்மு காசுமீர் வரைபடத்தை மாற்றினாலும் அது இங்கு மாறவில்லை. இந்த வார்ப்புரு வேறு இடத்திலிருந்து அத்தகவல்களை பெறுகின்றது. அது எங்கு உள்ளது? தமிழகத்தின் முதலமைச்சர், ஆளுனர் ஆகியோரையும் எங்கோ மாற்றம் செய்ததால் தமிழக மாவட்டங்கள் அனைத்திலும் அம்மாற்றம் தெரிகிறது, எந்த வார்ப்புருவில் மாற்றம் செய்துள்ளார்கள் என்பது தெரியவில்லை.--குறும்பன் (பேச்சு) 21:05, 9 அக்டோபர் 2012 (UTC)
- வரைபடத்தை சீர்செய்ய முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. இரண்டு இடங்களையும் குறிப்பது கடினமாகவுள்ளது. ஒன்றைமட்டும் பாவித்தால் என்ன?--Anton (பேச்சு) 23:53, 9 அக்டோபர் 2012 (UTC)
சம்மு காசுமீர் மாநிலத்துக்கு இரு தலைநகரங்கள் உள்ளது, இரண்டையும் காட்டுவது தான் பொருத்தமாக இருக்கும். அதே போல் அரியானா, பஞ்சாப் இரண்டுக்கும் ஒன்றே தான் (சண்டிகர்) தலைநகர். அரியானாவுக்கு சரியான வார்ப்புருவை இடவேண்டும் --குறும்பன் (பேச்சு) 16:23, 10 அக்டோபர் 2012 (UTC)