கி. ஆம்ஸ்ட்ராங்
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். (ஆகத்து 2024 நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள், எவரும் இதன் குறிப்பிடத்தகுநிலையினை நிறுவாத நிலையில், இக்கட்டுரைப் பக்கம் அழிக்கப்படும்) |
கி. ஆம்ஸ்ட்ராங் (K. Armstrong, ஜனவரி 31, 1977 - சூலை 5, 2024) என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரிவின் முன்னாள் மாநிலத் தலைவராவார். 2024 ஆம் ஆண்டு சூலை மாதம் 5ஆம் நாள் தனது வீட்டின் வாசலில் படுகொலை செய்யப்பட்டார்.[2][3]
கே. ஆம்ஸ்ட்ராங் | |
---|---|
முன்னாள் மாநிலத் தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெரம்பூர், தமிழ் நாடு, இந்தியா | 31 சனவரி 1977
இறப்பு | 5 சூலை 2024 சென்னை, தமிழ் நாடு இந்தியா | (அகவை 47)
அரசியல் கட்சி | பகுஜன் சமாஜ் கட்சி |
துணைவர் | பொற்கொடி[1] |
இளமைக் காலம்
தொகுஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு மகனாக 1977 சனவரி 31ஆம் நாள் பிறந்தார்.[4] திருப்பதி வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டம் படித்து, வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தார்.
சட்டக்கல்லூரி வளாகக் கலவரம்
தொகுசென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் 2008 நவம்பர் 12 இல் இருமாணவக் குழுக்களிடையே நடைபெற்ற கலவரத்தில் இவர் மீது வழக்குப்பதியப்பட்டது. அதன் காரணமாகக் கைதுசெய்யப்பட்டுப் பின்னர் பிணையில் வெளியே வந்தார்.[5] 2016 இல் நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.[6]
அரசியல் வாழ்வு
தொகு2000ஆம் ஆண்டு புரட்சி பாரதம் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். 2006-இல் டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் என்ற அமைப்பைத் தொடங்கினார். 2006 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு 99ஆவது வட்டத்தின் மாமன்ற உறுப்பினராகத் தேர்வானார்.[4] 2007ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[7] 2007 முதல் இறக்கும் வரை 17 ஆண்டுகள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்தார்.[8]
படுகொலை
தொகு2024 சூலை 5ஆம் நாள் வெள்ளி மாலையில் தனது வீட்டின் வெளியே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஆறு நபர்கள் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.[9] இந்தப் படுகொலைக்கு நாடு முழுவதிலுமிருந்து பல கட்சித் தலைவர்கள் கண்டனமும் இரங்கலும் தெரித்தனர். சென்னை முழுவதும் காவல்துறை கண்காணிப்பைப் பலப்படுத்தினர்.[10] இக்கொலைக்குத் தொடர்புடைய ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட எட்டு நபர்கள் சரணடைந்துள்ளனர்.[11][12]
மேற்கோள்கள்
தொகு- ↑ "புத்தர் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங் குழந்தைக்கு முதல் இந்திய பெண் ஆசிரியர் பெயரை மாயாவதி சூட்டினார்". மாலைமலர். https://www.maalaimalar.com/news/state/mayawati-named-armstrong-baby-first-indian-female-teacher-on-buddha-birthday-605696. பார்த்த நாள்: 17 August 2024.
- ↑ "ஆம்ஸ்ட்ராங் கொலை - ஜெ.பி.நட்டா கண்டனம்". தினமணி. https://www.dinamani.com/india/2024/Jul/06/jp-nadda-condemns-k-armstrong-murder. பார்த்த நாள்: 6 July 2024.
- ↑ "A gold trading scam, rivalry with a gangster, and a brother's revenge – police crack murder of BSP's Tamil Nadu chief", The Indian Express (in ஆங்கிலம்), 2024-07-06, பார்க்கப்பட்ட நாள் 2024-07-07
- ↑ 4.0 4.1 "கவுன்சிலர் டூ பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்... யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?". நியூஸ்18. https://tamil.news18.com/tamil-nadu/bsp-tamil-nadu-leader-armstrong-history-and-background-1514223.html. பார்த்த நாள்: 6 July 2024.
- ↑ "BSP leader gets bail". தி இந்து. https://www.thehindu.com/news/national/tamil-nadu/bsp-leader-gets-bail/article1991601.ece. பார்த்த நாள்: 17 August 2024.
- ↑ "தமிழகத்தை உலுக்கிய '2008 நவம்பர் 12'". விகடன். https://www.vikatan.com/education/58255-madras-law-college-students-clash. பார்த்த நாள்: 17 August 2024.
- ↑ "candidate profile". மைநேட்டா.
- ↑ "வார்டு கவுன்சிலர் முதல் மாநிலத் தலைவர் வரை - பகுஜன் சமாஜ் ஆம்ஸ்ட்ராங்கின் அரசியல் பயணம்". பிபிசி. https://www.bbc.com/tamil/articles/c720w1y9n8qo. பார்த்த நாள்: 6 July 2024.
- ↑ "Who was K Armstrong? BSP's Tamil Nadu unit chief murdered in". டைம்ஸ் ஆப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/articleshow/111530389.cms. பார்த்த நாள்: 6 July 2024.
- ↑ "பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை: சென்னையில் பதற்றம் - நடந்தது என்ன?". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/crime/1275363-bsp-tn-chief-armstrong-murdered-in-chennai-3.html. பார்த்த நாள்: 6 July 2024.
- ↑ "ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 8 பேர் சரண்... ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழி கொலையா?!". விகடன். https://www.vikatan.com/government-and-politics/bsp-leader-murder-case-8-surrender-in-chennai. பார்த்த நாள்: 6 July 2024.
- ↑ "ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ஆட்டோ ஓட்டுனர் போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச் - வெளியான அதிர்ச்சி தகவல்". தினத்தந்தி. https://www.dailythanthi.com/news/state/armstrong-murder-case-sketch-given-by-auto-driver-shocking-information-released-1112846. பார்த்த நாள்: 6 July 2024.