மகுடேசுவரன்

மகுடேசுவரன் (Magudeswaran) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளரும் மொழியறிஞரும் ஆவார்.

கவிஞர் மகுடேசுவரன்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

கவிஞர் மகுடேசுவரனின் பெற்றோர் கோவிந்தராஜன், சரசுவதி இணையர் ஆவர். பிறந்த நாள் 06 சூன் திங்கள் 1975. திருப்பூர் நஞ்சப்பா மேல்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். பள்ளிக் கல்வி முடிந்ததும் திருப்பூர்த் தொழில் சார்ந்த நிறுவனமொன்றில் பணிக்குச் சேர்ந்தார்.

முதல் தொகுப்பு 1996ஆம் ஆண்டு பூக்கள் பற்றிய தகவல்கள் என்ற பெயரில் வெளியாயிற்று. எழுத்தாளர் சுஜாதாவும் கல்யாண்ஜியும் முன்னுரை எழுதியிருந்தனர். அத்தொகுப்பு அவ்வாண்டில் வெளியான மிகச்சிறந்த தொகுப்பாக ‘பாரத ஸ்டேட் வங்கி’ விருதினைப் பெற்றது. அத்தொகுப்பிலிருந்த கவிதைகளை இயக்குநர் பாலசந்தர், பாலுமகேந்திரா ஆகியோர் தம் தொலைக்காட்சித் தொடர்களில் பயன்படுத்தினர்.

மகுடேசுவரனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘அண்மையை’ இயக்குநர் பாரதிராஜா 1997ஆம் ஆண்டு வெளியிட்டார். அதற்குத் திருப்பூர்த் தமிழ்ச் சங்க விருது கிடைத்தது. மூன்றாவது தொகுப்பான ‘யாரோ ஒருத்தியின் நடனம்’ தொகுப்பிற்கும் 2001ஆம் ஆண்டு வெளியான சிறந்த தொகுப்பிற்கான ’பாரத ஸ்டேட் வங்கி’ விருது கிடைத்தது.

தமிழ் அறிவோம்

தொகு

தமிழ் அறிவோம் எனும் தலைப்பில் எழுதிய கட்டுரைகள் புதிய தலைமுறை, நக்கீரன், தினமலர் பட்டம் ஆகிய இதழ்களில் வெளிவந்தன.[1]

2006ஆம் ஆண்டு வெளியான ‘நஞ்சுபுரம்’ என்ற திரைப்படத்தில் பாடல்கள், உரையாடல்கள் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் பள்ளிப் பாடநூல் உயர்மட்டத் துணைக்குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார். கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பாடத்திட்டக்குழு உறுப்பினராக உள்ளார். நடுவணரசின் ‘சாகித்திய அகாதமி’ பரிசளிப்புத் தேர்வுக் குழுவிலும் இடம்பெற்றவர்.

ஆனந்த விகடன், குங்குமம், குமுதம், கல்கி, தினமலர், தமிழ் இந்து, மாலைமலர் என அனைத்து முன்னணித் தமிழ் இதழ்களிலும் மகுடேசுவரனது படைப்புகள் வெளிவந்துள்ளன.

பெற்றுள்ள விருதுகள்

தொகு
  • ஆனந்த விகடன் பவளவிழா விருது,
  • பாரத ஸ்டேட்வங்கி விருது - இருமுறை,
  • கலை இலக்கியப் பெருமன்ற விருது,
  • திருப்பூர்த் தமிழ்ச்சங்க விருது,
  • ஈரோடு தமிழன்பன் வாழ்நாள் சாதனையாளர் விருது,
  • கவிஞர் சிற்பி இலக்கிய விருது.

ஊடகங்களில் பங்களிப்பு

தொகு

திருப்பூர்ப் பகுதியிலிருந்து வெளியான நடுகல், நிகழ், கணையாழி, சுபமங்களா, புதியபார்வை, செம்மலர் ஆகிய சிற்றிதழ்களில் இவரின் கவிதைகள் வெளிவந்துள்ளன.

விகடனின் இலக்கிய இதழான 'தடம்' இதழிலும் புதிய தலைமுறையில் எழுதப்பட்ட இளையோர் மொழிக்களமும் தினமலர் நாளிதழில் வெளியான பட்டம் தொடரும் வரவேற்பைப் பெற்றன.

மகுடேசுவரன் எழுதிய நூல்களின் பட்டியல்

தொகு

கவிதைத் தொகுப்புகள்

தொகு

1. பூக்கள் பற்றிய தகவல்கள்

2. அண்மை

3. யாரோ ஒருத்தியின் நடனம்

4. காமக்கடும்புனல்

5. குமரன் காவியம்

6. காந்தி அண்ணல்

7. மண்ணே மலர்ந்து மணக்கிறது

8. இன்னும் தொலையாத தனிமை

9. எழில்நலம்

10. நிறைசூலி

11. வினைநிரல்

12. புலிப்பறழ்

13. ஒன்றாய்க் கலந்த உலகு.

14. முதல் மழைக்கே செழித்த பைங்கூழ்

15. மாச்செருநன்

16. மண்ணூன்றா விதையோடு மழையில் நின்றவன்

17. கால்முள் காய்ப்பு

18. மகுடேசுவரன் கவிதைகள் – மொத்தத் தொகுப்பு – இரு பாகங்கள்

திரைப்படக் கட்டுரை நூல்கள்

தொகு

1. பாட்டுத்திறம்

2. நம்மை மகிழ்வித்த கலைஞர்கள்

3. திரையில் ஒளிர்ந்த கதைகள்

4. திரையிசைத் தென்றல்

5. இன்றே இப்படம் கடைசி

6. திரைக்கு வெளியே

7. வணிகமும் திரைப்படமும் (அச்சில்)

கட்டுரைத் தொகுப்புகள்

தொகு

1. தன்வெறியாடல்

2. களிநயம்

3. விலைகள் தாழ்வதில்லை

4. காலதர்

5. நீர்கொணர்ந்த நெடுங்கோன்

6. நிகழ்பாடு

7. தமிழ்ப்பறழ்

8. பழமொழித்தேறல்

9. சுற்றுலா ஆற்றுப்படை

10. பேரெழில் வாழிடம்

11. நானும் நாற்புறமும்

12. அறியாத குறள்கள் (அமேசான் படினிப் பதிப்பு)

13. மொழித்தொண்டு

உரைநூல்

தொகு

திருக்குறள் உரை

வரலாற்றுப் பயணக் கட்டுரைகள் / பயண இலக்கியத் தொகுப்பு நூல்கள்

தொகு

1. கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - ஹம்பியைப் பற்றிய முழுமையான நூல். (ஆனந்த விகடன் வெளியீடு)

2. கலிங்கம் காண்போம் (ஒடியப் பயண நூல்)

3. சிங்கப்பூர் – கண்டதும் கற்றதும் (அச்சில்)

4. அமெரிக்கப் பயணக் கட்டுரை நூல் (விகடன் இணையத்தில் தொடர் - முடிந்ததும் அச்சுக்கு)

தமிழ் இலக்கணம் / தமிழ் மொழியியல் நூல்கள் - தமிழ் அறிவோம் வரிசை

தொகு

1. மொழித்திறம்

2. அருஞ்சொற்பொருள்

3. மொழிப்படிக்கட்டு

4. சொல் என்னும் உயிர்விதை

5. இலக்கணத் தொடக்கம்

6. பிழையில்லாத எழுத்து

7. வலிமிகுதல்

8. வடசொல் அறிவோம்

9. இலக்கணத் தெளிவு

10. மொழிவளப் பேழை

11. சொல்லேர் உழவு

12. தமிழோடு விளையாடு

13. அடிக்கடி தோன்றும் ஐயங்கள்

14. அடிப்படை அறிதல்

15. சொற்கள் வந்த வழி

மேற்கோள்கள்

தொகு
  1. "வீட்டில் பந்தாக இருந்தது, பள்ளியில் பால் ஆகிறது ! வீட்டில் பந்தாக இருந்தது, பள்ளியில் பால் ஆகிறது !". puthiyathalaimurai. {{cite web}}: line feed character in |title= at position 50 (help)

https://www.noolulagam.com/product/?pid=43488

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகுடேசுவரன்&oldid=4116570" இலிருந்து மீள்விக்கப்பட்டது